World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Parliamentary "trust vote" to determine fate of UPA government and Indo-US nuclear treaty

இந்தியா: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி UPA அரசாங்கம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவற்றின் தலைவிதியை தீர்மானிக்கும் பாராளுமன்ற "நம்பிக்கை வாக்கு"

By Keith Jones
22 July 2008

Use this version to print | Send this link by email | Email the author

இந்திய பாராளுமன்றத்தின் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்ட கீழ்சபையான லோக்சபா திங்களன்று நாட்டின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின்மீது நம்பிக்கையை உறுதி செய்யும் ஒரு வாக்கிய தீர்மானத்தின் மீதான விவாதத்தை திங்களன்று தொடங்கியது. இன்று இந்த விவாதம் நான்காண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் விதியை நிர்ணயிக்கும் வாக்கெடுப்புடன் முடியும்.

அரசாங்கம் தோல்வியுற்றால் அது அநேகமாக முன்கூட்டிய தேர்தல்களுக்கு வழிவகுக்க கூடும்; இது இந்திய அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒத்துழைப்புத் திட்டத்திற்கு முடிவு கட்டிவிடக்கூடிய, நசுக்கிவிடும் அடியை கொடுக்கும் திறன் உடையது.

ஆனால், அரசாங்கம் நம்பிக்கை வாக்கில் தோற்று இடைக்கால காப்பு அரசாங்கம் என்ற நிலையை தேர்தல் வரை மேற்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டாலும் அதை அணுசக்தி ஒப்பந்தத்திற்கு சர்வதேச ஒப்புதலை பெறும் சிக்கல் வாய்ந்த வழிவகையை தொடருமாறு புது டெல்லியை வலியுறுத்தப்போவதாக புஷ் நிர்வாகம் நேற்று தான் அறிக்கை வெளியிட்டுள்ளது. தெற்கு, மத்திய ஆசியாவிற்கு அமெரிக்க உதவி வெளியுறவு அமைச்சராக இருக்கும் ரிச்சார்ட் பெளச்சர் செய்தியாளர்களிடம் சிறுபான்மை அரசு என்பது சாதாரண விஷயம்தான் என்றார். "அடுத்த தேர்தல் வரை அல்லது புதிய கூட்டணி போல் ஏதேனும் தோன்றும் வரை உங்களோடு பேச்சு வார்த்தைகள் இல்லை என்று எவரும் கூறமாட்டார்" என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்க செனட் மன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவராக இருக்கும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடென் தன்னுடைய பங்கிற்கு, இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தற்போதைய அமெரிக்க காங்கிரசில் ஒப்புதல் பெறுவதற்கு தான் "முழு ஆற்றலுடன்" போராடப் போவதாகவும், இது புது டெல்லி அதைச் செயல்படுத்த தயாராக இருந்தால்தான் முடியும் என்றும் கூறியுள்ளார்.

சிறுபான்மை ஐமுகூ அரசாங்கத்திற்கு இடது முன்னணி கொடுத்து வந்த ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டதால் இன்றைய "நம்பிக்கை" அல்லது நம்பிக்கை வாக்கு அவசரமாக ஏற்பட்டுவிட்டது.

கிட்டத்தட்ட 60 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட, ஸ்ராலினிச இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) தலைமையில் உள்ள இடதுமுன்னணி 2004 பொதுத் தேர்தல்களில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான பாராளுமன்ற நட்புக் கட்சியாக இருந்து வந்துள்ளது. ஆனால் அரசாங்கம் அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கும் இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டிற்கு சர்வதேச அணுசக்தி முகவாண்மை ஆசி நல்குமாறு முறையாகக் கோருமாறும் புஷ் நிர்வாகத்திடமிருந்து வந்த அழுத்தத்திற்கு அடிபணிந்ததால் இந்த மாத தொடக்கத்தில் இடது முன்னணி சிறுபான்மை UPA அரசாங்கத்திற்கு கொடுத்துவந்த ஆதரவை விலக்கி கொண்டது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில், அணி சாரா நிலை என்பதில் இருந்து அமெரிக்காவுடனான மூலோபாயப் பங்காளித்தனம் என்ற அடிப்படை மாற்றத்தை இந்த அணுசக்தி உடன்பாடு குறிப்பிடுகிறது என்று இடது முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் வாஷிங்டன் அணுசக்தி ஒத்துழைப்பைப் பயன்படுத்தி ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் அதன் கொள்ளை விழைவுகளுடன் இந்தியாவை பிணக்கும் வகையில் இந்திய அமெரிக்க இராணுவத் தொடர்புகளை வளர்க்க விரும்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. புஷ் நிர்வாகமும் அமெரிக்கச் சட்ட மன்ற உறுப்பினர்களும் பலமுறையும் சிவிலிய அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டைப் பயன்படுத்தி இந்தியாவை ஈரானின் அணுசக்தி திட்டம் பற்றிய IAEA தீர்மானங்களில் அமெரிக்க வழியில் இணங்கி நடப்பதற்கு தருவதற்கு மிரட்டுவதாக இடது முன்னணி சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் ஹென்ரி ஹைட் சட்டத்தின்படி அமெரிக்க சட்டமன்றம் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு அமெரிக்க ஜனாதிபதியினால் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அணுசக்தி பரவல் தடை முயற்சிகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு தருவதாக தகவல் கொடுக்க வேண்டும் என்பதோடு இணைந்திருக்க வேண்டும் என்றும் இருக்கிறது; இதனால் வாஷிங்டனுக்கு தான் கூறுவதை செய்வதற்கு இந்தியாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஒரு நிரந்தரக் கருவி கிடைத்துள்ளது.

UPA இற்கு ஆதரவாக இந்திய பெருவணிகம்

இந்தியாவின் புவி-மூலோபாய, இராணுவ மற்றும் அணுசக்தி அமைப்புக்கள் இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் சிறப்புக்கள் பற்றி சூடாக விவாதித்துள்ளன; ஆனால் பெரும்பாலானவர்களின் கருத்து உடன்பாட்டிற்கு ஆதரவாகத்தான் உள்ளது. இதற்கு மாறாக இந்தியப் பெருவணிகத்தின் மிகச் சக்தி வாய்ந்த பிரிவுகள் கிட்டத்தட்ட ஒருமனதாக அணுசக்தி உடன்பாட்டிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளன; ஏனெனில் இது இந்தியாவிற்கு உலக அணுசக்தி கட்டுப்பாட்டு ஆட்சிக்குள் அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தையும் மீறி அணுவாயுதங்களைத் தயாரித்த நாடு என்று இருந்தபோதிலும் ஒரு சிறப்பு அந்தஸ்த்தை கொடுப்பது மட்டுமின்றி, சிவிலிய உயர் தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி எரிபொருள் வாங்குவதற்கு சட்டபூர்வமான அனுமதியையும் கொடுக்கிறது.

ஆனால் இந்த ஒப்பந்தம் தங்கள் நீண்ட கால விழைவான இந்திய ஒரு "உலக வல்லரசு என்ற நிலையை" பெறுவதற்கு இவ்வொப்பந்தம் உதவும் என்று பெருவணிகம் கணக்கிடுகிறது; இது இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பியிருத்தலை சற்று குறைக்கும் என்றும் இந்தியாவின் உள்நாட்டு அணுசக்தித் திட்ட வளர்ப்பு, அணுவாயுதக் கிடங்கு வளர்ப்பு ஆகியவற்றில் குவிப்புக் காட்ட உதவ அனுமதிக்கும் என்றும் கருதப்படுகிறது. உடன்பாட்டிற்கு இந்திய பெருவணிகத்தின் ஆதரவிற்கு மற்றொரு காரணம் இது புது டெல்லி மற்றும் வாஷிங்டனுக்கு இடையே நெருக்கமான பங்காளித்தன்மையை வளர்க்கும் என்றும் இதையொட்டி இந்தியாவின் உள்நாட்டு அரசியல் வலதிற்கு இன்னும் நகரும் என்றும் கணக்கிடப்படுகிறது.

அணுசக்தி உன்பாட்டிற்கு பெருவணிகத்தின் ஆதரவு ஒருபுறம் இருந்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு 24 மணி நேரம் முன்பு ஐமுகூ அரசாங்கம் தப்பிப் பிழைக்கும் என உறுதியாகக் கூறுவதற்கில்லை. சமீபத்திய செய்தி ஊடகத் தகவல்களின்படி ஐமுகூ, இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) முகாமிடம் இருந்து கடைசி நேரத்தில் சில விலகல்கள், வாக்களிக்க வராமை இவற்றை தான் வெற்றிபெறுவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

இப்பொழுது நான்கு முக்கிய பாராளுமன்ற முகாம்கள் உள்ளன; காங்கிரஸ் தலைமையில் உள்ள UPA, CPM தலைமையில் இருக்கும் இடது முன்னணி, தெலுகு தேசக் கட்சி, மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை ஆளும் பகுஜன் சமாஜக் கட்சி தலைமையிலான "மத சார்பற்ற" மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஜாதி - கட்சிகளின் தொளதொளப்பான கூட்டு. கடைசி மூன்று குழுக்களும் அரசாங்கத்தை வீழ்த்த வாக்களிப்பதாக உறுதி கொண்டுள்ளன.

வாக்குகள் சேகரிக்க கெளரவமற்ற வழிவகை

காங்கிரஸ் கட்சியின் தலைமை அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்த முற்பட்டதின் மூலம் இன்றைய பாராளுமன்றத்தில் இத்தகைய நிலை வருவதற்கு கட்டாயப்படுத்திவிட்டது; காங்கிரஸ் அவ்வாறு செய்தால் ஆதரவை விலக்கிக் கொள்ளுவதாக இடது முன்னணி பல முறை கூறியிருந்தது; அதேபோல் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்து செல்லும் நிலையில் தேர்தல் வந்தால் தேர்தலில் பாதிப்பு பற்றிய கவலை காங்கிரஸின் ஐமுகூ நட்புக் கட்சிகளுக்கு இடையே கவலை உள்ளது.

பிரதம மந்திரி மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இருவரும் உத்தரப் பிரதேசத்தை தளமாகக் கொண்ட சமாஜ்வாதி கட்சி (SP) உடன் உடன்பாடு கொள்ளுவதில் ஒரு சூதாட்ட விவகாரத்தைக் கொண்டனர் எனக் கூறலாம்; இக்கட்சிக்கு பாராளுமன்றத்தில் 39 உறுப்பினர்கள் உள்ளனர்; இது இடது முன்னணியின் ஆதரவு இல்லாமல் அரசாங்கம் தப்பிப் பிழைக்க உதவும். ஆனால் சமாஜ்வாதி கட்சி திடீரென மாறக்கூடிய நிலை --பல முறை இது காங்கிரஸிற்கு எதராக இடதுமுன்னணியுடன் சேர்ந்து இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்துள்ளது--அதன் உறுப்பினர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக சமாஜ்வாதி கட்சி இந்து மேலாதிக்க பிஜேபிக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தின் காப்பாளர் எனக் காட்டிக் கொண்டு வந்துள்ளது; ஆனால் புஷ் நிர்வாகத்தின் ஊக்கச் செயலான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இது கொடுத்துள்ள ஆதரவு கட்சியின் ஒரு பிரிவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது; குறைந்த பட்சம் அடுத்த தேர்தலின்போது முஸ்லிம்கள் இக்கட்சிக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

சமாஜ்வாதி கட்சிக்குள் இருக்கும் பிளவினால் காங்கிரஸ் மற்றும் ஐமுகூ பங்காளிகள் பெருகிய முறையில் வாக்குகளை எப்படியும் சேர்க்க வேண்டும் என்ற ஆற்றொணா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

கடைசி கால் நூற்றாண்டு பல வட்டார, வகுப்புவாத, சாதி அடிப்படையிலான கட்சிகள் வெளிப்பட்டுள்ளதை கண்டுள்ளது. இக்கட்சிகள் இந்திய முதலாளித்துவத்திற்கு தாழ்ந்து இருக்கையில் --முதலாளித்துவ புதிய தாராளக் கொள்கை, பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு அவை ஒருமனத்துடன் பங்கு பெறுவதால் நன்கு விளக்கிக்காட்டுகிறவாறு -- இவை இந்திய அரசியிலில் ஒரு வெடிப்புத் தன்மையை சேர்த்துள்ளன; எடுத்துக்கொள்ளப்பட்ட எந்த ஒரு குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பான அவற்றின் சுயாதீன நிலைப்பாட்டிலிருந்து, அவர்கள் பரிந்து பேசும் இந்திய பொருளாதார அரசியல் உயரடுக்கின் குறுகிய பிரிவுகளின் நலன்களுடன் பிணைந்துள்ளது; இவற்றின் தேர்தல்/அரசியல் உடனடிக் கணக்குகள் அதையொட்டித்தான் உள்ளன.

தற்போதைய பின்னணியில், இக்கட்சிகள் பலவும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஐந்து ஆண்டுகால ஆட்சி விரைவில் முடிவிற்கு வரவிருக்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல முக்கிய தேர்தல் பின்னடைவுகளை பெற்றுள்ள நிலையில், பொது மக்கள் விசை மற்றும் உணவுப் பொருட்கள் விலை வாசி ஏற்றத்தை அடுத்து கடுமையான பாதிப்பிற்கு உட்பட்டிருக்கையில் அரசாங்கத்திற்கு தாம் கொடுக்க வேண்டிய ஆதரவின் இன்றியமையாத தன்மையையும் உணர்ந்துள்ளன.

இந்திய உயரடுக்கு வாடிக்கையாக இந்தியாவை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பறைசாற்றுகிறது. உண்மையில் வாஷிங்டன் மற்றும் புது டெல்லியில் வாடிக்கையாகக் கூறப்படும் வாதங்களில் ஒன்று இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உலகந் தழுவிய நிலைப்பாடு பற்றி பங்காண்மை கொள்ள வேண்டும் என்பதாகும்; இரு நாடுகளும் உலகின் மிக அதிக மக்கள் தொகை மற்றும் சக்தி வாய்ந்த "ஜனநாயகம்" என்று இருப்பதால் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற கருத்து உண்டு.

காங்கிரஸ் தலைமையில் இருக்கும் ஐமுகூ தப்பிப் பிழைக்க போராடும்போது, இந்திய ஜனநாயகம் முழுதாய் பூத்துக் குலுங்கியதை கடந்த வாரம் கண்டது. ஒரு பாராளுமன்ற பெரும்பான்மையை சேகரிப்பதற்கான நம்பிக்கையில், காங்கிரஸ் தலைமை அனைத்துவித பின்புல உடன்பாடுகளிலும் ஈடுபட்டதுடன், சிறையில் குற்றவாளிகளாக தண்டனைபெறும் சில எம்.பிக்கள் ஆதரவிற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

காங்கிரஸின் பல திடீர்ச்செயல்களில் ஒன்று பழங்குடி மக்கள் தளத்தைக் கொண்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி (JMM) உடைய ஆதரவைப் பெற்து ஆகும். 1993ல் JMM தலைவர் இப்பொழுது போலவே அப்பொழுதும் இருந்த சிபு சோரனும் மூன்று மற்ற எம்.பிக்களும் மகத்தான இலஞ்சத்தை பெற்று நரசிம்ம ராவின் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை அரசாங்கத்தை நிலைநிறுத்த உதவினர். இம்முறை தனக்கு நிலக்கரி அமைச்சர் பதவி கிடைக்கப் போவதாக சோரன் கூறியுள்ளார்; ஜார்க்கண்டில் மிக அதிக நிலக்கரி இருப்புக்கள் உள்ளன; இதைத்தவிர இவருடைய கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கு பல சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன.

பல தசாப்த காலம் இந்து வலதுக்கு இரை போட்டு அத்துடன் இணைந்து செயலாற்றிய போதும் மத சார்பின்மைக்கு கோட்டை எனக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ், அதிக வெற்றி இல்லாவிட்டாலும் பிஜேபி, பாசிச சிவ சேனை மற்றும் சீக்கிய வகுப்புவாத அகாலி தளம் ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கூடிக் குலாவி ஆதரவைத் திரட்ட முற்பட்டுள்ளது.

CPM க்குள் பிளவுகளும், சோம்நாத் சாட்டர்ஜியும்

இன்றைய வாக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கக்கூடும், இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு முழு இந்திய நடைமுறையையும், அரசியல் நிலைப்பாட்டையும் நெருக்கடியில் தள்ளியுள்ளது என்பதற்கு ஒரு அடையாளம் லோக் சபாவின் மன்றத்தலைவரான சிபிஎம்-ன் பாராளுமன்ற உறுப்பினர் சோம்நாத் சாட்டர்ஜியின் மீது காட்டப்படும் குவிப்பு ஆகும். பொதுவாக மன்றத்தலைவர் லோக்சபா வாக்கெடுப்புக்களில் வாக்குப் போடுவது இல்லை; ஆனால் ஒரு தீர்மானத்திற்கு இருபுற வாக்குகளும் சமமாக இருந்தால் அவர் நிர்ணயிக்கும் வாக்கைப் போடுவதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜூன் 2004ல் காங்கிரஸ் சாட்டர்ஜி மன்றத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உதவியதற்குக் காரணம் இடது முன்னணியுடன் உடன்பாட்டை வலுப்படுத்திக் கொள்ளுவதற்காக ஆகும்; பிந்தையது பல தந்திரோபாய காரணங்களுக்காக, உட்பிளவுகளை ஒட்டி அல்லாமல், UPA அமைச்சரைவையில் இடம் பெறும் வாய்ப்பை மறுத்துவிட்டது.

இம்மாதம் முன்னதாக செய்தி ஊடகம் ஒன்று இடது முன்னணி ஐமுகூ அரசாங்கத்துடன் உடன்பாட்டை துண்டித்துவிட்டதால் அவர் லோக்சபா தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று சிபிஎம் ஆணையிட்டதை நிராகரித்தபோது அவரைப் பாராட்டியது. மேற்கு வங்கத்தில் இருந்து வரும் சாட்டர்ஜி அந்த மாநிலக் கட்சித் தலைமையின் சில பிரிவுகளுடைய ஆதரவைக் கொண்டுள்ளார்; அம்மாநிலமோ சிபிஎம்- ன் முக்கிய அரண் ஆகும். ஆனால் சிபிஎம் தலைமை ஐமுகூ ஐ வீழ்த்துவதற்கான உந்துதல் பற்றி அதிகம் உற்சாகம் காட்டவில்லை; ஏனெனில் மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்புக் கொள்கையினால் அது தேர்தலில் பின்னடைவு பெறுமோ என்ற அச்சத்தில் உள்ளது.

இப்பொழுது சிபிஎம் தலைமையிடத்தில் இருந்து வலுவான அழுத்தம் வந்துள்ள நிலையில் சாட்டர்ஜி இரு புறத்திற்கும் வாக்குகள் சமமாக இருந்தால் அரசாங்கம் தோல்வியுறும் வகையில் தான் வாக்களிப்பதாக அறிவித்துள்ளார்; இதையொட்டி பல செய்தி ஊடக கருத்துக்கள் சாட்டர்ஜி நடுநிலை வாக்கை அவ்வாறு அரசாங்கத்தை தோற்கடிக்கப் பயன்படுத்துவது இந்திய பாராளுமன்ற மரபுக்கு உகந்ததாக இருக்காது என வாதிட்டுள்ளன.

திங்களன்று நடைபெற்ற விவாதம்

திங்களன்று நம்பிக்கை வாக்கு பற்றிய விவாதத்தை தொடங்கிய பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவருடைய அரசாங்கம் அதன் முழுச் செயற்பாடுகள் பற்றியும் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் ஐமுகூ அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் எடுத்த "ஒவ்வொரு முடிவும்" "நம் நாட்டு மக்களின் சிறந்த நலன்களுக்காக" எடுக்கப்பட்டவை என்றும் வாதிட்டார்.

உண்மையில், ஐமுகூ அரசாங்கம் இந்தியாவை உலக மூலதனத்திற்கு குறைவூதிய உழைப்பைக் கொடுக்கும் வகையில் வலதுசாரிக் கொள்கைகளைத்தான் முன்வைத்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கம் தப்பிப்பிழைத்ததும், ஐமுகூ இன்னும் "பேரவா விழைவுகள் முறையில்" பெருவணிகத்திற்கு காப்பீடு, வங்கி, ஓய்வூதியச் சீர்திருத்தங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தத்தயார் எனக் கூறியுள்ளனர்.

தன்னுடைய உரையில் பிரதம மந்திரி மூத்த சிபிஎம் தலைவர்கள் ஜோயோதி பாசு மற்றும் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆகியோரை "பரந்த, சிறந்த தலைமைக்காக" பாராட்டி, அவர்கள் "நம் கூட்டணி அரசாங்கத்தின் சிற்பிகள்" என்றும் புகழ்ந்தார்.

உண்மையில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் 2004 லோக் சபா தேர்தலில் மிகப் பெரிய கட்சியாக எதிர்பாராமல் வெளிப்பட்ட பின்னர், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை இணைப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். அதே போல் முக்கியமான முறையில் -- அவர்கள் பெருகிய பொருளாதார பாதுகாப்பின்மை, சமூச சமத்துவமின்மை என்ற நிலையில் மக்களுடைய அதிருப்தி நிறைந்த எதிர்ப்பை நசுக்குவதிலும் முக்கிய பங்கை ஆற்றியிருந்தனர் என்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் கவனிப்பு மிகுந்த பிரிவுகளாலும் அறியப்பட்டது.

அணுசக்தி உடன்பாட்டைக் காக்கும் பொறுப்பை அரசாங்கம் வெளியுறவு மந்திரி பிரணாப் முக்கர்ஜியிடம் கொடுத்துள்ளது. ஹைட் சட்டத்தில் சில பகுதிகள் இந்தியாவினால் ஏற்கப்படுவதற்கில்லை என்று அவர் கூறியுள்ளார்; அதே நேரத்தில் அரசாங்கம் "அதன் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ஒருபோதும் சமரசம் செய்யாது" என்றும் உறுதியாகக் கூறினார்.

இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு இல்லாவிட்டால், இந்தியா பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் அணு தொடர்புடைய வணிகத்தை தொடரமுடியாது என்ற உண்மையை முக்கர்ஜி வலியுறுத்தினார். இந்தியாவிற்கு அணுசக்தி உலை வசதிகளை விற்பனை செய்வதின் மூலம் நலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பாரிஸும் மாஸ்கோவும் இந்தியாவிற்கு எதிராக இருக்கும் அணுசக்திப் பொருள் வணிகத்தடை நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கும் ஆதரவு கொடுத்து சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) மற்றும் அணுசக்தி பொருட்கள் குழு ஆகியவற்றிடம் இருந்து இந்தியா சிறப்பு அந்தஸ்தைப் பெறுவதற்காக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கும் தங்கள் ஆதரவைக் கொடுத்துள்ளன.

ஆனால் இவை எதுவும் சீனாவை சமாளிக்கும் ஒரு வழிவகையாக இந்தியாவுடன் அமெரிக்க ஒரு நெருக்கமான நட்பைக் கொள்ளுவதில் தீவிரமாக இருக்கிறது என்ற உண்மையை மறைக்க முடியவில்லை; அதேபோல் வாஷிங்டன் ஏற்கெனவே புது டெல்லியுடனான அணுசக்தி, இராணுவம் மற்ற துறைகளில் கொண்டுள்ள ஒத்துழைப்பைப் பயன்படுத்தி இந்தியாவைத் தன் ஏகாதிபத்திய செயற்பட்டியலுக்கு உபயோகிக்கலாம் என்று கொண்டுள்ள கருத்தையும் மறைக்கவில்லை; இதையொட்டித்தான் இந்தியாவிற்கு ஒரு பெரிய முக்கியமான மூலோபாய நலன் அளிக்கப்படுகிறது; இது பல தசாப்தங்களாக பாக்கிஸ்தானுடன் உள்ள நீண்டகால போட்டிக்கும் ஒரு புதிய வெடிப்புத் தன்மை உடைய பரிமாணத்தை அளித்துள்ளது.

பாரதிய ஜனதாக் கட்சித் தலைவரும் பிரதம மந்திரிப்பதவி வேட்பாளருமான எல்.கே. அத்வானி இடது முன்னணிக்கும் தனது கட்சிக்கும் இடையே இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி இருந்த எதிர்ப்பில் காணப்பட்ட வேறுபாடுகளை விளக்க முற்பட்டார். அமெரிக்காவுடன் ஒரு மூலோபாய பங்காண்மையை பிஜபி கட்சி ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் சிவிலிய அணுசக்தி ஒப்பந்தம் தள்ளப்பட்டுவிடக்கூடாது என்றும் அவர் கூறினார். ஆனால் கட்சியின் எதிர்ப்பு ஹென்ரி ஹைட் சட்டத்திற்கு என்றும், அச்சட்டம் இந்தியா அணுவாயுதச் சோதனைகளை நடத்தினால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்று அச்சுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். "NDA ஐ மக்கள் மீண்டும் அதிகாரத்தில் இருத்த வாக்களித்தால், நாங்கள் அணுசக்தி உடன்பாட்டை மறு பேச்சு வார்த்தைகளுக்கு உட்படுத்துவோம்; சம சக்தி உடைய நாடுகளுக்கு இடையே உள்ள உடன்பாடு போல் செய்வோம், நம்முடைய மூலோபாய தன்னாட்சிக்குத் தடைகள் இல்லாமல் செய்வதை உறுதிப்படுத்துவோம்" என்று அவர் கூறினார்.

அத்வானிக்கு விடையிறுக்கையில் மன்மோகன் சிங் பிஜேபி தலைவர் 1998ல் தான் அணுவாயுத சோதனையை எதிர்த்ததாக கூறியதற்கு மறுப்பு தெரிவித்தார். தன்னுடைய பங்கிற்கு முக்கர்ஜி முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தின் முடிவான WTO வில் சேர்வதற்கு BJP எதிர்ப்பு தெரிவித்தது, ஆனால் இறுதியில் அதன் தலைமையிலான NDA இந்தியா WTO வில் சேர ஒப்புதல் கொடுத்தது, அதுவும் காங்கிரசார் கூறியிருந்த விதிமுறைகளை ஒட்டியேதான் என்று விவரித்தார்.

இடது முன்னணியின் தலைவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்மீதான விவாதத்தின் தங்கள் பங்களிப்பின்போது காங்கிரஸையும் அரசாங்கத்தையும் கூட்டணியை "காட்டிக் கொடுத்ததற்காக" சாடினர்; அதுவும் தாங்கள் இணைத்திருந்த கூட்டணியை; ஏதோ இந்திய முதலாளித்துவத்தின் மரபார்ந்த ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தியாவின் உழைக்கும் மக்களுடைய தியாகத்தில் இந்திய முதலாளித்துவத்தின் நலன்களை ஈவிரக்கமற்ற முறையில் பேணுவதைத் தவிர்ந்த வேறு ஏதேனும் செய்யும் என்று எதிர்பாக்கப்படக் கூடுவது போல் இப்படிப் பேசினர்.

சிபிஎம் பொதுச் செயலாளரின் மனைவியும், கட்சித் தலைமையில் இடம் பெற்றிருப்பவருமான பிருந்தா காரத், பிரதம மந்திரி ஐமுகூ அரசாங்கத்தை அமைப்பதற்கு இடது முன்னணி கொண்டிருந்த பங்கை ஏற்றதற்காக அவருக்கு நன்றி கூறினார். இடது முன்னணி இப்பொழுது பகுஜன் சமஜக் கட்சி, தெலுகு தேசக் கட்சி ஆகியவற்றுடன் தேர்தல் முகாம் அமைக்க முற்பட்டாலும் --இக்கட்சிகள் முன்பு தீவிர வலது சாரி பிஜேபி உடன் முகாம் அமைத்திருந்தன--அடுத்த பொதுத் தேர்லுக்குப் பின்னர் அல்லது அதற்கு முன்னரே ஸ்ராலினிஸ்ட்டுக்கள் காங்கிரசுடன் சமரசம் செய்து கொள்ளுவர் என்பது எதிர்பார்க்கக்கூடியதே ஆகும்.

இதற்கிடையில் சிபிஐ(எம்) அரசியற் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி திங்களன்று ஒரு உரையில் அமெரிக்காவுடன் ஒரு மூலோபாய பங்காளித்தனத்தை தொடர வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கம் இந்தியா அமெரிக்க விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கு ஈரானுக்கு எதிராகப் போர் ஏற்பட்டால் அவை நிறுத்தப்படுவதற்கான சிறப்பு வசதிகளைச் செய்து கொடுக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படும் என்று எச்சரித்தார். "அமெரிக்கா ஈரான் மீது தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதால், அமெரிக்காவுடன் ஒரு மூலோபாய நட்பு நாடு என்ற முறையில் இந்தியா இணைந்து செயல்படும் கட்டாயத்திற்கு உட்பட நேரிடும் ஆகையால், "நாட்டின் பாதுகாப்பே ஆபத்திற்கு உட்பட்டுள்ளது." என்று அவர் கூறினார்.