சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Former finance minister confirms France considered leaving euro zone 

யூரோப் பகுதியிலிருந்து விலகுவது குறித்து பிரான்ஸ் பரிசீலித்தது என்று முன்னாள் நிதி மந்திரி உறுதிப்படுத்துகிறார்

By Alex Lantier
1 November 2012
use this version to print | Send feedback

கடந்த நவம்பர் மாதம் கிரேக்க மற்றும் இத்தாலிய அரசாங்கங்களை அகற்றிய ஐரோப்பிய நிதிய நெருக்கடிக்கிடையே பிரெஞ்சு அதிகாரிகள் கிரேக்கம், இத்தாலி மற்றும் பிரான்ஸும்கூட யூரோப்பகுதியில் இருந்து வெளியேறுவது குறித்துத் திட்டமிட்டனர் என்று முன்னாள் பிரெஞ்சு நிதி மந்திரி பிரான்சுவா பருவான் உறுதிபடுத்தியுள்ளார். அந்த நேரத்தில் ஐரோப்பிய அதிகாரிகள் யூரோப்பகுதியில் இருந்து எந்தவொரு நாடும் வெளியேறுவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது என்பதை மறுத்திருந்தனர்.

பருவானுடைய புத்தகமான Crisis Notebook இல் முன்கூட்டிய பரிசீலனையில் இந்த வெளிப்பாடுகள் விவரிக்கப்படுகின்றன; இது அவர் வரவு-செலவுத் திட்ட மற்றும் பின்னர் பொருளாதார மந்திரியாக 2010-2012ல் கன்சர்வேடிவ் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் கீழ் இருந்த காலத்தைப் பற்றி எழுதப்பட்டதாகும். அவருடைய குறிப்புக்கள் எப்படி முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் இரக்கமின்றியும், ஜனநாயகமுறையை மீறியும் அரசாங்கங்களை அகற்றி செல்வாக்கற்ற சமூகச் செலவுக்குறைப்புக்களை கட்டாயப்படுத்தின என விவரிக்கின்றன; மேலும் ஐரோப்பாவிற்குள் வளர்ச்சியடைந்த பாரிய சர்வதேச அழுத்தங்களையும் விவரிக்கிறது.

நவம்பர் 3, 2011ல் பிரான்சின் கான் நகரில் நடந்த அழுத்தங்கள் மிகுந்த G20 உச்சிமாநாடு பற்றியும் பருவான் நினைவுகூருகிறார். அந்த நேரத்தில் கிரேக்க பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ கிரேக்கத்தில் அப்பொழுதுதான் ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டிருந்த புதிய சிக்கன நடவடிக்கைகள் பற்றிய வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் சார்க்கோசி ஆகியோர் பாப்பாண்ட்ரூவை அவராகவே விளங்கப்படுத்துமாறு கோரியிருந்தனர்.

பருவான் எழுதுகிறார்: தன்னுடைய நிதி மந்திரியுடன் வந்திருந்த பாப்பாண்ட்ரூவுடன் ஒரு மோதல் ஏற்பட்டது. கிரேக்கப் பிரதம மந்திரியை நோக்கி சார்க்கோசி கூச்சலிட்டார்: நாங்கள் உங்களிடம் தெளிவாகக் கூறுகிறோம், இந்த வாக்கெடுப்பை நடத்தினால் உங்களுக்கு மீட்புப் பொதி கிடையாது என. இதை புரிந்து கொண்டது போல் பாப்பாண்ட்ரூ காட்டிக் கொள்ளவில்லை. ஒரு எஃகுப் பார்வையுடன் மேர்க்கெல் அவரிடம் அதையே கூறுகிறார்.... [பாப்பாண்ட்ரூ] இன்னும் அதிக வியர்வையைச் சிந்துகிறார், தன்னுடைய கருத்துக்களில் ஊசலாடுகிறார், அதன் பின் சரிந்து உட்கார்ந்து விடுகிறார். பொறியில் அகப்பட்டுக் கொண்ட நிலையில் அவர் யூரோவிற்கு ஆம் அல்லது இல்லை என்றுதான் கூறமுடியும்; அதை அவர் அறிந்து வினாவைத் தவிர்க்கும் வகையில் தன் மக்களிடம் அதற்கு விடைகூற விட்டுவிடுகிறார். அவருடைய அரசியல் வாழ்வா, சாவா என்பதை நான் கண்டேன்.

வாஷிங்டன், பேர்லின் மற்றும் பாரிஸ் ஆகியவை குறுக்கிட்டு, பாப்பாண்ட்ரூ வாக்கெடுப்பு என்னும் அத்தி இலையைக் கூட அவருடைய செல்வாக்கற்ற சிக்கன நடவடிக்கைகளுக்கு பெற முடியாது என்று வலியுறுத்தின. வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் ஐரோப்பிய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையை மக்கள் நிராகரிக்கும் ஆபத்து இருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் அப்பொழுது தலையிட்டிருக்கும். அவைகள் கிரேக்கம் கடன் பெறக்கூடிய வாய்ப்பை வெட்டிவிடும், அதையொட்டி ஏதென்ஸ் அரச திவாலை ஏற்க வேண்டும் அல்லது தனக்கு நிதியளித்துக் கொள்ள தன் நாணயத்தையே அச்சடிக்க வேண்டும்; இதையொட்டி யூரோவில் இருந்து விலக வேண்டும்.

மேலும், கூட்டத்திற்கு சற்று முன்பு பாப்பாண்ட்ரூ கிரேக்க இராணுவப் படைகளின் முழு உயர்மட்ட தலைமையையும் சேவையிலிருந்து நீக்கியிருந்தார். இது கிரேக்க இராணுவத்தில் பரந்த சந்தேகங்களை ஏற்படுத்தியது. அதன் அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்களுடனான பிணைப்புக்கள் 1946-1949ல் நடந்த கிரேக்க உள்நாட்டுப் போர்க்காலம் மற்றும் 1967ல் CIA ஆதரவைக் கொண்டிருந்த இராணுவ ஆட்சிக் குழுவிற்கு ஆதரவு கொடுத்த நாளில் இருந்து தொடர்கிறது; அது வாக்கெடுப்பின் முடிவு அறிவிக்கப்பட்டபின் ஆட்சி மாற்றம் செய்யலாம் எனக் கருதியது. (See: “Are Obama and NATO plotting a military coup in Greece?”) ஒரு வாரத்திற்குப் பின் பாப்பாண்ட்ரூவிற்கு பதிலாக ஒரு புதிய கிரேக்கப் பிரதம மந்திரி லூகாஸ் பாப்டெமோஸ் பதவிக்கு வந்தார்.

இக்கூட்டமானது பின் இத்தாலியப் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனியை கட்டாயமாக அகற்ற முற்பட்டது. பெரிய நாடாக இருக்கும் இத்தாலியை கிரேக்கத்தைப் போல் நடத்த முடியாது; அரசாங்கத் திவால் என்று அதை அச்சுறுத்துவது உலக நிதிய முறையையே மோசமான கடனில் ஆழ்த்தும் இடரை ஏற்படுத்தும். பருவான் குறிப்பிடுகிறார்: இத்தாலி விலகினால், எல்லா நாடுகளும் விலக நேரிடும். இத்தாலி உண்மையில் மிகப் பெரிய பொருளாதாரம். உலகின் எட்டாவது பெரிய பொருளாதாரமாக அது உள்ளது. அதன்பின் யூரோ தப்பிப் பிழைக்க முடியாது.

table

 

இதன் விளைவாக ஆளும் வர்க்கம் ஒரு புதிய அரசாங்கத்தை இத்தாலியில் நிறுவ முற்பட்டது; அது சர்வதேச சந்தைகளின் கோரிக்கைகளுக்கு நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும்பருவான் எழுதுகிறார்: இதைப் புரிந்து கொள்ள விரும்பியதாக பெர்லுஸ்கோனி காட்டிக்கொள்ளவில்லை, மற்றும் இத்தாலியின் பிரச்சினை தன்னுடையது என்றும் ஒப்புக் கொள்ளத்தயாராக இல்லை. வெளிப்படையாக இல்லை என்றாலும், தகவல் தெளிவாயிற்றுஅனைவரும் அவருக்கு எடுத்துரைத்தனர். IMF ஆனது இத்தாலியின்  பொதுக் கணக்குகள் மீது ஓரளவு கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் என பெர்லுஸ்கோனியை நாங்கள் உணரச்செய்தோம். இத்தாலி ஒரு பெருமிதமுள்ள நாடு. அவர் நாட்டிற்குத் திரும்பியபின், நீண்டநாள் பதவியில் இருக்கமாட்டார் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

ஐந்து நாட்களுக்குப் பின் பெர்லுஸ்கோனி தான் இராஜிநாமா செய்ய இருப்பதாக அறிவித்தார்; இத்தாலிய பாராளுமன்றம் மற்றும் ஒரு முறை கடைசியாக சமூக நல வெட்டுக்களை இயற்றும் வரை அவர் பதவியில் இருந்தார். அதன் பின் அவர் தொழில்நுட்பவாத அரசாங்கம் என அழைக்கப்பட்டதை இத்தாலியில் நிறுவினார்; இது அலைபோல் பல சமூகநலச் செலவு வெட்டுக்களை நடத்தியுள்ளது.

தற்கால பொருளாதார வரலாற்றில் மிக நிதானமான முன்அனுமானத் தயாரிப்புக்களை நடத்தும் இரகசிய அரசாங்க ஆய்வுக் குழுவிற்கும் பருவான் ஏற்பாடு செய்தார். இது பிரான்ஸ் யூரோவில் இருந்து வெளியேறும் திறனைக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு புயலில் அகப்பட்டிருந்தது போல் இருந்தது; யூரோ அனைத்துப் புறங்களில் இருந்தும் தாக்குதலை எதிர்கொண்டது....மிக மோசமான நிலை யூரோவில் இருந்து கிரேக்கம் வெளியேறுவது ஆகும்; இது ஒரு தொற்று என ஆகிவிடும் என்ற கருத்தும் இதையொட்டி யூரோப் பகுதி உடைய வாய்ப்பு உண்டு என்றும் கருதப்பட்டது; இதனால் நடைமுறையில் பிரான்ஸ் வெளியேறும் நிலையும் ஏற்படும். 

பருவானுடைய நிகழ்வுக் குறிப்பு ஐரோப்பிய முதலாளித்துவத்தின் திவால்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; ஏனெனில் அரசியல் மற்றும் நிதியத் துறைகள் சரிவின் விளிம்பில் நின்றன; அதையொட்டி அவைகள் பேரழிவு தரும் சிக்கன நடவடிக்கைகளை மக்கள் மீது சுமத்தின; அவைகள் இன்னும் அதிகமாக முதலாளித்துவ ஐரோப்பாவின் தள்ளாடிக்கொண்டிருந்த நிறுவன அஸ்திவாரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தின.

இந்த அழுத்தங்கள் 2010 வசந்தகாலத்தில் வெளிப்பட்டன; அப்பொழுது பேர்லினுக்கும் பாரிஸுக்கும் இடையே கிரேக்கக் கடன்களைக் கொண்டிருக்கும் வங்கிகளுக்கு முதல் பிணையெடுப்புப் பொதி குறித்த ஜேர்மனிய எதிர்ப்பு பற்றி கடுமையான பிளவுகள் இருந்தன. அப்பொழுது ஐரோப்பிய மத்திய வங்கியின் இயக்குனராக இருந்த Jean-Claude Trichet ஐரோப்பிய அரசியல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிக ஆழ்ந்த அழுத்தங்களை முகங்கொடுக்கிறது என்றார். (பார்க்க, “பேரழிவின் கோரக் காட்சிகள் மீண்டும் திரும்புகின்றன”)

அந்தநேரத்தில் குறிப்பிடப்பட்டதுபோல், யூரோவைக் காப்பாற்றுவது என்பது ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு ஒரு நிதிப் பிரச்சினை என்பது மட்டும் இல்லாமல், 20ம் நூற்றாண்டில் இரு முறை உலகப் போருக்கு வழிவகுத்த ஐரோப்பாவிற்குள் இருந்த சர்வதேச மோதல்களின் வெடிப்புத்தன்மையைக் கட்டுப்படுத்துல் என்றும் ஆயிற்று.

Süddeutsche Zeitung இன் கீழ்க்கண்ட நிலைப்பாடுதான் யூரோ சரிவிற்குப் பின் இருக்கும் என்று கூறியது: அதாவது ஐரோப்பிய ஒன்றியம் சரிகிறது, அதன் மிக முக்கியமான அரசியல் உறுப்பான பொது நாணயம் சிதையும்போது. 27 நாடுகள் மீண்டும் சந்தைக்காக போராடுகின்றது. மிகப் பெரிய நாடு, ஆரோக்கியமான தொழில்துறை கட்டுமானம் இருக்கும் என்ற நிலையில் ஜேர்மனி விரோதிகளைச் சம்பாதிக்கிறது; ஒருவேளை புறக்கணிக்கப்படக்கூடும்: மேலாதிக்க சக்தி என்னும் ஆவியுரு மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்,பொருளாதாரச் சரிவு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான சந்தைகளுக்கான போராட்டம் ஆழமடைந்து விட்டன; யூரோ ஒன்றாக இருப்பதற்குக் காரணமே பல டிரில்லியன் யூரோக்கள் ரொக்கமாக ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து மீண்டும் மீண்டும் வரும் நிதிய பீதிகளை அமைதிப்படுத்துவதற்காக உட்செலுத்தப்படுவதால்தான். பருவானுடைய கருத்துக்கள் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கம், தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் சர்வதேச போட்டியாளர்களின் இழப்பில் அதன் செல்வத்தை பெருக்க இரக்கமற்ற நடவடிக்கைகளை தயாரிக்கின்றன என்பதைத்தான் குறிக்கின்றன.