சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Snowden Pulitzer

ஸ்னோவ்டென் புலிட்சர் விருது

Patrick Martin
18 April 2014

Use this version to printSend feedback

முன்னாள் NSA ஒப்பந்ததாரரும், அதன் இரகசியங்களை வெளியிட்டவருமான எட்வார்ட் ஸ்னோவ்டெனால் கசியவிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையால் (NSA) சட்டவிரோதமாக மற்றும் அரசியலமைப்பிற்கு முரணாக உளவு பார்க்கப்பட்டதன் மீதான செய்திகளை வெளியிட்ட இரண்டு இதழ்களுக்கு, பொதுச் சேவைக்கான புலிட்சர் தங்கப் பதக்க விருது திங்களன்று வழங்கப்பட்டது.

அமெரிக்க கார்டியன் மற்றும் வாஷிங்டன் போஸ்டிற்கும், அந்த கட்டுரைகளை வெளியிட்ட நான்கு இதழாளர்களுக்கும்—Glenn Greenwald, Laura Poitras, Ewan MacAskill மற்றும் Barton Gellman—அந்த விருது வழங்கப்பட்டுள்ள போதினும், ஸ்னொவ்டனே முக்கியமாக கௌரவிக்கப்பட வேண்டியவர் என்பதன் மீது அங்கே எந்த கேள்வியும் இல்லை. ரஷ்யாவில் தற்போது தஞ்சமடைந்துள்ள அந்த 30 வயதினர், ஆயுள்கால சிறைதண்டனை அல்லது மரண தண்டனையையே கூட கொண்டு வரக்கூடிய, தேசத்துரோக வழக்குகளில் அமெரிக்காவால் தேடப்பட்டு வருகிறார்.

ஒபாமா நிர்வாகமும் அமெரிக்க உளவுத்துறை எந்திரங்களும் சுமார் ஓராண்டாக அவை ஸ்னோடெனைக் குற்றஞ்சாட்டி வந்தன என்பதோடு, அவர் கசிய விட்ட ஆவணங்கள் அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு கணக்கில்லா சேதத்தை ஏற்படுத்தி இருந்ததாக அவை அறிவித்திருந்த நிலையில், கொலாம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் புலிட்சர் விருதுக்கு 19 இதழியலாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களின் ஒரு கமிட்டி வாக்களித்ததில் இருந்து, ஒபாமா நிர்வாகமும் அமெரிக்க உளவுத்துறை எந்திரங்களும் ஏறக்குறைய முழு மௌனம் காத்துள்ளன.

அதேபோல பெரும்பாலும் அமெரிக்க ஊடகங்களும், ஓர் ஆழ்ந்த மவுனம் காத்துள்ளன. ஸ்னோவ்டென் வெளியீடுகளுக்கான புலிட்சர் விருது மீது அங்கே வெகு குறைந்த விவாதங்களே உள்ளன. பத்திரிகையாளர்களுக்கான வெள்ளை மாளிகை செயலர் ஜே கார்னேயின் பத்திரிகையாளர் சந்திப்பிலோ அல்லது வியாழனன்று மதியம் ஒபாமாவின் பத்திரிகையாளர் கூட்டத்திலோ எந்தவொரு இதழாளரும் அந்த விடயத்தை முன்னுக்குக் கொண்டு வரவில்லை.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பழமைவாத கட்சி அங்கத்தவரும், முன்னாள் இராணுவ வெளியுறவு விவகார செயலருமான லியாம் ஃபாக்ஸின் ஒரு கட்டுரை, குறிப்பிடத்தக்க விதத்தில் விதிவிலக்காக செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் பிரசுரமானது. இந்த வக்கிரமான, மிரட்சியூட்டும் கட்டுரை துல்லியமாக அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் உள்ள ஆளும் வட்டாரங்களின் மற்றும் அரசியல் ஸ்தாபகங்களில் செல்வாக்கு செலுத்துவோரின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கிறது. (ஸ்னோவ்டெனால் வழங்கப்பட்ட ஆவணங்களோடு கூடிய ஹார்ட் டிஸ்குகளை கார்டியன் அழிக்க வேண்டுமென நிர்பந்தித்தும், அதன் பின்னர் கிரீன்வால்டின் கூட்டாளி டேவிட் மிராண்டாவை பயங்கரவாத தடுப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யுமளவிற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் சென்றிருந்தது.)

"ஸ்னோவ்டெனும், அவருக்கு உடந்தையாய் இருப்பவர்களும்" என்ற தலைப்பில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஃபாக்ஸ் எழுதுகிறார்: “எட்வார்ட் ஸ்னோவ்டென் தன்னை தானே ஒரு இணையவழி கொரில்லா போராளியாக கருதுகிறார், ஆனால் உண்மையில் அவர் சுயமாக- விளம்பரப்படுத்திக்கொள்ளும் நாஜிசிசவாதி (narcissist) ஆவார்." “ஒரு முறையாவது, நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நாம் கூறிவிட வேண்டும். அதாவது, அதை நாம் தேசதுரோகம் என்ற அதன் பெயரில் அழைக்கிறோம்," என்று குறிப்பிட்டு முடித்திருந்தார்.

ஸ்னோவ்டெனைக் கொல்ல அமெரிக்க உளவுத்துறை முகவர்களால் பரவலாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதோடு சேர்ந்து, அவரை வழக்கு விசாரணைக்கு உட்படுத்துவது மற்றும் சாத்தியமானால் படுகொலை செய்வது ஆகியவற்றோடும் அவர் மிரட்டப்பட்டார், மேலும் காங்கிரஸில் இருந்த ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினர் ஒன்றுபோல அவர் இரத்தத்திற்காக அலைந்து கொண்டிருந்தனர். புலிட்சர் விருதுகள் குறித்த ஊடக செய்திகளில் இந்த மரண அச்சுறுத்தல்கள் குறித்து எந்தவொரு குறிப்பும் இடம் பெறவில்லை அல்லது வெள்ளை மாளிகையிடம் பகிரங்கமாக ஒருபோதும் எந்தவொரு கேள்வியும் எழுப்பப்படவில்லை.

மொத்தமாக அமெரிக்க மக்கள் உட்பட — ஒட்டுமொத்த உலகையும் அமெரிக்க அரசாங்கம் மூர்க்கமாக உளவு பார்த்தமை மீதோ அல்லது அத்தகைய சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர்கள் மீது உத்தியோகபூர்வமாக வழக்கு தொடுத்தன் மீதோ அங்கே எந்தவொரு நடவடிக்கையும் தேவையில்லை என்பதையே இந்த மவுனம் அடிக்கோடிடுகிறது.

தேசிய பாதுகாப்பு முகமை ஒட்டுமொத்த உலகின் இணைய மற்றும் தொலைதொடர்பு தகவல் பரிவர்த்தனைகளைத் திட்டமிட்டு இடைமறித்து கைப்பற்றி, அவற்றை எண்ணற்ற நவீன நிரல்களைக் கொண்டு பிரித்து, அழைப்பின் வகை மற்றும் அதனோடு தொடர்புபட்ட வலையமைப்புகளைப் பகுப்பாய்வு செய்து வந்ததை ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தினார். மின்னஞ்சல், குறுந்தகவல், சமூக ஊடகப் பதிவு, இணைய தேடல் அல்லது தொலைபேசி அழைப்பு என தகவல் எந்தவொரு ஊடகத்தில் இருந்தாலும், அதனை NSAஆல் ஆய்வுக்குட்படுத்த முடியும். மேலும் உலகெங்கிலும் உள்ள கணினி அமைப்புமுறைகளை அணுக அது திட்டமிட்டு இணையத்திற்குள் பலவீனமான குறைபாடுகளை உருவாக்கி, அதை சுரண்டிக் கொள்கிறது.

இந்த உத்திகள், ஒருசில விரல்விட்டு எண்ணத்தக்க இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளைத் துரத்தி பிடிப்பதற்காக அல்ல, மாறாக சர்வாதிகார ஆட்சிக்கான உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்திற்காக, வெளிப்படையாக பில்லியன் கணக்கான மக்களின் அரசியல் கண்ணோட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மீது பரந்த தகவல் சேமிப்புகளை உருவாக்க, அமெரிக்க உளவுத்துறை எந்திரத்திற்கு வாய்ப்பளித்துள்ளன. உலகின் எந்தவொரு நாட்டிலும், குறிப்பாக அமெரிக்காவிற்குள்ளேயே கூட, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான அரசியல் எதிர்ப்பின் மீது ஒரு பொலிஸ் அரசு ஒடுக்குமுறையைச் செலுத்துவதற்கான ஆவண தொகுப்புகளை மற்றும் கைது பட்டியல்களை NSAஆல் வழங்க முடியும்.

இது ஏனென்றால் அமெரிக்க மக்கள் உட்பட உலக மக்கள் தொகையின் பரந்த பெரும்பான்மையினர் அதற்கு விரோதமாகவும், ஸ்னோவ்டெனுக்கு ஆதரவாகவும் உள்ளனர் என்பதையும், ஒட்டுமொத்தமாக இந்த பாரிய உளவுவேலையின் ஜனநாயக-விரோத மற்றும் சர்வாதிகார குணாம்சத்தை அவர்கள் உணர்ந்துள்ளனர் என்பதாலும் ஆகும். அரசாங்கம் மற்றும் ஊடகங்களின் இடைவிடாத பிரச்சார பரப்புரைகளுக்கு இடையிலும், அமெரிக்க கருத்துக்கணிப்புகளில் பெரும்பான்மையினர் தெளிவாக NSAஐ அம்பலப்படுத்திய ஸ்னோவ்டெனின் நடவடிக்கைகளை ஆதரித்துள்ளனர்.

புலிட்சர் விருது இந்த மக்கள் உணர்வை அங்கீகரிப்பதாக உள்ளதோடு, அது ஒபாமா நிர்வாகம் மற்றும் உளவுத்துறை எந்திரத்திற்கு ஒரு பின்னடைவாக உள்ளது.

பெரும்பாலான புலிட்சர் தங்கப் பதக்கங்கள், உள்ளூர் அரசாங்கத்தின் அல்லது பொலிஸ் படைகளின் ஊழல்களை வெளிக் கொணர்ந்து காட்டியமைக்காக அல்லது குறிப்பாக நிலக்கரி சுரங்கம், விவசாயம் மற்றும் மருத்துவமனைகள் போன்ற தொழில்துறைகளில் தொழிலாளர்கள் மீதான அல்லது சுற்றுச்சூழல் மீதான மோசமான துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தியமைக்காக செய்தியிதழ்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஒருசில சமயங்களில், 1972இல் பெண்டகன் ஆவணங்களை பிரசுரித்தமைக்காக நியூ யோர்க் டைம்ஸிற்கு வழங்கப்பட்டபோதும், மற்றும் 1973இல் வாட்டர்கேட் விவகாரத்தில் அதன் புலனாய்வுகளுக்காக வாஷிங்டன் போஸ்டிற்கு வழங்கப்பட்டபோதும், அந்த தங்கப் பதக்கம் பரந்த அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

எட்வார்ட் ஸ்னோவ்டென் அந்த விருதுக்கு விடையிறுப்பாக வழங்கிய ஓர் அறிக்கையில், “இந்த முடிவானது, ஒரு தனிநபரின் மனசாட்சியால் மாற்ற முடியாததைக் கூட, சுதந்திரமான ஒரு பத்திரிகையால் மாற்ற முடியும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த இதழ்களின் அர்பணிப்பு, உத்வேகம், திறமை இல்லையென்றால் என்னுடைய முயற்சிகள் எல்லாம் அர்த்தமற்றவையாக இருந்திருக்கும். மேலும் நம்முடைய சமூகத்திற்கு அவர்களின் அசாதாரண சேவையை வழங்கியமைக்காக நான் அவர்களுக்கு எனது நன்றியையும், மரியாதையும் தெரிவிக்கிறேன். அவர்களின் வேலைகள் நமக்கு ஒரு நல்ல எதிர்காலத்தையும், இன்னும் அதிகமாக கணக்கில் எடுத்து பார்க்கக்கூடிய ஜனநாயகத்தையும் வழங்கியுள்ளது," என்று அறிவித்தார்.

ஸ்னோவ்டெனின் கண்ணோட்டங்களில் உள்ள நேர்மையில் குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை, அதற்காக அவர் ஏற்கனவே நிறைய தியாகங்களைச் செய்துள்ளார். ஆனால் அவர் வெளியிட்டவை, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு ஒரு முக்கிய தூண்டுதலை மட்டுமே வழங்கி உள்ளது. பொலிஸ் அரசு ஆட்சி முறைகளின் அபிவிருத்திக்கான அடிப்படை ஆதாரங்களைக் கண்டறிவதே மைய பிரச்சினையாகும், அதுவாவது: நிதியியல் பிரபுத்துவத்திற்கும், உழைக்கும் மக்களின் பரந்த பெரும்பான்மைக்கும் இடையே அதிகரித்து வரும் சமூக பிளவாகும். பகுப்பாய்வின் இறுதியாக, இந்தளவிற்கு பரந்த மற்றும் முன்பில்லாத அளவிற்கு அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை கொண்ட ஒரு சமூகத்தில், ஜனநாயகம் பொருத்தமற்று உள்ளது.

சமூக சமத்துவமின்மை முதலாளித்துவத்தின் ஒரு விளைபொருளாகும். தொழிலாள வர்க்கத்தின் பாரிய சமூக எதிர்ப்பெனும் அச்சுறுத்தலுக்கு எதிராக பெருநிறுவன-நிதியியல் பிரபுத்துவத்தை காப்பாற்ற அரசின் ஒடுக்குமுறை சக்திகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, இலாப அமைப்புமுறையை முடிவுகட்ட மற்றும் உண்மையான ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தை ஸ்தாபிக்க, வேறு வார்த்தைகளில், ஒரு சோசலிச சமூகத்தை உருவாக்க தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் ஐக்கியம் அவசியமாகும்.

கட்டுரை ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

எட்வார்ட் ஸ்னோவ்டெனை பாதுகார்!