சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US elite rolls out red carpet for Indian PM Modi

அமெரிக்க மேற்தட்டு இந்திய பிரதம மந்திரி மோடிக்கு செங்கம்பளம் விரிக்கிறது

By Keith Jones
30 September 2014

Use this version to printSend feedback

ந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கு ஒரு பிரத்தியேக வெள்ளை மாளிகை இரவு விருந்து வழங்கி, அவருடனான இரண்டு-நாள் சந்திப்பை நேற்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தொடக்கிவைத்தார்.

இந்தியாவின் புதிய பிரதம மந்திரியைப் அளவுக்குமீறி புகழ்ந்துரைக்கும் முயற்சியாக, நியூ யோர்க் டைம்ஸ் "ஷாம்பெயினும் ரோஜாக்களும்" என்று அழைத்ததோ, அந்தவொரு முயற்சியின் பாகமாக, துணை ஜனாதிபதி ஜோய் பேடன், வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் சக் ஹாகெல் உட்பட ஒபாமா நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடனும் மற்றும் ஒபாமாவுடனும் மோடி இன்று மேலதிக சந்திப்புகளை நடத்த உள்ளார்.

சீனாவுக்கு ஒரு இராணுவ-மூலோபாய மற்றும் பொருளாதார எதிர்பலமாக இந்தியாவைக் கட்டமைக்கும் அவர்களின் முக்கிய நோக்கத்தை முன்னெடுக்க, அல்லது வேறுவிதத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள மூலோபாய திட்டத்திற்கு  புது டெல்லியை அணிதிரட்டிக்கொள்ள ஒபாமா நிர்வாகமும் மற்றும் அமெரிக்க இராணுவ-பாதுகாப்பு பிரிவினரும் இந்திய-அமெரிக்க உறவுகளை "மீட்டமைப்பதில்" மோடியின் விஜயத்தை ஒரு பொன்னான வாய்ப்பாக பார்க்கிறார்கள் என்ற உண்மையை பகிரங்கப்படுத்த தயங்கவில்லை.

கடந்த வெள்ளியன்று செய்தியாளர்களிடையே பேசுகையில், வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர்களுக்கான செயலர் ஜோஸ் எர்னெஸ்ட் அந்த சந்திப்பை, “அமெரிக்க-இந்திய மூலோபாய நட்புறவை ... இந்நாட்டால் மற்றும் வெள்ளை மாளிகையால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு நட்புறவை" ஆழப்படுத்துவதற்கான ஒரு வழிவகையாக வர்ணித்தார். வெறும் மிகைப்படுத்துவதற்காக அல்லாது, மற்றொரு நிர்வாக அதிகாரி Timesக்கு தெரிவிக்கையில், “இதுவொரு மிகமுக்கிய தருணமென்று நாங்கள் கருதுகிறோம், நாங்கள் ஒன்றுசேர்ந்து எவ்வாறு வேலை செய்ய முடியுமென்பதை வரையறுக்க இது எங்களுக்கு ஒரு சந்தர்ப்பமாகும்," என்றார்.

வெளியுறவு கொள்கை ஆலோசனை குழுவின் முன்னணி வெளியீடான Foreign Affairsஇல் எழுதுகையில், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ், இந்தியாவின் ஆதரவைப் பெற அமெரிக்காவின் முயற்சிக்குப் பின்னால் தங்கியிருக்கும் அந்த தீவிரமான நிகழ்ச்சிநிரலைக் குறித்து ஏதோவிதத்தில் இன்னும் வெளிப்படையாக இருந்தார். “எதிர்வரவிருக்கின்ற நூற்றாண்டில், அமெரிக்க மூலோபாய நலன்கள், ஆசியாவில் அக்கண்டத்தின் வேறெந்த அதிகாரத்துடன் அது அணிசேர்ந்திருப்பதையும் விடவும் இந்தியாவுடன் அதிக நெருக்கமாக அணிசேர்ந்திருக்கும்.... ஆகவே ஒபாமா நிர்வாகம் இந்தியாவை மிகமுக்கிய முன்னுரிமையாக்க அதன் எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகளைப் பயன்படுத்த வேண்டும், குறிப்பாக "ஆசியாவை நோக்கி திரும்புதல் என்றழைக்கப்படுவதன் பாகமாக" ஆசியாவின் மீது அமெரிக்காவின் கவனத்தையும் ஆதாரவளங்களையும் மறுசமன்படுத்துவதில், அந்நாடு (இந்தியா) இன்னும் பிரதானமாக கவனத்திற்கு எடுக்கப்படவில்லை என்றார்.

ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷின் கீழ், அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு "உலகளாவிய மூலோபாய" கூட்டுறவை உருவாக்கின. ஒபாமா பதவிக்கு வந்த பின்னர், அவர் இந்திய மேற்தட்டின் வல்லரசாகும் அபிலாஷைகளை எட்ட உதவுவதில் அமெரிக்காவின் ஆர்வத்தை உடனடியாக மீள வலியுறுத்தினார். ஆனால் சமீபத்திய ஆண்டுகள் வாஷிங்டனுக்கும் புது டெல்லிக்கும் இடையே அதிகளவிலான கருத்து வேறுபாடுகளைக் கண்டுள்ளன.

இந்தியா தொடர்ந்து அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு, அதுவும் குறிப்பாக ஈரானை அச்சுறுத்த மற்றும் பொருளாதாரரீதியில் முடமாக்க வாஷிங்டனின் முயற்சிகளுக்கு அடிபணிந்துள்ளதுடன், இந்திய இராணுவம் அதிகளவில் அமெரிக்க இராணுவத்துடன் ஒருங்கிணைந்தும் உள்ளது. அமெரிக்கா இந்தியாவிற்கு ஆயுதங்கள் மற்றும் ஆயுத உபகரணங்களை வழங்கும் மிகப்பெரிய வெளிநாட்டு வினியோகஸ்தராகும், அத்துடன் சமீபத்திய ஆண்டுகளில் பெண்டகனுடன் இந்திய இராணுவத்தை விட வேறெந்த நாட்டின் இராணுவமும் அதிக கூட்டு ஒத்திகைகளை நடத்தி இருக்கவில்லை.

எவ்வாறிருந்தபோதினும், ஒபாமா நிர்வாகம் மூலோபாய மற்றும் பொருளாதார விடயங்களில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கத்துடன் அதிகளவில் கசப்புற்று இருந்தது. வாஷிங்டனுக்கு பெரும் ஏமாற்றமாக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கம், சீனாவைத் தனிமைப்படுத்தும் மற்றும் சுற்றி வளைக்கும் முனைவான ஆசியாவை நோக்கிய திரும்புவதில்" வாஷிங்டனின் முக்கிய மூலோபாய கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் முத்தரப்பு கூட்டுறவு மற்றும் நாற்தரப்பு இராணுவ-பாதுகாப்பு கூட்டுறவை விரிவாக்குவதில் பின்வாங்கியிருந்தது.

வாஷிங்டனும், அமெரிக்க பெரு வியாபாரமும் இந்தியா அன்னிய முதலீட்டுடன் அல்லது அமெரிக்க காப்புரிமைகள் சட்டங்களுடன் சம்பந்தப்பட்ட மிஞ்சியிருக்கும் தடைகளை நீக்குவதற்கு போதுமான வேகத்தில் நகரவில்லையெனவும் குறை கூறியுள்ளன. அத்துடன் இந்தியாவின் பொதுதேவைக்கான அணுசக்தி திட்டத்தின் மீதிருந்த சர்வதேச தடைகளை வாஷிங்டன் நீக்குவதற்கு ஏற்பாடு செய்த பின்னர், இந்தியா கொண்டு வந்த பொதுதேவைக்கான அணுசக்தி உத்தரவாத சட்டத்தையும் அவை கடிந்துள்ளன. ஏனென்றால் அதன்படி ஒரு பேரழிவுகரமான அணுசக்தி விபத்தில் நிறுவனத்தின் பிழை நிரூபணமானால் ஓர் அமெரிக்க நிறுவனம் கணிசமான அபராதங்களை முகங்கொடுக்கும் வேண்டியிருக்கும்.

காலங்காலமாக இந்தியாவின் அமெரிக்க-சார்பு வலதுசாரி கட்சியான, இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவர் மோடி ஏற்கனவே, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் அதன் முக்கிய பங்காளிகளுடன் விரிவாக்கப்பட்ட உறவுகளைப் பின்தொடர, அவர் ஆர்வத்துடன் இருப்பதைச் சமிக்ஞை செய்துள்ளார்.

அவரது அரசாங்கம், அதற்கு முன்னர் இருந்த அரசாங்கத்தைப் போலல்லாமல், புதிய ஆயுத தளவாடங்களை இணைந்து-அபிவிருத்தி செய்வதில் மற்றும் இணைந்து-உற்பத்தி செய்வதில், பெண்டகன் மற்றும் அமெரிக்க இராணுவ உற்பத்தியாளர்களுடன் இந்தியா சேர வேண்டுமென்ற ஒபாமா நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்பதற்கு தயாராக இருப்பதாக மோடி அறிவித்துள்ளார்.

இந்தோ-அமெரிக்க கூட்டு உற்பத்தியில் மூன்றாம் தலைமுறை ஜாவலின் டாங்கி-எதிர்ப்பு ஏவுகணை தயாரிப்பிற்கான விபரங்களை இறுதி செய்யும் நோக்கில், மோடியின் விஜயத்திற்கு பல நாட்களுக்கு முன்னரே, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு உயர்மட்ட குழு வாஷிங்டனை வந்தடைந்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுபோன்ற கூட்டு-உற்பத்தி உடன்படிக்கைகள்இன்னும் பல உடன்படிக்கைகளும் அங்கே தற்போது பரிசீலினையின் கீழ் உள்ளனஅமெரிக்காவின் நெருக்கமான மற்றும் மிகவும் நம்பகமான மூலோபாய பங்காளிகளுடன் மட்டுமே செய்து கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.

மோடி அதுபோன்ற கூட்டு-உற்பத்தி உடன்படிக்கையில் புது டெல்லி இணைவதன் மீதான அவரது ஆர்வத்தை, இந்திய தேசியவாத வார்த்தைபிரயோகங்களில் சித்தரிக்க முனைந்து வருகிறார். இந்தியாவை ஆயுத உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்து, இறுதியாக நாட்டை ஒரு பிரதான ஆயுத-ஏற்றுமதியாளராக மாற்றும் அவரது அரசாங்கத்தின் இலட்சியத்திற்கு அவை மேலதிகமாக உதவுமென அவர் வாதிடுகிறார்.

ஆயுத கூட்டு-உற்பத்தி என்பது இந்தோ-அமெரிக்க இராணுவ "ஒன்றிணைந்தியங்குவதில்" வாஷிங்டனின் இலக்கிற்கு மேலதிகமாக உதவுவதுடன், மிக முக்கியமானதுபோல், புது டெல்லி அமெரிக்காவின் மீது இராணுவரீதியில் இன்னும் மேலதிகமாக சார்ந்திருக்க செய்து, அமெரிக்க இராணுவ-பாதுகாப்பு எந்திரத்துடன் இந்தியாவை ஒருங்கிணைப்பதை நோக்கிய ஒரு முக்கிய படியாக இருக்கும் என்பதே யதார்த்தமாகும்.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடனான வழக்கமான முத்தரப்பு மற்றும் நாற்தரப்பு நடவடிக்கைகளில் இந்தியா பங்கெடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்பதையும் மோடி சுட்டிக் காட்டியுள்ளார். தெற்காசியாவிற்கு அப்பால் அவரது முதல் இருதரப்பு வெளிநாட்டு விஜயத்திற்கான இடமாக இந்திய பிரதம மந்திரி கடந்த மாதம் ஜப்பானுக்குச் சென்றிருந்த போது, மோடியும் ஜப்பானிய பிரதம மந்திரி அபேயும் அறிவித்த "சிறப்பு மூலோபாய நட்புறவின்" ஒரு முக்கிய பாகமாக, அதிகரிக்கப்பட்ட இந்தோ-அமெரிக்க-ஜப்பானிய கூட்டுறவு அமைந்திருந்தது.

சீனாவுக்கு எதிரான அவற்றின் பிராந்திய உரிமைகோரல்களை ஆக்ரோஷமாக பின்தொடர வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் இதர அரசுகளை வாஷிங்டன் ஊக்குவித்து வரும், அதே தென்கிழக்கு ஆசியா மற்றும் தென்சீன கடலில் இந்தியா இன்னும் செயலூக்கத்துடன் இறங்கவும் அமெரிக்கா இந்தியாவுக்கு அழுத்தம் அளித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில், இந்தியா மற்றும் வியட்நாமுக்கு இடையே இராணுவ கூட்டுறவை அதிகரிக்க உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன என்பதுடன், சீனாவினாலும் உரிமைக்கோரப்படும் கடலோர பகுதிகளில் எண்ணெய் எடுக்க இந்திய அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஹனோய் ஒப்புதல் வழங்கியது.

வெள்ளை மாளிகை செய்தியின்படி, இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிடுகிறோம் என்ற போர்வையின்கீழ் ஒரு புதிய யுத்தத்தை அமெரிக்கா தொடங்கியுள்ள மத்திய கிழக்கின் நிகழ்வுகளிலும் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவினால் நிறுவப்பட்ட அரசாங்கத்திற்கும் இந்தியாவின் ஆதரவைத் தொடர்வது குறித்து ஒபாமா மற்றும் அவரது உயர்மட்ட அதிகாரிகளுடன் மோடி விவாதிப்பார். ஞாயிறன்று, ஐக்கிய நாடுகள்  பொது அவை நிகழ்வுகளுடன் சேர்ந்து மோடி இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தென்யாஹூவைச் சந்தித்தார். இது 11 ஆண்டுகளில் இந்திய பிரதம மந்திரிக்கும் அவரது இஸ்ரேலிய சமதரப்பினருக்கும் இடையில் நடந்த முதல் சந்திப்பாகும்.

மோடியைப் பொறுத்த வரையில், அவரது அமெரிக்க விஜயத்தின் ஒரு முக்கிய நோக்கம் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்திய பொருளாரத்தைப் முதலீடுகளில் மிதக்கச் செய்ய பிரச்சாரம் செய்வதாகும். 2011க்குப் பின்னர் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 5 சதவீதத்தை விட குறைவாக விரிவடைந்து, கூர்மையாக வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு சற்று முன்னர், மோடி இந்தியாவை சீனாவுக்கு ஒரு மாற்றீடாக மலிவு-கூலி உற்பத்தி மையமாக ஊக்குவிக்கும் நோக்கில் "இந்தியாவில் உற்பத்தி" (Made in India) எனும் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.

மோடி அவரது அமெரிக்க பயணத்தில் வியாபார தலைவர்களுடன் நிறைய கூட்டங்களை நடத்தி வருகிறார். திங்களன்று, அவர் பெப்சி, சிட்டிகார்ப் மற்றும் கூகுள் உட்பட 11 தலைமை செயலதிகாரிகளுடன் ஒரு மணிநேர காலை உணவு சந்திப்பில் கலந்து கொண்டார். பின்னர் அவர் ஏனைய ஆறு தலைமை செயலதிகாரிகளைத் தனித்தனியாக சந்தித்து பேசினார், அவர்களில் கோல்டுமென் சாஸ்ச், பிளாக்ராக், மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனம் போயிங், மற்றும் ஜெனரல் எலெக்ட்ரிக் (GE) ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளடங்குவர். கொல்கத்தாவை மையமாக கொண்ட Telegraph பத்திரிகை செய்தியின்படி, மோடி GE தலைமை செயலதிகாரி ஜெஃப்ரே இம்மெல்டுக்கு, இந்தியா அதன் அணுசக்தி இழப்பீட்டு சட்டத்தை திருத்துவது குறித்து விவாதிக்க இப்போது தயாராக இருப்பதாக சமிக்ஞை காட்ட முனைந்திருந்தார். ஜெனரல் எலெக்ட்ரிக்  நிறுவனம் அணுசக்தி தொழில்துறையில் ஒரு பிரதான பாத்திரம் வகித்து வருகிறது.

இந்திய மற்றும் அமெரிக்க பெருநிறுவன ஊடகங்களோ மோடி-ஒபாமா சந்திப்பை, உலகின் இரண்டு மிகப்பெரிய "ஜனநாயகங்களுக்கு" தலைமையேற்று வருபவர்களின் சந்திப்பு என்ற அரைகுறை உளறல்களுடன் பிரச்சாரம் செய்திருந்தன.

முஸ்லீம்-விரோத 2002 குஜராத் படுகொலையில் மற்றும் விசாரணையின்றி கூட்டு கொலை செய்வதை (என்கவுண்டர் படுகொலை என்றழைக்கப்படுவதை) நியாயப்படுத்தில் இழிவார்ந்த விதத்தில் பங்குபற்றி இருந்த ஒரு இந்து மேலாதிக்கவாதியான மோடி, இந்தியாவின் ஆளும் மேற்தட்டின் ஜனநாயக நம்பிக்கைகளுக்கு சரியாக பொருந்தும் பிரதிநிதியாக இருக்கிறார்.

உண்மையில், 2002 படுகொலையைத் தூண்டிவிட்டதில் வெளிப்படையாக அவர் வகித்த பாத்திரத்திற்காக மற்றும் அதை நடத்தியவர்களை நேரடியாக அவர் பாதுகாத்ததற்காக, அமெரிக்க அரசாங்கம் மோடி அமெரிக்காவிற்குள் விஜயம் செய்ய ஒரு நுழைவனுமதி (விசா) வழங்க மறுத்திருந்தது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏறத்தாழ ஒரு தசாப்தகாலத்திற்குப் பின்னர் முடிவுக்கு வந்திருந்தது.

ஒபாமாவை பொறுத்தவரையில், அவர் அரசு உளவுவேலையின் பரந்த விரிவாக்கத்தை மேற்பார்வையிட்டுள்ளார். அமெரிக்க குடிமக்களை விசாரணையின்றி படுகொலை செய்வதற்கு உத்தரவிடும் அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளதுடன் மற்றும் அமெரிக்கா விரும்பும் எந்தவொரு நாட்டின் மீதும் அது படையெடுக்க மற்றும் அதை நிலைகுலைய செய்ய அமெரிக்காவிற்கு தடையற்ற உரிமை இருப்பதாக வலியுறுத்தி, சர்வதேச சட்டத்தை பயனற்றது என தூக்கிவீசியுள்ளார்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

இந்திய தேர்தல்களுக்குப் பின்னர் , அமெரிக்கா

 "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பிற்கான " பெரும் ஆதரவிற்கு அழுத்தம் அளிக்க உள்ளது