சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The debacle in Iraq

ஈராக்கிய தோல்வி

Bill Van Auken
14 June 2014

Use this version to printSend feedback

1975 சைகோன் வீழ்ச்சி கடைசி அமெரிக்கரையும் தூதரகத்தின் மேலே நின்றிருந்த ஹெலிகாப்டர்களுக்குள் ஓடச் செய்ததற்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய தோல்வியை, கடந்த சில நாட்களாக ஈராக்கில் கட்டவிழ்ந்துள்ள சம்பவங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

பெண்டகனால் சுமார் 22 பில்லியன் டாலர் செலவிடப்பட்ட மற்றும் ஒரு தசாப்த காலமாக ஆயுதபாணியாக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட ஈராக்கிய இராணுவ படையின் பொறிவும், மற்றும் அல் கொய்தாவிலிருந்து பிரிந்து வந்த ஒரு அமைப்பான ISISஆல் (ஈராக்-சிரியாவின் இஸ்லாமிய அரசு) நாட்டின் பெரும்பகுதிகளில் அத்துமீறல் நடத்தப்பட்டிருப்பதும், ஒரு அன்னிய நாட்டு தலையீட்டின் தோல்வி என்பதையும் விட அதிகமாக எடுத்துக்காட்டுகிறது. இதில் என்ன சம்பந்தப்பட்டிருக்கிறது என்றால் 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான காலத்தில் பின்பற்றப்பட்ட ஒட்டுமொத்த கொள்கைகளின் உள்நோக்கிய வெடிப்பாகும்.

சோவியத் ஒன்றியத்தின் முடிவோடு, பூகோளத்தின் மூலோபாய பிராந்தியங்கள் மீது தடையின்றி மேலாதிக்கம் செலுத்துவதற்கு, அமெரிக்காவின் இராணுவ பலத்தைப் பயன்படுத்தும் பாதையின் குறுக்கே அங்கே எதுவும் இல்லையென்ற அமெரிக்க ஆளும் மேற்தட்டால் எட்டப்பட்ட தீர்மானத்திலிருந்து பெருக்கெடுத்ததே, “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" மற்றும் "பேரழிவு ஆயுதங்கள்" என்ற போலிக்காரணங்கள் பயன்படுத்தப்பட்ட, 2003இல் ஈராக் மீது படையெடுக்கும் முடிவாகும்.

முன்கூட்டிய யுத்தம் மற்றும் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதைக் கருவியாக கொண்டு, அமெரிக்க முதலாளித்துவத்தினது நீண்டகால பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளை பின்னோக்கி திருப்பி விட முடியுமென்பதே கருத்துருவாக இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களை எட்டுவதில் இராணுவவாதத்தின் தடையற்ற பயன்பாட்டை நியாயப்படுத்த, 2001 செப்டம்பர் 11 சம்பவங்களுக்குப் பின்னர் தொடர்ச்சியாக பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" கொண்டு வரப்பட்டது.

இந்த ஏகாதிபத்திய மூலோபாயத்திற்கு அடியிலிருக்கும் கொடூரமான சித்தாந்தம், 1991இல் முதன்முதலாக நடத்தப்பட்ட ஈராக் தாக்குதலைத் தொடர்ந்து, "படைபலமே வேலைக்காகும்" என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் இழிவார்ந்த செய்தியில் உதாரணங்காட்டப்பட்டது.

2003 மார்ச்சில் ஈராக்கிற்கு எதிராக தொடங்கப்பட்ட யுத்தம், ஈராக்கிய மக்களின் வாழ்க்கையை இரக்கமற்று உதாசீனப்படுத்தியதோடு சேர்ந்து முழுக்க முழுக்க பொய்களை அடித்தளமாக கொண்டிருந்தது. ஏறக்குறைய அதன் முதல் சில மணிநேரங்களிலேயே, யுத்தத்திற்கு அடித்தளமாக இருந்த ஏமாற்று கொள்கைகளும், எதிர்பார்ப்புகளும் கட்டவிழ தொடங்கி இருந்தன. ஒவ்வொரு புதிய நெருக்கடிக்கும் மற்றும் தோல்விக்கும் வாஷிங்டனின் விடையிறுப்பு வன்முறைக்கு தன்னிச்சையாக ஒப்புதல் அளிப்பதாக இருந்ததோடு, மத்திய கிழக்கில் மிகவும் முன்னேறிய சமுதாயங்களில் ஒன்றை ஒன்றுமற்றதாக ஆக்கியது.

வெள்ளியன்று ஈராக் மீதான ஒரு தலையங்கத்தில் நியூ யோர்க் டைம்ஸ், அமெரிக்க பெருநிறுவன ஊடகங்களில் அதிகளவில் பிரபலமாகி இருந்ததான ஒரு நிலைப்பாட்டை எடுத்தது, அதாவது அந்நாட்டில் இப்போது கட்டவிழ்ந்து வரும் "பேரழிவுக்கு வேறு யாரையும் விட... கண்டனத்திற்குரியவராக இருப்பது" ஈராக்கிய ஜனாதிபதி மலிக்கி ஆவார் என்று எழுதியது.

இது போன்றவொரு வாதத்திலிருந்து எழும் வெளிப்படையான கேள்வி, “இந்த மலிக்கி எங்கே இருந்து வந்தார்?” என்பது தான். அவர் அமெரிக்க தாக்குதலுக்கான ஒரு கருவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது தான் இதற்கு பதிலாக உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மலிக்கியின் ஆட்சியில் இப்போது காணுகின்ற பிரச்சினைகள், ஈராக்கிலும் மற்றும் அதைச் சுற்றி உள்ள பிராந்தியத்திலும் அமெரிக்க கொள்கையின் முரண்பாடுகளினது விளைபொருளாகும்.

சுன்னி அடிப்படையிலான பாதிஸ்ட் ஆட்சிக்கு எதிரான கூட்டாளிகளை வென்றெடுப்பதற்காக ஷியா எதிர்பாளர்களை பயன்படுத்துவதே, சதாம் ஹூசைனை கவிழ்ப்பதற்கான ஒரு யுத்தத்தைத் தொடங்கியதில் அமெரிக்க மூலோபாயத்தின் ஒரு இன்றியமையா உட்கூறாக இருந்தது. வாஷிங்டன் அதன் பிளவுபடுத்தி கைப்பற்றும் மூலோபாயத்தின் பாகமாக குறுங்குழுவாத பதட்டங்களை அற்பத்தனமாக பயன்படுத்திய நிலையில், அது இறுதியாக எண்ணிக்கையின்றி ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் இடம்பெயர்வுக்கும் இட்டுச் சென்ற குழுங்குழுவாத யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட்டது.

அது ஈராக்கில் ஷியா மதவாத கட்சிகளை ஊக்குவித்த போதினும், அதேநேரத்தில் ஷியா தலைமையிலான ஈரானுக்கு எதிராக ஒரு ஆக்ரோஷ கொள்கையைப் பின்பற்றியது, இதே கட்சிகள் சதாமின் ஆட்சியின் போது அங்கே தஞ்சமடைந்திருந்தன. கடந்த ஆண்டு வரையில் ஈரான் தான் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலின் இலக்கில் இருப்பதாக தோன்றியது.

அண்டை நாடான சிரியாவில் பஷர் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஒரு சக்தியாக சுன்னி இஸ்லாமிய தீவிரத்தன்மையை வாஷிங்டன் பயன்படுத்த முனைந்துள்ள நிலையில் மட்டுமே இந்த முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மொத்த விளைவு என்னவென்றால், அல் கொய்தாவுடன் இணைப்பு பெற்ற சக்திகள் ஈராக்கில் "பயங்கரவாதிகளாக" எதிர்க்கப்படுகின்ற அதேவேளையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் எல்லைக்கு மறுபக்கத்தில் சிரியாவில் அவற்றை "ஜனநாயகத்திற்கான" மற்றும் "சுதந்திரத்திற்கான" போராளிகளாக ஆதரித்து வருகிறது.

ஒரு நாட்டில் பின்பற்றப்படும் கொள்கைகள் மற்றொரு நாட்டில் பயன்படுத்தப்படும் கொள்கைளோடு மோதுகின்றன. ஈராக்கில் அல் கொய்தாவின் கிளை அமைப்புகளுக்கு எதிராக "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை" நடத்த அமெரிக்கா இப்போது ஆயுதங்களை அனுப்பியும் மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்த சிந்தித்தும் வருகின்ற அதேவேளையில், அதுவும் அதன் அரேபிய வளைகுடா பங்காளிகளும் லிபியா மற்றும் சிரியா இரண்டிலும் அதே போக்குகளைப் பலப்படுத்தவும், ஊக்குவிக்கவும் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

ஒவ்வொரு இடத்திலும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையானது கோட்பாடுகளின் அடித்தளத்தில் இல்லை, மாறாக உடனடி நலன்களைப் பின்தொடர்வதற்காக, “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" அல்லது "மனித உரிமைகள்" என்ற அதிகளவில் மதிப்பிழந்து போன நியாயப்பாடுகளை ஊக்குவித்து கொண்டு, கொடூரமான நடைமுறை சூழ்ச்சிகளில் தங்கி உள்ளது.

இப்போது இதே மாதிரியான நடவடிக்கை உக்ரேனில் அமெரிக்க தலைமையிலான தலையீட்டிலும் மற்றும் தென் சீன மற்றும் கிழக்கு சீன கடல்களில் பதட்டங்களை தீவிரப்படுத்தவும் பின்பற்றப்பட்டு வருவதால், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய அணுஆயுதமேந்திய சக்திகளுக்கு எதிரான மிகப் பெரும் பேரழிவுமிக்க யுத்தங்களின் ஆபத்துக்களை முன்னிறுத்தி வருகிறது.

அங்கே அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டு கொள்கையை எந்தவொரு ஊடுருவ முடியா தடையும் பிரித்து வைத்திருக்கவில்லை. வெளிநாடுகளில் செய்யப்படும் அமெரிக்க இராணுவ தலையீடுகளின் குணாம்சங்களான அடாவடித்தனம் மற்றும் குறுகியபார்வையின் அதே கலவை, 2008-2009 நிதியியல் பொறிவைக் கொண்டு வந்த வோல் ஸ்ட்ரீட்டின் குற்றசார்ந்த முறைகளில் வெளிப்படுவதைப் போல, அமெரிக்காவிற்குள்ளேயே அதன் ஒவ்வொரு கொள்கை அம்சத்திலும் மேலாதிக்கம் செலுத்துகிறது.

அது நிதியியல் பொறிவாக இருக்கட்டும் அல்லது சமூக சீரழிவாக இருக்கட்டும் அல்லது படுகொலை யுத்தங்களாக இருக்கட்டும், இந்த பேரழிவுகளைக் கொண்டு வந்ததற்காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், யாரும் பொறுப்பாக்கப்படவும் கூட இல்லை, மேலும் இத்தகைய பேரழிவுகளுக்கான மூல-ஆதாரங்கள் மீது எந்தவொரு உண்மையான அல்லது பகுத்தறிவார்ந்த விளக்கமோ அமெரிக்க மக்களுக்கு அளிக்கப்படவில்லை.

இது வெள்ளியன்று, வெள்ளை மாளிகை புல்வெளியில் காத்திருந்த ஹெலிகாப்டருக்கு அருகில் பத்து நிமிடங்கள் பார்வைக்கு வந்த ஜனாதிபதி பராக் ஒபாமாவால் எடுத்துக்காட்டப்பட்டது. ஒளிவுமறைவற்ற கடுமையோடும், அலட்சியத்தோடும் அவர், ஏற்கனவே பலர் கொல்லப்பட்டிருப்பதோடு சேர்ந்து அரை மில்லியன் ஈராக்கியர்களை அகதிகளாக ஆக்கி உள்ள ஈராக்கிய சீரழிவின் அளவைக் குறித்து எந்த உணர்ச்சியும் காட்டவில்லை.

அமெரிக்க வான்வழி தாக்குதல்கள் உட்பட முற்றுகையிடப்பட்ட பிரதம மந்திரி மலிக்கி ஆட்சிக்கு அமெரிக்க இராணுவ உதவிகள், "ஸ்திரப்பாட்டை ஏற்படுத்துவதற்கான" ஈராக்கிய அரசாங்கத்தினது பொதுவான முயற்சிகளின் மீது நிபந்தனைக்குட்பட்டிருக்கும் என்று ஒபாமா சுட்டிக் காட்டினார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் அது நிராகரித்ததும் மற்றும் ஈராக்கில் உள்ள அதன் தளங்களைப் பெண்டகன் மீண்டும் பெறுவதற்கு அனுமதிப்பதுமான "படை அந்தஸ்து" உடன்படிக்கையில் (“status of forces” agreement) கையெழுத்திட வேண்டுமென்பது ஒருவேளை ஒரு நிபந்தனையாக இருக்கலாம்.

ஈராக்கில் அமெரிக்க நலன்களைக் குறிப்பிட்டு காட்டி ஒபாமா அறிவித்தார், “ஈராக்கியர்கள் ஒரு சிறந்த வழித்தடத்தை, ஒரு சிறந்த இடத்தை அடைவதற்கு வாய்ப்பளிப்பதற்காக எங்களின் துருப்புகளும், அமெரிக்க மக்களும், மற்றும் அமெரிக்காவில் வரிசெலுத்துவோரும் வெளிப்படையாகவே நிறைய முதலீடுகளையும், தியாகங்களையும் செய்துள்ளனர்,” என்றார்.

என்னவொரு பொய்கள்! ஈராக்கிய யுத்தம் ஈராக்கிய மக்களுக்கு ஜனநாயகத்தைக் கொண்டு வர நடத்தப்பட்ட ஒரு மனிதாபிமான தர்மயுத்தமல்ல. அது "பேரழிவு ஆயுதங்கள்" குறித்தும், பாக்தாத் மற்றும் அல்கொய்தாவிற்கு இடையே இருந்திராத உறவுகள் குறித்தும் கூறப்பட்ட பொய்களின் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டு, மத்திய கிழக்கிலும் மற்றும் அதன் பாரிய எரிசக்தி வளங்கள் மீதும் மேலாதிக்கத்தைப் பெற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலதிக உந்துதலுக்காக நடத்தப்பட்டதாகும். ஈராக்கியர்களுக்கு ஒரு "சிறந்த இடத்தை" வழங்குவதில் இருந்து வெகு தூரம் விலகி, அந்த யுத்தம் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி உள்ளது.

அமெரிக்க யுத்தத்தால் நூறு ஆயிரக் கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டனர், அந்நாட்டைப் பற்றியிருந்த பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உள்கட்டமைப்பின் ஒவ்வொரு அம்சமும் ஒட்டுமொத்தமாக வெறும் இடிபாடுகளாக ஆக்கப்பட்டன. சுமார் 4,500 அமெரிக்க துருப்புகள் உயிரிழந்தனர், பத்து ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்தனர், மற்றும் நூறு ஆயிரக் கணக்கானவர்கள் ஒரு அருவருக்கத்தக்க காலனித்துவ-பாணியிலான யுத்தத்தின் பாகமாக இருந்ததற்காக மனரீதியாகவும், உணர்வுரீதியாகவும் அதை சகித்துக் கொண்டிருக்க விடப்பாட்டார்கள். அரசியல்ரீதியாக இணைந்திருந்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை கொழிக்க வைத்த குற்றஞ்சார்ந்த நிறுவனங்களுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் வாரி இறைக்கப்பட்டன, அதேவேளையில் ஈராக்கிய மக்களோ ஆதரவற்ற அவல நிலையில் விடப்பட்டனர்.

ஒபாமா நிர்வாகத்தால் படை அந்தஸ்து உடன்படிக்கையைப் பெற முடியாததன் விளைவாக 2011 இறுதியில் அந்நாட்டை விட்டு அமெரிக்க ஆக்கிரமிப்பு துருப்புகளின் கடைசி துருப்பையும் திரும்ப பெற வேண்டி இருந்த நிலையில், ஈராக்கிய யுத்தமானது ஏதோ சித்த பிரமையால் நடத்தப்பட்ட யுத்தமல்ல. அது வாஷிங்டனால் தொடங்கப்பட்ட பல தொடர்ச்சியான நடவடிக்கைகளின் பாகமாக இருந்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து லிபியா, சிரியா மற்றும் உக்ரேன் வரையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அது எங்கெல்லாம் தலையீடு செய்ததோ அங்கெல்லாம் இரத்தம் மற்றும் பேரழிவின் தடத்தை விட்டுச் சென்றுள்ளது. என்ன வளங்களைச் சூறையாடலாம், எந்த சந்தைகளைக் கைப்பற்றலாம், என்ன நிதியியல் நலன்களை முன்னெடுக்கலாம் என்ற மிக அடிப்படையான நோக்கங்களாலேயே ஒவ்வொரு இடத்திலும் அது உந்தப்பட்டுள்ளது.

இத்தகைய கொள்கைகளின் குற்றஞ்சார்ந்த குணாம்சம் அமெரிக்க ஆளும் மேற்தட்டின் அடிப்படை இயல்பில் வேரூன்றியதாகும், அதன் செல்வ வளமை அதிகளவிலான நிதியியல் ஒட்டுண்ணித்தனத்திலும் மற்றும் சூழ்ச்சிகளிலும் ஒன்று கலந்துள்ளது.

அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தின் ஒவ்வொரு பிரிவும் ஈராக்கிய சமூகத்தின் பேரழிவிற்கு ஆழமாக உடந்தையாகின்றன மற்றும் அந்நாட்டில் இன்று கட்டவிழ்ந்து வரும் பேரழிவுக்கும் பொறுப்பாகின்றன. இதில் குறைந்தபட்சம் கடைசி நான்கு அமெரிக்க நிர்வாகங்கள் உள்ளடங்குகின்றன முதலாம் புஷ், கிளிண்டன், இரண்டாம் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகம்இவை ஒரு கால் நூற்றாண்டின் போக்கில் அந்நாட்டை தாக்கி ஆக்கிரமித்துள்ளளன.

எத்தனையோ மனித உயிர்களைப் பறித்துள்ள நடவடிக்கைகளின் மீது ஆழ்ந்த விசாரணை நடத்துவதைக் குறித்து கூட கவலைப்படாமல், வலிந்து தாக்கும் யுத்த முடிவுகளுக்குத் தொடர்ச்சியாக முத்திரை குத்தி அனுமதி வழங்கிய காங்கிரஸூம் இதில் உள்ளடங்குகிறது.

அடுத்து அங்கே உள்ள அமெரிக்க ஊடகங்கள், இவை அதிகாரத்தில் இருந்தவர்கள் என்னென்ன கொள்கைகளைப் பின்பற்றினார்களோ அவற்றை ஆதரிக்கும் பிரச்சாரங்களை செய்து முன்னொருபோதும் இல்லாதளவிற்கு அவற்றின் நேரடியான பாத்திரத்தை வழங்கி உள்ளன.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர், அமெரிக்க மக்கள் மீது ஒரு ஆக்ரோஷ யுத்தத்தை செருக பயன்படுத்தப்பட்ட பொய்களை ஊக்குவித்த, சில விடயங்களில், அவற்றை அலங்கரித்த அதே பேச்சாளர்களை மற்றும் அதே கட்டுரையாளர்களை, தற்போதைய ஈராக்கிய தோல்வியின் சூழலில் காணும் போது குமட்டுகிறது.

இத்தகைய உட்கூறுகளால் வழங்கப்பட்ட குறுகியபார்வையிலான பொய் பகுப்பாய்வுகளில் இருந்து அப்போது வேறுபட்டிருந்தது உலக சோசலிச வலைத் தளத்தால் வழங்கப்பட்ட அறிக்கைகள் மட்டுமே ஆகும்.

மார்ச் 2003இல், ஈராக்கில் அமெரிக்க யுத்தம் தொடங்கிய போது, WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் குறிப்பிடுகையில்: “இப்போது தொடங்கி உள்ள மோதலின் ஆரம்ப கட்ட விளைவுகள் என்னவாக இருந்த போதினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பேரழிவினைச் சந்திக்க உள்ளது. அதனால் உலகினை வெற்றி கொள்ள முடியாது. மத்திய கிழக்கு மக்களின் மீது அதனால் காலனித்துவ தளைகளை மீண்டும் சுமத்த முடியாது. அதனது உள்ளார்ந்த பிரச்சினைகளுக்கு யுத்தத்தின் ஊடாக சாத்தியமான தீர்வு ஒன்றைக் காண முடியாது. மாறாக, யுத்தத்தால் விளைவிக்கப்படும் முன்கணிக்கவியலாத சிக்கல்களும், அதிகரிக்கும் எதிர்ப்பும் அமெரிக்க சமுதாயத்தின் அனைத்து உள்முரண்பாடுகளையும் தீவிரமாக்கும்,” என்று எழுதினார்.

இந்த முன்னோக்கு முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த பேரழிவு நிகழ்ந்துள்ளதோடு, அது எவ்விதத்திலும் இறுதியானதாக இருக்கப் போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆழ்ந்த நெருக்கடி அமெரிக்காவிற்குள்ளேயே அதுபோன்ற விளைவுகளை உண்டாக்கும்.

அதிகரித்து வரும் உலக யுத்த அபாயங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான இரக்கமற்ற தாக்குதல்களை எதிர்கொள்ள அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சோசலிச மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு அரசியல் இயக்கத்தைஅதாவது நிதியியல் செல்வந்த தட்டின் ஆட்சிக்கும் மற்றும் முதலாளித்துவ பொருளாதார அமைப்புமுறைக்கும் முடிவு கட்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தோடு ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதே தீர்க்கமான அரசியல் கேள்வியாகும்.