World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Bush escalates confrontation with Russia over Georgia

புஷ் ஜோர்ஜியா தொடர்பாக ரஷ்யாவுடன் முரண்பாடுகளை அதிகப்படுத்துகிறார்

By Barry Grey
12 August 2008


Use this version to print | Send this link by email | Email the author

வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் இருந்து திங்களன்று வெளியிட்ட ஆத்திரமூட்டல் நிறைந்த அறிக்கை ஒன்றின் மூலம், தற்பொழுது ஜோர்ஜியாவில் நடக்கும் போர் பற்றி ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான மோதலை ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் அதிகப்படுத்தியுள்ளார்.

ரஷ்யா "வியத்தகு முறையில் மிருகத்தனமான" இராணுவத் தாக்குலை பெருக்கியுள்ளது பற்றி புஷ் கண்டனம் தெரிவித்து, உடனடியாக போர்நிறுத்தத்திற்கு மாஸ்கோ உடன்பட வேண்டும் என்றும் காக்கோஸியன் நாட்டு எல்லையை ஒட்டி இருக்கும் தன் பகுதிக்கு, படைகளை அது திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் புஷ் கோரியுள்ளார். டிபிலிசி விமான நிலையத்தை குண்டுவீசி தகர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருப்பதுடன், அமெரிக்க ஆதரவு பெற்ற ஜோர்ஜிய ஜனாதிபதி மிகைய்ல் சாகேஷ்விலியின் ஆட்சியை அகற்ற முற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மீறப்பட முடியாத ஜோர்ஜியாவின் இறைமை மற்றும் பிராந்திய உறுதிப்பாடு ஆகியவை பற்றி புஷ் வலியுறுத்தியுள்ளார் --தெற்கு ஓசேஷியா மற்றும் அப்காஜியா என்னும் பிரிந்து செல்ல விழையும் ரஷ்யா ஆதரவு காட்டும் குடியரசுகள் மீது டிபிலிசி மீண்டும் தன் அரசு கட்டுப்பாட்டை நிறுவும் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்து தூதரக நெறியில் கூறப்படும் வாசகத்தை புஷ் கூறியுள்ளார்.

ஞாயிறன்று துணை ஜனாதிபதி டிக் ஷெனி ரஷ்ய "ஆக்கிரமிப்பு உணர்விற்கு" தக்க விடையிறுக்கப்படும் என்று வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இத்தகைய புஷ்ஷின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன. ஜோர்ஜியாவில் ரஷ்ய தலையீட்டிற்கு அமெரிக்கா இன்னும் கூடுதலான ஆக்கிரோஷத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று புஷ் நிர்வாகத்திற்குள் ஒரு பிரிவு வலியுறுத்துவதைத்தான் ஷெனி குறுக்கிட்டுப் பேசியிருப்பது காட்டுகின்றது.

வெள்ளை மாளிகையில் இருந்து வரும் அறிக்கைகள் பிரமிக்க வைக்கும் அளவிற்கு பாசாங்குத்தனத்தை கொண்டுள்ளன. கடந்த வியாழன் இரவு தெற்கு ஓசேஷியாவின் மீது ஜோர்ஜிய இராணுவப் படைகள் தாக்குதல் நடத்தி, தலைநகர் டிஷின்வவலியியில் நெறியற்ற முறையில் குடியிருப்பு பகுதிகளில் டாங்கு மற்றும் சிறு பீரங்கிப் படைகளைக் கொண்டு, இலக்குவைத்து தகர்த்தபோது அமெரிக்க அரசாங்கம் எவ்வித எதிர்ப்பையும் கூறவில்லை. ஜோர்ஜிய படையெடுப்பாளர்கள் 2,000 குடிமக்களை கொன்றதாகவும் இன்றுவரை இந்த அளவிற்கு இல்லாத வகையில் சாதாரணக் குடிமக்கள் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜோர்ஜிய தாக்குதலை எதிர்க்கும் வகையில் விரைவான, மகத்தான எதிர்த்தாக்குதலை ரஷ்ய இராணுவம் நடத்தி மிகச் சிறிய ஜோர்ஜிய படைகளை நசுக்க முற்பட்ட பின்னர்தான் வாஷிங்டன் எச்சரிக்கை அடையத் தொடங்கியுள்ளது.

புட்டின் ஆட்சியின் இராணுவ நடவடிக்கைகளில் முன்னேற்றத்தன்மை என்பதைச் சிறிதும் காண்பதற்கில்லை. காகசஸ் பகுதியில் தன்னுடைய கொள்ளை நோக்கங்களைத்தான் ரஷ்ய ஆளும் உயரடுக்கு தொடர்கிறது; இப்பகுதியோ 1991ல் சோவியத் ஒன்றியம் சிதறிப் போவதற்கு முன்பு மாஸ்கோவினால் இரு நூற்றாண்டு காலத்திற்கு ஆளப்பட்டது ஆகும்.

மேலும் காகசஸ் பகுதியில் போர் வெடிப்பு என்பது சோவியத் ஒன்றியத்தின் சிதைவு பற்றிய சோகந்ததும்பிய விளைவுகளைத்தான் கோடிட்டுக் காட்டுகிறது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பெரும் நிலப்பகுதிகள், ரஷ்யா மற்றும் பிற சோவியத் குடியரசுகள் எப்படி பெரிய ஏகாதிபத்திய சக்திகளின் கொள்ளை முறை மற்றும் போர் ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. பழைய சோவியத் ஒன்றிய மக்களுக்கு இதற்கான விடை, தேசிய அல்லது புட்டினின் இராணுவம் சார்ந்த கொள்கைகளில் கிடைக்காது; மாறாக ஒரு சோசலிசப் புரட்சிக்கான சர்வதேசிய வேலைத்திட்டத்தில்தான் உள்ளது.

ரஷ்ய ஆட்சியின் பிற்போக்குத்தன நோக்கங்கள் ஒருபுறம் இருக்க, பொதுநிலைப் பார்வையாளர் எவரும் நீண்ட காலமாக ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலப் பகுதிகளில் தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டும் என்ற தூண்டுதலை கொண்ட கொள்கையைத்தான் வாஷிங்டன் கொண்டிருக்கிறது என்ற உண்மையை மறுப்பதற்கு இல்லை; அத்தகைய உணர்வுதான் ரஷ்யாவிற்கும் ஜோர்ஜியாவிற்கும் இடையே போர் வெடிப்புப் பின்னணியில் முக்கிய காரணமாக உள்ளது.

ஒரு மாதம் முன்பு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் ஜோர்ஜியாவிற்கு சென்று சாகேஷ்விலியுடன் பேச்சுக்கள் நடத்தியது, பின்னர் ரஷ்யாவை கண்டித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசியது, தெற்கு ஓசேஷியா மற்றும் அப்காஜியா மீது ஜோர்ஜியா மீண்டும் கட்டுப்பாட்டை கொண்டுவரும் முயற்சிக்கு ஆதரவு கொடுத்தது, நேட்டோவில் ஜோர்ஜியா சேர்க்கப்படுவதற்கு அமெரிக்காவில் ஆதரவை வலியுறுத்தியது ஆகியவை பற்றி செய்தி ஊடகம் கிட்டத்தட்ட மெளனமாகவே இருந்து விட்டது.

ஜோர்ஜியா, உக்ரைன் போன்ற முன்னாள் சோவியத் குடியரசுகள் நேட்டோவினுள் நுழைதல் நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுத்துக் கொள்ள முடியாத அச்சுறுத்தல் என்று ரஷ்யா ஏற்கனவே தெளிவாக்கியுள்ளது. நேட்டோவின் ஒரு பகுதியாக ஜோர்ஜியா இருந்திருந்தால், உடன்பாடு கொண்ட நட்பு நாடுகள் ஜோர்ஜியாவிற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இராணுவக் குறுக்கீடு செய்ய சட்டபூர்வமாக பிணைந்தவை என்பதை மாஸ்கோ நன்கு அறியும்.

தெற்கு ஓசேஷியாவின் மீது இராணுவத் தாக்குதல் பற்றிய தன் திட்டங்களை விரிவாக ரைஸுடன் சாகேஷ்விலி விவாதித்திருக்கமாட்டார் என்பது ஏற்கத்தக்கது அல்ல; அமெரிக்க இராணுவ, தூதரக முறை மற்றும் நிதிய ஆதரவை முற்றிலும் நம்பியுள்ள ஜோர்ஜியா இவ்வளவு முக்கியமான செயலை முன்கூட்டியே வாஷிங்டனுக்கு தெரிவித்து அமெரிக்க ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முன்வந்திருக்காது.

ஒரு மாதம் முன்பு ரைஸ் சாகேஷ்விலியை சந்தித்தபோதே தாக்குலுக்கான தயாரிப்புக்கள் முன்னேறிய கட்டத்தில் இருந்திருக்கும். மேலும் ஜோர்ஜிய இராணுவம் மேலிருந்து சாதாரண கட்டம் வரை அமெரிக்க ஆலோசகர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது.

1999ல் சேர்பியாவிற்கு எதிராக அமெரிக்க தலைமையில் நடந்த விமானத் தாக்குதல் காலத்தில் இருந்தே அமெரிக்கா ஜோர்ஜியாவிற்கு இராணுவ உதவியை மிக அதிக அளவு கொடுத்து வருகிறது. 2004 ஆரம்பத்தில் ஹார்வர்டில் படித்த சாகேஷ்விலியை அதிகாரத்திற்கு கொண்டுவந்த "ரோஜா புரட்சிக்கு" அமெரிக்கா ஊக்கமளித்து செயல்படுத்தியதில் இருந்து அமெரிக்க இராணுவ உதவியும் அதிகமாவும் விரைவாகவும் கொடுக்கப்பட்டு வருகிறது.

திங்களன்று நியூ யோர்க் டைம்ஸில் வந்துள்ள கட்டுரை ஒன்று "ஜோர்ஜியாவின் படையை உச்சி முதல் உள்ளங்கால் வரை சீராக்கும் பென்டகனின் திட்டம்" பற்றி விளக்கியுள்ளது. இந்த கட்டுரையில் கூறப்படுவது; "உயர்ந்த மட்டங்களில் அமெரிக்க ஜோர்ஜிய இராணுவக் கோட்பாட்டை மாற்றி எழுதி அதன் தளபதிகள் பிற அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் உதவியது. கீழ்ப்பிரிவுகள் அளவில் அமெரிக்க கடற்படைச் சிறப்பு வீரர்களும் இராணுவ வீரர்களும் ஜோர்ஜிய வீரர்களுக்கு போரின் அடிப்படை பற்றி நன்கு பயிற்சி அளித்துள்ளனர்."

"இதற்கிடையில் ஜோர்ஜியா தன்னுடைய படைகளுக்கு இஸ்ரேலிய, அமெரிக்க ஆயுதங்கள் மூலம் வலிமையை ஏற்படுத்திக் கொண்டது; முன்கூட்டி வேவு பார்ப்பதற்கான கருவிகள், தொடர்புச் சாதனங்கள் மற்றும் போர்க்கள நிர்வாகக் கருவிகள், புதிய வாகனங்களின் வரிசைகள் மற்றும் ஆயுத வெடிமருந்துக் குவிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது."

தேசிய இறைமை மற்றும் பிராந்திய உறுதிப்பாடு ஆகிய கொள்கைகளை பொறுத்தவரையில், அது செயல்படுத்தப்படும் விதத்தில் அமெரிக்கா தான் விரும்பும் வகையில்தான் இயங்கியுள்ளது. இரு அரசியல் கட்சிகளில் எதுவும் அல்லது நடைமுறை செய்தி ஊடகமும் ஏன் சேர்பியாவின் கொசோவிய பிரிவினை வாதிகளுக்கு எதிரான இராணுவ தலையீடு ஒரு போர்க்குற்றம் என்பதை விளக்கவில்லை; ஆனால் தெற்கு ஓசேஷியாவில் ஜோர்ஜிய தாக்குதல் நெறியானது என விளக்குகின்றன.

கடந்த பெப்ருவரி மாதம் சேர்பியாவில் இருந்து சுதந்திர பிரகடனத்தை கொசோவோ அறிவித்ததற்கு பின்னணியில் புஷ் நிர்வாகம்தான் முக்கிய உந்துதலைக் கொடுத்திருந்தது. இதற்கான வாதங்கள் தெற்கு ஓசேஷியா மற்றும் அப்காஜியா இரண்டும் ஜோர்ஜிய எதிர்ப்புக் காட்டுவதற்கு கூறும் வாதத்தில் இருந்து சிறிதும் பிரிக்க முடியாதவை ஆகும்.

மேலும் 1990களில் ரஷ்யாவில் இருந்து சேச்ஷேன்யா பிரிந்து செல்லுவதை செயல்படுத்தக் கூடிய சக்திகளுக்கு நிதி உதவியையும் ஊக்கத்தையும் அமெரிக்கா பெரிதும் அளித்தது.

அமெரிக்கா, தெற்கு ஓசேஷியா மீதான ஜோர்ஜிய தாக்குதலில் தெளிவாகத் தொடர்பு கொண்டிருப்பதால், அதன் நோக்கங்கள் என்ன என்பதை ஒருவர் கேள்விக்கு உட்படுத்தத்தான் வேண்டும். இத்தகைய மகத்தான ஆத்திரமூட்டலுக்கு விடையிறுக்கும் வகையில் ரஷ்யா எதையும் செய்யாது என்று அமெரிக்க கொள்கை இயற்றுபவர்கள் கருதுகின்றனர் என்பதை நம்புவது கடினம் ஆகும். அப்படியானால் காகசஸ் பகுதியில் வாஷிங்டனின் முக்கிய நட்புநாடு ஒன்றை ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கு அவர்கள் ஏன் உட்படுத்த வேண்டும்; அதுவும் இப்பகுதி எண்ணெய் வளம் மிகுந்த காஸ்பிய பகுதிக்கும் மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையே பாலமாக விளங்கி, முக்கிய எண்ணெய் எரிவாயு குழாய்த் திட்டங்களை கொண்டிருக்கையில்?

இதற்கான ஒரே விடை அமெரிக்கா வேண்டும் என்றே ரஷ்யாவிற்கும் மேற்கத்தைய நாடுகளுக்கும் இடையே அழுத்தங்கள் பெரிதாக ஆக்க வேண்டும் என முயல்கிறது என்பதுதான். தற்போதைய மோதல் உடனடியாக பரந்த போர்வெடிப்பாக சுழன்று வராவிட்டாலும், "சிறிய ஜோர்ஜியாவின்" விதி அமெரிக்காவினால் பல முறை ரஷ்யாவின்மீது இன்னும் கூடுதலான ஆக்கிரோஷ, மோதல் நிலைப்பாட்டை நியாயப்படுத்தவதற்கு உதவும்.

புஷ் நிர்வாகம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இன்னும் பலவும் ஜோர்ஜியாவில் "முந்தைய நிலைக்கு" திரும்ப வேண்டும் என்று எழுப்பும் கோரிக்கைகள் பாசாங்குத்தனத்தில் நிறைந்தவை ஆகும். காகசஸில் தன்னுடைய நிலைமையை முக்கியமாக நிலைநிறுத்த மேற்கொண்டிருக்கும் முயற்சியை அமெரிக்கா கைவிடாது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்; அதே போல் ரஷ்யாவை ஒரு அரைகுறை காலனித்துவ அந்தஸ்திற்கு குறைத்துவிட வேண்டும் என்று அது கொண்டிருக்கும் நீண்டகால முன்னோக்கும் அனைவருக்கும் நன்கு தெரியும்.

பனிப்போரை ஒத்த நிலைக்கு மீண்டும் செல்வது என்ற நிலைப்பாடு அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே பல தசாப்தங்கள் இருந்த மோதல் தன்மையின் உண்மையான நோக்கங்களத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், யூரேசியா மீது தான் அடையவிரும்பும் புவி அரசியல் நோக்கமான மேலாதிக்கத்தை அடைவதற்கு சோவியத் ஒன்றியத்தை ஒரு தடையாகவே கருதியது, இப்பொழுது ரஷ்யாவையும் அப்படித்தான் நினைக்கிறது.

அமெரிக்க ஆதரவு இருக்கும் ரஷ்யாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல் செயலில் ஒரு உள்நாட்டு அரசியல் கூறுபாட்டையும் காணமுடியும். புஷ் நிர்வாகம் மற்றும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயினும் மகத்தான சர்வதேச நெருக்கடிச் சூழ்நிலையில் நவம்பர் தேர்தல்கள் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அச்சம், பாதுகாப்பற்ற நிலை ஆகிய சூழ்நிலை மக்கெயின் வெற்றி பெறும் வாய்ப்பை வலுப்படுத்தும் என்று அவர்கள் நம்புகின்றனர்; ஏனெனில் பிரச்சாரத்தின் முக்கிய தூணாக மக்கெயினுக்கு இருப்பது வெளியுறவுக் கொள்கை பற்றியும் தேசியப்பாதுகாப்பு பற்றியும் கொண்டிருக்கும் அவர் கொண்டுள்ள தேர்ச்சி என்ற கருத்து ஆகும்.

பரிதாபத்திற்குரிய வகையில் ஒபாமா தன்னுடைய இராணுவத்தின் மீதான நம்பிக்கைகளை உறுதிபடுத்தும் வகையில் கருத்துக்களை கூறுகிறார். ரஷ்யாவிற்கு எதிராக திங்களன்று புஷ் அச்சுறுத்தல் கொடுத்த அறிக்கையை வெளியிட்ட சில நிமிடங்களில் ஒபாமா ரஷ்யா பற்றி தன்னுடைய கண்டனங்களை புஷ், மக்கெயின் ஆகியோரின் நிலைப்பாட்டை கிட்டத்தட்ட ஒத்தவிதத்தில் விளக்கிக் கூறியுள்ளார்.

காகசஸ் பகுதியில் போர்வெடிப்பின் ஆபத்து நிறைந்த மகத்தான உட்குறிப்புக்கள் உலகத்தை ஏகாதிபத்தியம் பங்கு போட்டுக் கொள்ளும் உந்துதல் எதில் முடியும் என்பது பற்றி சந்தேகத்திற்கு இடமில்லாமல் கூறுகிறன்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலக மேலாதிக்கத்தை நிறுவும் இலக்கில் எதுவும் குறுக்கே நிற்பதை பொறுத்துக் கொள்ளாது. இது அமெரிக்க தொழிலாள வர்க்கம் மற்றும் உலகத்தை பேரழிவிற்குத்தான் இட்டுச் செல்லும்.

அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமான அணிதிரளல் மட்டுமே இதை நிறுத்தக் கூடிய ஒரே சக்தியாகும்.