சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Congress Party trumpets “inclusive growth” in hopes of averting poll debacle

இந்தியா: தேர்தல் தோல்வியைத் தடுக்கும் நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி "உள்ளார்ந்த வளர்ச்சியை" தம்பட்டம் அடிக்கிறது

By Nanda Wickremasinghe and Deepal Jayasekera
1 May 2014

Use this version to printSend feedback

இந்தியாவில் இரண்டு முறை பதவியில் இருந்துள்ள வெளியேறவிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்க பங்காளியான காங்கிரஸ் கட்சி, எல்லா விதத்திலும், இந்தியாவின் தேசிய தேர்தலில் ஒரு தோல்வியை முகங்கொடுக்கிறது. ஏப்ரல் 7இல் தொடங்கிய ஒன்பது கட்ட வாக்குப்பதிவு, மே 12இல் முடிவுறுவதோடு, மே 16இல் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இந்திய பெரு வணிகங்கள் காங்கிரஸை பாரம்பரியமாக அதன் பிரதான அரசியல் கருவியாக பார்த்துள்ளது. ஆனால் இந்த தேர்தலில் பெரும்பாலான பெருநிறுவன மேற்தட்டுகள் உத்தியோகபூர்வ எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியை (BJP) மற்றும் அதன் பிரதம மந்திரி வேட்பாளரான குஜராத் முதல் மந்திரியும், சுய-பாணியிலான இந்து இரும்புமனிதரான நரேந்திர மோடியைச் சுற்றி வட்டமடித்துள்ளன.

நவ-தாராளவாத சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலமாக இந்தியாவை ஒரு மலிவு-உழைப்பு உற்பத்தியாளராகவும், அதை உலக முதலாளித்துவத்திற்கான பின்புற-அலுவலகமாகவும் மாற்ற காங்கிரஸ் கட்சி இரண்டு தசாப்த கால பழமையான உந்துதலுக்கு தலைமை ஏற்றிருந்தது. அதேபோல ஏறத்தாழ ஒருமனதாக ஆளும் வர்க்க ஆதரவைப் பெற்றிருந்த, இரண்டு இதர பெரும் கொள்கை முடிவுகளையும் அது முன்னெடுத்திருந்தது: இந்தோ-அமெரிக்க "மூலோபாய" கூட்டணியை உருவாக்கியதும்; மற்றது, அணுஆயுதம் கொண்டு நிலம், நீர் மற்றும் வான்வழி தாக்கும் படையும், ஒரு நீலக்கடல் கப்பற்படையும் உட்பட இந்தியாவின் இராணுவத்தை வேகமான விரிவாக்கம் செய்ததும் ஆகும்.

இருந்த போதினும், பாரிய மக்கள் எதிர்ப்பிற்கு இடையில் சமூகத்திற்கு கொள்ளி வைக்கும் இன்னும் மேலதிகமான ஒரு சந்தைசார் சீர்திருத்த அலையைக் கொண்டு செல்ல காங்கிரஸ் தவறியதால், அதன் மீதான பெரு வணிகங்களின் நம்பிக்கை தகர்ந்து போனது. இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் நீண்ட காலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனத்தின் அன்புக்குரியவராக இருந்தார். ஆனால் இந்திய முதலாளித்துவம் உலக பொருளாதார நெருக்கடியால் அடிபட்டிருக்கும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில், அதன் கையிருப்புகள் குறைந்து போனது. மூலதன நெறிமுறைகள் மீது மிஞ்சியிருக்கும் தடைகளை நீக்கவும், பாரிய சமூக செலவின வெட்டுக்களைத் திணிக்கவும் இன்னும் ஆக்ரோஷமாக அவர் நகராததற்காக, பெரு வணிகங்கள் அவரை ஒரு "தொடை நடுங்கியாக" குற்றஞ்சுமத்தின. 1990களின் தொடக்கத்தில் நிதி மந்திரியாக இருந்தபோது இந்தியாவின் "புதிய பொருளாதார கொள்கையை" தொடங்குவதில் அவர் வகித்த பாத்திரத்தை விட, இந்தியாவின் சமீபத்திய வேகமான முதலாளித்துவ விரிவாக்கத்தை அவிழ்த்து விடுவதில் அவர் தலைமை வகித்தமைக்காக பெரிதும் நினைவுக்கூரப்படுவார் என்று கூறுமளவிற்கு சில வியாபாரத்துறை பேச்சாளர்களின் கருத்துக்கள் இருந்தன. முன்னதாக, தேர்தல்கள் நிச்சயமானதும் தாம் பதவி இறங்க இருப்பதாக கடந்த ஜனவரியில் சிங் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் பாரிய தொழிலாளர்களும் கிராமப்புற உழைப்பாளர்களும், விலை உயர்வுகள், பாரிய வேலை வாய்ப்பின்மை, தகுதிக்கேற்ற வேலையின்மை மீதான அதிருப்தியால், காங்கிரஸ்-தலைமையிலான UPA அரசாங்கத்தின் மீது கோபம் அடைந்துள்ளனர். கடந்த தசாப்தத்தில் காங்கிரஸ் 9+ சதவீத வளர்ச்சியை ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடிய ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஊக்குவித்து வந்திருந்தபோதும் கூட, இந்திய பொருளாதாரம் தேக்கநிலையில் சிக்கி உள்ளது. பொருளாதாரம் 5 சதவீதத்திற்கு குறைவான விகிதத்தில் விரிவடைந்து வருகிறது, இது அந்நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் தொழிலாளர் சக்திக்கு வேலைகள் வழங்க தேவையான விகிதத்தை விட மிக குறைவாகும், உணவு விலைகளோ பல ஆண்டுகளாக ஆண்டுக்கு 10 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து வருகின்றன.

இந்தியாவின் பெருநிறுவன அமைப்புகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான பண-பரிவர்த்தனைகள் மீதிருந்த திரையை நீக்கி இருக்கும் பல தொடர்ச்சியான ஊழல் மோசடிகளால், உழைக்கும் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். தொலைதொடர்பு அலைக்கற்றை, எரிவாயு மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் உட்பட பல பில்லியன் டாலர் மதிப்பிலான பொதுச் சொத்துக்களை காங்கிரஸ் தலைமையிலான UPA பெரு வணிகங்களுக்கு வந்த விலைக்கு விற்றுள்ளது, இன்னும் சில விடயங்களில் முற்றிலும் இலவசமாக கொடுத்துள்ளது.

காங்கிரஸ் ஒரு வரலாற்று தேர்தல் தோல்வியை நோக்கி செல்வதற்கு அங்கே பல அறிகுறிகள் காணப்படுகின்றன, கடந்த டிசம்பரில் நடந்த ஒரு தொடர்ச்சியான மாநில தேர்தல்களில் அது பெற்ற ஒன்றுக்கும் உதவாதவைகளில் இருந்து, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளரான அஹ்மத் படேலின் இந்த வார அறிக்கை வரை அது நீளுகிறது. அந்த அறிக்கையில் அவர், அதிகாரத்தைப் பெறுவதிலிருந்து BJPஐ விலக்கி வைக்க காங்கிரஸ் பிராந்திய மற்றும் ஜாதிய கட்சிகளின் ஒரு அடிமட்ட கூட்டணி தலைமையிலான ஓர் அரசாங்கத்திற்கும் கூட ஆதரவளிக்க வேண்டி இருக்கலாம் என்று கூறி இருந்தார்.

காங்கிரஸின் UPA கூட்டாளிகள் பலர் காங்கிரஸை விட்டோடிவிட்டனர். கடந்த தேர்தல்களில் அதன் இரண்டு மிகப் பெரிய கூட்டாளிகளான மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸூம், தமிழ் பிராந்தியவாத திராவிட முன்னேற்ற கழகமும், முறையே 2012 மற்றும் 2013இல் UPAஐ விட்டு விலகின. தேர்தலுக்கான ஓட்டத்தில், காங்கிரஸ் பிராந்திய மற்றும் ஜாதிய கட்சிகளின் ஒரு நீண்ட பட்டியலை நயந்து வேண்டி நிற்க வேண்டி இருந்தது, ஆனால் தவிர்க்கவியலாமல், இந்த கட்சிகள் பரந்தளவில் வெறுக்கப்படும் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்தால் வாக்குகளையும், இடங்களையும் இழக்க வேண்டியிருக்கும் என்று கணக்கிட்டு அவற்றின் யோசனைகளை மாற்றிக் கொண்டன. தனி தெலுங்கானா மாநிலம் கோரி போராடிய கட்சி அதனுடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்போடு, காங்கிரஸ் கட்சி, பெரும் எதிர்ப்பிற்கிடையே, ஆந்திர பிரதேச பிரிவினையைக் கொண்டு வந்தது. ஆனால் அதற்கு மாறாக, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தேர்தல்களைத் தனித்து போட்டியிட முடிவு செய்தது, அதேவேளையில் தேர்தலுக்குப் பின்னர் ஒரு பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தில் சேர்வது குறித்து ஆலோசிக்க அது தயாராக இருப்பதையும் சமிக்ஞையாக வெளிப்படுத்தியது.

UPA தற்போது ஒரு அரை டஜன் கட்சிகளைக் கொண்டிருக்கிறது, அவற்றில் பெரும்பாலானைவை கடந்த நாடாளுமன்றத்தில் ஒன்றோ அல்லது இரண்டோ இடங்களைப் பெற்றவை ஆகும்.

பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை, மிக முக்கியமாக நிதி மந்திரி P. சிதம்பரமும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி மணிஸ் திவாரியும் ஆவர்.

கடந்த ஆறு தசாப்தங்களாக காங்கிரஸில் மேலாதிக்கம் செலுத்தி வரும் நேரு-காந்தி குடும்ப அரசியல் பரம்பரையின் வாரிசான ராகுல் காந்தி கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தேர்தல்களில் நொருங்கிப்போவது ராகுல் காந்தியின் எதிர்கால வாய்ப்புகளை சேதப்படுத்தும் என அஞ்சி, தேர்தலுக்கு முன்னரே பிரதம மந்திரி வேட்பாளரின் பெயரை அறிவிப்பது காங்கிரஸ் "பாரம்பரியத்தில்" இல்லை என்ற போலிக்காரணத்தோடு, காங்கிரஸ் தலைமை பின்வாங்கியது.

தேர்தல் தோல்வியைத் தடுக்கும் நம்பிக்கையில், அது "உள்ளார்ந்த வளர்ச்சியின்" கட்சி என்றும், வகுப்புவாதத்தின் உறுதியான எதிர்ப்பாளர் என்றும் அதன் நீண்டகால வாதங்களை காங்கிரஸ் பெரிதுபடுத்தி காட்டி வருகிறது.

ஆனால் இரண்டு வாதங்களும் பொய்களாகும்.

காங்கிரஸ் தலைமையிலான UPA சமூக சமத்துவமின்மையின் மலைப்பூட்டும் வளர்ச்சிக்கு தலைமை தாங்கி உள்ளது. மேலும் இந்து மேலாதிக்கவாத BJPக்கு எதிராக வன்மையாக தாக்கி பேசி வருகின்றன அதேவேளையில், 1947 வகுப்புவாத இந்திய பிரிவினை உட்பட இந்து வலதுடன் இணக்கமாக இருந்ததற்கான மற்றும் கண்டுங்காணாதது போல் உடந்தையாக இருந்ததற்கான தசாப்த-கால வரலாற்றை காங்கிரஸ் கொண்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் ஆதாயங்கள், ஒரு சிறிய முதலாளித்துவ மேற்தட்டால் மற்றும் மத்திய தட்டு வர்க்கத்தின் மேல்மட்ட அடுக்குகளால் ஏகபோகமாக்கப்பட்டுள்ளன. ஒரு சமீபத்திய ஆய்வின்படி, இந்தியா ஒரு நூறு பில்லியனர்களுக்கும் அதிகமானவர்களைக் கொண்டுள்ளதோடு, மிக மிக அதிக நிகர சொத்து மதிப்பை பெற்ற தனிநபர்களின் எண்ணிக்கையில் இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆனால் இதே இந்தியாவில் தான் குழந்தைகளில் பாதிப் பேர் போதிய ஊட்டச்சத்தின்றி உள்ளனர், மொத்த மக்கள்தொகையில் மூன்று கால் பங்கினர் நாளொன்று 2 டாலர்களுக்கு குறைவான வருவாயில் உயிர் வாழ்கின்றனர், அரசு GNPஇல் வெறும் மூன்று சதவீதத்திற்கு சமமாக செலவிடுவதோடு, அதில் பாதியளவிற்கு மட்டுமே மருத்துவ பராமரிப்புக்கு செலவிடுகிறது. இந்தளவிற்கு கொடூரமான நிலைமைகளை முகங்கொடுத்துள்ள சிறு விவசாயிகளில் 250,000த்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த 16 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

UPAஇன் முதல் பதவிக் காலத்தின்போது, அப்போது இந்தியா சாதனை வளர்ச்சியை அனுபவித்து வந்த அந்த காலக்கட்டத்தில், ஒருசில விரல் விட்டு எண்ணக்கூடிய புதிய சமூக செலவின திட்டங்களுக்கு நிதியளிக்க வருவாயில் ஏற்பட்ட உயர்வில் ஒரு சிறிய பகுதியை காங்கிரஸ் அரசு பயன்படுத்தியது. இதில் மிக முக்கியமானது தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் ஆகும், இது நாளொன்றுக்கு வெறும் 100 ரூபாய் (1.60 அமெரிக்க டாலர்) வீதம் 100 நாட்களுக்கு ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களின் ஒரு உறுப்பினருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக கூறப்பட்டது. NREG நடைமுறைப்படுத்தும் இடங்களின் எண்ணிக்கை எப்போதும் போல தேவையின் காரணமாக பெரிதும் அதிகரித்துள்ளது, ஆனால் உழைக்கும் மக்களின் செலவில் அரசாங்கத்தின் நிதி நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கத்தோடு ஒரு சிக்கன நடவடிக்கையின் பாகமாக அரசாங்கம் NREG செலவுகளைக் கூர்மையாக சுருக்கிக் கொண்டுள்ளது.

விவசாயிகளின் கூர்மையான மனக்கவலைகளை இந்தியா முகங்கொடுத்து வந்த நிலைமைகளின் கீழ், தொடக்கத்தில் NREG காங்கிரஸிற்கான ஆதரவுக்கு மிதவையாக இருந்ததோடு 2009இல் UPA மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதில் பங்களிப்பு வழங்கியது. தற்போதைய பிரச்சாரத்தில், இந்த உத்தியை மீட்டெடுக்க காங்கிரஸ் தலைமை எரிச்சலோடு முயன்று வருகிறது.

சுதந்திரத்திற்கு பின்னர் இருந்து ஆறரை தசாப்தங்களில் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தை பெரும்பாலும் காங்கிரஸ் அமைத்திருந்த போதினும், இப்போது அது சுகாதாரம், கல்வி, ஓய்வூதியங்கள், மற்றும் "சமூக பாதுகாப்பு" உட்பட ஒரு தொடர்ச்சியான புதிய "உரிமைகளை" அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே ஸ்தாபிக்க இயலும் என வாதிடுகிறது.

இத்தகைய வெற்று வாக்குறுதிகள், 2016-17க்குள் பற்றாக்குறையை GDP விகிதத்தில் 3 சதவீதத்திற்கு குறைப்பது, வரிச்சுமையின் மேலதிக பெரும் பங்கை இன்னும் கூடுதலாக உழைக்கும் மக்கள் மீது சுமத்தவும் மற்றும் "இன்னும் அதிகமாக இலகுவான தொழிலாளர் கொள்கையை" நடைமுறைப்படுத்தவும், தேசிய பண்டங்கள் மற்றும் சேவை வரியைக் குறைப்பது என பெரு வணிகங்களுக்கு வழங்கியிருக்கும் உத்தரவாதங்களோடு பிணைந்துள்ளன. உள்நாட்டு மற்றும் சர்வதேச பெரு வணிகங்கள், வேலை நீக்கங்கள் மற்றும் ஆலைமூடல்கள் மீதான அனைத்து கட்டுபாடுகளையும் நீக்க நீண்ட காலமாக கோரி வந்துள்ளன.

காங்கிரஸ் பசுமை வேட்டை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தவும் உறுதியாக உள்ளது. 2009இல் UPAஆல் தொடங்கப்பட்ட இந்த தேசியளவில் ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை, காடுகளிலும், கிழக்கு இந்தியாவின் மலை பிரதேசங்களிலும் இலாபகரமான ஆதாரவளங்களைப் பிரித்தெடுக்கும் திட்டங்களுக்கு எதிராக எழும் அனைத்து எதிர்ப்பையும் இல்லாதொழிப்பதை நோக்கமாக கொண்டதாகும். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறிப்பிடுகிறது, “இடது சாரி அதிதீவிரவாதம் இரும்பு கரம் கொண்டு கையாளப்படும். உபகரணங்கள், உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளங்களை அதிகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படைகளை நாங்கள் பலப்படுத்துவோம்", என்று குறிப்பிடுகிறது.

அரசியல் என்று கருதும்போது, BJP "பாசிஸ்டு" என்று முத்திரை குத்தும் அளவிற்கு, அதன் பிற்போக்குத்தனமான வகுப்புவாத முறையீடுகளை காங்கிரஸ் பேச்சாளர்கள் விமர்சிக்கின்றனர். ஆனால் அயோத்தியாவில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு இந்து கோயிலைக் கட்ட பிற்போக்குத்தனமான பிஜேபி-ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தை மறைமுகமாக அப்போது ஆதரித்தது உட்பட, காங்கிரஸ் வகுப்புவாத பிற்போக்குத்தன வளர்ச்சிக்கு உதவி உள்ளது, துணை போயுள்ளது.

அதன் BJP போட்டியாளர்களைப் போலவே, காங்கிரஸூம் சமூக அதிருப்தியை திசை திருப்பி விட மற்றும் இந்தியாவின் ஆயுதப் படைகளின் வேகமான விரிவாக்கத்திற்கு இருக்கும் மக்கள் எதிர்ப்பை கடந்து செல்ல பாகிஸ்தான் உடனான மோதலைத் தூண்டிவிட்டுள்ளது. 2008 மும்பை பயங்கரவாத அட்டூழியத்தை அடுத்து, கடுமையான "பயங்கரவாத தடுப்பு" சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் பிஜேபி உடன் கை கோர்த்தது.

இந்து "புனித நகரமான" வாரணாசியில் (பனாரஸ்) மோடிக்கு எதிராக நிறுத்த, மூன்று முறை முன்னாள் BJPஇன் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ள ஒருவரை காங்கிரஸ் தேர்ந்தெடுத்தமை, காங்கிரஸ் எவ்வாறு பிஜேபி உடன் "சண்டையிடுகிறது" என்ற விதத்தை கருத்தில் கொண்டதாகும். மோடி மற்றும் அவரது மாநில அரசாங்கத்தால் தூண்டிவிடப்பட்ட 2002 குஜராத் முஸ்லீம்-விரோத படுகொலைக்குப் பின்னர், காங்கிரஸின் குஜராத் மாநில பிரிவு ஒரு வகுப்புவாத கொள்கையைப் பின்தொடர்ந்தது, அதை பெருநிறுவன ஊடகங்களே கூட "மிதமான இந்துத்துவா (இந்து தேசியவாதம்)” என்று ஏளனம் செய்தன.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதன் மீது காங்கிரஸின் அலட்சியமும், விரோதமும் முன்னாள் இராணுவ தலைவர் வி. கே. சிங்கின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட, ஒரு இரகசிய இராணுவ பிரிவின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து மூடிமறைத்து வருவதில் நிரூபிக்கப்பட்டுள்ளது. (பார்க்கவும்: இந்திய அரசாங்கம் 2012 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மீதிருந்த அச்சங்கள் குறித்து பொய்யுரைக்கிறது)

ஏனைய குற்றங்களில் ஒன்றாக, இந்த பிரிவு பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளை ஊடுருவியதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜம்மு & காஷ்மீர் மாநில அரசாங்கத்தைத் தூக்கி வீச முனைந்தது. இருப்பினும் காங்கிரஸ் அதன் நடவடிக்கைகள் குறித்து பொது மக்களை முற்றிலும் இருட்டில் வைக்க தீர்மானகரமாக இருந்ததோடு, வேறுவிதத்தில் இந்தியாவின் ஆயுதப்படைக்குள் அடைகாக்கப்பட்டு வரும் அதிதீவிர-பிற்போக்குத்தனமான சக்திகள் குறித்து இந்திய மக்கள் எந்தவொரு ஆழ்ந்த பார்வையும் பெறுவதில் இருந்து தடுப்பதிலும் தீர்க்கமாக உள்ளது. இது ஏனென்றால் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தைப் போலவே, காங்கிரஸூம் இந்தியாவை ஒரு வல்லரசாக ஆக்கும் அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய, அதையும் விட முக்கியமாக, இந்தியாவின் முன்பில்லாத அளவிலான சமமின்மையைக் கொண்ட மற்றும் நெருக்கடியால் உந்தப்பட்ட முதலாளித்துவ சமூக அமைப்புமுறையின் பாதுகாப்பு அரணாக, இராணுவத்தை அதிமுக்கியமாக கருதுகிறது.