சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US escalates killing on both sides of Afghanistan-Pakistan border

ஆப்கானிஸ்தான்-பாக்கிஸ்தானின் இரு புற எல்லைகளிலும் அமெரிக்கா கொலைகள் செய்வதை அதிகரிக்கிறது

Bill Van Auken
29 September 2010

Use this version to print | Send feedback

ஆப்கானிஸ்தானில் ஒன்பது ஆண்டுகளாக நடத்தும் போரில் அமெரிக்கா பெருகிய முறையில் திகைப்பின் அடையாளத்தைக் கொண்டிருக்கையில், வாஷிங்டன் ஒரே நேரத்தில் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான காந்தகார் மீது பெரிய தாக்குதலை தொடக்கியுள்ளது. மேலும் பாக்கிஸ்தானின் FATA எனப்படும் கூட்டாட்சி நிர்வாகத்தில் இருக்கும் பழங்குடிப் பகுதிகள் மீதான அதன் தாக்குதல்களையும் முடுக்கிவிட்டுள்ளது. இதையொட்டி இரு பக்க எல்லைகளிலும் குருதி கொட்டுதல் பெருகிவிட்டது.

பல்லாயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்கள் தெற்கு காந்தகார் மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ளது. இது தாலிபனின் கோட்டை ஆகும். இக்குவிப்பு அப்பகுதியில் ஏற்பட்டுள்ள ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான எழுச்சியை அடக்க கைப்பாவை ஜனாதிபதி ஹமித் கர்சாயியின் அரசாங்கம் மற்றும் ஆக்கிரமிப்புப் படைகளின் கட்டுப்பாட்டை அங்கு சுமத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

‘Operation Dragon Snake” என்று வாஷிங்டனால் பெயரிடப்பட்டுள்ள இத்தாக்குதல் ஏற்கனவே ஆயிரக்கணக்கானவர்களை தங்கள் வீடுகளில் இருந்து துரத்திவிட்டு, விவசாயிகளின் பயிர்களை அழித்துவிட்டது. அதே நேரத்தில் அமெரிக்க இராணுவ மட்டமோ உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டுக் கருவிகளை அகற்றுவதற்கு நாட்டின் பரந்த பகுதிகளை அழிக்கிறது.

ஆக்கிரமிப்பின் செய்தித் தொடர்பாளாரான பிரிகேடியர் ஜெனரல் ஜோசப் ப்ளோட்ஸ் திங்களன்று தரை நடவடிக்கை விமான ஆதரவுடன் தொடர்கிறது என்றார். இது ஏராளமான சிவிலிய இறப்புக்கள் ஏற்படும் அச்சுறுத்தலை அதிகரிக்கும். வரவிருக்கும் நாட்களிலும், வாரங்களிலும் “கடுமையான மோதல்கள்” இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். “அமெரிக்கத் துருப்புக்கள் தாலிபன் நிலைகளை அழித்துவருகின்றனர். அவர்கள் எங்கும் மறைவதற்கு இடமில்லை. இது செய்து முடிக்கப்பட்டுவிட்டால், எழுச்சியாளர்கள் பகுதியை விட்டு நீங்கும் கட்டாயம் ஏற்படும், அல்லது போர் செய்து மடிய நேரிடும்” என்றார் அவர்.

நடைமுறையில் இதன் பொருள் முழுச் சமூகங்களையும் வேரோடு அகற்றுதல் என்பதாகும். ஏனெனில் ஆயுதமேந்திய எதிர்ப்புக் குழுக்களானது அப்பகுதியில் கணிசமான ஆதரவைக் கொண்ட உள்ளூர் சக்திகள் ஆகும்.

காந்தகார் நகரத்திலுள்ள அதிகாரிகள் அர்கன்டாப் பள்ளத்தாக்கு, ஜேரி மற்றும் பஞ்ச்வை மாவட்டங்களிலிருந்து மேற்கே 1,000 குடும்பங்களுக்கு மேலாக வந்தவிட்டன என்றும் இவை அமெரிக்கத் தலைமையிலான தாக்குதலில் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டவர்கள் என்று கூறியுள்ளனர். ஆப்கானிய அதிகாரிகள் உதவியைக் கோரும் இந்த எண்ணிக்கை அதிகரித்துவிட்ட உள்நாட்டு அகதிகள் பற்றி கவலை கொண்டு ஐ.நா.விற்கு உதவி கோரி முறையிட்டுள்ளனர்.

குறைந்தது 18 அமெரிக்க படைகளாவது ஆகஸ்ட் 30ம் திகதியிலிருந்து காந்தகார் மாகாணத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கத் தாக்குதல் தொடங்கி இறந்த ஆப்கானியர் எண்ணிக்கை பற்றி நம்பகமான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் சிவிலிய இறப்புக்கள் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றுதான் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளியன்று கர்சாயி ஆட்சி 31 ஆப்கானியர்களை கொன்ற ஒரு அமெரிக்க விமானத் தாக்குதல் பற்றி விசாரிக்க ஒரு குழுவை நியமித்தள்ளது. ஆக்கிரமிப்பின் செய்தித் தொடர்பாளர் இறந்தவர்கள் அனைவரும் “எழுச்சியாளர்கள்” என்று கூறுகையில், உள்ளூர்வாசிகள் நிரபராதியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலைக்கு உள்ளாகின்றனர் என்னும் அவர்களது கருத்தையொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இப்பொழுது உள்ளூர் கவர்னர் கிட்டத்தட்ட பாதி கொலையுண்டவர்கள் சாதாரணக் குடிமக்கள் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்க இராணுவம் மற்றும் மத்திய உளவுத்துறை அமைப்பு வியத்தகு முறையில் அவற்றின் போர்ப் போக்கை பாக்கிஸ்தானிய எல்லைப் புறத்திலும் தீவிரமாக்கியுள்ளன. New York Times கருத்துப்படி விமானியில்லாத ட்ரோன் விமானங்கள் நடத்தும் ஏவுகணைத் தாக்குதல்களின் எண்ணிக்கை இருமடங்காகிவிட்டது. இம்மாதம் அத்தகைய தாக்குதல்கள் குறைந்தபட்சம் 21முறையாவது நடந்துள்ளன.

ஒபாமா நிர்வாகம் இப்பெரும் கோழைத்தன போர் முறையை பெரிதும் நம்புகிறது. ஜனவரி 2009ல் பதவிக்கு வந்ததிலிருந்தே, அது புஷ் நிர்வாகத்தின் கடைசி ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போல் நான்கு மடங்கு அதிகமாகத் தாக்குதலை நடத்தி வருகிறது.

பாக்கிஸ்தானிய அதிகாரிகள் கருத்துப்படி 2009ல் 59 தாக்குதல்களில் 708 பேர் இறந்து போயுள்ளனர். மற்றும் 600 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு இதுவரை நடத்தப்பட்டுள்ள 75 அத்தகைய தாக்குதல்களில் இறந்துவிட்டனர். இது வெள்ளை மாளிகையில் ஒபாமா நுழைந்ததிலிருந்து 1,300க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள்—அதிகாரிகள் மற்றும் செய்தி ஊடகத்தில் “சந்தேகத்திற்கு உரிய போராளிகள்” என்ற தெளிவற்ற முறையில் குறிக்கப்படுபவர்கள்—சாதாரணக் குடிமக்கள்—இதில் பெண்களும் குழந்தைகளும் அடங்கும்.

இத்தாக்குதல்கள் போர்க் குற்றங்கள் ஆகும். இவை நீதித்துறைக்குப் புறத்தே நடக்கும் கொலைகள் என்று அழைக்கப்படுகின்றன, சர்வதேச சட்டத்தால் தடைக்கு உட்பட்டவை மற்றும் இராணுவ இலக்குகள் அல்லாதவற்றிற்கு எதிராக இயக்கப்படுபவை. இவற்றுள் “சந்தேகத்திற்குரியவர்கள்” எனக் கருதப்படுபவர்களுடைய வீடுகளும் அடங்கும். இதுவும் ஜெனிவா மரபுகளை மீறுவது ஆகும். ட்ரோன் தாக்குதல்களை பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் குளிர்சாதன அறைகளில் இருந்து இயக்குபவர்கள் CIA ஊழியர்களும், தனியார் ஒப்பந்தக்காரர்களும் ஆவார்கள். இவர்கள் சர்வதேச சட்டத்தின்படி முறையான போர் செய்பவர்கள் என்று கருதப்பட முடியாது. எனவே போர்க் குற்றவாளிகள் என்று விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள்.

பாக்கிஸ்தான் மக்களுக்கு எதிரான அரை வெளிப்படைப் போரின் தன்மைத்தர விரிவாக்கத்தில் அமெரிக்க Apasche தாக்கும் ஹெலிகாப்டர்கள் பாக்கிஸ்தானுக்குள் இருக்கும் “எழுச்சியாளர்கள்” என்று கருதப்படுவோர் மீது தாக்குதல்களை நடத்தின. இதில் குறைந்தது 55 பேராவது கொல்லப்பட்டனர். அமெரிக்க இராணுவச் செய்தித் தொடர்பாளர்கள் இத்தாக்குதல்கள் ஒரு ஆப்கானிய எல்லைச் சாவடி தாக்குதலுக்குட்பட்டபின் வந்ததவை என்றும் எனவே “இவை தற்காப்பிற்காக நடத்தப்பட்டவை” என்றும் கூறியுள்ளனர். தாக்குதல்கள் போர்விதிகள் என்று பாக்கிஸ்தான் அரசாங்கத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டவற்றின் அடிப்படையில் நடப்பதாகவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இரண்டு நாட்களுக்கு தொடர்ந்த வான்வழித் தாக்குதல்கள் தற்காப்பிற்காக என்ற கூற்றை கேலிக்கூத்திற்கு உட்படுத்தின. இஸ்லாமாபாத் இத்தாக்குதல்களை பாக்கிஸ்தானின் இறைமையை மீறுபவை என்று கண்டித்தது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் தளம் அமைத்துள்ள அமெரிக்கப் படைகளை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள 1,500 மைல் தூர எல்லைக்கு அப்பால் தாக்குதல் நடத்த அனுமதிக்கப்பட்டது என்பதையும் மறுத்தது.

ஹெலிகாப்டரிலிருந்து குண்டுகள் எறிதல் என்பது பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க தலையீட்டை அதிகரிப்பதற்காக வேண்டும் என்றே விரிவாக்கப்பட்ட கொள்கையாகும். பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோளிட்டு நியூ யோர்க் டைம்ஸ், “தளபதி டேவிட் எச். பெச்ரீயஸ், ஆப்கானிஸ்தானிலுள்ள உயர் அமெரிக்கத் தளபதி சமீபத்தில் மறைமுகமான எச்சரிக்கைகளை உயர்மட்ட பாக்கிஸ்தானிய தளபதிகளுக்கு விடுத்து வடக்கு வஜீரிஸ்தானில் உள்ள போராளிகளின் வலையமைப்பை கலைக்க பாக்கிஸ்தான் தவறினால், அமெரிக்க தேவையானால் ஒருதலைப்பட்ச தரைத்தள நடவடிக்கைகளை பழங்குடிப் பகுதிகளில் எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்” என்று கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு படுதோல்வியை எதிர்கொண்டுள்ளது. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக நடக்கும் போர் பற்றிய உண்மையான நிலைப்பாடு செவ்வாயன்று அமெரிக்காவின் கைப்பாவை ஜனாதிபதி ஹமித் கர்சாய் காபூலில் பார்வையாளர்களிடம் தன்னுடைய மகன் ஒரு “வெளிநாட்டுக்காரர்” போல் வளர விரும்பவில்லை என்று கூறும்போது கண்ணீர் மல்க இருந்ததில் தெளிவான வெளிப்பாட்டைக் கண்டது. இக்கருத்து தானே அகற்றப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்படக்கூடும் என்று அவர் அஞ்சுவதைக்காட்டுகிறது. ஊழலில் மலிந்து, இரு தொடர்ச்சியான தேர்தல்களின் மோசடிக் குற்றச்சாட்டிற்குட்பட்ட இவருடைய அரசாங்கம் ஆப்கானிய மக்களால் பரந்த முறையில் வெறுக்கப்படுகிறது. இந்த இழிந்த ஆட்சியை நிலைநிறுத்த என்னும் பெயரில்தான் அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் கொலை செய்கிறார்கள், கொலைக்கு உட்படுகிறார்கள், கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அமெரிக்கா நடத்தும் போருக்கு மக்கள் எதிர்ப்பு மிக அதிகமாகவுள்ள நிலையில்—ஆப்கானிய மற்றும் அமெரிக்க மக்கள் இருவரிடையேயும்—ஒபாமா நிர்வாகமும் பென்டகனும் இதை முடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை, விரிவாக்குவதில் தான் ஆர்வம் காட்டுகின்றன. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு படையெடுப்பில் இருந்த ஆரம்ப இலக்கைத் தொடர அவை உறுதி பூண்டுள்ளன—அதாவது அமெரிக்க மேலாதிக்கம் மத்திய ஆசியாவின் எரிசக்தி செழிப்பு மற்றும் மூலோபாய முக்கியத்துவம் உடைய பகுதியில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதே அது.

இந்த நோக்கத்தை அடைவதற்கு போரை விரிவுபடுத்துவது என்பது பேரழிவு தரக்கூடிய விளைவுகளைப் பற்றிய அச்சத்தைக் கொடுத்துள்ளது. பாக்கிஸ்தானுக்குள் பெருகும் அமெரிக்கத் தலையீடு நெருக்கடி நிறைந்துள்ள நாட்டை இன்னும் சீர்குலைக்கும், அண்டை சக்திகளையும் ஈர்க்கும் தன்மையுடைய ஆழ்ந்த பிராந்திய அழுத்தங்களைக் கட்டவிழ்த்துப் போரில் தள்ளக்கூடும்—இதில், இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான் ஆகியவை அடங்கும். இதையொட்டி புதிய இன்னும் பரந்த இராணுவ மோதல்களுக்கான சூழல் உருவாகும்.

2008 ஜனாதிபதிப் பதவியை அமெரிக்க மக்களின் பரந்த போர் எதிர்ப்பு உணர்வுகளுக்கு முறையீட்ட வகையில் வெற்றி பெற்ற ஒபாமா அவருக்கு முன் பதவியில் இருந்தவரைவிட இன்னும் நேரடியாக அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறைக் கருவி மற்றும் அது பணியாற்றும் ஆளும் உயரடுக்கின் கருவியாகவும், பிரதிநிதியாகவும், செய்தித் தொடர்பாளராகவும் பெரிதும் வளைந்து கொடுத்துச் செயல்படுகிறார்.

இப்பொழுது தயாரிப்பிலுள்ள இன்னும் பெரும் பேரழிவைத் தரக்கூடிய போர்களாக கட்டவிழ்க்கப்படுவதை தடுப்பதற்கும், ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்கப் போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டம் ஒபாமா நிர்வாகம், ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் மற்றும் அவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிதியப் பிரபுத்துவதற்கு எதிரான நேரடிப் போராட்டத்தின் மூலம்தான் முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய தலைமை கட்டியமைக்கப்படுதல் தேவையாகும். அது சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாக் கொண்டிருக்க வேண்டும் என்பதோடு வேலைகள், வாழ்க்கைத் தரங்கள், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கு இராணுவவாதத்தின் ஆதாரமான இலாபமுறைக்கு எதிரான ஒரு சக்தி வாய்ந்த இயக்கம் தேவை.