சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK pilots union agrees mass layoffs/pay cuts at Monarch

இங்கிலாந்து விமானிகள் சங்கம் மோனார்க்கில் பாரிய பணிநீக்கம்/ ஊதிய வெட்டுக்களை ஒப்புக்கொள்கிறது

By Robert Stevens
30 September 2014

Use this version to printSend feedback

பிரிட்டனின் பழமையான, தப்பியிருக்கும் மோனார்க் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில் இருக்கும் தொழிற்சங்கங்கள் 900 பணியிடங்களை குறைக்கவும், 30 சதவிகிதம் ஊதியத்தை குறைக்கவும், வேலை முறைகளில் மாற்றம் கொண்டுவருவது உட்பட மீதமுள்ள தொழிலாளர்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

வேலைமுறைகளில் மாற்றம் சம்பந்தமாக தொழிற்சங்கங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட விட்டுக்கொடுப்புகளின் விவரங்கள் இன்னும் வெளிவர வேண்டி இருக்கிறது.

இந்த வருட ஆரம்பத்தில் மிகப்பெரிய வெட்டுகள் இல்லாமல் இயங்க முடியாது என அது அச்சுறுத்தியதற்கு பின் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானிகள் அசோசியேஷன் (BALPA) மற்றும் இங்கிலாந்தின் மிகப் பெரிய தொழிற்சங்கமான யுனைட் (Unite) ஆகியவற்றுடன் மோனார்க் பேச்சுவார்த்தைகளை தொடங்கியது.

பயனற்ற உடன்பாடு பற்றி முடிவெடுத்த பின்னர் பேசும்போது, மோனார்க்கில் இருக்கும் விமானிகள் மற்றும் அவர்களின் சக பணியாளர்கள் அனைவரும் இந்த முக்கியமான பிரிட்டிஷ் நிறுவனத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க ஒரு மறுகட்டமைப்பு செய்யப்பட்ட விமான சேவை நிறுவனத்திற்குள் குறைந்த ஊதியம், குறைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று பெரும் அர்ப்பணிப்புகளை செய்ய முன் வந்தனர். மோனார்க் நிலைத்திருக்கவும் மற்றும் செழித்திருக்கவும் உதவ மற்றும் இந்த உடன்பாட்டை நிலைநிறுத்த அனைத்தும் செய்ய இதனுடன் தொடர்புள்ள அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுபடவேண்டும் என்று   BALPA இன் பொதுச்செயலாளர் ஜிம் மெக்ஆஸ்லன் கூறினார்.

அதற்கு மாற்றீடாக எதையும் எதிர் கொள்ளாததால், இரண்டு சங்கங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் வெட்டுகளை ஒப்புக்கொள்ள வாக்களித்தனர்.

ஒரு "குறைந்த கட்டண" விமான சேவை நிறுவனமாக மாறப் போவதாக கூறிய, அதன் நோக்கத்துடன் மோனார்க் ஒரு பெரும் மறுசீரமைப்பை மேற்கொண்டிருக்கிறது. ஆகஸ்டில், கடந்த கோடைகாலத்தின் போது சந்தை நிலவரம் படுமோசமாவதை நாங்கள் காண தொடங்கி இருக்கிறோம்...... இருப்பு அதிகமாக இருக்கிறது, ஆனால் தேவை குறைந்துள்ளது. இந்த சந்தையில் நாங்கள் விரும்பியதை விட நாங்கள் அதிக விமானங்களை வைத்திருக்கிறோம். என்று தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ ஸ்வஃப்பீல்ட் கூறினார்.  

நீண்டகாலமாக இழுபட்டுக்கொண்டிருக்கும் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர நிறுவனம் திட்டமிடுகிறது, ஒரு சனிக்கிழமைக்கு விமானத்தில் பறக்கும் பழைய முறை மற்றும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் தங்குவது போன்றவை முடிந்துவிட்டன. வாடிக்கையாளர்கள் குறுகிய கால பயணங்கள், பலமுறை பயணம் செய்ய பதிவு செய்வது, வியாழக்கிழமை வெளியில் சென்று திங்கட்கிழமை திரும்புவது போன்றவை அதிகரித்துள்ளன. சில இருப்பிடங்களுக்கு இன்னும் அதிகமான விமானங்கள் இருக்கும் என்று Travel Weekly பத்திரிக்கையிடம் ஸ்வஃப்பீல்டு தெரிவித்தார்.

செப்டம்பர் 23 அன்று, லண்டனை தளமாக கொண்ட முதலீட்டாளர்களான Greybull முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரும்பான்மை பங்குகளை விற்க பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக மோனார்க் அறிவித்தது. அக்டோபர் இறுதிவாக்கில் சுவிஸ் இத்தாலிய Mantegazza குடும்பத்திடமிருந்து நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கான வேலையை செய்துக் கொண்டிருப்பதாக இரு தரப்பும் கூறின. Greybull இன் கையகப்படுத்தும் திட்டம் குறித்து அதன் இணை நிறுவனர் மார்க் மேயோகாஸ் கூறும்போது, அது போட்டி நிறைந்த ஒரு சந்தை. மூன்று வேலைகள் நாங்கள் செய்ய வேண்டி உள்ளது [மோனார்க்கில்] - ஒரு நிறுவனத்தை நடத்த ஒரு குறைந்த செலவு அடிப்படையிலான மற்றும் சரியான விமான எண்ணிக்கையை கொண்டிருக்க வேண்டும்" என்று கூறினார்.

1968இல் மோனார்க்  நிறுவப்பட்டு, Cosmos Tours மற்றும் ஒரு விமான பராமரிப்பு நிறுவனம் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் குழுமத்தின் ஒரு பகுதியாக இன்று தொடர்கிறது. 2012இல் ஒரு 33.4 மில்லியன் பவுண்டுகள் நஷ்டத்தையும், 2013இல் வரிக்கு முந்தைய இலாபமாக ஒரு 5.9 மில்லியன் பவுண்டுகள் இருந்ததாகவும் அது அறிக்கை வெளியிட்டது. 2014 ஆம் ஆண்டு "ஒரு கடுமையான ஆண்டாக இருந்தது" என்று ஸ்வஃப்பீல்ட் கூறினார். ஒரு 1.75 பில்லியன் ஒப்பந்தத்தில் மோனார்க், குறுகலான பயணிகள் இருக்கும் பகுதி கொண்ட பழைய 43 விமானங்களுக்கு பதிலாக 30 புதிய போயிங் ஜெட்களாக குறைக்க இருக்கிறது. புதிய விமானங்கள் நவம்பர் 2018இல் சேவையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. மேலும் தலா ஒவ்வொரு விமானமும் எரிபொருள் மற்றும் பராமரிப்பு சேமிப்பாக ஆண்டுக்கு 2மில்லியன் பவுண்டுகளிலிருந்து 3மில்லியன் பவுண்டுகள் வழங்கும்.

சுமார் ஒரு 160 மில்லியன் ஓய்வூதிய பற்றாக்குறையை நிறுவனம் கொண்டுள்ளது.

Greybull ஒரு "சிக்கலான பங்குபத்திர நிதியம் என அறியப்படுகிறது, "நெருக்கடியில் இருக்கும் நிறுவனங்கள், அவற்றின் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டை பெறுவதற்கான நம்பிக்கையுடன் ஒரு நிதி முதலீடு செய்யப்படுகிறது என்று பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிக்கை விவரிக்கிறது.

Elliott Advisers உள்ளிட்ட பிற நிறுவனங்களையும் தாண்டி விமான நிறுவனத்தை விலைக்கு வாங்க முன்னுரிமை அளிக்கப்பட்ட விலை கேட்பவராக அது அறிவிக்கப்பட்டது. சண்டே டைம்ஸ் குறிப்பிட்டவாறு, "ஆற்றல் வாய்ந்த அமெரிக்க ஹெட்ஜ் நிதியமான Elliott Advisers, ஆர்ஜென்டீனா அதன் அரசாங்க கடனில் ஒரு பகுதியை திருப்பியளிக்க முடியாத நிர்பந்தம் ஏற்பட்டபோது அண்மையில் உதவி செய்தது."

900 வேலை இழப்புகள் என்பது தொழிற்சாலையின் தொழிலாளர்களில் ஏறக்குறைய 30 சதவிகிதத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. Greybull இன் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுவிட்டால் மீதமிருக்கும் தொழிலாளர்கள் ஒரு நிச்சயமற்ற மற்றும் வயிற்றை கட்டிக்கொள்ளும் எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

2012இல் அண்ணளவாக 7,000 வேலை வாய்ப்புகள் இழப்பு மற்றும் அதன் வீழ்ச்சியை தொடர்ந்து 2012இல் Comet என்ற அங்காடி தொடர் விற்பனை நிலையத்தை கையகப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக Greybull ஓரளவுக்கு நிதி அளித்தது. Elliot Advisors உடன் இணைந்து, OpCapita என்ற தனியார் முதலீட்டு நிறுவனத்தின் ஆதரவின் கீழ், வெறும் 2 பவுண்டிற்கு வீழ்ச்சியடைந்த நிறுவனத்தை Greybull விலைக்கு வாங்கியது. அந்த ஒப்பந்தத்தின் கீழ் ஒரு புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனமான Hailey Acquisitions Limited(HAL) Comet இற்கான முக்கிய பாதுகாக்கப்பட்ட கடன் கொடுத்தவரானது.

ஆகஸ்ட் 13அன்று டெய்லி டெலிகிராப் பத்திரிக்கையில் வெளியான தகவல்களின் படி, Cometஇன் பங்கு மற்றும் உபகரணங்கள் விற்பனை மூலமாக HAL 54 மில்லியன் பவுண்ட் ஏற்கனவே திருப்பியளித்துள்ளது. மாறாக, 232மில்லியன் பவுண்டுகள் கொண்டிருந்த Comet இன் உத்தரவாதமற்ற கடன் கொடுத்தவர்கள் ஒரு பவுண்டிற்கு ஒரு பென்னியை விட குறைவாக பெற இருந்தார்கள்.

கடந்த தசாப்தங்களாக பாரிய அளவிலான வெட்டுக்கள் மற்றும் வேலை இழப்புக்களை சுமத்த நிர்வாகத்துடன் தொழிற்சங்கம் ஒத்துழைப்பதால் இங்கிலாந்தில் விமான சேவை தொழிலாளர்கள் ஒன்றன் பின் ஒன்றாக இழப்பை சந்தித்தார்கள். அதன் இயல்பான தன்மையிலேயே உலகளாவிய ஒரு நிறுவனத்தில், தனிப்பட்ட விமான நிறுவனங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து சிக்கல்களும் தெளிவானமுறையில் தேசிய அடித்தளத்தையே கொண்டிருக்கும். ஏர் பிரான்ஸ் விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சங்கங்களினால் மோனார்க் விற்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2009இல் பிரிட்டிஷ் ஏர்வேஸின் (BA) 95 சதவிகிதமான 3,200 விமானிகளை பிரதிநிதித்துவம்படுத்தும் அமைப்பான BALPA, ஒரு ஆண்டுக்கு 26 மில்லியன் பவுண்ட்ஸ் அளவுக்கு சேமிப்பாக கூடிய ஒரு 2.61 சதவிகிதம் ஊதிய வெட்டு மற்றும் 20 சதவிகிதம் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை குறைத்துவிட ஒப்புக்கொண்டது.

அடுத்த வருடம், Unite உறுப்பினர்களாக இருக்கும் BA விமான ஊழியர்களால் திட்டமிடப்பட்ட ஒரு சட்ட விரோத வேலை நிறுத்தத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்ததால், 1970கள் பாணியிலான தொழிற்துறை உறவுகளுக்கு" எதிராக புதிய கன்சர்வேடிவ் லிபரல் கூட்டணி அரசாங்கத்தை தலையிட கூறி BALPA முறையிட்டது.

2011இல், பல செலவு குறைப்பு நடவடிக்கைகளை ஏற்று Unite வேலை நிறுத்த ஆணைகளை விலக்கிக் கொண்டதுடன் விமான ஊழியர்களின் ஒரு தொடர்ச்சியான நீண்ட வேலை நிறுத்தங்களை முடித்து வைத்தது. எந்த ஒரு எதிர்கால முரண்பாடுகளின் மீதும் வேலைநிறுத்த உரிமையை பறிப்பதை ஒழுங்குப்படுத்தும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகளின் (BA’s) உரிமையையும் Unite ஒப்புக்கொண்டது. மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் அபராதம் விதிக்கப்படுவதற்கும் ஒப்புக்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் சங்க உறுப்பினர்களை பாதுகாக்காது என்றும் உறுதியளித்துள்ளது.

மோனார்க்கில் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்வாதாரம் காட்டிக்கொடுக்கப்படுவதற்கு நிர்வாகத்தின் ஒரு கரமாக செயற்பட்டு தமது சிறப்புரிமைகளை பாதுகாத்துக்கொள்வதை தவிர, தொழிற்சங்க அதிகாரத்துவம் வேறொன்றையும் செய்யாது என்பதே எடுத்துக்காட்டப்படுகின்றது. மோனார்கில் பெரும்பான்மை பங்குதாரராக தங்கள் நிலையை பாதுகாத்துக்கொள்ள Greybull நடவடிக்கை மேற்கொள்கிறது என்ற அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்" என்று BALPA இன் மெக்ஆஸ்லன் மேலும் கூறினார்.

மோனார்க் உயிர்பிழைத்திருக்க மற்றும் தழைத்தோங்க உதவுவதற்கு BALPAஇன் உறுதிமொழி என்பது, ஊதியத்தில்  மிருகத்தனமான வெட்டுகள் மற்றும் சுமத்தப்பட்ட சூழ்நிலைகள் ஒரு தொடக்க கொடுப்பனவு மட்டுமே. மேலும் இது கழுத்தறுக்கும் மற்றும் இன்னும் கூடுதலான போட்டித்தன்மை உள்ளதாக மாறும் ஒரு தொழில்துறையின் எதிர்காலத்திற்கான ஒரு முன்னறிவிப்பு ஆகும். தொழிற்சங்கங்கள் இன்று முதலாளிகளுக்கு எதிரான தற்காப்பு அமைப்புக்கள் அல்ல, ஆனால் பெருநிறுவன நிர்வாகம் மற்றும் அரசாங்கங்களுடன் இணைந்து எல்லா எதிர்ப்பையும் சிதறடிக்கும் நோக்கம் கொண்டிருக்கிறது. மோனார்க் மற்றும் ஏனைய விமான நிறுவனங்களில் இருக்கும் பணியாளர்கள், உறுப்பினர் குழுக்கள் அமைப்பது மூலம் தங்களை சுயாதீனமாக ஒழுங்கமைக்க கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் விமான நிறுவன தொழிலாளர்களுடன் தங்கள் போராட்டங்களை இணைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.