சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Conservative François Bayrou calls for Hollande vote in French elections

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் பழமைவாதக் கட்சியின் பிரான்சுவா பாய்ரூ ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைக்கிறார்

By Johannes Stern
5 May 2012

use this version to print | Send feedback

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் மே 6 அன்று நடைபெற இருக்கும் இரண்டாவது மற்றும் தீர்மானகரமான சுற்றில் சோசலிஸ்ட் கட்சியின் (PS)வேட்பாளரான பிரான்சுவா ஹாலண்டுக்கு வாக்களிக்க முதல் சுற்றில் தோல்வி கண்ட முதலாளித்துவமையவாத கட்சியின் வேட்பாளரான பிரான்சுவா பாய்ரூ அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு வெற்று வாக்கினை அளிக்க நான் விரும்பவில்லை. அது முடிவெடுக்காத நிலையாக ஆகும். இத்தகைய சூழல்களில் அதுபோல் முடிவெடுக்காமல் விடுவதெல்லாம் சாத்தியமற்றது. பிரான்சுவா ஹாலண்டுக்கு வாக்களிக்க நான் முடிவு செய்திருக்கிறேன், அதுவே என்னுடைய தெரிவாகும்என்று ஒரு கூட்டத்தில் அவர் தெரிவித்தார்

ஹாலண்ட் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை உருவாக்க பாய்ரூ கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்தால் பாய்ரூவின் வலதுசாரி ஜனநாயக இயக்கம் (MoDem) அதில் ஒரு முக்கியப் பாத்திரம் வகிக்க முடியும் என்றார் அவர். “நீண்ட காலத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஒரு தேசிய ஐக்கியத்தை சாத்தியமாக்க ஹாலண்ட் தெரிவு செய்திருப்பதாய் பாய்ரூ தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பாய்ரூவின் முடிவானது PS இன் சுற்றுவட்டத்தில் இருக்கும் குட்டி முதலாளித்துவஇடதுகளிடம் இருந்து பாராட்டைப் பெற்றது. ஹாலண்டுக்கான பாய்ரூவின் ஆதரவுநேர்மையான குடியரசு உணர்வினை அடிபப்டையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவு என்று இடது முன்னணியின் தலைவரான ஜோன் லூக் மெலன்சோன் புகழ்ந்தார்.

பழமைவாத பிரெஞ்சு அரசியல்வாதிகளிடம் இருந்து ஹாலண்டுக்கு கிட்டக் கூடிய தொடர்ச்சியான ஒப்புதல் ஆதரவுகளில் இது சமீபத்தியதாகும்.

சென்ற வாரத்தில் முன்னாள் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரும் (2005-2007) சார்க்கோசியின் மைய-வலது மக்கள் இயக்கத்திற்கான ஒன்றியத்தின் (UMP)பொதுச் செயலருமான பிலிப் டுஸ்ட்-பிளாஸியும் ஹாலண்டுக்கு ஆதரவாய் குரல் கொடுத்தார். ”மக்களை ஒன்றிணைப்பதும் துருவங்களுக்குப் புகழ்பாடாமல் இருப்பதும் தான்குடியரசின் ஜனாதிபதியின் கடமை ஆகும் என்று அவர் அறிவித்தார்.

முன்னதாக, சார்க்கோசிக்கு முன்னர் கன்சர்வேடிவ் கட்சியின் ஜனாதிபதியாய் இருந்த ஜாக் சிராக்கும் தான் ஹாலண்டை ஆதரிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். ஹாலண்ட்கட்சிகளைக் கடந்து சிந்திக்கக் கூடியஒருஉண்மையான அரசியல் பண்பாளர் என்று அவர் வருணித்தார்.

பாய்ரூ, ஹாலண்டுக்கு வழிமொழிந்திருப்பது சார்க்கோசிக்கும் UMP க்கும் விழுந்த ஒரு அடியாகும். தேர்தலுக்கு இரண்டாம் சுற்றுக்கு சற்று முன்னதாய், சார்க்கோசி தனது போட்டியாளரான ஹாலண்டுக்கு நான்கு புள்ளிகள் பின் தங்கியிருக்கிறார். சார்க்கோசி அதிகாரத்தில் நீடிக்க வேண்டுமானால், அவர் பாய்ரூவின்(MoDem)வாக்குகளிலும் நவ பாசிச தேசிய முன்னணியின் (FN) மரின் லு பென்னின் வாக்குகளிலும் ஒரு பெரும் பகுதியை வென்றாக வேண்டும். முதல் சுற்றில் பாய்ரூ 9.1 சதவீத வாக்குகளையும் லு பென் 18 சதவீத வாக்குகளையும் வென்றிருந்தார்

லு பென்னின் வாக்காளர்களைக் கவர்வதற்கு சார்க்கோசி மேற்கொண்ட வலது-சாரிப் பிரச்சாரத்தை விமர்சனம் செய்த பாய்ரூ அதுதான் தனது முடிவுக்கான காரணமாக விளக்கினார். “முதலாம் சுற்றில் நன்கு வாக்குகள் பெற்றிருக்கக் கூடிய நிக்கோலோ சார்க்கோசி அதன்பின் நமது விழுமியங்களைக் காண முடியாத அதி வலதுகளை நாடிச் சென்றார்என்றார் அவர். ”நிக்கோலோ சார்க்கோசி தெரிவு செய்திருக்கும் பாதை வன்முறையானது. அது நமது விழுமியங்களுடன் - என்னுடைய விழுமியங்களை மட்டும் என்றல்ல - மட்டுமல்ல, கோலிசத்தின் விழுமியங்களுடன், அதே அளவுக்கு குடியரசு மற்றும் சமூக உரிமையின் விழுமியங்களுடனும் முரண்படுகிறது.”

எல்லைகள் எல்லாம் முழுமையாகக் காணாமல் போய் நாம் நமது ஆன்மாவை எல்லாம் தொலைத்து நின்றதைப் போல குடியேறுவோர் விடயத்தின் மீதும் மீட்சி செய்ய வேண்டிய எல்லைகள் பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருந்தசார்க்கோசியின் பீடிதத்தை அவர் சுட்டிக் காட்டினார். ”மைய மற்றும் வலது, மற்றும் மத்திய இடதுகளின் பல தசாப்த கால நடவடிக்கைகளையும் உறுதிப்பாட்டையும் வழங்கியிருந்த ஐரோப்பியத் திட்டத்தை மதிப்பிழக்கச் செய்வதற்குசார்க்கோசியின் திட்டம் அழைத்துச் செல்கிறதோ என்கிற அச்சத்தை அவர் வெளியிட்டார்.

பிரெஞ்சு அரசியலில் FN ஒரு முக்கிய சக்தியாக எழுவதில் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளில் எழுந்திருக்கக் கூடிய உண்மையான கவலையையே இத்தகைய கருத்துகள் பிரதிபலிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், பாய்ரூ ஹாலண்டுக்கு ஆதரவளிப்பதென்பது பிரான்சில் FNக்கு ஆதரவு அதிகரிப்பதற்கான ஒரு முட்டுக்கட்டையாக நிரூபணமாகப் போவதில்லை.

ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான ஒரு வேட்பாளராக ஹாலண்டை பாய்ரூ உயர்த்திக் காட்டுவது ஒரு சிடுமூஞ்சித்தனமான பொய் ஆகும். சார்க்கோசி ஹாலண்ட் இருவருமே, புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிரான வெறிக்கு தூபம் போடுவதான ஆழமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு தங்கள் ஆதரவைத் தெளிவுபடுத்தி விட்டனர், குறிப்பாக FN வாக்கு வங்கி மக்களிடையே. சார்க்கோசியின் முதல் ஐந்தாண்டுக் கால ஆட்சி காட்டுவதைப் போல, புலம் பெயர்ந்த மக்களுக்கு விரோதப்பட்ட தவறான முன்முடிவுகளுக்கு அளிக்கப்படும் இத்தகைய சலுகைகள் எல்லாம் FN ஐ பலவீனப்படுத்துவதில்லை, மாறாக அதன் அரசியலை அங்கீகரிப்பதன் மூலமாக அதனைப் வலுப்படுத்தவே செய்கின்றன.

புதனன்று சார்க்கோசியுடன் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில், ஹாலண்ட் சார்க்கோசியை வலதின் பக்கத்தில் இருந்து தாக்கினார். புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக கோபாவேசத்தை வெளியிட்டார். அளவுக்கதிமான மக்களை சார்க்கோசி குடியேற அனுமதித்ததாய் சார்க்கோசியை அவர் விமர்சித்தார். முன்னர் PS அரசாங்கம் இருந்த சமயத்தினதைக் காட்டிலும் சார்க்கோசியின் கீழ் வருடத்திற்கு 50,000 புலம் பெயர்ந்த மக்கள் கூடுதலாய் பிரான்சுக்குள் பிரவேசித்ததாய் அவர் அறிவித்தார்.

பர்தாவுக்கான தடைக்கும் அத்துடன் முன்னதாய் பள்ளிகளில் முஸ்லிம் படுதாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கும் தனது ஆதரவை ஹாலண்ட் அறிவித்தார். நீச்சல் குளங்களில் இனி பெண்களுக்கு மட்டுமான நேரத்தை அனுமதிக்கப் போவதில்லை என்று உறுதிபூண்ட அவர், அதேபோல, பிரெஞ்சுப் பள்ளிகளில் ஹலால் மாமிசத்தையும் தான்சகித்துக் கொள்ளப் போவதில்லை என்று கூறினார். மதச் சார்பின்மை கோட்பாடுகளுக்கோ அல்லது மத விடயங்களில் அரசின் நடுநிலை என்பதற்கோ முரண்படும் அவரது அறிக்கைகள், ஹாலண்டின் ஆட்சியின் கீழ், குடியேற்ற மக்களின் மீதான இனவாத அணுகுமுறை இன்னும் மோசமடையுமே தவிர, மேம்பாடு கண்டு விட முடியாது என்பதையே காட்டுகின்றன

திட்டமிட்ட சமூக வெட்டுகளையும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களையும் நடத்துவதற்கு சார்க்கோசியைக் காட்டிலும் ஹாலண்ட் மேம்பட்ட திறம் படைத்தவராய் இருக்கிறார் என்ற முடிவுக்கு பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கு படைத்த பிரிவுகள் வந்திருக்கின்றன என்பதையும் ஹாலண்டை வழிமொழிவது என்கிற பாய்ரூவின் முடிவு எடுத்துக் காட்டுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில்தேசிய ஐக்கியத்திற்கான வேட்பாளராக தன்னை வருணித்துக் கொண்டிருக்கும் ஹாலண்ட்போட்டித் திறனின் சவால்களை எதிர்கொள்ள அனைத்து சக்திகளையும் அணிதிரட்டுவதற்கு உறுதியளித்துள்ளார்

பிரான்சின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)4.5 சதவீதமாக இருக்கிறது, இதன் வருடாந்திர கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 90 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரெஞ்சுப் பொருளாதாரம் ஆழ்ந்த நெருக்கடியில் இருப்பதோடு சென்ற தசாப்தத்தில் அதன் சமவலுவைத் தொலைத்திருக்கிறது. இரண்டு வேட்பாளர்களுமே நிதிநிலை அறிக்கைகளை சமநிலைப்படுத்துவதற்கும், தொழிலாளர் செலவுகளைக் குறைப்பதற்கும் அத்துடன் பிரெஞ்சுப் பொருளாதாரத்தை போட்டித் திறன் மிகுந்ததாய் ஆக்குவதற்கும் உறுதியளித்துள்ளனர்

சார்க்கோசிக்கு நேரெதிரான வகையில், ஹாலண்டின் பிரச்சாரத்திற்கு, தொழிற்சங்கங்களிடம் இருந்தும் மற்றும் வெட்டுகளுக்கான தொழிலாள வர்க்கத்தின் எந்த சுயாதீனமான எதிர்ப்பையும் ஒடுக்குவதற்கு முனையும் ஒரு கலவையான போலி-இடது குட்டி முதலாளித்துவக் குழுக்களிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கப் பெற்றிருக்கிறது. தொழிற்சங்கங்கள், ஜோன் லூக் மெலன்சோனின் இடது முன்னணி, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA), மற்றும் தொழிலாளர் போராட்டம் (LO) ஆகியவை ஹாலண்டின் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்திற்குப் பின்னால் அணிவகுத்து நின்று, இரண்டாம் சுற்றில் ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன.