சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

G20 summit dominated by specter of currency, trade wars

G20 உச்சிமாநாடு நாணய, வணிகப் போர்கள் பற்றிய ஆவேசத்தால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது

By Barry Grey
11 November 2010

Use this version to print | Send feedback

முக்கிய நாடுகளின் G20 உச்சிமாநாடு இன்று தென்கொரிய சியோலில் கூடுகிறது. அது டாலர் மதிப்பைக் குறைப்பதனூடாக தனது போட்டியாளர்கள் மீது தனது போட்டி வர்த்தக சாத்தியங்களை பெற்றுக்கொள்வதற்கான வாஷிங்டனின் உந்துதலால் சர்வதேச நாணய மற்றும் வணிக மோதல்கள் அதிகரித்துள்ள சூழ்நிலைக்கு இடையே கூடுகிறது.

இரு ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த உலகப் பொருளாதார நெருக்கடியின் அடிப்படை மற்றும் அமைப்புரீதியான தன்மை, G20 மாநாட்டின் விதியிலேயே பிரதிபலிக்கிறது. நவம்பர் 2008ல், வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கி லெஹ்மன் பிரதர்ஸின் சரிவு உலக நிதியச் சந்தைகளில் கரைப்பு ஏற்படத் தூண்டியபோது, G20 அரசாங்கத் தலைவர்களின் முதல் நெருக்கடிக்குப் பிந்தைய உச்சிமாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. அது சர்வதேச கூட்டுறவின் வெற்றி என்று பெரிதும் பாராட்டப்பட்டது.

அதில் பங்கு பெற்றவர்கள் நெருக்கடியில் இருந்து மற்ற நாடுகளின் இழப்பில் எந்த நாடும் தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்யாது என்ற ஒருமித்த உடன்பாட்டைப் பறைசாற்றினர். போட்டித்தன்மையில் நாணயங்களின் மதிப்பைக் குறைத்தல், பாதுகாப்பு வரிகள் சுமத்தல் மற்றும் வணிகப் போர்கள் என்று 1930 களில் ஆதிக்கம் செலுத்தி இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த செயல்கள் கூடுதலான அறிவொளிசார்ந்த 21ம் நூற்றாண்டில் மீண்டும் நடக்காது என்று கூறப்பட்டது.

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி அப்பொழுது ஆர்வத்துடன் கூறினார்: “21ம் நூற்றாண்டின் கோள்களின் ஆட்சியின் முன்னிழலை G20 காட்டுகிறது.”

இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு G20 உச்சிமாநாடுகளுக்குப் பின்னர், இன்றைய அரசாங்கத் தலைவர்களின் கூட்டம் ஒருவரையொருவர் சாடுதல், தொடர்ச்சியான விரோதப் போக்குடைய தூண்டுதல்கள், எதிர்த் தூண்டுதல்கள் என்று அமெரிக்காவும் அதன் முக்கிய வணிகப் போட்டியாளர்களும் ஈடுபட்டுள்ள நிகழ்வாகிவிட்டது. போருக்குப் பிந்தைய முழு உலகப் பொருளாதார உறவுகளும் முறிந்து வருகின்றன என்ற உணர்வு பெருகியுள்ளது.

தளர்ந்த, வளர்ச்சி குன்றியுள்ள அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் அரசாங்கங்களின் மாறுபட்ட செயல்கள், அதிலும் ஐரோப்பாவில் காட்டுமிராண்டித்தனமாக நடைபெறுகையில், ஐரோப்பிய அரசாங்கக் கடன் நெருக்கடியைத் தொடர்ந்த கடும் சிக்கன நடவடிக்கைகள், மற்றும் யூரோ ஒருவேளை முறிந்துவிடக்கூடும் என்பதற்கான பெருகிய அடையாளங்கள் உள்ள நிலை ஆகியவை காப்புவரிகள் மற்றும் பொருளாதார தேசியவாதம் ஆகியவை மீள்எழுச்சி பெற எரியூட்டுகின்றன.

நெருக்கடியின் மையத்தில் அமெரிக்காவின் உலகப் பொருளாதார நிலையில் பரந்த சரிவு உள்ளது. இது இரண்டாம் உலகப் போர் மற்றும் பெருமந்த நிலைக்குப் பின் முதலாளித்துவம் மீள்உறுதிப்பட மற்றும் விரிவாக்கம் அடைய இருந்த அஸ்திவாரத்தை சிதைத்துவிட்டது. இது டாலர் மற்றும் அமெரிக்க நாணயம் உறுதியளித்திருந்த நாணய முறை மீது அப்பட்டமான நம்பிக்கைச் சரிவில் பிரதிபலிக்கிறது.

திங்களன்று உலக வங்கித் தலைவர் ரோபர்ட் ஜோலிக் அரசாங்கங்களையும் மைய வங்கியாளர்களையும் அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் G20 உச்சிமாநாடு உலக நாணய முறையை முற்போக்கான மறுவடிவமைத்தல் பற்றிப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார். டாலர் ஒரு தலைமையான இருப்பு மற்றும் வணிக நாணயம் என்று கொண்டுள்ள பங்கு முடிக்கப்பட வேண்டும் என்றும் அத்துடன் ஒரு புதிய முறை டாலர், யூரோ, யென், சீன ரென்மின்பி ஆகியவை இணைந்து இருக்க வேண்டும் என்றும் கூறினார். புதிய கட்டமைப்பு நாணய மதிப்புக்களின் குறியீடாக தங்கம் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.

இது கடந்த 65 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அமைப்புமுறை இனி முறையாக செயல்படுவதற்கில்லை, எந்த தேசிய நாணயமும் டாலருக்குப் பதிலாக உலக இருப்பு நாணயமாக வரமுடியாது என்பதைத்தான் உட்குறிப்பாக ஒப்புக் கொள்கிறது.

அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பின் கிட்டத்தட்ட பூஜ்ய வட்டி விகிதக் கொள்கை நிதியச் சந்தைகளை குறைமதிப்பு உடைய டாலர்கள்மூலம் வெள்ளமெனச் சூழ்ந்துள்ளது; இது உலக நாணயச் சந்தைகளில் டாலரின் மதிப்பை அதிர்ச்சி கொடுக்கும் வகையிலான சரிவைக் கொடுத்துள்ளது. டாலர் இந்த ஆண்டு இதுவரை ஜப்பானிய யென்னிற்கு எதிராக 13 சதவிகிதம் மதிப்புக் குறைவைக் கொண்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதன் மதிப்பு யூரோவிற்கு எதிராக 18% குறைந்துள்ளது. நிறைய நாணயங்களுக்கு எதிராக ஒப்பிடப்படும்போது, டாலர் ஆகஸ்ட் கடைசியில் இருந்து 8 சதவிகிதிம் மதிப்புக் குறைவாக உள்ளது.

டாலரின் மீதும் இருக்கும் நாணய முறையின் மீதும் உள்ள நம்பிக்கையில் தீவிர அரிப்பின் வெளிப்பாடு தங்க விலையில் வெடிப்புத் தன்மை உடைய ஏற்றமாகும். இந்தவாரம் வருங்கால தங்க விற்பனை விலை எக்காலத்திலும் இல்லாத உயர்ந்த அளவான அவுன்ஸிற்கு $1,420 என ஆயிற்று. மதிப்புடைய உலோகம் இந்த ஆண்டு 28 சதவிகிதம் உயர்மதிப்பைக் கொண்டுள்ளது.

டாலரின் ஆபத்தான சரிவு பொருட்கள் விலைகளில் ஒரு பொது ஏற்றத்திற்கு எரியூட்டியுள்ளது. இதில் பித்தளை, எண்ணெய், தானியம் மற்றும் பிற உணவுப் பொருட்கள் அடங்கியுள்ளன.

புதனன்று G20 பெரிதும் உயரும் தங்கத்தின் விலையை உலகப் பொருளாதார உறவுகளில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த நெருக்கடி பற்றி எச்சரிக்கை என எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஜோலிக் எச்சரித்தார். “முறையில் அழுத்தங்கள் உள்ளன என நான் நினைக்கவில்லை, சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், இந்த அழுத்தங்கள் பாதுகாப்புமுறை ஆபத்தை ஏற்படுத்தும், அதை வளர்த்தும் விடும்.”

ஒபாமா நிர்வாகம் அதன் கோரிக்கையான சீனா அதன் நாணயமான ரென்மின்பியை (யுவான் என்றும் அழைக்கப்படுவது) விரைவில் மதிப்புக் கூட்ட வேண்டும் என்பதற்கான ஒரு ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் உச்சிமாநாட்டை இணைக்க முடியும் என்று நம்புகிறது.

சீனாதான் உலகப் பொருளாதாரத்தின் மறு சீரமைப்பிற்கு, உபரி நாடுகளும் பற்றாக்குறை நாடுகளும் சீரமைய ஒரு தடை என்று காட்டுவதற்கு அமெரிக்கா முற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா, சீனா தன் நாணயத்தை திரித்து, தன் நாணய மாற்றுவிகிதத்தையும் ஏற்றுமதிகளையும் மலிவாக வைக்க விரும்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்தத் தந்திரம், வாஷிங்டனின் மிக அதிக தளர்ச்சியான நிதியக் கொள்கையினால் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது. அது டாலரின் மதிப்பைக் குறைத்து அமெரிக்க ஏற்றுமதிகள் இன்னும் போட்டித் தன்மையைப் பெறும், வெளிநாட்டு ஏற்றுமதிகள் அதிக செலவாகும் என்ற வகையில் சர்வதேச அளவில் அமெரிக்காவும் தன் நாணயத்தைத் திரிப்பதாகத்தான் காணப்படுகிறது.

அமெரிக்காவில் முக்கிய வணிகப் போட்டி நாடுகளான சீனா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் நிறைய எழுச்சி பெற்றுள்ள பொருளாதாரங்களான இந்தியா, தென்கொரியா, பிரேசில், இந்தோனிசியா, தாய்லாந்து, தைவான், சிங்கப்பூர் ஆகியவை மத்திய வங்கிக்கூட்டமைப்பின் கடந்த வார முடிவான உச்சிமாநாட்டிற்கு முன், இரண்டாம் சுற்று “நாணயத்தை எளிமைப்படுத்துதல்” என்பதைப் பற்றி குறிப்பாக அதிர்ச்சி அடைந்துள்ளன. அதாவது--600 பில்லியன் டாலரை அச்சிட்டு நீண்டகால வட்டி விகிதங்களை அமெரிக்காவில் குறைத்தல், பங்குச் சந்தைக்கு ஊக்கம் கொடுத்தல் மற்றும் டாலரின் மதிப்பைக் குறைத்தல் ஆகியவை இதில் உள்ளன.

இது சரியான முறையில் முக்கிய ஏற்றுமதி நாடுகளான சீனா, ஜேர்மனி, ஜப்பான் போன்றவை தங்கள் இழப்பில் அமெரிக்க அதன் ஏற்றுமதிகளை அதிகரிக்கும் காப்புவரி முறை என்று உணரப்பட்டுள்ளது. எழுச்சி பெற்று வரும் பொருளாதாரங்களை பொறுத்தவரை மத்திய வங்கிக் கூட்டமைப்பின் கொள்கை புதிய ஊகவழி டாலர்கள் அவற்றின் நாணய மாற்று விகிதங்களை உயர்த்தி சொத்துக் குமிழிகள் மற்றும் பணவீக்கத்தை வெள்ளப்பெருக்கென அதிகரிக்கும் காலத்திற்கு கட்டியம் கூறுகிறது.

உச்சிமாநாட்டிற்கு முந்தைய காலம் ஏராளமான புகார்கள் மற்றும் அமெரிக்கா பற்றி கண்டனங்கள் G20 அங்கத்துவ நாடுகளில் செய்யப்பட்டுள்ளதை கண்டுள்ளது. மிக ஆக்கிரோஷமான எதிர்விளைவு ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌய்பிளவிடம் இருந்து வந்துள்ளது. அவர் Der Spiegel ஏட்டிடம் கடந்த சனிக்கிழமையன்று மத்திய வங்கிக் கூட்டமைப்பன் முடிவு “அமெரிக்க நிதியக் கொள்கையின் நம்பகத் தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்றார்.

அமெரிக்க “வளர்ச்சி மாதிரிகள்” “கடன் வாங்கிய பணத்தைத் தளமாக கொண்டவை” என்று அவர் கூறினார். மற்றும் “தன் நிதியத் துறையை வீங்கச் செய்து அதன் சிறிய, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் புறக்கணித்த” தளத்தைக் கொண்டது என்றும், இவை இப்பொழுது “ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளன.” என்றார்.

அமெரிக்கா பாசாங்குத்தனத்தைக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டிய அவர், “சீனா நாணய மாற்று விகிதங்களைத் திரிக்கிறது என்று அமெரிக்கர்கள் குற்றம் சாட்டிவிட்டு, தாங்களே செயற்கையாக டாலரின் மாற்று விகிதங்களைப் பணத்தை அச்சிடுவதின் மூலம் குறைப்பது என்பது பொருந்தாத் தன்மை உடையது.” எனக்கூறினார்.

ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் இதேபோன்ற விதத்தில்தான், ஆனால் இன்னும் நிதானமான குரலில் பைனான்சியல் டைம்ஸுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கருத்துத் தெரிவித்தார். G20 உச்சிமாநாடு தற்போதைய கணக்கு உபரிகள், பற்றாக்குறைகளுக்கு குறிப்பிட்ட அளவு இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்னும் வாஷிங்டனுடைய திட்டத்தை அவர் உதறித் தள்ளிய விதத்தில், “நிர்ணயிக்கப்படும் கொடுக்குமதி நிலுவை பற்றிய இலக்குகள் பற்றி நான் அதிகம் நினைக்கவில்லை” என்று கூறினார்.

“கடன் மற்றும் குமிழிகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை” கொண்டுள்ள நாடுகளை அவர் தொடர்ந்து குறைகூறினார்-இதன் உட்குறிப்பில் அமெரிக்காவும் அடங்கியுள்ளது; பின் சேர்த்துக் கொண்டார்: “நம்மை அச்சுறுத்தும் மிகப் பெரிய ஆபத்து காப்புவரிக் கொள்கை முறையாகும்.”

யூரோப்பகுதி நிதி மந்திரிகள் குழுவின் தலைவரும் லக்சம்பேர்க்கின் பிரதம மந்திரியான ஜோன்- குளோட் யுங்கர் ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவிடம் கூறினார்: “மத்திய வங்கிக் கூட்டமைப்பு மீண்டும் அதிக நாணய புழக்கத்தை கொண்டுவருவது நல்ல முடிவு என்று நான் கருதவில்லை. கடனைக் கடன் மூலம் போராட முற்படுகின்றனர். சீனக் கொள்கை பற்றி அதிக குறைபாடு கூறப்படுகிறது. ஆனால் வேறுவிதத்தில் அவர்கள் இதே கொள்கையைத்தான் பின்பற்றுகின்றனர்.”

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவின் உயர்மட்டப் பொருளாதார ஆலோசகரான அர்காடி டிவோர்கோவிஷ் ரஷ்யா G20 உச்சிமாநாட்டில் மத்திய வங்கிக்கூட்டமைப்பின் முக்கியக் கொள்கை முடிவுகளை மேற்கொள்ளுமுன் மற்ற நாடுகளைக் கலந்து ஆலோசக்க வேண்டும் என்று வலியுறுத்தும் என்றார்.

பிரேசிலிய வணிக மந்திரி வீபர் பாரல் மத்திய வங்கிக் கூட்டமைப்பின் செயலை “உங்கள் அண்டை வீட்டாரைப் பிச்சைக்காரர் ஆக்குங்கள்” என்ற நடவடிக்கை போன்றது என்று கண்டித்தார்.

பல சீன அதிகாரிகள் அமெரிக்க நடவடிக்கையை கண்டித்து G20 உச்சிமாநாடு அமெரிக்க நிதியக் கொள்கையைக் கண்காணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். அரசாங்கம் நடத்தும் Xinhua News Agency செவ்வாயன்று ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் G20 “புதிய வழிவகைக் கருவியை நிறுவ வேண்டும், அது பொறுப்பான நாணயக் கொள்கைகளை செயல்படுத்த முடியாமல் இருக்கையில் சர்வதேச இருப்பு நாணய வெளியீடு பற்றித் திறமையுடன் கண்காணிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

சீனத் துணை நிதிமந்திரி ஜு குவாங்யாவோ திங்களன்று ஒரு குறிப்பில் தெரிவித்தது; “ஒரு பெரிய இருப்பு நாணயத்தை வெளியிடும் அமைப்பு என்னும் முறையில், அமெரிக்க ஒரு இரண்டாம் சுற்று நாணய எளிமைப்படுத்தும் முறையை இப்பொழுது தொடக்கியிருப்பது, உலகச் சந்தைகளை உறுதிப்படுத்த வேண்டிய அதன் பொறுப்பை அது உணரவில்லை, வெளிச்சந்தைகள் மீது இத்தகைய பெரும் நீர்மைத் தன்மையின் பாதிப்பைப் பற்றி நினைக்கவில்லை என்றுதான் நாங்கள் உணர்கிறோம்.”

ஒரு முக்கிய சீனச் செய்தித்தாள் அமெரிக்க நடவடிக்கைகள் ஒருவித நாணயத் திரித்தல்தான், இவை புதிய சுற்று நாணயப் போர்கள், ஏன் உலகப் பொருளாதாரச் சரிவிற்குக்கூட வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது.

சற்றும் கலப்படமற்ற பதிலடி நடவடிக்கை என்று மத்திய வங்கிக் கூட்டமைப்பின் செயலுக்கு உள்ள விதத்தில், சீனாவில் முக்கிய அரசாங்க ஒப்புதல் பெற்ற தரம் நிர்ணயிக்கும் அமைப்பு செவ்வாயன்று அமெரிக்க கடன்தர மதிப்பைக் குறைத்தது. இந்த அமைப்பு மத்திய வங்கிக் கூட்டமைப்பின் முடிவை மேற்கோளிட்டு வாஷங்டனின் “சரிந்து வரும் கடன் திருப்பிக் கொடுக்கும் திறன்”, அவை கணிக்கும் “அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி, நிர்வாக மாதிரியில் உள்ள தீவிர குறைபாடுகள்” ஆகியவை “நாட்டின் திவால்தன்மையை அடிப்படையில் குறைத்துவிடுவதற்கு” வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது.

ஜப்பானின் பிரதம மந்திரி நாவோடோ கான் Wall Street Journal இடம் சனிக்கிழமை பேட்டி ஒன்றில் கூறினார். “முதலிலும் முக்கியமானதும், யென்னின் ஏற்றத்திற்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்று டாலரின் வலுவற்ற தன்மை; இது அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையின் பிரதிபலிப்பு ஆகும். அந்தப் பின்னணி பற்றித் தெளிவாக நாம் அறிந்து கொள்ளும் தேவை வந்து விட்டது.”

செப்டம்பரில் மகத்தான முறையில் செய்தது போல் ஜப்பான் நாணயச் சந்தைகளில் குறுக்கிடும் உரிமையைக் கொண்டுள்ளது என்பதை அவர் தெளிவாக்கினார்: “யென்னில் மற்றொரு விரைவான எழுச்சி ஏற்பட்டால், அத்தகைய நடவடிக்கை தேவைப்பட்டுவிடும்.”

தன்னுடைய பங்கிற்கு 10 நாட்கள் நான்கு நாடுகள் ஆசியப் பயணத்தில் உள்ள ஒபாமா (அதில் G20 உச்சிமாநாடும் அடங்கும்) மத்திய வங்கிக் கூட்டமைப்பின் செயலை பாதுகாத்து அமெரிக்க கோரிக்கையான ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடுகளான சீனா, ஜேர்மனி போல் பணப் பறிமாற்றங்களில் ஏராளமான உபரி கொண்ட நாடுகள் தங்கள் ஏற்றமதியைக் குறைக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா உலகச் சந்தைகளில் கூடுதல் பங்கைக் கொள்ள ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வாஷிங்டன் உலகப் பொருளாதாரம் “மறு சீரமைக்கப்பட வேண்டும்” என்று கூறவதின் பொருள் இதுதான்.

இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்குடன் பேசிய கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா, “மத்திய வங்கிக் கூட்டமைப்பு மேற்கோள்ள வேண்டிய செயல், நான் மேற்கொள்ள வேண்டிய செயல் எங்கள் பொருளாதாரத்தை வளர்க்க வைப்பதாகும். அது அமெரிக்காவிற்கு மட்டும் நன்மை என்று இல்லாமல் உலகம் முழுவதிற்குமே நல்லது” என்றார்.

ஜேர்மனி மற்றும் சீனாவை உட்குறிப்பாக இலக்கு வைக்கும் விதத்தில், “சில நாடுகள் மகத்தான வணிக உபரிகளைத் தக்கவைத்துக்கொள்ளுதல், மற்றவை மகத்தான பற்றாக்குறையைக் கொள்ளுதல் என்ற நிலை நீடிப்பதை நாங்கள் தொடர்ந்து ஏற்பதற்கில்லை; இன்னும் சீரான வளர்ச்சி வடிவமைப்பிற்கு வழிவகுக்கக்கூடிய சரிசெய்யும் முறை ஏதும் இல்லை.” என்று அவர் தொடர்ந்து கூறினார்.

அவருடைய அடுத்த பயணித்த இடமான இந்தோனிசியாவில் பேசிய ஒபாமா நேரடியாகவே சீனாவைத் தாக்கிய விதத்தில் “சில நாடுகள் பெரும் உபரிகளைக் கொண்டு நாணயச் சந்தைகளில் தங்கள் நாணயம் என்று வரும்போது அவர்களுடைய நலன்களைக் காக்க குறிப்பிடத்தக்க வகையில் குறுக்கிடுகின்றனர்” என்றார்.

தீவிரமடையும் மோதல்கள் G20 உச்சி மாநாட்டில் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை; அதே போல் மோதல்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான தீவிர உடன்பாடு வருவதற்கும் வாய்ப்பு இல்லை. உச்சிமாநாட்டின் விருந்தோம்பினரான தென் கொரிய ஜனாதிபதி லீ மையுங் கிட்டத்தட்ட இதை ஒப்புக் கொண்ட விதத்தில் புதன்கிழமை ஒரு பேட்டியில் கூறினார்: “குறிப்பிடத்தக்க தீர்வுகளை நாம் அடைய முடியவில்லை. அது ஒரு செயற்குழுவிற்கு விடப்படும். இது தீர்க்கப்பட இன்னும் நாட்கள் எடுக்கும்.”

அதில் பங்கு பெறுபவர்கள் அதிகப் பட்சம் எதிர்பார்க்கக் கூடியது வேறுபாடுகளைப் பூசி மெழுகி, ஒரு வெளிப்படையான பிளவைத் தவிர்க்கும் வகையில் ஒரு தெளிவற்ற அறிக்கையாவே இருக்கும் என்பதைத்தான்.

கட்டுரை ஆசிரியர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்.

நிதிய முறை தங்கத்துடன் பிணைக்கப்பட வேண்டும் என்று உலக வங்கித் தலைவர் அழைப்பு விடுக்கிறார்