World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

White House-military tensions over Afghanistan

ஆப்கானிஸ்தான் மீதான வெள்ளை மாளிகை-இராணுவ பதட்டங்கள்

Patrick Martin
6 October 2009

Use this version to print | Send feedback

இராணுவ உயரடுக்கின் பகுதிகளுக்கும் ஒபாமா நிர்வாகத்திற்கும் இடையே வளர்ந்துவரும் பதட்டங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள உயர் தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டலுக்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையிலான பகிரங்கமான பூசலாக வெளிப்பட்டுள்ளது.

மக்கிரிஸ்ட்டலின் பெரும் உரத்த கோரிக்கையான 40,000 கூடுதல் துருப்புக்கள் வேண்டும் என்பது கடந்த வாரம் அவர் லண்டனில் International Institute for Strategic Studies ல் பேசிய உரையில் முக்கியத்துவம் பெற்றது, ஞாயிறன்று ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓய்வுபெற்ற கடற்படை தளபதி ஜேம்ஸ் எல்.ஜோன்ஸிடம் இருந்தும் திங்களன்று பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸிடம் இருந்தும் கண்டனங்களை வரவழைத்தது.

இரு அதிகாரிகளும் மக்கிரிஸ்டலை பெயரிட்டுக் குறிப்பிடவில்லை என்றாலும், இருவரும் அவர் இன்னும் அதிக துருப்புக்களுக்கு ஜனாதிபதி ஒபாமாவின் முடிவிற்கு முன்னதாகவே பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்வது, சிவிலிய தலைமைத் தளபதிக்கு பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் தாழ்ந்திருக்க வேண்டும் என்ற விதிகளை மீறுவது போல் ஆகும் என்று தெளிவாக்கியுள்ளனர்.

CNN ல் ஞாயிறன்று தோன்றிய ஜோன்ஸ், ஒரு சீருடை அதிகாரி பகிரங்கமாக போரில் குறிப்பிட்ட கொள்கை விருப்பத்திற்குப் பிரச்சாரம் செய்வது முறையா என்று கேட்கப்பட்டார். "சிறந்த நிலையில் இராணுவ ஆணையக தொடர்முறையின் மூலம் வருவதுதான் நல்லது" என்று அறிவித்த வகையில் ஜோன்ஸ் அதற்கு விடையிறுத்தார்.

திங்களன்று கேட்ஸ் இன்னும் உறுதியான முறையில் வாஷிங்டனில் உள்ள இராணுவ மரபுப்படி, சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் அவர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறும்போது தங்கள் கருத்துக்களை அந்தரங்கமாக வைத்துக் கொள்ள வேண்டிய கடைமை உண்டு என்று உறுதிபடக் கூறினார்.

"ஆப்கானிஸ்தான் நடப்புக்கள் பற்றி அடுத்த கட்டத்திற்கான முடிவுகளை ஜனாதிபதி எடுப்பது அவருடைய ஜனாதிபதிப் பொறுப்பிலேயே மிக முக்கியமானது என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார். "எனவே இதைச் சரியான முறையில் செய்வதற்கு தேவைப்படும் நேரத்தை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். இந்த வழிவகையில், இந்த பேச்சுக்களில் பங்கு பெறும் அனைவரும் --சிவில் அதிகாரிகளானாலும், இராணுவத்தினரானாலும்-- ஜனாதிபதிக்கு தெளிவாக, ஆனால் அந்தரங்கமாக ஆலோசனை அளிக்க வேண்டும்."

அதன் பின் அவர் தொடர்ந்து கூறியது: "பாதுகாப்புத் துறை சார்பில் பேசுகையில், தலைமைத்தளபதி தன் முடிவுகளை எடுத்தபின் அந்த முடிவுகளை விசுவாசத்துடன் மதித்து நாம் நம்முடைய திறனுக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும்."

ஆகஸ்ட் 31ம் தேதி பென்டகனிடத்தில் ஆப்கானிஸ்தான் இராணுவ நிலைமை பற்றி ஒரு நீண்ட அறிக்கையைக் கொடுத்து அதன் பின் படைகள் தேவை என்ற முறையான கோரிக்கையையும் கொடுத்தார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ வெற்றிக்கு நேரப் பலகணி குறைந்து வருகிறது என்றும் எச்சரித்தார்; 12 மாதங்கள்தான் உள்ளன; ஏனெனில் தாலிபனும் மற்ற எழுச்சி இயக்கங்களும் வலுப்பெற்று வருகின்றன, மக்கள் போருக்கு கொடுக்கும் ஆதரவும் குறைந்துவருகிறது என்று அவர் எச்சரித்தார்.

ஒரு முழு அளவு கிளர்ச்சி-எதிர்ப்பு மூலோபாயத்திற்கு அழைப்பு விடுத்த அவர், இப்பொழுதுள்ள அமெரிக்க படைகளைவிட மிக அதிக எண்ணிக்கை அதற்குத் தேவைப்படும் என்றார். அமெரிக்க மத்திய ஆணையகத்தின் தலைவரான தளபதி டேவிட் பெட்ரீயஸ், கூட்டு படைத்தலைவர்களின் தலைவர் அட்மைரல் மைக் முல்லன் இருவரும் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் கொடுத்தனர்.

பல செய்தி ஊடகத் தகவல்கள்படி, ஒபாமா நிர்வாகத்திற்குள் இருக்கும் கூறுபாடுகள் மற்றும் இராணுவத்தினுள் இருக்கும் கூறுபாடுகளும் மக்கிரிஸ்டல் திட்டம் பற்றி அவநம்பிக்கை கொண்டுள்ளதுடன், தாலிபனின் பாதுகாப்பான இடங்களை இலக்கு வைத்தல், பாக்கிஸ்தானில் இருக்கும் அமெரிக்க எதிர்ப்பு எழுச்சியாளர்கள் மீது இலக்கு வைத்தல் ஆகிய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் போன்ற மாற்றீடுகளுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

திங்களன்று பிரிட்டனின் Daily Telegraph "பாரக் ஒபாமா ஆப்கானிஸ்தான் பற்றிய மக்கிரிஸ்டல் உரை பற்றி பெரும் சீற்றத்தைக் கொண்டுள்ளார்" என்ற தலையங்க அறிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளது. தன்னுடைய லண்டன் உரையில் மக்கிரிஸ்டல் துணை ஜனாதிபதி ஜோசப் பிடன் விரும்பியதாகத் தெரிவிக்கப்படும் மாற்று "பயங்கரவாத எதிர்ப்பு முறை" பற்றி குறிப்பிட்டு அந்த மூலோபாயம் "குழப்பஸ்தானுக்கு" (Chaosistan) ஒப்பானது ஆகும் என்றும், அதன்படி நாடு பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போக அனுமதித்துவிடும் என்றும், இது "உள்ளிருந்து தீர்க்கப்பட வேண்டியது என்றும்" கூறினார்.

பார்வையாளர்களில் ஒருவர் பிடன் கருத்துப்படியான மூலோபாயம் வெற்றிபெறும் என அவர் நம்புகிறாரா எனக் கேட்கப்படுவதற்கு மக்கிரிஸ்டல் விடையிறுத்தார்: "சுருக்கமான விடை இல்லை."

உரை முடிந்த மறுநாளே மக்கிரிஸ்டல் "சிக்காகோ ஒலிம்பிக் நடத்தும் முயற்சியில் (தோல்வியுற்றாலும்) ஆதரவிற்கு வந்திருந்த ஜனாதிபதியை கோபன்ஹாகெனில் விமானப்படை ஒன்றில் நேருக்கு நேர் 25 நிமிடங்கள் பேசும் சங்கடமான நிலைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டார்" என்று டெலிகிராப் குறிப்பிட்டுள்ளது.

பென்டகனும் வெள்ளை மாளிகையிலும் ஆப்கானிஸ்தானிய கொள்கை பற்றி நடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் "சமாதானத்தை நாடும்" பிரிவு ஏதும் கிடையாது. இது வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரோபர்ட் கிப்ஸினால் திங்களன்று அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது; கொள்கை மாற்றத்தில் பரிசீலினைக்கு வராத ஒரு "விருப்பத்தேர்வு" ஆக்கிரமிப்பு நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுதல் ஆகும்.

வாஷிங்டனில் அனைத்துத் தரப்பினரும் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறும் கருத்து பற்றிய விவாதத்தை நிராகரித்தாலும், அமெரிக்க மக்கள் பெருகிய முறையில் விரும்பும் கொள்கை அதுதான். சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் போர் எதிர்ப்பிற்கு தெளிவான பெரும்பான்மை இருப்பதை காட்டுகின்றன.

சீருடை அணிந்த இராணுவத் தளபதிகள் ஆப்கானிய கொள்கை பற்றிய விவாதங்களில் தலையிடுவது, அமெரிக்க அரசியல் வாழ்வில் இராணுவ உயரடுக்கு ஆற்றுகின்ற அதிகரித்த அளவில் உறுதியைக் காட்டும், தன்னம்பிக்கை கொண்ட பங்கின் தெளிவான வெளிப்பாடு ஆகும். கூட்டாட்சி விருப்பப்படி நிர்ணயிக்கப்பெற்ற செலவின் பெரும் பகுதியை இப்பொழுது பென்டகன் விழுங்குகிறது; 700 பில்லியன் டாலர் தற்போதைய நிதி ஆண்டில் இராணுவ உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன; இதில் இரு போர்கள் மற்றும் மகத்தான அமெரிக்க அணுவாயுதக் குவிப்பை பராமரிப்பது ஆகியவை உள்ளடங்கும்.

கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவில் படைத் தளபதிகளின் தலைவரான அட்மைரல் முல்லென், ஒபாமா ஜனாதிபதி பிரச்சாரத்தில் வாதிட்ட ஈராக் கொள்கை பற்றி பகிரங்கமாக தாக்கினார். Fox Network என்னும் குடியரசுக் கட்சி அவை தொலைக்காட்சியில் தோன்றி ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளாரை தாக்கும் அளவிற்கு அவர் சென்றார்.

பாதுகாப்பு மந்திரி, அதிகாரிகள் பிரிவிற்கு பகிரங்கமாக அது தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் தலைவர்களுக்கு தாழ்ந்தது என்று நினைவுறுத்தும் நிலை வந்ததே பல ஆண்டுகளாக இராணுவ-தேசிய பாதுகாப்புக் கருவிகளின் அதிகாரம், சுதந்திரம் ஆகியவற்றின் மகத்தான வளர்ச்சிக்கு நிரூபணம் ஆகும். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு மாபெரும் நெருக்கடி உள்ள நிலையில், இராணுவத்திற்குள் இருக்கும் கூறுபாடுகள் சிவிலிய அதிகாரத்தை வெளிப்படையாக மீறும் அச்சுறுத்தலை கொடுக்கின்றன என்ற முடிவிற்குத்தான் வரவேண்டியுள்ளது.

ஜனநாயக நடைமுறைகள் ஆழமாக அரிக்கப்பட்டுள்ளது மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தல் பெருகியுள்ளது பற்றி இது உழைக்கும் மக்களால் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். வெளியே இராணுவ நெருக்கடியும், பெருமந்த நிலைக்குப் பின்னர் மிக ஆழமான பொருளாதார நெருக்கடி மற்றும் என்றும் பெருகிவரும் சமூக இன்னல் மற்றும் பொருளாதார சமத்துவமற்ற நிலை ஆகியன ஒன்றுசேர்தலானது, தவிர்க்க முடியாமல் ஆளும் வர்க்கத்தை சர்வாதிகார மற்றும் ஒடுக்குமுறை ஆட்சியை நோக்கிச் செல்ல உந்துதல் கொடுக்கும்.

அமெரிக்க ஜனநாயகம் சீரழிந்ததன் அடிப்படை ஆதாரம் இலாப முறையின் நெருக்கடி ஆகும். அனைத்து அதிகாரங்களும் ஒரு சிறு பெரும் செல்வ அடுக்கின் கரங்களில் குவிக்கப்பட்டு அது பெரும் செல்வத்தைக் கட்டுப்படுத்தி, வாஷிங்டனில் மையம் கொண்டுள்ள இராணுவ உளவுத்துறைமீது மகத்தான செல்வாக்கையும் கொண்டிருக்கிறது என்ற நிலையில் ஒரு சமூகத்தின் ஜனநாயக விதிகளை தக்க வைத்துக்கொள்ளுதல் இயலாத செயல் ஆகும்.

ஆசிரியர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்.

அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி ஈராக், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புக்கள் ஒரு தசாப்தம் நீடிக்கும் என்று கருதுகிறார்