சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

World Socialist Web Site launches daily audio podcast

உலக சோசலிச வலைத் தளமானது தினசரி போட்காஸ்ட் (Podcast) சேவையை ஆரம்பிக்கிறது
 

18 June 2013

நாளாந்த போட்காஸ்ட் (Podcast) ஒலி வடிவ சேவையை உத்தியோகபூர்வமாக உலக சோசலிச வலைத் தளம் ஆரம்பிக்கிறது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இது அன்றைய முதன்மைக் கட்டுரை மற்றும் முன்னோக்கு ஆகியவைகளை ஒரு ஒலிப் பதிவு வடிவில் கொண்டிருக்கும்.

இதன் மூலம் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள் அதன் வலைத் தளத்தின் நாளாந்த வெளியீடுகளில் ஒரு பகுதியை ஒலி வடிவில் பெறமுடியும். இதை நீங்கள் உங்களது கணனி, கைத்தொலைபேசி அல்லது எடுத்துச் செல்லக்கூடிய MP3 பிளேயரில் கேட்க முடியும். இது பயணிக்கும் போது, வாகனம் செலுத்தும்போது அல்லது வேலையில் ஈடுபட்டிருக்கும்போது உலக சோசலிச வலைத் தளத்தினை ஒலி வடிவில் கேட்கக்கூடியதொன்றாக்கும்.

விநியோகம் செய்யும் வலைத் தள சேவைகள் (syndication services) மூலம் நீங்கள் இதைப் பெற்றுக்கொள்ளலாம். இச்சேவைகள் ஒன்றிற்கு நீங்கள் பதிவு செய்து (subscribe) கொள்ளுவதன் மூலம் உலக சோசலிச வலைத் தளத்தின் ஒலி வடிவ சேவையை உங்களது கணனிக்கு அல்லது மற்றய கருவிக்கு தானாகவே தரவிறக்கம் செய்ய (downloaded) முடியும்.

நீங்கள் ஐரியூன் (iTunes) ஐ பயன்படுத்துபவராயின் இங்கு அழுத்துவதன் மூலம் பதிவு செய்து கொள்ள (subscribe) முடியும், அல்லதுஉலக சோசலிச வலைத் தளத்தைஐரியூன் இனுள் தேடமுடியும்.

இந்த போட்காஸ்ட் (Podcast) சேவையை Stitcher  ஊடாக இங்கும் Blubrry ஊடாக இங்கும் பெற்றுக்கொள்ள முடியும்.

பல்வேறு போட்கட்சர்களின் (podcatchers) ஒரு முழுமையான அட்டவணை அதாவது கீழிறக்குவதற்கான (downloading) நிரலிகளும் (programs) மற்றும் ஒலி பரப்புச் (streaming) செய்யும் போட்காஸ்ட்டுகளும் (Podcasts) விக்கிபீடியாவில் (Wikipediaகிடைக்கும். வாசகர்கள் தமது கணனிக்கு, கைத்தொலைபேசிக்கு அல்லது மற்றய கருவிக்கு உகந்த போட்கட்சரை (podcatchers) தரவிறக்கம் செய்து (downloading) அதன் பின்னர் போட்காஸ்ட் ஊட்டிக்கு (podcast feed): http://www.wsws.org/en/podcast.xml  பதிவு செய்து கொள்ளலாம். தமது வலைத் தள உலாவி (web browser) மூலம் போட்காஸ்ட் (Podcast) சேவையை கேட்க விரும்புபவர்கள் அதே இணைப்பை பயன்படுத்தி ஊட்டியை (feed) நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும். அனேகமாக பயன்படுத்தப்படும் உலாவிகளான (browsers) — Firefox, Internet Explorer,  Safari, Opera— ஆகியவைகள் இலகுவாக XML ஊட்டியை (feed) காண்பிக்கும். Chrome ஐ பொறுத்தவரை ஊட்டியை காட்ட உடன்சேர்ப்பு என்பது (add-on) தேவை. அது இங்கு கிடைக்கும்.

அனைத்து உலக சோசலிச வலைத் தளத்தின் வெளியீடுகளைப் போலவே, ஒலிப் பதிவுகளும் இலவசமாக கிடைக்கும். இருந்தபோதிலும், போட்காஸ்டை (Podcast) தயாரிக்க கணிசமான அளவு வளங்கள் தேவைப்படுகின்றன. நாம் எமது வாசகர்களை அர்ப்பணிப்புடன் உலக சோசலிச வலைத் தளத்திற்கு பங்களிப்புச் செய்வதன் மூலம் அதற்கு புதிய வெளியீட்டு உள்ளடக்கத்தை உருவாக்கவும் மற்றும் தொழில்நுட்பத்தை மேலும் விரிவாக்கம் செய்யவும் உதவும்படி கேட்டுக்கொள்ளுகின்றோம். நீங்கள் இன்று பங்களிப்பைச் செய்ய இங்கு அழுத்தவும்.