ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ජවිපෙ නායකයෝ දූෂනයට එරහි යුද්ධයක කපිතන්ලා ලෙස වෙස් බැඳ ගනිති

இலங்கை: ஜே.வி.பி. தலைவர்கள் ஊழலுக்கு எதிரான போரின் தளபதிகளாக வேடம் போடுகின்றனர்

By Manusha Fernando
13 November 2016

இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி பிணை முறி ஒன்று வழங்கப்பட்ட போது நடந்த பண மோசடி தொடர்பாக, பொது சொத்துக்கள் சம்பந்தமான பாராளுமன்றக் குழு (கோப் குழு), கடந்த ஒக்டோபர் மாதம் 28ம் திகதி பாராளுமன்றத்திற்க்கு சமர்ப்பித்த அறிக்கையையும் விசாரனையையும் மையமாக கொண்டு, ஊழலுக்கு எதிரான பாரிய போரில் தாம் ஈடுபட்டுள்ளதாக காட்டும் முயற்சியொன்றில் ஜே.வி.பி, ஈடுபட்டுள்ளது.

பாராளுமன்ற உரையை மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்க்கும் மேலாக, நவம்பர் 9 அன்று ஜே.வி.பி.யினால் பிணை முறியுடன் தொடர்புடைய குற்றாவாளிகளுக்கு தண்டனை வழங்கும் பிரேரணைகள் சிலவும் அரசாங்கத்திற்க்கு சமர்ப்பிக்கப்பட்டன.

பிணை முறி வழங்கப்பட்ட முறையிலும் அது தொடர்பாக கோப் குழுவிற்கு அரச கணக்காளர் நாயகம் வழங்கியுள்ள விசாரணை அறிக்கையிலும், அச்சந்தர்ப்பத்தில் பாரிய பண மோசடி நடப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. திறைசேரியின் சார்பில் இலங்கை மத்திய வங்கியே பிணை முறிகளை வழங்கும்.

ஒரு பில்லியனாக தீர்மானிக்கப்பட்டு, பின்னர் பத்து பில்லியனாக அதிகரிக்கப்பட்டு, அப்போது மத்திய வங்கியின் ஆளுனராக இருந்த அர்ஜன் மகேந்திரன் உள்ளடங்கிய நிதிக் குழுவினால் பிணை முறிகள் வழங்கப்பட்டன. அந்த பிணை முறியை வாங்கியது, மகேந்திரனின் மருமகன்களில் ஒருவரான அர்ஜுன் அலோசியஸ்சிற்க்கு சொந்தமான பேர்பசுவல் ட்றஸ்ட் (Perpetual Trust) நிறுவனமாகும். இரகசிய தகவல்கள் வழங்கப்பட்டு இந்த கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அரசாங்கத்தின் ஊழல் மற்றும் ஜனநாயக விரோத நிர்வாகத்தினை இல்லாதொழிப்பதை துரும்பாகக் கொண்டு, அந்த அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் விரோதத்தை பயன்படுத்திக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் ஆட்சியின் கீழேயே இந்த நிதி மோசடி நிகழ்ந்துள்ளது. தற்ப்போது ராஜபக்க்ஷவும் அவரை சுற்றி உள்ள “கூட்டு எதிர்க்கட்சி” என அணி சேர்ந்துள்ள குழுவும், தங்களுடைய அபகீர்த்தியான கடந்த காலத்தை மறைத்துக் கொள்ள இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இராஜபக்ஷ அரசாங்கத்தைப் போலவே இப்போதைய சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு பாடுபட்டு, இழிபுகழ் பெற்றுள்ள தமது கௌரவத்தை மீண்டும் சீர்படுத்திக்கொள்வதற்கே, ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தாங்களே முன்னெடுக்கின்றோம் என ஜே.வி.பி. தலைவர்கள் தற்போது புலம்புகின்றனர்.

கோப் குழுவின் தலைவராக செயற்ப்படுவது ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியாவார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வலது-சாரி ஐக்கிய தேசியக் கட்சியினை (ஐ.தே.க.) முதன்மையாகக் கொண்ட கூட்டணியே ஹந்துன்நெத்தியை அந்தப் பதவிக்கு நியமித்தது. இது, தமது உரிமைகளை நசுக்கித் தள்ளுவதில் பேர் போன வரலாற்றினைக் கொண்ட முதலாளித்துவ ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க் கட்சிகளை உள்ளடக்கிய பாரளுமன்றம் மீதான தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கையின்மையை தணிப்பதற்கும் அதற்கு வெள்ளைப் பூசி தூய்மையாக்குவதற்குமான ஒரு அவநம்பிக்கையான பிரயத்தனமாகும்.

கோப் அறிக்கைக்கு ஹந்துன்நெத்தி வழங்கிய தலைவரின் குறிப்பில், “மத்திய வங்கி பிணை முறி மோசடியின் ஊழல் பேர்வழிகளை அம்பலப்படுத்தி, மக்களின் நிதி மோசடி செய்யப்படுவதற்க்கு எதிராக, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள, பாராளுமன்றத்துக்கு ஒழுங்கு முறையான அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க இந்தக் குழுவால் முடியுமா?” என்றவாறான ஒரு கலந்துரையாடல் எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.

“ஆனால் அந்த சவாலை உயர்ந்த அரசியல் அனுபவத்துடன் முடிவு செய்வதற்கு எம்மால் முடிந்தது,” என ஹந்துன்நெத்தி மிகழ்ச்சியுடனும் கொண்டாட்டத்துடனும் குறிப்பிடுகிறார். அவர் விசாரனை அறிக்கை தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில், விசாரணை அறிக்கையானது “வெற்றிகரமான பெறுபேற்றைப் பெற்று முடிவுக்கு கொண்டு வந்தமை, பாராளுமன்றத்தில் மோசடிக்கு எதிரான போராட்டத்திற்க்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும்” எனக் குறிப்பிட்டார்.

ஹந்துன்நெத்தி மற்றும் ஜே.வி.பி.யினதும் இந்த “வெற்றி” பற்றி, அரசாங்க கட்டசித் தலைவர்களும் எதிர்க் கட்சியும் மற்றும் ஊடகங்களும் ஒருமித்து வானவெடி காட்சி நடத்துகின்றன. இந்த அறிக்கை, அரசாக்கத்தின் “நல்லாட்சி” பெற்றுக்கொண்ட “வெற்றி” என பிரதமர் விக்கிரமசிங்க பாரளுமன்றத்தில் கூறிப்பிட்டார்.

ஊழலுக்கு எதிரான போரட்டத்தை பாராளுமன்றத்துக்குள் வெற்றி பெறுவது தொடர்பாக ஹந்துன்நெத்தியின் இந்த கருத்தப் பற்றி கூறுவதெனில், தொழிலாளர்களின் ஏழைகளின் கண்களில் மண்தூவும் முயற்சி, என்றே குறைந்தபட்சமேனும் கூற முடியும். ஆகக் கூடிய அளவில், பிணை முறி ஊழல் தொடர்பாக முன்னாள் ஆளுனர் மகேந்தின் அல்லது இன்னொரு அதிகாரியை பலிகடாவாக ஆக்குவார்கள். தன்னை இயக்கியது, அந்தப் பதவிக்கு தன்னை நியமித்த ரணில் விக்கிரமசிங்கவே என மகேந்திரன் குறிப்பிட்டுள்ள போதிலும், அவரும் நல்லாட்சியின் வெற்றி தொடர்பாக தம்பட்டம் அடித்துக்கொண்டு சுதந்திரமாக இருக்கின்றார். ஊழல்காரர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர்களும் அவ்வாறே சுதந்திரமாக உள்ளனர். அவர்களால் போஷிங்கப்பட்ட உறவினர்களும் மற்றும் சலுகை பெறும் பெரும் வர்த்தகர்களும் அவ்வாறே உள்ளனர்.

“ஊழல்காரர்களும் அவர்களது பாதுகாவலர்களும்” எனும் தலைப்பில், இந்த நாட்களில் ஜே.வி.பி. பகிரங்கக் கூட்டங்களை நடத்தி வருகின்றது. முன்னால் ஜனாதிபதி ராஜபக்ஷவையும், அவரது அரசாங்கத்தின் அமைச்சர்களையும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களையும் தண்டிப்பதாக ஜே.வி.பி. தலைவர்கள் கூறிவருகின்றனர். கொழும்பில், நவம்பர் 2 அன்று நடந்த கூட்டமொன்றில், அவர்களுக்கு எதிராக, ஜே.வி.பி. தலைவரும் பாராளுமன்ற எதிர்க் கட்சிகளின் அமைப்பாளருமான அனுர குமார திசாநாயக்க, தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் இளைஞர்களுக்கும் மறதி நோய் பீடித்துள்ளது என எண்ணிக்கொண்டு கர்ஜனை செய்தார் போலும். முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்கவினதும் ராஜபக்ஷவினதும் அரசாங்கங்களைப் போன்றே, தற்போதைய ஜனாதிபதி சிறிசேனவின் அரசாங்கத்தையும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு அர்ப்பணித்தமையினால், ஜே.வி.பி. தலைவர்கள், அந்த அரசாங்கங்களின் ஊழலுக்கும் ஏனைய தாக்குதல்களுக்கும் அரசியல் ரீதீயாக பொறுப்புக் கூறவேண்டியவர்கள் என்பதை அங்கு குறிப்பிடவில்லை.

“ஊழல்காரர்களையும் பாதுகாவலர்களையும்” பாய்ந்து பாய்ந்து தாக்கிய திசாநாயக்க, “தூய்மையான மூலதனத்தை கொண்டிருப்பவர்கள்” தமது வேலைத் திட்டத்தையிட்டு பீதியடையத் தேவையில்லை எனக் குறிப்பிட்டார். தங்களுடைய இந்த வேலையால், முதலாளிகள் பயப்படுவார்கள் என்பதே திசநாயக்காவின் கவலை ஆகும். உண்மையிலேயே “ஊழல்காரர்களும்” “ஊழல்” முதலாளிகளும் பீதியடையத் தேவையில்லை. ஏனேனில், ஊழல்கார்களில் இருந்து சுத்தம் செய்யப்பட்ட முதலாளித்துவத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என, முதலாளித்துவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாள வர்க்கத்தினையும் இளைஞர்களையும் திசை திருப்புவதற்கே ஜே.வி.பி. பிரச்சாரம் குறிவைக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. காட்ட முனைவது போல், முதலாளித்துவத்துக்குள் ஊழலும் மோசடியும் தனியான அல்லது தற்செயலான சம்பவங்கள் அல்ல. ஏகாதிபத்திய யுகம், “பிரமாண்ட அளவிலான ஊழல், லஞ்சம் மற்றும் மோசடிகளால்” குணாம்சப்படுத்தப்படும், புதிய நிதி குவிப்புக்கு வழி அமைக்கும், ஒட்டுண்ணி நிதி மூலதனத்தினால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு யுகமே, என லெனின் நூறு வருடங்களுக்கு முன்னர் கூறியிருக்கின்றார். 21ம் நூற்றாண்டில் இந்த அபிவிருத்திகள் புதிய அளவை நோக்கி ஆழமடைந்துள்ளன.

அமெரிக்கா உட்ப்பட பிரதான ஏகாதிபத்திய நாடுகள் போன்று சீனா, இந்தியா, ரஸ்யா போன்ற நாடுகளுக்குள்ளும் புரையோடி போயுள்ள உழல் மோசடி சாதனைகளிலும், ஊழல் அரசியல் வாதிகளால் வளர்த்தெடுக்கபடும் உறவினர்களுக்கு சலுகையளிக்கும் முதலாளித்துவம் உருவாகி இருப்பது, இந்த சூழ்நிலையிலேயே ஆகும். இலங்கைக்குள்ளும் இந்த உலக அபிவிருத்தியே பிரதிபலித்துள்ளது. இந்த அபிவிருத்தியின் பிரதிபலனாகவே உலகெங்கும் பாரிய கடன் குவிந்துள்ளது. உற்பத்தியின் மூலம் அன்றி, நிதிச் சந்தையில் ஊகங்கள் மற்றும் சூழ்ச்சிகள் மூலம் லாபத்தினை சுரண்டக்கொள்ள முதலாளிகள் திரும்பியுள்ளனர்.

உலக முதலாளித்துவத்தின் அழுகிப்போன காலகட்டத்தையே இந்த அபிவிருத்திகள் காட்டுகின்றன. எல்லை மீறிய கடனில் மூழ்கியுள்ள நிதி மூலதனத்துக்கு பெருமதியைச் சுரண்டிக்கொள்வதன் பேரில், புதிய பிரதேசங்களை தன்வசப்படுத்தும் போர்களுக்குள் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் திரும்பியுள்ளன. இந்த நிலைமையிலேயே தங்களது நாடுகளிலேயே தொழிலாள வர்க்கத்தினை மோசமாக சுரண்டும் முகமாக, உள்நாட்டில் பொலீஸ்-அரசுகள் உருவாக்கப்படுகின்றன. ஊழலற்ற தூய முதலாளித்துவத்தை உருவாக்குதல் தொடர்பாக ஜே.வி.பி. முன்னெடுத்துச் செல்லும் பிரச்சாரத்தின் உண்மை வேடம், இந்த உண்மையான நிலைமைகளை மூடி மறைத்து, முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்க்கான மிக மோசமான முயற்ச்சியேயாகும்.

ஊழல் அரசாங்கங்களை பதவிக்கு கொண்டு வர தோள் கொடுத்து ஏற்படுத்திக்கொண்டுள்ள அபகீர்த்தியை மூடி மறைக்க, முதலாளித்துவ முறைமைக்குள்ளேயே ஊழலுக்கு எதிரான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் ஜே.வி.பி., தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஏமாற்றும் முயற்ச்சியை விரைவு படுத்தியுள்ளது.

நவம்பர் 9 அன்று நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, கோப் அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தண்டனை வழங்கும் ஆறு பிரேரனைகளை முன்வைத்துள்ளார். அவை, சம்மந்நப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுத்தல், மகேந்திரனை அரசாங்கத்தின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குதல், பர்பசுவல் நிறுவனத்திற்க்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், கடந்த மோசடிகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் செயல்படுதல் போன்றவையாகும். ஊழல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கத்தினை நிர்ப்பந்நிக்கும் இயக்கம் ஒன்னினை முன்னெடுத்துச் செல்ல, ஜே.வி.பி. பின்னால் அணிதிரளுமாறு மக்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

நவம்பர் 7, ஜே.வி.பி. தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க, ஊடகவியலாளர் முன்னிலையில் பேசும் போது, “ஊழல்காரர்களுக்கு எதிரான போராட்டத்தின் முழு உரிமையும் ஜே.வி.பி. இற்கே உள்ளது” என குறிப்பிட்டார். “மோசடி,  ஊழல் மறற்றும் குற்றங்களை எதிர்ப்பதற்கு மட்டுமன்றி, நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்க்கான ஒரு சக்தியை கட்டி எழுப்ப வேண்டும். 2020ல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் இயக்கம் ஒன்றினை கட்டி எழுப்ப வேண்டும்” என குறிப்பிட்ட பிமல் ரத்நாயக்க, “ஜே.வி.பி. 2020க்குத் தயார்” என அறிவித்தார்.

2020 தேர்தலில் தம்மை அதிகாரத்திற்க்கு கொண்டு வருவதற்காக ஒரு இயக்கமொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்றே அவர் குறிப்பிட்டார். இது வரையிலும் ஊழல்கார்களையும் ஊழல் பேர்வழிகளை பாதுகாத்த அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர செயற்ப்பட்ட ஜே.வி.பி. 2020ல் எவ்வாறு மாறும் என்பதை ரத்நாயக்க விளக்கவில்லை. அதிகாரத்தில் இருந்த, இருக்கின்ற அரசுகளை ஆட்சிக்கு கொண்வரும் போது, ஊழலை ஒழிப்போம் என்பது ஜே.வி.பி.யின் கோசமாக இருந்து வந்துள்ளது என்பது ரத்நாயக்காவுக்கு நன்கு தெரியும்.

பிரதான முதலாளித்துவ கட்சிகள் அபகீர்த்தி அடைந்துள்ள சூழ்நிலையில், முதலாளித்துவ ஊடகங்களின் உதவியோடு தமது தோரணையை கட்டி எழுப்பி, முதலாளித்துவ முறைமையை பாதுகாக்கும் வேலையை தமது கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறே ஜே.வி.பி. கேட்கின்றது.

ஜே.வி.பி. ஆரம்பித்துள்ள ஊழலுக்கு எதிரான போரட்டம், மறு பக்கத்தில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வழ்க்கை நிலைமை, சமூக நிலைமை மற்றும் ஜனநாயக உரிமைகளையும் ஒழிக்கும் வேலைத் திட்டத்துக்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக வளர்ச்சியடையும் எதிர்ப்பை திசைதிருப்புகின்றது.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளும் ஜே.வி.பி.யின் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தைப் பற்றி கடுகளவேனும் நம்பிக்கை வைக்க கூடாது. அது முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரமாகும். ஊழல் மற்றும் மோசடியின் தோற்றுவாயான இலாபத்தை சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ முறைமையை தூக்கிவீசி, சோசலிச வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் மட்டுமே, ஊழலையும் மோசடியையும் நிறுத்த முடியும். இந்தப் போராட்டம் சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாகும்.

இந்த வேலைத் திட்டமும் முன்நோக்குக்கும் வேலைத் திட்டத்துக்காகவும் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் மட்டுமே போராடுகின்றன.