சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US war against the people of Syria and Iraq

சிரியா மற்றும் ஈராக் மக்களுக்கு எதிரான அமெரிக்க யுத்தம்

Patrick Martin
2 October 2014

Use this version to printSend feedback

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க விமான தாக்குதல்கள் பத்தாயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொல்லுமென்ற உண்மை, வெள்ளை மாளிகைக்கும் பெண்டகனுக்கும் முற்றிலும் நன்றாக தெரியும். செவ்வாயன்று ஓர் உயர்மட்ட வெள்ளை மாளிகை அதிகாரியால் வழங்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க பொது அறிவிப்பிலிருந்து இந்த முடிவுக்கு மட்டும் தான் வர முடியும்.

சிரியா மற்றும் ஈராக் மீதான வான்வழி போரில் இதுவரையில் நடத்தப்பட்டிருக்கும் கடுமையான தாக்குதல்கள், செவ்வாயன்று அந்நாடுகள் ஒவ்வொன்றிலும் 12 தாக்குதல்கள் என அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் தொடங்கிய 24 தாக்குதல்கள், பிரிட்டிஷ் போர்விமானங்கள் நடத்திய அவற்றின் முதல் தாக்குதல்கள் ஆகியவற்றுடன் அந்த அறிவிப்பு பொருந்தி இருந்தது.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் பத்திரிகை தொடர்பாளர் கெய்ட்லின் ஹேய்டன், யாகூ செய்திகளுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், பாகிஸ்தான் மற்றும் யேமனில் அமெரிக்க டிரோன் தாக்குதல்களுக்கு ஜனாதிபதி ஒபாமா அறிவித்திருந்த இலக்கைக் குறிவைப்பது மீதான நிபந்தனைகள், ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசுக்கு (ISIS) எதிராக தொடங்கப்பட்ட யுத்தத்திற்குப் பொருந்தாதென்பதை உறுதிப்படுத்தினார்.

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (NDU) அளித்த ஓர் உரையில் ஒபாமாவால் அந்த நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அங்கே பொதுமக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதற்கு "சிறிதேனும் நிச்சயத்தன்மை" இருந்தால் மட்டும் தான், அல் கொய்தா இலக்குகளாக கருதப்படுபவைகளுக்கு எதிராக டிரோன் தாக்குதல்களை அமெரிக்கா நடத்துமென அவர் கூறினார், அதை அவர் "நம்மால் பூர்த்தி செய்ய முடிந்த அதிகபட்ச தரமுறை" என்று குறிப்பிட்டார்.

“NDU உரையில் இருந்த சர்ச்சைக்குரிய அந்த தரமுறைகள், அப்போதே குறிப்பிடப்பட்டதைப் போல, நாம் 'தீவிர போர் பகுதிகளுக்கு வெளியே நடவடிக்கை எடுக்கும் போது தான் பொருந்தும்,” என ஹேய்டன் எழுதினார். “தீவிர போர் பகுதிகளுக்கு வெளியே என்ற அந்த விளக்கம், ஈராக் மற்றும் சிரியாவில் நாம் இப்போது பார்த்துவரும் தளத்திற்கு முற்றிலும் பொருந்தாது."

வடமேற்கு சிரியாவின் எட்லிப் மாகாணத்தில் காஃப்ர் தார்யான் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதான கவலைகளுக்கு அவர் பதிலளித்து கொண்டிருந்தார், அங்கே ஒரு டோமாஹாக் கப்பல் ஏவுகணையால், பெண்கள் மற்றும் இளம் குழந்தைகள் உட்பட, ஏறத்தாழ ஒரு டஜன் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அமெரிக்க மத்திய இராணுவப்பிரிவு, அது "கொராசான் குழுவை" இலக்கில் வைத்திருந்ததாக கூறி, செப்டம்பர் 23 தாக்குதலை உறுதிப்படுத்தியது. ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்துடன் சண்டையிட்டுவரும் பிரதான சிரிய "கிளர்ச்சி" குழுக்களில் ஒன்றான, அல் கொய்தாவுடன் இணைப்பு பெற்ற அல் நுஸ்ரா முன்னணியின் அங்கத்தவர்களுக்கு அமெரிக்காவால் கொடுக்கப்பட்ட முத்திரை தான் இந்த "கொராசான் குழு".

பென்டகனின் உயர்மட்ட செய்தி தொடர்பாளர், ரியர் அட்மிரல் ஜோன் கெர்பி, செவ்வாயன்று செய்தியாளர்களால் வினவப்பட்ட போது, சிரியா மற்றும் ஈராக்கிய இலக்குகளுக்கு எதிரான விமான தாக்குதல்களுக்கு அதிக ஆதரவான தரமுறை இருப்பதை உறுதிப்படுத்தினார். “அவர்களை விரட்டி சென்று கொண்டிருக்கிறோம் என்று நாங்கள் கூறும் போது, நாங்கள் அதை செய்து தான் எடுத்துக்காட்டுகிறோம்," கெர்பி தெரிவித்தார்.

டிரோன் ஏவுகணை தாக்குதலுக்கு ஒபாமா அவர் விதித்திருப்பதாக கூறிய நிபந்தனைகள், பாகிஸ்தான் மற்றும் யேமனின் புறநகரங்களில் 500-பவுண்டு ஆயுதங்களால் பழங்குடி கிராம மக்களின் குடிசைகளைத் தகர்த்து, மக்கள் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டளவிற்கு ஒன்றும் மட்டுப்படுத்தவில்லையே. பாகிஸ்தான் அதிகாரிகளும் மற்றும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற வெளி அமைப்புகளும் அந்த பகுதிகளில் 300க்கும் அதிகமான டிரோன் தாக்குதல்களினால் பல நூறிலிருந்து பல ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டனர்.

டிரோன் ஏவுகணை தாக்குதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டது குறித்த தொடர்ச்சியான ஆய்வுகள் கடந்த ஆண்டு பிரசுரமான போது, WSWS குறிப்பிடுகையில், “உண்மையில் இந்த அறிக்கைகள் பார்த்த அளவிலேயே ஓர் எதிர்கால யுத்தகுற்ற தீர்ப்பாயத்திற்கான ஆதாரங்களாக இருக்கின்றன, அது பிரதிவாதிகளாக தேசிய பாதுகாப்பு கவுன்சில், பெண்டகன், மத்திய உளவுத்துறை அமைப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு முகமையின் உயர்மட்ட அதிகாரிகளையும் மற்றும் ஒபாமாவையும் உள்ளடக்கி இருக்கும்," என்று எழுதியது.

கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயப்பட்டவர்களின் நேரடியான எண்ணிக்கைக்கு கூடுதலாக, அதுபோன்ற தொடர்ச்சியான தாக்குதல்களின் தாக்கம் அங்கே ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் விழுகிறது. ஏப்ரல் 2014இல் Rolling Stoneஇல் வெளியான ஒரு கட்டுரை, “யேமன் மக்களால் ஒரு பேரழிவு வருவதற்கு முன்னரே அதை காது கொடுத்து கேட்க முடிந்தது. இந்நாட்டில் அரேபிய தீபகற்பத்தின் தெற்கு முனையில் இருக்கும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில், தலைக்குமேலே பறந்து கொண்டிருக்கும் அமெரிக்க டிரோன்களின் சத்தம் ரீங்காரமிடுகிறது. அந்த சத்தம் ஒரு நிலையான மற்றும் கொடூரமான நினைவூட்டல் ஆகும் ... யேமனின் 24.8 மில்லியன் குடிமக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்—போராளிகள் மற்றும் படைத்துறைசாரா அரசு அலுவர்களைப் போலவேஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகிறார்கள்," என்பதைக் கண்டறிந்தது.

ஈராக் மற்றும் சிரியாவின் மக்கள் மீது சுமத்தப்பட்ட மரணமும், சேதங்களும் பாகிஸ்தான், யேமன் அல்லது சோமாலியா மீதான டிரோன் போர்முறையின் கொடூர விளைவுகளைக் கூட குறைத்துவிடும் என்பதையே வெள்ளை மாளிகை மற்றும் பெண்டகன் செய்திதொடர்பாளர்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அதுபோன்ற பாரிய படுகொலைக்கு எதிராக உத்தியோகபூர்வ வாஷிங்டனில் இருந்து, அது ஜனாநாயக கட்சியிலிருந்து ஆகட்டும் அல்லது குடியரசு கட்சியிலிருந்து ஆகட்டும், ஒரேயொரு எதிர்ப்பு குரல் கூட வரவில்லை.

அல்-நுஸ்ராவுடன் இணைப்பு பெற்ற அமெரிக்க ஆதரவிலான சிரிய குழுக்களின் பிரதிநிதிகள், காஃப்ர் தார்யான் தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை வெளியுறவுத்துறை விவகார குழுவின் உறுப்பினர்களுக்கு சுருக்கமாக சுட்டிக்காட்டினர். அந்த சந்திப்பில் கலந்து கொண்ட குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் உறுப்பினர், இலினோய்ஸின் ஆதம் கின்ஜிங்கர், யாகூ செய்திகளுக்கு "எதுவும் துல்லியமாக செய்யவியலாது," எனக்கூறி, பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்த கவலைகளை நிராகரித்தார். மேலும் அமெரிக்க தாக்குதல்களால் ஏற்படும் எந்தவொரு துணை சேதங்களும் "அசாத் ஆட்சியின் கொடூரத்தை விட மிகவும் குறைவானதே" என்றும் வாதிட்டார்.

குண்டுகள் மற்றும் ஏவுகணைகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் ஆரம்பம் மட்டுமே. அமெரிக்க அதிகாரிகள்—மிக முக்கியமாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் சமந்தா பாவெர்—இந்த வாரம், சிரியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான இலக்கை வலியுறுத்த சிரமம் எடுத்திருந்ததைப் போல, அசாத்தைத் தூக்கியெறிவது மற்றும் அவருக்கு மாற்றாக டமாஸ்கஸில் அமெரிக்க-ஆதரவிலான ஒரு கைப்பாவை ஆட்சியைக் கொண்டு வருவது மட்டுமே மிஞ்சி இருக்கிறது.

அந்த இலட்சியத்திற்கு தவிர்க்கவியலாமல் பத்தாயிரக் கணக்கான தரைப்படை துருப்புகளை நிறுவுவதும் —அது அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு, துருக்கி, சவூதி அல்லது ஏதோவித கலவையாக கூட இருக்கலாம் சிரியா மீதான இராணுவ வெற்றியும் அதற்கு அவசியப்படுகிறது. ஈராக்கிய படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு, 2003இல் இருந்து 2011 வரையில் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்றது. அதைவிட பெரிய அளவில் ஒரு குற்றம், ஈராக் மற்றும் சிரியாவில் இப்போது அதிகரித்து வருகிறது.