சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : 

Attend the International May Day Online Rally!

சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் பங்கெடுங்கள்!

By Joseph Kishore
22 April 2014

Use this version to printSend feedback

ஞாயிறன்று, மே 4இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், உலக சோசலிச வலைத் தளமும் சர்வதேச மே தின இணையவழி கூட்டமொன்றை நடத்துகின்றன. நாங்கள் எங்களின் அனைத்து வாசகர்களையும் அதற்காக பதிவு செய்யவும், அதில் பங்கெடுக்க திட்டமிடுமாறும் அழைப்பு விடுக்கிறோம்.

இந்த இணையவழி கூட்டத்திற்கு முன்கூட்டிய வாரங்களில் நிகழ்ந்து வருகின்ற சம்பவங்களே அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிடுகின்றன. முதலாம் உலக யுத்தம் தொடங்கி ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும், இரண்டாம் உலக யுத்தம் தொடங்கி 75 ஆண்டுகளுக்குப் பின்னரும் உலகளாவிய யுத்த அபாயம் மீண்டுமொருமுறை மனித குலத்தின் மீது படருகின்றது.

உக்ரேனில் ஒரு வலதுசாரி ஆட்சி சதியை ஒழுங்கமைத்த அமெரிக்கா மற்றும் ஜேர்மனி, திட்டமிட்டு ரஷ்யாவிற்கு எதிரான பதட்டங்களைத் தூண்டிவிட இந்த நெருக்கடியை பயன்படுத்தி வருகின்றன. அவை உலக வரலாற்றின் முந்தைய பிரளயகரமான காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட முறைகளான முடிவில்லா ஊடக பிரச்சாரங்கள் மற்றும் பொய்கள், இராஜாங்கரீதியிலான ஆத்திரமூட்டல்கள், பாசிச சக்திகளை பயன்படுத்துவதை கையாண்டு வருகின்றன.

ஜெனிவாவில் கையெழுத்தான ஓர் இராஜாங்க உடன்படிக்கையை ரஷ்யா மீறிவிட்டதாக குற்றஞ்சாட்ட, இந்த வாரம், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பேடன் கியேவில் உள்ள வாஷிங்டனின் கைப்பாவை ஆட்சிக்கு விஜயம் செய்துள்ளார். மேலதிக பொருளாதார தடைகளோடு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றன. ரஷ்ய எல்லையோரத்தில் அமைந்துள்ள பால்டிக் அரசுகளின் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி படைகளை பலப்படுத்த நேட்டோ இராணுவ கூட்டணி திட்டங்களை அறிவித்துள்ளது. அமெரிக்க தரைப்படை துருப்புகள் போலந்திற்கு அனுப்பப்பட உள்ளன.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம், கிழக்கு ஐரோப்பாவை ஒரு வெடிமருந்து கிடங்காக மாற்றி வருகின்றன. முன்னர் எது சாத்தியமற்றதென அறிவிக்கப்பட்டதோ அதாவது ரஷ்யாவுடன் அணுஆயுதமேந்திய ஒரு நேரடி யுத்தம் அது இப்போது ஆளும் வர்க்க அரசியல் வட்டாரங்களில் பகிரங்கமாக விவாதிக்கப்படுகின்றன. மக்களிடையே நிலவும் பாரிய யுத்த எதிர்ப்பானது, அச்சமூட்டல்கள், பொய்கள் மற்றும் ஒடுக்குமுறையை கொண்டு, கடந்து செல்லக்கூடிய வெறுமனே ஒரு தடையாக பார்க்கப்படுகிறது.

உக்ரேனில் மேற்கத்திய இராணுவ நடவடிக்கை, "ரஷ்யாவுடன் முழுஅளவிலான யுத்தத்திற்கு" இட்டுச் செல்லக்கூடுமென பிரிட்டிஷ் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில், புஷ் நிர்வாகத்தின் ஒரு முன்னாள் உயரதிகாரியும், தேசிய நலன்களுக்கான மையத்தின் நிர்வாக இயக்குனருமான போல் சவுன்டர்ஸ், “ரஷ்யாவுடன் யுத்தம் வேண்டாம்? அந்தளவு நிச்சயமாக இருக்காதீர்கள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். "ஒரு தொடர் அபாயகரமான தவறான ஊகங்களை அடித்தளமாகக்கொண்டு" அவ்வாறான ஒரு மோதல் சாத்தியமில்லை என்ற கருத்துக்களை பற்றி அவர் குறிப்பிட்டார்.

மனிதகுலம் அளப்பரிய ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளால் தொடுக்கப்படும் ஒரு யுத்தமானது, உலக வரலாற்றில் அணுஆயுதமேந்திய சக்திகளுக்கிடையிலான முதல் நேரடி மோதலாக இருக்கும். அதுபோன்றவொரு மோதலில் எத்தனை பத்து அல்லது நூறு மில்லியன் கணக்கான மக்கள் மரணமடையவேண்டியிருக்கும்? ஆளும் வர்க்கம் இப்போது இந்த பாதையில் தலைமையேற்று சென்று கொண்டிருப்பதானது, அதன் வரலாற்று திவால்நிலைமைக்கு தீர்க்கமான நிரூபணமாகும்.

ரஷ்யா மட்டுமே ஒரே இலக்கு அல்ல. கியேவிற்கு துணை ஜனாதிபதி ஜோசப் பிடன் சென்றுள்ள நிலையில், ஜனாதிபதி ஒபாமா சீனாவிற்கு எதிரான "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" மறுஉறுதிப்படுத்தும் ஒரு விஜயமாக எதிர்திசையில் சென்று கொண்டிருக்கிறார். இதற்கிடையில், மத்திய கிழக்கில் அதன் மேலாதிக்க நோக்கங்களை பின்தொடர, ஒபாமா நிர்வாகம் கடந்த வாரயிறுதியில் யேமன் மீது மூன்று டிரோன் ஏவுகணைகளை செலுத்தி 55 பேரை கொலை செய்தது.

ஓர் உலக யுத்தம் வெடிப்பதற்கான வடிவத்தையோ, நேரத்தையோ துல்லியமாக தீர்மானிக்க முடியாது. ஆனால் அது ஏகாதிபத்திய கொள்கையின் தர்க்கமாக உள்ளது.

ஆளும் வர்க்கம் அதன் சமூக அமைப்புமுறையான முதலாளித்துவத்தின் நெருக்கடியிலிருந்து வெளியே வர எந்த வழியையும் காணவில்லை என்பதால் அது இதுபோன்ற கொடூரமான வழியைப் பின்பற்றி வருகிறது. வெளியுறவு கொள்கையும் உள்நாட்டு கொள்கையும் பிரிக்கவியலாதபடிக்கு பிணைக்கப்பட்டுள்ளன. ஏகாதிபத்தியம் ஒவ்வொரு கட்டத்திலும் பிற்போக்குத்தனமானது என்று லெனின் குறிப்பிட்டார். அன்னிய நாட்டைச் சூறையாடும் யுத்தம், உள்நாட்டை சூறையாடுவதுடன் இணைந்துவருகின்றது.

அமெரிக்காவில் தொடங்கி உலகெங்கிலும் பரவிய 2008 நிதியியல் நெருக்கடி ஏற்பட்டு இப்போது ஐந்தரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கிடைப்பட்ட ஆண்டுகளில், பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் அரசியல் பிரதிநிதிகள் தொழிலாள வர்க்கத்தின் மீது கண்மூடித்தனமான சிக்கன நடவடிக்கைகளை திணித்த அதேவேளையில், நிதியியல் பிரபுத்துவத்திற்கு முடிவில்லாமல் பணத்தை வழங்கி பெரும் செல்வ வளத்தை அடியிலிருந்து மேல்மட்டத்திற்கு மறுபகிர்வு செய்வதற்கான சந்தர்ப்பமாக அதை கைப்பற்றி உள்ளனர்.

அதனொரு விளைவாக, உலகளாவிய சமூக சமத்துவமின்மை முன்னொருபோதும் இல்லாதளவிற்கு உயர்ந்துள்ளது. இப்போது 85 பெரும் பணக்காரர்களின் ஒட்டுமொத்த செல்வத்தின் மதிப்பு, நாளொன்று 2.50 டாலரை விட குறைவான தொகையில் வாழும் 3.5 பில்லியன் ஏழை மக்கள் (உலக மக்கள்தொகையில் பாதி) கொண்டிருப்பதை விட அதிகமாகும். உலக முதலாளத்துவத்தின் மையமாக விளங்கும் அமெரிக்காவில், வறுமை, ஏழ்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை பாரிய தனிச்சிறப்புகளாக மிளர்கின்றன. உலக சோசலிச வலைத் தளத்தால் அறிவிக்கப்பட்டதைப் போல, ஆறு அமெரிக்கர்களில் ஒருவர் 2012இல் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் போதிய உணவின்றி இருந்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய-சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டங்களை நடைமுறைப்படுத்தும் கட்டளைகளின் கீழ், கிரீஸ் மற்றும் ஸ்பெயின் மக்கள்தொகையில் கால் பகுதியினர் உத்தியோகபூர்வ வேலையின்மையில் இருப்பதோடு சேர்ந்து, ஐரோப்பாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.

இந்த முறைமைகள் எதையும் தீர்த்துவிடவில்லை. உலக பொருளாதாரம் மந்தநிலை மற்றும் தேக்கநிலையில் சிக்கியுள்ளது. திரும்பி செலுத்தவியலா பெரும் கடன்கள் திரண்டுள்ளன. புதிய ஊக குமிழிகள் ஊதிபெருத்து நிற்கின்றன, அவை 2008 பொறிவை விட பெரிதாக உள்ளன.

சமூக பதட்டங்களை திசை திருப்புவதும், உள்நாட்டு எதிரிகளை விட வெளிநாட்டு விரோதி எனக்கூறப்படுபவற்றின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவதுமே முடிவில்லா யுத்தங்களினதும் மற்றும் யுத்த அச்சுறுத்தல்களின் முதன்மை செயல்பாடாக உள்ளன. மேலும் ஜனநாயக உரிமைகள் மீது இன்னும் மேலதிகமான தாக்குதல்களை நடத்துவதற்கான ஒரு போலிக்காரணமாகவும் யுத்தம் சேவை செய்கிறது. ஏற்கனவே, அமெரிக்கா தலைமையிலான ஆளும் வர்க்கம், ஓர் உலகளாவிய பொலிஸ்-அரசு கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளதுயுத்தம் மற்றும் சமூக எதிர்புரட்சி கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் மற்றும் அனைத்து எதிர்ப்பையும் இலக்கில் வைத்து சர்வதேச உளவுத்துறை எந்திரத்தை உருவாக்கி வைத்துள்ளது.

சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஒரு முன்னோக்கிய பாதையை உருவாக்குவதற்குரிய ஒரே சமூக சக்தியாகும். இருந்தபோதினும், அவ்வாறு செய்வதற்கு, ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில், “யுத்த வரைபடத்தைப் பின்தொடர்வதல்ல, மாறாக வர்க்க போராட்டத்தின் வரைபடத்தை தொடர்வது" அவசியமாகும் அதாவது, சர்வதேச சோசலிச புரட்சியின் மூலமாக ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகும்.

முதலாளித்துவம் தோற்றுவிட்டது. பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகளிடம் முறையிடுவதன் மூலமாக அல்ல, மாறாக ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஒரு சுயாதீனமான அரசியல் தலைமையை மற்றும் அமைப்பை ஸ்தாபிப்பதன் மூலமாகவே தொழிலாள வர்க்கம் திருப்பித் தாக்க முடியும்.

மே தின இணையவழி கூட்டம் இந்த போராட்டத்தின் ஒரு முக்கிய படியாகும். அதன் மையத்திலுள்ள கருத்துரு என்னவென்றால், ஒவ்வொரு நாட்டின் தொழிலாள வர்க்கமும், ஓர் ஒருங்கிணைந்த, உலகளாவிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மட்டுமே முதலாளித்துவத்திற்கு எதிராக போராட முடியும் என்பதாகும். இந்தக் கூட்டம், இணைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு தேசியத்தினதும், இனத்தினதும் மற்றும் மக்கட்பிரிவினதும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு பொதுவான கூட்டத்தில், ஒரு பொதுவான விவாதத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு முன்னுதாரணமற்ற வாய்ப்பை வழங்குகிறது.

மே தினத்தின் புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேசிய பாரம்பரியங்களை மீட்டெடுப்பது அவசியமாகும்! இந்த உண்மையான வரலாற்று நிகழ்வில் மே 4 அன்று எங்களோடு இணையுங்கள். இன்றே internationalmayday.org இல் பதிவு செய்யுங்கள்.