ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

සසපට හා සසජාතශිට එරෙහි යාපනය ශිෂ්‍ය සංගම් නායකත්වයේ ප‍්‍රජාතන්ත‍්‍ර විරෝධී කි‍්‍රයාවන්ට එරෙහි වනු !

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கு எதிராக யாழ்ப்பாண மாணவர் ஒன்றிய தலைமைத்துவத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்திடு!

Statement of SEP and IYSSE (Sri Lanka)
10 May 2017

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்களின் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அரசியல் தலையீட்டை தடுப்பதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைமைத்துவத்தால் மேற்கொள்ளப்படும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்க்குமாறு சகல பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

பொய் வழக்கு சுமத்தி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின், மாருதி சுசுகி தொழிற்சாலையின் தொழிலாளர்கள் பதின்மூன்று பேரை நிபந்தனையற்று விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்படும் சர்வதேச பிரச்சாரத்துக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவை வெல்வதன் பேரில் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. மேற்கொண்ட தலையீட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிறுத்த முயற்சித்தது. இது இத்தகைய தடை விதிப்புகளில் அன்மையதாகும்.

ஏப்ரல் 25 அன்று பல்கலைக்கழகத்துக்குள் செய்த தலையீட்டில், நாம் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் ஆர்வம் மிக்க பிரதிபலிப்பை வென்றபோது, மாணவர் ஒன்றியத்தின் தலைவர் நவரட்னம் அனுஜன் இன்னும் சில மாணவர்களுடன் அங்கு வந்து, "பலாத்காரமாக அனுமதியின்றி பல்கலைக்கழகத்துக்குள் எந்தவொரு அரசியல் பிரச்சாரத்தையும் செய்ய அனுமதிக்க முடியாது" எனக் கூறிக்கொண்டு, எமது அமைப்புகளின் உறுப்பினர்களை அச்சுறுத்தினார். பல்கலைக்கழகத்துக்குள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கும் ஜனநாயக உரிமைகள் உண்டு எனக் கூறிய போது, அனுஜன் தலைமையிலான குழு, பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப் படைகளை அழைத்து எமது உறுப்பினர்களை வெளியேற்றியது.

முன்னதாக, கடந்த டிசம்பரில், "ஏகாதிபத்திய போரும் தமிழ் தேசியவாதமும் சோசலிசத்திற்கான போராட்டமும்" என்ற தலைப்பின் கீழ் நடந்த கூட்டத்திற்காக நாம் பிரச்சாரம் செய்தபோதும், அனுஜன் தலைமையிலான மாணவர் ஒன்றியத் தலைமைத்துவம் இதே போன்ற இடையூறைச் செய்தது.

வட மற்றும் தெற்கில் மாணவர்கள் கல்வி வெட்டுக்களுக்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் பொலிஸ் பலத்தைப் பயன்படுத்தும் நிலைமையிலேயே அவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வடக்கை ஆக்கிரமித்திருக்கும் இராணுவம், விசேடமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை அடக்குமுறையின் இலக்காகக் கொண்டுள்ளது.

மாணவர் ஒன்றியத் தலைமைத்துவத்தின் இந்த தலையீடு, தான் விரும்பும் அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதற்கும் அந்தக் கருத்துக்காக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வென்றெடுப்பதற்கும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு உள்ள ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதலாகும். அது மட்டுமன்றி, இது ஜனநயாக ரீதியான கலந்துரையாடலின் மூலம், உலகின் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றிய பகுப்பாய்வுகளை கற்றுக்கொள்ளவும், அதே போல், தாம் எதிர்கொள்ளும் பிரதானமான ஜனநாயக மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் வேலைத் திட்டமொன்றை தேடிக்கொள்ளவும் முயலும், அதிகப் பெரும்பான்மையான மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களினதும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக தடுப்புச் சுவர் எழுப்புவதாகும்.

அனுஜன் உட்பட மாணவர் ஒன்றிய தலைமைத்துவமானது ஜனநாயக அடிப்படைகளுக்கு முற்றிலும் எதிரான அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இது, "பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஒப்புதல்" பற்றிய அனுஜனின் கருத்தின் மூலம் அம்பலப்பட்டுள்ளது. "பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அடிபணிந்த அரசியல்" என்பது, இலங்கையில் கொழும்பு ஆட்சியினதும் அதனுடன் பினைந்துள்ள வட மாகாண சபையை ஆட்சி செய்யும் தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியலுக்கு ஏற்ப செயற்படுவதாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கில் உள்ள கட்சிகள், தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இலங்கையின் தற்போதைய அமெரிக்க சார்பு சிறிசேன விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் அதே வேளை, தீவிரமான தேசியவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டுள்ளன. இந்தக் கட்சிகள் தமது நலன்களுக்காக கொழும்பு அரசாங்கம், இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன. அதன் மூலம் தமது உரிமைகளை பெற முடியும் என மக்களை ஏமாற்றுவதில் ஈடுபட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர்கள், இத்தகைய அரசியலுக்கு ஆதரவு கொடுத்து, பல்கலைக்கழகத்துக்குள் அதற்கு தடை ஏற்படாமல் காவல் காக்கின்றனர்.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கு எதிராக மாணவர்களை தூண்டி விடுவதற்கு, பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்பை பெறுவதைத் தவிர, மாணவர் ஒன்றிய தலைமைத்துவத்தால் வேறொன்றும் முடியாமல் போனது. பெரும்பான்மையான மாணவர்கள் இந்த தலைமைத்துவத்தில் இருந்து தூர விலகிச் செல்கின்றனர் என்பதே இதில் இருந்து தெரிய வருகின்றது. மாணவர் ஒன்றியத் தலைமையில் உள்ள இந்த தலைவர்கள், மாணவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் பொலிஸ்காரத்தனத்தை கையில் எடுக்க முயற்சிக்கின்றனர்.

எந்தவொரு ஜனநாயக முறைகளும் இல்லாமல், தெற்கில் மாணவர்களின் தலைமைத்துவத்தை எடுத்துக்கொண்டிருக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) ஒரு பாகமான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் (அ.ப.மா.ஒ.), இதே போன்ற மாணவர் சங்கங்களும் “மாணவர் அரசியல்” என்ற சாக்குப் போக்கின் கீழ், தெற்கில் பல்கலைக்கழகங்களில் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் அரசியல் தலையீடுகளை நிறுத்துவதற்கு மேற்கொள்ளும் ஜனநாயக விரோத தலையீடுகளுடன், யாழ்ப்பாண மாணவர் ஒன்றிய தலைமைத்துவத்தின் நடைமுறைகள் ஒத்ததாக இருக்கின்றன.

இந்த சங்கங்கள், இலங்கையின் மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியை மூடி மறைத்து, முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் எதிர்ப்பு அரசியல் மூலம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற உரிமைகளை வெற்றிகொள்ள முடியும் என்ற மாயைக்குள் மாணவர்களை மூழ்கடிக்கின்றன. அ.ப.மா.ஒ. அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பெயரில், இப்போது முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவின் கூட்டு எதிர்க்கட்சி மற்றும் இனவாத குழுக்களுடன் கூட்டணி வைத்துள்ளது.

கடந்த அக்டோபரில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதன் போது இது வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆட்சியின் விளைவு என சுட்டிக் காட்டும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. செய்த பிரச்சாரத்தை தடுக்க மாணவர் ஒன்றிய தலைமைத்துவம் முயன்றது. இந்த "துப்பாக்கிச் சூடு பொலிசின் பிழையே அன்றி அரசாங்கத்தின் தவறு அல்ல" என்று மாணவர் ஒன்றியம் கூறியது.

மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கான பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவித்து உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய மாணவர்கள், தாம் இந்திய அரசாங்கத்தினதும் நீதித்துறையினதும் தாக்குதலை எதிர்ப்பதாகவும், அது பற்றிய கலந்துரையாடலை பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்ய விரும்புவதாகவும் கூறினர். அதே போல், பல்கலைக்கழகத்துக்குள் நடக்கும் அனைத்து கலந்துரையாடல்களும் மாணவர் ஒன்றியத்தின் ஒப்புதல் மூலமே இடம்பெற வேண்டும் என்ற ஒன்றியத்தின் கொள்கைகயை எதிர்ப்பதாகவும் சில மாணவர்கள் கூறினர்.

மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல், உலகம் பூராவும் ஆளும் வர்க்கங்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்துவிடும் தாக்குதல்களில் மிகவும் கொடியதாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தியவாதிகள், பாசிச பாணியிலான தலைவரான டொனால்ட் ட்ரம்ப்பை முன்னிலையில் கொண்டு ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் உலகப் போரைத் தூண்டிவிட்டு ஒட்டு மொத்த மனித குலத்தையுமே அதற்கு இரையாக்குவதற்கு வேகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான பூகோள-அரசியல் தலையீட்டுக்காக, இந்தியாவை அமெரிக்கா அரவணைத்துக்கொள்வது, பிராந்தியத்தில் அணு ஆயுதங்களை கொண்டுள்ள இந்தியா-பாக்கிஸ்தானுக்கு இடையில் பெரிய அளவிலான போர் ஆபத்தை தூண்டிவிட்டுள்ளது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போர் குற்றங்களுக்கு இலங்கையின் கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் பொறுப்பாளிகளாவர். இந்த போர்க் குற்றங்கள் சம்பந்தமான விசாரணையை அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் மற்றும் இந்தியாவும் குப்பையில் போட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மட்டும் முடிவற்ற மனிதப் படுகொலைகளுக்கும் மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டதற்கும் அமெரிக்கா பொறுப்பாளியாகும். இந்தியாவில் காஷ்மீரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் படுகொலைகள் உட்பட, நாட்டுக்குள் சிறுபான்மை பகுதியினருக்கு எதிரான இடைவிடாத ஒடுக்குமுறையை பிரதமர் மோடியின் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இத்தகைய ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் முதலாளித்துவ தலைவர்கள் ஊடாக தமிழ் மக்களுக்கு நீதி அல்லது சலுகைகள் பெற முடியும் என கூறிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பின்னாலேயே மாணவர் ஒன்றியத் தலைமைத்துவமும் அணிசேர்ந்துள்ளது.

யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறும், இராணுவம் மற்றும் அரசாங்கத்தால் வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுக்குமாறு கோரி கடந்த மாதம் 27ம் திகதி நடைபெற்ற ஹர்த்தாலில் ஆயிரக்கணக்கான கணக்கான வட-கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பங்கேற்றனர்.

அரசாங்கத்தின் இனங்களுக்கு இடையிலான சமரசம் என அழைப்பதன் கீழ், நாடு முழுவதும் குறிப்பாக வட-கிழக்கில், அரசாங்கத்தின் ஆதரவு கொண்ட சிங்கள பேரினவாத கும்பல் மற்றும் இராணுவத்தின் பிரிவும் இனவாத ஆத்திரமூட்டல்களை தூண்டிவிடுகின்றன. கடந்த ஆகஸ்ட்டில், சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் மத்தியில் தூண்டிவிடப்பட்ட மோதல் இம்மாதிரியான ஆத்திரமூட்டல்களின் விளைவாகும். முப்பது ஆண்டுகால யுத்தத்தின் பின்னரும் வட-கிழக்கில் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அதன் அதிகாரத்திலான ஆட்சியே நிலவுகிறது.

கொழும்பு நிர்வாகம், நாடு முழுவதும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தும் நிலைமைகளின் கீழ், கல்வி, சுகாதாரம் உட்பட பொதுநல வெட்டுக்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் கல்வி உரிமைகள் வெட்டப்படுவதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் விரிவுரை மண்டபங்கள், கலை அரங்குகள், மாணவர் விடுதிகள், விளையாட்டு வசதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் உட்பட கடுமையான வசதிகள் பற்றாக்குறை இதன் ஒரு பாகமாகும். இத்தகைய தாக்குதல்களுக்கு பொறுப்பாளிகளான ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் விக்கிரமசிங்கவுடனேயே, இந்தப் பற்றாக்குறைகள் மற்றும் மாணவர்கள் கொல்லப்பட்டது உட்பட பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு என்று கூறிக்கொண்டு, மாணவர் ஒன்றியத் தலைவர்கள் அர்த்தமற்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

இந்த சூழ்நிலையிலேயே சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தை அபிவிருத்தி செய்வது அத்தியாவசியமாகியுள்ளது. சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் வடக்கிலும் தெற்கிலும் இந்தப் போராட்டத்தை அபிவிருத்தி செய்யும் பரந்த மற்றும் இன்றியமையாத பணியிலேயே ஈடுபட்டுள்ளன. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவது இந்தப் போராட்டத்துடன் பிணைந்துள்ளது. ஏகாதிபத்தியத்துக்கு கொழும்பு அரசாங்கத்துக்கு தமிழ் மற்றும் முஸ்லீம் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராக, சோசலிச முன்நோக்குக்காக போராடி, அதை செயல்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஆட்சிக்கு கொண்டுவருவதன் மூலமே இதைச் செய்ய முடியும். இந்த போராட்டம் இந்தியா உட்பட தெற்காசியாவில் சர்வதேச சோசலிசத்துக்காக முன்னெடுக்கும் போராடத்தின் ஒரு பாகமாகும். ஏகாதிபத்திய போரை நிறுத்துவதற்காக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தினதும் இளைஞர்களதும் சோசலிச இயக்கத்துக்காக நாம் போராட வேண்டும்.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் சிங்களம் மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக கொழும்பில் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் முன்னெடுத்த இனவாத யுத்தத்துக்கு எதிராகவும், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து, சோசலிச வேலைத் திட்டத்துக்காக போராடி வந்துள்ளது. மாருதி சுசுகி தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு எதிரான போராட்டமானது பிராந்தியத்தில் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கு எதிராக மாணவர் ஒன்றியம் முன்னெடுக்கும் ஜனநாயாக விரோத நடவடிக்கைகளுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோல், சுயாதீனமாக மாணவர் சங்கங்களை அமைக்கவும், கருத்துத் தெரிவிக்கவும் மற்றும் தாம் விரும்பிய அரசியலைச் செய்வதற்கும் உள்ள உரிமையை காக்க அணிதிரளுமாறு நாம் மாணவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஏகாதிபத்திய சக்திகளை நோக்கித் திரும்பும் தமிழ் முதலாளித்துவ கட்சிகளதும் அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் மாணவர் ஒன்றியத்தினதும் வேலைத் திட்டத்துக்கு எதிராக, மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தையும் சோசலிச, புரட்சிகர வேலைத் திட்டத்தை நோக்கியும் திரும்ப வேண்டும்.

இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஐ.வை.எஸ்.எஸ்.இ. கிளையை யாழ்ப்பாணம் உட்பட பல்கலைக்கழகங்களில் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்.