சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

This week in history: August 11-17

வரலாற்றில் இந்த வாரம்: ஆகஸ்ட் 11-17

Use this version to printSend feedback

25 ஆண்டுகளுக்கு முன்னர்: நியூ யோர்க்கில் வேலை நிறுத்தம் செய்த தொலைபேசித் தொழிலாளி மறியல் போராட்டத்தின் போது கப் வாகனத்தில் இடித்துக் கொல்லப்பட்டார்


எட்வார்ட் "ஜெரி" ஹோர்கன்

1989 ஆகஸ்ட் 15, எட்வார்ட் "ஜெரி" ஹோர்கன் ஏனைய தொழிலாளர்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது NYNEX தொலைத் தொடர்பு தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு எதிராக கருங்காலி வேலை செய்துகொண்டிருந்த, ஒரு உயர்மட்ட முகாமையாளரின் மகள் ஓட்டிவந்த வாகனமே அவரை இடித்துத் தள்ளியது. வேலை நிறுத்தம் தொடங்கி பத்தாவது நாள் இந்த சம்பவம் நடந்தது. சுகாதாரப் பராமரிப்புக்கு ஊதியத்தில் வெட்டிக் குறைத்தல் மற்றும் கூட்டாக செலுத்தும் முறைமையை கம்பனி திணிக்க முற்பட்டதால் வெடித்த இந்த வேலை நிறுத்தத்தில், நியூ யோர்க் மற்றும் கிழக்கு கடற்கரை பகுதி பூராவும் 62,000 தொழிலாளர்கள் பங்குபற்றினர்.

இந்த வேலை நிறுத்தம் தொடக்கத்தில் இருந்தே கசப்பான அனுபவங்களைத் தந்தது. மறியல் போராட்டம் நடந்த பல இடங்களில் ஆரம்ப நாட்களிலேயே 49 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். நியூ யோர்க், வல்ஹெலாவில் மறியல் வரிசையில் நின்ற ஹோர்கன் கொல்லப்பட்டு சில நாட்களுக்கு முன்னர்தான், ரோடே தீவில் ஒரு வேலைநிறுத்தக்காரர் கப் டிரக்கால் இடித்துத் தள்ளப்பட்டார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் முன்னோடியான புல்லடீன் பத்திரிகை அப்போது வெளியிட்ட செய்தி தெரிவித்ததாவது: காரில் இடிபட்ட ஹோர்கன் வானத்தின் மேல்பகுதியில் வீசப்பட்டு விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த தொழிலாளர்கள் கூறினர். வாகனத்தை வேகமாக ஓட்டிய சாரதியை, நிறுத்துமாறு ஹோர்கன் கூக்குரலிட்ட போதும் அவரை 100 முதல் 200 அடி வரை கொண்டு சென்றாள். அதனால் அவர் நடைபாதையில் தலை அடிபடும் வகையில் வீசப்பட்டு விழுந்தார்."

தலையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக ஜெரி ஹோர்கன் உயிரிழந்தார். மனைவியையும் இரு மகள்மாரையும் அவர் பிரிந்தார். "தொழிலாளர் இயக்கத்துக்கு அவர் ஒரு தியாகி. மறியல் போராட்ட வரிசைகளில் நின்றவர்கள் கொல்லப்பட்ட 1930களுக்கு நிலைமை திரும்புகிறது. இது 1930களை குறிக்கின்றது" என்று புல்லடீனுக்கு ஒரு தொழிலாளி கூறினார்.

ஹோர்கனின் கொலையில் சாரதி மீது குற்றஞ்சாட்டப்படவில்லை, மற்றும் கப் வாகனங்கள் மறியல் போராட்ட வரிசை மீது வேகமாக ஓடியது பற்றி வேலை நிறுத்தக்காரர்கள் கொடுத்த புகார்களை பொலிஸ் விசாரிக்கவே இல்லை. மாறாக, கம்பனியை மூடி மறைத்த அவர்கள், ஹோர்கன் வாகனத்துக்கு முன்னால் பாய்ந்ததாக குற்றஞ்சாட்டினர். பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைத்திருந்தால் அவர் மீது கலகம் விளைவித்ததாக குற்றஞ்சாட்ட அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

NYNEX வேலை நிறுத்தம் வெடித்த அதேவேளை, ஈஸ்டர்ன் எயார்லைன் தொழில்நுட்பவியலாளரகள் மற்றும் பொதிகள் பகுதி தொழிலாளர்களதும் போராட்டம் ஆறாவது மாதத்தை எட்டியதுடன், ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் பங்குபற்றிய திடீர் வேலை நிறுத்தம் மூன்றாவது மாதத்தை கடந்தது. AFL-CIO அதிகாரத்துவத்தின் மூலோபாயமானது ஏனைய பகுதினரில் இருந்த தொழிலாளர் போராட்டங்களை தனிமைப்படுத்தி, அடுத்தடுத்து வேலை நிறுத்தங்களை தோற்கடிக்க கூட்டுத்தாபனங்களை அனுமதித்தது. AFL-CIO, 1981ல் பட்கோ விமானக் கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தத்தில் இருந்தே இந்த மூலோபாயத்தை தொடர்கின்றது.

25 ஆண்டுகளுக்கு முன்னர்: அமெரிக்கா கொங்கோவுக்கு இராணுவ உதவி அனுப்பியது


மொய்ஸ் சோம்

1964ல் இந்த வாரம், ஜோன்சன் நிர்வாகமானது தாக்குதல்களை எதிர்கொண்டிருந்த தனது கொங்கோ வாடிக்கைக்காரரான மொய்ஸ் சோம் இன் அரசாங்கத்துக்கு உதவுவதற்காக பி-26 குண்டுவீச்சு விமானங்களை அனுப்பும் எண்ணத்தை அறிவித்தது. அந்த அரசாங்கம் மூன்றாவது பிரமாண்டமான நகரான ஸ்ரான்லிவில்லையும், மற்றும் துணை-சஹாரா ஆபிரிக்காவின் மிகப்பெரிய அரசின் ஐந்தில் ஒரு பகுதியையும் கைப்பற்றிய தேசிய கெரில்லா கிளர்ச்சியாளர்களிடம் அடித்தளத்தை இழந்துகொண்டிருந்த நிலையிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

வாஷிங்டன் ஏற்கனவே போரில் ஈடுபடாத படைப்பிரிவு என்ற பெயரில் 106 விமானிகளையும் பராசூட் துருப்புக்களையும் அனுப்ப உடன்பட்டிருந்ததோடு செனகல், லைபீரியா, எதியோப்பியா மற்றும் நைஜீரியா உட்பட ஏனைய ஆபிரிக்க நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கூலிப்படை சிப்பாய்களுக்கு நிதி வழங்கும் எண்ணத்தையும் அறிவித்தது. அமெரிக்கா முன்னரே ஷொம்பேக்கு பல சீ-130 போக்குவரத்து விமானங்களை அனுப்பியிருந்தது. இந்த குண்டுவீச்சு விமானங்களும் போக்குவரத்துகளும் பெல்ஜியம் மற்றும் கியூபாவில் இருந்து புலம்பெயர்ந்து வேலை செய்பவர்கள் மற்றும் தென்னாபிரிக்க விமானிகளையும் கொண்டே அனுப்பப்பட்டன. பிரான்ஸ் மற்றும் பெல்ஜியமும் ஷொம்பேக்கு உதவிகளை வழங்கிய அதேவேளை, கிளர்ச்சி செய்த விடுதலைக்கான மக்கள் இராணுவம் (Popular Army of Liberation) சோவியத் ஒன்றியத்திடம் இருந்து தளவாட உதவிகளைப் பெற்றது.

ஆகஸ்ட் 14 உரையாற்றிய மிஸிசிப்பி ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோன் ஸ்டெனிஸ், கொங்கோவில் முன்னெடுக்கப்படும் தலையீட்டுக்கும் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க தலையீட்டுக்கும் இடையிலான சமாந்தரத்தை வெளிக்கொணர்ந்து, படைகளையும் ஆயுதங்களையும் அனுப்புவதுவியட்னாம் போன்று இன்னொரு பிரகடனப்படுத்தப்படாத போருக்கு வழிவகுக்குமா இல்லையா எனக் கேட்டார். ஷொம்பே, பெறுமதிவாய்ந்த கனிப்பொருட்கள் நிரம்பிய கட்டங்கே என்ற தனது தாயக மாகாணத்தை பிரிப்பதாக அச்சுறுத்தியே ஆட்சிக்கு வந்தார். அங்குள்ள சுரங்கங்களை ஆங்லோ-பெல்ஜியன் சுரங்கக் கம்பனியான யூனியன் மைனிரே கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. கொங்கோ தேசியவாத பிரதமர் பட்ரிஸ் லுமும்பா, கட்டங்கா அதிகாரிகளுக்கு எதிராகத் திரும்பியதை அடுத்து, பெல்ஜியன் மற்றும் சிஐஏ முகவர்களின் ஒத்துழைப்புடன் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டதை ஷொம்பே தானே மேற்பார்வை செய்தார். (பார்க்க: பாட்ரிஸ் லுமும்பா கொலையின் ஐம்பதுஆண்டுகளுக்கு பின்)

75 ஆண்டுகளுக்கு முன்னர்: நியூ யோர்க் பாசிஸ்டுகளை ட்ரொட்ஸ்கிச பலம் பின்வாங்கச் செய்தது


பாதிரி கோஃப்லின்

1939 ஆகஸ்ட் 17, நியூ யோர்க் நகரில் சோசலிச தொழிலாளர் கட்சி (Socialist Workers Party -SWP) அழைப்பு விடுத்த, அச்சுறுத்தலுக்குள்ளான எதிர் ஆர்ப்பாட்டமொன்று, பாசிச தலைவரும் ரோமன் கத்தோலிக்க பாதிரியாருமான கோஃப்லின் பிதாவின் குண்டர் படையை பின்வாங்கச் செய்தது. அவர்கள் ஆகஸ்ட் 19 நியூ யோர்க்கின் யூனியன் சதுக்கத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊர்வலத்தை இரத்துச் செய்ய தள்ளப்பட்டனர்.

தாக்குதல் துருப்புக்கள் வடிவிலான இந்த திட்டமிடப்பட்ட ஊர்வலத்துக்கு சில வாரங்களுக்கு முன்னர் இருந்தே, யூனியன் சதுக்கத்தை தளமாகக் கொண்டிருந்த பல சோசலிச அமைப்புகளின் மற்றும் தொழிற்சங்களின் அலுவலகங்கள் மீதான பெரும் தாக்குதலுக்கு அழைப்பு விடுப்பதற்காக, கோஃப்லின் தனது அமைப்பின் சோசியல் ஜஸ்டிஸ் என்ற செய்திப் பத்திரிகையையும், தனது வானொலி நிகழ்ச்சியையும் மற்றும் முதாலளித்துவ ஊடகங்களையும் பயன்படுத்தினார்.

கோஃப்லின்பிராங்கோவின் வழியை பின்பற்ற சபதம் செய்தார் -இங்கு குறிப்பிடப்படுவது, ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தின் செலவில் அதே ஆண்டு முற்பகுதியில் ஆட்சிக்கு வந்த, கத்தோலிக்க தேவாலயத்தின் கனமான ஆதரவைக் கொண்ட, ஸ்பானிய பாசிச சர்வாதிகாரி ஜெனரல் பிராங்கோ ஆகும். இந்த ஊர்வலம், நியூ யோர்க் மாநகரில் தொழிலாளர் இயக்கங்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அழைப்பு விடுவதற்காகவே திட்டமிடப்பட்டது. இதில் கோஃப்லினின் குண்டர் படைகள் கம்யூனிச-விரோத மற்றும் யூத-விரோத பேரினவாத சூழலையும் உருவாக்கி விடுவதற்கு முயற்சித்தன. திட்டமிடப்பட்ட ஊர்வலத்துக்கு முந்தைய நாட்களில், தொழிலாளர்கள் மற்றும் சோசலிஸ்டுகளும் சரீரத் தாக்குதலுக்கு உள்ளானதோடு யூனியன் சதுக்குத்துக்கு அருகில் பட்டப் பகலில் இயங்கிவந்த பாசிசக் குண்டர்களின் கத்திக்குத்துக்கும் உள்ளானார்கள்.

ஒருவருக்கு ஏற்படும் காயம் எல்லோருக்கும் ஏற்பட்ட காயமாகும் என்ற தொழிலாளர் இயக்கத்தின் கொள்கையை பாதுகாத்த ஒரே இடது அமைப்பு SWP மட்டுமே ஆகும். இந்த உணர்வுகளால் உத்வேகம் பெற்றிருந்த நியூ யோர்க் பிராந்தியத்தின் SWP தலைமைத்துவமும் காரியாளர்களும், கிழக்கு கரைப் பகுதி முன்னெப்போதும் கண்டிராத பிரமாண்டமான பாசிச-விரோத ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைப்பதை இலக்காகக் கொண்ட வாரக் கணக்கான பிரச்சாரத்தில் மூழ்கின. SWP உறுப்பினர்கள், பாசிச ஆக்கிரமிப்புக்கு எதிராக யூனியன் சதுக்கத்தை பாதுகாக்குமாறு நியூ யோர்க் நகர தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்து 300,000 துண்டுப் பிரசுரங்களை விநியோகித்திருந்தனர். குண்டர் படைகளை பயன்படுத்துவதற்கான கோஃப்லிங்கின் திட்டத்தின் ஆபத்தைப் பற்றி தொழிலாள வர்க்கத்தை விழிப்படையச் செய்வதற்காக, SWP உறுப்பினர்கள் அயல் பிரதேசங்களில் ஊர்வலங்கள், கூட்டங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்தனர்.

பாசிச ஊர்வலத்தை பாதுகாக்க சுமார் 7,000 அலுவலர்களை அணிதிரட்டத் திட்டமிட்டிருந்த உள்ளூர் பொலிசுடனான விரிவான ஆலோசனையின் பின்னர், யூனியன் சதுக்கத்தை தாக்குவதற்கான தனது திட்டத்தை கோஃப்லின் கைவிட முடிவு செய்தார். திட்டமிடப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் எதிர் ஆர்ப்பாட்டத்திற்கு முகங்கொடுத்த நிலையில் பின்வாங்கியமை, பாசிஸ்டுகளுக்கு ஒரு அவமானத்துக்குரிய தாக்குதலாகியது

100 ஆண்டுகளுக்கு முன்னர்: ஆஸ்திரியா-ஹங்கேரி மீது பிரிட்டன் போர் பிரகடனம் செய்தது


ஐர் குரோவ்

ஜேர்மனிக்கு எதிராக போர் பிரகடனம் செய்து ஒரு வாரத்தின் பின்னர், 1914 ஆகஸ்ட் 12 அன்று, ஜேர்மனியின் முக்கிய பங்காளியான ஆஸ்திரியா-ஹங்கேரி மீது பிரிட்டன் போர் பிரகடனம் செய்தது. ஆகஸ்ட் இரண்டாவது வாரம், ஐரோப்பாவின் பெரும் வல்லரசுகள் போரில் ஈடுபட்டன. இந்த மோதல் துரிதமாக உலகளவில் பரவியதோடு 9 மில்லியன் சிப்பாய்களதும் 7 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்களதும் உயிர்களைக் காவுகொண்டன.

ஆஸ்திரியா-ஹங்கேரியானது தனது பேரரசுக்குள்ளும் அதன் எல்லைகளிலும் வளர்ச்சி கண்டு வந்த ஒடுக்கப்பட்ட இனங்களின் எதிர்ப்பு அலையை பின் தள்ளுவதற்கான ஒரு சாக்குப் போக்காக, சரஜேவோவில் ஒரு சேர்பிய தேசியவாதியினால் முடிக்குரிய இளவரசர் பேஃர்டினான்ட் படுகொலை செய்யப்பட்டதை பற்றிக்கொண்டது. இந்த அச்சுறுத்தல் 1912-13 பால்கன் யுத்தத்தின் போது மிகத் தெளிவாக காட்சிக்கு வந்தது. ரஷ்யாவின் ஆதரவுடன் சேர்பியாவின் வெற்றியில் முடிவுக்கு வந்த இந்தப் போர், பால்கன் பிராந்தியத்தில் ஒரு பெரும் அதிகாரத்தின் தேவைக்கு தள்ளிச் சென்றது.

ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன் பேரரசை பராமரிப்பது என்பது ஹப்ஸ்பேர்க் குடும்பத்துக்கு மட்டுமன்றி, ஜேர்மனியின் ஆளும் வர்க்கத்துக்கும் தீர்க்கமானதாக இருந்தது. முந்தைய தசாப்தங்களில் ஜேர்மன் முதலாளித்துவத்தின் துரித வளர்ச்சியானது மூலப் பொருட்கள் மற்றும் சந்தைகளுக்கான புதிய தோற்றுவாய்களை அனுகவேண்டிய தேவையை ஏற்படுத்தியது. ஜேர்மன் ஆளும் கும்பலின் குறிக்கோள், ஐரோப்பாவில் பரந்த பொருளாதாரப் பிடியை ஸ்தாபிப்பதோடு உலக அளவில் ஒரு மேலாதிக்க நிலையை தக்கவைத்துக்கொள்வதாக இருந்த அதேவேளை, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற பழைய ஏகாதிபத்திய சக்திகளைப் பொறுத்தவரையில், இந்த புதிய ஆபத்தான எதிரியை பின்தள்ளுவது மையப் பிரச்சினையாக இருந்தது.

ஜேர்மனுக்கு எதிரான பிரிட்டனின் போர் பிரகடனத்தைப் போலவே, ஆஸ்திரிய-ஹங்கேரிக்கு எதிரான அதன் யுத்தப் பிரகடனமும், பிரிட்டிஷ் நிதி மூலதனத்தின் உலக மேலாதிக்க நிலைமைக்கு அடித்தளமாக இருந்த பிரிட்டிஷ் பேரரசின் நிலைமையை காத்துக்கொள்வதன் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகும். ஆகஸ்ட் 5, பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்தின் ஒரு சிரேஷ்ட இராஜதந்திரியான ஐர் குரோவ், போரில் பிரிட்டனின் மூலோபாய கட்டமைப்பை பற்றி குறிப்பிடுகையில், எதிரிகளைச் சூழ வல்லரசுகளின் ஒரு வலையத்தை உருவாக்குவதற்கு, போராடிவரும் பங்காளிகளை ஒரு முறைமைக்குள் கொண்டுவருவது எமது பொறுப்பாகும்... துருக்கியை விட்டாலும் கூட, உலகின் ஏனைய பகுதிகளில், குறிப்பாக எல்லா பக்கங்களில் இருந்தும் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவை அடைக்கும் ஒரு உறுதியான வேலி ஒன்று இருக்கும்,என்றார்.

யுத்தமும் சர்வதேசியமும் என்ற நூலில் ரஷ்ய மார்க்சிஸ்டான லியோன் ட்ரொட்ஸ்கி, பூகோள மோதலுக்கு அடிநிலையில் இருக்கும் புறநிலை சமூக-பொருளாதார நிகழ்வுப் போக்குகள் பற்றிய அவரது புரட்சிகரமான ஆய்வுகளில் விளக்கியது போல், ஒவ்வொரு நாட்டினதும் முதலாளித்துவத்தின் இலாப நலன்களுக்காக, முதலாளித்துவ அரசுகள் உலகு-தழுவிய பொருளாதார முறைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடுவதற்கு வழிவகுக்கும்.