சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Family of murdered Indian mine worker speak out

கொலை செய்யப்பட்ட இந்திய சுரங்க தொழிலாளியின் குடும்பத்தினர் பேசுகின்றனர்

By Sasi Kumar and Moses Rajkumar
21 March 2014

Use this version to printSend feedback

மார்ச் 17, திங்களன்று ஒரு துணை இராணுவ பாதுகாப்பு படையால் 31 வயது நிரம்பிய இராஜ்குமார் சுட்டுக் கொல்லப்பட்ட, தமிழ்நாட்டின் தென்மாநில நகரமான நெய்வேலிக்கு உலக சோசலிச வலைத் தளம் (WSWS) விஜயம் செய்தது. அரசுத்துறை நிறுவனமான NLCஇன் (நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்) சுரங்கத்தில் இராஜ்குமார் ஒரு தொழிலாளராக இருந்தார். (பார்க்கவும்: இந்திய பாதுகாப்பு படையினால் நிலக்கரி சுரங்க தொழிலாளி சுட்டுக் கொலை)

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரோடு பேசிய WSWS செய்தியாளர்கள், சக தொழிலாளரின் இரக்கமற்ற படுகொலையை எதிர்த்து போராடியதற்காக பொலிஸால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு கடுமையாக காயப்பட்டிருந்த ஏனைய தொழிலாளர்களோடும் பேச NLC மருத்துவமனைக்கும் விஜயம் செய்தனர்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி கார்ப்பரேஷனின் (NLC) சுரங்கத்தில் மார்ச் 17 அன்று கொலை செய்யப்பட்ட 31 வயதான சுரங்க தொழிலாளர் இராஜ்குமாரை, அவரது 26 வயது மனைவி அமலா லூசியா இராணியும், இரண்டு வயதான வின்ஸ் பிரான்க்ளின் மற்றும் எட்டு மாத ஒலிவியா ஆகிய இரண்டு மழலை குழந்தைகளும் சார்ந்திருந்தனர்.

இராஜ்குமாரின் கூட்டு குடும்பத்தின் எட்டு உறுப்பினர்களும் நெய்வேலியில் உள்ள மந்தாரகுப்பம் காலனியில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கொலை செய்யப்பட்டவரின் தந்தை, மாரிமுத்து, NLCஇல் 38 ஆண்டுகள் வேலை செய்து, 2011இன் இறுதியில் அந்த பகுதியைத் தாக்கிய கடுமையான "தானெ" புயலால் ஏற்பட்ட பேரழிவில் உயிரிழந்தார். நிறுவனமோ அல்லது அரசோ அந்த குடும்பத்திற்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லையென, 55 வயதான ராஜ்குமாரின் தாயார் இந்திரா தேவி முறையிட்டார்.

40 வயதான இராஜ்குமாரின் சகோதரர் பாலகுமார் NLCஇல் ஒரு ஒப்பந்த தொழிலாளராக உள்ளார். அரசுக்கு சொந்தமான அந்த நிறுவனத்தில் 20 ஆண்டுகள் வேலை செய்த பின்னரும், அவர் ஒரு நிரந்தர தொழிலாளராக ஆகும் செயல்முறையிலேயே உள்ளார். இவர்களோடு ஒரு தம்பியும், இரண்டு தங்கைகளும் சேர்ந்து, இடிந்து விழும் நிலையிலுள்ள, அனைவருக்கும் வசிக்க போதாத, அந்த வசிப்பிடத்தில் வசித்து வருகின்றனர்.


இந்திரா தேவி

இராஜ்குமாரின் தாயார் இந்திரா தேவி குழம்பிய நிலையில் அந்த குடும்பத்தின் எதிர்காலம் குறித்து கவலைக் கொண்டிருந்தார், அவர் WSWSக்கு கூறுகையில், எட்டு பேர் கொண்ட இந்த ஒட்டுமொத்த குடும்பத்தை இராஜா [இராஜ்குமார் என்பதன் சுருக்கம்] தான் கவனித்து வந்தார். என்னுடைய மருமகள் இந்த இளம் வயதில் இரண்டு குழந்தைகளோடு கணவர் இல்லாமல் வாழ விடப்பட்டதைக் குறித்து தான் எனக்கு இப்போது கவலையாக உள்ளது. இந்த சிறிய வீட்டிற்காக நாங்கள் NLCக்கு நில வரி, மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். அதுவே ரூ. 800 (12.90 அமெரிக்க டாலர்) ஆகிவிடுகிறது. என்னுடைய மருமகளையும், என்னுடைய குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள இனி யாரும் இல்லை, என்றார்.

அவருடைய மகன் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவர் கூறுகையில், அவர் NLCஇன் மற்றொரு வளாகத்தில் வேலை செய்து வந்த அவரது நண்பரிடம் இருந்து சிறிது பணம் வாங்க 2ஆம் எண் சுரங்கத்திற்குச் சென்றார். அவர் அவரது அடையாள அட்டையைக் காட்டினார் என்ற உண்மைக்கு இடையிலும், துணை இராணுவ பாதுகாப்பு படை காவலர்களால் அவர் நுழைவாயிலில் தடுக்கப்பட்டார். ஒரு வாக்குவாதத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காவலர்களில் ஒருவர் தமது கைத்துப்பாக்கியை உருவி, இராஜாவின் நெற்றியில் மூன்று முறை சுட்டார். இராஜாவின் தலையிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்ததோடு அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்," என்று தெரிவித்தார்.

தங்களின் வாழ்க்கை நிலைமைகளைக் குறித்து விவரிக்கையில், அவர் தொடர்ந்து கூறினார், என் பிள்ளை ஒரு இந்திய அரசுடைமை நிறுவனத்தில் வேலை செய்து வந்தாலும் கூட, இங்கே நாங்கள் வாழும் இந்த வீடு படுமோசமானது. மழை பெய்யும் போதெல்லாம் மேல் தளம் மிக மோசமாக ஒழுகுகிறது. எங்கள் இரண்டு மகன்களின் கூலிகளை வைத்து எங்கள் வாழ்க்கைக்கு நாங்கள் வழி தேடி கொண்டிருக்கிறோம், அவர்கள் இருவரின் சம்பளத்தை சேர்த்தாலே மாதத்திற்கு ரூ. 12,000 (193.54 அமெரிக்க டாலர்) தான் வரும். ராஜாவின் மரணத்திற்குப் பின்னர் இனி நாங்கள் எட்டு பேரும் ஒரேயொரு மகனின் கூலியில் வாழ முயல வேண்டுமென்பதால் கடுமையான துன்பங்களை முகங்கொடுப்போம்," என்றார்.


கொல்லப்பட்டவரின் மனைவியும்
, அவரது தாயாரும்

சில தொழிற்சங்கங்கள் ரூ. 20 லட்சம் (ஏறக்குறைய 33,000 டாலர்) இழப்பீடும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு ஒரு நிரந்தர வேலையும் வழங்க கோரிய முறையீட்டை இந்திரா பரிகசித்தார். அவர் கூறினார், எங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை, ஏனென்றால் என்னுடைய கணவரின் திடீர் மரணத்திற்கு நாங்கள் ஒருபோதும் எந்தவொரு இழப்பீடும் பெறவில்லை."

இந்த இடத்தில் அண்டைவீட்டார் ஒருவர் குறுக்கிட்டு, தானெ சூறாவளியில் பாதிக்கப்பட்டதற்கு எங்களுக்கு எந்தவொரு நஷ்டஈடும் கிடைக்கவில்லை. தொழிற்சங்கங்கள் ஒன்றுக்கும் உதவாதவை என்பதோடு, எங்களுடைய இந்த கதிக்கு அவர்களும் தான் பொறுப்பாகிறார்கள். தொழிற்சங்கங்களின் அலட்சியத்தால் தான் நாங்கள் இந்த அவலமான நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு CITU தொழிற்சங்க (ஸ்ராலினிச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்த தொழிற்சங்கம்) அங்கத்தவர் எங்களை வந்து பார்த்து சென்றார். அவர்கள் அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக அதை செய்தார்கள், தொழிலாளர்களின் நலன்களைக் கவனிப்பதற்காக அல்ல," என்றார்.

இராஜ்குமார் கொலைக்குப் பின்னர் வெடித்த தன்னியல்பான போராட்டங்களைக் கண்மூடித்தனமாக தாக்கியதில் காயப்பட்டு, NLC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏனைய NLC தொழிலாளர்களோடும் WSWS செய்தியாளர்கள் பேசினர்.


பட்டுசாமி

அறுபது வயதான NLCஇன் ஒரு நிரந்தர தொழிலாளரான பட்டுசாமி, WSWSக்கு கூறியதாவது: என்னுடைய 25 ஆண்டு கால சேவையில் இதுபோன்றவொரு சம்பவத்தை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. பொலிஸ் தொழிலாளர்களை மட்டுமல்ல, அந்த சம்பவத்தோடு முற்றிலும் சம்பந்தமில்லாத அல்லது தொடர்பில்லாதிருந்த சாமானிய மக்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். NLCஇன் சில மூத்த அதிகாரிகளும் கூட தாக்கப்பட்டனர். யாரெல்லாம் கண்ணுக்கு தெரிந்தார்களோ அவர்கள் மீதெல்லாம் பொலிஸ் தாறுமாறாக தடியடி நடத்தியது. அந்த மொத்த பகுதியுமே இரத்தக்கறை படிந்து போனது, என்றார்.

பின்னர் கையை அசைத்து காட்டி அவர் கூறினார், இந்த அறையில் உள்ள காயமுற்றிருக்கும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களைப் பாருங்கள்! எவ்வாறு மோசமாக அவர்கள் அடிக்கப்பட்டிருக்கிறார்கள், இரத்த காயங்களோடு எவ்வாறு அவர்கள் படுத்திருக்கிறார்கள் என்பதை பாருங்கள். இந்த அறையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பல தொழிலாளர்கள், இராஜ்குமார் கொல்லப்பட்ட அந்த சமயத்தில் வேலைக்கு போய் கொண்டிருந்தார்கள் அல்லது வேலை விட்டு வந்து கொண்டிருந்தவர்கள்.


செல்வகுமார்

32 வயதான NLC தொழிலாளர் செல்வகுமார் கடுமையாக சாடினார், நாங்கள் ஏற்கனவே வறுமையில் உள்ளோம். நாங்கள் பிரதி மாதம் ஒரு அற்பதொகையாக ரூ. 6000 (96.77 அமெரிக்க டாலர்) சம்பாதிக்கும் தொழிலாளர்கள். இந்த சூழ்நிலையில் எங்களின் சகோதர தொழிலாளர் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டிருப்பதால் அதிர்ந்து போயுள்ளோம். இனி நாங்கள் ஊதிய உயர்வோ அல்லது வேலையிட நிலைமைகளுக்கான கோரிக்கைகளை உயர்த்தும் போதெல்லாம் இனிமேல் NLC நிர்வாகம் இதுபோன்ற தாக்குதலை நாடுமென்று தெரிகிறது. நான் 15 ஆண்டுகளாக ஒரு ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறேன். என்னுடைய தந்தையும் எந்தவொரு சலுகையும் இல்லாமல் 25 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்தார். அவர் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தான் இறந்தார். அவர் ஓய்வு பெற்றதும் அவருக்கு அவருடைய ஓய்வூதிய சேமிப்பு தொகையிலிருந்து (வருங்கால வைப்பு நிதி) ஒரு சொற்ப தொகை தான் கிடைத்தது, என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், நான் விருதாசலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்தவன். பொதுத்துறை நிறுவனமான NLCஇல் நிரந்தர வேலைவாய்ப்பை பெற முடியுமென்ற கனவில் என் அப்பா விவசாயத்தை விட்டுவிட்டு நெய்வேலிக்கு குடிபெயர்ந்தார். ஆனால் அவருக்கு வறிய கூலி தான் கிடைத்தது. இப்போது நானும் அதே நிலைமையில் இருக்கிறேன். ‘சொசைட்டியின்’ [நிரந்தர தொழிலாளர் ஆக்கப்படுவதை நோக்கிய முதல் படி] ஓர் அங்கத்தவர் என்று கூறப்பட்டாலும், அங்கே எந்தவொரு சலுகையும் கிடையாது. 25இல் இருந்து 30 ஆண்டுகள் வரை சேவையில் உள்ள சொசைட்டியின் இப்போதைய அங்கத்தவர்கள் எந்தவொரு வேலையிட ஆதாயங்களும் இல்லாமல் வேலையிலிருந்து ஓய்வு பெறுவார்கள். நானும் அதே நிலைமையில் இருப்பதாக தான் நம்புகிறேன்.

செல்வகுமார் மேலும் கூறினார், எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், என்னுடைய இந்த சொற்ப கூலியைக் கொண்டு குழந்தைகளைக் கவனிப்பது மிகவும் சிரமமாக உள்ளது, இருந்தாலும் கூட நான் அவர்களை ஆங்கிலவழி கல்விக்கு தான் அனுப்புகிறேன், அதன் மூலம் அவர்களுக்கு ஒரு எதிர்காலம் கிடைக்கக்கூடும். நிரந்தர தொழிலாளர்களால் ஆங்கிலவழி பள்ளிகளுக்கு தங்களின் குழந்தைகளை இலவசமாக அனுப்ப முடிவதைப் போலில்லாமல், நாங்கள் மாதந்தோறும் ரூ. 300 (4.83 அமெரிக்க டாலர்) கட்டணம் செலுத்த போராடுகிறோம், அது எங்களுக்கு ஒரு பெரிய தொகையாகும், என்றார்.


நவாப்
, வயது 50

NLCஇன் ஒரு நிரந்தர தொழிலாளரும், அங்கே 16 ஆண்டுகளாக வேலை செய்து வருபவருமான ஐம்பது வயதான நவாப் WSWSக்கு இவ்வாறு தெரிவித்தார், கூலி உயர்வுகள், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்குதல் என இன்னும் பல பிரச்சினைகளை தொழிலாளர்கள் அங்கே எதிர்கொண்டிருக்கின்ற நிலையில், இராஜ்குமாரை கொடூரமாக கொன்றது மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பொலிஸ் தாக்குதல் ஆகியவற்றால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இத்தகைய தாக்குதல்கள் CISFஆல் (துணை இராணுவ மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை) மட்டுமல்ல, மாநில பொலிஸ் படைகளாலும் நடத்தப்பட்டுள்ளன. இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு தொழிலாளர்கள் மீதிருக்கும் விரோதத்தை எடுத்துக்காட்டுகிறது, என்றார்.

அவர் தொடர்ந்து கூறினார், இந்த நிலைமைகளுக்கு காரணமான அந்த அரசாங்கங்களை எதிர்க்கவோ அல்லது அவற்றைக் குறித்து ஒரு கருத்தைக் கூட வெளியிடாமல் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைத் திசைதிருப்ப முயன்று வருகின்றன. அவர்கள் வெறுமனே அந்த சம்பவத்திற்குப் பொறுப்பான CISF காவலரை தண்டிக்கவும், கொல்லப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு NLCஇல் ஒரு நிரந்தர வேலை தரவும் கோரி வருகின்றன. இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் தற்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள கட்சியோடு அல்லது இதற்கு முன்னர் அதிகாரத்தில் இருந்த கட்சியோடு இணைப்பு பெற்றவை ஆகும். அதேபோல, கம்யூனிஸ்ட் கட்சிகளோ இந்த கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ளதோடு, அவ்விதத்தில் அவை அவர்களின் தொழிலாளர்-விரோத கொள்கைகளில் உடந்தையாய் உள்ளன, என்றார்.

NLC தொழிலாளர்களின் கோபத்திற்கு நேரெதிராக, ஸ்ராலினிச தொழிற்சங்க அதிகாரிகளும், தமிழினவாத கட்சியும் பொலிஸிற்கு ஒரு நியாயப்பாட்டை வழங்கியதோடு, வன்முறைக்கு தொழிலாளர்களையே குற்றஞ்சாட்டின.

NLCஇல் செயல்படும் ஸ்ராலினிச CITU தொழிற்சங்கத்தின் ஒரு தலைவர் ஜெயராமன், வட இந்தியாவிலிருந்து வரும் CISF பாதுகாப்பு காவலர்களின் வேறுபட்ட இனரீதியிலான பின்புலத்தைக் குறிப்பிட்டு காட்டி, அவர் அந்த படுகொலையின் வர்க்க குணாம்சத்தையும், அரசாங்கத்தின் பாத்திரத்தையும் மூடிமறைக்க முயன்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த CISF பாதுகாப்பு காவலர்களை "நம்முடைய மனிதர்களாக" ஜெயராமன் சித்தரித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், தற்போதைய CISF கலைக்கப்பட வேண்டும். முன்னர் நம்முடைய நபர்கள் இருந்ததைப் போல NLC பாதுகாப்பு படையை உருவாக்க நாங்கள் முறையிடுகிறோம். அவர்களுக்கு தான் நல்லது, கெட்டது தெரியும். தொழிலாளரைச் சுட்டு கொன்ற CISF காவலர் அரை பைத்தியமாக இருந்திருக்க வேண்டும், என்றார்.

CITU தலைவர் பின்னர், பொலிஸ் வன்முறை வெடித்ததற்கு “CISF மீது அவர்கள் கற்களை வீசத் தொடங்கியதைக் காரணமாக்கி, உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைக் குறை கூற முயன்றார்.

தமிழ் இனவாத "நாம் தமிழர் கட்சியின்" செய்தி தொடர்பாளர் போஸூம் தொழிலாளர்களைக் குறை கூற மற்றும் மாநில பொலிஸ் படையைப் பாதுகாக்க முயன்றார். இந்த வார சம்பவங்களுக்கு அவரது கட்சியின் மனப்போக்கு என்னவென்று கேட்ட போது, போஸ் WSWSக்கு தெரிவித்தார், இந்த சம்பவத்தில் CISF துப்பாக்கியால் சுட்டமை தவறானது. ஆனால் மாநில பொலிஸ் படை அங்கே அமைதிக்காக நிறுத்தப்பட்டது. சில தொழிலாளர்கள் கற்களை வீசத் தொடங்கியதால் இந்த வன்முறை வெடித்தது. அந்த நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர பொலிஸ் தாக்குதல் நடத்த வேண்டி இருந்தது, என்றார்.

இருந்த போதினும், இதர அனைத்து கட்சிகளைப் போன்றே நாங்களும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சரியான நஷ்டஈடு வழங்க மற்றும் தொழிலாளரைச் சுட்டுக் கொன்ற CISF காவலருக்கு தண்டனை வழங்க முறையிட்டுள்ளோம். ஆனால் இதன் பிறகு அங்கே போராட்டங்களோ அல்லது எதிர்ப்புகளோ தேவையில்லை. தொழிலாளர்கள் அமைதியாக வேலைக்குத் திரும்ப வேண்டும். இது தான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு, என்றார்.