சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French unions secretly financed by millions of euros from business groups

பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் வணிகக் குழுக்களிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை இரகசிய நிதி உதவியாகப் பெறுகின்றன

By Anthony Torres  
17 October 2013

Use this version to printSend feedback

திங்களன்று பிரெஞ்சு முதலாளிகள் அமைப்புக்களின் ஒரு முன்னாள் உயர்மட்ட அதிகாரியான Denis Gautier-Sauvagnac, பிரான்சின் முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களுக்கு பல மில்லியன் யூரோக்கள் இரகசியமாக நிதியளித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பொறியியல் முதலாளிகள் கூட்டமைப்பினுடைய (Engineering Employers Federation)  முன்னாள் தலைவர் 16.5 மில்லியன் யூரோக்கள் வங்கியிலிருந்து ரொக்கமாக எடுக்கப்பட்டதுடன், அதாவது பொறியியல் முதலாளிகளின் பரஸ்பர உதவி நிதியத்திலிருந்து எடுக்கப்பட்டவை, தொழிற் சங்கங்களுக்கு கொடுக்கப்பட்டன என்று நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இவ்வாறு கொடுக்கப்பட்ட நிதிகள் 2002 முதல் 2007 காலப்பகுதியில் இருந்தன.

இந்த விவகாரம்,  ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் கீழ் ஒய்வூதியங்கள் மீது தாக்குதல்களை நடத்த 2007இல் தயாரான போது பிரெஞ்சு ஆளும் உயரடுக்கிற்குள் இருக்கும் உள்போராட்டங்களை பிரதிபலிக்கிறது, இவை பகிரங்கமாக வந்துள்ளது. 2004ல் நிதி அமைச்சரகம் ஏற்கனவே Gautier-Sauvagnac தலைமையில் இருந்த UIMM  எனப்படும் பொறியியல் முதலாளிகள் கூட்டமைப்பு வங்கிக் கணக்குகளிலிருந்து தவறான பண எடுப்புக்களை ஆராய்ந்துள்ளது. அவர் மெடெப் என்னும் பிரெஞ்சு முதலாளிகள் கூட்டமைப்பின் (Medef) அப்பொழுதைய தலைவரான Laurence Parisot வின் போட்டியாளர் எனக் கருதப்பட்டார்; அத்தோடு தந்திரோபாயம் தொடர்பாக சார்க்கோசியோடு சில கொள்கைப் பிரச்சினைகளிலும் இருந்தார்.

2007ல் Gautier-Sauvagnac நம்பிக்கைத் துரோகம்” மற்றும் “சட்டவிரோத வேலையளித்தல்” என்று UIMM ஊழியர்களுக்கு கூடுதலாக மற்றும் யாருக்கும் தெரிவிக்காமல் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

UIMM இல் அவருடைய தலைவர்களில் முன்னோடியாகயிருந்த ஒருவரான Arnaud Leenhardt (1985-1999) அக்டோபர் 9ம் திகதி ரொக்கப் பணக் கவர்களை பெற்றவர்கள் “ஐந்து தொழிற்சங்கங்கள் சேர்ந்த பிரதிநிதிகள்” என்று உறுதிப்படுத்தினார். இவைகள் CGT (பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு), CFDT (பிரெஞ்சு ஜனாநாயக தொழிலாளர் கூட்டமைப்பு), CFTC (பிரெஞ்சு கிறிஸ்துவத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு), FO (தொழிலாளர் சக்தி) மற்றும் CGC (பொது மேலாளர்கள் ஒன்றியம்) ஆகும்; அனைத்தும் அரசினால் உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் பெற்றவை.

பெருநிறுவனங்கள், தொழிலாள வர்க்கத்தைக் கண்காணிக்கவும் எதிர்ப்பைக் குறைக்கவும் தொழிற்சங்கங்களை பயன்படுத்துகின்றன என்றும் Leenhardt குறிப்பிட்டார்: “முதலாளிகளுக்கு உறுதியான தொழிற்சங்கம் தேவை. வேலைநிறுத்தம் ஏற்பட்டு நிர்வாகம் அடைபடும்போது அத்து மீறல்களை திசைதிருப்பி மீண்டும் வேலைக்கு வருவதற்கு ஊக்கம் தரும் திசைதிருப்பும் திறனுடைய தொழிற்சங்கம் இருந்தால் உங்களுக்கு மகிழ்ச்சிதான்.”

திங்களன்று Gautier-Sauvagnac தன்னுடைய முந்தைய அறிக்கைகளை நீதிமன்றத்தில் அளித்தார். “உண்மையில், இதுவரை நான் போதிய தெளிவு காட்டவில்லை என்பதை உணர்கிறேன்; இப்பொழுது Arnaud Leenhardt உடைய சொற்களை உறுதி செய்கிறேன்” என்றார் அவர். UIMM நிதிகளிலிருந்து பயனடைந்தோர் பெயர்களை கூற அவர் மறுத்துவிட்டார்.

Gautier-Sauvagnac இந்த நிதி உதவிகள் இருவகைப்பட்டவை என்று சுட்டிக்காட்டினார். முதலாவது காசோலை வடிவங்கள் கொண்டவை, “விளம்பர இடத்தை மிகைப்படுத்தப்பட்ட விலை அல்லது அதிக விலை கொடுத்த வகையில் வாங்குதல்; அல்லது தொழிற்சங்க செய்தித்தாள்களை மீண்டும் வாங்குதல் என்று இருக்கும்.” இது ஒருவகையில் “நன்கொடைகளை மறைக்கும் வழியாகும்”, தொழிற்சங்கங்களுக்கு நிதி அளிக்கும் முறையில். “ஆனால் இதுவும் போதாதது, ஏனெனில் இது ஒரு போலிக்காரணம், வரம்புகள் கொண்டவை” என்று அவர் தொடர்ந்தார்; மீதி உதவி “ரொக்கமாக, இன்னும் சாமர்த்தியமாக” கொடுக்கப்பட்டன.

UIMM கணக்குத் துறையின் தலைவரான Dominique Renaud, இது எப்படி என்பதை விளக்கினார்; “வாரத்திற்கு ஒரு முறை நான் திரு Gautier-Sauvagnac அலுவலகத்திற்கு UIMM கொடுக்கும் பணத்திற்கு கையெழுத்திடச் செல்வேன்... திரு Gautier-Sauvagnac க்குப் பணம் தேவை என்றால் அவர் கூறுவார், “எங்களுக்கு இவ்வளவு பணம் வேண்டும்”. ஒவ்வொரு முறையும் நான் 200,000 பணத்தை வங்கியிலிருந்து எடுப்பேன்.”

UIMM  இன் முன்னாள் ஆராய்ச்சித் துறை இயக்குனர் Jacques Gagliardi 2008 இல் Pierre Guillen, Gautier-Sauvagnac க்கு முன்பு பதவியில் இருந்தவர் “தொழிற்சங்கங்களுக்கு ரொக்கப்பணம் கொடுத்தார்... CGT ஐ பொறுத்தவரை, அவர் என்னிடம் ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான பிராங்குகள் கொடுத்ததாக கூறினார்.

Gautier-Sauvagnac இன் கருத்துக்களை தொழிற்சங்கங்கள் மறுக்கவில்லை. ஒரு உயர்மட்ட அதிகாரி மூலம், CFDT யின் பொறியியல் கிளை UIMM இடமிருந்து நிதி உதவியை “2002 ல் இருந்து 2006 வரை 21,626.13 யூரோக்களை சமநிலைக்கான குழுக் கூட்டத்திற்கு பங்குகொள்ளல் செலவுகளை திருப்பிச் செலுத்துதல் கட்டணத்தை பெற்றதாக” ஒப்புக்கொண்டது.

அவர் கூறினார்: “என்னைப் பொறுத்தவரை நான் கவர்களைப் பற்றி கேள்விப்பட்டது இல்லை. மறுபுறமோ, ஆம். UIMM எங்களுக்கு தங்களுடைய செய்தித்தாள்களில் விளம்பரம் வாங்குவதின் மூலம் அல்லது எங்கள் மாநாடுகளில் வாடகை இடங்களைப் பெறும் வகையிலோ உதவியது. UIMM விவகாரம் குறித்து பொலிசால் நாங்கள் சோதனைக்கு உட்பட்டபோது, எங்கள் கணக்கில் அனைத்தும் இருந்தன, இச்செயற்பாடுகளை அடையாளம் காண்பது மிகத் தெளிவு. எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.”

CFDT ஆவணங்கள் அனைத்தையும் சட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டதாக கூறியது. அதன் கணக்குகள் சட்டபூர்வமானவை என்றும் காட்டப்பட்டது. ஆனால் UIMM கொடுத்த பணம் ரொக்கம் என்பதால், அது அமைப்பின் இருப்புநிலைக் குறிப்பில் ஒருவேளை காட்டப்படமாட்டாது.

இன்னும் பரந்த அளவில் இந்த வெளிப்பாடுகள் அரசு, முதலாளிகள், தொழிற்சங்கம் இவைகள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகச் செயல்படுவதற்கான அப்பட்டமான நிரூபணமாகும். பல தசாப்தங்களாக தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தொழிற்சங்கங்களை விட்டு விலகியுள்ளனர், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் வெற்றுக் கூடுகளாக போய்விட்டன, நிதியப் பிரபுத்துவத்தால் நிதியளிக்கப்பட்டு நெறிப்படுத்தப்படும் வகையில்.

Perruchot அறிக்கை, கடந்த ஆண்டு பாராளுமன்றத்தால் நசுக்கிவைக்கப்பட்டது, தொழிற்சங்கங்கள் சுயாதீன நிதித் தளத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டியது; இவை பெருமளவில் பெருநிறுவன ரொக்கம் மற்றும் அரச உதவிகளால் நிதியைப் பெறுகின்றன: “கிட்டத்தட்ட 4 பில்லியன் யூரோக்கள் ஒவ்வொரு ஆண்டும் பிரான்சில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு கொடுக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான நிதிகள் (90%) சட்டபூர்வ தொழிற்சங்க செயல்கள் மூலம் மற்றும் அரசாங்க வேலைகள் மூலம் வருவது போல் தோன்றுகின்றன; அதே நேரத்தில் நேரடி நன்கொடைகள் தொழிற்சங்க உறுப்பினர்களால் தொழிற்சங்கக் கட்டணம் வருவது என்பது நிதிய உதவிகளை எடுத்துவிட்டால் 3 முதல் 4 சதவிகிதமாகத்தான் இருக்கும்.”

தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் நிதிக்கு நம்பியிருப்பது தொழிலாள வர்க்கத்திடையே அவைகள் தளம்கொண்டிருப்பதின் சரிவைப் பிரதிபலிக்கிறது; தொழிலாள வர்க்கத்தின் சமூகப் போராட்டங்கள் நசுக்கப்படுவதையும் காட்டுகிறது. (See Perruchot report exposes French unions’ ties to the ruling class)


படம் 1 : தொழிற்சங்கமயமாதலின் சரிவு


வரைபடம் 2: வேலைநிறுத்த நாட்கள்

இந்த வரைபடங்கள், தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் அல்லது வர்க்கப் போராட்டத்தின் அமைப்புக்களிலிருந்து சரிந்துவிட்டன என்பதை விளக்குகின்றன.

இவைகளின் பிற்போக்குத்தன, முதலாளித்துவ சார்பு பங்கு அனைத்து வேலைநீக்க உடன்பாடுகளிலும் பிரதிபலிக்கிறது; சமூகநல ஆதாயங்களுக்கு எதிரான தாக்குதல்களிலும், ஓய்வூதிய நிதிகள் பிரான்சில் மற்றும் ஐரோப்பா நெடுகிலும் காணப்படுகிறது. இவற்றை தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுச் செயல்படுத்த உதவியுள்ளன. அவற்றின் மூலோபாயமாக இருப்பது சமூக எதிர்ப்புக்கள் சிக்கனத்திற்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தமாக தொழிலாள வர்க்கத் தலைமையில் வருவதை தடுத்தல்; ஏனெனில் இது அவற்றின் சொந்த நிதிபெறுதல் ஆதாரங்களுக்கு எதிரான புரட்சிகர போராட்டத்தை தூண்டிவிடும் என்பதால்.

இப்புள்ளிவிவரங்கள் புதிய தொழிலாள வர்க்க அமைப்புக்களை போராட்டத்திற்கு தோற்றுவிக்கும் தேவையை அடிக்கோடிட்டுக்காட்டுகின்றன; அதேபோல் இப்போராட்டங்களுக்கு ஒரு சோசலிச முன்னோக்கை வழங்கும் புதிய அரசியல் கட்சியின் தேவையையும் காட்டுகின்றன.

UIMM முறைகேடானது, தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் பாதுகாப்பு அமைப்புக்களிலிருந்து சமூகப் பிற்போக்குத்தன கருவிகளாக மாறிவிட்ட நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கின்றன. இந்த தொழிற்சங்கங்களுக்கு நன்கொடைகள் “பல தசாப்தங்களாக UIMM முதலாளிகள் அமைப்புக்களுக்கும் முதலாளிகளுக்கும் கொடுத்த ஒருவகை ஆதரவைத்தான் காட்டுகின்றன” என்றார் Gautier-Sauvagnac.

அடிப்படையில் இத்தகைய பரஸ்பர நிதியுதவி, உலோக மற்றும் பொறியியல் தொழிற்துறைகளுக்கு என்றுதான் 1972ல் தோற்றிவிக்கப்பட்டது என்று Gautier-Sauvagnac நம்பினார். அது 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின் எழுச்சியடைந்த தொழிலாளர்களின் போராட்டங்களை முகங்கொடுக்கவும் 1970 களின் முடிவில் முதலாளித்துவத்தின் எதிர்த்தாக்குதல் காலத்தில் ஒரு வேலைநிறுத்தத்தை உடைக்கும் நிதியாகவும் பயன்பட்டது. இந்த எதிர்த்தாக்குதல்தான் பெரும்பாலான வடக்கு பிரான்சின் எஃகுத் தொழிற்துறையை அழிக்க வகைசெய்ததோடு பிராந்தியத்தையும் பேரழிவிற்கு உட்படுத்தியது.

ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் அதனுடைய தொழிற்சங்க தலைவர்கள், 1968ல் உழைக்கும் வெகுஜனங்களின் புரட்சிகர முன்முயற்சிகளை கண்டு பீதியடைந்து, இப்போராட்டங்களை விற்றுவிட்டு, அரச கருவியுடன் தங்களை ஒருங்கிணைப்பதை தொடர்ந்தனர்; இது சோசலிஸ்ட் கட்சியுடன் (PS) உடன்பாட்டின் மூலம் நடைபெற்றது.

அதேசமயம், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் Lutte Ouvrière (LO) போன்றவற்றுடன் தொடர்புடைய, ஒரு முன்னாள் தீவிரமயமான மாணவர்கள் தட்டு, இதே அதிகாரத்துவத்திற்குள்ளே தங்கள் நிலைப்பாடுகளையும் வருவாய்களையும் கண்டன.

இக்கட்சிகள் இன்று சோசலிஸ்ட் கட்சிக்கும், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் பிற்போக்குத்தன நிர்வாகத்திற்கும் ஆதரவைக் கொடுக்கின்றன; தொழிற்சங்கங்கள்தான் தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு வழிகாட்ட முடியும் என வலியுறுத்துகின்றன. இது எந்த அளவிற்கு குட்டி முதலாளித்துவ “இடது”, தொழிற்சங்க அதிகாரத்துவத்தை போல் மாறிவிட்டது என்பதை நிரூபிக்கிறது, இது ஒரு பிற்போக்குத்தன சக்தியாக வங்கிகள் மற்றும் நிதியப் பிரபுத்துவத்தின் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சதிகளுடன் பிணைந்துள்ளது.