சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

This week in history: October 6-12

வரலாற்றில் இந்த வாரம்: அக்டோபர் 6-12

6 October 2014

Use this version to printSend feedback

25 ஆண்டுகளுக்கு முன்னர்: ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கிழக்கு ஜேர்மன் பொலிசை எதிர்கொண்டனர்

http://www.wsws.org/asset/7ffca0b7-004e-4603-9462-59911c7a3f8J/twih-25yr.jpg?rendition=image480
கிழக்கு பேர்லினில் வெகுஜன ஆர்ப்பாட்டம்

1989 அக்டோபர் 9, கிழக்கு பேர்லின், ட்ரெஸ்டென் மற்றும் லைப்ஸிக் மற்றும் ஏனைய கிழக்கு ஜேர்மன் மாநகரங்களிலும் வீதிகளும் சதுக்கங்களும், ஆளும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்துக்கு எதிரான ஆயிரக்கணக்கானவர்களின் ஆர்ப்பாட்டங்களை கண்டன. முதல்நாள் மாலை, கிழக்கு பேர்லினில், ஜனநாயக சீர்திருத்தங்களை செய்யுமாறு ஆட்சிக்கு அழைப்பு விடுத்த அமைதியான மெழுகுவர்த்தி போராட்டத்தை பாதுகாப்பு படைகள் கலைத்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள்வன்முறை வேண்டாம், வன்முறை வேண்டாம்!” என கோஷமிட்ட அதே வேளை, பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை பொல்லுகளால் தாக்கினர்.

எரிக் ஹொனேக்கர் தலைமையிலான கிழக்கு ஜேர்மன் (DDR) ஆட்சி, பேர்லின் சுவரையும் கிழக்கு ஜேர்மன் எல்லையில் கொலைப் பொறிகளையும் பேணிக் காப்பதில் இழிபேர் பெற்றதாக இருந்தது. ஆர்ப்பாட்டங்களுக்கு முந்தைய வாரங்களில், கிழக்கு ஜேர்மன் பிரஜைகள் ஹங்கேரி ஊடாக மேற்கு ஜேர்மனிக்கு பெருந்தொகையில் இடம்பெயர்ந்தமை அரசாங்கத்துக்கு ஆழமான நெருக்கடியை உருவாக்கிவிட்டிருந்தது. இந்த இயக்கமானது அரச ஒடுக்குமுறை மற்றும் மோசமடைந்து வரும் பொருளாதாரத்துக்கும் எதிராக கிழக்கு ஜேர்மன் பகுதியினுள் ஒரு வெகுஜன இயக்கத்துக்கான முன்னோடியாக ஆகியது.

அக்டோபர் 8 ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக பொல்லுகள் ஏந்திய இரண்டாயிரம் பொலிசார் அல்ஷேசன் நாய்களுடன் அனுப்பிவைக்கப்பட்டமையின் விளைவாக, நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்ததோடு பெருந்தொகையானவர்கள் காயமும் அடைந்தனர். அடுத்த நாள், அமைதியான போராட்டத்தின் மீதான அரச வன்முறைக்கு எதிரான பரந்த சீற்றம் ஆர்ப்பாட்டங்களாக வெடித்து, கிழக்கு ஜேர்மன் பூராவும் பல நாட்கள் தொடர்ந்தன. எல்லா பிரதான நகரங்களிலும் இலட்சக் கணக்கானவர்கள் வீதிகளில் நின்றனர்.

ஒரு பீதியான பிரதிபலிப்பில், தொழிலாளர் படையை அமைதிப்படுத்தவும்எல்லா பிரச்சினைகள்மீதும் ஒருகலந்துரையாடல்ஊடான எதிர்ப்பார்ப்பை அவர்களுக்கு கொடுப்பதன் பேரிலும் நூற்றுக்கணக்கான ஸ்ராலினிச அதிகாரிகள் மிகப்பெரும் தொழிற்சாலைகளுக்கு அந்த இடத்திலேயே கலந்துரையாடல் நடத்த அனுப்பிவைக்கப்பட்டனர். வீதிகளில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் தொழிற்சாலைகளில் வெகுஜன வேலை நிறுத்தங்களால் பின்தொடரப்படும் என இந்த அதிகாரத்துவம் சரியான முறையில் பீதியடைந்திருந்தது.

1971 ஐக்கிய சோசலிச கட்சியின் (கிழக்கு ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ பெயர்) பொதுச் செயலாளர் ஆன ஹொனேக்கர் அடுத்த வாரம் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டார்.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: நாசர் சிறையில் இருந்து சொம்பேவை விடுதலை செய்தார்

http://www.wsws.org/asset/ebdfebfa-3396-4462-b108-379ff88f8e0P/twih-50yr.jpg?rendition=image240
மொயிஸ் சொம்பேவை

1964 அக்டோபர் 9, எகிப்திய ஜனாதிபதி கமால் அப்தெல் நாசர், கொங்கோலிய ஜனாதிபதி மொயிஸ் சொம்பேவை வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்தார். அவர் கெய்ரோவில் நடந்தஅணிசேரா நாடுளின்கூட்டம் ஒன்றில் பங்குபற்ற முயற்சித்ததை அடுத்தே அவர் சிறை வைக்கப்பட்டார். அதே சமயம், கொங்கோலிய அதிகாரிகளால் தூதரகங்கள் அடைக்கப்பட்டிருந்த மூன்று நாள் விட்டுக்கொடுப்பற்ற நிலைக்கு முடிவு கட்டி, நாட்டில் இருந்து எகிப்திய மற்றும் அல்ஜீரிய தூதரங்களின் உறுப்பினர்களை கொங்கே வெளியேற அனுமதித்திருந்தது.

சொம்பே அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இருந்து விலகியிருக்குமாறு விடுத்த அழைப்பை நிராகரித்த பின்னர், அமெரிக்க ஆதரவிலான கருவி ஏகாதிபத்தியத்துடன் வெளிப்படையாக ஒத்துழைப்பதற்கு விரோதமான எதிர்ப்பின் அடையாளமாக இந்த கைதைப் பயன்படுத்தி, நாசர் அவரை ஒரு மாளிகை வீட்டில் தடுத்து வைத்தார். ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுயாதீனமாக இருப்பதாக காட்டிக்கொண்ட பங்குபற்றிய 28 ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள்,  மாநாட்டில் இருந்து சொம்பேயை வெளியேற்றுவதற்கு ஆதரவாக ஏகமனதாக வாக்களித்து, அவரது பங்குபற்றல்சந்தர்ப்பத்திற்கு ஒவ்வாததாகஇருக்கும் என்று பிரகடனம் செய்தனர். தனது விடுதலையின் பின்னர் பாரிசுக்கு பறந்த சொம்பே, ஆபிரிக்காவைமேலாதிக்கம்செய்ய முயற்சிப்பதாக நாசரை வாய்ச்சவடாலாக கண்டனம் செய்தார்.

கனிம வளங்கள் நிறைந்த கொங்கோவில் அமெரிக்க ஆதரவிலான பொம்மை அரசாங்கம், அமெரிக்க விமானங்கள் மற்றும் தொழில்நுட்பங்களையும் அதே போல் ரொடேசியா மற்றும் தென் ஆபிரிக்காவில் இருந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட வெள்ளை கூலிப்படைகளையும் பயன்படுத்தி ஒரு கொடூரமான கிளர்ச்சித் தடுப்பு யுத்தம் ஒன்றை முன்னெடுத்து வந்தது. அரைக் காலனித்துவ நாடுகளின் தலைவர்கள் எதிர்த்த போதிலும், கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த புருண்டி எல்லையிலான உல்விரா நகரத்தை மீண்டும் கைப்பற்ற வெள்ளை கூலிப்படைகள் அரசாங்கத்துக்கு உதவிய நிலையில், ஏகாதிபத்திய ஆதரவிலான தலையீடு தொடர்ந்தும் தளங்களைக் கைப்பற்றியது. நகரம் கைப்பற்றப்பட்டமை, குட்டி மத்திய ஆபிரிக்க தேசத்தில் இருந்து உதவிகளைப் பெற்றுவந்த தேசியவாத கிளர்ச்சியாளர்களுக்கான விநியோக வழியை துண்டித்தது.

பார்க்கபாட்ரிஸ் லுமும்பா கொலையின் ஐம்பதுஆண்டுகளுக்கு பின் [22 January, 2011]

75 ஆண்டுகளுக்கு முன்னர்: நாஜி ஜேர்மனி போலாந்தை செதுக்கியது

http://www.wsws.org/asset/77a2b65e-80dc-458c-88bd-974693b4664G/twih-75yr.jpg?rendition=image240
போலந்து பிரிவினை

நாஜி ஆக்கிரமிப்பாளர்களிடம் வார்சோவ் விழுந்த பின்னர் மறுநாள், 1939 அக்டோபர் 8, ஹிட்லர் போராந்தின் எல்லைகளை மீள வரைந்தார். ஜேர்மினியின் எல்லையில் அமைந்திருந்த டன்ஸிக்-மேற்கு புருஷ்யா மற்றும் வடக்கில் கிழக்கு புருஷ்யா, மேற்கில் வோடர்லேன்ட் மற்றும் வடக்கில் அப்பர் சைலேசியா ஆகிய போலாந்தின் மேற்குப் பகுதிகள், ஜேர்மன் அரசிற்குள் (ரைஹ்) நேரடியாக ஒன்றிணைக்கப்பட்டு, அயலில் ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவாக்கியவையும் இணைத்து உருவாக்கப்பட்ட மாபெரும் ஜேர்மனியின் பகுதியாகின. போலாந்துக்காரர்கள் மற்றும் யூதர்களும் பூண்டோடழிக்கப்பட்ட அல்லது வெளியேற்றப்பட்ட பின்னர் பால்டிக் அரசுகள், ரோமானியா மற்றும் பால்கனின் ஏனைய இடங்களிலும் இருந்த ஜேர்மன் இனத்தவர்களால் இந்த போலாந்து பிராந்தியத்தின் பகுதி நிரப்பப்படவிருந்தது. போலாந்தில் எஞ்சியிருந்த மத்திய மற்றும் தென்மேற்கு பிராந்தியம், மேற்குப் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும் இணைந்த போலாந்துவாசிகளுக்கான ஒரு சிறை போன்ற ஒதுக்குப்புறமாக இருக்கவிருந்தது.

ரைஹ்கின் கட்டுப்பாட்டிலான மேற்குப் பிராந்தியத்தில், நாஜி அதிகாரிகள் பிரதான நில உரிமைகளுடன் சேர்த்து சகல வர்த்தக மற்றும் நிதி நிறுவனங்களையும் கையகப்படுத்தினர். ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளபாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்துறைகள் நாஜி அரசால் பொறுப்பேற்கப்பட்டதுடன், சிறிய மற்றும் குறைந்த மூலோபாய தொழிற்துறைகள் ஜேர்மன் முதலாளிகளுக்கு விற்கப்பட்டன. உள்ளூர் புத்திஜீவிகள், கத்தோலிக்க பாதிரிமார், முதலாளித்துவ மற்றும் அரசியல் தலைவர்களையும் ஈவிரக்கமின்றி பூண்டோடழிக்கும் நடவடிக்கை நாஜி துணைக்கொலைப் படைகளால் (Einsatzgruppen) முன்னெடுக்கப்பட்டன. போலாந்து தொழிலாள வர்க்கம் பீதிக்குள்ளாக்கப்பட்டு, அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர். போலாந்து அரசியல் கைதிகள், பின்னர் அவுஸ்ச்விட்ஸ் (Auschwitz) என்று பெயர்மாற்றப்பட்ட ஒஸ்வீசிம்மில் (Oswiecim) இருந்த குதிரை வாடிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

போலாந்து துன்பத்திற்கான குற்றச்சாட்டை ஸ்ராலினிஸ்டுகள் பங்கிட்டுக் கொள்கின்றனர். 1933ல் நாஜிகளுக்கு எதிரான, சமூக ஜனநாயகவாதிகளுடன் இணைந்த எந்தவொரு ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்க நடவடிக்கையையும் எதிர்க்குமாறு கேபீடியின் ஜேர்மன் கம்யூனிஸ்ட்டுகளுக்கு தானே கட்டளையிட்டதன் ஊடாக, ஜேர்மனியில் தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்ததோடு நாஜிக்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அனுமதித்தது ஸ்ராலினே ஆவார். ஸ்ராலினின் கட்டளையின் கீழேயே, அவரதுமக்கள் முன்னணிசூத்திரத்தின்படி போலாந்து கம்யூனிஸ்ட் கட்சி கரைத்துவிடப்பட்டதோடு போலாந்து தொழிலாளர்கள் அரசியல் தலைமைத்துவம் இன்றி கைவிடப்பட்டனர். மற்றும் இறுதியாக, ஹட்லர்-ஸ்ராலின் ஒப்பந்தத்தின் ஊடாக, போலாந்து பாசிஸ்டுகளுக்கும் ஸ்ராலினிச கட்டுப்பாட்டுக்கும் இடையில் துண்டாடப்பட்டதுடன், ஸ்ராலின் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளையும் வழங்குவதன் மூலம் நாஜிகளின் கொலைகார நடவடிக்கைகளுக்கு உதவிகளைக் கூட செய்தார்.

100 ஆண்டுகளுக்கு முன்னர்: பசுபிக்கில் ஜேர்மன் நிலைகளை ஜப்பான் கைப்பற்றியது

http://www.wsws.org/asset/1ca827f4-0ab8-41d1-9a35-60408f2db4dM/twih-100y.jpg?rendition=image480
தென்
பசிபிக்

1964 அக்டோபர் 7, மேற்கு பசுபிக்கில் அமைந்துள்ள மார்சல் தீவில் உள்ள ஒரு ஜேர்மன் காலனியான ஜாலுயிட் தீவை ஜப்பானிய இராணுவப் படைகளை கைப்பற்றியுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. யுத்தம் நகர்ந்துகொண்டிருந்த முன்னைய வாரங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தால் கைப்பற்றப்பட்ட பசுபிக்கிலான ஏனைய ஜேர்மன் நிலைகளைப் போலவே, ஜாலுயிட்டுக்கும் பிரமாண்டமான பாதுகாப்பு இடப்பட்டிருந்தாலும், மோதல்கள் பற்றிய எந்தவொரு செய்தியும் இன்றி அந்த சிறிய தீவின் கட்டுப்பாட்டை ஜப்பான் எடுத்துக்கொண்டது. அண்ணளவாக பிலிபைன்சுக்கும் ஹவாயின் தீவுகளுக்கும் இடையில், இந்த தீவு கணிசமான பூவிசார் அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

ஜாலூயிட் கைப்பற்றப்பட்டமை, போரின் ஆரம்பத்தில் டோக்கியோ, லண்டன், மற்றும் வாஷிங்டனுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை மீறுவதாகாது என ஜப்பான் அரசாங்கம் அதன் மேற்கத்தைய கூட்டாளிகளுக்கு உறுதியளித்தது. அந்த உடன்படிக்கை பிரிடிஷ் வெளியுறவு அலுவலகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது பிரகடனம் செய்ததாவது: “பசுபிக்கில், அல்லது சீனக் கடலுக்கு மேற்குப் புறமாக ஆசிய கடலுக்கு அப்பால், அல்லது கிழக்கு ஆசிய கண்டத்தில் ஜேர்மன் ஆக்கிரமிப்பில் உள்ள பிராந்தியங்கள் தவிர்ந்த எந்தவொரு வெளிநாட்டு பிராந்தியத்துக்கும் அப்பால் உள்ள ஜப்பானிய கடல் போக்குவரத்துப் பாதையை காப்பதற்கு அவசியமாக இருக்கக் கூடியவை தவிர, சீனக் கடலுக்கு அப்பாலான பசுபிக் சமுத்திரத்திரத்திற்கு ஜப்பானின் நடவடிக்கைகள் விரிவாக்கப்படாது என்பது புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.”

கேப் ஹோர்னைச் சூழ மற்றும் மக்கெலன் நீரிணை ஊடான வர்த்தகப் பாதையின் ஒரு பிரதேசத்துக்குள் ஜப்பான் அதன் தசைகளை முறுக்குவதையிட்டு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கவலை கொண்டிருந்தது. இந்த ஆக்கிரமிப்பு குறுகிய காலத்துக்குரியதாக இருக்கும் என்ற உறுதிமொழியை வாஷிங்டனில் உள்ள ஜப்பானிய தூதரகம் அனுப்பிவைத்து, ஜப்பானிய படைகள் ஏற்கனவே ஜேர்மன் முன்னரங்குகளை தகர்த்துவிட்டது என சுட்டிக் காட்டியது. லண்டனில், பிரிட்டிஷ் அதிகாரிகள், ஜப்பான் ஆஸ்திரேலியாவில் இருந்து தூர இருப்பதை விரும்புகிறது, மற்றும் மிக்ரோனேசியா மற்றும் புதிய குய்நியாவிலும் ஜேர்மன் நிலைகளைக் கைப்பற்றும் உரிமை பிரிட்டனுக்கு மட்டுமே உள்ளது என்பதை தெளிவாக்கியது.

மின்தானவோவின் பிலிப்பைன் தீவின் கிழக்கில் இருந்து சுமார் 1,000 மைல் தொலைவில் அமைந்துள்ள, கரோலைன் குழுவில், யெப் தீவையும் ஜப்பான் கைப்பற்றியுள்ளது என்ற செய்தி வெளியாகிய நிலையில், அடுத்து வந்த நாட்களில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க குவிமையப்படுத்தல் வளர்ச்சியடைந்தது. ஸ்பானிய-அமெரிக்க யுத்தத்தில் அதன் தோல்வியில், 1899ல் ஸ்பெயின் ஜேர்மனிக்கு கரோலைனை விற்றுவிட்டது.