சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The US establishment swoons over the royal birth

அமெரிக்க ஆளும்தட்டு அரசகுல குழந்தை பிறப்பு குறித்து மெய்மறந்து போகின்றது

By David Walsh
23 July 2013

use this version to print | Send feedback

திங்களன்று பிரித்தானியாவின் இளவரசர் வில்லியமின் மனைவியும் கேம்ப்ரிட்ஜ் சீமாட்டியுமான கேட் மிடில்டன் மகப்பேறுக்கு சென்றுள்ளார் என்பதைக் கேட்டவுடன் அமெரிக்கச் செய்தி மற்றும் கேளிக்கை ஊடகம் பெரும் பரபரப்பை அடைந்ததன. பின்னர் பிரித்தானிய அரியணைக்கான வரிசையின் மூன்றாம் நபராக, ஒரு ஆண் மகவை அன்றைய தினம் அவர் பெற்றெடுத்தார்.

எதிர்பார்க்கப்பட்ட காலைத் தலைப்புக்கள்“அரசக் குடும்பக் குழந்தை விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது; கேட் சீமாட்டி மகப்பேற்றில் உள்ளார்”, “அரச குடும்பக் குழுந்தை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய 10 மரபுகள்”, “அரச குடும்ப குழந்தைக்கு காத்திருந்தது, கிட்டத்தட்ட முடிந்துவிட்டது”, “மூ-மாநிலம் (அமெரிக்கா), உலகம் அரசு குழந்தை பிறப்பு பற்றிய செய்திக்கு ஆவலுடன் காத்திருக்கின்றன”என்பவைகளும் பிற்பகலில், கொண்டாட்டத்துடன், “லண்டனில் அரச குழந்தை பிறந்தது”, “அரச குல வருகை: ஒரு ஆண் குழந்தை!”, “இளவரசர் வில்லியமும் கேட்டும் முதல் குழந்தை பிறப்பைக் கொண்டாடுகின்றனர்”, “அரச குடும்ப குழந்தை வந்துவிட்டது” இத்தோடு இன்னும் பலவெளிவந்தன.

CNN பரபரப்பான மூச்சுடன் தன் பார்வையாளர்களுக்கு பின்வருமாறு கூறியது: “அரச குடும்ப களிப்புக் குவியல் வரவுள்ளது... இளவரசர் வில்லியம் குழந்தை பிறந்தவுடன் அரசியாருக்கு தொலைப்பேசித் தகவல் கொடுக்குமாறு கண்டிப்புடன் கோரப்பட்டுள்ளார்... ஒரு சிறப்பான மறைகுறியாக்கப்பட்ட தொலைப்பேசி மூலம் அவர் அந்த அழைப்பை விடுப்பார்.” இரண்டு அமெரிக்கத் தொலைக்காட்சி வலையமைப்புக்களான ABC, NBC  ஆகியவைகள் வழக்கமான நிகழ்ச்சிகளுக்கு இடையே குறுக்கிட்டு இப்பிறப்புச் செய்தியை அறிவித்தன.

தன்னுடைய வழமையான வேலையில் இருந்து சற்று நேரம் எடுத்துக் கொண்டு ஜனாதிபதி பாரக் ஒபாமா “கேம்பிரிட்ஜ் பிரபு, சீமாட்டிக்கு அவர்களுடைய முதல் குழந்தை பிறப்பு என்னும் களிப்பான நிகழ்விற்கு வாழ்த்துக்கள் கூறினார்... நமக்கு இடையேயுள்ள சிறப்பு உறவை ஒட்டி, அமெரிக்க மக்கள் ஐக்கிய இராச்சியத்தின் மக்களுடன் சேர்ந்து இளம் இளவரசரின் பிறப்பைக் கொண்டாடுகின்றனர்.” என்றார்.

ஒபாமா கட்டாயமாக தனக்காகப் பேசுகிறார். அனைத்துக் குறிப்புக்களில் இருந்தும், அரச குடும்ப பிறப்பு குறித்து அமெரிக்காவில் எவரும் அதிகம் அக்கறை கொள்ளவில்லை. Pew Research கருத்துப்படி, “பொதுவாக, பெரும்பாலான அமெரிக்க மக்கள் பிரித்தானிய அரச குடும்பத்தின் செய்திகளை பின்பற்றுவதில்லை என்கின்றனர்”. எதற்காக அவர்கள் பின்பற்ற வேண்டும்?

டிசம்பர் 2012ல், Pew கருத்துக் கணிப்பில் பதிவானவர்களில் கால்வாசிப்பேர், செய்தியை தாங்கள் அரச தம்பதியினர் ஒரு குழந்தையை எதிர்பார்க்கின்றனர் என்ற செய்தியை பின்தொடர்வதாகக் கூறினர். இது எல்லா தொலைக்காட்சிகள் மற்றும் பரபரப்புச் செய்தித் தாட்களிலும் வந்தன. இதில் 1824 வயதுகளில் இருப்பவர்களில் 16 சதவிகிதத்தினர்தான் அக்கறை காட்டினர். மிகவும் கவனத்திற்கெடுத்தவர்களில் 55 வயதினரும் அதற்கு மேல் வயதான அமெரிக்கர்களும் ஆவர். கணிப்பு முடிவுகள் வருமானத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தால், மிக இளைய மற்றும் மிக வசதியற்ற அமெரிக்க மக்கள் பிரித்தானிய அரச குடும்பத்தைப் பற்றி மிகவும் குறைவான ஆர்வத்தைத்தான் காட்டியிருப்பர்இல்லாவிடின் வெளிப்படையான விரோதப் போக்கைக்கூட காட்டியிருப்பர்.

அவ்வகையில், பொதுமக்களிடம் ஆர்வம் பொதுவாக இல்லை என அறியப்பட்டிருக்கையில் செய்தி ஊடகம் நிகழ்வு குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருப்பது, அமெரிக்கர்களின்  வாழ்விலுள்ள சமூக, அரசியல், அறநெறிப் பிளவின் ஒரு வெளிப்பாடு ஆகும்.

எப்போதும் போல், செய்தி ஊடகம் கொடுக்கும் தகவல், நிறைய போலித்தனத்தையும், திரித்தல்களையும் கொண்டுள்ளது. அமெரிக்க மக்களுக்கு செய்தியை வழங்கும் முட்டாள்மண்டைகள் கூட உண்மையிலேயே பிரித்தானிய மக்களின் செலவில் வாழும் உயரடுக்கில் உபயோகமற்ற ஒட்டுண்ணிக் கூட்டத்தில் ஒரு புதிய நபர் சேர்வது குறித்து “பரபரப்பு”, “தலைசுற்றலை” அடைந்தனர் என்பது கூட சாத்தியமில்லை.

Crown Estate (அரச குடும்பச் சொத்துக்கள்), பிரித்தானியாவில் மிகப் பெரிய சொத்தை கொண்டுள்ளவர்களில் ஒன்றும், 2011ல் 7.3 பில்லியன் பவுண்டுகளை [அமெரிக்க 11.2 பில்லியன் டொலர்கள்] கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2010ல் அரசியார் எலிசபெத்தின் செல்வம் கிட்டத்தட்ட 450 மில்லியன் டாலர்களாக இருக்கும் எனக் போர்ப்ஸ் கணக்கிட்டது.

பிரித்தானிய அரச குடும்பத்தை விட அதிகம் பயனற்ற கூட்டத்தைக் கற்பனை செய்வது பார்ப்பது கடினம், 1930களில் அவர்களை அறிவிழக்கச்செய்த பாசிசத்தின் நாற்றத்தை இவர்களிலிருந்து அகற்றப்பட முடியாது.

சந்தேகமின்றி, வெற்றுத்தன, திருப்திபடுத்தமுடியாத மனதை உறையவைக்கும் விடயங்களை கொண்டு நேரத்தையும் இடத்தையும் நிரப்பவேண்டும் என்னும் தேவையில், குறிப்பாக செய்தி நாளேட்டின் “தாமத நேரம்” இருக்கும்போது, செய்தி ஊடகத்தின் இழிவான செயல்களில் சில வருகின்றன; ஆனால் இங்கு வெற்றுத்தன வேலையைவிட அதிகமானதுதான் உள்ளது.

ஒன்று நிச்சயம், தொலைக்காட்சி வலையமைப்புக்கள், கேபிள் தொலைக்காட்சிகள், அச்சுச் செய்தி ஊடகங்கள் ஆகியவற்றிற்கு அதிக தொந்தரவளிக்கும் செய்திகளான எட்வார்ட் ஸ்னோவ்டெனுடைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத சதித்திட்டங்கள் பற்றிய வெளிப்பாடுகளில் இருந்து, எகிப்தில் சர்வாதிகாரத்திற்கு அதன் ஆதரவு, சிரியாவில் புதிய போருக்கான திட்டங்கள் , டெட்ராயிட் திவால் மற்றும்  அங்குள்ள  மக்களின் பேரழிவு போன்றவற்றை பின்தள்ளிவிட்டு மக்கள் கவனத்தை திசை திருப்ப பாதிய காரணங்கள் உள்ளன.

இதற்கும் அப்பால், நியூயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்றகணிசமான செய்தி ஊடகங்கள், சமீப தசாப்தங்களில்  நிறைய அவதூறுகள், அக்கப்போர்களினால் இகழ்வினுள் மூழ்கிவிட்ட அமைப்பை புதிய அரச குடும்ப வாரிசின் முக்கியத்துவம் எப்படி உறுதிப்படுத்துவதுடன்,  நியாயப்படுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டின.

திங்கள் அன்று டைம்ஸ் குறிப்பிட்டது: “வில்லியம் மற்றும் காத்தரினின் குழந்தை எப்பொழுதும் மரபுரிமையை பற்றிய முடியாட்சியின் சாரம்சம் மட்டும் அல்ல. இப்பிறப்பு 16 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியமின் தாயாரும் வேல்ஸ் இளவரசியாருமான டயனா இறந்தபின் பின் ஆட்டம் கண்ட அரியணைக்கு உறுதிப்பாட்டை உறுதி செய்கிறது.”

“கொடூர கார் விபத்திற்குப் பின் அரச தோட்டத்தில் அனைத்தும் களிப்பாக இருக்கும் என யார் கணித்திருக்க முடியும்?

இப்பச்சிளம் பாலகன் இளவரசர் சார்ல்ஸ் மற்றும் இளவரசர் வில்லியமைத் தொடர்ந்து அரியணை ஏறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று போஸ்ட் கூறியுள்ளது.

இடைப்பட்ட ஆண்டுகள் எத்தகைய அரசியல், தனிப்பட்ட மாற்றங்களைக் கொண்டுவரும் என எவரும் கூறமுடியாது; ஆனால் இக்குழந்தை பிரித்தானியா, ஆஸ்திரேலியா, கனடா உட்பட, காமன்வெல்த்தின் 54 நாடுகளின் தலைமை உட்பட 16 நாடுகளின் தலைமையை ஏற்கும் என எதிர்பார்க்கப்படும்.

 “இக்குழந்தை இறுதியில் ஆங்கிலத் திருச்சபையின் தலைமை ஆளுனராகவும் விளங்கும்.

“பிரித்தானிய ஏகாதிபத்திய வரலாற்றில் உயிருள்ள பிணைப்பை இக்குழந்தை பிரதிபலிக்கிறதுஇக்குழந்தை அரசியார் விக்டோரியாவின் ஆறாம் தலைமுறைப் பேரக் குழந்தை ஆகும். அவர் பிரித்தானிய அதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் அரசாட்சி செய்தார்.

பிரித்தானிய முடியாட்சி, அதன் கிழிந்த, நைந்த நிலையிலும், இன்னமும் உலக சமூகப் பிற்போக்குத்தனத்தின் தூணைப் பிரதிபலிக்கிறது; இதைச் சுற்றியுள்ள ஸ்தாபன அமைப்பு (ஆங்கிலம் பேசும் நாடுகளில் குறிப்பாக) மிகப் பிற்போக்குத்தன, வளைந்து கொடுக்கும் சமூகத் தட்டுக்களைப் பிணைக்க முற்படுகிறது. பிரித்தானிய அரியணைக்கு என்ன ஆகிறது என்பது ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் இருக்கும் ஆளும் உயரடுக்குகள் அக்கறையற்றவையல்ல.

முடியாட்சிச் செயற்பாடுகளில் இடைவிடா அமெரிக்க செய்தி ஊடகம் கொடுக்கும் தகவல்களில் மறக்கப்படுவது அமெரிக்க மக்கள் ஆயுதம் ஏந்தி, வன்முறையில் பிரித்தானிய ஆட்சியாளர்களை 240 ஆண்டுகளுக்கு முன் எதிர்த்து குடியரசை நிறுவியதாகும். இது சிறிய விவகாரம் அல்லாததுடன் செய்தி ஊடகம் இதை மறைப்பதும் தற்செயல் நிகழ்வு அல்ல.

அமெரிக்கப் புரட்சி ஒரு உலக வரலாற்று நிகழ்வு. இது செல்வம் மற்றும் சலுகை படைத்த  மரபியல்படி வரும் சிறப்புக் கொள்கையான பிரபுத்துவக் கொள்கைக்கு பெரிய அடிகொடுத்தது. தற்கால சகாப்தத்தில், ஒரு மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தி என்னும் முறையில், “குடியரசுவாத” அமெரிக்கா இன்னும் பிற்போக்குத்தன கொள்கைப் பங்கை ஐக்கிய இராச்சிய முடியரசைவிடக் கொண்டுள்ளது. ஆனால் சமீப காலம் வரையிலேனும் அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கு 1776 உயர் சிந்தனைகளுக்கும், சுதந்திரப் பிரகடனத்திற்கும், எல்லா மனிதர்களும் “சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர்” என்னும் “உண்மை நிலைப்பாடு நிற்பதற்கும்” உதட்டளவு மரியாதை கொடுக்கும் கட்டாயத்தில் இருந்தது.

பரந்த சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி, அமெரிக்காவில்  ஒரு நிதியப் பிரபுத்துவத்தின் பிரசன்னம், பெயரளவில் என்று இல்லாமல் உண்மையில், ஜனநாயகத்தை பெயரளவிற்குப் பின்பற்றுவதைக்கூட இயலாமல் செய்துள்ளது. உத்தியோகபூர்வ நடத்தை மற்றும் தகவல்தொடர்பு ஆகியவை இப்பொழுது யதார்த்தத்தை ஆளும் வர்க்கத்தின் பிரச்சாரகர்கள் தொலைக்காட்சியிலும் செய்தி ஊடகத்திலும் கூறும் சொல்லாட்சி மூலம் நிரப்ப வந்துவிட்டன.

அமெரிக்காவில் பெரும் செல்வந்தர் உயரடுக்கு அரச குடும்பத்தைப் போல் வாழ்கிறது. அவ்வாறு தம்மை நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது. சமூகத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் வெகு சிலர், கற்பனையிலும் நினைக்க முடியாத செல்வத்தைத் துய்ப்பவர்கள், பெரும்பாலான மக்களை உதவாக்கரைகள் என்று கருதுகின்றனர். அவர்களுடைய தேவைகள் மற்றும் கருத்துக்கள் மதிக்கப்படுவது இல்லை; இவர்களுடைய வாழ்வும் உயரடுக்கின் பார்வையில் பொருளற்று உள்ளது.

அமெரிக்கப் புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரின் மரபுகளுடன் அடையாளம் காண்பதற்கு முற்றிலும் எதிராக, இவர்கள் பிரித்தானிய பிரபுத்துவம், தென்பகுதி அடிமைப் பிரபுக்களுடன் கூடுதல் பிணைப்பை உணர்கின்றனர். இது அவர்கள் ஆளும் வழிவகையிலும் விரிவாக்கம் பெறுகிறது; அது ஜனநாயகத்தை நிராகரித்து சர்வாதிகாரத்திற்கு ஆதரவு கொடுக்கிறது; பொலிஸ் அரச வழிவகைகளுக்கு ஊக்கம் அளிக்கிறது, இரகசிய நீதிமன்றங்கள், மக்களுக்கு எதிரான சதிகள் போன்றவை நடக்கின்றன.

அமெரிக்காவை நடத்தும் நிதியப் பிரபுக்கள், பெருநிறுவனத் திருடர்களின் பொறாமையும் ஈர்ப்பும், அவர்களுடைய செய்தி ஊடக முகவர்களுடன் கூட, உள்ளுணர்வாக பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஆதரவு காட்டுவது ஆகும். இவை அவர்களுடைய சலுகைகள் சட்டம் மற்றும் மரபில் பொதிந்துள்ளன. அது அரச குடும்பத்தின் பிறப்பில் தற்பொழுதுள்ள  பரபரப்பை விளக்க உதவுகிறது.

அமெரிக்காவை ஆளும் பில்லியனர்கள், தங்கள் செல்வம், அதிகாரத்தைத் உறுதிப்படுத்த பரம்பரை பிரபுத்துவத்தை நிறுவ வேண்டும் என்றால், அவர்கள் தயக்கமின்றி அதைச் செய்வர். ஒரு புதிய “1776” ஆனது சமூக சமத்துவம், சோசலிசம் ஆகியவைகளின் வேலைத்திட்டத்தில் இருந்து இந்த பெருநிறுவன நிதியப் பிரபுத்துவத்திற்கு எதிரான எழுச்சி என்பதைக் கொண்டு வரும்.

கட்டுரையாசிரியர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்.

அமெரிக்க ஆளும்வர்க்கமும் பிரித்தானிய அரச குடும்ப மகப்பேறும்