World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

The Ontario Tory Government and the crisis of working - class perspective in Canada

Part l : The Tories intensify their class - war assault

ஒன்டாறியோ டோறி அரசாங்கமும் கனடாவில் தொழிலாள வர்க்க முன்னோக்கின் நெருக்கடியும்

பகுதி1: டோறி அரசாங்கம் தனது வர்க்க-யுத்த தாக்குதலை தீவிரப்படுத்துகின்றது

By Lee Parsons and Keith Jones
22 May 2000

Use this version to print

கடந்த ஆனி 3ம் திகதி தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற பின்னர் ஓன்டாறியோ டோறி அரசாங்கம்அவர்களது சாதாரண தீர்வுக்குரிய புரட்சியுடன்(Common Sense Revolution) முன்னோக்கித் தள்ளப்பட்டனர். "பெரிய அரசாங்கத்தை" ஒழித்துக்கட்டி,"தனிநபர் பொறுப்புனர்வை" புனரமைப்புசெய்வதன் பேரில் டோரி அரசாங்கம்ஏழைகளுக்கெதிரான புதிய நடவடிக்கைகளைஅறிமுகப்படுத்தியது. பொது, சமூக சேவைகளுக்கு மிகவும் அத்தியாவசியமான வளங்களைஇரத்து செய்தது. நிறுவனங்களதும் வசதிபடைத்தவர்களதும் வரியை, வெட்டி குறைத்தது.

எப்படியிருந்த போதும் கடந்த தமதுஆட்சிக்காலத்தில் வேலைநிறுத்தங்களாலும்,ஊர்வலங்களாலும் ஸ்தம்பிதமடைந்ததுபோலல்லாது தற்போது டோறியினர்சிறிய வெளிப்படையான எதிர்ப்பையே எதிர்நோக்க வேண்டியிருந்தது. டோறியினரின் பாராளுமன்றஎதிர்ப்பாளர்களான மிதவாதிகளும் புதியஜனநாயகவாதிகளும் சாதாரண தீர்வுக்கானபுரட்சியின் முக்கிய கருத்துக்களை தாம்ஏற்றுக்கொள்வதாக சைகை காட்டியுள்ளனர். 1999 இலையுதிர்கால தேர்தல் பிரச்சாரத்தின்போது தாம் மாகாண வரவுசெலவுத்திட்டத்தை டோறிகளின் வரிவெட்டுக்களைவாபஸ் பெறாமல் சமப்படுத்துவோமெனவாக்குறுதியளித்தனர். தமது பங்கிற்கு தொழிற்சங்கங்கள் தாம் பிரதமர் மைக் ஹரிஸ் (MikeHarris) உடன் கூடிவேலை செய்வதாகமீண்டும் மீண்டும் உறுதியளித்தனர். ஒன்ராறியோதொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரானவைன் சமுவேல்சன் (Wayne Samuelson) தொழிற்சங்கங்கள் மேலும் எந்தவொரு டோறி எதிர்ப்புநடவடிக்கைகளிலும் ஈடுபடாதென வாக்குறுதியளித்தார். மேலும் எந்தவொரு தொழிற்சங்கஎதிர்ப்பும் சிறப்பாக அதாவது தனிப்பட்டநடவடிக்கைகளை விமர்சனத்துக்கு உள்ளாக்குவதுடன் நின்றுவிடும் என்றனர்.

கனடாவின்சனத்தொகை கூடியதும், கைத்தொழில்மயமானதுமான மாநிலம் என்பதால் மட்டுமல்லாதுஒன்ராறியோவின் அபிவிருத்தி தொடர்பானஆய்வு மிக அவசியமானது. ஹரிஸ் இன் டோறிஅரசாங்கத்தின் பின்னர் அதனை ஒத்ததேசிய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவரபெரும் கம்பனிகள் மூர்க்கமாக முயல்கின்றனர்.இதன் முடிவில் ஹரிசின் முக்கிய ஆலோசகரானரொம் லோங் (Tom Long) என்பவரைகனடாவின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியானகனடிய கூட்டின் தலைவராக வெற்றிபெறச்செய்ய கனடியன் பெரும் கம்பனிகளின்பிரமுகர்கள் பெரும்பாலானோர் முயன்றுவருகின்றனர்.

எதிர்வரும் கிழமைகளில்உலக சோசலிச வலைத்தளம் (WSWS) 5 வருடகால ஹரிசின் டோரி அரசாங்கத்தினால்ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளைக் கொண்ட பல கட்டுரைகளைவெளியிட உள்ளது. இவற்றில் டோரியின் சட்ட,அரசியல் கொள்கை மாற்றங்களின் பிற்போக்கான நோக்கம் மட்டுமல்லாது அதன்மனித இழப்புக்கள், அவர்களின் தத்துவார்த்தப்பொதி தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும். தொழிலாள வர்க்கத்தின் சமூகநிலைமை,ஜனநாயக உரிமை மீதான டோரிகளின்இத் தாக்குதல்கள், பரந்தளவிலானமக்கள் அதிகரித்துவரும் பொருளாதாரபாதுகாப்பின்மையால் அடையும் வெறுப்பையும், அதிருப்தியையும் சமுதாயத்தின் பலவீனமானதட்டினர் மீது திருப்பிவிடும் தத்துவார்த்தஎதிர்ப்பையும் கொண்ட நோக்கத்துடன்ஒன்றிணைந்தது.

எமது ஆய்வுகள் இரண்டுபாகங்களை கொண்ட கட்டுரையாகஇருக்கும். முதலாவது பாகம் கடந்தஜூனில் டோரிகள் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டபின்னர் எடுத்த முக்கிய நடவடிக்கைகள்தொடர்பான மீளாய்வாகவும், இரண்டாவதுபாகம் டோரி எதிர்ப்பு இயக்கத்தின் உடைவுபற்றியும் ஆய்வு செய்யும்.

டோரிகளின் வரி வெட்டுக்கள்: வசதிபடைத்தோரின் நலனுக்காக செல்வத்தை மறுபங்கீடு செய்தல்

1990களில் கனடா பூராவும் அரசாங்கங்களினால்அமுல் செய்யப்பட்ட ஒவ்வொரு அரசியல்வரிகளும் வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை ஒழித்துக் கட்டுவதன் பேரில் சமூகசேவைசெலவீன வெட்டுக்களை அமுல்படுத்தின.ஹரிசின், டோரி அரசாங்கத்தை இவற்றிலிருந்துவேறுபடுத்தியது என்னவெனில் அவர்கள்வரிகளை வெட்ட தயாராக இருந்ததேயாகும். டோரிகளின் முதலாவது ஆட்சிக்காலத்தில்டோரிகள் தனிநபர் வருமானவரியை 30வீதத்தால் குறைத்தது. இதனால் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை மேலும் அதிகரித்ததுடன்,பொதுசேவை செலவீனத்தை வெட்டித்தள்ளும்படி கோரும் மாநில கடன்வழங்குவோரின்அழுத்தத்தை அதிகரித்தது. [டோரிகளின்முதல் 4வருட ஆட்சிக்காலத்தில் இம்மாநிலத்தின்பற்றாக்குறைகளின் 22பில்லியன் டொலர்களாகியது.]

ஏனைய அரசாங்கங்கள் "பற்றாக்குறைநெருக்கடி" க்கு செலவீனங்களை வெட்டுவதைதவிர வேறுவழியில்லை என கூறுகையில், டோரிகள்தமது நோக்கம்" அரசாங்கத்தைமுன்னைய நிலைக்கு கொண்டுவருவதே"என தைரியத்துடன் கூறினர். பொதுசேவைகளிலிருந்து பணத்தை மறுபங்கீடு செய்யும் நோக்கம்கொண்டிருந்தனர். ஏழைகளிடமிருந்து"முற்றுகையிடப்பட்டுள்ள" வரிசெலுத்துவோருக்கு மாற்றுவது என்பது உண்மையில் மத்தியதரவர்க்கத்தின் வசதிபடைத்த தட்டினருக்கும்செல்வந்தோருக்குமாகும்.

டோரிகளின்வரிவெட்டு மூன்றுபடிகளைக் கொண்டநோக்கங்களை கொண்டுள்ளது. முதலாவதாக ஒரு தசாப்தத்துக்கு மேலாக வருமானம்வீழ்ச்சியடைந்து அல்லது தேக்கமடைந்துள்ளபெரும்பான்மையான உழைக்கும் மக்கள்மத்தியிலுள்ள அதிருப்தியை பயன்படுத்தி அவர்களதுவாக்குசீட்டுகளை பத்திரப்படுத்திக்கொள்ளல்.இரண்டாவதாக, பொது,சமூக சேவைகளில்முன்னர் செலவிடாது வைத்திருந்த வரிவருமானத்தின் அதிகரித்துவரும் பகுதியை மீண்டும் பெற்றுக்கொடுத்து கூடிய வருமானமுள்ளவர்களின் வருவாயைஅதிகரிக்கசெய்தல். இறுதியாக ஆனால்குறைந்தபட்சமாவது எதிர்கால அரசாங்கங்கள் சமூக, பொதுசேவைகளில் மறுமுதலீடுசெய்யாதிருக்கும் வகையில் அதற்கு தேவையான நிதிவசதிகளை இல்லாமல் செய்தலாகும்.

பல வருடகால குறைந்த நிதி உதவியினூடாகசுகாதார சேவை, கல்வி, ஏனைய பொதுசேவைகளின் தரத்தை குறைப்பதன்மூலம் தனியார்மயத்துக்கான ஆதரவுபெரிதும் அதிகரிக்கும் என டோரிகள் கணக்கிட்டனர். ஹரிசின் முதலாவது கல்வி அமைச்சர் டோரிகளின்நோக்கம் நெருக்கடியை தூண்டுவதேஎனவும் அதனூடாக "சீர்திருத்தத்தை" திணிக்கமுடியும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

தேர்தலில் வென்ற வருடத்திலிருந்து சமூகசெல்வத்திலிருந்து வசதிபடைத்தோருக்கானபங்கை அதிகரிக்க மேலதிக நடவடிக்கைகளைஎடுத்துள்ளதுடன், எதிர்கால அரசாங்கங்கள்எவையும் சமூக, பொது சேவைகளின்நெருக்கடிகளுக்கு நிவாரணம் வழிங்காதிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

முதலாவதாகதாராண்மை கட்சியின் உதவியுடன் டோரிகள்வரிசெலுத்துவோர் காப்பீட்டு, சமப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட சட்டத்தைஅமுல்படுத்தினர். இது யுத்த அல்லது ஏனையஅவசரகால நிலைமைகள் தவிர மற்றும்வேளைகளில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டால்சகல வரி அதிகரிப்பையும் நீக்குவது ஒன்டாறியோ அரசாங்கத்திற்கு சட்டவிரோதமானது.இது எந்தவொரு அரசாங்கமும் அதற்குமுன்னர் பிரதேச ரீதியான கருத்துக் கணிப்பைநடாத்துவதன் மூலமே செய்யப்படமுடியும்.

இம்மாதம் வெளியிடப்பட்ட வரவுசெலவுதிட்டத்தில் பரந்தளவில் தனியார் வருமானத்திலும்,நிறுவனங்களின், மூலதனலாப வரிகள் மீதுவெட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தற்போதைய நிதியாண்டில் கம்பனி வரிகள்1.3பில்லியன் டாலர்கள் ஆகக் குறைக்கப்படும்.இது அடுத்த 5 வருடத்தில் உண்மையாகஅரைவாசி ஆக்கப்படும். 2004ம் ஆண்டளவில்நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் 4பில்லியன் டாலர்கள் குறைவாக வரி செலுத்தும்.இதே காலப்பகுதியில் வரிவிதிப்புக்காகசமர்ப்பிக்கப்பட வேண்டிய மூலதனலாபபங்கு 75% லிருந்து 50% ஆக குறைக்கப்படவுள்ளது.கம்பனிகளின் உயர் அதிகாரிகளும் இப்புதியவரிவிலக்கினால் இலாபமடைகின்றனர். அவர்களின்பங்கு உரிமை வருமானத்தில் முதல் 100,000டாலர்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

வரிவெட்டின் வர்க்கத் தன்மையை மூடிமறைக்கும் முயற்சியாக தனியார் வருமானத்தின் முதல்60,000 டாலர்கள் வரிவீதம் குறைக்கப்பட்டுள்ளது.இருந்தபோதும் வருமான வெட்டில்27% அல்லது 733 மில்லியன் டாலர்கள் 5% உயர்வருமானம் பெறுவோரை சென்றடைகின்றது.

வரவுசெலவுத் திட்டத்தினை சமர்ப்பிக்கையில்நிதியமைச்சர் ஏர்ணி ஈவ்ஸ் (Ernie Eves) ஒன்டாறியோவின் துரித பொருளாதார வளர்ச்சி காரணமாகதனது அரசாங்கம் திட்டமிட்டதைவிட பாரிய5.3 பில்லியன் டாலர்களை திரட்ட கூடியதாகஇருந்தது என ஜம்பம் அடித்தார். அவர்உடனடியாக அனைத்தையும் செலவளித்துவிட்டார். ஆனால் இந்நிதி வரவில் 100 மில்லியனை அல்லது5.2 பில்லியனை பல்வேறு வரிவிதிப்புகள் மூலம்இன்னும் 1 பில்லியனை சேர்க்க வேண்டியிருந்தது.1999ல் வரி செலுத்திய ஒவ்வொரு ஒன்டாறியன்பிரஜைக்கும் 25 டாலர்களுக்கும் 200 டாலர்களுக்கும் இடையே வழங்கப்பட்ட வரி விலக்கு1 பில்லியன் டாலர்களையும் உள்ளடக்கியுள்ளது.

தனது சொந்த அரச நிர்வாகத்தின் கீழ்நிதிதட்டுப்பாடாக இருக்கும் நிலைமைகளின்கீழ், டோரிகள் ஒரு கையளவு துறைகளில்சேவைகளையும், திட்டங்களையும் தொடர்ந்துஇல்லாமல் செய்தனர். பத்துவருடவெட்டுக்கள் பொது சுகாதார சேவையைஉயிர்வாழக் கூடிய நிலைமையிலேயே வைத்திருந்தது. எதிர்வரும் வருடத்திற்கான மொத்தசுகாதார சேவைக்கான செலவைடோரிகள் 49 மில்லியன் டாலர்களால் மட்டுமேஅதிகரித்துள்ளனர்.

வழமையாக கல்விஅமைச்சு வரவுசெலவுத்திட்டத்தின் மூலம்8% அதிகரிப்பைப் பெறும். சொத்துவரிகள்மீதான வெட்டும், பாடசாலை அனுமதிஅதிகரிப்பும் கடந்த வருடத்திலும் பார்க்கஇந்த வருடத்தில் பாடசாலை நிர்வாகசபைக்கு குறைந்தபணத்தையே பெற்றுக்கொடுக்கும்.டொறன்டோவின் மேயரும் டோரிகளின்நண்பருமான மெல் லாஸ்ட்மன் (Mel Lastman) கடந்த வருடம் வீடில்லாப் பிரச்சினை"தேசிய அவசரகால" பிரச்சினை ஆகிவிட்டதாகஒத்துக்கொண்டுள்ளார். தற்போதுடோரிகளின் வரவுசெலவுத்திட்டம் நகரசபைதேவைகளிலிருந்தும் வீடமைப்பு அமைச்சிலிருந்தும்90 மில்லியன் டாலர்களை வெட்டவுள்ளது.நெடுஞ்சாலைகளுக்கும், கட்டுமானங்களுக்குமான செலவின் அதிகரிப்பின் ஒரு பகுதியை ஈடுசெய்வதற்கு டோரியினர் சமூகசேவையிலிருந்து 110மில்லியனையும் சுற்றாடல் பாதுகாப்பிலிருந்து143 மில்லியனையும் கலாச்சார, பொழுதுபோக்கு நிதியில் 57 மில்லியனையும் வெட்டவுள்ளனர்.

ஏழைகள் மீதான தாக்குதலும் வசைகூறுதலும்

பிரதமர் ஹரிஸ் சமூகநல"சீர்திருத்தம்" அதாவது சமூகநல கொடுப்பனவுகளில் 21.5% வெட்டும், வேலைக் கட்டண முறையின் (work fare) அறிமுகமும்தான் டோரிகளின் முக்கியவெற்றி என கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக1995 ஜூனில் டோரிகள் பதவிக்கு வந்த பின்னர்ஒன்டாறியோவில் வசிக்கும் சமூகநல உதவிகளைபெறுவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட5 இலட்சத்தால் குறைந்துள்ளதாகசுட்டிக் காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும்சமூகநல உதவிகளை தாமாகவோஅல்லது பலவந்தமாகவோ இழந்தோரின்நிலைமை தொடர்பாக பின்தொடர்ந்துபார்க்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.சமூக சேவைகளுக்கான அமைச்சின்அறிக்கைகள் 60% வீதத்தினர் வேலை பெற்றுள்ளார்கள் என தொடர்ச்சியாக கூறுகையில், அவர்களுடைய வேலையின் தரம் பற்றி ஒரு வார்த்தைதன்னும் கூறாததுடன் ஏனைய 40% வீதத்தினரின்தலைவிதியை கைகழுவி விட்டுள்ளது.

1991-1993இன் பொருளாதார வீழ்ச்சியின் போதுவேலைநீக்கம் செய்யப்பட்டவர்களில்பலர் 1990 களின் அரை இறுதியில் பொருளாதாரம்விரைவாக வளர்ச்சியடைந்தபோதுமீண்டும் வேலையை பெற்றுக்கொண்டனர்என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால்அதிகமானோர் குறைந்த ஊதியத்தினுடனேயேசேர்ந்து கொண்டனர். அவர்கள் வேலையைபெற்றுக்கொள்வதற்கும் நீதியானவேலையின்அறிமுகத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.நிச்சயமாக கூறின் பொருளாதார வளர்ச்சியும்,சமூகநல கொடுப்பனவுகளின் வெட்டுக்களும்நடந்த காலகட்டத்தில் வீடின்மையும்,உணவு விநியோக நிலையங்களின் (Food Bank) பாவனையும் பாரியளவில் அதிகரித்தது.

சமூகநல கொடுப்பனவுகள் பெறுவோரைசோம்பேறிகள், போதைவஸ்த்து பாவிப்பவர்கள், ஏமாற்றுக்காரர்கள், குற்றவாளிகள்என்ற வசைபாடலானது, எஞ்சியுள்ளசமூகபாதுகாப்பு வலையை அழிப்பதற்கானபிரசாரத்திற்கு எதிரான பொதுமக்களின்ஆத்திரத்தையும், அமைதியின்மையையும்அடக்கும் நோக்கத்தை கொண்டதாகும்.அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட புகழ்மிக்ககணக்கியல் நிறுவனமான ரிறிவிநி இன் படி நீதியானவேலையின் மூலம் தேவையான வழங்களைக்கொண்டு அவர்கள் கூறியதை அடையமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளது. ஆனால் அரசாங்கம்அவ்வறிக்கையை அலட்சியம் செய்துள்ளதுடன்,கடந்த மாதங்களில் தனது திட்டத்தைவிரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு வருடங்களில் தற்போதுஇருப்பதை விட இரண்டுமடங்காக -அதாவது30%ஆக- சமூகநல உதவிகளை பெறுவோரைஅவர்கள் பெற்றுக்கொள்ளும் உதவிக்காகவேலைக்கு கட்டாயமாக அனுப்ப தீர்மானித்துள்ளது.

கடந்த மாதம்வேலைக்கட்டண 'வேலையில்' சேர்ந்துகொள்ள மறுத்த அல்லது நீதியான வேலையூடாக அடையவேண்டிய இலக்குகளை அடையாதமாநகரசபைகள் குற்றப்பணம் செலுத்தத்தள்ளப்பட்டன. பொது, சமூக சேவைகள்அமைச்சர் ஜோன் பயர்ட் (John Baird) நீதியான வேலை நிலையங்களை உருவாக்குவதிலும், சமூகநல உதவிகளை பெறுவோரைகட்டாய வேலையில் பயன்படுத்தவும்,முன்னர் தொழிற்சங்க மயப்படுத்தப்பட்டஅரசாங்க உத்தியோகத்தர்கள் செய்தவேலைகளை குறைந்த சம்பளத்தில்வேலையில் ஈடுபடுத்துவதனூடாக "ஒன்டாறியோ பொதுசேவையினர் தமது தலைமைத்துவத்திற்கு எடுத்துக்காட்டுவர்" என உறுதிமொழிவழங்கினார்.

பயர்ட், யாராவது சமூகநலஉதவிகளை பெறுவதில் மோசடி செய்திருந்தால்அவர்கள் வாழ்நாள் முழுவதும் உதவிகள்பெறாதவாறு தடைசெய்யவும், மோசடி,மேலதிக கொடுப்பனவுகளுக்கு காரணமானநிர்வாக தவறுகளை சோதனை செய்யவும்100 புதிய தகமை மதிப்பீட்டு அதிகாரிகளைவாடகைக்கு அமர்த்தும் திட்டங்களைஅறிவித்துள்ளார். டோரிகளின் 1999 தேர்தல்முன்னோக்கில் சமூகநல உதவிகளை பெறுவோரை கட்டாய போதைமருந்து சோதனைக்குட்படுத்தவும், யாராவது பாவிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கட்டாய போதைமருந்து புனருத்தாரண திட்டத்தில் சேர்ந்துகொள்ள வேண்டும்எனவும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

அரசின் ஒடுக்குமுறை அதிகாரங்களைஅதிகரித்தல்

"பெரிய அரசாங்கத்திற்க்கு" எதிரானவர்களெனடோரிகள் கூறிக்கொண்ட போதும் அவர்கள்மீண்டும் மீண்டும் சட்டமியற்றும் அதிகாரத்தினூடாகபிராந்திய அரசுக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கியதனூடாக அவர்கள் ஒரு தலைப்பட்சமான பிற்போக்கான சீர்திருத்தங்களைநடைமுறைப்படுத்த முடிந்தது. 160 ஆவதுமசோதாவின் கீழ் டோரிகள் கல்வித்துறைபேரம் பேசல்களை பன்முகப்படுத்தியதனூடாக ஆசிரியர்கள், ஏனைய உத்தியோகத்தர்மீதான தாக்குதலுக்கெதிரான எதிர்ப்பைதுண்டு துண்டாக்கியதுடன், கல்வித்துறைகொள்கைகளையும் நிதியுதவிகளையும்அமைச்சின் கைகளில் மத்தியப்படுத்தியுள்ளது.

டோரிகள் "குறைந்த மாநகரசபைஅரசியல் வாதிகள் சட்டம் நடவடிக்கைகளைகுறைத்தல்" என்ற சட்டவாக்கத்தினைபலத்த மக்கள் எதிர்ப்பினை அடுத்தேகைவிட்டனர். இச்சட்டத்தை உரிய முறையில்நடைமுறைப்படுத்துவதாயின் முக்கியமானதுஎன அமைச்சரவை கருதிய இச்சட்டம்எந்த ஒரு (பிரதேச ரீதியான) சட்டத்தின்மீதும் திருத்தங்கள் செய்வதற்கான வழிகளைஅமைச்சரவைக்கு வழங்குகின்றது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால் டோரிகள்எந்தவித கலந்துரையாடலும் இல்லாமல்சட்டசபைக்கான அங்கீகாரத்தை வழங்குவதனூடாக தற்போதைய சட்டத்தை திருத்துவதற்குஅமைச்சரவைக்கு அதிகாரத்தை வழங்கவிரும்புகின்றனர்.

மாநகரசபை வேலைத்தலங்களை குறைக்கும் நோக்கத்துடன் ஒட்டாவாவை அதைச் சுற்றியுள்ள நகரங்களுடன்ஒன்றிணையுமாறு டோரிகள் உத்தரவிட்டனர்.தற்போது டோரிகள் தங்களது சில ஆங்கிலஇனவாத ஆதரவாளர்களின் உணர்வுகளுக்குபங்கம் விளைவிக்காது உள்ளூர் ஜனநாயகத்தைபாதுகாப்பது என்பதை நிராகரித்துஇப்பிரதேசம் பாரிய பிரெஞ்சு மொழிபேசும் சிறுபான்மையினர் இருப்பதையும்,தற்போதைய ஒட்டாவா நகரம் இருமொழியுடையதாக இருப்பதையும் கவனத்திற்கெடுக்காது புதிய பெரிய ஒட்டாவா இருமொழியுடையதாக இருக்கும் என நிர்ணயித்தனர்.

ஏனைய வட அமெரிக்காவின் நிர்வாகப்பிரதேசங்களை போல் ஒன்டாறியோவிலும்குற்றச்செயல்கள் குறைந்திருந்த போதும்டோரி அரசாங்கத்தின் சட்டம்-ஒழுங்குபிரச்சாரம் நிறுத்தப்படவில்லை. கடந்தவருடங்களில் பொலிசாரினதும் அரச வழக்குத்தொடுனர்களினதும் எண்ணிக்கையை அதிகரிப்பதும்,புதிய பொலிஸ் பதிவுகளும் சிறைச்சாலைஅமைப்புக்களின் மாற்றங்களும் மேலும்தண்டணை விதிப்பதை உருவாக்கும் அரசாங்கஅறிவிப்புகளின் தொடர்ச்சியான அதிகரிப்பைகாணக்கூடியதாக இருந்தது. சட்டமாஅதிபரான டேவிட் சுபெளச்சி (David Tsubouchi) "மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்குமட்டுமல்ல பாதுகாப்புடன் இருப்பதாகஉணரவும் உரிமையுண்டு" எனக் கூறினார்.

டோரிகளின் சட்டம்-ஒழுங்கு பிரச்சாரம்கூடுதலாக இளைஞர்களுக்கு எதிரானதாகும்.இவர்கள் இளைஞர்களுக்கும், வயதுவந்தவர்களுக்கும் 3 புதிய சித்திரவதைமுகாம்களை உருவாக்கும் திட்டத்தினைஅறிவித்துள்ளதுடன், பிள்ளைகளால் ஏற்படுத்தப்படும் சொத்து சேதங்களுக்கு பெற்றோரேபொறுப்பு எனவும் சட்டமியற்றியுள்ளனர்.அத்துடன் பிரதேச சட்டசபையினூடாகமத்திய தராளவாத அரசின் இளைஞர்குற்றச்செயல் சட்டத்தின் வலதுசாரிதிருத்தங்களை கண்டித்து தீர்மானத்தினைதிணித்ததுடன், செய்யப்பட்ட திருத்தங்கள்"இளம் குற்றவாளிகளை அவர்களின் குற்றச்செயல்களுக்கு பொறுப்பாக்குவதற்கு" போதாமல்உள்ளது என்றனர்.

டோரிகளின் சட்டம்-ஒழுங்குபிரச்சாரம் ஏனைய சிக்கலான சமூகப்பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டஎதிர்வரும் பிரச்சினைகளை முன்கூட்டியேவெளிப்படுத்தும், குற்றம் புரிவதென்பதுசமூகப்பிரச்சினை என்பதற்கெதிராகதனிப்பட்ட தீயகுணத்தின் விளைவெனவும் அரசாங்கத்தின் இறுதியான தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றது. பரந்துபட்ட அளவில் இது ஆழமடைந்துவரும் சமூக துருவப்படுத்தலின் விளைவாகும்.

ஏழ்மையின் அதிகரிப்பாலும் சமூக, பொதுச்சேவைகளின் அழிப்பினால் உருவாக்கப்பட்டுள்ளசமூகப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாணமுடியாமலும் தீர்வுகாண விரும்பாமலும்டோரிகளும் ஆளும் வர்க்கமும் அரசுஒடுக்குமுறையை நோக்கி அதிகரித்துவரும்வகையில் தள்ளப்பட்டுள்ளது. இது தற்போதுவீதிப்பாதுகாப்பு சட்டம் என்பதன் கீழ்வீதிகளில் கார் கண்ணாடிகளைக் கழுவுவதையும்"ஆத்திரமூட்டும் பிச்சை எடுத்தலை" (பஸ்நிலையங்களிலும் பணம்பெறும் இயந்திரங்கள்அருகில் காசு கேட்பதும்) தடை செய்வதன்மூலமும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.கடந்த பெப்பிரவரியில் நடைமுறைக்குவந்த இப்புதுச் சட்டத்தை முதல்தடவைமீறுபவர்களுக்கு 500 டாலர்கள் தண்டமும்அதையடுத்த குற்றங்களுக்கு 1000 டாலர்களும்6 மாதம் வரையான சிறைத்தண்டனையும்விதிக்கப்படும். இப்புதுச்சட்டத்தின் துணையுடன்ரொறன்டோ பொலிஸ் பணம் கறப்பதில்மூர்க்கமாக ஈடுபட்டுள்ளது. எதிர்காலத்தில்இது பரந்த அளவில் தற்போது ரொறன்டோவில் மட்டும் 25,000 ஆக இருக்கும் வீடற்றவர்களுக்குஎதிராக பிரயோகிக்கப்படும் என்பதில்எவ்வித ஐயமுமில்லை.

கல்வித்துறையைதனியார்மயமாக்கல்

டோரிகள்தனியார்மயமாக்கலுக்கான பேராசைமிக்கதிட்டங்களை அறிமுகப்படுதியுள்ளனர். ஒருபிராந்திய நிறுவனமான ஒன்டாரியோ ரியாலிட்டிகோப்பரேஷன் (Ontario Reality Corporation) 200 மில்லியன் டொலர் மதிப்பிடப்பட்டுள்ள168 அரசாங்கச் சொத்துக்களின் பட்டியல்ஒன்றை இவை மேலதிகமானது; விற்கப்படவேண்டியது எனக் கூறியுள்ளது. திருத்தங்களுக்கானஅமைச்சு "கடுமையான ஒழுக்கத்திற்குரியபராயமடைந்தோருக்கான சித்திரவதைமுகாம், "திறமையான சிறையான" Penetanguishene விசேட சிறை உட்பட்ட 5 துறைகளை பொதுதனியார் கூட்டு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும்திட்டங்களை அறிவித்துள்ளது.

சாதாரணஒன்டாரியோ மக்களின் வாழ்க்கையில்பாரிய நீண்டகால விளைவுகளை உருவாக்குவதுஎன்னவெனில் கல்வியை சந்தைக்கு அடிபணியவைக்கும் திட்டங்களாகும். கடந்த மாதம் உயர்பாடசாலைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்குமான அமைச்சர் டயனா கன்னிங்கம் (Dianne Cunningham) கனடாவில் ஒன்டாரியோதான்தனியார், லாபநோக்குடைய பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்கும் முதல் மாநிலமாகஇருக்குமென அறிவித்தார். முன்னர் இவர்அரசாங்க உதவிகளிலிருந்து அதிகரித்த அளவிலானஉதவிகளை பெறுவதற்கு பல்கலைக்கழகங்களும் பிராந்திய பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும்தம்மிடையே போட்டி போடவேண்டுமெனஅறிவித்திருந்தார். அரைவாசி நிதியானது பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறும் மாணவர்கள்எந்தளவிற்கு வேலையை பெற்றுக் கொள்கின்றார்கள் என்ற அடித்தளத்தில் தரப்படுத்தப்பட்டே வழங்கப்படும்.

கடந்த கிழமைகளில்டோரிகள் பொது கல்வித்திட்டத்தில் பாரியமாற்றங்களை அறிவித்துள்ளனர். இம்மாற்றங்கள் தனியார்மயமாக்கலுக்கான பாதைகளைஉடனடியாகத்திறந்து விடாவிட்டாலும்ஏற்கனவே ஒன்டாரியோவில் இருப்பதுபோல் தனியார்பாடசாலைகள் உருவாகவழிவகுக்கும். அரசாங்கத்தினுள் ஒரு பிரிவினர்வாடகைப் பாடசாலை மாதிரியை (Charter School Model) உருவாக்க விரும்புவது ஒருபகிரங்க இரகசியமாகும். இம்மாதிரியின்படிபெற்றோர்கள் கல்விப்பத்திரமும், பொது,தனியார் பாடசாலைகளும் மாணவர்போட்டியிட அனுமதிக்கப்படுவர். ஏற்கனவேஅரசாங்கம் தரப்படுத்தப்பட்ட மாநிலரீதியான பரீட்சைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது பாடசாலைகளை அவை வெளிப்படுத்தும்திறமையின் அடிப்படையில் தரப்படுத்துவதற்கான முதலாவது படியென பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களது கல்வி கணிக்கீட்டுச்சட்டம் 2000 என்பதன் கீழ் டோரிகள் ஆசிரியர்களின்கூட்டு பேரம்பேசலுக்கான உரிமையையும் அவர்களது வேலை நிலைமை சம்பந்தமாகதன்னிச்சையாக மீண்டும் எழுதுவதையும்பறித்தெடுப்பர். ஆசிரியர்களுக்கு வேலைப்பழு,வேலை நிலைமை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தும் உரிமை விரைவில் இல்லாமல்போவதோடு மேலதிக கல்வித்துறைநடவடிக்கைகளில் தாமாக ஆசிரியர்கள்கலந்து கொள்வது அதிபரின் தீர்மானத்தின்படியேசெய்யமுடியும். உயர்பாடசாலை ஆசிரியர்கள்ஒரு நாளுக்கு முழு வகுப்பொன்றிற்கு37 நிமிடம் மேலதிகமாக கற்பிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள். டோரிகள் ஒரு கட்டாய5 வருடத்திற்கு ஒருமுறையான மீள் அத்தாட்சிப்படுத்தப்படும் நடவடிக்கையையும், தமதுஉயர்கல்வி நெறிகளுக்காக ஆசிரியர்களதுசொந்தப்பணத்தில் இருந்தே செலுத்தும்முறையையும் திணித்துள்ளது. இது மட்டுமல்லாதுஇப்புதிய சட்டம் எந்தவொரு பாடசாலைக்குழு அங்கத்தவர் மீதும், அல்லது அரசாங்கத்தின்கல்விக் கொள்கைகளை விமர்சிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு மீதும் நடவடிக்கைஎடுக்கும் பரந்த அதிகாரத்தையும்கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளது.

டோரிகள்அனுசரித்துப்போகும், ஒழுக்கத்திற்குரியபுதிய அமைப்பொன்றை மாநிலப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களின்பொதுக்கல்வி, சமூக சேவைகளின் மீதானபொதுவான தாக்குதலின் ஒரு பகுதியாகஆலோசனைகளுக்கும் விசேட கல்வி நெறிகளுக்குமான நிதி உதவியினை வெட்டியதுடன் டோரிகள்தற்போது பாடசாலைகளில் ஒழுக்ககுழுக்கள் எனக் கூறப்படுபவை தொடர்பாகமுன்மொழிகின்றனர். இதன்மூலம் மாணவர்களைஇடைநிறுத்தவும் வெளியேற்றுவதற்குமானஅதிகாரங்கள் பாடசாலைகளுக்குக்கிடைக்கும்.

டோரிகளின் தாக்குதல்கள்பரந்தளவாக இருக்கையில் தொழிற்சங்கங்களினதும் சமூக ஜனநாயக NDP இனதும்வெட்கங்கெட்ட அடிபணிவும், முற்றானஇயலாமையும் பல தொழிலாளர்களைபின்தங்கவைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.ஹரிசின் அரசாங்கத்தினதும் அதனது பெருமூலதனத்தின் நோக்கங்களுக்கு எதிரான பரந்தமறைவான சமூகத்தின் ஆத்திரம் அங்கிருக்கின்றது.ஒரு தொழிலாள வர்க்க எதிர்ப்பியக்கத்தின்தயாரிப்பிற்கு மிகமுக்கியமானது என்னவெனில்1995 டிசம்பருக்கும் 1997 நவம்பருக்கும்இடையில் இலட்சக் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் இணைந்த அரச எதிர்ப்புவேலை நிறுத்தங்களாலும் எதிர்ப்பு ஊர்வலங்களினாலும் எடுத்துக்காட்டப்பட்ட டோரிஎதிர்ப்பு இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்தொடர்பான அரசியல் மதிப்பீடு ஒன்றாகும். இக்கட்டுரையின் மறுபாகத்தில் எமதுநோக்கமாக இது இருக்கும்.