சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

New report documents Sri Lankan military’s killing of surrendering LTTE leaders

இலங்கை இராணுவம் சரணடைந்த புலிகளின் தலைவர்களை கொன்றதாக புதிய அறிக்கைகள் ஆவணப்படுத்துகின்றன

By Wasantha Rupasinghe
4 March 2014

Use this version to printSend feedback

ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்ற ஆதார திட்டம் (International Crimes Evidence Project - ICEP) வெளியிட்டுள்ள தண்டனையில் இருந்து விலக்களிப்பு பெற்ற தீவு என்ற தலைப்பிலான அறிக்கை, 2009 மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதலின் கடைசி மாதங்களில் இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்களுக்கான புதிய ஆதாரங்களை வழங்குகிறது.

253 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூட்டம் நடக்கவுள்ள நிலைமையிலேயே வெளியிடப்பட்டுள்ளது. மனித உரிமை பேரவையில், மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைக்கு அழைப்பு விடுத்து, வரிசையாக மூன்றாவது ஆண்டாக இலங்கை மீது தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிக்கை, சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டமை பற்றி கண்டனத்துக்குரிய ஆதராங்களை கொண்டுள்ளது. ஆனால், ஒபாமா நிர்வாகம் இந்த விவகாரத்தை தனது சொந்த தேவைகளுக்காக, குறிப்பாக சீனாவுடனான தனது பிணைப்புக்களை கைவிடுமாறு இலங்கை அரசாங்கத்தை நெருக்குவதற்காக சுரண்டிக்கொள்ளும் அதன் பாசாங்குத்தனமான முயற்சிகளுக்கு நம்பகத்தன்மை கொடுக்கப்படக் கூடாது. சீனா, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு பிரதான இராணுவத் தளபாடம், கடன் மற்றும் நிதி உதவி வழங்குனராக ஆகியுள்ளது.

கண்கண்ட சாட்சிகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட புதிய ஆதாரத் தரவுகளின் அடிப்படையில், ஐசிஇபீ (ICEP) அறிக்கையானது புலிகளின் அரசியல் குழு தலைவர்களான பாலசிங்கம் மகேந்திரன் (நடேசன்), சீவரட்ணம் புலித்தேவன் (புலித்தேவன்), புலிகளின் ஒரு இராணுவத் தளபதி கேர்னல் தம்பிராசா துரைராசசிங்கம் (ரமேஷ்), புலிகளின் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா மற்றும் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் போன்றோர் கொல்லப்பட்டமை பற்றி மேலும் வெளிச்சத்தை பாய்ச்சுகிறது.

ஒரு உயர்மட்ட நிபுணர்கள் குழுவொன்று ஐசிஇபீ அறிக்கைக்கு உதவியுள்ளது. முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான ஐநா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் விசாரணைகளுக்கான முன்னாள் தலைவர் ஜோன் ரல்ஸ்டன், சியேரா லியோனின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் வில்லியம் செபாஸ், காஸாவின் ஐநா உண்மை அறியும் குழுவின் முன்னாள் உறுப்பினர் (ஓய்வுபெற்ற) கேர்னல் டெஸ்மன்ட் றெவர்ஸ் மற்றும் இலங்கை பற்றிய ஐநாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குவர்.

எந்தவொரு யுத்தக் குற்றமும் நடக்கவில்லை என்ற இராஜபக்ஷ அரசாங்கத்தின் தொடர்ச்சியான மறுதலிப்புக்களின் வழியில், எந்தவொரு ஆதாரமும் இன்றி இலங்கை இராணுவம் இந்த அறிக்கையைஅடிப்படையற்றது என நிராகரித்துள்ளது. “அறிக்கையில் புதியவை எதுவும் கிடையாது. இது ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்ட அதே பழைய குற்றச்சாட்டே,” என இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

நடேசன் மற்றும் புலித்தேவன் கொலை சம்பந்தமாக, ஐசிஇபீ அறிக்கையானது 2009 யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான ஐநா நிபுணர்கள் குழுவின் 2011 அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளது. ஐநா நிபுணர்கள் குழுவானது கடைசித் தாக்குதல்களின் போது இலங்கை இராணுவத்தினரால் குறைந்தபட்சம் 40,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலருமான கோடாபய இராஜபக்ஷவும் வழங்கிய உறுதிமொழியின் கீழ் நடேசனும் புலித்தேவனும் இராணுவத்தினரிடம் சரண்டைந்ததாக ஐநா அறிக்கை ஸ்தாபித்துள்ளது.

இரு புலிகளின் தலைவர்களும் சரண்டைவதற்கு தயாராக உள்ளனர் என்ற விடயம் ஐ.நா, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அமெரிக்க மற்றும் ஐக்கிய இராஜ்ஜிய அரசாங்கங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது என ஐ.நா அறிக்கை தெரிவிக்கின்றது. பின்னர், இருவரும் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சரணடைவுகள் சம்பந்தமாக புதிய கண்கண்ட ஆதாரங்களை ஐசிஇபீ அறிக்கை சேகரித்துள்ளது. “2009 மே மாதம் 16 அல்லது 17ம் திகதி மாலை, அரசியல் தலைவர்கள் சரண்டைவதற்கு தயாராக உள்ளனர் என (புலி உறுப்பினர்கள் அடங்கிய) ஒரு குழுவுக்கு புலித்தேவன் அறிவித்ததாக கண்கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.” புலிகளின் அரசியல் தலைவர்களுக்கும் கொழும்பில் இருந்த ஐநா விசேட தூதர் விஜை நம்பியாருக்கும் இடையில் ஒரு இடைத்தரகராக செயற்பட்ட பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மாரி கொல்வின் மற்றும் சிரேஷ்ட இராணுவ அலுவலர்களால்தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது என புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

ஏனைய கண்கண்ட சாட்சியங்களின் படி, மே 18 அன்று, “சிவில் உடைகள் அணிந்திருந்த 12 பேர் அடங்கிய குழுவொன்றை நான்கு பேர் அடங்கிய மூன்று குழுக்களாக நடேசன் பிரித்தார். முதலாவது குழுவில் வெள்ளைக் கொடி ஏந்திவந்த புலித்தேவன் மற்றும் நடேசனும் அடங்குவர்.” “நடேசன், புலித்தேவன் மற்றும் நடேசனின் மனைவி உள்ளடங்கலாக நான்கு பேர், 35 அதிவேக வீதி ஊடாக மெதுவாக நடந்து வந்ததோடு” “பிரிகேடியர் [சவேந்திர] சில்வா உட்பட இலங்கை பாதுகாப்புப் படை அதிகாரிகளின் குழுவொன்று சரண்டைய வந்தவர்களை சந்திக்க நடந்து சென்றனர் என ஒரு நேரடி சாட்சி தெரிவித்துள்ளார்.

இன்னொரு சாட்சி நினைவுபடுத்தியதாவது: “அரசியல் குழு தலைவர்கள் அனைவரும் சரணடைந்துள்ளனர், அவர்கள் தேநீரை ஏற்றுக்கொண்டனர். பின்னர் அவர்கள் தாக்கப்பட்டனர். தாங்கள் சரணடைந்துள்ளதால் அடிப்பதை நிறுத்துமாறு நடேசனின் மனைவி கெஞ்சினார்; பின்னர் அவர்கள் பாதுகாப்புப் படை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.”

வேறு ஒரு குழுவில் சரணடைந்த ரமேஷ் கொல்லப்பட்டமை பற்றியும் ஐசிஇபீ அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. அவர் ஒரு ஆயுத மோதலில் கொல்லப்பட்டார் என்ற இராணுவத்தின் கூற்றுக்கு முரணாக, ரமேஷ்ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை அவர் சிவில் உடையிலேயே இருந்தார்,” என புதிய கண்கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. “ரமேஷ் ஒரு விசாரணைப் பகுதியில் வைத்துக் கொல்லப்பட்டதோடு எட்டு நிமிடங்களுக்குள் அவரது சடலம் ஒரு குறுகிய தூரத்துக்கு அகற்றப்பட்டு எரிக்கப்பட்டது, என புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதராங்களும் சுட்டிக் காட்டுகின்றன.”

இசைப்பிரியா கொல்லப்பட்டமை மூன்றாவது சம்பவமாகும். சிவில் உடையில் இருந்த அவரை பாதுகாப்புப் படையினர் விசாரித்துக்கொண்டிருக்கும் வீடியோ படம் ஒன்றை சனல் 4 தொலைக் காட்சி சேவை வெளியிட்டுள்ளது. “அவரது மரணத்தின் போது, அவர் ஒரு பகுதி உடையணிந்திருந்தார், அவரது கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருக்கக் கூடும், மற்றும் அவரது கண்கள் மறைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த நிலையில் அடுத்தவர்கள் முன்னிலையில் கொல்லப்பட்டுள்ளார், ஒரு மரணதண்டனை பாணி என்று வகைப்படுத்தக்கூடிய முறையிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை புகைப்படங்களும் வீடியோக்களும் சுட்டிக் காட்டுகின்றன என்ற முடிவுக்கு ஐசிஇபீ அறிக்கை வந்துள்ளது.

இந்த அறிக்கை பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்தை ஆவணப்படுத்தியுள்ளது. முதலில், இலங்கை இராணுவத்தின் காவலரண் ஒன்றில் இந்த சிறுவன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட சனல் 4, பின்னர் அவரது சடலம் நெஞ்சில் துப்பாக்கச் சூட்டுக் காயங்களுடன் கிடப்பதை காட்டுகின்றது. இந்தப் புகைப்டங்களை பரிசோதித்த தடயவியல் நோய்குறியியல் பேராசிரியர் டெரிக் பௌன்டர் குறிப்பிட்டதாவது: “உந்துவிசையினால் தோலில் ஏற்பட்டுள்ள ஓட்டை அடையாளம் ஆயுதத்துக்கும் உடலின் நெஞ்சுப் பகுதிக்கும் இடையில் இரண்டு அல்லது மூன்று அடி அல்லது அதற்குக் குறைவான தூரமே இருந்துள்ளதைக் காட்டுகின்றது.”

ஒரு பொதுமகனான மோதல்களில் நேரடியாகப் பங்குபற்றாத பாலச்சந்திரன் இலங்கை பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது கொல்லப்பட்டுள்ளார் என்ற விடயத்தின் மூலம், ஒன்று அல்லது பல பாதுகாப்பு படை சிப்பாய்கள் கொலை யுத்தக் குற்றத்தை செய்துள்ளனர் என்பதற்கு தக்க ஆதராங்கள் உள்ளன,” என அந்த அறிக்கை முடிவு செய்துள்ளது.

ஏனைய குற்றங்களையும் விவரித்துள்ள ஐசிஇபீ அறிக்கை, “இந்தக் குற்றங்களுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளில் இத்தகைய குற்றங்களுக்கான குற்றவியல் பொறுப்புடைமை நிரூபிக்கப்பட்டால், அது சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் மற்றும் இலங்கை அரசாங்க அலுவலர்கள், அதே போல் புலிகளில் உயிருடன் உள்ள உறுப்பினர்கள் மீது குற்றத் தீர்ப்பு வழங்குவதற்கு வழிவகுக்கும்,” எனத் தெரிவித்துள்ளது. “சர்வதேச யுத்த சட்டங்களை மீறியுள்ளதாக கூறப்படும் இந்தக் குற்றங்கள் பற்றிய ஒரு சுயாதீனமான பூரணமான சர்வதேச விசாரணை அவசியம் என அந்த அறிக்கை பிரகடனம் செய்கின்றது.

எவ்வாறெனினும், அத்தகைய ஒருசர்வதேச விசாரணைக்கான அமெரிக்க மற்றும் அதன் ஐரோப்பிய பங்காளிகளின் எந்தவொரு அழைப்புக்கும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. இராஜபக்ஷ அரசாங்கம் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்து விட்டு 2006ல் இராணுவத் தாக்குதல்களை புதுப்பித்தபோது வாஷிங்டன் அரசாங்கத்தை முழுமையாக ஆதரித்தது. அது இலங்கை இராணுவத்துக்கு இன்றியமையாத இராணுவ உதவிகளை வழங்கியதோடு அதன் அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்கள் குவிந்து வந்தபோதும் மௌனம் காத்தது.

இப்போது வாஷிங்டன், பெய்ஜிங்குடனான இலங்கை அரசாங்கத்தின் உறவுகளை கைவிட்டு சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் யுத்தத் தயாரிப்புகளுடன் அணிசேருமாறு அதை நெருக்குவதற்காக இலங்கையின் துஷ்பிரயோகங்களை வஞ்சகத்தனமாக சுரண்டிக்கொள்கின்றது. முன்னர் புலிகளின் பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கு ஆதரவளிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு பின்னால் அணிசேர்ந்துள்ளதோடு, நாட்டின் தமிழ் முதலாளித்துவத் தட்டுக்களின் நலன்களை தக்க வைப்பதன் பேரிலான ஒரு அதிகாரப் பகிர்வுப் பொதிக்கு வாஷிங்டனின் ஆதரவை எதிர்பார்க்கின்றது.

ஐசிஇபீ கொழும்பின் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக தவிர்க்க முடியாத மேலும் ஆதரங்களை வழங்குகிறது. ஆனால், அமெரிக்காவும் அதன் பங்காகளிலும் இத்தகைய அட்டூழியங்களுக்கு நேரடிப் பொறுப்புடைமை கொண்டுள்ளதோடு இப்போது தமது சொதந்த பூவிசார்-அரசியல் தேவைகளுக்காக அவற்றைச் சுரண்டிக்கொள்கின்றன.

The author also recommends:

இலங்கையின் போர் குற்றங்களும் அமெரிக்கவின் "மனித உரிமைகள்" பம்மாத்தும்