சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Egyptian coup leader al-Sisi announces presidential candidacy

எகிப்திய ஆட்சிக் கவுழ்ப்பு தலைவர் அல்-சிசி ஜனாதிபதி வேட்பாளர் என்பதை அறிவிக்கிறார்

By Johannes Stern 
28 March 2014

Use this version to printSend feedback

புதன் இரவு எகிப்திய ஆட்சிக் கவிழ்ப்பின் தலைவர் பீல்ட் மார்ஷல் அப்தெல் ஃபத்தா அல்-சிசி (Abdel-Fattah al-Sisi) எதிர்வரும் தேர்தல்களில் ஜனாதிபதி பதவிக்கு தான் நிற்கும் திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இது, அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவ ஆட்சிக் குழுவானது அதனுடைய தலைவரை ஜனாதிபதியாக நிலைநிறுத்தவும், அதையொட்டி நாட்டின் மீது அதன் பிடியை இறுக்கிக் கொள்ளவும், எழுச்சி பெறும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ளவும், கவனமான திட்டத்தின் சமீபத்திய முயற்சியாகும்.

நாட்டிற்கு சிசியின் தொலைக்காட்சி உரை இழிந்த முறையில் தேசியவாத சொற்றொடர்களினதும், அதிகம் மறைப்பில்லாத அச்சுறுத்தல்களினதும் கலவையாக இருந்தது. “உங்களுக்கு முன் நான் தாழ்மையோடு எகிப்திய அரபு குடியரசின் ஜனாதிபதி பதவிக்கு நிற்கும் விருப்பத்தைக் கூறுகிறேன்” என்று சிசி அறிவித்தார். “உங்கள் ஆதரவுதான் எனக்கு இப்பெரிய கௌரவத்தை அளிக்கும்.” தன் பெயரளவு இராஜிநாமாவை இராணுவத்தில் இருந்து அறிவித்தபின் அவர் தன்னை “எகிப்தியர்கள்களால் விரும்பத்தக்க, என் நாட்டை பாதுகாக்க எவ்வகையிலும் திறனுள்ள ஒரு சிப்பாயாக என்னை கருதுவேன்” என்றார்.

தான் எகிப்திய மக்களின் நலனுக்காக செயல்படுவேன் என்னும் சிசியின் கூற்று, ஒரு கொடூரமான பொய் ஆகும். ஒரு சில நாட்கள் முன்புதான் எகிப்தின் தொழில்துறை, வணிகம் மற்றும் முதலீடுகளின் மந்திரி மௌனிர் பக்ரி அப்தெல் நூர், சிசியை முன்னாள் சிலிய சர்வாதிகாரி ஜெனரல் ஒகுஸ்டோ பினோசேயுடன் ஒப்பிட்டு, “இன்று இந்நாடு உள்ள நிலைக்கு அதை ஒருங்கிணைத்துச் செல்ல ஒரு வலுவான மனிதர் தேவை... முதலீடும் பொருளாதாரமும் முன்நோக்கி செல்வதற்கு சட்டமும் ஒழுங்கும் ஏற்ற வகையில் வேண்டும்” என்றார்.

பினோசேயை போலவே சிசியும் அமெரிக்க ஆதரவு பெற்ற ஒரு சர்வாதிகாரி, தொழிலாள வர்க்கத்தை ஏகாதிபத்திய எஜமான்கள் சர்வதேச நிதிய மூலதனத்தின் ஆணையின்படி அடக்க பாசிச வழிவகைகளை பயன்படுத்தத் தயாராக இருப்பவர்.

தன்னுடைய உரையில் சிசி, வறிய எகிப்திய மக்கள் சிக்கனம், இடர்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும் என அச்சுறுத்தினார். “நான் அற்புதங்கள் செய்ய முடியாது. மாறாக, நான் எகிப்தை மீட்பதற்கு கடின உழைப்பு மற்றும் தன்னல-மறுப்பு இவற்றை முன்வைக்கிறேன்” என்று எச்சரித்தார்.

சிசி இழிந்த முறையில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தன் போர் பிரகடனத்தை ஜனநாயக போர்வையில் காட்ட முற்பட்டார். “தேர்தல்களில் நான் நிற்கும் உறுதி மற்றவர்கள் நிற்பதை தடுக்கவில்லை. மக்கள் தேர்ந்தெடுக்கும் யார் வெற்றி பெற்றாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்ற அவர் “விதிவிலக்கு இல்லாமல் அனவருக்குமான ஒரு நாடு” நம்முடையது என்று நம்புவதாக சேர்த்துக் கொண்டார்.

இந்த சொற்கள், கடந்த சில மாதங்களாக குருதி கொட்டும் படுகொலைகள் மற்றும் பாரிய அளவு அடக்குமுறையை மேற்பார்வையிட்ட ஒரு மனிதரிடமிருந்து வந்துள்ளது. ஜூலை 3, 2013 ஆட்சி கவிழ்ப்பில் இருந்தே, சிசியின் தலைமையில் இராணுவ ஆட்சிக்குழு கணக்கிலடங்கா உள்ளிருப்புப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்களை கலைத்து, குறைந்தப்பட்சம் 1,400 பேரை கொன்றுள்ளது, 16,000 பேருக்கும் மேலானவர்களை சிறையில் அடைத்துள்ளது. இது எகிப்தின் முக்கிய முதலாளித்துவ எதிர் கட்சியான முஸ்லீம் சகோதரத்துவத்தை (Muslim Brotherhood -MB) இது தடை செய்துள்ளது, எதிர்ப்பு-ஆர்ப்பாட்டத்தை எதிர்க்கும் சட்டத்தை இயற்றியுள்ளது, அரசியலமைப்பில் தொடர்ந்த இராணுவ ஆட்சி இருக்கும் என பொறித்துள்ளது.

திங்களன்று ஒரு எகிப்திய நீதிமன்றம், அரசியல் பாரிய படுகொலை சட்டம் ஒன்றின் கீழ், 529 முஸ்லிம் சகோதரத்துவ ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. இன்னும் வெறும் நாடக விசாரணைகள் தயாரிக்கப்படுகின்றன. சிசியின் உரைக்கு சில மணி நேரங்கள் முன்புதான், எகிப்தின் அரசாங்க வக்கீல் மற்றொரு 919 முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்கள், முஸ்லிம் சகோதரத்துவத்தன் தலைமை வழிகாட்டி முகம்மது பாடி, அதன் அரசியல் பிரிவின் தலைவர் சாத் அல் கடானி ஆகியோர் அடங்கிய குழுவை, கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களுக்காக விசாரணைக்கு நிற்க வைத்துள்ளார்.

இராணுவ ஆட்சி, அச்சுறுத்தும் மற்றும் மிரட்டும் அப்பட்டமான அரசியல் கொலை என்னும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகையில், ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றாக இணைந்து மரண தண்டனை தீர்ப்பை பெயரளவிற்கு குறைகூறி; ஐரோப்பிய குழுவின் தலைவர் ஹெர்மன் வான் ரொம்பை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை சந்தித்தபின் புதன் அன்று பிரஸ்ஸல்ஸில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தீர்ப்புக்கள் குறித்து “அதிர்ச்சி” அடைந்துள்ளதாக அறிவித்த அதே நேரத்தில் பாரிய படுகொலைக்காரர் ஒருவர் ஜனாதிபதியாக இருத்தப்படுவதற்கு ஆதரவையும் கொடுத்துள்ளனர்.

முழுமையான இழிந்த முறையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் பெர்னடெட் மீஹன் அறிக்கையில்: “தேர்தல் வழிவகை செயல்படுகையில், நாம் எகிப்திய அதிகாரிகள் தேர்தல்கள் சுதந்திரமாக, நியாமாக, வெளிப்படையாக இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். அனைத்து வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தடையின்றி, அச்சமின்றி, தொந்தரவு பயம், மிரட்டல் இன்றி நடத்த வேண்டும்; எகிப்திய மக்கள் அனைவருடைய கருத்துக்களும் முழுமையாக பிரதிபலிக்க வேண்டும்” என கூறுகிறார்.

எகிப்திய நாளேடான Ahram Online  ஐரோப்பிய தூதர் ஒருவர் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது: “அவர் [சிசி] மிக கணக்கீடு செய்யும் ஒரு மனதை கொண்டவர், தன் அறிவிப்பை அவர் வெளியிடுவதில் – இது நீண்ட நாள் என்றாலும் – இத்தனை நாட்கள் அவர் எடுத்துக் கொண்டதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை.”

ஜனாதிபதி பதவிக்கு சிசி நிற்பது ஏகாதிபத்திய சக்திகள், இராணுவ ஆட்சிக்குழு மற்றும் உத்தியோகபூர்வ அரசியல் கடசிகள் எகிப்தில் வளர்ப்பதாகக் கூறும் “ஜனநாயக மாற்றம்” எனக்கூறப்படும் மோசடியைத்தான் அம்பலப்படுத்துகிறது.

நீண்ட கால சர்வாதிகாரியும் மற்றும் அமெரிக்காவின் கைப்பாவையுமா ஹொஸ்னி முபாரக் புரட்சிகர முறையில் அகற்றப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், எகிப்திய ஆளும் உயரடுக்கும் அதன் ஏகாதிபத்திய ஆதரவு நாடுகளும், அனைத்து வேலைநிறுத்தங்கள் எதிர்ப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் நேரடியான மிருகத்தன சர்வாதிகாரத்தை நிறுவ நகர்கின்றன.

சிசியின் உரை, ஆழ்ந்த சமூக நெருக்கடி மற்றும் ஒரு புதுப்பிக்கப்பட்ட தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்கு மத்தியில் வந்துள்ளது. Democracy Meter என்னும் எகிப்திய ஆய்வு மையக் கருத்தின்படி, எகிப்தில் வேலைநிறுத்தங்கள் பெப்ருவரி மாதம் மிக அதிக அளவில் 1,404 என இருந்தன. செவ்வாயன்று எகிப்திய ஆன்லைன் செய்தித்தாள் Mada Masr  “தொழிலாளர் அமைதியின்மைக்கு முடிவு கட்ட வேண்டும்  என்னும் உத்தயோகபூர்வ முயற்சிகளை மீறியும்.... எகிப்திய தொழிலாளர் தொகுப்பில் பெரும் பகுதி செவ்வாயன்று நாடு தழுவிய வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டது.” “மருத்துவர்கள், பல் வைத்தியர்கள், மருத்து விற்பனையாளர்கள், அஞ்சல் துறையினர், ஜவுளித் தொழிலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் இன்னும் மற்றவர்களும் நாள் முழுவதும் வெளிநடப்புச் செய்தனர்” என அது கூறியது.

இராணுவ ஆட்சிக் குழுவானது தொழிலாள வர்க்கத்தை மிருகத்தன அச்சுறுத்தலுடன் எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அறிக்கைகளின்படி, பொலிஸ் படைகள் 50,000 உறுப்பினர் கொண்ட அஞ்சல் தொழிலாளர்களின் தலைவர்களை கைது செய்தன; இவர்கள் செவ்வாய் காலையிலிருந்து எகிப்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரான அலெக்சாந்திரியாவில் வேலைநிறுத்தத்தில் இருந்தனர். அஞ்சல் துறைத் தலைவர் தொழிலாளர்கள் முஸ்லிம் சகோதரத்துவத்துடன் பிணைந்தவர்கள் என்று கூறியதாகவும், அது குடும்ப உறுப்பினர்களால் மறுக்கப்பட்டது என்றும் தெரிகிறது. கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்புப் படைகள் மிருகத்தனமாக கெய்ரோ மாணவர்களை தாக்கினர்; அவர்கள் முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்கள் மீதான மரண தண்டனையை எதிர்த்தனர். குறைந்தப்பட்சம் ஒரு மாணவராவது கொல்லப்பட்டார்.

இராணுவ ஆட்சிக் குழுவானது, தனது ஆட்சிக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் வன்முறை முயற்சிகள் மூலம் நசுக்குவது என்பது, எகிப்தின் வசதி படைத்த மத்தியதர வர்க்கத்தின் தாராளவாத, மற்றும் “இடது” அரசியல் அமைப்புக்களின் எதிர் புரட்சிகரப் பாத்திரத்தை உயர்த்திக் காட்டுகிறது. தேசிய மீட்பு முன்னணி (National Salvation Front -NSF), தமரோட் (Tamarod) போன்ற அமைப்புக்களும் அவற்றின் போலி இடது ஆதரவாளர்களும் மிக முக்கியமாக தவறான பெயரைக் கொண்ட புரட்சிகர சோசலிஸ்ட் (RS) என்ற குழுவும், முகம்மத் முர்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்களை, இராணுவத்தின் பின்னால் திசை திருப்பியதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன.

இப்பொழுது இந்த குழுக்களில் பெரும்பாலானவை சிசியின் ஜனாதிபதி பதவிக்கு நேரடியாக ஆதரவு கொடுக்கின்றன. தமரோட் இயக்கம் அதன் முழு ஆதரவையும் சிசிக்கு அளித்துள்ளது. புதன் அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அது “மார்ஷல் சிசி எகிப்திய மக்களின் பெரும் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதால் நாம் அவரை விரும்புகிறோம்” எனக் கூறியுள்ளது.

இதுவரை ஒரே இன்னொரு ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் நாசர் வாத அரசியல்வாதியும், NSF மற்றும் கரமாக் கட்சியின் (Karama Party) தலைவருமா ஹம்தீன் சபாஹி, சிசியின் வேட்பாளர் தன்மையை ஒரு ட்வீட்டில் புகழ்ந்துள்ளார். “நான் சிசியின் வேட்பாளர் தன்மையை வரவேற்கிறேன். நாங்கள் ஒரு ஜனநாயகத தேர்தலை, வெளிப்படையாக, நாட்டில் நடுநிலையாக நடத்தப்படுவதை வரவேற்கிறோம்; இதையொட்டி மக்கள் தங்கள் ஜனாதிபதியை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்க முடியும்.”

முன்பு முகம்மது எல்பரடேயினால் தலைமை தாங்கப்பட்ட தாராளவாத அரசியலமைப்பு கட்சியும் “இராணுவத்தில் தனது பதவியை இராஜநாமா செய்தபின்னர், ஒரு பொதுக் குடிமகனாக, சிசி போட்டியில் நுழைவதற்கு உரிமை கொண்டவர்” என அதனுடைய ஆதரவை சுட்டிக்காட்டி அறிவித்துள்ளது.

 ஆசிரியர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்:

முஸ்லீம் சகோதரத்துவத்தின் 529 கைதிகளை படுகொலை செய்யும் எகிப்திய பினோசே நடவடிக்கையை நிறுத்து!