சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

Obama-Putin meeting highlights crisis of US policy in Syria

ஒபாமா-புட்டின் சந்திப்பு சிரியாவில் அமெரிக்க கொள்கையின் நெருக்கடியை உயர்த்திக் காட்டுகிறது

By Barry Grey
30 September 2015

Use this version to printSend feedback

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கும் இடையே திங்களன்று 90 நிமிடங்கள் நடந்த சந்திப்பு, சிரியாவிலும் பரந்த மத்திய கிழக்கிலும் அமெரிக்க கொள்கையினது கூர்மையான நெருக்கடியை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது. இரண்டாண்டுகாலமாக அதுபோன்ற சந்திப்புகள் கிடையாது என்ற நிலைப்பாட்டைக் கைவிட்டு, சிரியாவில் ஓர் அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு வெள்ளை மாளிகை ரஷ்ய தலைவரைச் சந்திக்க அழைத்திருந்தது என்ற உண்மையே, பேரழிவுக்குள்ளான அந்நாட்டில் வாஷிங்டன் அதன் இரத்தந்தோய்ந்த, நான்காண்டு கால ஆட்சி மாற்றத்திற்கான போரில் கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.

அச்சந்திப்பிற்குப் பின்னர், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 70ஆம் ஆண்டுகூட்டத்தின் முன்னால் சீற்றமான உரைகள் பரிமாறப்பட்டன. ஒபாமா அவரது உரையில், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் ஏனைய இடங்களில் வாஷிங்டன் நடத்திய ஆக்கிரமிப்பு போர்கள் மற்றும் இராணுவ தலையீடுகளைச் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதற்கான மற்றும் இராஜாங்கரீதியிலான சமாதான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளாக சித்தரிக்க முயன்றார். உக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளையும் மற்றும் சிரியாவில் பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு ரஷ்யாவின் ஆதரவையும் சுட்டிக்காட்டி, ஒபாமா, புட்டின் அரசாங்கத்தை ஒரு சர்வதேச சட்டத்தை மீறும் அரசாங்கமாக மற்றும் உலக சமாதானத்தின் அச்சுறுத்தலாக சித்தரித்தார்.

அவரது பங்கிற்கு புட்டின், ஆட்சி மாற்றத்திற்கான வாஷிங்டன் போர்களது பேரழிவுகரமான விளைவுகள் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டை ISIS (ISIL என்றும் அறியப்படும், சிரியா மற்றும் ஈராக்கிற்கான இஸ்லாமிய அரசு) போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கான ஒரு புகலிடமாக மாற்றியிருந்ததைச் சுட்டிக்காட்டினார். அவர் ISIS க்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாக அசாத் ஆட்சியைப் பாதுகாத்தார், ISISக்கு எதிராக சண்டையிட ஈரான், சிரியா அத்துடன் மேற்கத்திய சக்திகள் மற்றும் அவர்களது மத்திய கிழக்கு கூட்டாளிகளை உள்ளடக்கிய ஒரு புதிய கூட்டணியை அவர் பரிந்துரைத்தார்.

ரஷ்யாவினால் தோலுரித்துக்காட்டப்பட்டதுடன், பின்னர் ஒபாமாவே அவரது உரையில் அதை நோக்கி திரும்பி, சிரியாவின் கதியைக் குறித்து அசாத்தின் இரண்டு பிரதான கூட்டாளிகளான ரஷ்யா மற்றும் ஈரான் இரண்டு நாடுகளோடும் பேச்சுவார்த்தை நடத்த அவர் தயாராக இருப்பதை அறிவித்தார் என்ற இந்த உண்மையில் அல்லாடிகொண்டிருக்கும் அமெரிக்க கொள்கையின் முரண்பாடுகளும் பொதுவான குழப்பங்களும் பிரதிபலித்தன. அவரது நிர்வாகத்தின் கொள்கையில் ஒரு தந்திரோபாய திருப்பத்தை வெளிப்படுத்தும் விதமாக, அசாத்தை வெளியேற்றும் ஏதேனும் தீர்மானத்தை உள்ளடக்க வேண்டியிருந்தால் தற்போதைய ஜனாதிபதி [அசாத்] ஒரு குறிப்பிட்ட இடைமருவு காலக்கட்டத்திற்கு அதிகாரத்தில் இருக்கலாம், மற்றும் அந்த பாதிஸ்ட் ஆட்சியின் கூறுபாடுகளை அதற்கடுத்து வரும் அரசாங்கத்தில் உள்ளடக்கி கொள்ளலாம் என்பதை ஒபாமா சுட்டிக்காட்டினார்.

இக்கொள்கை மாற்றம் அப்பிராந்தியத்தில் அமெரிக்க செல்வாக்கு பொதுவாக பலவீனமடைந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது என்பதில் எந்த இரகசியமும் இல்லை. ஈராக் மற்றும் சிரியாவில் அவ்மைப்பை கணிசமானளவிற்கு பலவீனப்படுத்துவதற்காக ISISக்கு எதிராக அவ்விரு நாடுகளிலும், இப்போது ஓராண்டுக்கும் அதிகமாக நடத்தப்பட்டு வருகிற அமெரிக்க-தலைமையிலான போரின் தோல்வியையே தொடர்ச்சியான சமீபத்திய சம்பவங்கள் அடிக்கோடிடுகின்றன. ISIS-எதிர்ப்பு நடவடிக்கைக்கான உயர்மட்ட அமெரிக்க அதிகாரி ஜெனரல் ஜோன் அலென் விரைவிலேயே அவரது பதவியை இராஜினாமா செய்யவிருப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் ஜெனரல் லாய்ட் ஆஸ்டின் காங்கிரஸிற்கு வழங்கிய விளக்கவுரை வந்தது, அதில் அத்தளபதி சிரியாவில் சண்டையிடுவதற்காக இஸ்லாமியர்-அல்லாத அமெரிக்க பினாமி படையை நியமிக்கும் மற்றும் பயிற்றுவிக்கும் $500 மில்லியன் செலவில் தொடங்கிய பெண்டகனின் திட்டம் ஓராண்டுக்குப் பின்னர், அந்நாட்டில் மொத்தம் "நான்கு அல்லது ஐந்து" இராணுவத்தினரை மட்டுமே நிலைநிறுத்த முடிந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார்.

அமெரிக்காவினால் இதுவரையில் பயிற்சியளிக்கப்பட்ட படைகளில் சில, சிரியாவிற்குள் நுழைந்த உடனேயே அல் கொய்தா உடன் இணைப்பு பெற்ற அல்-நுஸ்ரா முன்னணியால் அழிக்கப்பட்டன, ஏனையவை அசாத்-எதிர்ப்பு இஸ்லாமிய போராளிகள் குழுக்களாக குறுகி போயின, இன்னும் ஏனையவை பாதுகாப்பாக வெளியேறுவதற்கு பிரதியீடாக அவர்களது ஆயுதங்களைக் கைத்துறந்தன.

ரஷ்யா அசாத்திற்கான அதன் இராணுவ ஆதரவை விரிவாக்கியதன் மூலமாக சிரியாவில் அதன் நிலைப்பாட்டை பலப்படுத்தி உள்ளது. வாஷிங்டனால் தடுக்கவியலாத ஓர் அபிவிருத்தியாக, அசாத்தினது அலாவைட் ஷியைட் ஆட்சியின் பலமான பிடியில் நீண்டகாலமாக இருந்துவருகிற வடமேற்கு சிரியாவில் ரஷ்யா ஒரு புதிய விமானத்தளத்தை அமைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ஐ.நா. சபையில் ஒபாமாவின் உரைக்கு முந்தைய நாள், அமெரிக்க ஆதரவிலான ஈராக்கிய அரசாங்கம் முன்னரே அமெரிக்க அரசாங்கத்திற்கு தகவல் அளிக்காமல், சிரியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் உளவுத்தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தது. திங்களன்று ஈராக்கிய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ரஷ்ய உளவுத்துறை விமானங்கள் அந்நாட்டின் மீது பறப்பதைப் பாக்தாத் வரவேற்குமென தெரிவித்தார்.

ஒபாமா மற்றும் புட்டினுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில், அசாத்தின் எதிர்காலம் குறித்த முக்கிய பிரச்சினை மீது எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்பதோடு, இருதரப்பும் அவ்விவாதம் குறித்து எந்த திடமான விபரங்களும் வழங்கவில்லை என்றபோதினும், இரண்டு அரசாங்கங்களுமே அச்சந்திப்பை ஒரு சாதகமான முன்னேற்றமாக சித்தரிக்க முனைந்தன. அச்சந்திப்பு "பொதுவாக ஆக்கப்பூர்வமாக" இருந்ததாக செவ்வாயன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி MSNBC இன் “Morning Joe” நிகழ்ச்சிக்குத் தெரிவித்தார்.

ஒபாமாவின் சிரியா கொள்கை மீதான அமெரிக்க விமர்சனங்களை "முற்றிலும் தவறென்று" குறிப்பிட்ட கெர்ரி, ஒற்றுமையான மதசார்பற்ற சிரியாவின் அவசியம், ஒரு "திட்டமிட்ட" அரசு அதிகார "மாற்றம்", மற்றும் ISIS ஐ தோற்கடிப்பது ஆகியவை உள்ளடங்கலாக, அவ்விரு ஜனாதிபதிகளும் "அடிப்படை கோட்பாடுகளில்" உடன்பட்டிருந்ததாக தெரிவித்தார். அமெரிக்க ஆதரவிலான "கிளர்ச்சியாளர்கள்" மீது "பீப்பாய் குண்டுகள்" (barrel bombs) வீசுவதை நிறுத்த அசாத்திற்கு அழுத்தமளித்தால் வாஷிங்டன் ரஷ்யாவிற்கு ஊக்கச்சலுகைகள் வழங்க தயாராக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ரஷ்யா மீது அமெரிக்காவினால் திணிக்கப்பட்ட கடுமையான தடைகள் சிலவற்றைக் குறைப்பது அந்த ஊக்கச்சலுகைகளில் உள்ளடங்கி இருக்கலாமென பத்திரிகை கருத்துரைகள் குறிப்பிட்டன, அத்தடைகள் கிழக்கு உக்ரேனில் ரஷ்ய-ஆதரவிலான பிரிவினைவாதிகளுக்கு அது ஆதரவளித்தமைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக கொண்டு வரப்பட்டிருந்தன.

ஓர் அரசியல் தீர்வுக்காக தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, அவற்றில் அசாத்தைப் பதவியிலிருந்து நீக்குவதும் உள்ளடங்கி இருக்கலாமென அறிவுறுத்தி நியூ யோர்க் டைம்ஸ் செவ்வாயன்று அறிவிக்கையில்: “அந்த இடைமருவு காலகட்டம் எவ்வளவு காலத்திற்கு இருக்கும், திரு. அசாத்தின் நெருங்கிய வட்டாரங்களில் எத்தனை பேர் வெளியேற வேண்டியிருக்கும் என்பது குறித்து அங்கே ஆழ்ந்த விவாதங்கள் நடந்து வருவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் இராஜாங்க அதிகாரிகள் பலர் தெரிவித்தனர்" என்றது குறிப்பிட்டது.

இலக்கில் வைக்கப்பட்ட ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் வாஷிங்டனின் நடவடிக்கைகளுக்கும், பின்பற்றப்பட்டுவரும் பொதுவான போக்கின் மீது அமெரிக்க வெளியுறவு கொள்கை மற்றும் இராணுவ-உளவுத்துறை ஸ்தாபகத்திற்குள் நிலவும் மூர்க்கமான பிளவுகளுக்கும் இடையே பாரிய முரண்பாடுகள் இருப்பதையே, மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கையின் சகல திருப்பங்களிலும் மாற்றங்களிலும்  பிரதிபலிக்கின்றன. இம்முரண்பாடுகளில் எதுவுமே அமெரிக்க மக்களுக்கு விளக்கப்படவில்லை. அவர்களால் கூறப்பட்ட நோக்கங்களை எட்டுவதற்கான அமெரிக்க நடவடிக்கைகளில் ஏற்பட்ட வெளிப்படையான தோல்வியைக் குறித்தோ அல்லது அப்பிராந்திய மக்கள் மீது சுமத்தப்பட்ட பேரழிவுகளுக்கோ அங்கே எந்த கணக்குவழக்கும் இல்லை.

அதற்கு மாறாக, அமெரிக்க ஆளும் உயரடுக்கு ஒரு போர் மாற்றி ஒரு போருக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது, எந்தவிதமான தற்காலிக பின்வாங்கலும், வெறுமனே, அடுத்த இராணுவ வன்முறை வெடிப்பதற்கு முந்தைய ஒரு சிறிய இடைவெளியாக தான் இருக்கும். இதையே, சிரியா குறித்து அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஈரானுக்கு இடையே ஏதேனும் உடன்படிக்கை எட்டப்பட்டால் அதற்கும் கூறலாம்.

தெஹ்ரானுக்கு எதிரான ஒரு சாத்தியமான ஆட்சி மாற்ற போருக்கான தயாரிப்பில் அதன் ஒரே அரபு கூட்டாளியை ஈரான் இழக்குமாறு செய்யும் ஒரு பரந்த திட்டத்தின் பாகமாக வடிவமைக்கப்பட்ட, சிரியாவில் அமெரிக்காவினால் தூண்டிவிடப்பட்ட உள்நாட்டு பிரிவினைவாத போரில், இன்றைய நாள் வரையில் சுமார் 300,000 பேர் உயிரிழந்துள்ளனர், 2011க்கு முந்தைய அந்நாட்டு மக்கள்தொகையில் அண்மித்தளவில் பாதி பேர், 11 மில்லியன் சிரியர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சிரியா, ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகளில் அமெரிக்க-தலைமையிலான இராணுவ நடவடிக்கைகளால் வெள்ளமென அகதிகள் வருவது, ஐரோப்பாவிற்குள் உள்பதட்டங்களைத் தூண்டிவிட்டு, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் கொடூரமான முகத்தை அம்பலப்படுத்தி, அங்கேயொரு பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. சிரியாவில் அமெரிக்க கொள்கை மீதும் மற்றும் பரந்த அரசியல் தீர்விற்கான ரஷ்யாவின் அழைப்பை ஊக்குவித்ததன் மீதும் ஜேர்மன் அரசாங்கத்தின் பகிரங்க அதிருப்தியில், அகதிகள் நெருக்கடியும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. கடந்த வாரம் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அதுபோன்ற பேச்சுவார்த்தைகளில் அசாத்தையே உள்ளடக்குவதற்கு அழைப்புவிடுத்தார்.

அமெரிக்காவின் சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராகவும் உலகளாவிய மேலாதிக்கத்திற்காகவும் அப்பிராந்தியத்தின் எண்ணெய் வளங்கள், புவிசார் மூலோபாய ஆதாயங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான ஓர் அப்பட்டமான உந்துதலால் ஊக்குவிக்கப்பட்ட மத்திய கிழக்கு அமெரிக்க போர்களின் தர்க்கம், தவிர்க்கவியலாதவாறு இரண்டு அணுஆயுத சக்திகளான ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான போருக்கு இட்டுச் செல்கிறது.

அங்கே முரண்பாடுகளுக்குள் முரண்பாடுகளாக உள்ளன. நேற்றைய அசுரன் புட்டின் திடீரென இன்று சமாதானத்திற்கான சாத்தியமான பங்காளியாகிவிடுகிறார். ISIS இல் உள்ளடங்கியுள்ள இதே இன்றியமையாத ஜிஹாதிஸ்ட் பயங்கரவாத சக்திகள் தான், லிபியாவில் மதசார்பற்ற மௌம்மர் கடாபியைப் பதவியிலிருந்து தூக்கியெறிந்து படுகொலை செய்வதில், அத்துடன் சிரியாவில் அந்த மதசார்பற்ற ஆட்சிக்கு எதிரான ஆட்சி-மாற்ற போரில், பினாமி படைகளாக சேவையாற்றுவதற்காக சிஐஏ, வாஷிங்டனின் சுன்னி வளைகுடா கூட்டாளிகள் (சவூதி அரேபியா, கட்டார்) மற்றும் துருக்கி ஆகியவற்றால் நிதியுதவி வழங்கப்பட்டு, ஆயுதம்-தரிக்க செய்யப்பட்டன. நேற்றைய துஷ்ட அரசான ஈரான், இன்று அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு சாத்தியமான உடைமையாக ஆக உள்ளது. ஈரான் பின்னால் அணிசேர்ந்துள்ள ஒரு ஷியைட் பிரிவினைவாத ஈராக்கிய ஆட்சியை அமெரிக்கா ஆதரித்து வருகிறது, அதேவேளையில் யேமனில் நடத்திவரும் போரில் அது சுன்னி சவூதி அரேபியாவுடனும் மற்றும் சிரியாவில் ஷியைட் அசாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியிலும் ஒத்துழைத்து வருகிறது.

பெரிதும் இத்தகைய அருவருக்கத்தக்க போர்கள் அனைத்தையும் எதிர்க்கின்ற மக்களுடன், இவற்றில் எதுவுமே, அமெரிக்க அரசாங்கத்தாலோ அல்லது ஊடகங்களாலோ விவாதிக்கப்படுவதே இல்லை. நிராதரவான மக்களுக்கு எதிராக படுகொலை அணுமுறைகள் மற்றும் போர் நோக்கங்களின் சூறையாடும் குணாம்சமுமே அமெரிக்க கொள்கையில் மாறாத உட்கூறுகளாக உள்ளன.

அதேவேளையில் ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கும் எதிரான போருக்கு திடமாக பொறுப்பேற்றுள்ள அரசியல் மற்றும் பாதுகாப்பு ஸ்தாபகத்தின் கணிசமான பிரிவுகள் ஒபாமா நிர்வாகத்தைச் சுற்றி வளைத்துள்ளன. இந்த கன்னைகள் ஈரானுடனான அணுஆயுத உடன்படிக்கையையோ, அல்லது வேறெந்த உடன்படிக்கையையோ சமரசமின்றி எதிர்க்கின்றன மற்றும் ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைகளை தேசத்துரோகத்திற்கு நெருக்கமான நடவடிக்கைகளாக பார்க்கின்றன. அதுபோன்ற பிளவுகள் நிர்வாகத்திற்குள்ளேயும் பிரதிபலிக்கின்றன என்பதில் ஐயமில்லை.

புட்டினைச் சந்திப்பதென்ற ஒபாவின் முடிவை "அவசியமற்றது என்பதைப் போலவே தவறான வழிகாட்டுதலும் ஆகும்" என்று கூறி திங்களன்று குடியரசு செனட்டர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மெக்கெயின் ஓர் அறிக்கை வெளியிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “அவரது சர்வதேச தனிமைப்படுத்தலை உடைப்பதென்பது, அமெரிக்க கொள்கையைப் பலவீனப்படுத்துவதுடன், உக்ரேனைத் துண்டாடுவதிலிருந்து சிரியாவில் பஷர் அசாத்திற்கு முட்டுக்கொடுப்பது வரையில் ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் புட்டினின் நடத்தையை சட்டபூர்வமாக்குவதால், அது புட்டினின் கரங்களில் சரியாக விளையாடுகிறது” என்றார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாயன்று தலையங்கத்தில் எழுதியது: “உலகம் அதிகரித்தளவில் சீர்குலைவதற்கு அவர் விட்டுக்கொடுக்கின்ற வேளையில், அமெரிக்காவினது பின்வாங்கும் கொள்கை உருவாக்கும் ஒரு வெற்றிடத்தைத் தான்தோன்றிகள் நிரப்புவதற்கு திரு. ஒபாமா இப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்.”

ஈராக்கின் முன்னாள் தளபதியும் மற்றும் முன்னாள்-சிஐஏ இயக்குனருமான டேவிட் பெட்ரீயஸ், நிர்வாகத்தின் சிரியா கொள்கையைக் கண்டிக்க கடந்த வாரம் காங்கிரஸின் முன் தோன்றினார். அவர் அமெரிக்க விமானங்கள் மற்றும் துருப்புகளின் பொலிஸ் வேலைக்கு சிரியாவில் "பாதுகாப்பான புகலிடங்களை" உருவாக்க அழைப்புவிடுத்ததுடன், அசாத் ஆட்சியின் விமானப்படை தளங்கள் மற்றும் விமான ஓடுதளங்களை அழிப்பதன் மூலம் அது பீப்பாய் குண்டுகள் வீசுவதைத் தடுக்குமாறு அமெரிக்க இராணுவத்தை வலியுறுத்தினார்—இது ஏறத்தாழ தவிர்க்கவியலாதவாறு ரஷ்ய படைகள் மீதும் மற்றும் அந்நாட்டின் இராணுவ தளங்கள் மீதும் குண்டுவீசுவதை உள்ளடக்கி இருக்கும்.

அதுபோன்ற முறையீடுகள் குடியரசு கட்சியின் பின்னால் அணிதிரண்டுள்ள கூறுபாடுகளால் மட்டும் உயர்த்தப்படவில்லை. ஜனநாயக கட்சியுடன் தொடர்புபட்ட புரூகிங்ஸ் பயிலகத்திற்கு, “மேற்கு, சிரியாவின் நரகத்திற்குள் நடந்து  கொண்டிருக்கிறது" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் சார்லஸ் லிஸ்டெர் திங்களன்று எழுதுகையில், “துரதிருஷ்டவசமாக சிரியா மீதான அமெரிக்க கொள்கை எப்போதும் இல்லாதளவிற்கு குறைந்திருக்கையில், ரஷ்யாவின் இந்த தலையீடு வருகிறது... அத்திட்டம் பேரழிவுகரமாக தோல்வியடைந்தது என்று முத்திரை குத்துவதே அறிவார்ந்த மதிப்பீடாக இருக்கும்,” என்று அறிவித்தார்.

ரஷ்யாவுடன் அதிகரித்துவரும் ஓர் இராணுவ மோதல் அபாயம், நேட்டோவின் உயர்மட்ட தளபதி ஜெனரல் பிலிப் ப்ரீட்லவ் ஜேர்மன் இராணுவ நிதியகத்தில் வழங்கிய ஒரு சிலிர்க்கவைக்கும் உரையில் பிரதிபலித்தது. வடமேற்கு சிரியாவில் "செல்லக்கூடாத மண்டல குமிழியை" (no-go zone bubble) ரஷ்யா உருவாக்கி வருகிறது என்று எச்சரித்த அந்த நேட்டோ தளபதி, “இந்த அதிநவீன விமான பாதுகாப்பு தகைமைகள் ISIL க்காக இல்லை" என்று கூறியதுடன், நேட்டோ "[அதுபோன்ற செல்லக்கூடாத குமிழிகளை] விதிவிலக்கான இடங்கள் என்று விட்டுவிடாமல் எதிர்க்க" வேண்டுமென அறிவித்தார், அதாவது "அக்குமிழியை உடைக்க" கூடியளவிற்குப் படைகளை நிரப்ப வேண்டுமென இது அர்த்தப்படுகிறது.