சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

European Union extends economic sanctions against Russia

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை நீடிக்கிறது

By Alex Lantier
19 June 2015

Use this version to printSend feedback

அனைத்து 28 ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் தூதர்களால் புரூசெல்ஸில் புதனன்று ஒப்புக்கொள்ளப்பட்ட ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார தடைகளின் ஆறு மாதகால நீட்சி, ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோவின் ஏகாதிபத்திய சக்திகளால் தொடுக்கப்படும் போர் உந்துதலில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.

உக்ரேனில் கடந்த ஜூலை மாதம் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 சுட்டுவீழ்த்தப்பட்டு இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைக்கு இடையே முதலில் கொண்டு வரப்பட்ட இத்தகைய தடையாணைகள், ரஷ்யாவின் எண்ணெய் துறைக்கு உபகரணங்களை ஏற்றுமதி செய்வதை மற்றும் ஐரோப்பிய வங்கிகளிடமிருந்து ரஷ்யா கடன் பெறுவதை வெட்டுவதை இலக்கில் கொண்டிருந்தது, மற்றும் ஐரோப்பிய ஒன்றியமே ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் முதலீட்டு பங்காளி என்ற நிலையில், அந்த தடையாணைகள் கடந்த ஆண்டு ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு வீழ்ச்சியடைவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.

நேட்டோ-ஆதரவிலான கியேவ் ஆட்சி படைகளுக்கும் மற்றும் ரஷ்ய-ஆதரவிலான பிரிவினைவாதிகளுக்கும் இடையே மின்ஸ்கில் பெப்ரவரி சமாதான உடன்படிக்கைகள் பேரம்பேசப்பட்ட பின்னரும், கிழக்கு உக்ரேனில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது என்பதை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இப்போதைய இந்த தடையாணைகளை நியாயப்படுத்துவதற்கு குறிப்பிட்டனர். ஐரோப்பிய ஒன்றிய ஆதாரநபர்கள் கூறுகையில், “யோசனை என்னவென்றால், ஒரு புதிய முடிவு எடுக்கும் முன்னதாக மின்ஸ்க் உடன்படிக்கை மீது மீளாய்வு செய்யும் நிகழ்முறைக்கு கால அவகாசம் வழங்குவதற்குவதே ஜனவரி-இறுதி வரையில் [தடையாணைகளை] நீடிக்கப்பட்டது,” என்றனர்.

“அந்த தீர்மானத்தின் மீது திங்களன்று லுக்சம்போர்கில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை மந்திரிமார்கள் இறுதி முடிவெடுப்பார்கள்,” என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கான போலாந்தின் நிரந்தர பிரதிநிதி ட்வீட்டரில் குறிப்பிட்டார்.

அவர்களது தீர்மானத்திற்கு ஒரு போலிக்காரணத்தை வழங்குவதற்காக கிழக்கு உக்ரேனிய சமீபத்திய சண்டையை தூண்டிவிட்டிருப்பதாக கியேவ் ஆட்சியை ரஷ்ய அதிகாரிகள் குற்றஞ்சாட்டி பதிலளித்தனர். “உலகெங்கிலும் போலவே உக்ரேனிலும் படைகள் இருக்கின்றன என்பது வெளிப்படையானதாகும், அவை தடையாணைகளை நீடிப்பதற்கும் மற்றும் புதிய தடையாணைகளைத் திணிப்பதற்கும் சர்வதேச சமூகத்தை வலியுறுத்தும் பொருட்டு, ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு உட்பட, பிரதான சர்வதேச நிகழ்வுகளுக்கு முன்னதாக நிலைமையை மோசமாக்க ஆர்வங்கொண்டுள்ளன,” என்று துணை வெளியுறவுத்துறை மந்திரி Alexey Meshkov தெரிவித்தார்.

இருந்தபோதினும், Meshkov அந்த தடையாணைகளுக்கு கண்டனம் தெரிவிக்கவும் இல்லை அல்லது அவற்றை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்புவிடுக்கவும் இல்லை. அவர் கூறுகையில், ரஷ்ய அதிகாரிகள் "யதார்த்தவாதிகள், எங்களின் மேற்கத்திய பங்காளிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை நாங்கள் மிக கவனமாக ஆராய்ந்து வருகிறோம்,” என்றதுடன், “ரஷ்யா தடைகள் விதிக்கவில்லை, நாங்கள் அவற்றை நீக்குமாறு யாரையும் கோரவும் இல்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ரஷ்யாவைத் தனிமைப்படுத்த, திவால்நிலைமை மற்றும் போரைக் கொண்டு அதை அச்சுறுத்த, அதை அரை-காலனித்துவ அந்தஸ்திற்கு குறைக்க மற்றும் வாஷிங்டன் தலைமையில் ஒட்டுமொத்த யுரேஷியா மீதும் நேட்டோ அதிகாரங்களின் மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்காக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிதிய மூலதனத்தின் ஒரு பரந்த உந்துதலின் பாகமாக இந்த சமீபத்திய ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகள் உள்ளன. உக்ரேனில் ரஷ்ய-ஆதரவிலான ஆட்சிக்கு எதிராக ஒரு வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரித்ததன் மூலம் கடந்த ஆண்டு நேட்டோ தொடங்கிய இந்த அரசியல்ரீதியிலான குற்றகரமான கொள்கை, ஓர் அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடன் முழுமையான போருக்கு இட்டுச் செல்ல அச்சுறுத்துகிறது.

கிழக்கு உக்ரேனில் ரஷ்ய-ஆதரவிலான பிரிவினைவாதிகளுடன் சண்டையிட்டுவரும் உக்ரேனிய படைகளுக்கு நேரடியாக ஆயுதங்கள் வழங்குவது குறித்து பெப்ரவரியில் அமெரிக்க அதிகாரிகள் விவாதித்தனர், மேலும் இந்த மாத தொடக்கத்தில் பெண்டகன் அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸிற்குள் முன்னால், வாஷிங்டன் ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்த தயாரிப்பு செய்து வருவதாக சாட்சியம் அளித்தனர்.

நிதிய அரங்கில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக உள்ள ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகளை, நேட்டோ ரஷ்யா மீது பொருளாதார போர் தொடுக்க பயன்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ரூபிள் நெருக்கடியின் போது, நிதியியல் பகுப்பாய்வாளர்கள், ஐரோப்பாவிடமிருந்து ரஷ்யா கடன்வாங்குவதை தடுப்பதன் மூலம் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளில் பெரும்பான்மை ரஷ்ய பொருளாதாரத்தை திவாலாக்க முடியுமென கணக்கிட்டனர். இந்த கொள்கையானது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினைக் கவிழ்ப்பதற்கும், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரங்களின் கட்டளைகள் அனைத்தையும் மதிக்கும் ஓர் ஆட்சியை நிறுவுவதற்கும், ரஷ்யாவின் சோவியத்திற்குப் பிந்தைய பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களை சமாதானப்படுத்தும் நோக்கில் இருப்பதாக தெரிகிறது.

அதுபோன்றவொரு ஆக்ரோஷமான கொள்கையைப் பின்பற்றுவது பரந்த மற்றும் சாத்தியமான அளவிற்கு முன்அனுமானிக்க இயலாத விளைவுகளைக் கொண்டுள்ளது. முதலில் கடந்த ஆண்டு தடையாணைகள் கொண்டு வரப்பட்டபோது, ரஷ்ய அதிகாரிகள் அவற்றை ஆட்சி மாற்றத்திற்கான ஒரு நடவடிக்கையாக கண்டித்தனர். “தடையாணைகள் [ரஷ்ய] பொருளாதாரத்தைப் பாதித்து, மக்கள் போராட்டங்களை தூண்டிவிட வேண்டும். மேற்கு, ரஷ்யாவின் கொள்கைகளை மாற்ற விரும்பவில்லை. அவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று மேற்கத்திய தலைவர்கள் பகிரங்கமாக தெரிவிக்கின்றனர்,” என்று ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.            

சேர்பியாவின் ஸ்லோபோடன் மிலோசிவிக் தொடங்கி ஈராக்கில் சதாம் ஹூசைன் மற்றும் லிபியாவில் மௌம்மர் கடாபி வரையில் ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோ நடவடிக்கையின் முந்தைய இலக்கில் இருந்தவர்கள் அனைவரும் நேட்டோ-ஆதரவிலான படைகளின் சிறைக்காவலில் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய அதிகாரிகளும் ஐயத்திற்கிடமின்றி வாஷிங்டனின் கொள்கைகளைப் போன்ற அதேமாதிரியான கொள்கைகளையே தயார் செய்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகளைப் பேணுவதென்ற தீர்மானம், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கையின் ஜனநாயக-விரோத குணாம்சம் மற்றும் பொறுப்பற்றதன்மைக்கு சான்று பகிர்கிறது. ரஷ்யாவுடன் ஒரு போரைத் தூண்டும் ஒரு கொள்கைக்கு ஐரோப்பாவில் பாரிய மக்கள் எதிர்ப்பு இருப்பதை ஒரு சமீபத்திய Pew கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டியது. முழு அளவிலான போராக தீவிரமடையும் சாத்தியக்கூறு கொண்ட ஒரு மோதலை நோக்கி ஐரோப்பிய அதிகாரிகள் சென்று கொண்டிருக்கின்றனர்.

ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்தில் சர்வதேசரீதியில் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டுவதே போர் உந்துதலை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தியாகும். மிகச் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய நாடுகளால் தொடங்கப்பட்ட இந்த போர் உந்துதலை, ரஷ்யாவின் திவாலான முதலாளித்துவ ஆட்சியினாலோ அல்லது ஐரோப்பிய ஆளும் வர்க்கத்திற்குள் ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகள் கொள்கையின் விமர்சகர்களாலோ, தடுக்க முடியாது.

மிக முக்கியமாக, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் முக்கிய பிரிவுகளே அந்த தடையாணைகளை, தன்னைத்தானே அழித்துக் கொள்வதற்குரியதாக மற்றும் அபாயகரமானதாக விமர்சித்த பின்னரும் கூட, ஐரோப்பிய ஒன்றியம் அதன் தடையாணைகளை நிறைவேற்றி வருகிறது. கடந்த ஆண்டு, ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டொர் ஓர்பன் அந்த தடையாணைகளை, “தன் காலை தானே சுடுவதைப்" போன்றதென கண்டித்தார், அதேவேளையில் முன்னாள் இத்தாலிய பிரதம மந்திரி ரோமானோ ப்ரோடி அவை "கூட்டு தற்கொலைக்கு" ஒப்பானதாகும் என்று கூறினார்.

“நான் மோசமான விளைவுகள் மீது அடித்தளமிட்ட கொள்கையை ஆதரிப்பதில்லை, தடையாணைகள் நிறுத்தப்பட வேண்டுமென நினைக்கிறேன்,” பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் ஜனவரியில் அறிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “திரு புட்டின் கிழக்கு உக்ரேனை இணைத்துக் கொள்ள விரும்பவில்லை, அது குறித்து எனக்கு நன்கு தெரியும். … திரு புட்டின் என்ன விரும்புகிறார் என்றால் நேட்டோ முகாமில் உக்ரேன் சேர்வதிலிருந்து அதை தடுக்க விரும்புகிறார். அவரது எல்லையோரங்களில் எதிரி இராணுவம் பிரசன்னம் கொண்டிருப்பதை தடுப்பதே திரு புட்டினின் சிந்தனையாக உள்ளது,” என்றார்.

ஐரோப்பா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான பொருளாதார உறவுகள் வெட்டப்படுவது என்பது மாஸ்கோ நேட்டோவிற்கு எதிராக சீனாவுடன் ஒரு கூட்டணிக்குத் திரும்பும் என்பதால் ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகள் அபாயகரமானவை என்று பலர் வாதிடுகின்றனர்.

கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, ரஷ்யா திவாலாவதிலிருந்து அதை தடுக்க அதற்கு கடன்வழங்கலை நீடிக்க இருப்பதாக சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த ஆண்டு, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (RDIF) தலைவர் Kirill Dmitriev கூறுகையில், சீனா ரஷ்யாவில் பத்து பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்வதாக தெரிவித்தார். “2-3 ஆண்டுகளுக்குள் சீனாவிலிருந்து வரும் முதலீடு சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பாவிலிருந்து வந்த முதலீட்டிற்குச் சமமாக இருக்கும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகள் குறித்த ஒரு விமர்சகரான முன்னாள் இத்தாலிய வெளியுறவுத்துறை மந்திரி Franco Frattini அறிவிக்கையில், “சீனாவுடன் கிழக்கின் கூட்டுறவைப் பலப்படுத்துவதற்கும் மற்றும் ஆசியாவில் ஒரு முக்கிய பாத்திரம் வகிப்பதற்கும் மற்றும் ஐரோப்பா பொருத்தமற்றது என்று முடிவெடுப்பதற்கும், ரஷ்யா கிழக்கை நோக்கி திரும்பக்கூடும் என்று நான் கவலையுறுகிறேன். இது தான் எனது கவலை, அத்தோடு இந்த கொள்கை ஐரோப்பிய நலன்களுக்கு எதிரானது என்று சொல்வதற்கு மற்றொரு வாதமும் ஆகும்” என்றார்.

எவ்வாறிருந்தபோதினும், புதனன்று, இந்த அரசாங்கங்களின் பிரதிநிதிகள் அனைவரும் ரஷ்யாவிற்கு எதிராக ஓர் ஆக்ரோஷமான நிலைப்பாட்டுக்கு அழுத்தமளித்துள்ள அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிரிட்டனால் முன்னெடுக்கப்பட்ட போக்கிற்குக் கட்டுப்பட்டு இருந்தனர்.

உண்மையில் ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகளை விமர்சித்த இத்தாலிய மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் அவர்களின் அமெரிக்க, ஜேர்மனிய மற்றும் பிரிட்டிஷ் சமதரப்பினர்களைப் போலவே ஆதாரவளங்கள் மற்றும் சந்தைகளை கைப்பற்ற அதே ஏகாதிபத்திய பிடியில் பங்குபற்றி வருகின்றனர்.