சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Foreign Minister Fabius visits Iran to boost ties after nuclear deal

அணுசக்தி உடன்படிக்கைக்குப் பின்னர் பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி பாபியுஸ் உறவுகளை ஊக்குவிக்க ஈரான் விஜயம் செய்கிறார்     

By Kumaran Ira
3 August 2015

Use this version to printSend feedback

ஜூலை 29 அன்று பிரெஞ்சு வெளியுறவு மந்திரி லோரன்ட் ஃபாபியுஸ், தெஹ்ரான் உடன் பொருளாதார மற்றும் இராஜாங்க உறவுகளை மீட்டமைக்க ஈரானுக்கு விஜயம் செய்தார். தெஹ்ரானுக்கு எதிரான பொருளாதார தடைகளை நீக்குவதற்காக, ஜூலை 14 அன்று அதன் அணுசக்தி திட்டத்தின் மீது மேற்கத்திய சக்திகள் ஓர் உடன்படிக்கையை எட்டியதும், 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு முதல் பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரியின் விஜயமாக ஃபாபியுஸ் இன் விஜயம் அமைந்தது.

தெஹ்ரானுடன் அணுசக்தி உடன்படிக்கையைக் கையெழுத்திடுவதற்கு முந்தைய நாட்களில், பிரான்ஸ் தெஹ்ரானுக்கு எதிராக ஒரு கடுமையான போக்கை எடுத்தது. அது கூடுதல் விட்டுக்கொடுப்புகளைக் கோரியதுடன், இறுதி உடன்படிக்கையின் பாகமாக தெஹ்ரான் அதன் அணுசக்தி ஆலைகளைச் சோதனையிட அனுமதிக்கவில்லையானால், பாரீஸ் அந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்காது என்பதையும் அது வலியுறுத்தி வந்தது.

அணுசக்தி உடன்படிக்கையைப் பாராட்டி ஃபாபியுஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாரீஸ் தெஹ்ரானுடன் அதன் வரலாற்று உறவுகளை மீட்டமைக்க விரும்புகிறது என்றார். “நாங்கள் இரண்டு தலைச்சிறந்த சுதந்திர நாடுகள். சமீபத்திய ஆண்டுகளாக, சில காரணங்களுக்காக எங்களின் உறவுகள் தணிந்து போயுள்ளன என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இப்போது இந்த அணுசக்தி உடன்படிக்கைக்குத் தான் நன்றி கூற வேண்டும், விடயங்கள் மாறக்கூடும், என்றவர் தெரிவித்தார்.

ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி கூறுகையில், [1979] புரட்சிக்குப் பின்னர் தெஹ்ரான்-பாரீஸ் உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து வந்துள்ளன, ஆனால் நாங்கள் எதிர்காலத்தைப் பார்க்க விரும்புகிறோம், என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “அவ்விரு நாடுகளும் சிறந்த அரசியல் மற்றும் பொருளாதார கூட்டுஒத்திழைப்பின் வரலாறைக் கொண்டிருந்திருக்கின்றன ஈரானிய எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்துறைகளில் பிரெஞ்சு நிறுவனங்களின் பிரசன்னமும் முதலீடுமே அதற்கொரு சான்றாகும், என்றார். இருதரப்பு கூட்டுஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கு நவம்பரில் பாரீஸிற்கு விஜயம் செய்யுமாறு ரௌஹானி அழைக்கப்பட்டார்.

சமீபத்திய ஆண்டுகளில் தெஹ்ரானுக்கு எதிராக ஒரு ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை எடுத்திருந்த பாரீஸ், ஈரானுடன் அதன் பொருளாதார மற்றும் இராஜாங்க செல்வாக்கை ஊக்குவிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக இந்த அணுசக்தி உடன்படிக்கையைப் பார்க்கிறது. எண்ணெய் வளம்மிக்க மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சூறையாடும் நலன்களை அனுசரிப்பதற்கேற்ப தெஹ்ரான் அதன் கொள்கைகளை மாற்றுமாறு பிரான்ஸூம் அமெரிக்காவும் அதற்கு அழுத்தமளித்தன. ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் நலன்களைப் பூர்த்தி செய்வதற்காக, அந்த இஸ்லாமிய அரசு அதிக பிற்போக்குத்தனத்துடன் குரூரமாக மாற வேண்டுமென விரும்புகின்றன.

[ஈரான் மீது] தடையாணைகளைத் [திணிக்கப்படுவதற்கு] முன்னர், பாரீஸே தெஹ்ரானின் ஒரு முக்கிய வர்த்தக பங்காளியாக இருந்தது, வியன்னா உடன்படிக்கையை அடுத்து அதன் கடந்தகால இடத்தை மீட்டுப்பெற எண்ணுகிறது, என்று ஃபாபியுஸ் தெரிவித்தார்.

தடையாணைகளின் விளைவாக, பிரான்ஸ் ஈரானில் கணிசமான பொருளாதார இழப்புகளை அனுபவித்தது. பத்தாண்டுகளுக்கு முன்னதாக சுமார் 4 பில்லியன் யூரோவாக இருந்த ஈரான் உடனான பிரான்சின் வர்த்தகம், 2013 இல் 500 மில்லியன் யூரோவா சரிந்தது. பிரான்சிற்கான ஈரானின் ஏற்றுமதிகள் 2011 மற்றும் 2013க்கு இடையே 1.77 பில்லியன் யூரோவிலிருந்து 62 மில்லியன் யூரோவாக சரிந்தது. அதே காலக்கட்டத்தில், ஈரானுக்கான பிரெஞ்சு ஏற்றுமதிகள் 1.66 பில்லியனிலிருந்து 494 மில்லியன் யூரோவாக சரிந்தன.

PSA Peugeot-Citroën மற்றும் ரெனால்ட் உட்பட பிரெஞ்சு வாகன நிறுவனங்கள் ஈரானிய சந்தையில் முன்னணி விற்பன்னகர்களாக இருந்தன. தடையாணைகளின் கீழ் ஈரானிய வங்கிகளில் ரெனால்ட் இன் 562 மில்லியன் டாலர் சிக்கிக் கொண்டது. தடையாணைகளுக்கு முன்னதாக, ஆண்டுக்கு சுமார் 400,000 கார்களின் விற்பனையுடன், ஈரான் பிரான்சிற்கு வெளியே இருந்த PSA இன் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக விளங்கியது. PSA அதன் அப்போதைய-பங்காளியான அமெரிக்க வாகன உற்பத்தி நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸிடமிருந்து வந்த அழுத்தங்களைத் தொடர்ந்து 2012 இல் அதன் நடவடிக்கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டது.

இந்த பூர்வாங்க அணுசக்தி உடன்படிக்கைக்குப் பின்னர், பிரெஞ்சு உற்பத்தியாளர்கள் ஈரானுடன் வர்த்தக உறவுகளை மீண்டும்-ஸ்தாபிதம் செய்ய தொடங்கி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கிற்கான PSAஇன் இயக்குனர் Jean-Christophe Quémard கூறுகையில், ஈரான் மற்றும் பிரதான சக்திகளுக்கு இடையிலான புதிய அணுசக்தி ஒப்பந்தம் "தொடர்ந்து கொண்டிருக்கும் நமது விவாதங்களில் கணிசமானவொரு முன்னேற்றத்திற்கு உதவுமென" தெரிவித்தார்.

பிரெஞ்சு வாகன தயாரிப்பு நிறுவனங்கள், கொரியாவின் கியா, ஹூண்டாய், டோயோடா, சீனாவின் செர்ரி, லிஃபன் மற்றும் ஜேர்மனியின் வோல்ஸ்வேகன் ஆகியவற்றிடமிருந்து போட்டியை முகங்கொடுக்கும்.

பிரெஞ்சு எண்ணெய் மற்றும் எரிசக்தித்துறை பகாசுர நிறுவனம் டோட்டல், ஈரானின் எரிசக்தித்துறை உடன் இணைந்து வேலையைத் தொடங்க தயாரிப்பு செய்து வருகிறது, ஈரானிய எண்ணெய் வயல்களை அபிவிருத்தி செய்வதும் அதில் உள்ளடங்கும். இத்துறையில் டோட்டல் இத்தாலியின் ENI மற்றும் ஆங்கெலோ-டச் ஷெல் ஆகியவற்றுடன் போட்டியிட வேண்டியிருக்கும்.

ஈரானிய எண்ணெய்த்துறை மந்திரி பிஜன் ஜன்கனெஹ் கூறுகையில், “ஈரானுடன் இருதரப்பு எண்ணெய் மற்றும் எரிவாயு கூட்டுஒத்துழைப்பில் முன்னணியாளர்களில் பிரான்சும் ஒன்றாகும், அதேபோல அது எரிசக்தி கூட்டுஒத்துழைப்பை விரிவாக்குவதற்காக, ஈரான் திட்டமிட்டுவரும் நாடுகளிலும் ஒன்றாக உள்ளது, என்றார்.

கார்கள், விவசாயம், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் கவனம் செலுத்திவரும் உயர்மட்ட பிரெஞ்சு வியாபார பிரதிநிதிகள் குழு, செப்டம்பரில் ஈரானுக்கு விஜயம் செய்யும்.

ஈரானில் பெருளாதார மேலாதிக்கத்திற்கான பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நாட்டம், பதட்டங்களைக் குறைப்பதற்கு மாறாக, அப்பிராந்தியத்தில் மோதல்கள் மற்றும் பதட்டங்களை அதிகரிக்க செய்யும். பிரான்ஸ், ஆதாயமுள்ள ஈரானிய சந்தைகளைப் பாதுகாப்பதில், அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் சீனா உட்பட அதன் போட்டியாளர்களிடமிருந்து போட்டித்தன்மையை முகங்கொடுத்து வருகிறது.

ஃபாபியுஸ் விஜயத்திற்கு முன்னதாகவே, ஈரான் உடன் பொருளாதார உறவுகளை மீட்டமைக்க ஜேர்மனி தெஹ்ரானுக்கு ஒரு வியாபார பிரதிநிதிகள் குழுவை அனுப்பியது. L’Express எழுதுகையில், “ஜேர்மனி அதன் பாகத்தில், நாடுகளது ஒன்றுகூடலுக்குள் ஈரான் திரும்பியதிலிருந்து ஆதாயமடைய விரும்புகிறது. அந்த தடையாணைகளுக்கு முன்னர் ஈரானின் பிரதான வர்த்தக பங்காளியாக இருந்த பேர்லின், அந்நாடு தடையாணைகளின் கீழ் இருந்த போதும் கூட, 2013 இல் 1 பில்லியன் டாலர் வர்த்தகம் என்றளவில், அதனுடன் மிகவும் இணக்கமான உறவுகளைப் பேணியது" என்று குறிப்பிட்டது.

பிரான்கோ-ஈரானிய வியாபார உறவுகளை மேலுயர்த்துவதற்காக உயர்மட்ட பிரெஞ்சு நிர்வாகிகள் தெஹ்ரானுக்கு விஜயம் செய்த பின்னர், கடந்த ஆண்டு, ஈரான் உடன் வியாபாரம் செய்வதற்கு எதிராக வாஷிங்டன் பாரீஸை எச்சரித்தது. “அமெரிக்க வியாபார வட்டாரங்கள் ஏற்கனவே திரும்பி வருவதற்கு தயாரிப்பு செய்து வருகின்றன" என்பதைக் குறித்து பிரெஞ்சு முதலாளிமார் அமைப்பு மெடெஃப் விழிப்புடன் இருந்ததால், அது அந்த விஜயத்தை ஏற்பாடு செய்திருந்ததாக பொருளாதார நிபுணர் மைக்கேல் மகின்ஸ்கி தெரிவித்தார்.

ஈரானிய சந்தைகளுக்கான ஏகாதிபத்திய நாட்டம், அணுசக்தி உடன்படிக்கையின் நவ-காலனித்துவ குணாம்சத்தை அடிக்கோடிடுகிறது. ஈரானிய பொருளாதாரத்தை நாசப்படுத்திய மற்றும் அதன் எண்ணெய் ஏற்றுமதிகளைப் பாதியாக குறைத்துவிட்ட, முடமாக்கும் தடையாணைகளை முகங்கொடுத்துள்ள தெஹ்ரான், ஈரானை அன்னிய முதலீடுகளுக்குத் திறந்துவிடவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான நல்லிணக்கத்தையும் ஏக்கத்துடன் பார்த்து வருகிறது.

ஈரான் உடனான நல்லிணக்கம் பிரெஞ்சு முதலாளித்துவ ஊடகங்களால் உவப்புடன் வரவேற்கப்பட்டன, அவை தெஹ்ரான் மற்றும் சுன்னி ஆட்சிகளில் உள்ள அதன் எதிர்விரோதிகள் இருவருடனும் இராஜாங்க உறவுகளைப் பலப்படுத்துவதற்கு அழைப்புவிடுத்தன.

Le Monde ஃபாபியுஸ் இன் பயணத்தை மெச்சி எழுதுகையில், “பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி மிகச் சரியாக இருந்தார். இந்த மிக முக்கிய பிராந்திய முக்கியஸ்தருடன் நமது உறவுகளை நாம் மீண்டும் தொடங்க வேண்டும். … ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்ஸ் பந்தயத்தில் வைத்திருப்பது வர்த்தகத்தை மட்டுமல்ல. கருத்தளவில், ஷியைட் கூட்டணி மற்றும் சுன்னி உலகத்திற்கு இடையே 'நேர்மையான மத்தியஸ்த" பாத்திரம் வகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் சரியான இடத்தில் நிறுத்தப்பட வேண்டும். மத்திய கிழக்கைத் கிழித்து தொங்க விட்டுவரும் கொந்தளிப்பு, ரியாத்தும் தெஹ்ரானும் பேச்சுவார்த்தை நடத்தாமல், அமைதி அடையாது. இந்த பேச்சுவார்த்தையைச் சாத்தியமாக்குவது ஐரோப்பியர்களிடம் தான் உள்ளது,” என்று குறிப்பிட்டது.

அணுசக்தி உடன்படிக்கைக்கு முன்னதாக, லிபியா மற்றும் சிரியா மீதான நவ-காலனித்துவ நேட்டோ போர்களுக்கு பாரீஸ் ஆதரவளித்ததன் உள்ளடக்கத்தில், அது ஆழமாக தெஹ்ரானுக்கு விரோதமாக இருந்தது. சிரிய ஆட்சியை ஆதரிப்பதற்காக பாரீஸ் ஈரானைக் கூர்மையாக விமர்சித்தது, அதேவேளையில் பாரீஸூம் வாஷிங்டனும் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைப் பதவியிலிருந்து இறக்கும் நோக்கில் அல்-கொய்தா உடன் தொடர்புபட்ட சுன்னி போராளிகள் குழுக்களை ஆயுதமேந்த செய்து ஒரு பினாமி போரை ஊக்குவித்தன. சவூதி அரேபியா போன்ற பிற்போக்குத்தனமான சுன்னி வளைகுடா முடியாட்சிகள் மற்றும் இஸ்ரேல் உட்பட, தெஹ்ரானின் பிராந்திய எதிர்விரோதிகளுடன் பாரீஸ் இராஜாங்க உறவுகளைப் பலப்படுத்தியது.

ஈரான் அதன் ஏகாதிபத்திய-எதிர்ப்பு பாசாங்குத்தனங்களைக் கைவிட்டு, அப்பிராந்தியத்தில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் அபிலாஷைகளுடன் கூடுதலாக அது அணிசேர வேண்டுமென பாரீஸ் விரும்புகிறது. குறிப்பாக, ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வெளியேற்றி, பிரெஞ்சு நலன்களுக்கு அதிகளவில் கட்டுப்பட்ட ஒரு பினாமியைக் கொண்டு அவரை பிரதியீடு செய்ய உதவும் வகையில், பாரீஸ் சிரியாவை தனிமைப்படுத்த நோக்கம் கொள்கிறது.

ஈரான் அப்பிராந்தியத்தில் "ஒரு செல்வாக்குமிகுந்த சக்தியாகும்", என்று வலியுறுத்திய ஃபாபியுஸ், சிரியா, யேமன் மற்றும் இஸ்ரேல் போன்ற பிரச்சினைகளை மேற்கோளிட்டு, அது "சமாதானம் மற்றும் ஸ்திரப்பாட்டிற்கான கடமைப்பாட்டை" பிரான்ஸூடன் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டார். “விடயங்கள் பெரும்பாலும் காலதாமதமானாலும், சமாதானத்தை நோக்கிய பாதையைத் திறந்துவிடவும் மற்றும் ஸ்திரப்பாட்டிற்கும்" ஃபாபியுஸ் அழைப்புவிடுத்தார்.