சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Massive police mobilization in France

பிரான்சில் பாரியளவில் பொலிஸ் ஒன்றுதிரட்டப்படுகிறது

By Patrick Martin
9 January 2015

Use this version to printSend feedback

நையாண்டி வார பத்திரிகை சார்லி ஹெப்டோ பதிப்பு அலுவலகங்களில் புதனன்று நடந்த படுகொலைக்குப் பின்னர், பிரெஞ்சு அரசு பாரீஸ் மற்றும் வடக்கு பிரான்ஸ் எங்கிலும் பத்து ஆயிரக் கணக்கான அதிகாரிகளையும் துருப்புகளையும் நிலைநிறுத்தி, ஒரு பாரிய பொலிஸ்-இராணுவ ஒன்றுகுவிப்பை ஏற்பாடு செய்துள்ளது.

அந்த படுகொலைக்காக குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு இஸ்லாமிய துப்பாக்கிதாரிகளை அவர்கள் நெருங்கிவிட்டதாக வியாழனன்று இரவு பிரெஞ்சு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க SWAT குழுக்களைப் போலவே, முகமூடி அணிந்த மற்றும் கனரக ஆயுதமேந்திய தந்திரோபாய பொலிஸ் படைகள் ரெய்ம்ஸின் பிராந்திய மையத்திற்கு அருகில், Villers-Cotterêts நகரின் சுமார் 50 மைல் கிழக்கே அமைந்துள்ள 51 சதுர-மைல் Forêt de Retz காட்டில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர்.

சந்தேகத்திற்குரிய இருவரில் ஒருவரான 34 வயது சாய்த் கௌச்சி, ரெய்மில் வசித்து வந்தார். அவரது சகோதரர் செரிப், புதனன்று காலை 10.00 மணிக்கு அந்த தாக்குதல் எங்கே நடந்ததோ அதே பாரீஸில் வசித்திருந்தார். இருவருமே அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சு குடிமக்கள் ஆவர், இளையவர் 2005இல் ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிராக சண்டையிட ஈராக்கிற்கு செல்ல முயன்றதற்காக மூன்று-ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார்.

சந்தேகத்திற்குரிய அவ்விருவரது பின்புலம் குறித்து பல கேள்விகள் உடனடியாக மேலெழுந்தன. அவர்கள் பிரெஞ்சு பொலிஸின் தொடர் கண்காணிப்புக்கு கூடுதலாக, அமெரிக்காவில் "வெளிநாடுகளுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டவர்கள்" பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக அமெரிக்க ஊடக நிறுவனங்கள் வியாழனன்று செய்தி வெளியிட்டன. (பார்க்கவும்: “Gunmen were ‘probably followed’ by French police before Paris massacre”)

Corcy கிராமத்திற்கு சில மைல்களுக்கு அப்பால் ஒரு பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் அந்த சகோதர்கள் இருவரையும் ஓர் உதவியாளர் கண்டதாக கூறப்பட்டதால், அக்கிராமத்தில் பொலிஸ் வீடு-வீடாக தேடும் வேட்டையை மேற்கொண்டது. அதற்கு அருகில் இருந்த Longpont கிராமத்திலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது, அவ்விரு இடங்களில் வசிக்கும் மக்கள் பகலிலும் இரவிலும் அவர்களது வீட்டிலேயே தங்கி இருக்குமாறு கூறப்பட்டார்கள்.

தப்பிச்செல்வதற்கு உதவிய ஓட்டுனராக ஒரு மூன்றாவது நபரும் அந்த தாக்குதலில் பங்கெடுத்து இருந்ததாக பொலிஸ் வாதிட்டது, ஆனால் அவரை இன்னும் கண்டு பிடிக்கவில்லை. தொடக்கத்தில் சந்தேகத்திற்குரியவராக பெயரிடப்பட்ட 18 வயது நிரம்பிய ஹமீட் மூராட், பெல்ஜியத்தின் எல்லைக்கருகில் பாரீஸின் வடக்கே சுமார் 140 மைல்கள் தூரத்தில் உள்ள Charleville-Mezieres நகரில் பொலிஸிடம் சரணடைந்தார், ஆனால் அவர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களோடு உடந்தையாக இருந்தாரா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை. அந்த படுகொலை நடந்த சமயத்தில் கல்லூரியில் அவரது நண்பர்களுடன் இருந்ததார் என்றும், அவர் ஒரு அப்பாவி என்றும் வலியுறுத்தி அவரது கல்லூரி நண்பர்கள் ஒரு ட்விட்டர் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளனர்.

உள்துறை மந்திரி Bernard Cazeneuve இன் தகவலின்படி, இதுவரையில் ஒன்பது பேர் விசாரணைக்காக காவலில் பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர், அவர்களில் பலர் தப்பியோடிய அவ்விருவரின் நண்பர்களும் மற்றும் அவருக்குப் பரிச்சயமானவர்களும் ஆவர். அவர்களில் யாரும் அந்த இரத்தந்தோய்ந்த தாக்குதலில் எந்தவொரு பாத்திரம் வகித்ததற்காக குற்றஞ்சாட்டப்படவில்லை.

ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டு மற்றும் பிரதம மந்திரி மானுவேல் வால்ஸின் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எச்சரிக்கையின் பாகமாக, உள்துறை அமைச்சகம் பொலிஸ்-இராணுவ வளங்களின் பெரும் ஒன்றுதிரட்டலைக் குறித்து சில விபரங்களை வெளியிட்டது.

35,000க்கு அதிகமான ஆயுதமேந்திய காவற்படைகள் மற்றும் துணைஇராணுவ பொலிஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து, 1,000க்கும் மேற்பட்ட துருப்புகளும் பிரான்சின் வீதிகளில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் பத்து ஆயிரக் கணக்கானவர்கள் இப்போது பாரீஸின் வீதிகளில் உள்ளனர். பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மற்றொரு 50,000 படைத்துறைசாரா பணியாளர்களும் ஒன்றுதிரட்டப்பட்டு உள்ளனர், இது மொத்த எண்ணிக்கையை சுமார் 88,000க்கு கொண்டு வருகிறது.

சார்லி ஹெப்டோ படுகொலையை ஒட்டிய மனிதவேட்டையில் தான் முதல்முறையாக பிரெஞ்சு அதிகாரிகள், 2013இன் இறுதியில் நிறைவேற்றப்பட்டு 2014 கிறிஸ்துமஸிற்கு சற்று முன்னர் உத்தியோகப்பூர்வ ஆணையில் வெளியிடப்பட்ட ஒரு புதிய உளவுத்துறை சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளனர். அது நீதித்துறையின் மீளாய்வு இல்லாமலேயே தொலைதொடர்பு மற்றும் இணைய போக்குவரத்தைக் குறித்த அப்போதைக்கு அப்போதே தரவுகளைச் சேகரிக்க பிரெஞ்சு பொலிஸிற்கு அதிகாரம் வழங்குகிறது.

இணைய மற்றும் தொலைதொடர்பு சேவை வழங்குனர்களிடம் செல்பேசி மற்றும் இணையதள முகவரிகளில் இருக்கும் இடத்தைக் குறித்த தரவுகளை வழங்க கோருவது, அத்துடன் இலக்கில் வைக்கப்பட்ட தனிநபர்கள் இணையத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், யாருடன் அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள் என்பது போன்ற விபரங்களைக் கோருவது ஆகியவையும் அச்சட்டத்தில் உள்ளடங்கி உள்ளது.

பிரெஞ்சு ஆளும் மேற்தட்டின் உயர்மட்ட வட்டாரங்களினது போர்நாடும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், முன்னாள் பிரதம மந்திரி அலென் ஜூப்பே அறிவித்தார், “நாம் ஒரு புதிய வகைப்பட்ட போரில் ஈடுபட்டுள்ளோம். அது மத்திய கிழக்கின் குழப்பங்களில் இருந்து பரவவில்லை, மாறாக அது தனிநபர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் ஒரு கலவையால் இங்கே நடத்தப்பட்டு வருகிறது.”

"பிரான்சின் புதிய போரின் வெற்றியாளராக லு பென் இருப்பாரென அரசியலமைப்பு அஞ்சுகிறது" என்று தலைப்பிட்ட ஒரு செய்தியில் இலண்டனின் டைம்ஸ் இதழ், பிரான்சில் அதிகரித்துவரும் அரசியல் நெருக்கடி நவ-பாசிச தேசிய முன்னணியின் மரீன் லு பென்னுக்கு ஆதாயமாக இருக்கக்கூடும் என்று கவலை வெளியிட்டது. அந்த பத்திரிகை குறிப்பிட்டது, “வன்முறை-இஸ்லாமியத்தின் புதிய முகவர்களில் சிலர் சிரியாவில் சண்டையிட்டு இருக்கலாம் ஆனால் அவர்களின் வேர் பாரீஸை சுற்றி, அவர்களின் பெற்றோர்களும் மூதாதையர்களும் சமீபத்திய தசாப்தத்தில் குடியேறிய பெரு நகரங்களைச் சுற்றி உள்ள வீட்டு மாளிகைகளில் உள்ளது.”

சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல், பிரான்சில் மட்டுமல்ல ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும், முதலாளித்துவ அரசியலை வலதிற்குத் திருப்புவதற்கும் மற்றும் அரசு ஒடுக்குமுறையை பெரிதும் தீவிரப்படுத்துவதற்கும் ஒரு சந்தர்ப்பமாக உள்ளது. இது தான் பிரெஞ்சு உள்துறை மந்திரியினது அறிவிப்பின் முக்கியதுவமாகும், அவர் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை ஒழுங்கமைப்பது குறித்து விவாதிக்க ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள அவரது சமதரப்பினருடன் ஒரு சர்வதேச கூட்டத்தை ஏற்பாடு செய்ய உள்ளார்.

Cazeneuve குறிப்பிட்டார், “நான் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பாதிக்கப்பட்ட எனது சமதரப்புகளை ... அத்துடன் அமெரிக்க கூட்டாளி எரிக் ஹோல்டரையும் ஞாயிறன்று பாரீஸிற்கு வரவழைக்கும் ஒரு முனைவை எடுத்துள்ளேன்.” ஏனைய நாடுகளும் "பிரான்ஸூடன் அவற்றின் ஐக்கியத்தைக் காட்டி வருகின்ற" வேளையில், அக்கூட்டம் "பயங்கரவாதிகள் முன்னிறுத்தி வருகின்ற பொதுவான சவால்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதைக் கடந்தும் மட்டுமே தீர்க்கப்படக் கூடிய பொதுவான சவால்களைக் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்குரியதாக இருக்கும்.

சந்தேகத்திற்குரிய "பயங்கரவாதிகளை" முன்கூட்டியே படுகொலை செய்யும் ஜனாதிபதி ஒபாமாவின் கொள்கைக்கு மிக பகிரங்கமாக வக்காலத்து வாங்கிய ஹோல்டரின் ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகையில், அக்கூட்டம் "பயங்கரவாத அச்சுறுத்தல்கள், வெளிநாட்டு போராளிகள் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்வதன் மீது" ஒருமுனைப்பட்டு இருக்கும்,” என்றார்.

அமெரிக்க செனட்டில் உள்ள குடியரசு கட்சியினர் பாரீஸ் தாக்குதலை அமெரிக்காவிற்குள் பாரிய உளவுவேலைகள் மற்றும் மின்னணு கண்காணிப்பு ஆகியவற்றின் மீதிருக்கும் எந்தவித கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு ஒரு சாக்குபோக்காக கைப்பற்றினர். தெற்கு கரோலினாவின் செனட்டர் லின்ட்செ கிரஹாம் நேஷனல் ஜேர்னலுக்குக் கூறுகையில், “இதுமாதிரியான தாக்குதல்கள் நடப்பதிலிருந்து தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நம் நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு முடங்கிப் போயிருப்பதாக நான் நம்புகிறேன்,” என்றார்.

வெளியுறவுத்துறை கமிட்டியின் புதிய தலைவர் டென்னஸியின் செனட்டர் பாப் கோர்கர், இந்த சட்டமன்றம் உளவுத்துறை முகமைகளை இழுத்துப் பிடிக்கக் கூடாது என்று வாதிட்டார். “என்னைப் பொறுத்த வரையில், காங்கிரஸின் மேற்பார்வை நிச்சயமாக முக்கியமானது தான்,” என்று தெரிவித்த அவர், “ஆனால் இத்தகைய சம்பவங்கள் சம்பந்தமாக மிகவும் முக்கியமாக உள்ளது என்னவென்றால், இது மாதிரியான நடவடிக்கைகள் நடக்காமல் தடுக்கும் மற்றும் முன்கூட்டியே இதுமாதிரியான தகவல்களைச் சேகரிக்கும் NSAஇன் திறனை பெரிதும் நாம் முடமாக்கிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்தி வைப்பதாகும்.”

இத்தகைய கண்ணோட்டங்களை எதிரொலித்து, வியாழனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் "பாரீஸில் இஸ்லாமிய பயங்கரம்" என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தில் குறிப்பிடுகையில், அந்த தாக்குதல் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்நாட்டு பொலிஸ் உளவுவேலைகளை அதிகரிப்பதற்கு சமிக்ஞையாக எடுக்கப்பட வேண்டும் என்றது.

மக்களைப் படுகொலை செய்யும் அதுபோன்ற பல முயற்சிகள் நடக்கக்கூடும், சாத்தியமான சதித்திட்டம் தீட்டுவோர்களைத் தடுப்பதற்காக அவர்களை கண்காணிக்கவும் மற்றும் விசாரிக்கவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதிகாரிகளுக்கு பரந்த அதிகாரம் தேவைப்படுகிறது,” என்று ஜேர்னல் எழுதியது. “இது சில தாராளவாதிகளுக்கும், சுதந்திரவாதிகளுக்கும் வருத்தமாக இருக்கலாம், ஆனால் ... இப்போது ஒரு பேரழிவு நடந்த பின்னர் பாரிய முஸ்லீம் கைதுகள் அல்லது வெளியேற்றுதல் ஆகியவற்றிற்கான பொதுவான முறையீட்டை விட மெட்டாடேட்டாவை சிறப்பாக சேகரிப்பதும் மற்றும் சிலரை கண்காணிப்பில் வைப்பதும் சிறந்ததாகும்,” என்றது குறிப்பிட்டது.

"வறுமை அல்லது மத்திய கிழக்கில் மேற்கத்திய கொள்கைகளுக்கு வன்முறை-இஸ்லாம் எதிர்வினையாக இருக்கக்கூடாது. அது பத்திரிகை சுதந்திரம் மற்றும் மத பன்மைத்துவம் உட்பட, மேற்கத்திய நாகரீகம் மற்றும் கோட்பாடுகளுக்கு ஒரு சித்தாந்தரீதியிலான சவாலாகும்,” என்று அப்பத்திரிகை வாதிட்டது.

புதன்கிழமை தாக்குதலில் பிரதானமாக சந்தேகத்திற்குரியவராக உள்ளவர் முன்னதாக அமெரிக்க படையெடுப்புக்கும் மற்றும் மேலோங்கி இருந்த முஸ்லீம் நாட்டில் அதன் ஆக்கிரமிப்புக்கும் எதிரான எதிர்ப்பில் இணையும்பொருட்டு ஈராக்கிற்கு பயணிக்க முனைந்திருந்தவர் என்பதுடன், அவர் அபு க்ரைப்பில் சிறைக்கைதிகள் மீதான துஷ்பிரயோகமே அவருக்கு உந்துதலாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டிருக்கும் நிலையில், இக்கருத்துக்கள் குறிப்பிடத்தக்க பொய்மைப்படுத்தல் ஆகும்.

அனைத்திற்கும் மேலாக ISISக்கு (ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு) எதிரான ஏகாதிபத்திய தலையீட்டுக்கு ஆதரவாக பிரான்ஸ் பாரசீக வளைகுடாவில் அதன் ஒரே ரக போர் விமானமான சார்லஸ் டு கோல் என்பதை நிலைநிறுத்தி வருகிறது என்பதை பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்த அடுத்த நாள் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

கட்டுரை ஆசிரியர் கீழ்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

சார்லி ஹெப்டோவின் பாரீஸ் அலுவலக பயங்கரவாத துப்பாக்கிச்சூட்டில் பன்னிரெண்டு பேர் பலி