சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

After Socialist Party government reshuffle, neo-fascists offer to rule France

சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மாற்றியமைக்கப்பட்ட பின்னர், நவ-பாசிசவாதிகள் பிரான்ஸை ஆள முன்மொழிகின்றனர்

By Kumaran Ira and Alex Lantier
4 September 2014

Use this version to printSend feedback

பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் பொறிந்து, ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்டால் புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பின்னர், நவ-பாசிச தேசிய முன்னணி (FN) தலைவர் மரீன் லு பென் பிரான்சை ஆட்சி செய்ய விரும்புவதை அறிவித்து, பிரான்சின் பழமைவாத தினசரி Le Figaroக்கு ஒரு விரிவார்ந்த பேட்டியை அளித்தார்.

ஹோலண்ட்டின் செல்வாக்கு விகிதம் 20 சதவீதத்திற்கும் கீழே இருக்கின்ற நிலையில், அவரும் பிரதம மந்திரி இமானுவேல் வால்ஸூம் பொருளாதார மந்திரி ஆர்னோ மொண்டபூர்க்கையும் மற்றும் கல்வித்துறை மந்திரி பெனுவா அமோனையும் பதவியிலிருந்து நீக்கி இருந்தார்கள், அந்த மந்திரிமார்கள் ஹோலண்டின் கொள்கைகளை பேர்லின் கட்டளையிட்டு வருவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டி இருந்தார்கள். புதிய வால்ஸ் அரசாங்கம், அதன் உட்கட்சி விமர்சனங்களால் மதிப்பிழந்துள்ளதுடன், பெருமளவிலான மக்கள் எதிர்ப்பிற்கும் முன்னால் அதன் சிக்கன நிகழ்ச்சிநிரலை திணிப்பதில் உறுதியாக இருக்கிறது.

லு பென் Le Figaroக்கு தெரிவித்தார், “பிரான்சுவா ஹோலண்ட்டின் இந்த கடைசி-முயற்சி, முற்றிலும் ஆத்திரமூட்டும் ஒரு அரசாங்கமாகும்."

ஹோலண்ட் விரைவிலேயே ஒரு புதிய அரசாங்க நெருக்கடியை முகங்கொடுப்பார் என்றும், புதிய நாடாளுமன்ற தேர்தல்களுக்கு அழைப்பு கொடுப்பார் என்றும் அப்பெண்மணி அனுமானிக்கிறார். “நாம் முற்றிலும் ஆழமான அரசியல் நெருக்கடியினூடாக சென்று கொண்டிருக்கிறோம், இது புதிய தேர்தல்களுக்கு மட்டுமே இட்டுச் செல்ல முடியும்," என்று அவர் தெரிவித்தார். “நாம் அத்தேர்தல்களில் பெரும்பான்மை பெற்றால், பிரெஞ்சு மக்கள் நம்மிடம் கொடுக்கும் பொறுப்புகளை நாம் முகங்கொடுத்தாக வேண்டும்," என்றார்.

எப்போது FNக்கு அதுபோன்றவொரு பெரும்பான்மை கிடைக்கும் அல்லது ஒரு அரசாங்கத்தை அமைக்குமென்று அனுமானிப்பது நிச்சயமாக சாத்தியமில்லை. இந்த வசந்தகாலத்தின் ஐரோப்பிய தேர்தல்களில் 25 சதவீத வாக்குகளோடு FN முதலிடத்திற்கு வந்திருந்தாலும் கூட, அது ஆழமாக மக்களால் வெறுக்கப்படுவதாகவே இருக்கிறது, மேலும் அதன் பாசிச வரலாற்று குற்றங்கள் மீது, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் மத்தியில் ஆழ்ந்த எதிர்ப்பும் நிலவுகிறது. சமீபத்திய IFOP கருத்துக்கணிப்பின்படி, FNக்கு எதிரான கருத்து விகிதங்கள் (74 சதவீதம்), சோசலிஸ்ட் கட்சி (75 சதவீதம்) மற்றும் வலது-சாரி UMP க்கு (67 சதவீதம்) மீதிருப்பதை விட குறைவாகவே இருக்கின்றன.

இருந்த போதினும், பிரெஞ்சு அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் காரணியாக இருப்பது பிரதான முதலாளித்துவ கட்சிகளின் நாடாளுமன்ற எண்ணிக்கைகள் அல்ல, மாறாக சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் ஆளும் மேற்தட்டிற்கும் இடையே நிலவும் ஆழ்ந்த இடைவெளியும் மற்றும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியுமாகும். பொருளாதார பொறிவு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நிகழ்ச்சி நிரல் மதிப்பிழந்த வருவது, பேர்லின் மற்றும் வாஷிங்டனால் தூண்டிவிடப்பட்ட உக்ரேன் மீது ரஷ்யா உடனான போர் நெருக்கடி —இதை லு பென் அவரது மாஸ்கோ விஜயத்தின் போது பகிரங்கமாக கண்டித்திருந்தார்— இவை பிரெஞ்சு முதலாளித்துவத்தின் அஸ்திவாரத்தை அசைத்திருக்கிறது.

FN இன் அதிகரித்து வரும் செல்வாக்கு அதை அரசாங்கத்தில் இடம் பிடிக்குமளவிற்கு மாற்ற அனுமதிக்குமா என்ற முடிவு, பிரதானமாக வாக்காளர்களை சார்ந்திருக்கப்போவதில்லை, மாறாக பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் மூலோபாய தேவைகளைப் பொறுத்தே இருக்கும். அது, லு பென் அவரது Le Figaro நேர்காணலில் குறிப்பிட்டதைப் போல, பிரதானமாக அதன் மூலோபாயவாதிகளைப் பொறுத்தே இருக்கிறது. யூரோ நாணயம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரான்ஸ் கைவிட வேண்டுமென்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதத்தில், அப்பெண்மணி உள்நாட்டில் தொழிலாளர்களுக்கு எதிராக வர்க்க போரைத் தொடுப்பதற்கும் மற்றும் சர்வதேச அளவில் —அனைத்திற்கும் மேலாக ஜேர்மனிக்கு எதிராக— வர்த்தக போரைத் தொடுப்பதற்கும், பிரான்சின் நாணயத்தை போட்டித்திறன் மிகுந்த வகையில் மாற்ற மதிப்பிறக்க (devaluation) மூலோபாயத்தை வரைந்திருந்தார்.

தொழிலாள வர்க்கத்தை தாக்கவும் மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவ போட்டித்தன்மையை மீட்டெடுக்கவும் லு பென் மூன்று சாத்தியமான மூலோபாயங்களை வழங்கினார். அவர் விவரித்தார், “ஒன்று ஊதியங்களை வெட்டுவது. இது ஊதிய பணச்சுருக்கம் (deflation) என்றழைக்கப்படுகிறது. இது, [சோலிஸ்ட் கட்சி பொருளாதார மந்திரி எமானுவேல்] மாக்ரோன் ஆல் 39 மணிநேர வேலைக்கு 35 மணிநேர ஊதியம் வழங்க முன்மொழிந்தபோது, அவரால் பரிந்துரைக்கப்பட்டது. இது தான் துல்லியமாக இதர ஐரோப்பிய நாடுகளிலும் செய்யப்பட்டது, மேலும் இதுதான் சிக்கன நடவடிக்கையின் ஒரு முக்கிய உட்கூறாகவும் இருக்கிறது. இரண்டாவது தீர்வு சமூக செலவுகளை அழித்துவிடுவது."

பிரான்ஸ் யூரோவை விட்டு வெளியேறி அதன் தேசிய நாணயத்திற்கு திரும்ப வேண்டுமென்ற அவரது முந்தைய அழைப்புகளை மறைமுகமாக சார்ந்திருக்கும் வகையில், அவர் தொழிலாளர்களின் வாங்கு சக்தியை துண்டிக்கும் பொருட்டு நாணய மதிப்பிறக்கத்தின் மூலம் விலைவாசியை உயர்த்தும் ஒரு மூன்றாவது மூலோபாயத்திற்கு அழைப்புவிடுத்தார். அவர் கூறினார், “இறுதியாக, ஒருவர் நாணயத்தின் மதிப்பை குறைக்கமுடியும். நமக்கு அவசியமான அளவுக்கு போட்டித்தன்மையை உயர்த்திக் கொள்ள நாம் செலாவணி கொள்கையை கருவியாக பயன்படுத்த வேண்டுமென நான் விரும்புகிறேன்," என்றார்.

இதுபோன்ற பிற்போக்குத்தனமான மூலோபாயங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு என்ன முக்கியத்துவம் வகிக்கின்றன என்பது, தலைச்சிறந்த மார்க்சிச புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கியால் முதலாளித்துவத்தின் கடந்த பெருமந்தநிலைமையின் போது சிறப்பாக விளங்கப்படுத்தப்பட்டு இருந்தது.

1934இல், “பிரான்சுக்கான ஒரு செயல்திட்டம்" என்பதில் அவர் பின்வருமாறு எழுதினார்: “நாடு மூழ்கியுள்ள இந்த குழப்பத்திலிருந்து மேலே கொண்டு வரும் முயற்சியில், பிரெஞ்சு முதலாளித்துவம் முதலில் செலாவணி பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஒரு அணி இதை பணவீக்கத்தின் மூலமாக செய்ய விரும்புகிறது, அதாவது காகித பணத்தை அச்சடிப்பது, ஊதிய செலவுகளைக் குறைப்பது, வாழ்க்கை தரங்களை அதிகரிப்பது, குட்டி முதலாளித்துவத்திடமிருந்து அபகரிப்பது; மற்றது பணச்சுருக்கம், அதாவது தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் செலவினங்களைக் குறைப்பது (சம்பளங்கள் மற்றும் கூலிகளைக் குறைப்பது), வேலைவாய்ப்பின்மையை நீடிப்பது, சிறிய விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் சிறுநகரங்களின் குட்டி முதலாளிகளை நாசப்படுத்துவது."

எண்பது ஆண்டுகளுக்குப் பின்னரும், ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு இன்றும் லு பென்னின் பணவீக்க மூலோபாயத்தின் மற்றும் ஹோலண்ட் கடைபிடிக்கும் பணச்சுருக்க மூலோபாயத்தின் இன்றியமையாத அம்சங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்த இரண்டு முதலாளித்துவ அணுகுமுறைகளுக்கு இடையே ஏதாவதொன்றை தேர்ந்தெடுப்பதென்பது, தொழிலாளர்களின் குரல் வளையை அறுக்க இந்த இரண்டு கருவிகளில் சுரண்டுபவர்கள் எதை எடுக்க தயாராக வேண்டும் என்பதாகும்," என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். இவ்விதத்தில் ட்ரொட்ஸ்கி சோசலிச புரட்சிக்கான பாட்டாளி வர்க்க போராட்டத்தையும், "தனிச்சலுகைகளினது மற்றும்" முதலாளித்துவவாதிகளின் "இலாபங்களினது முழு 'பணச்சுருக்கத்தையும்'” எதிரெதிர் தரப்பில் கொண்டு வந்து காட்டினார்.

அதிகார போட்டியாளர்களில் ஒருவராக லு பென் மேலெழுவது, பிரான்சின் அரசியல் மேற்தட்டினது திவால்நிலையை மற்றும் 2008 பொருளாதார பொறிவால் கட்டவிழ்ந்த முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியை நிரூபிக்கிறது. புரட்சிகர தாக்கங்களோடு ஒரு சர்வதேச நெருக்கடி அபிவிருத்தி அடைந்து வருகிறது. ஜேர்மனியின் அதிகரித்துவரும் பொருளாதார செல்வாக்கு, அதன் இராணுவவாத மறுசீரமைப்பு, மற்றும் பேர்லினின் கிழக்கு பக்கவாட்டில், ஜேர்மனிக்கு, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பாரம்பரிய எதிர்பலமான—ரஷ்யாவைப் பலவீனப்படுத்தும் உக்ரேன் மீதான நேட்டோவின் யுத்த உந்துதல் அபாயம் ஆகியவற்றால் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் உட்கூறுகள் தொந்தரவுக்குள்ளாகி உள்ளன.

ஆனால் அவர்களின் ஆட்சியை ஸ்திரப்படுத்தும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில், பிரதான அரசியல் சக்தியாக அவர்கள் காண்பது, கடந்த கால் நூற்றாண்டாக ஐரோப்பிய முதலாளித்துவத்தில் தங்கியுள்ள எல்லா ஒழுங்குகளையும் தகர்த்தெறிய பிரஸ்தாபிக்கும் மக்கள்-ஆதரவற்ற தீவிர-வலது கட்சியை ஆகும். போட்டித்தன்மைமிகுந்த மதிப்பிறக்கம் குறித்த அவர்களின் கொள்கைகள் சர்வதேச அளவில் எதிர்ப்பைச் சந்திக்கும் போது, உலக வர்த்தகத்தை குழப்பத்தில் ஆழ்த்தி—உலக சந்தைகளுக்கு போட்டியிட ஒவ்வொரு நாடும் அதன் நாணயத்தை மதிப்பிறக்கம் செய்ய முனையும் போது, அது ஒரு கீழ்நோக்கிய சுழற்சியைக் கட்டவிழ்த்துவிடும்.

பிரான்ஸிற்குள், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது, அதுவும் குறிப்பாக புலம்பெயர்ந்தவர்கள் மீது, FN அரசாங்கத்தின் ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், பிரான்சின் புறநகர் பகுதிகளில் உள்ள வறிய புலம்பெயர்ந்தோர் மற்றும் தொழிலாள வர்க்கம் முழுவதிலிருந்தும் கடுமையான மற்றும் வெடிப்பார்ந்த எதிர்ப்பைச் சந்திக்கும்.

சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் போலி-இடது துணை அமைப்புகளாக உள்ள புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி மற்றும் இடது முன்னணி போன்றவை அழுகிப் போயிருப்பதாலேயே, தேசிய முன்னணியால் ஹோலண்டின் சிக்கன கொள்கைகளுக்கு ஒரே எதிர்ப்பாக காட்டிக் கொள்ள முடிகிறது.

அவரது கொள்கைகள் மிகவும் இடது-சாரி தன்மையானதாக இருக்கவில்லையா என Le Figaro கேட்டபோது, லு பென், சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா மித்திரோன் ஜனாதிபதியாக இருந்த 1981-1995இல் இருந்து சோசலிஸ்ட் கட்சியின் வரலாறை ஒரு உதாரணமாக எடுத்துக்காட்டி, தனது முதல் எதிரியே சுதந்திர-சந்தை கொள்கைகளாகும் என்று உணர்ச்சிகரமாக கூறி பதிலளித்தார்.

“1980களில் சோசலிஸ்ட்டுகளால் கொள்கைகள் தளர்த்தப்பட்டும், வர்த்தக மற்றும் முதலீட்டு வங்கி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தும் அதிதீவிர-சுதந்திர-சந்தைத்துவம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது ... யதார்த்தம் என்னவென்றால் அங்கே ஒருபோதும் [சோசலிஸ்ட் கட்சியால்] ஒரு 'சமூக-சுதந்திர சந்தை முறை' இருந்திருக்கவில்லை, ஏனென்றால் பல ஆண்டுகாலமாக பிரான்சின் சோசலிஸ்ட்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் திணிக்கப்பட்ட இந்த அதிதீவிர-சுதந்திர-சந்தைத்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களாக இருந்துள்ளனர்," என்பதை அப்பெண்மணி கண்டுபிடித்துவிட்டார்.

போலி-இடது கட்சிகள் பல தசாப்தங்களாக இந்த கொள்கைகளுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளன என்பதோடு, அவை இப்போது ஹோலண்டின் பிற்போக்குத்தனமான நிர்வாகத்திற்கு இடதிலிருந்து எழும் எல்லாவித எதிர்ப்பையும் தடுக்க முனைந்து வருகின்றன. 2012 ஜனாதிபதி தேர்தலின் போது அவை ஹோலண்டிற்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்தன, அதேவேளையில் அவை எரிச்சலூட்டும் விதமாக ஹோலண்ட் "சமூக-சுதந்திர சந்தை" கொள்கைகளை நடைமுறைப்படுத்துவார் என்பதையும் ஒப்புக் கொண்டன. இப்போதோ, அவை FNஐ தொடர்ந்து முன்னேறுவதற்கு அனுமதிக்கும் விதத்தில் இடதில் ஒரு அரசியல் வெற்றிடத்தை உருவாக்கி வைத்து, ஹோலண்டிற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்க பெரும்பிரயத்தனத்தோடு முயற்சி செய்து வருகின்றன.