சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Constitutional amendments prepare authoritarian rule in Japan

அரசியலமைப்பு திருத்தங்கள் ஜப்பானை சர்வாதிகார ஆட்சிக்கு தயார் செய்கின்றன

By John Watanabe 
31 July 2013

use this version to print | Send feedback

ஜப்பானின் ஆளும் பிரதமந்திரி ஷின்சோ ஏபேயின் தலைமையிலான தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP), ஜூலை 21 மேல்மன்ற தேர்தல்களில் போட்டியிட்ட 121இடங்களில் 65 இடங்களை வென்று பெரும் வெற்றியை அடைந்தது. இரண்டாவது இடத்தை பெற்ற ஜப்பான் ஜனநாயகக் கட்சி (DPJ) 17 இடங்களைத்தான் பெற்றது. `17இஇஇTE

குறிப்பாக ஜப்பானிய அரசியல் அமைப்பை திருத்துவதை பொறுத்தவரை, தாராளவாத ஜனநாயகக் கட்சி அதன் மேல்மன்றப் பெரும்பான்மை இப்பொழுது அதன் வலதுசாரி செயல்திட்டத்தை செயல்படுத்த அதன் வாய்ப்புக்களை அதிகரிக்கும் என நம்புகிறது. அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு குழிபறித்து ஜப்பானின் ஆக்கிரமிப்பு வெளிநாட்டுப் போர்களில் ஈடுபடுவதை சட்டபூர்வமாக்குவது உள்ளடங்கலான இந்த மாற்றங்கள் தொழிலாள வர்க்கத்துடனான வெடிப்புத் தன்மை வாய்ந்த மோதலுக்கு வழிவகுக்கும்.

ஏப்ரல் மாதம் தாராளவாத ஜனநாயகக் கட்சி  தயாரித்த வரைவு அரசியலமைப்பு ஜப்பானிய தேசியவாதத்தை ஊக்குவிக்கும் தன்மையை கொண்டுள்ளது. மிக முக்கிய மாற்றங்களில் முக்கிய ஜனநாயக உரிமைகள் அகற்றப்படுதல், புதிய “அவசரகால அதிகாரங்கள் பிரதம மந்திரிக்கு கொடுக்கப்படுவது”, பேரரசரை நாட்டின் தலைவராக மீண்டும் இருத்துவது மற்றும் அரசியலமைப்பில் அமைதிவாத விதி 9 இனை அகற்றுதல் ஆகியவை அடங்கும்.

தற்போதைய அரசியலமைப்பு, இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியுற்றபின் அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது. ஜப்பானின் குருதி கொட்டிய இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பு, சமூகப் புரட்சி அச்சுறுத்தல் இவற்றை எதிர்கொண்ட நிலையில், அமெரிக்க அதிகாரிகள் கணிசமான அரசியல் சலுகைகளைக் கொடுத்தனர். அடிப்படை ஜனநாயக உரிமைகள் பொதுவாக அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டன. பரந்த போர் எதிர்ப்பு உணர்வை திருப்தி செய்யும் நோக்கம் கொண்ட மற்றும் ஜப்பான் அமெரிக்காவிற்கு எதிராகப் போருக்குத் திரும்பாது என்பதை உறுதிப்படுத்திய விதி 97 இயற்றப்பட்டது.

இன்றைய “அரசியலமைப்புத் திருத்தங்கள்.... நாட்டை ஆக்கிரமிப்பின்போது நிறுவப்பட்ட முறையில் இருந்து விடுவித்து, ஜப்பானை உண்மையில் இறைமை உடைய நாடாக மாற்றும்” என்று தாராளவாத ஜனநாயகக் கட்சி  விளக்குகிறது.

ஏபேயின் தேசியவாத வனப்புரை ஜப்பான் அதன் அந்தஸ்தை ஒரு “இயல்பான நாடாக” மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறது. தற்போதைய அரசியலமைப்பின்படி, அதன் மிகச்சரியான உள்ளடக்கத்தில் ஜப்பானின் “சுயபாதுகாப்புப் படை” என்பது உலகில் மிகப்பெரியதாகவும், நவீனமாகவும் இருந்தாலும் கூட ஜப்பான் இராணுவத்தை வைத்துக் கொள்ளக்கூட தடை செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக தற்போதைய முக்கிய தாக்குதல் திறன்கள் அதனிடம் இல்லை.

புதிய விதி 9இன் தலைப்பான ”போரை நிராகரிப்பது” என்பதில் இருந்து “தேசியப் பாதுகாப்பு” என மாற்றப்பட்டுள்ளது. அது “போர் தேசியக் கொள்கையின் ஒரு கருவி” என்னும் சொற்றொடரை தக்க வைத்துக் கொண்டாலும், புதிய 9வது விதி பாதுகாப்புப்படை என்பதை ஒரு தேசியப்பாதுகாப்புப் படை என மறு பெயரிடப்படும். “இது சமாதானத்தை அடையவும், நாட்டினதும் மக்களுடையதும் சுதந்திரத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும்” பிரதம மந்திரி தலைமைத் தளபதியாக இருப்பார். நடைமுறையில் தாராளவாத ஜனநாயகக் கட்சி அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் பங்காளியாக செயல்பட சட்டபூர்வ அடித்தளத்தை விரும்புகிறது. இது தாக்கும் திறன்களுடைய படையைத் தோற்றுவிக்கவும், அதில் விரோத நாடுகள் மீது “முன்கூட்டிய” தாக்குதல்களை செய்வதும் அடங்கும்.

இராணுவவாதத்திற்கு செல்லும் நடவடிக்கையுடன் ஜனநாயக உரிமைகள் மீதான நீண்டகால விளைவுகளுள்ள தாக்குதல்களும் உள்ளன. தற்போதைய அரசியலமைப்பின் முன்னுரை மக்கள் இறைமை என்னும் கொள்கையின் அனைத்திலும் பொருந்தும் தன்மையை வலியுறுத்தி, “அரசியல் நெறியின் சட்டங்கள் அவை” என்றும் கூறுகிறது. அது “அரசாங்கத்தின் செயலினால் ஜப்பானிய மக்களாகிய நாம்... இனி ஒருபோதும் நம்மிடம் போரின் கொடுமைகள் வராது பாதுகாக்கப்பட்டுள்ளோம்” என அறிவிக்கின்றது.

இப்பத்திகளை அகற்ற தாராளவாத ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளது. இவை “மேற்கு நாடுகளின் இயற்கை உரிமைகளை அடித்தளமாக கொண்டவை” என வாதிடுகிறது. இது ஜப்பானின் பிரத்தியேகத் தன்மைக்கு எதிரானது. “ஜப்பான் நீண்ட வரலாறு, தனித்துவமான கலாச்சராம் உடைய ஒரு நாடு, மக்கள் ஒற்றுமையின் அடையாளமாக பேரரசர் உள்ளார்” என்னும் முன்னுரை முன்வைக்கப்படுகிறது.

காரணத்தை விளக்காமல் தாராளவாத ஜனநாயகக் கட்சி 97ஆவது விதியை நீக்க விரும்புகிறது. அது கூறுவதாவது: “இந்த அரசியலமைப்பில் ஜப்பானிய மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் எல்லாக் காலத்திலும் மீறத்தக்கவை அல்ல எனக் கருதப்படும்.” மாறாக தாராளவாத ஜனநாயகக் கட்சி, “தேசியக் கொடி, தேசியப் பாடலை மக்கள் மதிக்க வேண்டும்”, “எல்லா மக்களும் இந்த  அரசியலமைப்பை மதிக்க வேண்டும்” என்னும் கடமைகளை சுமத்தும்.

பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடும் உரிமை ஆகியவை குறைக்கப்பட உள்ளன. வரைவு அமைப்பு “பொது நலன் அல்லது பொது ஒழுங்கைச் சேதப்படுத்தும் நோக்கத்தில் ஈடுபடும் செயல்கள் அல்லது அந்த நோக்கத்திற்காக மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது அங்கீகரிக்கப்படமாட்டாது.” என அறிவிக்கிறது. வேறுவிதமாகக் கூறினால், அரச அதிகாரத்திற்கு அல்லது கொள்கைகளுக்கு சவால்விடும் எந்த பேச்சும் ஆர்ப்பாட்டமும் அரசியலமைப்பிற்கு விரோதம் எனக் கருதப்படும்.

வரைவு அரசியலமைப்பில் உள்ள புதிய அவசரகால அதிகாரங்கள் பின்வரவுள்ள சர்வாதிகார வகை ஆட்சியைப் பற்றி தெளிவாகக் கூறுகிறது. இதில் அரசாங்கமும் பாதுகாப்பு நிறுவனங்களும் சட்டங்களின்படி ஆளும். “நாட்டின் மீது வெளியில் இருந்து ஆயுதமேந்திய தாக்குதல்கள் வந்தால், உள்மோதல்களால் சமூகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டால்... அல்லது பிற அவசரக்கால நிலைமைகளால்... பிரதம மந்திரி அவசரகால நிலைமையை அறிவிக்கலாம்.” எனக் கூறுகிறது.

இக்கட்டத்தில், “அமைச்சரவை சட்டங்களுக்குரிய திறனை கொண்டிருக்கும் கட்டளைகளையும் இயற்றலாம்”. “அனைத்து நபர்களும் உயிர்கள், மக்கள் அல்லது மக்களுடைய உடைமைகளை பாதுகாக்க உள்ள தேசிய அல்லது மற்ற அரச அமைப்புகளின் கட்டளைக்கு உட்பட வேண்டும்”.

ஜப்பானின் அரசியல் கட்சிகள் பெரிதும் மதிப்பிழந்துள்ள நிலையில், தாராளவாத ஜனநாயகக் கட்சி பேரரசரின் ஆட்சிக்கு ஏற்றம் கொடுக்க விழைகிறது. அவரை அனைத்துக் கட்சிகள், வர்க்க நலன்களுக்கு மத்தியஸ்தர், மேலாக இருப்பவர் எனக் காட்டுகிறது. இவர் “தேசிய ஒற்றுமையின் அடையாளம்” என்பதற்கு பதிலாக உத்தியோகபூர்வமாக “நாட்டின் தலைவர்” என அறிவிக்கப்படுவார். தற்போதைய அரசியலமைப்புத்தான் அவரை அவ்வாறு அறிவிக்கிறது.

தாராளவாத ஜனநாயகக் கட்சியின் வரைவு “பேரரசர் அல்லது காப்பாளர்... இந்த அரசியலமைப்பை நிலைநிறுத்தும், மதிக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டவர்” என்று கூறுகிறது. இது கிட்டத்தட்ட அவருக்கு மீண்டும் இரண்டாம் உலகப் போருக்கு முன் இருந்த ஒரு பகுதி தெய்வீகமாக நபர், சட்டத்திற்கும் மேலானவர், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதன் பாசிசக் கொள்கைகளை நியாப்படுத்த பயன்படுத்தப்பட்ட பங்கினை அவருக்கு வழங்கும் தயாரிப்பாகும்.

தாராளவாத ஜனநாயகக் கட்சி மதத்தின் பங்கையும் நாட்டில் பலப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. பொது நிதிகள் “எந்த மத நிறுவனம், அமைப்பின் பயன்பாடு, நலன் அல்லது தக்கவைத்தலுக்கு” ஒதுக்கப்படுவதைத் தடுக்கும் அரசியல் அமைப்பு விதிகள் அகற்றப்படும். அத்தகைய செலவுகள் அறிமுகப்படுத்த விதிவிலக்குக்கள் இருக்கும். மத உள்ளடக்கம் “சமூக நெறியைத் தாண்டவில்லை அல்லது வாடிக்கையான நடத்தையை தாண்டவில்லை” என்றால். இது பேரரசரின் இல்லத்தை மத சடங்குகள் நடத்தும் செலவுகளுக்கு அனுமதிக்கும்.

ஐரோப்பா, அமெரிக்காவில் இருப்பதைப் போல் ஜப்பானிய ஏகாதிபத்தியமும் தொழிலாள வர்க்கத்தை அடக்கவும், உள்நாட்டில் இரக்கமற்ற முறையில் எதிர்ப்புரட்சியையும் வெளிநாட்டில் போரையும் தொடர சர்வாதிகார வழிவகையை மீண்டும் நிறுவ முனைகிறது.

இத்தகைய இராணுவவாத ஜனநாயக விரோத செய்பட்டியலுக்குத்தான் தாராளவாத ஜனநாயகக் கட்சி முனைகின்றது. ஏனெனில் இதற்குப் பரந்த முறையில் அரசியல் ஆளும்பிரிவில் ஆதரவு உள்ளது. முன்பு தன்னை தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கு தாராளவாத மாற்றீடு எனக்காட்டிக் கொண்ட ஜப்பான் ஜனநாயக கட்சி 2009ல் அதிகாரத்தை  பெற்றதில் இருந்து தாராளவாத ஜனநாயகக் கட்சியின் போர் ஆதரவு மற்றும் சிக்கனக் கொள்கைகளை தொடர்கிறது. இது நுகர்வோர் வரியை இருமடங்காக்க ஆரம்பித்துள்ளதுடன், ஜப்பான் சீனாவுடன் இராணுவ முறையில் மோதுவதற்கு அமெரிக்காவின் “ஆசியாவிற்கு முன்னுரிமை வழங்கும்” கொள்கைக்கு உடன்பாட்டை அளித்துள்ளது.

ஜப்பான் ஜனநாயக கட்சி இப்பொழுது டிசம்பர் மாதம் பதவியை இழந்தபின், இம்மாதம் மேல்மன்றப் பெரும்பான்மையையும் இழந்தபின் சீர்குலைந்து உள்ளது. இது தாராளவாத ஜனநாயகக் கட்சி 96 ஆவது விதிக்குக் கொண்டுவர உள்ள மாற்றங்களை எதிர்க்கிறது. அவை அரசியலமைப்பு திருத்தங்கள் சாதாரண பெரும்பான்மை பெற்றால் போதும் எனக் கூறுகின்றன. மாறாக தற்பொழுது மூன்றில் இருபகுதி பெரும்பான்மை இரு பாராளுமன்றப் பிரிவுகளிலும் இருக்க வேண்டும் என்று உள்ளது. தாராளவாத ஜனநாயகக் கட்சி இதற்கு சாதாரண பெரும்பான்மை போதும் என்கிறது. இவை தொடர்பாக கவனத்தை காட்டுவதனூடாக தாராளவாத ஜனநாயகக் கட்சியின் நடவடிக்கையான அடிப்படை ஜனநாயக உரிமைகளை அழிக்கும் நீண்டகால விளைவுடைய தாக்கங்கள் குறித்து பொது விவாதங்களைத் ஜப்பான் ஜனநாயக கட்சி தவிர்க்கிறது.