சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The French regional elections and the threat of dictatorship

பிரெஞ்சு பிராந்திய தேர்தல்களும், சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலும்

Alex Lantier
17 December 2015

Use this version to printSend feedback

டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 13 பிரெஞ்சு பிராந்திய தேர்தல்கள் ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயகத்தின் தோல்வியில் மற்றொரு படியைக் குறித்தது. கனரக ஆயுதமேந்திய படையினர் பல வாக்குச்சாவடிகளில் ரோந்து வந்த நிலையில், நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல்களுக்கு பின்னர் ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS) நடைமுறைப்படுத்திய அவசரகால நெருக்கடி நிலையின்கீழ் நடத்தப்பட்ட, இத்தேர்தல்கள் நவ-பாசிசவாத தேசிய முன்னணிக்கு (FN) ஆதரவு உயர்வதைக் கண்டன.

சோசலிஸ்ட் கட்சி அடுத்த ஆண்டு ஒரு நிரந்தர அவசரகால நெருக்கடிநிலையை அரசியலமைப்பிற்குள் கொண்டு வரவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கனக் கொள்கைகளுக்கிணங்க பரந்த சமூக வெட்டுக்களை தொடர்ந்து திணிக்கவும் சூளுரைத்துள்ளது: முஸ்லீம்-விரோத மற்றும் ஐரோப்பிய ஒன்றிய-விரோத வீராவேச பேச்சுக்களுடன் மக்கள் கோபத்தைச் சுரண்டி, 2017 ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு கருதிவரும் தேசிய முன்னணி, இறுதியாக PS ஆல் கட்டமைக்கப்பட்டு வரும் பொலிஸ் அரசின் மணிமகுடமாக எழுச்சி பெற நோக்கம் கொண்டுள்ளது.

பிராந்திய தேர்தல்களில் இருந்து நவ-பாசிசவாதிகள் பாரியளவில் பலம் பெற்றுள்ளனர். தேசிய முன்னணியின் பிராந்திய கவுன்சிலர்களது எண்ணிக்கை 358 ஆக மூன்று மடங்கிற்கு உயர்ந்திருப்பதுடன், முன்னதாக 10 பிராந்தியங்களில் மட்டுமே பிரதிநிதித்துவம் கொண்டிருந்த அது இறுதியாக பிரான்சின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பிரதிநிதித்துவம் கொண்டுள்ளது. அக்கட்சி, தேசியளவில் PS க்கு அடுத்து வெறும் 5 சதவீத வித்தியாசத்தில், சாதனையளவிற்கு 6.8 மில்லியன் வாக்குகளை (27 சதவீதம்) வென்றது.

சோசலிஸ்ட் கட்சி, பழமைவாத குடியரசுக் கட்சி (LR) மற்றும் தேசிய முன்னணிக்கு இடையே ஒரு ஸ்திரமற்ற முக்கட்சி அமைப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தேசிய முன்னணி எந்த பிராந்திய தலைமையையும் வெல்லவில்லை என்பதால் இத்தேர்தல்களில் FN தோல்வியடைந்திருப்பதாக காட்டி, மக்களை இருட்டில் வைக்க முயல்கின்றனர். FN இன் மரீன் லு பென் மற்றும் மரியோன் மரிஷால்-லு பென் போட்டியிட்ட வடக்கு மற்றும் தென்கிழக்கு பிரான்சில், PS அதன் வேட்பாளர்களை விலக்கிக்கொண்டு LR க்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்தது. அந்த இரண்டு FN வேட்பாளர்களும் இறுதியில் முறையே 42 மற்றும் 45 சதவீத வாக்குகளை வென்றனர், வாக்காளர்களின் ஒரு அடுக்கு மூலோபாய வாக்குகளை வழங்கியதால், அந்த FN வேட்பாளர்கள் மிகச் சிறிய வித்தியாசத்தில் அதிகாரத்தைத் தவறவிட்டனர்.

“ஒரு பேரழிவு மயிரிழையில் தடுக்கப்பட்டதாக" வாதிட்டு, இடது முன்னணி தலைவர் ஜோன்-லூக் மெலென்சோன் கூறுகையில், “மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் மிகவும் ஆழ்ந்த நம்பிக்கைகளுக்கு விரோதமாக இருந்தாலும், வந்து வாக்களித்ததற்காக அவர்களுக்குத் தான் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்,” என்றார்.

இதுவொரு அரசியல் மோசடி. வாக்காளர்களது ஓர் அடுக்கிற்குள் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் குறித்து நிலவிய கவலை, வாக்காளர்களின் முடிவில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது என்றாலும் கூட, தேசிய முன்னணிக்கு எதிராக PS அல்லது LR ஐ ஆதரிக்கும் முன்னோக்கு அபாயகரமானதும் மற்றும் தவறானதுமாகும். தேசிய நாடாளுமன்றத்தில் அவசரகால நெருக்கடிநிலைக்கு கருத்தொருமித்து வாக்களித்த இடது முன்னணி போன்ற போலி-இடது சக்திகளும் மற்றும் சோசலிஸ்ட் கட்சியும், ஒரு பொலிஸ்-அரசை ஸ்தாபிக்க துடிப்புடன் வேலை செய்து வருகின்றன.

ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இன் சிக்கனத்திட்ட கொள்கைகளால் மதிப்பிழந்துள்ள சோசலிஸ்ட் கட்சி, ஏதேச்சதிகார தேடல்கள் நடத்த மற்றும் கையகப்படுத்தல்களை நடத்த அத்துடன் தனிநபர்களைக் கைது செய்து காவலில் வைக்கும் முடிவில்லா அதிகாரங்களைப் பொலிஸிற்கு வழங்கும் ஓர் அரசியலமைப்பு திருத்தத்தை முன்னெடுத்து வருகிறது. இவையெல்லாம் நடத்துவதற்கு, ஒருவரின் நடவடிக்கை எதிர்காலத்தில் பொது ஒழுங்கிற்கு ஓர் அச்சுறுத்தலாக இருக்கும் என்று பொலிஸ் வலியுறுத்தினாலே போதுமானதாக உள்ளது. "மக்களின் நடவடிக்கை, நட்புறவு, அறிக்கைகள் அல்லது திட்டங்களின்" அடிப்படையில் அவர்களை இலக்கில் வைக்க அது பொலிஸை அனுமதிக்கும் என்று சோசலிஸ்ட் கட்சி கூறுகிறது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் எழுத்துச் சுதந்திரம் அகற்றப்பட உள்ளது. யாருடைய அறிக்கைகள், தொலைபேசி அழைப்புகள் அல்லது இணைய பதிவுகள் பொது ஒழுங்கிற்கு ஓர் அச்சுறுத்தலை உள்ளடக்கி உள்ளதென முடிவெடுக்க மற்றும் ஓர் அச்சுறுத்தல் என்று கருதப்படுபவர்களின் சொத்துக்களை அபகரித்து முடக்க, பொலிஸ் மற்றும் பாரிய மின்னணு உளவு எந்திரம் ஏதேச்சதிகார அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.

பிராந்திய தேர்தர்களில் இருந்து விலகி நடைமுறையளவில் LR ஐ ஆதரிப்பதென்ற PS இன் முடிவைப் பொறுத்த வரையில், அது பிரான்சின் முதலாளித்துவ "இடதின்" தோல்வியை மட்டுமே அடிக்கோடிடுகிறது, மற்றும் பிரான்சின் முன்னணி எதிர்க்கட்சியாக தேசிய முன்னணி காட்டிக்கொள்வதற்கும் அனுமதிக்கிறது.

சோசலிஸ்ட் கட்சி தீவிர வலதை நோக்கி நகர்கையில், PS இன் வலதுடன் இணைந்திருக்க பெரும்பிரயத்தன முயற்சியில் உள்ள LR, இன்னும் அதிக கடுமையான ஜனநாயக-விரோத கொள்கைகளை முன்னெடுத்து வருகிறது. அது, உளவுத்துறை சேவைகள் யார் மீதெல்லாம் "S” பாதுகாப்பு கோப்புகளைக் கொண்டிருக்கிறதோ அந்த பத்து ஆயிரக் கணக்கானவர்கள் அனைவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த விரும்புகிறதுஇது அந்நபரின் மீது வெறுமனே "S” கோப்புகளை திறந்து, அவர் ஆணோ அல்லது பெண்ணோ, எவராக இருந்தாலும் காவல் முகாமிற்கு அனுப்ப உளவுத்துறை அமைப்புகளை அனுமதிக்கும்.

அந்த முதலாளித்துவ ஆட்சியின் ஆழ்ந்த நெருக்கடியானது, சிரியாவிலும் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலுமான ஏகாதிபத்திய போர் முனைவிலிருந்தும் மற்றும் 2008 க்குப் பிந்தைய பொருளாதார நெருக்கடியிலிருந்தும் எழுகிறது. சமூக சமத்துவமின்மை, சிக்கனத் திட்டம் மற்றும் போர் மீது தொழிலாள வர்க்கத்தின் வெடிப்பார்ந்த கோபம் அரசியல் ஸ்தாபகத்திற்குள் எந்த வெளிப்பாட்டையும் காணாத போதும், அதைக் குறித்து நன்கறிந்துள்ள நிதியியல் பிரபுத்துவம், எல்லா எதிர்ப்பையும் மூர்க்கத்துடன் மற்றும் சீற்றத்துடன் பார்க்கிறது. முதலாளித்துவ ஜனநாயகம் கட்டுப்படுத்தவியலா வர்க்க பதட்டங்களைத் தீர்க்க அதிகரித்தளவில் இலாயக்கற்றுள்ளது.

பிரான்சில், சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் பாசாங்குத்தனத்தைக் கூட வங்கிகளும் இராணுவ-உளவுத்துறை கூட்டும் கைவிட்டுவிட்டன, அவை சர்வாதிகாரம், சிக்கனத் திட்டம் மற்றும் போரை வழிபடுவதற்குத் திரும்பி வருகின்றன. இது தான், தேசிய முன்னணியின் அல்லது அதிலிருந்து எழுச்சி பெறும் எந்தவொரு கட்சியின் வாய்ப்புவளங்களையும் தீர்மானிக்கிறதே ஒழிய, மரீன் லு பென் வடக்கு பிராந்தியத்தின் பிராந்திய தலைவராக ஆவதற்கான 2015 முயற்சியின் கதி என்ன என்பது தீர்மானிப்பதில்லை. பிரெஞ்சு முதலாளித்துவம் இன்னும் அதிக அதிகாரத்தை நவ-பாசிசவாதத்திடம் ஒப்படைக்க நோக்கம் கொண்டுள்ளது.

ஜனநாயக உரிமைகளை ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசியல்ரீதியில் சுயாதீனமான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டுவதன் மூலமாக மட்டுமே பாதுகாக்க முடியும். இது தான் 2002 பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் நெருக்கடிக்குப் பிந்தைய ஒட்டுமொத்த காலகட்டத்தின் படிப்பனையாகும், அப்போது PS இன் லியோனல் ஜோஸ்பன் முதல் சுற்றில் தோற்கடிக்கப்பட்டார், பழமைவாத ஜாக் சிராக் மற்றும் அப்போதைய தேசிய முன்னணி தலைவர் ஜோன்-மரி லு பென்னுக்கு இடையிலான ஒரு போட்டிக்கு எதிராக பாரியளவில் போராட்டங்கள் வெடித்தன.

தொழிலாளர் போராட்டம் (LO), புரட்சிகர கம்யூனிஸ்ட் லீக் (LCR), மற்றும் தொழிலாளர்கள் கட்சி (PT) ஆகியவை ஒருங்கிணைந்து மூன்று மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைக் கொண்டிருந்த நிலையில், உலக சோசலிச வலைத் தளத்தை வெளியிடும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, இரண்டாம் சுற்று தேர்தலை புறக்கணிக்குமாறு அக்கட்சிகளுக்கு அழைப்புவிடுத்து ஒரு பகிரங்க கடிதம் எழுதியது. சிக்கனத்திட்டம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டும் வகையில் ஓர் ஆக்கபூர்வமான புறக்கணிப்பானது, சிராக் பின்தொடரக்கூடிய கொள்கைகளை எதிர்க்க தொழிலாள வர்க்கத்தை சிறப்பாக தயாரிப்பு செய்யுமென அந்த பகிரங்க கடிதம் விவரித்தது.

இந்த மூன்று கட்சிகளும் ICFI இன் பரிந்துரையை நிராகரித்து, FN அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்காக என்ற வெளிவேஷத்தில், சிராக்கிற்கு வாக்களிக்க ஆதரவளித்தன. கடந்த 13 ஆண்டுகால பலாபலன்கள், பல தசாப்தங்களாக "இடது" எதிர்ப்பாக நடந்து வந்திருந்த அரசியலில் செல்வாக்கு செலுத்திய இத்தகைய குட்டி-முதலாளித்துவ கட்சிகளது அரசியல் திவால்நிலையை நிரூபிக்கின்றன.

அவர்களது மூன்று மில்லியன் வாக்குகளைச் சிராக்கிடம் ஒப்படைத்த பின்னர், அவை தேசிய முன்னணியின் வளர்ச்சியை உந்திவந்த பிற்போக்குத்தனமான கொள்கைகளுடன் முன்பினும் அதிக பகிரங்கமாக தங்களைத்தாங்களே இணைத்துக் கொண்டன. அவை முகத்திரை மற்றும் பர்தாவிற்குத் தடைவிதித்தமை போன்ற இஸ்லாமிய-விரோத நடவடிக்கைகளை ஆதரித்து, லிபியா மற்றும் சிரியாவின் ஏகாதிபத்திய போர்களை புரட்சிகளாக பாராட்டின, ரோமாக்களின் பாரிய வெளியேற்றத்தை வாய்திறக்காமல் மவுனமாக இருந்து ஆதரித்தன, மற்றும் ஹோலாண்ட் அவர் சிக்கனத் திட்ட நிகழ்ச்சிநிரலை அறிவித்திருந்த போதினும், அவரை தேர்ந்தெடுப்பதற்காக பிரச்சாரம் செய்தன. இக்கட்சிகள் பிராந்திய தேர்தல்களின் முதல் சுற்றிலேயே சுத்தமாக ஓரங்கட்டப்பட்டன.

ஜனநாயக உரிமைகளுக்காக ஒரு பாரிய மற்றும் சக்திவாய்ந்த ஆதரவுத்தளம் தொழிலாள வர்க்கமேயாகும். ஆனால் தொழிலாள வர்க்கம் இத்தகைய கட்சிகளுக்கும் மற்றும் அவற்றின் மார்க்சிச-விரோத கொள்கைகளுக்கும் எதிரான சோசலிச எதிர்ப்பின் அடிப்படையிலிருந்து மட்டும் தான் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நடத்த முடியும்.