சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French President Hollande backs US war against Syria

பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் சிரியாவிற்கு எதிரான அமெரிக்கப் போரிற்கு ஆதரவு கொடுக்கிறார்

By Alex Lantier 
31 August 2013

Use this version to printSend feedback

பிரித்தானிய பாராளுமன்றம் சிரியாவில் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்த மறுநாள், சோசலிஸ்ட் கட்சியின் (PS) பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், ஒரு முன்னாள் பிரெஞ்சுக் காலனி நாடான சிரியாவிற்கு எதிரான அமெரிக்கப் போருக்கு ஆதரவை தொடர்வதற்கு உறுதியளித்தார். Le Monde இடம் வெள்ளியன்று பேசிய அவர், போர் உந்துதலை நியாயப்படுத்த இயந்திரகதியில் கூறப்பட்டுள்ள பொய்களை மீண்டும் கூறினார்; அவைகளோ பிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட் காமெரோனின் அவமானகரமான தோல்விக்குப் பின் சிதைந்துள்ளன.

கூத்தாவில் இரசாயனத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுவதை யார் நடத்தினார்கள் என்பது குறித்து “100 சதவீத உறுதிப்பாட்டுடன்” கூறுவதற்கில்லை என்பதை காமெரோன் ஒப்புக்கொண்டார்—ஆனால் சிரியாவில் இஸ்லாமியவாத பினாமிப் படைகளுக்கு தங்களுடைய ஆதரவைக் காட்ட தலையீடு செய்வதை நியாயப்படுத்துவதற்காக, வாஷிங்டன், லண்டன் மற்றும் பாரிஸ், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைத்தான் குற்றம் சாட்டுகின்றனர். வெகுஜன எதிர்ப்பு குறித்து காமெரோன் ஆட்சியில் ஏற்பட்டுள்ள பீதி மற்றும் சிரியாவின் நட்பு நாடுகளான ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் உலகப் போர் என்னும் ஆபத்து பற்றிய விவாதத்தை ஒட்டியும், போருக்கான சட்டவரைவு தோல்வியுற்றது.

ஒபாமா நிர்வாகம் தனது போர்த் திட்டங்களை தொடர விரும்புகையில், ஹாலண்ட் வாஷிங்டனின் குற்றம்சார்ந்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டிற்கு சர்வதேச ஆதரவைத் திரட்ட முற்படுகிறார். அமெரிக்கா பகிரங்கமாக மதிப்பிழந்த பொய்களை அடிப்படையாகக் கொண்டு போரை நடத்த முற்படுகிறது என்றால், அது ஹிட்லர் சகாப்தத்திலிருந்து முன்னோடியில்லாத ஒரு திட்டமிட்ட சர்வதேச காடைத்தன நடவடிக்கையாகும் மற்றும் இதற்கு பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் கோழைத்தனமான சுயநல மிக்க ஆதரவானது, ஹாலண்டின் அரசியல் குருவான பிரான்சுவா மித்திரோன் ஹிட்லருடன் ஒத்துழைத்த பாசிச விஷி ஆட்சியின் சீருடையை அணிந்த முன்னோடியில்லாத செயலுக்கு ஒப்பாகும். Le Monde இடம் பேசிய ஹாலண்ட், பிரித்தானிய பாராளுமன்ற வாக்களிப்பின் முக்கியத்துவத்தைக் கண்டு கொள்ளாத வகையில் உதறித்தள்ளினார். “ஒவ்வொரு நாடும் இறைமையைப் பெற்றுள்ளது, ஒரு நடவடிக்கையில் பங்கு பெறலாமா வேண்டாமா என்பதை அது முடிவெடுக்கலாம். இது ஐக்கிய இராச்சியத்திற்கும் பொருந்தும், பிரான்சிற்கும் பொருந்தும்” என்றார் அவர்.

“இதற்கு ஆட்சிதான் பொறுப்பு என்பதை இது காட்ட பிரான்சிடம் சான்றுகளின் தொகுப்பு உள்ளது” என்று ஹாலண்ட் உறுதிபடக்கூறினார். அமெரிக்க ஆதரவுடைய “எதிர்த்தரப்பு அத்தகைய ஆயுதங்களைக் கொண்டிருக்கவில்லை, கையிருப்புக்கள் அனைத்தும் பஷர் அல்-அசாத்தினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.

இவைகள் அப்பட்டமான பொய்கள் ஆகும். காமெரோன் தோல்வியுற்றமையானது லண்டனோ அதனுடைய நட்பு நாடுகளோ அசாத்திற்கு எதிரான தங்களுடைய குற்றச்சாட்டுக்களை ஆதரிக்க சான்றுகள் எதையும் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்க ஆதரவு பெற்ற எதிர்த்தரப்பிடம் இரசாயன ஆயுதங்கள் இல்லை என்று கூறுவது, அவைகள் சிரியாவில் ஐ.நா. அதிகாரிகளின் கண்டுபிடிப்புக்கள் மற்றும் துருக்கிய பாதுகாப்புப் படைகளால் துருக்கியிலுள்ள அட்னாவில் சிரிய எதிர்த்தரப்பு போராளிகளின் வீடுகளில் மே மாதம் கண்டுபிடிக்கப்பட்ட சரின் எரிவாயுவும் நிராகரிக்கப்படுகின்றன.

முற்றிலும் இழிந்த வகையில் வாஷிங்டனும் பாரிசும் கட்டவிழ்த்து விடவுள்ள இராணுவ நடவடிக்கையை ஹாலண்ட் குறைந்த தன்மையுடையது எனக் காட்ட முயலுகையில், மற்றொரு போருக்கான எதிர்ப்பு, மக்கள் மத்தியில் பரந்துள்ளது என்பதை அவர் நன்கு அறிவார். ஜனவரி மாதம் பிரான்ஸ் மாலி மீது படையெடுத்ததும், 2011ல் லிபியாவிற்கு எதிரான போர் உந்துதலில் அது கொண்டிருந்த பங்கு ஆகியவற்றிற்குப் பின், சமீபத்திய கருத்துக்கணிப்பானது சிரியத் தாக்குதலுக்கு 59 சதவிகித எதிர்ப்பு உள்ளதை காட்டுகிறது.

நடவடிக்கையின் பண்பை விளக்கி அவர் அறிவிக்கையில், “நான் போர் பற்றி பேசவில்லை” என்று அறிவித்த அவர்,சில சொற்றொடர்களுக்குப் பின், சிரியத் தாக்குதலுக்கு “அனைத்து விரும்பத் தேர்வுகளும் மேசையின் மீது உள்ளன” என்று அச்சுறுத்தினார்.

ஒரு பிரெஞ்சு ஏவுகணை அழிப்புக் கப்பலும், ஹெலிகாப்டர் காவியும் நேற்று மத்தியதரைக்கடல் துறைமுகமான துலோனிலிருந்து புறப்பட்டு சிரியாவை நோக்கிச்சென்றன; அதே நேரத்தில் பிரெஞ்சு போர் விமானங்கள் பிரான்சின் தளங்களில் இருந்தும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்களிலிருக்கும் தளங்களிலிருந்தும் சிரியா மீது தாக்குதலுக்குத் தயாராகின்றன.

புதனன்று தேசிய சட்டமன்றம் மற்றும் செனட்டின் அசாதாரண கூட்டுக் கூட்டத்தை ஹாலண்ட் புதனன்று கூட்டுகிறார். ஆனால் பிரான்சின் 1958 அரசியலமைப்பின்படி, இந்தக் கூட்டத் தொடர் முற்றிலும் ஆலோசனைதான் தரமுடியும்; ஜனாதிபதி போருக்குச் செல்லும் முடிவெடுக்கும் முழு அதிகாரத்தையும் கொண்டுள்ளார்; தன்னுடைய முடிவைப் பாராளுமன்றத்திற்கு “தெரிவிக்கும்” கடப்பாட்டை மட்டும்தான் கொண்டுள்ளார். பாராளுமன்றத்தின் ஒரே பயனுள்ள அதிகாரமானது நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்கும் எந்தப் போருக்கும் அனுமதி பெறவேண்டும் என்பதுதான்.
மரபார்ந்த முறையில் வாஷிங்டனின் மிக நெருக்கமான நட்பு நாடான பிரித்தானியாவால்கூட கைவிடப்பட்டுவிட்ட அமெரிக்கப் போர் உந்துதலுக்கு பிரான்சின் ஆதரவு, அதிர்ச்சி தரும் திருப்புமுனையாகும், இது பிரான்சிலும் ஐரோப்பாவிலும் கடந்த தசாப்தத்தில் வர்க்க மோதல்கள் உக்கிரமாகியுள்ளதை குறிக்கின்றது.

2003ல் கன்சர்வேடிவ் பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக், ஈராக் மீது அமெரிக்கப் படையெடுப்பில் சேர மறுத்தார்; அப்போரும் இன்று சிரியாவை எதிர்க்கும் போரைப் போலவே பேரழிவு ஆயுதங்கள் என்னும் பொய் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. படையெடுப்பிற்கு பிரித்தானிய படைகளை வழங்குகையில், பிரதம மந்திரி டோனி பிளேயர் மக்களுடைய பொது அவமதிப்பையும், வாஷிங்டனின் செல்லமான நாய் என்ற பெயரையும்தான் சம்பாதித்தார்.

ஆனால், பிரித்தானிய முதலாளித்துவம் கணநேரம் அதனுடைய இயல்பான பங்கிலிருந்து வியாழனன்று நகர்ந்த பின், ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS), உடனே அதற்குப் பதிலாக நகர்ந்துவந்துள்ளது; இதற்கு கோலிச கன்சர்வேடிவ்களின் கணிசமான பிரிவுகளில் ஆதரவும் உள்ளது. அவர்கள், ஒரு பிராந்திய, ஏன் உலக இராணுவ மோதல் என்ற அளவிற்குக்கூட அச்சுறுத்தும் ஒரு பொறுப்பற்ற போரில் அனைத்தையும் பணயம் வைக்கின்றனர்.

இதில் சம்பந்தப்பட்டுள்ளது பிரான்சின் முதலாளித்துவ ஆளும் “இடது” கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PS) ஐ உள்ளடக்குவதாக மட்டுமின்றி, அதனுடைய ஸ்ராலினிச மற்றும் போலி இடது சுற்றுவட்டத்திலுள்ள கட்சிகளான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியையும் (NPA) உள்ளடக்கியுள்ளன. இவைகள் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் ஆர்வத்துடன் ஹாலண்டை ஆதரித்ததோடு மட்டுமன்றி, ஏகாதிபத்தியத்தின் பினாமிப் படைகளை —பிற்போக்குத்தன இஸ்லாமியவாத எதிர்த்தரப்புப் போராளிகள்— புரட்சியாளர்கள் எனக் கூறி சிரியாவில் ஊக்குவிப்பும் கொடுத்தன. (See also: “பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மத்திய கிழக்கு போர்களுக்கான அதன் ஆதரவை மூடி மறைக்க முற்படுகிறது”)

இந்த பிற்போக்கு சக்திகள் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் எதிப்பை அடக்கிய நிலைமையின் கீழ், முக்கிய பயனாளி, ஆளும் உயரடுக்கின் ஒரே எதிர்க்கட்சி என்று காட்டிக் கொள்ளும் மரீன் லு பென்னுடைய நவ பாசிச தேசிய முன்னணியாகும். ஒரு சமீபத்திய செய்திக் குறிப்பில், இவர் ஹாலண்டின் சிரியப் போர்த் திட்டங்களை விமர்சித்து, அவைகள் இஸ்லாமியவாத சக்திகளுக்குத்தான் நலன் தருகின்றன என்றார்—இதையொட்டி அவருடைய கட்சி நச்சுத்தன்மையான இஸ்லாமிய எதிர்ப்பு வெறுப்பை வளர்க்கிறது, அதே நேரத்தில் ஒரு வெகுஜன போர் எதிர்ப்பாளர் என்பதாக போலியாகவும் காட்டிக்கொள்கிறது.

மத்திய கிழக்கில் ஒரு பேரழிவுப் போர் மற்றும் நவ பாசிசத்தின் எழுச்சியின் பின்னால் கிட்டத்தட்ட முழு அரசியல் ஸ்தாபனமும் அணிவகுத்து நிற்பது, போர்கள் ஏதோ ஒரு சில முதலாளித்துவ அரசியல்வாதியின் தவறான கொள்கை இல்லை என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது சக்திவாய்ந்த வர்க்க சக்திகளின் இயக்கத்தைப் பிரதிபலிப்பதோடு, மேலும் ஒரு அடிப்படையிலும் மற்றும் தீர்க்க முடியாதவகையிலான மோதலை ஆளும் உயரடுக்கின் அனைத்து நிறுவனங்களுடன் ஒரு புரட்சிகர நெருக்கடி வெளிப்பட்டிருப்பதைத்தான் தொழிலாள வர்க்கம் தன்னுள் காண்கிறது.

முழு முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியலும், அதற்கு நெருக்கமான மிக வசதி படைத்த மத்தியதர வர்க்கத்தின் போலி இடது பிரிவுகளுடைய அரசியலும், வலதின் வெகு தொலைவிற்குச் சென்றுள்ளன. அவைகள் இப்பொழுது ஏகாதிபத்திய கொள்ளைப் போர்களை, முக்கியமாக தங்களுடைய சமூக அந்தஸ்தை உறுதிப்படுத்துபவையாக காண்கின்றன.

இது, பிரெஞ்சு முதலாளித்துவமும் மற்றும் NPA போன்ற சக்திகளும் 2011 ம் ஆண்டு லிபியப் போருக்கு வழங்கிய ஆதரவில் இருந்து, அப்பொழுது லிபியாவின் எண்ணெய் வயல்கள் கைப்பற்றப்பட்டன, சர்வதேச வங்கிகள் லிபியாவின் எண்ணெய் வயல்களின் வருமானங்களான பல பில்லியன்களை கைப்பற்றிக்கொண்டன.

ஆளும் உயரடுக்கு தங்களால் தீர்வு காணமுடியாத ஆழமான சமூகப் பொருளாதாரப்  பிரச்சினைகளுக்கு பயனுடைய திசைதிருப்பலாக போரைக் காண்கிறது. பொருளாதார நிபுணரான Jean Paul Fitoussi சமீபத்தில் Libération இடம் கூறியதாவது, “கிரேக்கம், ஸ்பெயின், இத்தாலியில் கூட வெடிப்புத்தன்மையுடைய வேலையின்மை அளவு ஏற்பட்டுள்ள நிலையில் ஐரோப்பா முடிவில்லாத கீழ்நோக்கிய சரிவில் ஆழ்கிறது. இளைஞர்களில் 60 சதவிகிதத்தினருக்கு வேலைகள் இல்லை என்றால், ஜனநாயகம் தப்பிப் பிழைக்க முடியுமா? இதையொட்டி ஒவ்வொரு மாதமும் சமூக வெடிப்பு ஏற்படக்கூடிய தன்மை அதிகமாகிறது.”