World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

The Columbia Space Shuttle disaster: science and the profit system

Part 2: Schedule pressures undermined safety considerations

கொலம்பியா விண்கல அழிவு: விஞ்ஞானமும் இலாப அமைப்பு முறையும்

பகுதி 2 : பணிக்கால அட்டவணை அழுத்தங்கள் பாதுகாப்பு கவனங்களை குறைக்கின்றன

By Joseph Kay
20 September 2003

Use this version to print | Send this link by email | Email the author

NASA ஒரு கடுமையான ஏவுதல் கால அட்டவணைக்குள் தன் செயல்களை முடிக்க வேண்டிய மிக உயர்ந்த அளவு அழுத்தங்களும் கொலம்பியா விண்கல விபத்திற்கு நேர்ந்த காரணங்களுள் ஒன்றாகும். இத்தொடரின் முதல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல, இந்த அழுத்தம் NASA நிர்வாகத்தை சுற்றுக்கலத்தின் மீதான முந்தைய நுரைத் தாக்குதல்களின் முக்கியத்துவத்தைக் குறை மதிப்பிடச் செய்தது. கொலம்பியா மீதான தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டதையும் அறிந்த NASA நிர்வாகம் நடந்து கொண்ட முறையையும் இது பாதித்தது. அவர்களுடைய முக்கிய அக்கறை கலத்தில் உள்ளகுழுவினரின் பாதுகாப்பு அல்லாமல், விபத்து எவ்வாறு வரவுள்ள ஏவுதல்களை பாதிக்கும் என்பதைப் பற்றியதாக போய்விட்டது.

இந்த அழுத்தம் நேரடியாகப் புஷ் நிர்வாகத்தில் இருந்து, புஷ்ஷால் நியமிக்கப்பட்ட NASA நிர்வாகியான, சீன் ஓ கீப் (Sean O'Keefe) இன் வழியாக வெளிப்பட்டது. புஷ் நிர்வாகம் நாசாவிற்கு இறுதிக் கெடு ஒன்றைக் கொடுத்திருந்தது. International Space Station (ISS) எனப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் பகுதியை 2004 பெப்ரவரி 19-க்குள் முடிக்க வேண்டும். அதிக அளவு கூடுதலான செலவினங்கள் இல்லாமல் அல்லது அதன் வரவு செலவு திட்டம் கடுமையான குறைப்பிற்கு உட்படுத்தப்படும் அல்லது மனிதனையும் கலத்தில் கொண்டு செல்லும் விண்வெளிச் சுற்று முழுமையாக நிறுத்தப்பட்டு விடும் என்பது தான் அந்த இறுதிக் கெடு ஆகும். பெப்ரவரிக்குள் அந்த இலக்கை எட்ட வேண்டுமானால் நாசாவிற்கு பல பயணங்கள் தேவையாக இருந்ததுடன், சுற்றிகளில் (Orbiter) ஏதாவது எதிர்பாரா சம்பவங்கள் ஏற்பட்டால் முழு செயல் கால அட்டவணையும் தூக்கி எறியப்பட்டுவிடும்.

ஓர் அரசியல் இறுதிக் கெடு

மே 1-ம் தேதி காங்கிரசிற்கு சாட்சியம் அளித்தபோது, சீன் ஓ கிப் "விண்வெளி நிலையத்திற்கான செலவு வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டுமென்று செயல்பட்டால், நிலையம் செய்யக்கூடிய செயல்திறன்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் NASAவின் மனிதனை சுமந்து செல்லும் விண்வெளிப் பயண திட்டத்தின் பரந்த சிறப்பான முறையில் உள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றித் தவறான எண்ணங்களை ஏற்படுத்திவிடும். உறுதிமொழி அளித்ததைச் செய்து காட்டுதல், எதிர்காலத்தின் மனித விண்கலப் பயணம் பற்றிய நம்பிக்கைத் தன்மை பற்றிய நிர்வாகத்திற்கும், காங்கிரஸுக்குமான NASAவுடைய நம்பிக்கைத் தன்மை ஆகியன அந்தரத்தில் தொடங்கிவிடும்." என எச்சரித்திருந்தார். (116)

இதே நிலைப்பாடு நவம்பர் 2001இல் மீண்டும் விண்வெளிநிலையத்தின் நிலைமை பற்றிய அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டிருந்தது. "அரசு நிர்வாகம் NASA தேவையான நிர்வாகச் சீர்திருத்தங்களை, சிறந்த முறையில் முழுமையான மத்திய விண்வெளிநிலையத்தை கட்டி அமைத்துச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர FY 2006 மூலம் ஒதுக்கப்பட்டுள்ள, மற்றும் மற்றைய மனித விண்வெளிப்பயண ஆதாரத்தின் $ 8.3 பில்லியனுக்குள் முடிக்க வேண்டும் எனக் கூறுதல்... NASA இந்த கட்டுப்பாடுகளை நிறைவேற்றவில்லையானால், மத்திய விண்வெளிநிலையத்தை கட்டி அமைக்கும் பணியை நிறைவேற்றுவது முடியாத ஒன்றாகும்" (117). "மத்திய விண்வெளிநிலையத்தை கட்டி அமைக்கும் பணி" என்பது நிலையத்தின் முதல் பகுதி நிறைவு செய்தலை குறிப்பிடுகிறது. இது பெப்ருவரி 19, 2004-ல் STS-120 கலத்தை ஏவும் திட்டத்துடன் முடிக்கப்பட வேண்டும்.

இந்த அறிக்கைகள் மிகவும் முக்கியத்துவமானவை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக NASA விற்கு ஒதுக்கப்படும் வரவுசெலவு திட்டங்கள் பாரிய குறைத்தலுக்கு உட்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் அதனால் குறைக்கப்படும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று திட்ட நிர்வாகிகள் பலரையும் எச்சரிக்க வைத்திருக்கிறது. இப்பொழுது புஷ் நிர்வாகம் இன்னும் கடுமையான கால அட்டவணையைக் கோரியது, இல்லாவிடில் விண் வெளிக் கலத் திட்டத்தில் அதன் முக்கியமான பணிகளுள் ஒன்றாகிய NASA, சர்வதேச விண்வெளிநிலையத்திற்கு (International Space Station) தேவையான பணத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

CAIBயின் அறிக்கை ''வெள்ளை மாளிகையும், காங்கிரஸும் சர்வதேச விண்வெளி நிலையத்தையும், விண்வெளிக்கல திட்டத்தையும் மற்றும் உண்மையில் NASAவையும் சோதனையான நிலையில் இருத்தியுள்ளது. குறிப்பிட்ட தொகை ஒதுக்கீட்டிற்குள் NASA இதை முடித்துக்காட்ட வேண்டும், இல்லாவிட்டால் விண்வெளி நிலையம் கட்டி அமைக்கும் பணி நிறுத்தப்படும் என்ற நிலைமையைச் சிறிதுகூட NASA எதிர்பார்க்கவில்லை. புதிய NASA நிர்வாகம் கால அவகாசப்படி Node 2 ஏவுதலை (STS 120) அதன் விண்கலப்பயணம் மற்றும் விண்வெளி நிலையத் திட்டம் இவற்றிற்கான வெற்றிகரமான அணுகுமுறை என கருதியது. இந்தக் காலகட்டத்திற்குள் ஏவுதல் தேதிப் பணிகளை முடிப்பது கஷ்டம் என்ற கருத்துக்கள் ஒதுக்கித்தள்ளப்பட்டன...'' என குறிப்பிட்டுள்ளது. (117)

நீண்டகாலமாகவே NASA நிதி ஒதுக்கீட்டுக் குறைப்பு முயற்சிகளும், அதன் '' குறைந்த செலவுடையதாக'' கொண்டுவந்ததும், பெப்ரவரி 19, 2004 இறுதிக்கெடும் புஷ் நிர்வாகத்திற்கு முக்கியமானதற்கு காரணம், இது 2004 தேர்தல் பிரச்சார முக்கிய நேரத்தில் வருவதுடன், புஷ்ஷிற்கு எதிரான ஜனநாயகக்கட்சி வேட்பாளர் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற நிலைமையிலாகும். இப்படியான அரசியல் காரணங்கள் NASA வின் தீர்மானங்களை ஆதிக்கம் செலுத்தியது முன்னரும் நடைபெற்றுள்ளது. றேகன் தன்னுடைய 1986 நாட்டின் நிலை உரையில் Challenger ஏவுதல் தொடர்பாக சேர்த்துக்கொள்ள விரும்பியதால் றேகன் நிர்வாகம் Challenger ஏவுதலை மிகக் கடுமையான குளிர் நிலைமையில் செலுத்த அழுத்தம் கொடுத்தது.

விபத்திற்குட்பட்ட கொலம்பியா பயணம், சர்வதேச விண்வெளிநிலையத்திற்கு (ISS) சேவை செய்வதை தனது நோக்கமாக கொண்டிருக்கவில்லை. உண்மையில், மனிதரை ஏற்றிச் செல்வதற்கான மிகப் பழமையான விண்கலத்தில் விண்வெளி நிலையத்தோடு இணைக்கும் அமைப்புக்கள்கூட அதனிடம் பொருத்தப்படவில்லை. ஆயினும்கூட, இதற்குப்பின் வரவுள்ள பட்டியல்படியான ஏவுதல்களின் கொலம்பியா சரியான நேரடிப்படிச் செலுத்தப்படுவதில் அடங்கியிருந்தது. சர்வதேச விண்வெளிநிலையத்திற்குகாக ஏவுதல் செலுத்துவதில் அவசரம் காட்டப்பட்டது. NASAவை அழுத்தத்திற்கு உட்படுத்தியதால் கொலம்பியாவிற்கு இணைப்பு வசதி கொடுத்து நிலையப் பணிகளையும் அதைச் செய்ய வைத்தது.

பெப்ரவரி 2004 காலகெடுக்குள் உள்ள 5 மாதகால அவகாசத்தினுள், நான்கு ஏவுதல்கள் நடத்தப்படவேண்டிய கால அட்டவணை தயாரிக்கப்படும் நிலைக்கு NASA தள்ளப்பட்டது. ''12 மாதத்திற்குள் ஒன்பது ஏவுதல்களை மேற்கொண்டதற்காக 1985TM NASAவை ரோகர்ஸ் ஆணைக்குழு (Rogers Commission-இந்தக் குழுதான் Challenger விபத்திற்கான காரணத்தை ஆய்வு செய்தது ஆகும்) குறை கூறியிருந்தது. அது நான்கு விண்வெளிச் சுற்றிகளால்(Orbiters) மேற்கொள்ளப்படுவதுடன், விண்வெளி நிலையத்தால் உருவாக்கப்படாததன் வெளிப்பாடாகும்.'' (136)

அறிக்கை பொதுவாக அரசாங்கத்தை எந்தக் குற்றச்சாட்டிற்கும் உட்படுத்தாமல் விட்டுவிட்டது. ''நிர்வாக அலுவலகத்திலும் வரவுசெலவு திட்டத்திலும் உள்ள அதிகாரிகளும், NASAவின் காங்கிரஸ் அதிகாரிகளும், இதற்கான துணைக்குழுக்களும் விண்கலம் பாதுகாப்பாக இயக்கப்படுவதற்குப் போதுமான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்ற நினைப்பில்தான் இருந்தன..." (118)

முந்தைய ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு வெட்டினால் விண்கலப் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்ற முன்னைய ஏராளமான எச்சரிக்கைகளினாலும், இந்த அறிக்கையிலேயே மேற்கோள் காட்டப்பட்ட எச்சரிக்கைகளினாலும் இந்த அறிவிப்பை நம்புவது சற்று கடினமாகும். உதாரணமாக, வெள்ளை மாளிகையால் 1990இல் நியமிக்கப்பட்ட குழு ஒன்று, "தம்மிடம் உள்ள வழங்களை கருத்தில்கொள்கையில் NASA செய்துமுடிக்க முனையும் திட்டங்கள் அதிகமாகும். அது குறைந்த காலத்தில் கூடுதலாக செய்ய முனைகின்றது. ஆனால் இந்த எதிர்பாராத செயலுக்கு குறைந்த காலக்கேட்டை வைத்துள்ளது." என்று கண்டுபிடித்துக் கூறியது. (102). 1999இல் முன்பு பயணத்திட்ட அலுவலராக இருந்த டொன் நெல்சன் (Don Nelson) பாதுகாப்புப் பிரச்சினைகளால் விண்வெளி வீரர் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நேரடியாக கிளிண்டன் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். நிறுவனத்திற்குப் பல ஆண்டுகள் நிதி ஒதுக்கீட்டு குறைப்பிற்கு ஆதரவு கொடுத்த முன்னாள் NASA நிர்வாகியான டானியல் கோல்டின்(Daniel Goldin), 1999 ஜூன் மாதம் பாதுகாப்பு பலப்படுத்த கூடுதலான நிதி ஒதுக்கீடு தேவை என்று வெள்ளை மாளிகைக்கு கடிதம் எழுதினார்.

இவை பத்து ஆண்டுகளில் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அத்தகைய எச்சரிக்கைகளில் ஒரு சில தாம். NASAவின் துணையுடன் நிர்வாகமும், காங்கிரஸும் மேற்கொண்ட கொள்கை உண்மையிலேயே குற்றத்தன்மை கொண்டது ஆகும். இது பொறுப்பில்லாமல் கொலம்பிய பயண இயக்கும் குழுவின் வாழ்க்கையை ஆபத்திற்குட்படுத்திய கொள்கையாகும்.

 

ஏவுதலுக்கு பின்னான விளைவுகள்

கால அட்டவணை அழுத்தம் STS 107 ஏவுதலை விரைவுபடுத்துதலை மட்டும் ஆளுமைக்குட்படுத்தவில்லை. NASA நிர்வாகம் நுரைத்தாக்குதலைக் கண்டுபிடித்தவுடன் நடந்துகொண்ட முறையையும் அது பாதித்தது. ''கொலம்பியாவின் நுரைத்தாக்குதல் பற்றிய பெரும்பாலான கலத்திட்ட அக்கறைகள், சுற்றிக்கொண்டிருக்கும் கலத்தைப் பற்றி இல்லாமல், கால அட்டவணைக்கு இது எவ்வாறு அச்சுறுத்தலைக் கொடுக்கும் என்பது பற்றி இருந்தது.'' (139)

நுரைத்தாக்குதலின் தன்மை பற்றி தெளிவானவுடன் இது பொறியியலாளர்களுக்கு தாக்குதலின் பாதிப்பு தொடர்பாக சரியான மதிப்பீட்டை வழங்கி, அவர்களால் பொருத்தமான நடவடிக்கை எடுக்க செய்யக்கூடியதாக இருந்திருக்கும். முதலில் இதைக் கண்டுபிடிப்பது ஏவுதலின் பாதையைத் தொடர்ந்து கண்காணிக்கும் புகைப்படக் கருவிகள் சரிவரப் பராமரிக்கப்படாததால் கடினமாயிற்று. ஏவப்பட்ட சிறிது நேரத்தில் புகைப்பட ஆய்வுக்குழு தாக்குதலின் அளவைப் பற்றி நன்கு நிர்ணயிக்க, இராணுவ இருப்பிலுள்ள கலத்தின் அடிப்பக்க புகைப்படத்தை கேட்டனர். இதுதான் அத்தகைய படங்கள் மூன்று முறைகள் கேட்கப்பட்ட முதல் தடவையாகும்.

CAIB அறிக்கை இரண்டாம் நாள் பயணத்தின்போதே விண்வெளிக்கல பொறியியலாளர்கள் நுரைப்பொருளாலான பாதிப்பை அணுகிய முறைக்கும் தரையிலிருக்கும் NASA உம், United Space Alliance நிர்வாகமும் கையாண்ட அணுகுமுறைக்குமிடையே வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. லொக்ஹீட், போயிங் இணைப்பு முயற்சிதான் யுனைடட் அல்லையன்ஸ் (United Space Alliance) ஆகும். NASAவின் பெரும் பகுதி ஒப்பந்தம் இவர்களிடம்தான் இருந்தது. பொறியியலாளர்கள் கூடுதலான தகவலைக் கோரியபோது விண்கல வாகனப் பொறியியல் அலுவலக திட்டத் தலைவர் ரால்ப் ரோ (Ralph Roe), United Space Alliance பில் ரீவ்ஸ் (Bill Reeves) உட்பட நிர்வாகிகள் அனைவரும் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை குறைமதிப்பீடு செய்ய முற்பட்டனர்.

தாக்குதலின் அளவு பற்றித் தெளிவான சான்று இல்லாத நிலையில் போயிங் பொறியியலாளர்கள் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற மதிப்பீட்டைக் கண்டுபிடிக்க முயன்றனர். கொலம்பியாவைத் தாக்கியதைப் போன்ற பெரிய பொருள்களை ஆராய வடிவமைக்கப்படாத Crater என்ற கணித மாதிரியைப் பயன்படுத்தினர். போயிங்கின் இணைப்பு முறை செயல்பாடுகள் இதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. ஏனெனில் சமீபத்திய இடமாற்றங்களால் ஆய்வை நடத்திய பொறியியலாளர் மாதிரியின் துல்லியத்தையும், பயன்பாட்டையும் பற்றி அதிக அனுபவம் பெறாதவறாக இருந்தவர் ஆவார். உண்மையில் கிரேட்டர் மாதிரி (Crater model) சுற்றும் கலம் பெரும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது என்றுதான் கணித்தது. இந்த முடிவுகள் ஏற்கப்படாததுடன், இம்மாதிரி தாக்குதலை மிகையாக மதிப்பிட்டுவிட்டதாகவும், கொலம்பியாவின் ஓடுகளிலுள்ள சிறப்புத்தன்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கருதப்பட்டது.

இந்த மாதிரி தாக்குதலின் சரியான அளவைப் பற்றி நிர்ணயிக்கப் போதுமானது அல்ல. தாக்குதல் நடந்த இடம் பற்றிக் கூடுதலான தகவல், துல்லிய கணிப்புக்குத் தேவைப்படும். எனவேதான் எஞ்சிய பகுதிகளில் மதிப்பீடு நடத்திய குழுவின் பொறியாளர்கள் கலத்தின் போக்கு பற்றிய புகைப்படங்களைப் பற்றிக் கேட்டிருந்தனர்.

புகைப்படங்கள் பற்றிய வேண்டுகோள்கள், பின்னர் பயண மேலாளர் லிண்டா ஹாமினால் (Linda Ham) இரத்து செய்யப்பட்டன. வேண்டுகோள்கள் முறையான அதிகார படிமுறைகள் மூலம் வரவில்லை என்பதுதான் ஹாமினுடைய கருத்து என்று குழு தெரிவிக்கிறது. இந்த வேண்டுகோள் நுரைத்தாக்குதல் நிகழ்ச்சியை ஆய்வுசெய்வதற்கு பொறிப்பான எஞ்சியபொருட்கள் மதிப்பீட்டு குழுவிடமிருந்துதான் (Debris Assessment Team) வந்தது என்பது தனக்குத் தெரியாது என்று ஹாம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மன்னிப்புக்கூறல்கள் அனைத்துமே உண்மையானவையல்ல. கொலம்பியா தொடர்பான புகைப்படங்கள் கோரினால் அது செய்யும் மற்ற வேலைகள் பாதிக்கப்பட்டு அட்டவணைப்படி செயலாற்றுவதில் தடைகள் ஏற்படும் என்பதே லிண்டாவினதும், மற்றைய மேலாளர்களினதும் முக்கிய பிரச்சனையாகும். மேலும் அத்தகைய கோரிக்கை தாக்குதலின் தீவிரத்தை ஒப்புக்கொண்டது போலாகிவிடும். அவர் குறிப்பிட்டுள்ளதுபோல், ஹாம் உண்மையிலேயே எஞ்சிய பொருட்கள் மதிப்பீட்டுக் குழுவின் செயலைப் பற்றி அறிந்திராவிட்டால், பாதுகாப்பு நலன்கள் NASA வால் வியக்கத்தக்க அளவில் ஒதுக்கித்தள்ளப்பட்டிருந்ததாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஏனென்றால் அக்குழு ஒரு நிகழ்ச்சியைப் பற்றி நன்கு ஆராய்ந்து பயணம், அதன் குழுவினர் ஏதேனும் பெரும் விபத்திற்குட்பட்டுவிடுவரோ என்பதைப் பற்றிய பொறுப்பையும் கொண்டிருந்தது.

நுரைத்தாக்குதலின் முக்கியத்துவம் பற்றி குறை மதிப்பீடு செய்ததற்கு முந்தைய பயணத்தில் அப்படியான தாக்குதல் முக்கியத்துவமற்ற ஒன்றாக எடுக்கப்பட்டதே அதற்கான பொருத்தமான விளக்கம் என குறிப்பிடுகிறார். முன்னைய வாதம் தவறு என்று இவருக்கு நன்கு தெரியும். ''அது குப்பை போன்றது; இப்பொழுதும் அப்படித்தான்'' என்று இவர் பயணத்திட்ட மேலாளர் Ron Dittemore இற்கு 21.1.2003 இல் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹாமிற்கு நுரைத்தாக்குதலின் தன்மை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து பற்றித் தெரிந்திருந்தது என்பதற்கு விவாதங்களில் பங்குபெற்ற ஒரு நபரின் தனிக் குறிப்புக்கள் உணர்த்துகின்றன. அவர் ''புகைப்படத்திற்கான கோரிக்கை தொடரப்படவில்லை. ஏனெனில் நாம் எதையாவது கண்டுபிடித்தாலும், அதைப் பற்றி ஒன்றும் செய்வதற்கில்லை; இத்திட்டத்தில் வழங்களை இதற்குச் செலவழிக்க இடமில்லை என்று லிண்டா ஹாம் கூறினார்'' (154). உண்மையில் CAIB அறிக்கை சுட்டிக்காட்டுவது போல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என அறிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் வேறொரு கலத்தை அனுப்பி கொலம்பியா குழுவினரை அதிலிருந்து வெளியேற்றியிருக்க முடியும்.

புகைப்படங்கள் தொடர்பான கோரிக்கையை ஹாம், NASA மற்றும் பிற ஒப்பந்த அதிகாரிகளின் நிராகரித்தது, எஞ்சியபொருள் மதிப்பீட்டுக்குழு பொறியியலாளர்களை சங்கடத்தில் நிறுத்தியது. அவர்கள் '' தாக்கப்பட்ட இடத்தைப் பற்றிக் கட்டாய பரிசோதனை செய்ய தேவை/நியாயக் காரணம் வேண்டும்'' என்று பணிக்கப்பட்டிருந்தனர் (186). பொறியியலாளர்கள் புகைப்படங்களுக்கான கட்டாயத் தேவையை (mandatory need) அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை யுனைடட் ஸ்பேஸ் அலையன்ஸ் மேலாளர் ஒருவரால் விடுக்கப்பட்டது.

ரோட்னி ரோஷா (Rodney Rocha) என்னும் எஞ்சிய பொருள் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் ஒருவர் தன்னுடைய சில கவலைகளை தன் மேலாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினார். ''சில நல்ல காட்சிகளும்.... சில பயங்கர காட்சிகளும், தாக்குதல் எந்த அளவிற்கு இறகுப் பகுதி, இடம் இவற்றில் பரந்திருந்தது என்பதைப் பொறுத்துக் காண முடியும்.... ஆனால் எங்களுக்கு இன்னமும் தாக்குதலின் சரியான அளவும் தன்மையும் தெரியவில்லை. அத்துடன் நல்ல படங்கள் வழங்கப்படாததால், அத்தகைய உயர்மட்ட ஆய்வு, மதிப்பீடுகள் இல்லாவிட்டால் பணியில் கணிசமான நிச்சயமற்ற முடிவுகள்தான் எஞ்சியிருக்கும்`` (156-157).

மற்றொரு மின்னஞ்சலில் ரோஷா ''என்னுடைய பணிவான தொழில்நுட்பக் கருத்தில், மற்றைய இடங்களிலிருந்து கலத்தின் கூடுதலான புகைப்படங்களை உதவி கேட்கக்கூடாது என்ற SSPயின் பதில் ஒரு தவறான (கிட்டத்தட்ட பொறுப்பற்றத்தனமான) விடை'' எழுதினார் (157). இந்த மின்னஞ்சல் NASAவிற்கு அனுப்பப்படவில்லை. தன்னுடைய அதிகாரிகளால் கூடுதலான முறையில் பாதுகாப்பு தொடர்பான கவனத்தை பலமாக எழுப்பக்கூடாது என்ற அழுத்தம் இருந்திருக்கக்கூடும்.

நுரைத்தாக்குதல் நடந்துள்ளது என்ற உண்மை கலத்திலுள்ள குழுவினருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. பணி நிர்வாகக்குழு, பணி இயக்குனர் அலுவலகத்தின் தலைவர் பில் என்கீலெளப் (Phil Engelauf) கூறியதாகத் பின்வருமாறு தெரிவிக்கிறது: ''யாராவது நாட்களை அதிகரிப்பதை பற்றிப் பேசுகிறார்களா என்று பயணக்குழு நேற்றிரவு ஒரு குறிப்பை அனுப்பியிருந்தது. இல்லை, கவலைகள் இல்லை என நாங்கள் அவர்களுக்கு தெளிவாக்கிவிட்டோம்'' (161). ஒரு வாரத்திற்குப் பின் கொலம்பியா திரும்பி நுழைந்தபோது எரிந்தது.

(தொடரும்)

See Also :

பகுதி 1: விபத்தின் தொழிற்நுட்ப காரணமும் விண்வெளிக்கலத்தின் கட்டுமானத்தின் தேய்வும்

Top of page