சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP to hold public meetings to lunch presidential election campaign

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளது

Socialist Equality Party
9 December 2014

Use this version to printSend feedback

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், 2015 ஜனவரி 8 நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான கட்சியின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தொடர் பொதுக் கூட்டங்களை நடத்த உள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரும் அரசியல் குழு உறுப்பினருமான பாணி விஜேசிறிவர்தன, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் சோசலிச கொள்கைகளுக்காகப் போராடுவதில் நீண்ட வரலாறு கொண்டவராவார். வளர்ச்சி கண்டுவரும் உலகப் போர் அபாயம் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான அதே போல் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரே வேட்பாளர் அவர் மட்டுமே ஆவார்.

உலக முதலாளித்துவத்தின் பொறிவு மற்றும் அதிகரித்து வரும் புவிசார்-அரசியல் பதட்டங்களும் இலங்கை தேர்தலைச் சூழ்ந்துள்ள அரசியல் நெருக்கடிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, எந்தவித தாமதமும் தனது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக உழைக்கும் மக்களின் விரோதத்தைத் தீவிரப்படுத்த மட்டுமே வழிவகுக்கும் என்ற பதியில், முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த நாள், அவரது சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்ததோடு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய எதிர்கட்சிகளின் ஆதரவுடன் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

பிராந்தியம் முழுவதும் உள்ள ஏனைய நாடுகளில் போலவே, இலங்கையும் சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் தயாரிப்புகளுக்குள் இழுபட்டுச் செல்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, பெய்ஜிங்கில் இருந்து தூர விலகுவதற்காக கொழும்பை நெருக்கும் முயற்சியில், இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை வாஷிங்டன் சுரண்டிக் கொண்டது. இப்போது அமெரிக்கா, ஆளும் கட்சியை பிளவுபடுத்தவும் தேர்தலில் இராஜபக்ஷவின் தோல்வியை உருவாக்கவும் எதிர்க் கட்சிகளின் சதிகளுக்கு பச்சை கொடி காட்டியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி, ஏதாவதொரு வழியில் ஏகாதிபத்தியத்தின் தந்திரங்களிலும் அதன் போருக்கான உந்துதல்களிலும் இலங்கையை சிக்க வைத்துக்கொண்டிருக்கும் ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் தொழிலாள வர்க்கம் எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. உள்நாட்டில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஆளும் கட்சிகளும் எதிர்க் கட்சிகளும், சுமையை உழைக்கும் மக்களே தாங்க வேண்டும் என்பதில் உடன்பாடு கொண்டுள்ளன. அவர்களது வேட்பாளர்களில் எவர் ஜனவரி 8 தேர்தலில் வெற்றி பெற்றாலும், அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவர்.

சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் கூட்டங்களில், இந்த முக்கிய அரசியல் பிரச்சினைகளும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் மற்றும் போரைத் தடுப்பதற்கும் அவசியமான சர்வதேச சோசலிச திட்டத்தைப் பற்றியும் கலந்துரையாடப்படும். இந்த இன்றியமையாத கலந்துரையாடலில் பங்கேற்குமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

கூட்டங்கள் நடக்கும் இடங்களும் நாட்களும்:

மஹரகம

சணாதன கட்டிடம் (நாவின்ன ரயில் கடவை அருகில்)
டிசம்பர் 12, வெள்ளிக்கிழமை, 4 மணிக்கு

கம்பஹா

சனச சிறிய மண்டபம் (நீதிமன்ற வீதி)
டிசம்பர் 14, ஞாயிறு, 3 மணிக்கு

சிலாபம்

சுதசுன மண்டபம்
டிசம்பர்
17, புதன், 3 மணிக்கு

கண்டி

ஜனமெதுர மண்டபம்
டிசம்பர்
19, வெள்ளி 4 மணிக்கு

ஹட்டன்

தொழிலாளர் பொழில் மண்டபம்
டிசம்பர்
21, ஞாயிறு காலை 10 மணிக்கு

ரத்மலானை

கம்கறு செவன மண்டபம்
டிசம்பர்
22, திங்கள் 4 மணி

ஊர்காவற்துறை

திறந்தவெளி அரங்கு (சந்தை அருகில்)
டிசம்பர் 26, வெள்ளி, காலை 10 மணிக்கு

யாழ்ப்பாணம்

வீரசிங்கம் மண்டபம்
டிசம்பர்
28, ஞாயிறு 2 மணிக்கு

குருணாகல்

வைஎம்பிஏ மண்டபம்
டிசம்பர்
29, திங்கள் 4 மணிக்கு

மாத்தறை

சனச மண்டபம் (நூபே சந்தி)
ஜனவரி 3, சனிக்கிழமை 3 மணிக்கு

கொழும்பு

பொது நூலக கேட்போர் கூடம்
ஜனவரி
4, ஞாயிறு 3 மணிக்கு