சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australian High Court leaves Sri Lankan refugees detained on high seas

ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இலங்கை அகதிகளை நடுகடலில் தடுத்து வைக்க அனுமதித்துள்ளது

By Mike Head
9 July 2014

Use this version to printSend feedback

ஒரு ஆஸ்திரேலிய உயர் நீதிமன்ற நேற்றைய விசாரணையின் விளைவாக, 37 குழந்தைகள் உட்பட 153 இலங்கை தஞ்சம் கோருவோர், இந்திய பெருங்கடலில் ஓரிடத்தில், நெரிசல் மிகுந்த ஆஸ்திரேலிய சுங்கப் படகில் -உண்மையில் ஒரு சிறைக் கப்பலில்- அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும், முழு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் வரை வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

அகதிகள் கடலில் தடுத்து வைகப்படுவதன் அப்பட்டமான சட்டவிரோத தன்மை மற்றும் அவர்கள் வெளியேற தள்ளப்பட்ட வன்முறைகளுக்குப் பொறுப்பான இலங்கை அரசாங்கத்திடமே கையளிக்கப்படும் அச்சுறுத்தலும் இருந்தபோதிலும், நீதிமன்ற வழக்கு அவர்களை பெரும் ஆபத்துக்குள் விட்டுவைத்துள்ளது. அவர்கள் நாடுகடத்தப்படுவதை அல்லது மீண்டும் கையளிக்கப்படுவதை தடுக்கும் சர்வதேச சட்டத்தை மீறி, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

நீதிமன்றத்தில், பிரதம மந்திரி டோனி அபோட்டின் அரசாங்கம், அது அகதிகளை தடுத்து, சிறையில் வைத்துள்ளதை முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. அது, இலங்கை கடற்படையிடம் அவர்களை ஒப்படைப்பதற்கு முன்னர், நீதிமன்றம் 72 மணித்தியால உத்தரவை வழங்கும் வரை மட்டுமே பொறுப்பேற்பு செய்கிறது. இந்த விதியால் ஏற்கனவே 41 பேர் அடங்கிய மற்றொரு படகும் இந்த வாரம் திருப்பி அனுப்பப்பட்டது.

ஆஸ்திரேலிய உயர்ந்த நீதிமன்றம் கூடும் வரை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுமாக 153 பேர்  மூன்று வாரங்கள் அல்லது அதற்கும் அதிகமாக திக்குத் தெரியாத ஒரு இடத்தில் கடலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பர். ஊடக தகவல்களின்படி, முடக்கப்பட்ட வாழ்க்கை நிலைமையில் 150 பேரை அடைத்து வைக்கும் வசதிகொண்ட ஒரு சுங்கப் படகான ஒசீன் புரடக்டரில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இல்லையெனில், அரசாங்கம் அவர்களை வலுக்கட்டாயமாக ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் அதன் தடுப்பு நிலையங்களுக்கு மாற்றக் கூடும். அல்லது நவூரு மற்றும் பப்புவா நியூ கினியின் மனுஸ் தீவுகளில் தனது கட்டுப்பாட்டில் உள்ள அதன் இழிநிலையிலான முகாம்களுக்கு அனுப்பக்கூடும்.

அகதிகள் தமது வழக்கில் வெற்றி அடைந்தாலும் கூட, அது "படகுகளை நிறுத்திவிடும்" தனது அரசாங்கத்தின் முயற்சிகளை -அனைத்து தஞ்சம் கோருவோரையும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையாமல் தடுக்கும் முயற்சிகளை- மாற்றிவிடாது என அபோட் அறிவித்தார். நீதிமன்றம் அதன் விசாரணையை தொடங்க முன், வழக்கு நடத்தும் வழக்கறிஞர்களை கண்டித்த அபோட், அரசாங்கத்தின் கொள்கைகளை குழப்ப முயற்சிக்கும் அரசியல் "ஆர்வலர்கள்" என்று குற்றம் சாட்டினார்.

நீதிமன்ற விசாரணைகளை அபோட் வெளிப்படையாக அவமதிப்பது, ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபனம் சட்ட விதிகளை, அதாவது உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களை வெளிப்படையாக அலட்சியம் செய்வதை காட்டுகிறது. தனது அகதிகள் விரோத நடவடிக்கைகள் சம்பந்தமான இரண்டு உயர் நீதிமன்ற வழக்குகளில் தோல்விகண்ட முந்தைய தொழிற் கட்சி அரசாங்கம் போல், லிபரல் தேசிய கூட்டணி அரசாங்கமும் தஞ்சம் கோருவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க மாற்று திட்டங்கள் உருவாக்குவதன் மூலம் எந்தவொரு நீதிமன்ற தீர்ப்புக்கும் மேலாக செயற்படும்.

தொழிற் கட்சியின் வழக்கில், கிறிஸ்துமஸ் தீவில் வீசா மறுக்கும் அதன் சட்ட விரோத செயற்பாடுகளையும் மலேசியாவில் அகதிகளைக் கொட்டும் அதன் திட்டத்தையும் உயர் நீதிமன்றம் நிராகரித்ததற்கு, நாவூரு மற்றும் மனுஸ் தீவில் அவர்களை காலவரையறை இன்றி அடைத்து வைத்ததன் மூலம் பிரதிபலித்தது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அங்கு அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

தற்போதைய சட்டவிதி குறிப்பாக அந்த முறைமையை சவால் செய்யல்லை. தமது வழக்கு ஒரு “அன்னியரை வெளியேற்றுவதற்கான இறைமையுடைய அரசின் அதிகாரம் சம்பந்தமாக இந்தப் பிரச்சினையை எடுத்துக்கொள்ளவில்லை மற்றும் தஞ்சம் கோருவோரை ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டுவரவும் முயற்சிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்த அகதிகளுக்காக வாதாடும் வக்கீல் ரொன் மேர்க்கெல், அவர்களை விசாரிக்க கடற்கரைக்கு அருகில் கொண்டு செல்ல முடியும் என்றார்.

ஆஸ்திரேலிய குடியேற்ற சட்டத்திற்கு புறம்பாக தஞ்சம் கோருவோரை வெளியேற்ற ஒரு "நிறைவேற்று" அதிகாரம் உள்ளது என்னும் எந்தவொரு கூற்றையும் இந்த வழக்கு மறுக்கும் என மேர்க்கெல் கூறினார். ஆஸ்திரேலிய சுங்கப் படகில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை "விரிவாக விசாரித்தல்" எனப்படுவது, சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ள செயற்படுத்தல் நேர்மையை மறுக்கின்றது என்று அவர் வாதிட்டார்.

அரசாங்கத்துக்காக வாதாடிய அரசுத் தலைமை வழக்கறிஞர் ஜஸ்டின் க்லீசொன், அவர்களது படகு ஆஸ்திரேலியாவின் "குடியேற்ற எல்லைக்கு" வெளியேயே தடுக்கப்பட்டதாக கூறப்படுவதாலும் மற்றும் அப்போதிருந்து அவர்கள் ஆழ்கடலுக்கு நகர்த்தப்பட்டுள் காரணத்தாலும் அவர்களுக்கு "குடியகல்வு சட்டத்தின் கீழ் எந்த உரிமையும் இல்லை" என்று வலியுறுத்தினார்.

நேற்றைய விசாரணையின் பின்னர், வழக்கை தாக்கல் செய்த சட்டத்தரணி ஜோர்ஜ் நியூஹவுஸ், அரசாங்கத்தின் 72 மணி நேர பொறுப்பேற்பை பாராட்டினார். "ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுமாக ஒரு பாதிக்கப்பட்ட குழுவினர், இலங்கையிலுள்ள அவர்களைத் துன்பப்படுத்தியவர்களிடமே மீண்டும் அனுப்பி வைக்கப்படமாட்டார்கள் என்பதே இன்றைய அரசாங்கத்தின் முடிவின் அர்த்தமாகும், நான் இந்த மக்களுக்கு கொஞ்சம் கருணை காட்டியமைக்காக பிரதமர் மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க ஒரு கணம் எடுத்துக்கொள்ள வேண்டும், என்று அவர் கூறினார்.

பொறுப்பேற்பது என்பதன் மூலம் அகதிகளுக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை என்பதே உண்மை. அவப்பேர் பெற்ற 2001 தம்பா வழக்கில், ஹவர்ட் கூட்டணி அரசு நீதிமன்றத்துக்கு இதே போன்ற ஒரு வாக்குறுதியை கொடுத்தது. நாவுறுவுக்கு இராணுவ ரீதியில் கொண்டு செல்லப்பட்ட 433 ஆப்கான் தஞ்சம் கோருவோரை அகற்றுவது சம்பந்தமான உயர் நீதிமன்ற சவாலில் தோற்றால், அவர்களை மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதாக அது கூறியது.

எனினும், அந்த வழக்கு உயர் நீதிமன்றம் வந்தபோது, நோர்வே கொள்கலன் கப்பலான தம்பா மூலம் முதலில் காப்பாற்றப்பட்ட அந்த மக்கள் சம்பந்தமாக நீதிபதிகள் தங்கள் கைகளை கழுவிக்கொண்டனர். பயணிகள் ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் சட்ட எல்லைக்கு அப்பால் கைப்பற்றப்பட்டதால், தம்மால் அந்த வழக்கை விசாரிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இன்றைய அபோட் அரசாங்கத்தைப் போலவே ஹவர்ட் அரசாங்கமும், குடியகல்வு சட்டத்தின் எந்த முறையான கட்டுப்பாடுகளையும் பொருட்படுத்தாமல், ஆஸ்திரேலிய பிரஜைகள் அல்லாதவர்களை ("அன்னியர்களை") வெளியேற்ற அதற்கு "நிறைவேற்று" அதிகாரம் உள்ளதாகவும் மற்றும் அகதிகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் இல்லை என்றும் வலியுறுத்தியது. ஆனால் அதன் சொந்த பொறுப்பேற்பை ஹவர்ட் அரசாங்கம் மீறியதை சரியென அங்கீகரித்த உயர் நீதிமன்றம், ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்கள் தஞ்சம் கோருவோரின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கு வழி வகுக்க உதவியது.

நேற்று உயர் நீதிமன்றம் அமர்ந்த நிலையில், 41 தஞ்சம் கோருவோர் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தின் கைகளில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு, காலியில் உள்ள பேர்போன உயர் பாதுகாப்பு பூசா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டில் நீதவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு, ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளனர். ஒன்பது குழந்தைகள் விடுவிக்கப்பட்டு 27 முதியவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தாலும், முன்னர் இந்த அரசாங்கத்தாலும் மற்றும் அதற்கு முந்தைய தொழிற் கட்சி அரசாங்கத்தாலும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட தஞ்சம் கோருவோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரபட்சங்கள், துஷ்பிரயோகம் மற்றும் அடக்குமுறைகள் பற்றிய ஒரு ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு உள்ளது.

உயர் நீதிமன்ற வழக்கில் ஈடுபட்டுள்ள 153 அகதிகள் இப்போது அந்த தலைவிதியை தவிர்த்துக்கொண்டிருந்தாலும், அவர்களின் நிலை சிறப்பாக இருக்கப் போவதில்லை. ஆஸ்திரேலியாவின் சொந்த தடுப்பு முகாம்களில் உள்ள கொடூரமான நிலைமைகள், நேற்று வெளியான செய்திகள் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளன. தாம் நாவுரூ அல்லது மனுஸ் தீவுக்கு அனுப்பப்படுவர் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் கிறிஸ்துமஸ் தீவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் குறைந்தது 10 தாய்மார்களாவது, தங்கள் பிள்ளைகள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர்.

தற்கொலை செய்துகொள்வதாக அச்சுறுத்தும் “உளவியல் மிரட்டலுக்கு தனது அரசாங்கம் அஞ்சப் போவதில்லை என அபோட் உடனடியாக அறிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் தற்கொலை முயற்சிகளின் மத்தியில், ஹவர்ட் மற்றும் தொழிற்கட்சி அரசாங்கமும் விடுத்த இதோபோன்ற மனிதாபிமானமற்ற அறிவிப்புக்களை இது நினைவூட்டுகிறது.

இந்த இரு கட்சிகளின் கூட்டு, தொழிற் கட்சி நிழல் குடிவரவு அமைச்சர் ரிச்சர்ட் மெர்லெஸ்ஸின் கருத்துக்களில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றன. அவர், கில்லார்டின் தொழிற் கட்சி அரசு தொடக்கி வைத்தவாறு, இலங்கை அகதிகளை கிறிஸ்துமஸ் தீவு, நாவுரூ அல்லது மனுஸ் வழியாக நாடு கடத்த மிகத் "திறமையான" மற்றும் "முழுமையான" வழியை இன்னும் எடுக்கவில்லை என அபோட் அரசாங்கத்தை விமர்சிக்கின்றார். அது ஆஸ்திரேலியாவின் சர்வதேச மதிப்பு "குப்பைக்குள்" போடப்படுவதை தடுக்கும் என்று அவர் கூறுகிறார்.

தொழிற் கட்சி அரசாங்கம் அகதிகளின் ஒவ்வொரு அடிப்படை உரிமைகளையும் நசுக்கிய நிலையிலும் அதனுடன் நடைமுறையில் கூட்டணி கொண்டிருந்த பசுமைவாதிகளும் ஆஸ்திரேலியாவின் மதிப்பு குறித்த இதே போன்ற கவலையை தெரிவித்தனர். கட்சியின் குடிவரவு பேச்சாளர் செனட்டர் சாரா ஹன்சன் யங், "சட்டத்துக்கும் மேலாக செயற்பட" முடியும் என்ற அரசாங்கத்தின் நம்பிக்கை "ஆழ் கடல்களில் அதன் நடவடிக்கைகளை கண்டித்து பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தின் மீது புதிய செனட் வாக்கெடுப்பு நடத்தும் போது பரீட்சிக்கப்படும் என சபதம் செய்தார்.

அவ்வப்போது நடக்கும் பாராளுமன்ற வாக்கெடுப்புகள் அகதிகளை பாதுகாக்கப் போவதில்லை. தொழிற் கட்சி அரசாங்கத்துக்கு பசுமைக் கட்சியினர் ஆதரவு வழங்கியது உட்பட வரலாற்றுப் பதிவுகள், நீதிமன்றங்கள் உட்பட முழு ஸ்தாபனமும், தஞ்சம் கோருவோருக்கு எதிராக இழைக்கப்படும் பெருகிவரும் குற்றங்களுக்கு உடந்தையாக உள்ளதை நிரூபிக்கின்றது. ஆஸ்திரேலிய மற்றும் இலங்கையிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள், அகதிகளை பாதுகாக்க முன்வருமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. (பார்க்க: "ஆஸ்திரேலியா அகதிகளை இலங்கை கடற்படையிடம் ஒப்படைப்பதை எதிர்த்திடுக").