சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

ICFI/WSWS public meeting in India on the danger of world war

உலகப்போர் அபாயம் பற்றி இந்தியாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக்க குழு / உலக சோசலிச வலைத் தளத்தின் பொதுக்கூட்டம்

11 November 2014

Use this version to printSend feedback

இந்தியாவில் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர்கள் வளர்ச்சி கண்டுவரும் உலகப் போரின் அபாயத்திற்கு சோசலிச மாற்றீடு பற்றி விவாதிக்க சென்னையில் நவம்பர் 16ல் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளனர்.

ஜூன் 9ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கூறுவதாவது ''முதலாம் உலகப் போர் வெடித்த ஒரு நூறு ஆண்டுகளுக்கும் இரண்டாம் உலகப் போர் தொடங்கி 75 ஆண்டுகளுக்கும் பின்னர் ஏகாதிபத்திய அமைப்புமுறையானது மீண்டுமொரு முறை மனிதகுலத்தை ஒரு பேரழிவைக் கொண்டு அச்சுறுத்துகிறது.'' 2008ல் தொடங்கிய முதலாளித்துவ நிலைமுறிவினால் உந்தப்பட்டு அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் புதிய சந்தைகளையும் வளங்களையும் இராணுவ வழிகளின் மூலமாக மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கின்றன.

ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசை (ஐஎஸ்ஐஎஸ்) எதிர்த்து போராடுவது என்ற சாக்கில் ஒபாமா நிர்வாகத்தினால் மத்திய கிழக்கில் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போரானது, உண்மையிலேயே ஈராக்கில் அதன் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது மற்றும் சிரியாவில் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவதை குறிக்கோளாக கொண்டதுமாகும். ஐரோப்பாவில் வாஷிங்டனும் பேர்லினும் பாசிஸ்டுகளினால் உக்ரேனில் வழிநடத்தப்பட்ட ஒரு சதிக்கு ஆதரவளித்தன, அதன் மூலம் ரஷ்யாவுடன் ஒரு வெடிப்புத்தன்மையுடைய மோதலை தூண்டுகின்றன.

வாஷிங்டனின் ஆசியாவை நோக்கிய மூலோபாய ''முன்னெடுப்பு" பிராந்திய முழுவதும் பதட்டங்கள் விரிவடைய வழிவகுத்துள்ளது. அதேசமயம் அமெரிக்கா சீனாவை இராணுவரீதியாக சுற்றி வளைத்து அதற்கு எதிராக போர்த்தொடுக்க முயற்சிக்கின்றது. வலது சாரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்ததிலிருந்து ஒபாமா நிர்வாகமானது புதுதில்லியை ஒரு மூலோபாய பங்காளியாக வளர்ச்சி செய்யும் முயற்சிகளை உக்கிரப்படுத்தியது. சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் விளைவுகள் பற்றி அலட்சியமான போர் உந்துதலுக்கு மோடி அரசாங்கம் ஊக்கமளிக்கிறது, அது ஆசியாவிலும் உலக முழுவதிலுமுள்ள மக்களுக்கு கணக்கிடமுடியாத பிரதிவிளைவுகளை கொண்ட ஒரு மோதலுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு உலக இயக்கத்தில் ஐக்கியப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கத்தினால் மட்டுமே போரை தடுக்க முடியும். இந்த கிரகத்தில் இந்த முன்னோக்கிற்காக போராடும் ஒரே ஒரு கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதன் பகுதிகளான சோசலிச சமத்துவ கட்சிகளுமே. இப்படியான முக்கியமான அரசியல் பிரச்சனைகள் பற்றி விவாதிக்க சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பங்கெடுக்குமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களை ஊக்குவிக்கின்றோம்.

தேதி: நவம்பர் 16, 2014,

 நேரம்: ஞாயிறு காலை 10 மணி

 இடம்: மூன்றாவது மாடி,  சக்தி அபார்ட்மெண்ஸ்,

     38 கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம்,
    
சென்னை-6 (கல்லூரி சாலை பஸ் நிலையம் அருகில்)