சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government collapses amid mounting anger over austerity policies

சிக்கன கொள்கைகள் மீது அதிகரித்துவரும் கோபத்தின் மத்தியில் பிரெஞ்சு அரசாங்கம் பொறிகிறது

By Alex Lantier
26 August 2014

Use this version to printSend feedback

சோசலிஸ்ட் கட்சி (PS) ஜனாதிபதியின் செல்வாக்கிழந்த சிக்கனக் கொள்கைகளை பகிரங்கமாக தாக்கிய முன்னணி மந்திரிகளை நீக்கியதோடு, பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட் ஐந்து-மாதமே-பதவியிலிருந்த பிரதம மந்திரி இமானுவேல் வால்ஸின் அரசாங்கத்தை திங்களன்று கலைத்தார்.

வாரயிறுதியின் போது, பொருளாதார மந்திரி ஆர்னோ மொண்டபூர்க்கும் கல்வித்துறை மந்திரி பெனுவா அமோனும், Le Monde மற்றும் Le Parisienக்கு தனித்தனியாக அளித்த பேட்டியிலும் மற்றும் Frangy-en-Bresse இல் ஞாயிறன்று நடந்த சோசலிஸ்ட் கட்சி கூட்டத்தில் ஒன்றிணைந்தும், ஹோலண்டின் சிக்கன நிகழ்ச்சிநிரலை தற்கொலைக்குரியதாகவும் ஜேர்மனியால் கட்டளை இடப்பட்டவையாகவும் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

உக்ரேனிய நெருக்கடியின் விடையிறுப்பில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தடைகளோடு சேர்ந்து, ஐரோப்பாவின் பொருளாதாரம் ஒரு கீழ்நோக்கிய பணச்சுருக்க சுழலின் விளிம்பில் உள்ள நிலையில், அவ்விரு மந்திரிகளும், ஹோலண்ட் மீது அதிருப்திபட்டுள்ள மற்றும் அதிகளவில் ஒரு சமூக வெடிப்பு பற்றிய அச்சத்துடன் இருக்கும் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்காக பேசுகிறார்கள்.

பிரான்ஸின் பொருளாதாரம் தேக்கமுற்றிருப்பதோடு, கருத்துக்கணிப்புகளில் சோசலிஸ்ட் கட்சிக்கு எதிர்ப்பு 80 சதவீதத்தோடு முதலிடத்தில் இருக்கிறது மற்றும் தேசிய முன்னணிக்கு (FN) ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருந்தபோதினும், ஹோலண்ட் பத்து பில்லியன் கணக்கான யூரோக்களின் மக்கள்விரோத சமூக வெட்டுக்களைப் பிடிவாதமாக முன்னெடுத்து வருகிறார்.

"பொது வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையைக் குறைப்பதை நோக்கிய பலவந்தமான அணிவகுப்பு ஒரு பொருளாதார வழிவிலகலாகும்; ஒரு நிதியியல் அபத்தமாகும்; ஒரு அரசியல் பேரழிவாகும்," என மொன்டபூர்க் Le Mondeக்கு தெரிவித்தார், அவர் தொடர்ந்து கூறுகையில், அது பிரெஞ்சு மக்களை "தீவிரவாத கட்சிகளின்" பிடிக்குள் தள்ளுகிறது என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

Le Parisien இல், ஹோலண்டின் சிக்கன கொள்கைகளை விமர்சித்த அமோன், பேர்லின், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அதன் சொந்த சுயநல நலன்களுக்காக பாடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். “வினியோக-தரப்பு கொள்கையின் வெற்றிக்கு முன்நிபந்தனையே தேவையை அதிகரிப்பதாகும், இதைத்தான் நாங்கள் இரண்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வந்துள்ளோம். பிரெஞ்சு மக்களிடம் போதிய வருவாய் இல்லையென்றால் நம்மால் அவர்களிடம் எதையும் விற்க முடியாது," என்று அமோன் தெரிவித்தார்.

"[ஜேர்மன் சான்சிலர் அங்கேலா] மேர்க்கெல் ஐரோப்பிய கொள்கைக்கு நிகழ்ச்சிநிரல் அமைப்பவராக இருக்க முடியாது," என அமோன் தெரிவித்து, “ஜேர்மனி, ஐரோப்பில் இருப்பவர்களின் நலன்களை அல்ல, அதன் தனிப்பட்ட நலன்களையே பின்தொடர்ந்து வருகிறது,” என சேர்த்துக்கொண்டார்.

ஜேர்மனி குறித்த அமோனின் விமர்சனங்களை மொன்டபூர்க்கும் Frangy-en-Bresse இல் அவரது உரையில் எதிரொலித்தார். “பிரான்ஸ் யூரோ மண்டலத்தின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாகும், உலகின் ஐந்தாவது மிகப்பெரிய வல்லரசாகும், கணவான்களே சீமாட்டிகளே, அது ஜேர்மனியின் மிதமிஞ்சிய ஆட்டிப்படைப்புகளுக்கு தன்னைத்தானே ஒழுங்கு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை," என்றார். “அதனால் தான், ஐரோப்பிய ஒன்றியத்தைக் காப்பாற்றுவதற்காக என்ற பெயரில், ஒரு வெளிப்படையான தெளிந்த எதிர்ப்பை வெளிப்படுத்த பிரான்ஸூக்கும் அதன் அரசாங்கத்திற்கும் நேரம் வந்திருக்கிறது," என மொன்டபூர்க் சேர்த்துக்கொண்டார்.

சோசலிஸ்ட் கட்சிக்குள்ளிருந்தே வந்திருக்கும் மொன்டபூர்க் மற்றும் அமோனின் விமர்சனங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதோடு, அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகத்தினதைப் போல பாரீஸிடமிருந்து பெரும் வங்கி பிணையெடுப்புகளைப் பெற முடியுமென கருதும் பிரெஞ்சு மூலதன பிரிவுகளின் நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் ஜோசப் ஸ்டெக்லெட்ஸ், பிலிப் மார்டின், மற்றும் Sciences-Poஇன் பேராசிரியர் ஜோன்-பால் பெதொஸ்ஸி போன்ற பொருளியல்வாதிகள் உள்ளடங்கிய, "வளர்ச்சியைக் காண்பதற்கான" ஒரு ஆலோசனைக் குழுவை மொன்டபூர்க் கடந்த மாதம் அமைத்திருந்தார்.

அதுபோன்ற கருத்துக்களை ஏற்க முடியாதென திங்களன்று ஹோலண்டும் வால்ஸூம் புறக்கணித்திருந்தனர், அத்துடன் பிரதம மந்திரியின் அலுவலகமோ மொன்டபூர்க் "மஞ்சள் கோட்டை" கடந்துவிட்டதாக கூறி இருந்தது. அரசாங்கம் கலைக்கப்பட்டதற்கு பின்னர், வால்ஸ் மந்திரிகளை தனித்தனியாக அழைத்து விவாதித்தார். மொன்டபூர்க், அமோன் மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி ஓரேலி பிலிப்பெத்தி ஆகியோர் இராஜினாமா செய்தனர்; புதிய மந்திரிசபையில் இடம் பெறுவோர் பெயர்கள் இன்று அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்திலிருந்து வெளியே வந்தபின்னர், மொன்டபூர்க் பத்திரிகையாளர் கூட்டத்தில் ஒரு நீண்ட விளக்கமளித்தார். அவரது [ஜனாதிபதியின்] கொள்கையை மாற்றுவதற்காக அவர் "ஜனாதிபதியை சமாதானப்படுத்த முயன்றதாகவும், விரும்பி வேண்டிக் கொண்டதாகவும்" விவரித்த மொன்டபூர்க், “இந்த பொருளாதார பொறிவைத் தடுக்க நாம் ஓர் உயர்ந்த மற்றும் கூட்டான பொறுப்புறுதியைக் கொண்டிருக்கிறோம்," என்றார். "சிக்கன கொள்கைகள் மத்தியதட்டு வர்க்கங்களையும் மற்றும் இந்த நெருக்கடிக்கு பொறுப்பல்லாத வெகுஜன வகுப்புகளையும் பாதிக்கும் என்பதால்" சிக்கன கொள்கைகளை "அநியாயமானதென்று" குறிப்பிட்ட அவர், அவை ஜனநாயகத்திற்கு ஓர் ஆபத்தாகும் என்று எச்சரித்தார். “இந்த பாதையைத் தொடர்வதும் மற்றும் பிடிவாதமாக பின்பற்றுவதும் குடியரசை அபாயத்திற்குட்படுத்தவே பங்களிப்புச் செய்யுமென," அவர் தெரிவித்தார்.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் மேலெழுந்து வருவது, ஒரு முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியேயாகும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதைக் கட்டமைக்க உதவிய பிரான்ஸின் சோசலிஸ்ட் கட்சி போன்ற பிரதான முதலாளித்துவ "இடது" கட்சிகள் ஆழமாக மதிப்பிழந்து போயுள்ளன.

நவ-பாசிசவாதத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் ஒரு "இடது" இரட்சகனாகவும், ஹோலாண்டுக்கு ஒரு மாற்றீடாகவும் மொன்டபூர்க் காட்டிவருவது ஒரு அரசியல் ஏமாற்றுதனமாகும். கியேவில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை ஒழுங்கமைக்கவும் மற்றும் உக்ரேனில் ஒரு மேற்கத்திய-சார்பிலான கைப்பாவை ஆட்சிக்கு எல்லா எதிர்ப்பையும் நசுக்கவும் உக்ரேனிய பாசிச போராளிகள் குழுக்கள் மீது தங்கியிருந்த வாஷிங்டன் மற்றும் பேர்லினின் அணியில், ஒட்டுமொத்த சோசலிஸ்ட் அரசாங்கத்தையும் போலவே, அவரும் வீழ்ந்துள்ளார். அவரது பொருளாதார பரிந்துரைகளைப் பொறுத்த வரையில், அவர்களின் பிரதான உந்துதல் கடன்வழங்குவதைத் தளர்த்துவதும் மற்றும் பெரிய ஊக்கப்பொதிகளுக்கும், வங்கி பிணையெடுப்புகளுக்கும் அழுத்தம் அளிப்பதாகும்.

அதுபோன்ற கொள்கைகள் அமெரிக்க வங்கிகளை பிணையெடுத்தன என்பதோடு செல்வாக்குமிகுந்த மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை தரங்களைத் தூக்கிவிட்ட அதேவேளையில், அவை வங்கிகளுக்கு கையளிக்கப்பட்ட பணத்தைத் திரும்ப பெறுவதற்காக, ஊதியங்களில் குறைப்பு மற்றும் சமூக செலவினங்களில் வெட்டுக்களைச் சொந்தமாக்கி இருந்தன. ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி, சோசலிஸ்ட் கட்சியில் உள்ள மொன்டபூர்க்கின் கூட்டாளிகள், கிரீஸில் சிரிசா (SYRIZA) மற்றும் பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற இடது குழுக்கள் என இவற்றால் ஆதரிக்கப்பட்ட அதுபோன்ற பின்போக்குத்தனமான திட்டங்களை, முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை தொழிலாளர் முதுகுகளில் சுமத்துவதற்கு மற்றொரு வழியாக மட்டுமே இருக்கிறது.

ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சிதைவுக்கு ஒரு மாற்றீடாக மொன்டபூர்க் பேசவில்லை, மாறாக 2012இல் ஹோலண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், அவர் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது மற்றும் பெரிய வங்கி பிணையெடுப்புகள் மற்றும் பேர்லினால் மேற்பார்வையிடப்படும் வரவு-செலவு வெட்டுக்களில் இருந்து விலகுவதை நோக்கிய திசையில் ஐரோப்பிய ஒன்றிய கொள்கையில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று ஏமாந்து போயிருக்கும் பிரெஞ்சு மூலதனத்தின் பிரிவுகளின் பிரதிநிதியாக பேசுகிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெயர் வெளியிட விரும்பாத சோசலிஸ்ட் கட்சியின் அதிருப்தியடைந்த நிர்வாகி ஒருவர் பத்திரிகைக்கு கூறினார்: “ஐரோப்பிய பொருளாதார கொள்கையில் பிரான்ஸ் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறதென்றால், அதை அதனால் ஜேர்மனியிடமிருந்து பிச்சை கேட்டுப் பெற முடியாது. 2012இல் அது அதன் வாய்ப்பைத் தவறவிட்டது தான் பிரச்சினை. தெற்கு ஐரோப்பா முழுவதும் பிரான்சிற்காக காத்திருந்து அதை பின்தொடர தயாராக இருந்தன. ஆனால் பிரான்சுவா ஹோலண்ட் விவாதிக்காமலேயே ஸ்திரப்பாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடவும் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை 3 சதவீதத்திற்குக் குறைக்கவும் முன்னுரிமை எடுத்தார். பிரான்ஸ் அதன் எல்லா செல்வாக்கையும் இழந்தது. அப்போதிருந்து, இத்தாலி அதன் சொந்த வழியில் செல்லத் தொடங்கியது. ஸ்பெயினோ ஜேர்மனியின் பின்னால் சென்றது. யாரும் பிரான்சிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை.

எவ்வாறிருந்த போதினும், மேற்புறத்திற்கு அடியில், ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான பதட்டங்கள் அதிகரித்திருக்கின்றன, அத்துடன் பிரெஞ்சு ஆளும் வர்க்கம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் முக்கிய பிரிவுகள் ஜேர்மனி பலமடைந்து வருவதை ஓர் அச்சுறுத்தலாக பார்த்து வருகின்றன. கடன் வழங்குவதை இறுக்கும் மற்றும் சிக்கனத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளும் ஐரோப்பாவின் மிகவும் போட்டித்தன்மைமிக்க பொருளாதாரமான ஜேர்மனிக்கு ஆதாயமளித்தது, அது பெரிதும் உற்பத்தி அளவுகளையும் வேலைகளையும் காப்பாற்றிக் கொண்டது, அதேவேளையில் பிரான்சிலும் தெற்கு ஐரோப்பா எங்கிலும் பொருளாதாரங்கள் பொறிந்தன; வேலையின்மை அதிகரித்தது.

கடந்த ஆண்டின் போது, பேர்லின் அதன் வெளியுறவுக் கொள்கையை மீள்-இராணுவமயமாக்கலை நோக்கி நகர்த்தியுள்ளது, மேலும் ரஷ்யா உடன் ஐரோப்பாவின் ஆழ்ந்த பொருளாதார உறவுகளைக் கடுமையாக பாதிக்கும் மற்றும் அணுஆயுதமேந்திய அரசுகளுக்கு இடையே முழு அளவிலான யுத்தத்தைத் தூண்டிவிட அச்சுறுத்தும் ஒரு மோதலில் அது, அமெரிக்காவுடன் சேர்ந்து, உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவை ஆக்ரோஷமாக எதிர்கொள்கிறது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், இன்னும் ஆக்ரோஷமான மற்றும் சுதந்திரமான கொள்கைக்கு அழைப்புவிடுக்கும் பிரெஞ்சு முதலாளித்துவ அரசியலின் பிரிவுகளிடையே சக்திகளின் ஒரு வேறுபட்ட கூட்டணி உருவாகியுள்ளது. மிகமுக்கியமாக, நவ-பாசிச தேசிய முன்னணி (FN) ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்திருக்கிறது. உக்ரேனிய நெருக்கடியின் போது, FN தலைவர் மரீன் லு பென், ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் விரோதத்தை விமர்சித்து ஒரு உரையளிக்க மாஸ்கோவிற்கு பயணித்திருந்தார், அத்துடன் பிரான்ஸ், யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டுமென்றும் மற்றும் அதன் சொந்த தேசிய நாணயத்திற்கு திரும்ப வேண்டுமென்றும் அழைப்புவிடுக்கும் ஒரு பொருளாதார திட்டத்தையும் ஏற்றிருந்தார்.

சோசலிஸ்ட் கட்சிக்குள்ளும் மற்றும் அதன் அரசியல் சுற்றுவட்டங்களுக்குள்ளும் நிறைய தேசியவாத குரல்கள் ஒலித்து வருகின்றன, அவை ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளுக்கும் மற்றும் ரஷ்யா உடனான நேட்டோவின் மோதலுக்கும் ஹோலண்டினது ஆதரவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மொன்டபூர்க் எரிச்சலூட்டும்விதத்தில் "பிரெஞ்சு தயாரிப்பு" பொருட்களின் மற்றும் பிரெஞ்சு தொழில்துறையின் ஒரு பாதுகாவலராக தன்னைத்தானே காட்டிக்கொண்டார், அதேவேளையில் இடது முன்னணியின் ஜோன்-லூக் மெலென்சோனோ உக்ரேனில் பாசிச-தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு குறித்த ஒருசில விமர்சனங்களோடு சோசலிஸ்ட் கட்சியிலிருந்து தன்னைத்தானே தூர விலக்கிக்கொள்ள முயன்றார்.

குறிப்பாக, உக்ரேனிய நெருக்கடிக்கு இடையே, ஹோலண்ட் 2010இல் உடன்பட்ட மிஸ்ட்ரால் ஹெலிகாப்டர் தாங்கி போர்கப்பல்களை ரஷ்யாவிற்கு விற்பதைத் தொடர கடுமையாக போராடி இருந்தார். பிரான்ஸ், ரஷ்யாவுடன் ஒரு போரை விரும்பவில்லை என்பதால் அமெரிக்காவிற்கும் மற்றும் அது பொருளாதாரரீதியில் ரஷ்யா மீது மேலாதிக்கம் செலுத்த விரும்பவில்லை என்பதால் ஜேர்மனிக்கும் இரண்டுக்கும் ஒரு எச்சரிக்கை என்பதாக, அந்த நேரத்தில், அவ்விற்பனை குறித்து பத்திரிகைகளில் வர்ணிக்கப்பட்டது.

ஐரோப்பா முழுவதும் அதிகரித்துவரும் யுத்த அபாயங்கள் மற்றும் பொருளாதாரப் பொறிவோடு சேர்ந்து, பிரதம மந்திரி இமானுவேல் வால்ஸின் குறுகிய-கால அரசாங்கத்தைப் பலிகொண்டு, யூரோ மண்டலத்திற்குள் நிலவும் கசப்பான ஏகாதிபத்தியங்களுக்கு-இடையிலான மோதல்கள் மீண்டுமொருமுறை முன்னுக்கு வந்துள்ளன.

மேலதிக வாசிப்புகளுக்கு:

பதவியேற்றிருக்கும் பிரதம மந்திரி வால்ஸ் தீவர வலதிற்கு முறையீடுகளும்,சிக்கனத்தற்கு உறுதியுமளிக்கிறார்

பிரான்சின் புதிய அரசாங்கம்: ஐரோப்பாவில் ஓர் அரசியல் திருப்புமுனை (PDF)

பிரான்சின் புதிய அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது வரலாற்று தன்மை வாய்ந்த தாக்குதலை தொடுக்கிறது