சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

150,000 protest in London against Israel’s siege of Gaza

இஸ்ரேலின் காசா முற்றுகைக்கு எதிராக லண்டனில் 150,000 பேர் கலந்து கொண்ட போராட்டம்

By Paul Bond
11 August 2014

Use this version to printSend feedback

இஸ்ரேலிய இராணுவத்தின் காசா முற்றுகைக்கு எதிராக பிரிட்டனில் நடந்த இன்று வரையிலான ஆர்ப்பாட்டங்களிலேயே மிகப்பெரிய ஒன்று சனியன்று நடைபெற்றது. பிரிட்டன் எங்கிலும் இருந்து வந்திருந்த மக்கள் பிபிசி இன் தலைமையிடத்திலிருந்து ஹைட் பூங்கா வரையில் சென்ற பேரணியில் கலந்து கொண்டார்கள். பத்து ஆயிரக் கணக்கான" போராட்டக்காரர்கள் கலந்து கொண்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டன, ஆனால் ஏற்பாட்டாளர்களின் மதிப்பீட்டின்படி 150,000க்கு நெருக்கமாக இருந்தது.



லண்டனின் ஆக்ஸ்போர்ட் வீதி வழியாக கடந்து செல்லும் பேரணி

Stop the War கூட்டணி மற்றும் பாலஸ்தீன ஒற்றுமை இயக்கம் (Palestine Solidarity Campaign - PSC) உட்பட எட்டு அமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அந்த ஆர்ப்பாட்டம், காசா மீது இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச அளவிலான ஒரு நாள் போராட்டங்களின் பாகமாக இருந்தது. தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் குறைந்தபட்சம் 50,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர், அதேவேளையில் பிரெஞ்சு ஆணையங்களால் கூடுதலாக தடை விதிக்கப்பட்டிருந்ததற்கு இடையிலும் பாரீசில் ஆயிரக் கணக்கானவர்கள் அணிவகுத்து சென்றனர். ஸ்பெயின், கிரீஸ், மற்றும் ஆஸ்திரேலியா எங்கிலும், மற்றும் இந்தியாவில் பெங்களூரிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மாஞ்செஸ்டரின் ஈடன்பேர்க்கின் நகரங்களிலும் மற்றும் அயர்லாந்து தலைநகரம் டப்ளினிலும் போராட்டங்கள் நடந்தன.

லண்டன் போராட்டத்தின் அளவு, காசா மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர வன்முறைக்கு மக்களின் பரந்த பிரிவுகளிடையே இருந்த சீற்றத்தை எடுத்துக்காட்டியது. “பாலஸ்தீனத்தை விடுவி விடுவி," “ஒவ்வொரு கட்டிடக்கல்லில் இருந்தும், ஒவ்வொரு சுவற்றில் இருந்தும், இஸ்ரேலிய இனக்கொள்கை நீக்கப்பட வேண்டும்" என்று போராட்டக்காரர்கள் கூச்சலிட்டார்கள். அந்த போராட்டத்திற்கு வழிநெடுகிலும் பரந்த ஆதரவு இருந்தது, தேனீர் விடுதி பணியாளர்கள் தாகத்தை தணிக்க போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் வழங்கினார்கள்.


பிபிசி தலைமையிடத்திற்கு வெளியே கூடியிருந்த அந்த பேரணி

இஸ்ரேலிய தூதரகத்தின் ஒரு செய்தி தொடர்பாளர் பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனத்திடம் (பிபிசி) கூறுகையில், அந்த போராட்டத்தால் அவர்களுக்கு "எந்தவொரு பிரச்சினையும் இல்லை" என்றார், ஆனால் பின்னர் அந்த பேரணியை அவர் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக அடையாளப்படுத்தினார். "இங்கிலாந்தில் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு அமைப்பிற்கு [ஹமாஸ்] அம்மக்கள் ஆதரவை வெளிப்படுத்துவதை அவர்கள் எதிர்ப்பதாகவும், அந்த அமைப்புத்தான் காசாவின் வளமைக்கு முக்கிய தடையாக இருப்பதாகவும்" அந்த செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

அந்த பேரணியில் பல யூத பேச்சாளர்கள் இருந்த போதினும் கூட, ஊடகங்களோ அரபு மற்றும் யூத தொழிலாளர்களுக்கு இடையே விரிசலை ஏற்படுத்துவதற்காக "யூத-பாதுகாப்புவாத விரோத" அச்சங்களைத் தூண்டிவிட முயன்றன.

அந்த பேரணிக்கு முன்னரும் பின்னரும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகள், அந்த போராட்டங்களுக்குத் தலைமை அளித்தவர்களின் திவாலான முன்னோக்கை எடுத்துக்காட்டின, அவர்கள் அரச சொத்து விற்பனை மற்றும் பொருளாதார தடைகள் மீதான ஒத்துழையாமை இயக்கத்தின் (Boycott, Divestment and Sanctions - BDS) முட்டுச்சந்து மூலமாக இங்கிலாந்து அரசாங்கத்தினது வெளியுறவு கொள்கையை மாற்றும் முயற்சிகளுக்குப் பின்னால் அதிகரித்துவரும் கோபத்தை அடைக்க முனைந்திருந்தார்கள். இஸ்ரேலிய துருப்புகளால் எந்தளவிற்கு யுத்த குற்றங்கள் நடத்தப்பட்டிருந்தன என்பது அங்கே ஒப்புக் கொள்ளப்பட்ட போதினும், மற்றும் இஸ்ரேலுக்கு இராணுவ ஆயுதங்கள் விற்பதை முடிவுக்குக் கொண்டு வரும் அழைப்புகள் இருந்த போதினும் கூட, பேரணியின் இறுதிக்கட்டத்தின் பெரும்பகுதி வரவிருக்கின்ற அடுத்த ஆண்டின் பொது தேர்தலுக்காக பிரதான கட்சிகளின் அரசியல் உபாயங்களுக்கு இடங்கொடுப்பதாக இருந்தது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக பிபிசி ஒருதலைபட்சமான செய்திகளை வழங்குவதன் மீதும் மற்றும் சர்வதேச போராட்டங்களை அது அவமதிப்பதன் மீதும் கவனத்தை ஈர்க்க, போர்ட்லாந்தில் உள்ள பிபிசி இன் தலைமையிடத்திற்கு வெளியே அந்த போராட்டம் ஒன்றுகூடியது.

அந்த பேரணிக்கு முன்னதாக கூட்டத்திடையே உரையாற்றிய பேச்சாளர்களில் பலர், முக்கியமாக தொழிற்சங்க நிர்வாகிகள், தெளிவாக ஏற்பாட்டாளர்களுக்கு நிகழ்ச்சிநிரலை அமைத்துக் கொடுத்தார்கள். ரயில் ஓட்டுனர்களின் தொழிற்சங்கமான ASLEF மற்றும் Unite இல் இருந்து வந்திருந்த பேச்சாளர்கள் BDSக்கு ஆதரவளிக்குமாறு அழைப்புவிடுத்தார்கள்.

போலி-இடதான சோசலிச தொழிலாளர் கட்சியினது (SWP) ஒரு முன்னாள் முன்னணி உறுப்பினரான Stop the War இயக்கத்தின் கிறிஸ் நைன்ஹாமும், Unison இன் ஜீன் பட்சரும் இருவருமே ஏற்பாட்டாளர்களின் பிரதான அபிலாஷையைக் குறிப்பிட்டார்கள். Stop the War போராட்டத்திற்கான அவர்களின் அழைப்பில், நாடாளுமன்றத்தின் விடுமுறையைக் கலைத்து விட்டு அதை மீண்டும் கூட்ட வேண்டுமென்பது அவர்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சிரியாவில் குண்டுவீச வேண்டுமென்று கடந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது தொடர்பாக Stop the War குறிப்பிடுகையில், வெளியுறவு கொள்கை பிரச்சினைகளின் மீது பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திற்கு ஆலோசகர்களாக அதிகளவில் செயல்படுவதே அவர்களின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டிருந்தது. பட்சர் வலியுறுத்துகையில், “நம்முடைய சொந்த அரசாங்கம்" “குறிப்பிட்ட மட்டத்திற்கு பொறுப்பேற்க" வேண்டியதிருக்கிறது என்றார்.

அவரது பங்கிற்கு நைன்ஹாம் கூறுகையில், அரசாங்கத்தின் முன்னணி பிரமுகர்களில் ஒருவரான பேரோனிஸ் வார்சி இராஜினாமா செய்தது உட்பட, இஸ்ரேலுக்கான ஆதரவின் மீது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குள் அபிவிருத்தி அடைந்துவரும் நெருக்கடி, அந்த போராட்டம் இல்லாமல் நடந்திருக்காது என்றார். இந்த போக்கைப் பின்தொடர்வதற்கு யுத்தத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு ஐக்கியத்தையும் விலக்கி வைப்பது அவசியமென்பதை நைன்ஹாம் தெளிவுபடுத்தினார். இதுவொரு பரந்த இயக்கமாகும் என்ற அவர், “ஒட்டுமொத்த பொது சமூகமும்" “மக்கள் சக்தியை" எடுத்துக்காட்டுகிறது என்றார்.

Stop the War கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் SWPஇன் மற்றொரு முன்னாள் முன்னணி பிரமுகருமான லிண்ட்சே ஜேர்மன் கூறுகையில், “நாம் அந்த படுகொலையை முடிவுக்கு கொண்டு வரவும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவும் அழைப்புவிடுத்து வருகிறோம். நம்முடைய அரசாங்கம் காசா மீதான இஸ்ரேலிய முற்றுகைக்கு வழங்கும் அதன் ஆதரவை நிறுத்த நிர்பந்திக்கப்பட வேண்டும்," என்றார்.

அந்த பெண்மணியின் கருத்துக்கள் பொது மற்றும் வர்த்தக சேவைகள் தொழிற்சங்கத்தின் சாராஹ் கோல்போர்னேயால் பேரணியின் முடிவில் எதிரொலிக்கப்பட்டது, அவர் "நாம் வெறுப்படைந்திருக்கிறோம் என்ற சேதியை நம்முடைய அரசாங்கத்திற்கு அனுப்ப" வேண்டியதன் அவசியத்தைக் குறித்து பேசினார். தாராளவாத ஜனநாயகவாதிகள் மற்றும் "பழமைவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் கூட" ஆதரவு கிடைத்திருப்பதை மேற்கோளிட்டுக் காட்டிய அவர், அவர்கள் "ஒவ்வொரு கட்சியிடமிருந்தும்" ஆதரவைப் பெற்றிருப்பதாக தெரிவித்தார். அதே போக்கு தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயான் அபோட்டாலும் எதிரொலிக்கப்பட்டது, அவர், "எல்லா நிறத்திலான பிரிட்டிஷ் மக்களும் எல்லா அரசியல் கட்சிகளும்" ஐக்கியப்பட்டு நின்றிருப்பதை அந்த போராட்டம் எடுத்துக்காட்டுவதாக தெரிவித்தார்.

அந்நாட்டின் கிழக்கில் இருக்கும் மக்களுக்கு எதிராக உக்ரேனிய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஏகாதிபத்திய ஆதரவிலான யுத்தத்தை குறித்தோ, ஈராக் மீதான சமீபத்திய குண்டுவீச்சு குறித்தோ அந்த சொற்பொழிவுகளில் ஏதோ சில இடங்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன. காசாவிற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் அந்த பேச்சாளர்களால் பிரதானமாக ஒரு அறநெறிரீதியிலான பிரச்சினையாக கையாளப்பட்டது. தாராளவாத ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் வார்ட் மற்றும் வாழ்நாள் பெருந்தகை என்ற அடைமொழியைக் கொண்ட பரோனெஸ் ஜென்னி டோன்ஜூம் பேசினர், அதில் வார்ட் BDSக்கு பரிந்து பேசினார். சின் பெய்ன் இயக்கத்தின் ஜெர்ரி ஆடம்ஸ் ஓர் அறிக்கை அனுப்பியிருந்தார் அதில் அவர் பாலஸ்தீனியர்கள் மீதான அதன் "வெட்கக்கேடான மவுனத்தை" முடிவுக்குக் கொண்டு வருமாறு அவர் அயர்லாந்து அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்தார்.

பசுமை கட்சியின் தலைவர் நத்தலி பென்னெட், இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதிகளை நிறுத்துமாறும் மற்றும் மேலதிக இராணுவ கூட்டுறவை நிறுத்துமாறும் அழைப்புவிடுத்தார். “அது செய்யக்கூடியதேயாகும்," என்று தெரிவித்த அவர், பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் லூகாஸ் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அது குறித்து அழைப்பு விடுத்திருப்பதாக தெரிவித்தார். பிரதம மந்திரி டேவிட் கேமரூன் மீது வெறுமனே "அழுத்தம்" அளிப்பதற்கு அவர் அழைப்பு விடுத்த போது, அந்த ஏற்பாட்டாளர்களின் நிலைப்பாட்டை, பென்னெட் தொகுத்தளிப்பதாக இருந்தது.

Stop the War போராட்டத்திற்கான அவர்களது அழைப்பில், தொழிற்கட்சியின் எட் மிலிபாண்ட், கேமரூன் மீது "கடுமையான விமர்சனத்தோடு" வந்திருப்பதாகவும், மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சி தலைவர் நிக் கிளெக் "ஒரு போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும்" உற்சாகத்தோடு எழுதி இருந்தது. அபோட், ருசானாரா அலி, யாஸ்மின் குரேஷி ஆகியோர் உட்பட தொழிற் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தார்கள், கேமரூன் மீது "அழுத்தம்" அளிப்பதற்கு அழைப்புவிடுக்க இவர்களுக்கு ஒரு வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது. அபோட் அதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருந்தார். கடந்த வாரம் கேமரூனின் மந்திரிசபையிலிருந்து இராஜினாமா செய்த பேரோனிஸ் வார்சியைக் குறிப்பிட்டுக் காட்டி கூறுகையில், “அறநெறிரீதியில் நியாயமான ஒரு நிலைப்பாட்டை டேவிட் கேமரூன் எடுக்கும் வரையில் அழுத்தத்தைத் தொடர்வதே" நம்முடைய பணியாகும் என்றார்.

காயமடைந்தவர்களைக் கவனிக்க NHS மருத்துவ குழுக்களை அனுப்பி வருவதாக பாசாங்குத்தனமாக கேமரூன் ஜம்பமடிக்கின்ற நிலைமைகளின் கீழ், பிரிட்டிஷ் அரசாங்க உரிமத்தின் கீழ் ஏற்றமதி செய்யப்பட்ட ஆயுதங்களால் தான் அவர்கள் காயமடைந்திருக்கிறார்கள் என்பதுடன், இதை அந்த பேச்சாளர்களே குறிப்பிடுகின்ற நிலையில், இதற்கெல்லாம் ஒரு தீர்வாக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பல பேச்சாளர்கள் பாலஸ்தீன சூழ்நிலைக்கும், தென்னாபிரிக்காவில் இனவெறிக் கொள்கையின் கீழ் இருந்த சூழ்நிலைக்கும் இடையிலான சமாந்தரங்களை வரைந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்த இனவெறிக் கொள்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை ஒரு புரட்சிகர வெற்றியாக எடுத்துக்காட்டினார்கள், ஆனால் அதற்கு மாறாக அது உலக முதலாளித்துவத்திற்குள் அதன் இடத்தைத் தக்க வைக்க முயற்சித்த முதலாளிமார்களின் ஒரு தந்திரோபாய சூழ்ச்சியாக இருந்தது. தொழிற் கட்சியின் ஆதரவாளர் ஓவென் ஜோன்ஸ் கூறுகையில், இனவெறிக் கொள்கை பலமாக தெரிந்தது, “ஆனால் வீழ்ந்து போனதல்லவா?" என்று கேள்வி எழுப்பினார்.

இனவெறிக் கொள்கை தென்னாபிரிக்க ஆளும் வர்க்கத்திற்கு ஒரு தடையாக இருந்ததாலும் மற்றும் அது முதலாளித்துவத்தைத் தூக்கிவீசுவதை நோக்கி இட்டுச் செல்லக்கூடிய ஒரு சமூக வெடிப்போடு அச்சுறுத்தியதாலும் நீக்கப்பட்டது. இன்று தென்னாபிரிக்க தொழிலாள வர்க்கத்தின் மீது பொலிஸ் வேலை செய்வதற்கும் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகப்படுத்துவதற்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸே முழு பொறுப்பாக உள்ளது. 2012இல் மாரிக்கானாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சுரங்க தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்றதில் ஒத்துழைத்த சுரங்க தொழிலாளர்களின் தொழிற்சங்கம், ANCயுடன் இணைப்பு பெற்ற தொழிற்சங்க அமைப்பான COSATUஐ சார்ந்ததாகும், இது BDS ஒத்துழையாமை இயக்கத்தில் முன்னிலை வகித்து வருகிறது.

அந்த ஒத்துழையாமை இயக்கம் அரசாங்கம் மற்றும் யுத்தத்திற்கு எதிரான போராட்டத்திற்கு இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தை வென்றெடுப்பதன் மீதான எதிர்ப்பை அடித்தளமாக கொண்டுள்ளது. அவர்களின் பொதுவான ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான யூத மற்றும் அரபு தொழிலாளர்களின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை அது தடுப்பதோடு, தடையாகவும் இருக்கிறது. இஸ்ரேலிய அரசாங்கத்தால் பாலஸ்தீனியர்கள் மீது இரக்கமற்ற ஒடுக்குமுறையை மற்றும் அதன் இராணுவவாத தாக்குதலை நடத்த முடிகிறதென்றால், அது யூத-பாதுகாப்புவாதத்திற்கு எதிராக ஒரு சர்வதேச மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தோடு ஆயுதபாணியான ஒரு தொழிலாள வர்க்க தலைமை இல்லாததால் மட்டுமே ஆகும்.

பாலஸ்தீனியர்களுக்கு ஒரு சிறைச்சாலையாக மட்டுமே சேவை செய்யக்கூடிய, ஒரு நீடித்திருக்க முடியாத குட்டி-அரசை உருவாக்குவதன் மூலமாக "இரு-அரசு தீர்வை" மேற்கொண்டு செல்வதே BDS இயக்கத்தை ஊக்குவிப்பவர்களின் நோக்கமாகும்.



பிபிசி தலைமையிடத்திற்கு வெளியில் இருந்த கூட்டத்திற்கு மத்தியில் ஒரு சோ
..க பிரச்சாரகர் உரையாற்றுகிறார்

அரபு மற்றும் யூத தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியமே, சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பிரச்சாரத்தின் மையமாக இருந்தது, அவர்கள் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான, காசா படுகொலை: சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை, என்ற அறிக்கையின் ஆயிரக் கணக்கான நகல்களை வினியோகித்தார்கள். முதலாளித்துவம் மற்றும் யுத்தத்தை முடிவு கட்ட ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் விடுத்திருந்த அழைப்பிற்கு SEP பிரச்சாரகர்கள் ஒரு பெரும் வரவேற்பை வென்றார்கள்.