சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Support grows for victimized Sri Lankan tea estate workers

பழிவாங்கப்பட்ட இலங்கை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு வளர்கிறது

By our correspondents
1 July 2015

Use this version to printSend feedback

கடந்த வாரம், ஹட்டன் நீதவான், மஸ்கெலியா கிளனியூஜி தோட்டத்தின் டீசைட் பிரிவைச் சேர்ந்த ஏழு பழிவாங்கப்பட்ட தொழிலாளர்கள் மீதான வழக்கில் நவம்பர் 8 அன்று விசாரணையை அறிவித்தார். இந்த விசாரணை, தன்னைத் தாக்கியதாக பி. ஆபிரகாம் என்ற ஒரு மேற்பார்வையாளர் தொழிலாளர்கள் மீது குற்றம் சாட்டி கொடுத்த புகாரின் அடிப்படையிலானதாகும்.

இந்த வழக்கு சோடிக்கப்பட்டதாகும். இந்த மேற்பார்வையாளர், கிளனியூஜி தோட்ட நிர்வாகத்தாலும் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (.தொ.கா.) பிரதேச தலைமையாலும் புகார் செய்ய தூண்டிவிடப்பட்டார்.

கிளனியூஜி எஸ்டேட் தோட்ட நிர்வாகம், மார்ச் 25 முதல் ஏப்ரல் 25 வரை ஒரு போலி உள்ளக விசாரணையை நடத்தியது. ஆறு தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சாட்சியம் கூறினர். அவர்கள், மேற்பார்வையாளர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என மறுத்ததுடன் தொழிலாளர்களின் வேலையை சீர்குலைக்க குளவிக்கூட்டை கல்லெறிந்து கலைத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தனர்.. ஒரே ஒரு தொழிலாளியும் மேற்பார்வையாளரும் மட்டுமே ஏழு தொழிலாளர்களுக்கு எதிராக "சாட்சி" கொடுத்தனர்.

http://www.wsws.org/asset/c74a0440-68c6-42ac-a5af-aed36ad3ae4J/Deeside+estate+line+rooms.jpg?rendition=image240
டீசைட் எஸ்டேட் லயன் அறைகள்

எவ்வாறெனினும், நிர்வாகம் குற்றச்சாட்டுகள் "நிரூபிக்கப்பட்டன" எனக் கூறி, சோசலிச சமத்துவக் கட்சி (சோ..) ஆதரவாளர் ஜி. வில்பிரட், எம். நெஸ்தூரியன் மற்றும் எப். பிராங்ளின் உட்பட மூன்று தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. அத்துடன் எஸ். டக்ளஸ்நியுமன், எஃப். அன்டன் ஜூலியன், எஸ். பெனடிக்ட், எஸ். ஜனரட்னம் ஆகிய நான்கு தொழிலாளர்களை ஒரு மாதம் வேலை இடைநீக்கம் செய்தது. கிளனியூஜி நிர்வாகம் இப்போது எதிர்வரும் வழக்கில் போலிக் குற்றச்சாட்டுக்களை பயன்படுத்தவுள்ளது.

தொழிலாளர்கள், ஜூன் 7 நடந்த மஸ்கெலியா இணக்கச் சபை குழு கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்து, குற்றச்சாட்டுக்கள் உடனடியாக கைவிடப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேற்பார்வையாளர் பி. ஆபிரகாம், ஆரம்பத்தில் தான் குற்றச்சாட்டுக்களை கைவிடும் தயார் நிலையை காட்டினார். ஆனால் கிளனியூஜி முகாமையாளரை தொடர்புகொண்ட பின்னர் அந்த முடிவை கைவிட்ட அவர், புகாரை விலக்கிக்கொண்டால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலையே தனக்கும் ஏற்படும் என்று கூறினார்.

 பெப்பிரவரியில் நடந்த வேலைநிறுத்தத்தில் செயலூக்கத்துடன் ஈடுபட்டதால் தொழிலாளர்களை தண்டிப்பதில் தோட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது. வேலை நிறுத்தமானது, தினசரி கொழுந்து பறிக்கும் இலக்கை 16  கிலோவில் இருந்து 18 கிலோ வரை அதிகரித்தமைக்கு எதிராக இடம்பெற்றது. வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் கவிழ்த்த அதேவேளை, நிர்வாகமானது இரண்டு கிலோ அதிகரிப்பை கைவிடத் தள்ளப்பட்டது.

இந்த வேட்டையாடல், வேலைப் பளுவை திணிக்கவும் ஊதியங்களை குறைப்பதற்கும் தோட்ட நிறுவனங்களால் தயார் செய்யப்பட்டு வரும் பரந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாகும். (பார்க்க: இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் ஊதியத்தை அதிகரிக்க மறுக்கின்றன). கிளனியூஜி தோட்டமானது மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பெனிக்கு சேர்ந்ததாகும். இது இலங்கையில் செயற்படும் 22 தோட்ட நிறுவனங்களில் மிகப் பெரியவற்றில் ஒன்றாகும். அதன் 2010-2011 ஆண்டறிக்கை படி, இந்தக் கம்பனியின் கீழ் சுமார் 15,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

சோசலிச சமத்துவக் கட்சி குழுக்கள், கிளனியூஜியின் டீசைட் மற்றும் அதன் ஏனைய பிரிவுகள் அதேபோல், ஸ்டாக்ஹோம் தோட்டத்தின் ஸ்கார்பரோ பிரிவு உட்பட பல தோட்டங்களில் கடந்த வாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக பிரச்சாரம் செய்து வருகின்றன. நிர்வாகத்தின் தாக்குதலையிட்டு தொழிலாளர் தமது  ஆத்திரத்தை வெளிப்படுத்தியதோடு சோசலிச சமத்துவக் கட்சியின் பாதுகாப்பையும் ஆதரித்தனர்.

டீ. சந்திரசேகரம், 34, மஸ்கெலியா, சாமிமலையில் உள்ள ஸ்கார்பரோ பிரிவைச் சேர்ந்தவர். அவர் கூறியதாவது: "நாம் நிபந்தனையின்றி இந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும் என்ற உங்கள் பிரச்சாரத்திற்கு பலமாக ஆதரவு கொடுக்கின்றோம். அவர்கள் வேலை இல்லாமல் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எமக்குத் தெரியும். எங்களது சம்பளம் சாப்பாட்டுக்கு செலவிடவே போதாது. வேலை இல்லாமல் டீசைட்டில் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி பராமரிப்பார்கள்
.

"டீசைட் போலவே நம்முடைய தோட்ட நிர்வாகமும் 15ல் இருந்து 18 கிலோ வரை வேலைச்சுமையை அதிகரித்துள்ளது. மேற்பார்வையாளர்கள் கொழுந்துகளை ஒரு நாளைக்கு மூன்று முறை நிறுப்பார். அதே சமயம் ஒவ்வொரு முறையும் அவர்கள் விரயம் என்று சொல்லி 3 கிலோவை வெட்டிவிடுவார்கள். ஆதாவது ஒரு நாளுக்கு அவர்கள் 9 கிலோவை குறைக்கின்றனர். ஆகவே நாளாந்தம் மொத்தம் 27 கிலோ எடுக்க வேண்டும். மழைக் காலத்தில் ஒரு கிலோ விரயம் என குறைப்பது நியாயமானது. ஆனால் இங்கே நடப்பது அதுவல்ல. "

சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த அவரது மனைவி, புதிய இலக்கை அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று சந்திரசேகரம் கூறினார். தொழிற்சங்கங்கள் இந்த வேலைச் சுமை அதிகரிப்பை எதிர்ப்பதில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

"நாங்கள் சுயநலவாதிகளாக இருக்கக் கூடாது. மற்ற தொழிலாளர்கள் நிறுவனத்தின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டால், நாம் அவர்களை பாதுகாக்க வேண்டும். எமது தொழிற்சங்கத் தலைவர்கள் தமது சொந்த குடும்பங்கள் பற்றியே யோசிக்கின்றனர். வேறு யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்களுடைய சலுகைகள் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர்," என அவர் மேலும் கூறினார்.

மாரியாய் கலந்துரையாடலில் இணைந்துகொண்டார். 11 பேர் கொண்ட ஒரு தொழிலாளர் குடும்பம் ஒரே லயன் அறையில் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வருவதாக அவர் விளக்கினார். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு கழிப்பறை வசதி கிடையாது. நிர்வாகம் லயன் அறைகளை சுற்றி சுத்தம் செய்ய தொழிலாளர்களை தருவதாக உடன்பட்டிருந்தாலும் அதை நிறுத்திவிட்டது.

பிரபாகரன் 32, தான் முன்னர் சாமிமலை மணாலி தோட்டத்தில் வேலை செய்ததாகவும் ஆனால் லயன் அறை தங்குமிடம் கிடைக்கவில்லை என்றும், அதனால் அவர் ஸ்கார்பரோ தோட்டத்திற்கு வந்ததாகவும் விளக்கினார். அவர் இப்போது ஒரு தற்காலிக அடிப்படையில் வேலை செய்கின்றார்.

 "இங்கே வாழ்வது மிகவும் கடினமாக இருக்கிறது" என அவர் கூறினார். "தண்ணீர் வசதிகள் கூட இல்லை, நடைபாதையில் மண் நிரப்பப்பட்டுள்ளது. எங்கள் சமையலறை சுவர் ஒரு பக்கத்தில் சரிந்துவிட்டது. அரசாங்கம் மற்றும் தோட்ட நிர்வாகமும் கட்டிடத்தை சரிசெய்ய எந்த உதவியும் வழங்கவில்லை. தொழிற்சங்கங்கள் தேர்தலின் போது மட்டுமே வருகின்றன. அவர்கள் வந்தால் நான் பல கேள்விகளை கேட்க போகிறேன். நாம் தொழிற்சங்கங்களை விட்டு விலகி புதிய தலைமையை கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். "

கிளனியூஜி பிரிவை சேர்ந்த சசிகுமார், தொழிலாளர்கள் டீசைட் பிரிவு வேலை நிறுத்தத்தில் பங்கேற்காவிட்டாலும், நிர்வாகம் புதிதாக திணித்த 18 கிலோ இலக்கை மீண்டும் 16 கிலோவாக குறைக்க நிர்ப்பந்திக்கப்பட்டது, என்று விளக்கினர்.

"நாங்கள் அனைவரும் தொழிலாளர்கள், நாங்கள் ஒருவருக்கொருவரை பாதுகாக்க வேண்டும். ஜூலை 2 அன்று கம்பனிகள் தொழிற்சங்கங்களுடன் அடுத்த கூட்டு ஒப்பந்தத்தைப் பற்றி பேசப் போகின்றன. தற்போதைய நிலைமையின் கீழ் எமக்கு புதிய தலைமை அவசியம். நான் தலைவர்களுடன் வெறுப்படைந்ததால் தொழிற்சங்கத்தில் இருந்து விலகினேன்." ஏனைய பல தொழிலாளர்களும் இதே காரணத்துக்காக தொழிற்சங்கங்களில் இருந்து விலகிக்கொண்டதாக அவர் மேலும் கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒரு தொழிற்சங்கத்தை அமைக்காதது ஏன் என்று சசிகுமார் கேட்டதோடு, ஒரு நடவடிக்கை குழுவை ஸ்தாபித்து தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை அணிதிரட்ட வேண்டியதன் அவசியம் பற்றிய சோ...யின் விளக்கத்தை கவனமாக கேட்டுக்கொண்டார். சோசலிச சமத்துவக் கட்சியின் வரவிருக்கும் கூட்டத்தில் இது மேலதிகமாக கலந்துரையாட இருப்பதாகவும் கூறினார்.

பரமேஸ்வரி கூறியதாவது: "நாங்கள் போராடியிருந்தால் இதே நிலைமையை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும் [டீசைட் தொழிலாளர்கள் போல.] ஆகவே, நாம் எங்களுடைய சக தொழிலாளர்களுக்காகவும் போராட வேண்டும். அரசாங்கம் மாறி இருந்தாலும் கூட, நமக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. அரசாங்கம் விலைகளை குறைத்துள்ளதாக கூறினாலும் விலைககள் அதிகரித்தே உள்ளன." பரமேஸ்வரி தனது வீட்டின் சேதமடைந்த கூரையையும் ஆபத்தான மின்சார கம்பிகளையும் சுட்டிக் காட்டினார். தோட்டங்களில் தீ பற்றுவது பொதுவான விடயமாகியுள்ளதால் தனது வீடும் தீ பற்றும் என அவர் அஞ்சுகின்றார்.

டீசைட் தோட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளி மனோகரன், “எனக்கு வில்பிரட் மற்றும் பாதிக்கப்பட்ட ஏனைய தொழிலாளர்களையும் தெரியும்" என்றார். “அவர்கள் நல்ல இளம் தொழிலாளர்கள், எப்போதும் முன்னணியில் இருப்பார்கள். அவர்கள் சில தனிப்பட்ட தவறுக்கு பழிவாங்கப்படவில்லை, மாறாக தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அவர்களின் பொதுவான போராட்டத்திற்கே தண்டிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகம் அடிமைகள் போல் தொழிலாளர்களை நடத்துகிறது, ஆனால் தொழிற்சங்கங்கள் எதுவும் செய்யவில்லை. அனைத்து தொழிலாளர்களும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று நான் அழைக்கின்றேன். நான் உங்கள் பிரச்சாரத்தை மிகவும் ஆதரிக்கின்றேன்.  சாமிமலையில் ஜூலை 5 நடக்கவுள்ள சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வேன். "

ஒரு இளம் தாய் நுரைத்தா, “வேலை நிறுத்தத்தில் நாங்கள் நிர்வாகத்தின் நிறைய துன்புறுத்தல்களை எதிர்கொண்டோம். ஆனால் நாம் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை" என்றார். “அனைத்து தொழிலாளர்களும் தண்டிக்கப்பட தொழிலாளர்களை பாதுகாக்க முன் வர வேண்டும். ஏழு தொழிலாளர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை. எனக்கு மிக நன்கு தெரியும். நிறுவனத்தின் விசாரணையின் போது அவர்களை பாதுகாக்க நான் சாட்சி கூறினேன். நான் உங்கள் பிரச்சாரத்தை ஆதரிப்பதோடு பிற தொழிலாளர்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களையும் வினியோகிப்பேன். கூட்டத்திற்கும் வருவேன். "

டீசைட் வேட்டையாடல் தேயிலை தோட்டத் தொழிலாளர்களது மட்டுமன்றி முழு தொழிலாள வர்க்கத்தினதும் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவது ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, டீசைட்டில் ஏழு தொழிலாளர்களை பாதுகாக்கும் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஏனைய பகுதி தொழிலாளர்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதோடு, ஞாயிற்றுக் கிழமை மதியம் 2 மணிக்கு, சாமிமலை தினேஷ் விழா மண்டபத்தில் நடக்கவுள்ள கூட்டத்திற்கு வருகை தருமாறும் அழைப்பு விடுக்கின்றது.