சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Obama exploits Iraq crisis as pretext for war against Syria

ஒபாமா ஈராக் நெருக்கடியை சிரியாவிற்கு எதிரான யுத்தத்திற்கு போலிக்காரணமாக பயன்படுத்துகிறார்

By Patrick Martin and Joseph Kishore
20 June 2014

Use this version to printSend feedback

சிரியாவை அதன் மையநலனாக கொண்டு, மத்திய கிழக்கு முழுவதிலும் அமெரிக்க யுத்த உந்துதலைத் தீவிரப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக ஒபாமா நிர்வாகம் ஈராக்கிய நெருக்கடியை பயன்படுத்தி வருகிறது.

வியாழனன்று ஒரு மதியவேளை பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்திய ஜனாதிபதி ஒபாமா அதில் இராணுவத்தை நிலைநிறுத்தும் பாகமாக ஈராக்கிற்குள் 300 இராணுவ ஆலோசகர்களை அமெரிக்கா அனுப்புமென்று அறிவித்தார், வெளிப்பார்வைக்கு ஈராக்-சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) தலைமையிலான ஒரு கிளர்ச்சியை இலக்கில் கொண்டதாக காட்டப்படும் குண்டுவீச்சு திட்டங்களும் அதில் உள்ளடங்குகிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பெயர் வெளியிடாத மூன்று நிர்வாக அதிகாரிகளோடு தொலைபேசி வழி கலந்துரையாடல் நடந்தது. ஈராக்-சிரியா எல்லைகளின் இருதரப்பிலும் ISIS செயல்பட்டு வருகின்ற நிலையில், மற்றும் கிழக்கு சிரியாவில் கணிசமான பிராந்தியங்களை அது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கின்ற நிலையில், ISIS மீதான அமெரிக்க தாக்குதல்கள் ஈராக்கினுள் மட்டுப்படுத்தப்படுமா என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, நாங்கள் சாத்தியமான அமெரிக்க நடவடிக்கையை ஒரு குறிப்பிட்ட புவியியல் எல்லையோடு நிறுத்த மாட்டோம், என்று ஒரு அதிகாரி விடையிறுத்தார்.

அந்த அதிகாரி தொடர்ந்து கூறுகையில், ஒரு உடனடி அச்சுறுத்தலுக்கு எதிராக அமெரிக்காவைப் பாதுகாக்க அவசியப்பட்டால், நேரடி அமெரிக்க இராணுவ நடவடிக்கை உட்பட நாங்கள் தேவையான நடவடிக்கையை எடுப்போம் என்பதை ஜனாதிபதி சரியான நேரத்தில் மீண்டும் அறிவித்துள்ளதாக, தெரிவித்தார். ISIS பரந்தளவில் செயல்பட்டு வருகிறது, மேலும் அமெரிக்காவை பாதுகாப்பதற்கு அவசியப்படும் நடவடிக்கையோடு மட்டும் எங்களின் திறமையை நாங்கள் நிறுத்திவிடப் போவதில்லை, என்றார். ISISஆல் அச்சுறுத்தலுக்குட்பட்ட பிராந்தியங்களில் "நம்முடைய சொந்தநாடும்" இருக்கிறது என்பதையும் அந்த அதிகாரி சேர்த்துக் கொண்டார்.

நிர்வாகம் "சிரியா மற்றும் ஈராக்கில் நிலவும் மோதல்களை ஒரு தனிச்சவாலாக பார்க்க தொடங்கியுள்ளது" என்று "மூத்த நிர்வாக அதிகாரிகளை" மேற்கோளிட்டு காட்டி வாஷிங்டன் போஸ்ட் எழுதுகையில், சிரியாவில் நிலவும் நிலைமை "சிரியாவில் அதன் கணிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய நிர்வாகத்தை நிர்பந்திக்க" கூடும்இராணுவ தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க ஆதரவிலான எதிர்ப்புக்கு மிக நவீன ஆயுதங்கள் வழங்குதல் ஆகியவையும் அதில் உள்ளடங்குகிறது என்று செய்தி வெளியிட்டது.

WSWS எச்சரித்ததைப் போலவே, ஒரு கொடூரமான மற்றும் இரத்தக் களரியான யுத்த மற்றும் ஆக்கிரமிப்பால் தோற்றுவிக்கப்பட்ட ஈராக்கிய தோல்விக்கு காட்டும் விடையிறுப்பில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் "கரங்களில் அருவருக்கத்தக்க மற்றும் இரத்தக்களரியான சூழ்ச்சிகள் பஞ்சமில்லாமல் உள்ளன. கடந்த ஆகஸ்டில் சிரியாவிற்கு எதிரான வான்வழி தாக்குதல்களைத் தொடங்க முடியாமல் தோல்வி அடைந்ததைத் தலைகீழாக திருப்புவதற்கு, அந்த பின்னடைவை அமெரிக்க ஆளும் வட்டாரங்கள் பரவலாக இப்போது பேரழிவுகரமாக பார்க்கின்ற நிலையில், அது தோற்றுவித்த இந்த நெருக்கடியை இப்போது அது கைப்பற்றியுள்ளது.

சிரியாவை இலக்கில் வைக்கும் இராஜாங்க மற்றும் இராணுவ திருப்பம், ஒபாமாவின் பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஒரு நாளைக்கு முன்னர் புதனன்று நியு யோர்க் டைம்ஸில் பிரசுரமான ஒரு தலையங்க கட்டுரையில் தயார் செய்யப்பட்டிருந்தது, அது 2009இல் இருந்து 2011 வரையில் ஹிலாரி கிளிண்டனின் கீழ் வெளியுறவுத்துறைக்கான கொள்கை திட்டமிடும் இயக்குனராக பணியாற்றிய ஜனநாயகக் கட்சியின் வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்தின் ஒரு முன்னணி உறுப்பினரான ஆன்-மரியா ஸ்லோட்டரால் எழுதப்பட்டிருந்தது.

ஸ்லோட்டரின் கருத்துரை சிரியாவில் ஒபாமா நடவடிக்கை எடுக்க தவறியமைக்காக விமர்சிக்கிறது. சிரியாவில் ISISஇன் வளர்ச்சியில் இல்லாதது, ஆனால் ஈராக்கில் ISISஇன் அச்சுறுத்தலில் ஏன் குறிப்பிடத்தக்க அளவிற்கு முக்கிய ஆர்வமுள்ளதாக இருக்கிறது? என்று கேள்வி எழுப்பும் ஸ்லோட்டர், முடிப்பதற்கு முன்னர், பதில் ... வரையறுக்கப்பட்ட அளவில் என்றாலும் கூட ஆனால் உடனடியாக இரண்டு நாடுகளிலும் படைகளை நன்கு ஈடுபடுத்தலாம், என்று எழுதுகிறார்.

ஸ்லோட்டரின் முன்னாள் அதிகாரி ஹிலாரி கிளிண்டன் சமீபத்திய நாட்களில் அளித்த பல நேர்காணல்களில், அவர் சிரியாவில் குண்டுவீசுவதை ஆதரித்ததாக குறிப்பிட்டுள்ளார், இந்த நிலைப்பாட்டை அவர் அவரது புதிதாக பிரசுரிக்கப்பட்ட நினைவுத்தொகுப்பு புத்தகத்திலும் குறிப்பிட்டிருக்கிறார்.

எந்தவொரு பொது விவாதமும் இல்லாமல், பரந்த மக்கள் எதிர்ப்பிற்கு முன்னால், ஒபாமா நிர்வாகம் தற்போது சிரியா, ஈரான், துருக்கி மற்றும் வளைகுடா முடியாட்சிகளை உள்ளடக்கிய ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும்  சுற்றிசூழ அச்சுறுத்துகின்ற ஒரு முடிவில்லா மோதலுக்குள் நாட்டை இழுக்க தயாராகி வருகிறது.

அந்த மோதல் மத்திய கிழக்கோடு அடங்கிவிடுவதல்ல. சிரியாவிற்கு எதிரான யுத்த உந்துதல் பிரிக்க முடியாதபடிக்கு சிரியாவின் ஒரு பிரதான கூட்டாளியான ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பிய ஆதரவிலான பிரச்சாரத்தோடு பிணைந்துள்ளது. கடந்த ஆண்டு சிரியாவிற்கு எதிரான யுத்தத்திலிருந்து தற்காலிகமாக பின்வாங்க ஒபாமா நிர்வாகம் எடுத்த முடிவில் ரஷ்யாவிடமிருந்து வந்த எதிர்ப்பு ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருந்தது. இதற்கு பின்னர் தான் ஒரு ரஷ்ய-ஆதரவிலான அரசாங்கத்தை கவிழ்க்கவும் மற்றும் ரஷ்யா உடனேயே ஒரு மோதலைத் தூண்டிவிடவும் உக்ரேனிய நடவடிக்கைகள் தொடர்ந்தன.

அதன் பொறுப்பற்ற யுத்த காய்ச்சலில், அமெரிக்க வெளியுறவுக்கொள்கை முரண்பாடுகளால் பிளவுபட்டுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டிலும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்திருந்ததாக கூறப்படுகின்ற போதினும், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிரான பிரச்சாரத்தின் பாகமாக அமெரிக்காவும் மற்றும் அதன் கூட்டாளிகளான சவூதி அரேபியா மற்றும் கட்டாரும் உண்மையில் ISIS உட்பட இதே சக்திகளுக்கு நிதியுதவி அளித்துள்ளன. ஈராக்கில் ISIS தலைமையிலான கிளர்ச்சி, சிரியா மீது குண்டுவீசுவதற்கு போலிக்காரணமாக இருக்கையில், உண்மை இலக்காக இருக்கப் போவது ISIS அல்ல, மாறாக சிரிய அரசாங்கம் தான்.

அனைத்திற்கும் மேலாக சிரியாவில் உள்நாட்டு யுத்தமானது, அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சியால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் ஒரு நேரடி விளைவாகும், அந்த ஆட்சி தான் 2006 -2007இல் குர்திஷ் பிரிவினைவாதத்தை ஊக்குவித்ததன் மூலமாகவும், ஒரு நிர்மூலமாக்கும் யுத்தத்தில் ஷியைட் போராளிகள் குழுக்களை ஒருங்கிணைத்ததன் மூலமாக சுன்னி சமூகத்தின் எதிர்ப்பை நசுக்க முனைந்தது.

குறுங்குழுவாத மோதல்களைத் திட்டமிட்டு தூண்டிவிட்ட பின்னர், அமெரிக்கா இப்போது ஈராக்கில் இன மற்றும் மத பிரிவுகளை ஐக்கியப்படுத்த தவறியதற்காக பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கியின் ஈராக்கிய அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டி வருகிறது.

ஈராக்கிய நெருக்கடியானது, ஈராக்கிய அரசியலில் குறிப்பாக மலிக்கியை நீக்குவதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மறுகட்டமைப்பு செய்யவதற்கான ஒரு வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. வியாழக்கிழமை பத்திரிகையாளர் கூட்டத்தில் ஒபாமா பேசுகையில், ஈராக்கை யார் ஆள வேண்டுமென்பதை, அமெரிக்க அரசாங்கம் அல்ல, மாறாக ஈராக்கிய மக்கள் தான் முடிவு செய்ய வேண்டுமென்ற சம்பிரதாயமான அறிவிப்புகளுடன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார். ஆனால் நிர்வாகம் "பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கி இல்லாத ஒரு புதிய அரசாங்கத்தை விரும்புகிறது என்பதற்கு சமிக்ஞை காட்டுகிறது" என்று வியாழனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது.

அமெரிக்க இராணுவம் ஈராக்கைக் கைப்பற்றிய பின்னர் மலிக்கி பதவியில் நியமிக்கப்பட்டார் என்பதோடு, அவர் ஆக்கிரமிப்பு ஆட்சியின் ஒரு கைப்பாவை என்பது தான் உண்மை ஆகும். அவர் ஒரு பெரும் தடையாக மாறி இருப்பதாக வாஷிங்டன் தீர்மானித்தால், ஒரு பொருத்தமான மாற்றீட்டை கண்ட உடனேயே மலிக்கி பதவியிலிருந்து நீக்கப்படுவார்.

இவை அனைத்துமே முற்றிலுமாக சர்வதேச சட்டத்தை மீறி நடத்தப்பட்டு வருகிறது. துருப்புகளை நிலைநிறுத்தும் அறிவிப்புக்கு என்ன சட்டப்பூர்வ நியாயப்பாடு இருக்கிறதென்று வியாழக்கிழமை பத்திரிகையாளர் கூட்டத்தில், ஒரேயொரு பத்திரியாளர் கூட ஒபாமாவிடம் கேட்க நினைக்கவில்லை. மக்கள் வாக்கெடுப்பு ஒருபுறம் இருக்கட்டும், போலியான ஒரு காங்கிரஸ் வாக்கெடுப்பு கூட இல்லாமல், எங்கே வேண்டுமானால் யாருக்கு எதிராகவும் யுத்தம் தொடுக்க ஜனாதிபதிக்கு உரிமை இருக்கிறது என்பதே ஒபாமா நிர்வாகத்தின் நிலைப்பாடாக இருக்கிறது.

புதனன்று ஒபாமா வெள்ளை மாளிகையில் இரண்டு கட்சிகளினதும் உயர்மட்ட காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தார், பத்திரிகை செய்திகளின்படி, யாரொருவரும் ஈராக்கிலோ அல்லது பரந்தளவில் மத்திய கிழக்கிலோ அமெரிக்க இராணுவ தலையீட்டிற்கு இருக்கும் எந்தவொரு அரசியலமைப்புரீதியான கட்டுப்பாடுகளையும் எழுப்பவில்லை.

குடியரசுக் கட்சியின் செனட் சபை சிறுபான்மையினர் தலைவர் மிட்ச் மெக்கொனெல் கூறுகையில் "எங்களுக்குள் ஒரு நல்ல கலந்துரையாடல் நடந்தது, என்று தெரிவித்ததோடு தொடர்ந்து கூறுகையில், ஒபாமா "அவர் எடுக்கவேண்டிய  நடவடிக்கைகளுக்கு எங்களிடமிருந்து அனுமதியையும் பெற வேண்டிய அவசியமிருப்பதாக அவர் உணரவில்லை என்று குறிப்பிட்டதாக, தெரிவித்தார். பிரதிநிதிகள் சபை சிறுபான்மை தலைவர் ஜனநாயக கட்சியின் நான்சி பிலோசி கூறுகையில், இன்று விவாதிக்கப்பட்ட பாதுகாப்பு உதவிகளை அதிகரிப்பது மீதான குறிப்பிட்ட வாய்ப்புகளைப் பின்பற்றுவதற்கு ஜனாதிபதிக்கு மேற்கொண்டு எந்தவொரு சட்டரீதியான அனுமதியும் தேவையென்று அவர் நம்பவில்லை" என்று தெரிவித்தார்.

சிரியாவில் அமெரிக்க தலையீடு ஒருபுறம் இருக்கட்டும், ஈராக்கிற்குள் அமெரிக்க இராணுவ படைகளை மீண்டும் அனுப்புவதையே அமெரிக்க மக்களில் பெரும்பான்மையினர் எதிர்க்கின்றனர், ஆனால் இந்த ஆழ்ந்த யுத்த எதிர்ப்புணர்வு அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்கு உள்ளேயும், ஏகாதிபத்திய யுத்தத்தின் அதன் இரண்டு கட்சிகளுக்கு உள்ளேயும் எந்தவொரு வெளிப்பாட்டையும் காணவில்லை.