சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The cult of Helmut Schmidt

ஹெல்மூட் ஷ்மித் ஐ சுற்றிய துதிபாடல்

By Peter Schwarz
13 November 2015

Use this version to printSend feedback

நவம்பர் 10 அன்று ஹெல்மூட் ஷ்மித் மரணமடைந்த செய்தி வந்துசேர்ந்த அடுத்தகணமே ஜேர்மன் ஊடகங்கள், டிசம்பர் 23 வந்தால் 97 வயதை எட்டியிருந்திருக்கக் கூடிய அந்த முன்னாள் சான்சலருக்கு மிதமிஞ்சிய புகழுரைகளை கொட்டத் தொடங்கின. நூற்றாண்டின் ஒரு வழிகாட்டி என்றும், ஒரு உலகப் பொருளாதாரவாதி என்றும், ஒரு வழிகாட்டும் ஆன்மா என்றும் இன்னும் ஒரு மெய்யியலாளர் என்றும் கூட அவர் புகழ்பாடப்பட்டார்.


ஹெல்மூட்
ஷ்மித்

33 ஆண்டுகளுக்கு முன்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றின் பின்னர் பதவியில் இருந்து அகன்ற இந்த முன்னாள் சான்சலர் மீதான ஆர்வம், அவரது சொந்த அரசியல் சாதனைகளைக் காட்டிலும் இப்போதைய அரசாங்கத்தில் இருக்கும் மனிதர்கள் மீதான விரக்தியில் இருந்து தான் அதிகமாய் ஊற்றெடுத்திருந்தது. அவர் இறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டிருந்த ஷ்மித் இன் புனிதப்படுத்தலானது, பொருளாதார அதிர்ச்சிகள் ஊடாகவும் சர்வதேச நெருக்கடிகள் ஊடாகவும், மக்கள் அபிப்பிராயத்தை ஓரங்கட்டி விட்டு இரும்புக் கரம் கொண்டு நாட்டிற்குத் தலைமை கொடுக்கக் கூடிய ஒரு அதிரடி மனிதர் வேண்டும் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.

சமூக ஜனநாயகக் கட்சியில் -இக்கட்சியில் ஷ்மித் 1946 இல் சேர்ந்தார், தனது மரணம் வரையிலும் இக்கட்சிக்கே விசுவாசமாய் இருந்தார்- அவர் எப்போதும் அதி வலதுசாரியின் பகுதியாக இருந்திருந்தார். சமூக ஜனநாயக அளவீடுகளில் யோசித்தாலும் கூட, சர்வதேசரீதியாய் வலது-சாரியாக கருதப்படுகின்ற ஒரு கட்சியில் இதன் அர்த்தம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ஷ்மித் ஒருபோதும் ஒரு சோசலிஸ்டாக இருந்தது கிடையாது, மிக வரம்புக்குட்பட்ட அர்த்தத்தில் தான் அவரை ஜனநாயகவாதி என்றும் கூட கூற முடியும். அவர் SPD இல் இணைந்ததன் காரணம், அது ஒரு முதலாளித்துவமில்லாத உலகிற்கான இலட்சியத்தை (vision) முன்வைத்தது என்பதனால் அல்ல, மாறாக ஒழுங்கு மற்றும்  கட்டுப்பாடு குறித்த தனது சிந்தனைகளை சாதிப்பதற்கு, முன்னாள் நாஜிக்களுடன் பின்னல் கொண்டிருந்த போருக்குப் பிந்தைய கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி (FPD) ஆகியவற்றைக் காட்டிலும் இது கூடுதல் பொருத்தமாய் தெரிந்தது என்ற காரணத்தினால்தான். தூரப்பார்வைகள் (visions) கொண்டவர்கள் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் என்பது அவரது பிரபலமான வசனங்களில் ஒன்று.

தத்துவார்த்தரீதியாக, அவர் தனக்கான அடித்தளத்தை காரல் மார்க்ஸிடம் இருந்தோ அல்லது அகுஸ்ட் பேபலிடம் இருந்தோ அல்லது ஃபெர்டினாண்ட் லஸ்ஸாலிடம் இருந்தோ எடுத்துக் கொள்ளவில்லை, மாறாக மக்ஸ் வேபர் மற்றும் கார்ல் பொப்பரிடம் இருந்தே எடுத்துக் கொண்டார். தனது குறுகிய-சிந்தனை கொண்ட நடைமுறைவாதம் குறித்து தன் வாழ்நாள் முழுக்க அவர் பெருமிதம் கொண்டிருந்தார். உலகப் பிரச்சினைகள் பெருகிக் கொண்டிருப்பதான ஒரு காலத்தில், அத்தியாவசியங்களை யதார்த்தமாகவும் நிதானமாகவும் அணுகுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம், மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைக்கிறோம் என்று தான் 1974 இல் சான்சலராக அவரது ஆரம்ப உரையின் தொடக்கம் அமைந்திருந்தது.

ஷ்மித் அடிக்கடி குறிப்பிட்ட பகுத்தறிவில், ஒரு சிக்கலான யதார்த்தத்திற்குள் புத்திஜீவித்தனத்துடன் ஊடுருவிப் பார்த்து அதற்கேற்ற தொலைநோக்குடனான நடவடிக்கையை மேற்கொள்வதைப் புரிந்து வைத்திருக்கவில்லை, மாறாக பொதுப் புத்தியின், அதாவது நிலவும் தப்பெண்ணங்களின் அடிப்படையில் உடனடிப் பிரச்சினைகளுக்கு நடைமுறைரீதியான பதிலளிப்பதையே கருதினார். அவர் ஒரு நடவடிக்கையாளர், ஒரு நடைமுறைவாதி; நீண்ட-கால பொருளாதார அல்லது சமூக அபிவிருத்திகளை முன்கணித்து அதனை தனது முடிவெடுக்கும் நிகழ்முறைக்குள் கொண்டுவந்தவரல்ல என்று Spiegel Online சுருங்க விவரித்தது.

இராணுவ அதிகாரி

ஹிட்லரின் இராணுவத்தில் (Wehrmacht) சுமார் எட்டு ஆண்டு காலம் அவர் ஆற்றிய சேவையின் மூலமாக ஷ்மித் இன் ஆளுமை குறிப்பிடப்பட்டது. 1937 இல் அவரது 19வது வயதில் அவர் அழைக்கப்பட்டார், அதன்பின் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இரண்டாம் உலகப் போர் வெடித்ததை ஒட்டி மீண்டும் அவர் பணிக்கு அழைத்துக் கொள்ளப்பட்டார். இராணுவத்திலான அவரது காலத்தில் பெரும்பகுதி அமைச்சகங்களில் தான் செலவானது, ஆனால் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளது நடவடிக்கைகளிலும் அவர் பங்கெடுத்திருந்தார். ரஷ்யாவில், அவர் லெனின்கிராட் முற்றுகையில் பங்குபெற்று Iron Cross 2nd Class பதக்கம் பெற்றிருந்தார். போரின் முடிவில் அவர் பிரிட்டிஷாரிடம் கைதியாக சிறைப்பட்டிருந்த சமயத்தில், 26 வயது கொண்ட முதல் லெப்டினெண்ட் பதவியில் இருந்தார்.

தான் ஒரு விசுவாசமான அதிகாரியாக இருந்திருந்த போதும் ஒருபோதும் நாஜியாக இருந்ததில்லை என்று ஷ்மித் எப்போதும் வலியுறுத்தியிருந்தார். மற்ற விடயங்களுடன் சேர்த்து, குடும்ப காரணங்களும் இதில் இருந்தது. அவரது அப்பா ஒரு யூத வங்கியாளருக்கு முறைதவறிப் பிறந்த பிள்ளையாக இருந்தார். நாஜி சர்வாதிகாரத்தின் போது குடும்பம் அதனை மறைத்திருந்தது. ஆனால் Göring குறித்த ஒரு பரிகசிப்பான கருத்தின் காரணத்தால் போரின் முடிவின் சமயத்தில் அவர் பல கடினநிலைகளுக்கு முகம்கொடுத்த நேர்ந்தாலும் கூட, ஷ்மித் நாஜிக்களை எதிரியாக பார்க்கவில்லை.

போர் மற்றும் இராணுவத்தில் அவர் இருந்த காலம், இவற்றை விட வேறெதுவும் ஹெல்மூட் ஷ்மித் இன் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தியிருக்க முடியாது என்றே சொல்லலாம் என்று Süddeutsche Zeitung ஆசிரியரான Kurt Kister எழுதினார். அவரது எதனைப்பற்றியும் கவலைப்படாத நடத்தை, அவரது சகிப்பின்மை, மற்றும் அவரது இராணுவத்தில் போன்ற எதேச்சாதிகார பாணி தலைமை ஆகியவற்றுக்கு இதுவே காரணமாக இருந்திருக்க வேண்டும். அதிகாரியாக தனது முதல் வேலையை தொடங்கிய அவர் தனது வாழ்க்கை முழுவதிலும் அதிகாரியாக வாழ்ந்திருந்தார்.

சர்வதேச அளவில், ஷ்மித் எப்போதும் எதேச்சாதிகார அரசியல்வாதிகள் மீது பிரியம் கொண்டிருந்தார். அமெரிக்க வெளியுறவுச் செயலராக இருந்தவரும் சிலியில் நடந்த இரத்தம் தோய்ந்த இராணுவக் கவிழ்ப்பின் சூத்திரதாரியுமான ஹென்றி கிஸிங்கருக்கும், அத்துடன் சிங்கப்பூரை 30 ஆண்டுகளுக்கு இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்திருந்த லீ குவான் யூவுக்கும் 40 ஆண்டுகளுக்கு அவர் ஒரு நெருக்கமான நண்பராக இருந்திருந்தார். 2012 மே மாதத்தில் தனது நண்பர் ஹாரி லீ க்கு இறுதி மரியாதை செய்ய சிங்கப்பூருக்கு ஷ்மித் சிரமமெடுத்து ஒரு பயணம் மேற்கொண்டார்.

Bundestag க்கு (கூட்டரசாங்க நாடாளுமன்றம்) ஷ்மித் 1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயினும் 1962 இல் ஒரு அழிவுகரமான புயல் ஹம்பேர்க் நகரைத் தாக்கி நகரின் பெரும்பகுதியை நீருக்குள் மூழ்கடித்திருந்த ஒரு சமயத்தில்தான் தேசிய அளவில் அவர் புகழ்வெளிச்சத்திற்கு வந்தார். Hanseatic நகரின் அரசாங்கத்தில் போலிசுக்குப் பொறுப்பானவராக இருந்த ஷ்மித் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தார். ஹெலிகாப்டர்கள், படகுகள் மற்றும் 20,000க்கும் அதிகமான படையினர்களின் உதவி கேட்பதற்கு நேட்டோ மற்றும் ஜேர்மன் இராணுவத்தில் தனக்கு இருந்த தொடர்புகளை அவர் பயன்படுத்தினார். முடிவில், 347 பேர் வெள்ளத்தில் இறந்திருந்தனர். ஆரம்பத்தில் 10,000 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

அவசரகால நிலையிலும் இராணுவத்தை உள்நாட்டு சேவைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்காத சட்டங்களையும் அரசியல் யாப்பையும் மறுதலிப்பதற்கான தனது விருப்பத்தை அதன்பின்னும் கூட ஷ்மித் காட்டியிருந்தார். அந்த நாட்களில் நான் அரசியல் யாப்பை பார்க்கவேயில்லை என்று அவர் பின்னாளில் கருத்துத் தெரிவித்தார். நான் படையினர்களுக்கு பொறுப்பாக அமர்த்தப்படவில்லை, அவர்களை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தேன்.

நாடாளுமன்ற கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்

1966 ஆம் ஆண்டில் ஷ்மித் முதன்முதலாய் கூட்டரசாங்க மட்டத்தில் ஒரு முக்கியமான அரசியல் பாத்திரத்தை வகித்தார். CDU/CSU மற்றும் SPD இன் மகா கூட்டணியில் SPD இன் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக அவர் அமர்ந்தார். ஆரம்பம் முதலே, இந்த மகா கூட்டணி வன்முறையான சமூக எழுச்சிகளுக்கு முகம்கொடுத்திருந்தது. 1963 இல் பாடன் வூட்டம்பேர்க் (Baden-Württemberg) இல் பொறியியல் தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்திற்கு நூறாயிரக்கணக்கிலானோருக்கு வேலை தர மறுத்ததன் மூலம் முதலாளிகள் பதிலளித்தனர். ரூர் (Ruhr) பகுதியில், சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கங்கள் மூடப்படுவதற்கு எதிராகப் போராடினார்கள். மாணவர்களிடையே தீவிரமயமாகலின் முதல் அறிகுறிகள் தென்படத் தொடங்கின.

இந்த சூழ்நிலைகளின் கீழ் தான், போருக்குப் பின்னர் கூட்டரசாங்க குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அரசாங்கத்தில் SPD சேர்த்துக் கொள்ளப்பட்டது. NSDAP (நாஜிக் கட்சி) இன் முன்னாள் உறுப்பினரும் CDU இன் சான்சலருமான கூர்ட் கியோர்க் கிஸிங்கர் (Kurt Georg Kiesinger) இன் கீழ் SPD இன் தலைவர் வில்லி பிராண்ட் (Willy Brandt) துணை சான்சலராகவும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் ஆனார். அடிப்படை ஜனநாயக உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி, பெரும் சர்ச்சைக்குரிய அவசரகாலநிலைச் சட்டங்களை இயற்றுவதுதான் மகா கூட்டணியின் பிரதான பணியாக இருந்தது.

1967-68 மாணவர் கலகங்களின் காரணத்தால் கடுமையான சமூக அழுத்தத்தின் கீழ் இருந்த SPD இன் நாடாளுமன்றப் பிரதிநிதிகளை வழிக்குக் கொண்டுவரும் பொறுப்பு ஷ்மித் இடம் வழங்கப்பட்டிருந்தது. அதில் அவர் வெற்றி பெற்றார்.

ஆயினும், சர்வதேச பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தமையானது வர்க்கப் போராட்டத்தின் மேலதிக வளர்ச்சிக்கு இட்டுச்சென்றது. 1969 செப்டம்பரில், நூறாயிரக்கணக்கிலான உருக்கு மற்றும் உலோகத்துறை தொழிலாளர்கள் தன்னியல்பாக கருவிகளை கீழேபோட்டனர். தொழிற்சங்க அதிகாரத்துவம் கட்டுப்பாட்டை இழந்தது. இந்த சூழ்நிலைகளின் கீழ், அதுவரை அரசியல் அரங்கில் வலது-சாரியின் பக்கமாக நின்று வந்திருந்த FPD ஆனது, SPDக்கு அரசாங்க பெரும்பான்மையை உருவாக்க உதவியது. 1969 பொதுத் தேர்தலில், SPD-FDP கூட்டணியில் வில்லி பிராண்ட் சான்சலரானார். ஹெல்மூட் ஷ்மித் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ஏற்றார். 1972 இல், அவர் நிதி அமைச்சகத்தின் தலைமைக்கு நகர்ந்தார்.

சலுகைகள் மூலமாகவும் பொதுத் துறையை மிகப் பரந்த அளவில் விரிவாக்குவதன் மூலமாகவும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களது அலையைத் தணிக்க முனைந்திருந்த பிராண்ட், அதற்குமேலும் அவரால், வருவிக்கப்பட்டிருந்த பூதங்களைக் கட்டுப்படுத்த இயலாது போனது. 1970களின் ஆரம்பத்தில் போருக்குப் பிந்தைய நாணய அமைப்புமுறையின் முடிவும், அத்துடன் அரபு எண்ணெய் முடக்கமும் ஜேர்மன் பொருளாதார அதிசயத்தின் இரண்டு அடிப்படைத் தூண்களாய் இருந்த மதிப்புக் குறைக்கப்பட்டிருந்த ஜேர்மன் மார்க் (Deutsch Mark) நாணயமதிப்பு மற்றும் மலிவான எண்ணெய் இரண்டையும் நிர்மூலமாக்கியது. அரும்பு நிலையிலிருந்த ஒரு மந்தநிலையின் மத்தியில், பன்னிரண்டு மில்லியன் தொழிலாளர்கள் 1973-74 இல் ஊதியப் போராட்டத்தை தொடக்கினர். பொதுத்துறை தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்த தொழிற்சங்கம் பதினோரு சதவீத ஊதிய அதிகரிப்பை சாதித்தது. தனது நிதி அமைச்சரான ஷ்மித்துக்கு முன்கூட்டித் தெரிவிக்காமலேயே பிராண்ட் அதற்கு உடன்பட்டிருந்தார்.

இதற்குப் பின்னர், ஆளும் வர்க்கத்தின் பார்வையில் பிராண்ட் இனியும் ஒரு நடைமுறைக்கு ஏற்ற சான்சலராக இருக்க முடியாது போனது. மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு SPD இன் நாடாளுமன்ற தலைவர் Herbert Wehner ம் FDP இன் தலைவரும் அப்போதைய உள்துறை அமைச்சருமான Hans-Dietrichம் நெருக்கமாய் வேலைசெய்தனர். பிராண்ட் இன் அந்தரங்க உதவியாளரான Günter Guillaume கிழக்கு ஜேர்மனியின் உளவு சேவையில் பணிபுரிந்தவர் என்பது இவர்களுக்கு முன்பே நன்கு தெரிந்திருந்தும் கூட, அவரையும் பிராண்ட் உடன் விடுமுறைக் காலத்தின்போது உடனனுப்பினர். Guillaume பொதுவில் அம்பலப்பட நேர்ந்த சமயத்தில், பிராண்ட் இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்.

சான்சலர்

1974 மே மாதத்தில், கூட்டரசாங்கக் குடியரசின் ஐந்தாவது சான்சலராக ஹெல்மூட் ஷ்மித் ஐ ஜேர்மன் பாராளுமன்றம் தேர்வு செய்தது. தொழிலாள வர்க்கத்தின் தாக்குதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதையும், குறிப்பாக உருக்குத் துறையில் சமூக வெட்டுகள் மற்றும் வேலை வெட்டுகளது ஒரு அலையை தொடக்கி வைப்பதையுமே தனது பிரதான பணியாக அவர் கருதினார். அந்த நோக்கத்தில் அவர் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாய் வேலைசெய்தார், முன்னிலை தொழிற்சங்க நிர்வாகிகளில் ஏராளமானோர் அவரது அரசாங்கத்தில் இணைந்தனர்.

சமூக ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்கங்களது இந்த வலதுநோக்கிய நகர்வுஇன்னும் பல முன்னணியான தொழிற்துறை நாடுகளிலும் இதேபோன்றதொரு வடிவம் நிகழ்ந்தேறியது - சமூக ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்கங்களின் உதவியுடன் ஊதியங்கள், சமூக உரிமைகள் மற்றும் வேலைகள் மீது நிரந்தரமான தாக்குதல் என்ற இன்றுவரை தொடர்ந்து வருகின்ற ஒரு அபிவிருத்தியின் தொடக்கமாக இருந்தது. கூட்டரசாங்கக் குடியரசின் சமூக ஜனநாயகக் கட்சி சான்சலர்களில் மூன்றாவதும் மற்றும் இதுவரையிலானதில் கடைசியானவருமான ஹெகார்ட் ஷ்ரோடர் (Gerhard Schröder) தனது 2010 நிகழ்ச்சிநிரல் கொள்கைகள் மற்றும் ஹார்ட்ஸ் (Hartz) சட்டங்கள் மூலமாக இதே பாதையைத் தொடர்ந்தார்.

அவரது சான்சலர் பதவிக்காலத்தின் போதான மிகப்பெரும் நெருக்கடியின் காலத்தில் ஷ்மித் தனது எதேச்சாதிகார மனவிருப்பத்தை மீண்டும் வெளிப்படுத்தினார். 1977 இல் Red Army Faction கமாண்டோ குழு ஒன்று ஜேர்மன் தொழிற்துறைகள் கூட்டமைப்பின் (BDI) தலைவரான Hanns Martin Schleyer ஐ கடத்திச் சென்று பணயக்கைதியாக்கி சிறையிலிருந்த RAF ஸ்தாபகர்களை விடுவிக்க நிர்ப்பந்தித்த சமயத்தில், ஷ்மித் வளைந்து கொடுக்காத கடுமையுடன் பதிலிறுத்து எந்த விட்டுக்கொடுப்புகளையும் அளிக்க மறுத்துவிட்டார்.

இன்னுமொரு பயங்கரவாதக் குழு 86 பேர் பயணம் செய்த ஒரு லுப்தான்சா பயணிகள் விமானத்தை கடத்தி Mogadishuக்கு பறக்க மிரட்டிய சமயத்தில், ஷ்மித் அவர்களை ஒரு கடும் ஆபத்தான சட்டரீதியாக பெரும் கேள்விக்குரியதொரு நடவடிக்கையில் GSG-9 சிறப்புப் படைகளது பிரிவின் மூலமாக அவர்களை விடுவிக்க உத்தரவு போட்டார். அடுத்தநாள் காலையில், RAF அமைப்பின் மூன்று முன்னணி உறுப்பினர்கள் தத்தமது சிறைச்சாலை அறைகளில் பிணமாய் கிடந்தார்கள் - கடும் பாதுகாப்புக்குட்பட்ட உயர்-பாதுகாப்பு வலயத்திற்குள் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

பயங்கரவாதத்தின் மீதான போர் என்றழைக்கப்படுவதில் வழக்கமாக ஆகிவிட்டிருக்கின்ற மற்றும் ஒவ்வொரு சட்டரீதியான கட்டுமானத்திற்கும் நேரெதிராய் செயல்படக் கூடிய பல வழிமுறைகளை ஷ்மித் முன்கூட்டியே செய்துகாட்டினார்.

ஒரு உலகப் பொருளாதாரவாதியாக ஷ்மித்துக்கான மரியாதை, அவர் சான்சலராக இருந்த காலத்தில் இருந்து வருகிறது. ஐரோப்பாவும் உலகமும் ஒரு நாணயமதிப்பிற்கான போரில் இறங்குவதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில், பிந்தைய நாட்களது பொதுவான நாணயமதிப்புக்கான ஒரு முன்னறிகுறியாக, அவர் 1973 இல் ஐரோப்பிய நாணய மதிப்பின் சுரங்கவழியில் பாம்பு (snake in the tunnel) முறையை அறிமுகம் செய்தார். பொருளாதாரக் கொள்கைகளை சர்வதேச அளவில் ஒருங்கிணைப்பதற்காக பிரெஞ்சு ஜனாதிபதி வலெரி ஜிஸ்கார்ட் டெ'ஸ்ராங் (Valéry Giscard dEstaing) உடன் இணைந்து 1975 இல் முதல் ஜி-6 உச்சிமாநாட்டை அவர் ஏற்பாடு செய்தார்.

இருப்பினும், ஷ்மித் இன் கொள்கைகள் ரொம்பவும் குறுகிய காலப் பார்வை கொண்டிருந்தவையாக நிரூபணமாகின. அவரது ஆட்சிக்காலத்தில் பொதுக் கடன் 9.5 பில்லியனில் இருந்து 40 பில்லியன் ஜேர்மன் மார்க்குகளாக அதிகரிப்பைக் கண்டதற்கும் அப்பால், வேலைவாய்ப்பின்மையும் ஏழ்மையும் மிகப்பெருமளவில் அதிகரித்தன. மார்கரெட் தாட்சர் மற்றும் ரொனால்ட் ரீகன் அதிகாரத்தில் அமர்ந்ததைத் தொடர்ந்து, பிரிட்டனும் அமெரிக்காவும் வட்டி விகிதங்களை பாரிய அளவில் உயர்த்தி ஒரு உலகளாவிய மந்தநிலையைத் தூண்டி விட்ட சமயத்தில், ஷ்மித் செய்வதறியாது திகைத்தார்.

சமூக அதிருப்தி பெருகியது. 1982 வசந்தகாலத்தின் சமயத்தில் ஷ்மித் இன் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக பல முக்கிய நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்க தொழிற்சங்கங்கள் தள்ளப்பட்டன. ஆயினும், இவை நடந்தேறிய சமயத்தில், ஷ்மித் ஏற்கனவே அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு விட்டிருந்தார்.

இந்த முறையும் கென்ஷார் (Genscher) உம் FDPயும் தான் அரசாங்கத்தின் தலைமையில் மாற்றத்தைக் கொண்டுவந்தனர். 1982 செப்டம்பரின் ஆரம்பத்தில், SPD ஏற்றுக்கொள்ள சாத்தியமற்றதொரு ஆத்திரமூட்டும் பொருளாதார ஆய்வறிக்கையை பொருளாதார அமைச்சரான ஓட்டோ கிராஃப் லாம்ஸ்டோர்ஃப் (Otto Graf Lambsdorff - FDP) தாக்கல் செய்ததன் மூலம், கூட்டணியிலான ஒரு மாற்றத்தை தொடங்கி வைத்தார். மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஷ்மித்துக்கு அடுத்த சான்சலராக CDU இன் தலைவரான ஹெல்மூட் கோல் (Helmut Kohl) FDP இன் வாக்குகளுடன் ஜேர்மன் பாராளுமன்றத்தினால் தேர்வு செய்யப்பட்டார். கென்ஷார் துணை சான்சலராகவும் வெளியுறவு அமைச்சராகவும் ஆனார். கோல் 16 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.

அணுசக்தி விரிவாக்கம் மற்றும் நேட்டோ இரட்டை-பாதை முடிவு (Double-Track Decision) ஆகியவற்றில் தீர்மானமான உறுதி கொண்டிருந்ததன் மூலம், 1970களின் ஆரம்பத்தில் வில்லி பிராண்டுக்கு ஆதரவளித்திருந்த போர்க்குண மாணவர்களை விரோதித்து, SPD இன் வாக்குவங்கியை ஷ்மித் மேலும் பலவீனப்படுத்தி விட்டிருந்தார். 1970களின் பிற்பகுதியில், மாணவர் தலைவர்களில் பலரும் பசுமைக் கட்சியை உருவாக்கி 1998 இல் - வசதியானவர்களாக, பழமைவாதிகளாக மற்றும் இராணுவ ஆதரவாளர்களாக ஆகி விட்டிருந்த பின்னர் - கூட்டரசாங்க மட்டத்தில் SPD-பசுமைக் கட்சியின் கூட்டணி அரசாங்கத்தில் அவர்கள் சேர்ந்தபோது தான் மீண்டும் SPD உடன் கரம்கோர்த்தனர்.

ஜேர்மன் மண்ணில் அமெரிக்காவின் நடுத்தர-தூர அணுஆயுத ஏவுகணைகளை நிறுத்தி அதேவேளையில் சோவியத் ஒன்றியத்துடன் ஆயுதக்குறைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றதான நேட்டோவின் இரட்டைப் பாதை முடிவுக்கு எதிராக நூறாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஒரு பாரிய எதிர்ப்பு இயக்கம் எழுந்தது. இந்த இயக்கம் SPD இன் பகுதிகளையும் கொண்டிருந்தது.

பத்திரிகையாளர்

சான்சலர் பதவியில் இருந்து அகன்ற பின்னர், ஷ்மித் பொதுச் செயல்பாடுகளில் இறங்காமல் பத்திரிகைத் துறை நடவடிக்கைகளின் மீது கவனம் குவித்தார். Die Zeit என்ற வாரப் பத்திரிகையின் ஆசிரியராகவும் ஏராளமான புத்தகங்களின் ஆசிரியராகவும், அரசியல் பிரச்சினைகளில் ஒரு நிலைப்பாடை அவர் தொடர்ந்து எடுத்து வந்தார்

SPDக்குள்ளாக ஆரம்பத்தில் அவர் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டார். 1983 இல், கொலோன் (Cologne) இல் நடந்த ஒரு கட்சி காங்கிரசில், 400 பிரதிநிதிகளில் வெறும் 14 பேர் மட்டுமே நேட்டோ இரட்டைப் பாதை முடிவை ஆதரித்தனர். சுரோடரின் 2010 நிகழ்ச்சிநிரலைத் தொடர்ந்துதான் ஷ்மித் உம் அவரது கட்சியும் மீண்டும் நெருக்கம் கண்டனர். ஷ்மித் 2010 திட்டநிரல் கொள்கைகளைப் பாராட்டிய போதும், அவை போதுமான தூரம் செல்லக்கூடியவை அல்ல என்று கூறினார். வேலைவாய்ப்பற்றோருக்கான தகுதி வகைப்பாட்டை மேலும் கடுமையாக்குவதற்கும் ஹார்ட்ஸ் IV ஆதாய விகிதங்களை உறைந்தநிலையில் வைப்பதற்கும் அவர் அழைப்பு விடுத்தார்

2011 இல், பேர்லினில் நடந்த SPD இன் கட்சி மாநாட்டில் ஷ்மித் கொண்டாடப்படும் ஒரு மரியாதைக்குரிய விருந்தினராக உரையாற்றினார். இந்த முன்னாள் சான்சலரின் வலது-சாரி பாதைதான் உத்தியோகபூர்வ கட்சி நிலைப்பாடாக ஆகிவிட்டிருந்ததால் SPD அவருடன் நல்லிணக்கம் கண்டுவிட்டிருந்தது.

மறைந்த சான்சலரைச் சுற்றி இப்போது நிலைநாட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தனிமனித துதிபாடலானது முதலாளித்துவ சமூகத்தின் மற்றும் அதன் ஆளும் உயரடுக்கினரின் ஆழமான நெருக்கடியின் ஒரு வெளிப்பாடு ஆகும். சமூக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் பதட்டங்கள் பெருகிச் செல்வதற்கு முகம் கொடுக்கின்ற நிலையில், அவர்கள் இருந்திராத ஒரு மேம்பட்ட கடந்தகாலத்திற்காய் ஏக்கம் கொள்கின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேல், அவசரகாலநிலை காலங்களில், நிலவும் சட்டங்களையும் இருக்கும் பெரும்பான்மையினரையும் பொருட்படுத்தாமல் செயல்படுவதற்கு கொஞ்சமும் தயக்கம் காட்டாத ஒரு அரசியல்வாதியாக ஷ்மித் போற்றப்படுகிறார். ஜேர்மன் இராணுவவாதத்திற்கு புத்துயிரூட்டவும், ஐரோப்பாவை ஒழுங்கில் வைப்பவராக அதனை மேலாதிக்கம் செய்வதற்கும், அத்துடன் அகதிகளுக்கு எதிராக எல்லைகளை மூடுவதற்கும் இப்போது நடந்து வருகின்ற பிரச்சாரத்தின் உள்ளடக்கத்தில், இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாக கருதப்பட வேண்டியதாகும்.