சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

As 2013 draws to a close, capitalist breakdown is intensifying

2013 முடிவடைய இருக்கின்ற நிலையில், முதலாளித்துவ நிலைமுறிவு தீவிரமடைகிறது

Nick Beams
30 December 2013

Use this version to printSend feedback

1930'க்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் இந்த மிக ஆழமான நிதியியல் நெருக்கடி ஐந்திற்கும் மேலான ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும், உலகப் பொருளாதாரத்தில் ஒரு சமயத்தில் எது "வழமையான" பொருளாதார வளர்ச்சியென கருதப்பட்டதோ அதற்கு அருகாமையில் கூட திரும்புவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லாமலேயே இந்த ஆண்டு முடிவடைந்துள்ளது. ஒரு மேல் நோக்கிய திருப்பம் எடுப்பதற்கு மாறாக தொடர்ச்சியான வளர்ச்சிக் குறைவு, வீழ்ச்சி அடைந்துவரும் முதலீடு, ஒருபோதும் இல்லாத குறைந்த நிஜஊதியம் (real wage) மற்றும் நிலைத்து நிற்கின்ற உயர்ந்த வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் குணாதிசயப்படுத்தப்பட்ட —“நீடித்த மந்தநிலைக்கான" எச்சரிக்கைகளே உயர்ந்துள்ளன.

கடந்த 12 மாதங்களில் ஒரு தொடர் முன்னொருபோதும் இல்லாத பல நாணய நெறிமுறை கொள்கைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஜப்பான் வங்கி இரண்டினதும் பணத்தை அச்சடித்து "புழக்கத்தில் விடும் திட்டங்கள்" (quantitative easing -QE) மிகவும் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. அவற்றின் மூலமாக ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் பிரதான வங்கிகளுக்கும் நிதியியல் அமைப்புகளுக்கும் தோற்றப்பாட்டளவில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.  

பெடரல் மட்டுமே அதன் சொத்து கையிருப்புகளை 2008 நிதியியல் நெருக்கடி தொடங்கிய போது இருந்ததை விட நான்கு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்தி, இந்த ஆண்டு 1 ட்ரில்லியன் டாலரை விட அதிகமாக அதன் இருப்புநிலை அறிக்கையை விரிவாக்கி உள்ளது. உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரத்தின் நாணய கொள்கைக்கு பொறுப்பான ஜப்பான் வங்கி அந்நாட்டில் பணப் புழக்கத்தை இரட்டிப்பாக்க பொறுப்பேற்று உள்ளது.

இத்தகைய இரண்டு திட்டங்களுமே, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் செய்யப்படுவதாக கூறி நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் பிரதான வங்கிகளும் மற்றும் நிதியியல் ஊக வணிகர்களும் மட்டுமே இதனால் ஆதாயமடைந்தவர்கள். இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் ஏனைய வளர்ச்சிகளின் முதல் நான்காண்டுகளுக்கான 4.1 சதவீத சராசரியோடு ஒப்பிட்டால் ஜூன் 2009இல் உத்தியோகபூர்வ மந்தநிலைமை முடிந்ததில் இருந்து அமெரிக்க பொருளாதாரம் வெறும் 2.3 சதவீத சராசரி விகிதத்தோடு வளர்ந்துள்ளது, அதேவேளையில் பங்குச் சந்தையானது சாதனை உயரத்திற்கு அல்லது அதற்கு அருகாமையை எட்டி உள்ளது. நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் இந்த வளர்ச்சியானது, 2009இல் இருந்து உலகின் உலகளாவிய பில்லியனர்களின் செல்வ வளத்தின் இரட்டிப்பு பெருக்கத்தில் பிரதிபலிக்கின்றது.

பெடரல் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக நிதியியல் சந்தைகளுக்குள் வெள்ளமென பாய்ச்சப்பட்டு வரும் பணம், 2008 நிதியியல் பொறிவை விட இன்னும் அதிக தீவிரமான மற்றொரு நிதியியல் முறிவிற்கான அடித்தளத்தை அமைத்து வருகின்றது. உதாரணமாக, ஆபத்தான, மீளப்பெறமுடியாதவையாக மதிப்பிடப்படும் கடன்கள், 2008ல் இருந்த 593 பில்லியன் டாலர்கள் என்ற மட்டத்தையும் தாண்டி, இந்த ஆண்டு 693 பில்லியன் டாலர்கள் என்ற புதியமட்டத்தை எட்டியுள்ளதாக புளூம்பேர்க் அறிவித்துள்ளது.

2014இல் அமெரிக்க பொருளாதாரம் ஒரு "மேல் நோக்கிய திருப்பத்தை" எட்டுமென கணிப்பவர்கள், சந்தேகத்திற்கு இடமின்றி உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதங்களும் சமீபத்திய காலத்தில் குறைந்து வருவதாக குறிப்பிடுவர். இத்தகைய கணிப்புகளானவை, பெரும்பாலான புதிய வேலைகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்த கூலி விகிதங்களில் உள்ளன என்ற உண்மையை புறக்கணிக்கின்றன.ஒபாமா நிர்வாகத்தின் 2009 மறுகட்டமைப்பு திட்டத்தின் கீழ் வாகனத்துறை ஆலைகளில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் கூலிகள் பாதியாக குறைக்கப்பட்டமை இந்த விஷயத்தில் ஒரு முன்னுதாரணத்தை காட்டி உள்ளது.மேலும் புள்ளிவிபரங்களில், வேலைசெய்யக்கூடிய மக்கள் அதிகளவு கைவிடப்பட்டதாலேயே சிலவளர்ச்சி" ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில், அமெரிக்க உழைப்புச்சந்தைக்குள் உள்ளே வந்தவர்களை விட அதிலிருந்து நிறைய பேர் வெளியேறி உள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அபே அரசாங்கம் மற்றும் ஜப்பான் வங்கியால் தொடங்கப்பட்ட "பணத்தைப் புழக்கத்தில் விடும்" திட்டம் ஆரம்பத்தில் ஜப்பானிய பொருளாதாரத்திற்கு உந்துதலைக் கொடுத்தது, ஆனால் அந்த விளைவுகள் கழன்று போகத் தொடங்கி உள்ளன. அடுத்த மார்ச்சில் தொடங்கும் நிதிய ஆண்டிற்கான நிஜமான மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.4 சதவீதம் மட்டுமே இருக்குமென கடந்த வாரம் அரசு முன்கணிப்பு குறிப்பிட்டது, இது நடப்பு ஆண்டிற்கான 2.6 சதவீத மதிப்பீட்டையும் விட குறைவாகும்.

தொடர்ச்சியாக 17 மாதங்களாக வீழ்ச்சியடைந்து வந்த நிஜ ஊதியம் கடந்த மாதம் வீழ்ச்சியடையவில்லை என ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதைநற் செய்தியாகக்கருதியமை, ஜப்பானிய பொருளாதாரத்தின் அடிநிலையில் நிலவும் மந்தநிலை பற்றிய ஒரு அளவீடாகும்.

நிஜமான பொருளாதார விரிவாக்கத்தின் மைய உந்து சக்தியாக விளங்கும் இலாபங்களின் திரட்சிக்கும் மற்றும் முதலீடு செய்யப்படும் அளவுகளுக்கும் இடையில் அதிகரித்துவரும் இடைவெளியானது, உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார நிலைமுறிவின் அடித்தளத்திலிருக்கும் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது.

உலகளாவிய பெருநிறுவனங்கள் ஏறத்தாழ 4 ட்ரில்லியன் டாலர் ரொக்க கையிருப்புகளை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதுஅதில் பாதி அமெரிக்காவில் உள்ளது. இது ஏனென்றால் புதிய முதலீட்டினால் இலாபம் பெறக்கூடிய வழிமுறைகள் அங்கே வெகு குறைவாகவே உள்ளன. உற்பத்தியில் நிதியை அதிகரித்து இலாபங்களைப் பெறுவதற்கு மாறாக, நிறுவனங்கள் பங்குபத்திர மதிப்புகளை உயர்த்துவதற்காக பங்குகளை திருப்பி திருப்பி வாங்குவதில், அதிகளவிலான அவற்றின் ரொக்க கையிருப்புகளை பயன்படுத்துகின்றன, இதன் மூலமாக பெரிய பெருநிறுவனங்களில் பிரதான பங்குதாரர்களாக உள்ள தனியார் நிதியங்கள், வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் நிதியியல் இலாபங்களைப் பெறுகின்றன. இது உலகளாவிய வாகனத்துறையில் செய்யப்பட்டதை போல, ஒரு பிரதான "மறுகட்டமைப்பையும்" உட்கொண்டிருக்கிறது, அது ஆலைகள் மற்றும் ஏனைய தொழிற்சாலைகளை மூடுவதற்கு இட்டு சென்றுள்ளது, அவற்றில் சில 1950'களின் தொடக்கத்தில் இருந்து செயல்பட்டு வந்தவை ஆகும்.

மறுகட்டமைப்பின்" சமூக விளைவுகள் யூரோ மண்டலத்தில் மிக தெளிவாக எடுத்திக்காட்டப்பட்டுள்ளன. அங்கே முதலீடு அளவுகள் 2008க்கு முந்தைய அளவுகளை விட ஏறத்தாழ 30 சதவீதம் குறைந்துள்ளது. வங்கிகளின் ஆணைக்கிணங்க அனைத்து அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சிக்கன திட்டங்களின் விளைவோடு சேர்ந்து, இந்த மறுகட்டமைப்பு நடவடிக்கை சமூக பேரழிவைக் கொண்டு வந்துள்ளது.

சிக்கன நிகழ்ச்சிநிரலின் விளைவாக வறுமை, பாரிய வேலைவாய்ப்பின்மை, சமூக தனிமைப்படல், அதிகளவிலான சமத்துவமின்மை மற்றும் மக்களிடையே கூட்டுஅவநம்பிக்கை ஆகியவற்றைக் கொண்ட ஒரு நீடித்த காலக்கட்டத்திற்குள் ஐரோப்பா மூழ்கி வருவதாக அக்டோபரில் பிரசுரிக்கப்பட்ட சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஓர் ஆய்வு குறிப்பிட்டது. “இந்த நெருக்கடியின் நீண்டகால விளைவுகள் இன்னும் மேற்புறத்திற்கு வரவில்லை,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. “பொருளாதாரம் மிக நெருக்கமான எதிர்காலத்தில் நல்ல நிலைமைக்குத் திரும்பினாலும் கூட, ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சினைகள் பல தசாப்தங்களுக்கு உணரப்படும் என்று அது குறிப்பிட்டது.

உலகளாவிய நிதியியல் நெருக்கடி வெடித்த பின்னர், சீனாவும், அத்தோடு ஏனைய "எழுச்சிபெற்றுவரும் சந்தைகளும்" பிரதான நாடுகளில் இருந்து பிரிந்து உலகளாவிய விரிவாக்கத்திற்கு ஒரு புதிய அடித்தளத்தை வழங்குமென்று கூறப்பட்டது.

அந்த வலியுறுத்தலும் கடந்த 12 மாதங்களில் முற்றிலுமாக மற்றும் மெய்யாகவே சிதைக்கப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் கீழ்நோக்கிய அழுத்தத்தை முகங்கொடுத்து வருவதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் சீன அதிகாரிகளால் கூட்டப்பட்ட ஒரு பொருளாதார மாநாடு எச்சரித்தது. மிதமிஞ்சிய உற்பத்தி, பெரும் கடன்களையும் முகங்கொடுத்திருந்த சீனத் தொழிற்துறை, குறிப்பாக உள்ளூர் அரசாங்கங்களால் நடத்தப்பட்டு வந்தவை, நிதியியல் ஸ்திரப்பாட்டை அச்சுறுத்தி வருவதாக அந்த மாநாடு முடிவு செய்தது.  

பெடரலின் QE திட்டத்தில் ஒரு "குறைப்பு" செய்வதற்கான சாத்தியக்கூறுகளுக்கு 2013'இன் மத்தியில் வெளியான பிரதிபலிப்புகள், “எழுச்சியடைந்துவரும் சந்தைகள்" இப்போக்கிலிருந்து பிரிந்து இருப்பதற்குப் பதிலாக, அவை பெருமளவில் நிலையற்ற மூலதன அசைவுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்பதை அடிகோடிட்டு காட்டின. சில முக்கிய நாடுகளைப் பெயரிட்டு காட்டுவதானால், துருக்கி, இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகியவை அமெரிக்க வட்டிவிகித உயர்விற்கு வெளியான பிரதிபலிப்பாக பெரும் நிதிய வெளிப்பாய்ச்சலை அனுபவித்தன. அது மீண்டுமொரு 1997-98 ஆசிய நிதியியல் நெருக்கடிக்கான ஆபத்துக்களைக் கொண்டு வந்தது, இந்த முறை அது ஒரு பரந்த மட்டத்தில், ஒட்டுமொத்தமாக உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையின் ஸ்திரத்தன்மைக்கான நீண்டகால பாதிப்புகளோடு இருந்தது

உலகளாவிய பொருளாதாரத்தில் எவ்வித மீட்சிக்கான சாத்தியக்கூறையும் இல்லாம் செய்து, இந்த போக்குகள் அனைத்தும் 2014இல் ஆழமடைய உள்ளன. தொழிலாள வர்க்கத்தை வறுமையில் தள்ளுவது மற்றும் இன்னும் கூடுதலாக ஒடுக்குமுறையை செலுத்துவதைத் தவிர ஆளும் வர்க்கத்திடம் இந்த நெருக்கடிக்கு எவ்வித தீர்வும் இல்லை. உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் இந்த சூழ்நிலையைக் கணக்கெடுக்க வேண்டும் மற்றும் நிகழ்ந்துவரும் முதலாளித்துவ நிலைமுறிவை எதிர்கொள்ள ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதன் சொந்த அரசியல் முனைவுகளை அபிவிருத்தி செய்ய, எதிர்வரும் ஆண்டை பயன்படுத்த வேண்டும்.

மேலதிக வாசிப்புகளுக்கு

பெடரல் தீர்மானம் உலகளாவிய நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தை தூண்டிவிடுகிறது