சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Sharon’s funeral pays homage to war criminal

ஷரோனின் இறுதி சடங்கு போர் குற்றவாளிக்கு மரியாதை செலுத்துகிறது

By Mike Head 
14 January 2014

Use this version to printSend feedback

முன்னாள் இஸ்ரேலிய தளபதி மற்றும் பிரதம மந்திரியாகவிருந்த ஏரியல் ஷரோனுக்கு நேற்றைய அரச நிகழ்வுகளும் மற்றும் மரணச்சடங்குகள் நடைபெற்றபோது, அவருடைய குற்றங்கள், தவறுகள் அனைத்திலும் உடந்தையாக இருந்த அரசியல் குண்டர்கள் ஒரு மரணமான சகாவிற்கு மரியாதை தெரிவிக்கக் கூடினர். இதன் முன்னணியில்  அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பிடென், முன்னாள் பிரித்தானியப் பிரதம மந்திரி டோனி பிளேயர், தற்போதைய இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தெனியாகு ஆகியோர் இருந்தனர்.

21 நாடுகளில் இருந்து மட்டும்தான் பிரதிநிதிகள் ஜெருசெலத்தில் நடந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் பங்கு கொண்டனர். இது பற்றி பொதுவாக உலகச் செய்தி ஊடகத்தில் அதிகம் கவனம்கொடுக்கப்படவில்லை. அங்கிருந்த அடிப்படை உணர்வு, ஒரு தொடர் ஆக்கிரமிப்புப் போர்களையும், படுகொலைகளையும் நடத்தி, பாலஸ்தீனியர்களையும் படுகொலைக்கு இலக்கு கொண்டிருந்துடன் இணைந்த  பெருமளவு பாலஸ்தீனிய நிலத்தை திருடியவருக்கு மதிப்பு கொடுப்பதாக இருந்தது. ஆனால் அரசியல்வாதிகளும் செய்தி ஊடகமும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களால் மத்திய கிழக்கில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் நியாயபூர்வமாக வெறுக்கப்பட்ட நபருக்கு மரியாதை செலுத்துகையில் நிதானத்தைக் கடைப்பிடிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. 

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பில் பேசிய பிடென், முன்னாள் பிராந்திய காலனித்துவ சக்தியான பிரித்தானியாவின் சார்பில் பேசிய பிளேயர் இருவரும் ஷரோனுடைய குற்றங்களை மூடிமறைப்பதில் ஒரு குறிப்பிட்ட நலன்களைக் கொண்டிருந்தனர். ஏனெனில் அவர்களுடைய அரசாங்கங்கள் அப்பொழுது அக்குற்றங்களை ஆதரித்ததுடன், பின்னர் அதே வழிவகைகளை கடைப்பிடித்து விரிவாக்கி தங்கள் வெளியுறவுக் கொள்கையின் நிரந்தரமான பகுதியாக்கின.

எந்தவொரு வெளிநாட்டுத் தலைவரும் பங்கு பெறவில்லை. கலந்துகொண்ட ஒரே ஒரு அரசாங்கத்தின் தலைவர், செக் குடியரசின் பிரதம மந்திரி ஜிரி ருஸ்நோக் மட்டுமே. மத்திய கிழக்கு, ஆபிரிக்கா அல்லது இலத்தின்அமெரிக்கா ஆகியவற்றில் இருந்து உத்தியோகபூர்வமாக பிரதிநிதிகள் பட்டியலிடப்படவில்லை. ஜேர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியுறவு மந்திரிகள் வந்திருந்தனர். மற்ற மந்திரிகள் அல்லது துணை மந்திரிகள் இத்தாலி, பல்கேரியா, பிரித்தானியா, ஹாலண்ட், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், கனடா, ருமேனியா, கிரேக்கம் மற்றும் சைப்ரசில் இருந்து ஷ் டுமாவின் தலைவரும் வந்திருந்தனர்.

சடங்கின்போது, அவருடைய இராணுவப் பிரிவு பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஓடும் கட்டாயத்தை ஏற்படுத்திய பல அடாவடி நடவடிக்கைகளில் ஒன்றான 69 பேரை, அதில் பாதிபேர் மகளிர், குழந்தைகள் உள்ளடங்கலாக 1953இல் ஜோர்டானிய கிராமமான க்யிப்யாவில் கொன்றது; தெற்கு லெபனானை 1982ல் இவர் படையெடுத்து 19,000 பேரைக் கொன்றது; மேற்குக்கரையில் இவர் இடைவிடாமல் சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்றங்களை உருவாக்க ஆதரவு கொடுத்த ஷரோனுடைய பல குற்றங்கள் பற்றிக்குறிப்பு ஏதும் இல்லாதிருந்தது. எல்லாவற்றையும் விட இழிவானது லெபனிய பாசிச பாலங்கேயுடன் இணைந்து செப்டரம்பர் 1982ல் 3000 பாலஸ்தீனிய அகதிகளை பெய்ரூட்டின் சப்ரா, ஷாடிலா முகாம்களில் கொன்றதாகும். இந்த நிரூபிக்கப்பட்ட குற்றத்திற்கு அவர் விசாரணைக்கு கூட உட்படுத்தப்படவில்லை.

செய்தி ஊடகத் தகவல்கள்படி, மிகவும் குறைவான இஸ்ரேலியர்கள்தான் ஷரோனை ழியனுப்பும் அரசாங்கத்தின் சடங்கிற்கோ, முந்தையநாள் பார்வைக்கு வைத்தபோதோ சமூகமளித்திருந்தனர். ஷரோன் ஒரு பாலஸ்தீனியர்களின் படுகொலையாளன் என அறியப்பட்டதுடன், அவருடைய பிற்போக்குத்தன சுதந்திர சந்தை சமூக கொள்கைகளுக்காகவும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்டியதற்கும் அவருடைய குடும்பத்தின் ஊழலுக்கும் பெயர் போனவராவார். நாடு, உலகில் வறுமைக்கும் சமத்துவமின்மை நிலைக்கும் மோசமானது எனப் பெயரெடுத்துள்ள நிலையில் இஸ்ரேலியன் மிகப் பெரிய தனியார் பண்ணை உடமையாளராக அவர் ஆனார். நேற்றைய நிகழ்வுகளுக்குப் பின் ஷரோன் அவருடைய காசா பகுதிக்கு அண்மையில் 1000 ஏக்கர் பண்ணையில் புதைக்கப்பட்டார்.

மிகப் பெரிய வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவிற்குப் பிடென் தலைமை தாங்கினார்.இதில் காங்கிரசின் இரண்டு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், பிடெனின் தேசியப்பாதுகாப்பு ஆலோசகர், தேசியப்பாதுகாப்பு குழுவின் இஸ்ரேலிய, பாலஸ்தீனிய விவகாரங்களுக்கான இயக்குனர் ஆகியோர் இருந்தனர். தன் புகழுரையில் பிடென் அங்கிருந்த அனைவரின் சார்பில் பேசினார். ஷரோனுடைய இறப்புகுடும்பத்தில் ஒரு மரணம் போல் இருந்ததுஎன்றார். அமெரிக்கத் துணை ஜனாதிபதி, ஷரோனுடைய செல்லப் பெயரானபுல்டோசர்என்பதைத் தழுவி அவரைதளர்வுறாத வீரர் எனக்கூறி, அவரது வாழ்க்கையின் போக்கை இஸ்ரேல் நாட்டுப் பயணத்தில் காணலாம்என்றார்.

இதேபோல் , 2001, 2003ல் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் மீதான அமெரிக்க தலைமையிலான படையெடுப்புக்களில் சேர ஆயிரக் கணக்கான பிரித்தானிய துருப்புக்களை அனுப்பிய பிளேயர், 2007ல் இருந்து அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஷ்யா ஆகியவை ஆரம்பித்த ஏமாற்றுகரமான மத்திய கிழக்குசமாதானத்தில்தூதர் எனச் செயல்பட்டவராவார். அவர்தனது பாதையில் கணிசமான சிதைவுகளைவிட்டுச்சென்றபுல்டோசர் மீதுதன் பாராட்டுக்களை வெளிப்படுத்தினார்.

ஷரோனை இஸ்ரேலின்நிறுவனத் தந்தைகள்தலைமுறையின் உறுப்பினர் என்றும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளில் முன்னணியில் பல ஆண்டுகள் போரிட்டவரும், 1967 ஆறுநாள் போர் மற்றும் 1973 யோம் கிப்புர் போரில் உச்சக்கட்டத்தை அடைந்தவர் என்று நெத்தெனியாகு பாராட்டினார். இப்போர்கள் உறுதியாக இஸ்ரேலை அமெரிக்க ஆதரவுடைய விரிவாக்கம் செய்யும் நாடு என ஆக்கி, நிரந்தரமாக பாலஸ்தீனியர்களை அகதிகளாக மாற்றியது.

செய்தி ஊடகத்தின் பாராட்டுக்களைப் போலவே, பிடெனும் தன் உரையின் முடிவில் ஷரோனைசமாதானத்தை அடைய முற்பட்ட ஒரு மனிதன்என விசமத்தனமாக முன்வைக்க முயன்றார். இது 2005ல் இஸ்ரேலிய படையினரையும் குடியேறியவர்களையும் காசா பகுதியில் இருந்து ஷரோன் திரும்பப் பெற எடுத்த முடிவு பற்றிய குறிப்பு ஆகும்.

உண்மையில் ஷரோனுடைய நடவடிக்கை, வாழ்நாள் முழுவதும் அவர் பாலஸ்தீனியர்களை சேரிகளில் கட்டுப்படுத்திவைக்க அர்ப்பணித்ததுடன் தொடர்புபட்டதாகும். அதே நேரத்தில் அரேபியர்கள் இஸ்ரேலுக்குள் பெரும்பான்மை பெறுவதையும் தடுத்தார். அதேபோல் கிழக்கு ஜெருசெலேமிலும் மேற்குகரையிலும் உள்ள பாலஸ்தீனியர்களின் நிலத்தை நிரந்தரமாக இணைத்துக்கொள்ள அமெரிக்க ஆதரவையும் பெற்றார்.

பிளேயர் பங்கு பெற்றது அமெரிக்கத் தலைமையிலானசமாதான வழிவகைமோசடியை அடிக்கோடிட்டுக் காட்டியது. இது நிரந்தரமாக இஸ்ரேலை அமெரிக்க மற்றும் மேற்கு ஏகாதிபத்தியத்தின் ஆயுதக் கோட்டையாக மத்தியகிழக்கில் நிறுத்தும். அத்துடன் ஒரு சிறிய பாலஸ்தீனிய நாடு தமக்கு ஆதரவான பாலஸ்தீனிய முதலாளித்துவ உயரடுக்கினால் ஆளப்படுவதும் அருகே இருக்கும். “ஷரோன் போர்புரிபவர் என்பதில் இருந்து சமாதான மனிதரானார் என்ற கருத்தைநிராகரித்தார். அவருடைய மூலோபாய இலக்கு ஒரு பொழுதும் மாறவில்லை... அது போர் என்றால், அவர் போரிட்டார். அது சமாதானம் காணவேண்டும் என்றால், அதே இரும்பு போன்ற உறுதிப்பாட்டுடன் சமாதானத்தை நாடினார்.” என்றார்.

ஏகாதிபத்திய சக்திகள் குற்றம்சார்ந்த முறையில் அதிகரித்தளவில் அப்பட்டமாக நவ காலனித்துவத்திற்கு திரும்புவதின் முன்னோடியாக ஷரோன் இருந்தார். இதில் லிபியாவில் கடாபி அகற்றப்பட்ட ஆட்சிமாற்றம், சிரியாவிலும் அதற்கான உந்துதல் ஆகியவை அடங்கும்.

ஜெருசெலத்தில் நடவடிக்கைகள் ஆரம்பிக்க முன் மேற்குகரை கிராமமான குயிப்யா 1953 படுகொலையை நிகழ்வு கூர்ந்தது. ஷரோனுடைய படைகள் வந்தபோது நான்கு வயதில் இருந்த ஹமெட் கேதன் செய்தியாளர்களிடம் குழந்தைகள் சத்தமிடாதிருக்க மூத்தோர் தங்களின் கரங்களை குழந்தைகள் வாயை மூடப்பயன்படுத்தியதாக நினைவுகூர்ந்தார். இராணுவ நடவடிக்கையின்போது இடிக்கப்பட்ட, அழிக்கப்பட்ட கட்டிடங்களை கண்டபோது ஷரோனுடைய பெயர் என் கிராமத்தில் இருந்த தியாகிகள் பெயர்களைத்தான் நினைவூட்டுகிறதுஎன்றார்.

கட்டுரையாளர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்.

ஏரியல் ஷரோன், போர்க் குற்றவாளி (பெப்ரவரி 26, 1928 – ஜனவரி 11, 2014)