சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government tries to whitewash anti-Muslim attacks

இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை மூடி மறைக்க முயற்சிக்கின்றது

By Wasantha Rupasinghe
19 June 2014

Use this version to printSend feedback

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில், ஜனாதிபதி மஹிந்த இராபஜபக்ஷவின் அரசாங்கம் சிங்கள-பௌத்த தீவிரவாத குழுவான பொது பல சேனவினால் (பிபிஎஸ்) தூண்டிவிடப்பட்ட தாக்குதல்களில் தனது அரசியல் பொறுப்பை மூடி மறைக்க முயற்சிக்கின்றது.

கொமும்புக்கு தெற்கே 60 கிலோமீற்றரில் தொலைவில் அமைந்துள்ள அளுத்கமவில் பிபிஎஸ் கூட்டமொன்றை நடத்தி பெருமளவில் முஸ்லீம் சமூகத்தை அச்சுறுத்திய பின்னரே கடந்த ஞாயிறன்று முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பித்தன. (பார்க்க; இலங்கை: சிங்கள-பெளத்த கும்பல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது)

பௌத்த துறவியான பிபிஎஸ் பொதுச் செயலாளர் கலேகொட அத்தே ஞானசார, ஒரு முஸ்லீமோ அல்லது அந்நியரோ சிங்களவர்களைத் தொட்டால் அதுவே அவர்களுக்கு முடிவுஎன பிரகடனப்படுத்தினார், இந்தப் பாசிசக் குழு 1000 க்கும் மேற்பட்ட குண்டர் கும்பலை ஆத்திரமூட்டலுக்கு தூண்டிவிட்டதனால், மூவர் கொல்லப்பட்டதோடு பெருந்தொகையானவர்கள் காயமடைந்துள்ளனர். வீடுகளும் கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அன்றைய தினமே அருகிலுள்ள பேருவளை நகருக்கும் தாக்குதல் பரவியது.

அரசாங்கம் இந்த வன்முறையை பயன்படுத்தி அந்தப் பிரதேசத்துக்கு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரையும் இழிபுகழ் பெற்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையையும் அனுப்பிவைத்து, கால வரையறையற்ற ஊரடங்குச் சட்டத்தையும் அமுல்படுத்தியது. திங்கள் இரவு, இந்த ஊரடங்குச் சட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, இராணுவமும் பொலிசும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே காடையர்கள் அளுத்கமவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்துகம மற்றும் வெலிப்பன நகரங்களைக் கொள்ளையடித்தனர்.

துப்பாக்கி, பெற்றோல் குண்டுகள் மற்றும் கத்திகளையும் வைத்திருந்த 50 அல்லது 60 குண்டர்கள் வெலிப்பனவில் 9 வீடுகளையும் 26 கடைகளையும் இரவோடு இரவாக நிர்மூலமாக்கினர்.

இந்தக் காடையர்கள் முஸ்லீம் ஒருவருக்கு சொந்தமான பண்ணையையும் தாக்கி அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த 58 வயதான தமிழ் தொழிலாளியையும் அடித்துக் கொன்றனர். அவரது சக ஊழியர் காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய மலையகப் பகுதியான பதுளையில், பிபிஎஸ் அணிதிரட்டிய காடையர்கள் கடைகளைத் தாக்கியோடு மற்றவர்களை கடைகளை மூடுமாறு நிர்ப்பந்தித்தனர். செவ்வாய் கிழமை, அரசாங்கம் 8 மணியிலிருந்து 12 மணி வரை ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியது.

வன்முறைக்கு பயந்து, முஸ்லீம் மாணவர்கள் கொழும்பிலும் கூட பாடசாலைக்கு செல்லவில்லை

குறிப்பிட்ட பிரதேசத்தில் பொலிஸ்-இராணுவ கட்டுப்பாடு நிலைநிறுத்தப்பட்டது. அளுத்கம, வெலிப்பன, தர்கை நகர், பேருவளை, மாகொன்ன ஆகிய இடங்களில் இராணுவம் நிலைகொண்டுள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரூவான் வணிகசூரிய குறிப்பிட்டார். மற்றைய பகுதிகளில் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

தாக்குதல் சம்பந்தமாக அபிவிருத்தியடைந்த சீற்றத்திற்கு மத்தியில், கலவரத்தை தணிப்பதற்காக என்று அரசாங்கம் நாடகமொன்றை அரங்கேற்றியது, செவ்வாய் கிழமை, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண, கலவரத்தில் ஈடுபட்ட 41 சிங்களவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு அறிவித்தார். அவர்களில் 20 பேர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, ஜூன் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பிபிஎஸ் மாவனல்ல நகரத்தில் நடத்திவிருந்த கூட்டத்தை நிறுத்தவதற்கு பொலிஸ் நீதிமன்ற உத்தரவைப் பெற்றது.

காடையர்களை சுதந்திரமாக நடமாட அனுமதித்த பின்னர், பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன், அளுத்கம கலவரம் தொடர்பாக ஒரு பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். இது ஒரு மூடிமறைப்பாகவே இருக்கும். இவ்வாறான விசாரனைகள் விமர்சனங்களை மிருதுவாக்க வழமையாக பயன்படுத்தப்படுகிறது. இலங்ககோன் தாக்குதலை தூண்டிவிட்ட பிபிஎஸ் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.

முஸ்லீம்களை பயமுறுத்தி சிங்கள குண்டர்களின் ஊர்வலத்தை வழிநடத்திய பிக்கு ஞானசார, சுதந்திரமாக கொழும்பில் நடமாடுகின்றார். அவர் செவ்வாய் கிழமை பத்திரிகையாளர் மாநாடு ஒன்றையும் நடத்தி, தமது அமைப்பிற்கும் வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மறுத்தார்.

பிபிஎஸ் குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாடவிட்டுள்ள அதேவேளை, அரசாங்கம் ஊடகங்களே இந்த இனவாத தாக்குதலுக்கு காரணம் என்பது போல் அவற்றுக்கு எச்சரிக்கை விடுத்தது. உத்தியோகபூர்வமான அறிக்கை ஒன்று, “எல்லா ஊடக நிறுவனங்களும் நாட்டில் மத சக வாழ்வினை பாதிக்கும் சம்பவங்களை எழுதும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்எனக் கேட்டுக்கொண்டது. “நேற்றைய அளுத்கம சம்பவம் தொடர்பாக வதந்திகளை பரப்புவதும் அறிக்கை விடுவதும் ஊடக கலாச்சாரத்திற்கும் தர்மத்திற்கும் முரணானதுஎன அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஊடக வதந்திகளோ பிழையான தகவல்களோ தாக்குதல்களை கட்டவிழ்த்து விடவில்லை. உண்மையிலேயே கொழும்பிலுள்ள அனைத்து அச்சு மற்றும் மின் ஊடகங்களும் சுய தணிக்கை செய்து கொண்டு, அரசாங்கத்தினதும் பொலிசினதும் அறிக்கைகளையே பிரதானமாக பிரசுரித்தன. அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு, ஊடகங்களும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை மதங்களுக்கிடையிலான மோதலாககுறிப்பிட்டு பௌத்த அதிதீவிரவாதிகளின் பொறுப்பினை மூடி மறைக்கின்றன.

அளுத்கம சம்பவத்தில் போல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய சம்பவங்களை பாரிய சம்பவமாக மிகைப்படுத்தலாம்எனக் கூறி அரசாங்கம் சமூக வலைத் தளங்கள் மீது சாடியது. பௌத்த அதிதீவிரவாதிகள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி தாக்குதலுக்கு தூபமிட்டது வெளிப்படையான போதிலும், அரசாங்கத்தின் விமர்சனமானது சமூக ஊடகங்களை கட்டப்படுத்துவதற்கான தயாரிப்பை சமிக்ஞை செய்கின்றது. இது­­ சிறிதுகாலமாக அது இலக்கு வைத்திருக்கும் விடயமாகும்.

அரசாங்க கட்டுப்பாட்டிலான டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், அரசாங்கத்தின் பாதையை பிரதிபலித்தது: “சில சமூக ஊடக விவாதத் தளங்களில் (அளுத்கம) சம்பவத்தை பற்றி காட்டிய ஆவேசம், அவர்களது குறுகிய அரசியல் தேவையை நிறைவேற்றிக் கொள்ள இந்த சம்பவத்தை சுரண்டிக்கொள்ள அவர்களுக்கு விசேட அழைப்பு வேண்டியதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.”

இந்த பாரிய இனவாத தாக்குதல் தொடர்பான ஏனைய கட்சிகளின் பிரதிபலிப்பு, அவர்களின் கபடத்தனத்தினை அம்பலத்துக்கு கொண்டு வந்தது. எதிர் கட்சியான ஜக்கிய தேசிய கட்சி, அரசாங்கம் பிபிஎஸ் சார்பாக இருந்து, இன முரண்பாட்டினை தூண்டிவிட்டு, அரசியல் செல்வாக்கினை தேடிக்கொள்கிறது, எனக் குறிப்பிட்டது. எனினும் யூஎன்பீயின் ஆட்சி காலத்தில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த இனவாத தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதில் அது பெரும் சாதனை செய்துள்ளது.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தினை ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ), வன்முறையை கண்டித்து அறிக்கை ஒன்றை விடுத்த போதிலும், பிபிஎஸ்சின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. அது இரு சமூகங்களையும் சார்ந்த மக்களையும் பொறுமையை கடைப்பிடித்து சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. பௌத்த அதிதீவிரவாதிகளின் குற்றங்களை இவ்வாறு மூடிமறைப்பது, ஜேவிபீயின் சிங்கள இனவாத நோக்கு மற்றும் அவ்வாறான சக்திகளுக்கு சேவை செய்வதற்கான அதன் முயற்சியினதும் வழியில் ஆனதாகும்.

ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சியும், முஸ்லீம் முதலாளித்துவக் கட்சியுமான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், தாக்குதல்களுக்குஅரசாங்கமே பொறுப்பு”  என ஏஎஃப்பீக்கு திங்களன்று கூறினார். எனினும், செவ்வாய் அன்று, அவர் பின்வாங்கி, பொலிசே குற்றம் சாட்டப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். அவரது கட்சியை அரசாங்கத்தில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கும் அழுத்தம் அதிகரித்து வருகின்றது. நேற்று, ஜநா யுத்தக் குற்ற விசாரணையாளர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் பிரேரணையின் மீதான பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது, அது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

தனது ஆத்திரமூட்டலை முன்னெடுத்த பிபிஎஸ்சின் கூட்டத்துக்கு அரசாங்கம் மறுப்பின்றி அனுமதி வழங்கியதால் இராஜபக்ஷ இப்போது சேதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்த அமெரிக்கா, ஜரோப்பிய யூனியன் மற்றும் கனடாவும் 2009ல் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் கடைசி மாதங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன. இந்த மேற்கத்தேய சக்திகளுக்கு மனித உரிமை தொடர்பாக எந்தவிதமான அக்கறையும் கிடையாது. ஆனால் குறிப்பாக அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்தை சீனாவின் பக்கத்திலிருந்து தூர விலக்கி, வாஷிங்டனின் பெய்ஜிங்குக்கு எதிரான இராணுவ சுற்றிவளைப்பின் வழியில் இணைத்துக்கொள்வதற்கு நெருக்குவதற்காக இந்த விசாரனை அச்சுறுத்தலை பயன்படுத்துகின்றது.

இராஜபக்ஷ ஆத்திரமடைந்துள்ள முஸ்லீம் மக்களை சமாளிப்பதற்கு நேற்று பேருவளைக்கு சென்றார். எனினும், அரசாங்கம் பிபிஎஸ்சை பாதுகாப்பது குறிப்பிடத் தக்கது. அது சிங்கள ராவய (சிங்கள எதிரொலி), ராவண பலய (இராவணன் படை) போன்ற பௌத்த பாசிச குழுக்களை போசித்து பாதுகாத்து வருகின்றது. பௌத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய அரசின் பங்காளி கட்சியாகும்.

அரசாங்கத்தின் சிக்கன மற்றும் முதலீட்டாளர்கள் சார்பு நடவடிக்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதனால், இராஜபக்ஷ இந்த இனவாத அமைப்புக்கள் மீது அதிகமாகவே தங்கியிருப்பதோடு, இவர்களை தொழிலாள வர்க்கத்துக்கு எதிராகவும் அரசியல் விரோதிகளின் மீதும் கட்டவிழ்த்துவிடத் தயங்கப் போவதில்லை.