சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK students protest prior to parliamentary vote on increased fees

கல்விக் கட்டண அதிகரிப்பை எதிர்த்து பாராளுமன்ற வாக்களிப்பிற்கு முன்னதாக இங்கிலாந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

By Julie Hyland
9 December 2010

Use this version to print | Send feedback

இன்றைய பாராளுமன்றத்தில் கல்விக் கட்டண அதிகரிப்புக் குறித்து வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் புதன்கிழமையன்று மாணவ எதிர்ப்பாளர்கள் நடவடிக்கை தினம் ஒன்றை மேற்கோண்டனர்.

கல்விக் கட்டணத்தின் மீதுள்ள வரம்பை உயர்த்துவது என்னும் கன்சர்வேடிவ்/லிபரல் டெமக்ராட் அரசாங்கத்தின் நடவடிக்கையையொட்டி தற்பொழுது ஆண்டு ஒன்றிற்கு 3,000 பவுண்டுகள் என்றுள்ள கட்டணம் மூன்று மடங்கு அதிகமாகி 9,000 பவுண்டுகள் ஆகும்.

பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பர்மிங்ஹாம், மான்செஸ்டர், போர்ன்மௌத், பிரிஸ்டல், கோவன்ட்ரி, எக்ஸ்டெர், க்ளஸ்டர்ஷயர், லீட்ஸ், ஷெபீல்ட், ஒர்ஸ்டர் மற்றும் வார்விக் ஆகிய நகரங்களில் குழுமினர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கிளாஸ்கோ, எடின்பரோவிலும் நடைபெற்றது. லண்டனில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வெளியேபாட வகுப்புக்களைநடத்தினர்.

23 பல்கலைக்கழகங்களில் ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்றுள்ளன. HSBC வங்கியின் மத்திய லண்டன் கிளையிலும், லீட்ஸ் வளாகத்தில் Santander வங்கியின் கிளையிலும் உள்ளிருப்புப் போராட்டங்கள் நடப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இன்றையை நடவடிக்கை தினம், தேசிய ஆர்ப்பாட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது செல்வாக்குச் செலுத்துதல் என்பவற்றின் ஒரு வழிவகுக்கும் முன்னோடியாக, அதன் ஒரு பகுதியாக உள்ளது அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிராக நடைபெறும் எதிர்ப்புக்களில் இது ஐந்தாவது ஆகும். பல்கலைக்கழகங்கள், சில உயர்கல்விக் கூடங்களைத் தவிர, பள்ளி மாணவர்கள் மற்றும் தொடர்கல்விக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் இந்த எதிர்ப்புக்களில் கலந்து கொண்டு, மிக வறிய மாணவர்களுக்கு கல்விப் பராமரிப்புப்படி என்று வாரந்திரம் கொடுக்கப்படும் 30 பவுண்டை மறுப்பதற்கான திட்டங்களையும் கண்டித்தனர்.

லண்டனில் முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொன்றுமே பொலிசாரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டன. அவர்கள்சுற்றிவளைத்தல்உத்திகளையும்பல மணி நேரத்திற்குத் தெரு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டாயமாக சுற்றிவிளைத்த முறையில் காவலில் வைத்தல்கையாண்டதுடன் குதிரைப்படை பொலிஸ் மூலமும் தாக்கினர். முன்பு இருந்தது போல் புதனன்றும் ஏறத்தாழ அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் பாரிய பொலிஸ் பிரசன்னம் இருந்தது.

முந்தைய ஆர்ப்பாட்டங்கள் தேசிய மாணவர் சங்கத்தினரால்  (NUS) தாக்குதலுக்கு உட்பட்டன. NUS தலைவர் Aaron Porter லண்டன் மில்பாங் ரவரிலுள்ள கன்சர்வேடிவ் கட்சித் தலைமையகம் நவம்பர் 10ம் தேதி கிட்டத்தட்ட 200 மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதைஇழிந்த செயல்என்றும் ஒரு சிறுபான்மைதொந்திரவு கொடுப்பவர்களால்நடத்தப்பட்டது என்றும் கண்டித்தார்.

இனி எத்தகைய வருங்கால மாணவர் எதிர்ப்புக்களிலும் அது தொடர்பு கொண்டிருக்காது என்பதையும் NUS சுட்டிக் காட்டியது. இதற்குக் காரணம் நவம்பர் 10 நடவடிக்கை, அதன் மூலோபாயமான கூட்டணி அரசாங்கத்திற்கு அழுத்தும் கொடுத்து திட்டத்தைப் பின் வாங்குதல் என்பதற்கு மாறாக இருந்தது. குறிப்பாக அது லிபரல் டெமக்ராட் பாராளுமன்ற உறுப்பினர்களை, அவர்கள் மே பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக பயிற்சிக் கட்டணத்தை அகற்றுவதாக உறுதி மொழி கொடுத்திருந்ததால், அதிகரிப்பிற்கு எதிராக வாக்களிப்பதற்குசெல்வாக்கிற்கு உட்படுத்தமுயன்றது.

பின்னர் NUS தான் கூறியபடியே நடந்து கொண்டதுஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கள் என்று கடந்த வாரங்களில் நடைபெற்றவற்றில் கலந்து கொள்ளாமல், அந்நடவடிக்கைகள் பொலிஸ் மிரட்டல், ஏராளமான கைதுகளைக் கொண்டபோதிலும், மௌனமாக இருந்துவிட்டது.

ஆனால் இயக்கம் தீவிரமயமாதல் திறன் உடையது என்ற கவலையைக் கொண்டுகுறிப்பாக அரசாங்கத்தின் வெளிப்படையான விரோதப் போக்கின்கீழ்போர்ட்டர் கடந்த வாரம் நவம்பர் 10ம் தேதி தன்னுடையமுதுகெலும்பற்றஅறிக்கைக்காக மன்னிப்புக் கோரினார். அதே நேரத்தில் NUS இன்றைய செல்வாக்கிற்கான நடவடிக்கை உட்பட இயக்கத்தின் மீது மீண்டும் கட்டுப்பாட்டைக் கொள்ள முயலும் வகையில் கலந்து கொள்ளுவதாகவும் கையெழுத்திட்டது. இதன் பின் NUS திங்களன்று தன் நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக் கொண்டு, அதன் தேசிய நிர்வாகக் குழு பாராளுமன்றச் சதுக்கத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த அணிவகுப்பில் பங்கு பெறுவதில்லை என்று வாக்களித்திருந்ததை ஏற்று தேம்ஸ் நதிக்கரையில்மெழுகு வர்த்தி ஏற்றிக் கண்காணிப்பைநடத்துவது என முடிவெடுத்தது.

எதிர்ப்பை சிதைக்கும் மற்றொரு முயற்சியில் அரசாங்கம் ஒரு கடைசி நிமிடசலுகையைஅறிவித்ததுஅதாவது பட்டதாரிகள் கட்டணத்திற்காகப் பெற்ற கடனைத் திருப்பித் தருவதற்கு 21,000 பவுண்டுகள் ஊதியம் பெறத் தொடங்கியவுடன் செலுத்த ஆரம்பிப்பர் என்பது, 2016ல் இருந்து பணவீக்க விகிதத்தையொட்டி உயர்த்தப்படும். துணைப் பிரதம மந்திரியும் லிபரல் டெமக்ராட்டின் தலைவர் நிக் கிளாக் அவருடைய கட்சி மந்திரிகள் அனைவரும் கட்டண அதிகரிப்பிற்கு ஆதரவு கொடுத்து வாக்களிக்க உள்ளனர் என்று கூறியபின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கட்டண அதிகரிப்பை எதிர்க்கப் போவதாக லிபரல் டெமக்ராட் கொடுத்திருந்த உறுதிமொழியினால் கணிசமான மாணவர்களின் வாக்குகளைப் பெற முடிந்தது. ஆனால் கன்சர்வேடிவ்களுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்ட உடனேயே, அந்த உறுதிமொழி தூர எறியப்பட்டது. பல பொதுமேடைகளில் தோன்றுவதை இதற்குப் பின் கிளெக் இரத்து செய்தார். இதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்ற இருந்த உரையும் அடங்கும். கடந்த வாரம்தான் லிபரல் டெமக்ராட்டுக்கள் எதிர்ப்புக்களுக்குப் பயந்து தங்கள் லண்டன் மாநாட்டை இரத்து செய்தனர்.

பொருளாதார மந்தநிலை மற்றும் பிரிட்டனின் ஆபத்தான நிதிய நிலை ஆகியவை மாணவர்களுக்கு அதிகக் கட்டணம் விதிப்பதைத் தவிர வேறு மாற்றீடு இல்லை என்ற காரணத்தைக் காட்டி கட்சியின் பின்வாங்கலை கிளெக் நியாப்படுத்தியுள்ளார். இதே பல்லவிதான் 1930 களில் இருந்து அரசாங்கங்கள் மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்போது எல்லாம் கூறப்படுகின்றன. கிட்டத்தட்ட 83 பில்லியன் பவுண்டுகள் பொதுச் செலவு வெட்டுக்கள் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நூறாயிரக் கணக்கான வேலை இழப்புக்கள், பொதுநல நிதிய உதவி வெட்டுக்கள், சமூகச்செலவு வெட்டுக்கள் ஆகியவை இருப்பதுடன் ஓய்வூதியத் தகுதி பெறும் வயதும் உயர்த்தப்பட்டுள்ளதும் அடங்கும்.

கல்விக் கட்டணத்தை உயர்த்தும் அதே நேரத்தில், அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்குக் கொடுக்கும் நிதிகளையும் குறைத்துவிட்டது. பல்கலைக்கழகக் கல்லூரிச் சங்கம் நடத்திய ஆய்வின்படி, இங்கிலாந்திலுள்ள 130 பல்கலைக்கழகங்களில் மூன்றில் ஒரு பகுதி இப்பொழுது பெரும் வெட்டுக்களால்இடருக்குஉட்பட்டிருப்பதுடன், பல மூடலையும் எதிர்நோக்கியுள்ளன. இந்த அறிக்கை ஷெப்பீல்ட் ஹாலம் பல்கலைக்கழகத்தை ஒரு உதாரணமாகக் காட்டியுள்ளது. இது 2009ம் ஆண்டில் 1.9 மில்லியன் பவுண்டுகள் உபரியைக் கொண்டிருந்தது. ஆனால்முன்னுரிமைஇல்லாத பாடத்திட்டங்களுக்கு அரசாங்க நிதி இல்லை என்பதைத் தொடர்ந்து, இது ஆண்டு ஒன்றிற்குக் கிட்டத்தட்ட 47 மில்லியன் பவுண்டுகளை இழக்கும். “இந்த இழந்த வருமானத்தில் குறைந்தபட்சம் 96 சதவிகிதத்தையாவது  கட்டண உயர்வின் மூலம் மீட்கத் தவறினால், இது பற்றாக்குறையை எதிர்கொண்டு வசதிகளையும் குறைக்க வேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்படும்என்று அறிக்கை கூறுகிறது.

இந்தக் குறைப்புக்களுக்கு ஆர்வமுடன் வாதிடுபவர்களாக லிபரல் டெமக்ராட்டுக்கள் வெளிப்பட்டுள்ளனர். மாணவர்கள்உண்மை உலகத்தில்வாழக் கற்றுக் கொள்ளவேண்டும், “ஆட்சி நடத்துவது என்பது பலவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுஎன்பதாகும் என்றும் அவர் கூறினார்.

கல்விக் கட்டண உயர்விற்கு ஆதரவாக, லிபரல் டெமக்ராட்டுக்கள்ஒரு குழுவாகவாக்களிப்பர் என்று க்ளெக் கூறினார். சில கட்சி எம்.பி.க்கள் தன்னுடன் கூடநெருப்பில் நடக்கத் தயாராக இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்துள்ள அவர், அதிகரிப்போடுவாழஇயலாதவர்கள் கூட்டாட்சி உடன்பாட்டைப் பின்பற்றி வாக்களிப்பின்போது திட்டத்தை எதிர்க்காமல் வாக்களிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம் வணிகத்துறை மந்திரி வின்ஸ் கேபிள் அதிகரிப்பை முன்வைத்திருந்தபோதிலும்கூட, தான் வாக்களிக்கப் போவதில்லை என்று குறிப்புக் கட்டியுள்ளார். அந்த அறிவிப்பும் ஓசையின்றிக் கைவிடப்பட்டது.

ஒருவித எதிர்ப்பு நிலைப்பாட்டை முயற்சி செய்து காட்ட வேண்டும் என்று தொழிற் கட்சியும் பரபரப்புடன் இயங்குகிறது. அதே நேரத்தில் மக்களின் பரந்த எதிர்ப்பிற்கு ஊக்கம் தருவதற்கும் இது ஏதும் செய்யவில்லை. தான் ஆதரிக்கும் சிக்கன நடவடிக்கைகளின் தேவையை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் விரும்பவில்லை. 2004ல் டோனி பிளேயரின் கீழான தொழிற் கட்சி அரசாங்கம்தான் கல்விக் கட்டணத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. அதன் பின் தொடர்ந்து அதற்கு ஆதரவு கொடுத்துள்ளது. ஆனால் புதன்கிழமையன்று தொழிற் கட்சி தலைவர் எட் மிலிபாண்ட் கூட்டாட்சி அரசாங்கம்மீண்டும் சிந்தித்து ஒரு சிறந்த திட்டத்தை முன்வைக்குமாறுஅழைப்பு விடுத்துள்ளார்.

அதே தினத்தில் நிழல் மந்திரிசபை நிதிமந்திரி ஆலன் ஜோன்சன் டைம்ஸிடம்  இப்பொழுது அவர் கல்விக் கட்டணத்திற்குப் பதிலாக பட்டதாரிகள் மீதான வரி என்பதற்குவலுவான ஆதாரம்உள்ளது எனத் தான் நம்புவதாகக் கூறினார். தொழிற் கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதற்குப் பொறுப்புக் கொண்டிருந்த ஜோன்சன் கூட்டணி அதை அதிகரித்துள்ளதுநான் அவர்களுக்குக் கொடுத்திருந்த மரபியத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகும்என்றார்.

செப்டம்பர் மாதம்தான் தொழிற் கட்சி தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜோன்சன் ஒரு பகிரங்கக் கடிதத்தை மிலிபாண்டிற்கு  Independent on Sunday  யில்  “கல்விக் கட்டணத்தை அறிமுகப்படுத்திய எங்கள் தைரியமான, சரியான முடிவு குறித்து கட்சி பெருமை கொள்ளலாம்என்று வலியுறுத்தி எழுதியிருந்தார்.

தொழிற் கட்சியின் சிதைந்த சான்றுகளை முக்கியமாகப் பாதுகாப்பவை போலி இடது குழுக்களாகும். இத்தொகுப்பில் முன்னிற்பது சோசலிச தொழிலாளர் கட்சியாகும். இதன் முக்கிய கோட்பாடு இயற்றுபவரான அலெக்ஸ் காலினிகோஸ் டிசம்பர் 6ம் தேதி லண்டன் பொருளாதாரப் பயிலகத்தில் (London School of Economics) நடந்த ஒரு ஆக்கிரமிப்பின்போது பேசினார்.

கிரேக்கத்தில் நடக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தின் படிப்பினைகளை பற்றி உரை என்று விளம்பரப்படுத்திருந்த நிலையில், இவர் தன்னுடைய உரையில் கிரேக்கம் பற்றிப் பேச விரும்பவில்லை என்றும்இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறதுஎன்பது பற்றி பேச உள்ளதாகவும் கூறினார். ஒரு ஒருநாள் பொதுவேலைநிறுத்தத்தை வலியுறுத்துவதற்குத்தான் கிரேக்கம் மேற்கோளிடப்பட்டது. அதேபோல் கிரேக்கத் தொழிற்சங்கங்களால் நடத்தப்பட்ட எதிர்ப்புத் தந்திரங்களையொட்டி அது இருக்க வேண்டும் என்பதற்காக அது மேற்கோளிடப்பட்டது என்றார்.

அரசாங்கத்தின் மீது லிபரல் டெமக்ராட்டுக்களுக்கும் டோரிகளுக்கும் இடையேபிளைவை ஏற்படுத்துவதற்குத்தான்அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று காலினிக்கோஸ் வலியுறுத்தினார். போராட்டத்தில் தொழிற்சங்கத்தின் வலிமையும் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் முடிவுரையாகக் கூறினார்மாணவர்களோடு ஒப்பிடும்போது இவைமெதுவாக நகரும்அமைப்புக்கள் என்றாலும், அவை பங்கு பெறுவது ஒன்றுதான் அவற்றிற்கு முன்னேற்றப்பாதை ஆகும் என்றும் அவர் கூறினார்.

கூட்டத்தில் பேசிய சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் போல் ஸ்டூவர்ட் மாணவர்கள் தொழிற்சங்கங்களிடம் எந்த நம்பிக்கையும் வைக்கக்கூடாது என்றும், மாறாகஒரு புதிய அரசியல் முன்னோக்கிற்கும் போராட்டத்திறன் கொண்ட புதிய அமைப்புக்களை கட்டமைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்ப வேண்டும். கிரேக்கத் தொழிலாளர்கள் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான நடத்திய போராட்டத்தின் அரசியல் படிப்பினைகள் மிகவும் மையமானவை. தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் சர்வதேச வங்கிகள், முதலீட்டாளர்கள் ஆகியோரின் ஒவ்வொரு கோரிக்கையையும் செயல்படுத்த ஒத்துழைத்தனஎன்று அவர் கூறினார்.

தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையேயுள்ள உண்மையான உறவு என்ன? இதுதான் கடந்த பார வாகன சாரதிகளின் தேசிய வேலைநிறுத்தத்தின்போது காட்டப்பட்டது. இராணுவம் வேலைநிறுத்த முறிப்பு முயற்சி நடத்தியதை எதிர்கொண்டபோது, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக நின்றன. தொழிலாளர்கள் அணிவகுத்து ஆர்ப்பாட்டம் நடத்தி, தங்கள் தொழிற்சங்கத் தலைவர்களைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.”

இதே பங்குதான் பிரான்சிலுள்ள தொழிற்சங்கங்களாலும் செய்யப்பட்டன என்று ஸ்டூவர்ட் கூறினார். “இப்பொழுது நாம் ஸ்பெயினைப் பார்க்கிறோம். பணி நேரத்தில் பெரும் அதிகரிப்புக்கள் சுமத்தப்பட்டதற்கு எதிரான திடீரென வேலைநிறுத்தம் செய்த போது என்ன நடந்தது என்பது பற்றி என்னிடம் கூறிய பல விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன். PSOE அரசாங்கம் இராணுவக் குற்றவியல் சட்டத் தொகுப்பை சுமத்தி, அவர்களை இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் பணிபுரிய வைத்தது. பணிபுரியாவிட்டால் 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலும் இருந்தது. தொழிற்சங்கங்கள் இவற்றை எதிர்த்து ஏதும் செய்யவில்லை

கூட்டணி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து நடைபெற்ற ஒவ்வொரு போராட்டத்தையும் பிரிட்டனில் தொழிற்சங்கங்கள் நாசப்படுத்தின…. தொழிலாள வர்க்கம் மகத்தான போராட்டங்களில் நுழையும், ஆனால் அது தொழிற்சங்க அதிகாரத்திற்கு எதிரான வெளிப்படையான எழுச்சியாக இருக்கும்என்று ஸ்டூவர்ட் தொடர்ந்து கூறினார்.

இதற்கு விடையிறுக்கையில் காலினிக்கோஸ் இழிந்த முறையில் தொழிற்சங்க காட்டிக் கொடுப்புக்களை பற்றிஉங்கள் கையளவு நீண்ட பட்டியலைக் கொடுக்க முடியும் என்று அறிவித்தார். “ஆனால் அவை ஒன்றுதான் நம்மிடையே இருக்கும் அமைப்புக்கள்.” அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொழிற் சங்க காங்கிரஸ் (Trades Union Congress -TUC) நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டம்தொலைவில் வரவுள்ளது போல் தோன்றலாம். ஆனால் கிறிஸ்துமஸிற்குப் பின்னர் அது ஒன்றும் பெரும் தொலைவில் இருக்காது.”