ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

More than two thousand sign petition to stop Google censorship

கூகுள் தணிக்கையை நிறுத்த கோரும் மனுவில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டனர்

By Zac Corrigan
22 August 2017

WSWS மீதான முக்கிய இலக்குடன், சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத்தளங்களை அணுகுவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்ட, தொழில்நுட்ப பேராற்றல் மிக்க நிறுவனமான கூகுள் மூலம் தேடல் முடிவுகளை கையாள்வதற்கு எதிராக ஆகஸ்ட் 14 ம் தேதி உலக சோசலிச வலைத் தளம் மனு ஒன்றைத் தொடங்கியது. கூகுளின் உயர்மட்ட நிர்வாகிகள், “பேச்சு சுதந்திரம், சுயாதீன சிந்தனை மற்றும் தணிக்கை செய்யப்படாத தகவல்களை பெறும் அடிப்படை உரிமைகள் மீதான அவர்களது தாக்குதலை” நிறுத்தக் கோரும் இந்த மனுவில் ஒரு வாரத்திற்கு பின்னர் குறைந்தபட்சம் 70 நாடுகளிலிருந்து 2,000 க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கூகுளின் நடவடிக்கைகள் குறித்த WSWS இன் அம்பலப்படுத்துதலை WikiLeaks இன் நிறுவனரான ஜூலியன் அசாஞ்ச் ஒரு இணைப்பை ட்வீட் செய்த பின்னர், வார இறுதியில் கையெழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஏப்ரல் 25 ம் தேதி, “போலி செய்தி” ஐ எதிர்ப்பதற்கான சாக்குப்போக்கில் அறிவிக்கப்பட்டிருந்த கூகுளின் தணிக்கைத் திட்டம், WSWS இன் தொடர்ச்சியான தொடர் கட்டுரைகள் மூலமாக முற்றுமுழுதாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல், 13 முக்கிய முன்னணி வலைத் தளங்கள் கூகுள் தேடல் முடிவுகளில் இருந்து ஒட்டுமொத்தமாக புதைக்கப்பட்டுள்ளது அல்லது விலக்கப்பட்டுள்ளது என்பதானது அவர்களது வாசகர்களிடையே ஒரு பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது. கூகுள் தேடல்களிலிருந்து உருவான அதன் வாசகர் தேடல் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கை இழந்து WSWS தான் மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. முன்னர், உலக சோசலிச வலைத் தளத்திற்கு அதன் வாசகர்களை இட்டுச்சென்ற 45 தேடல் சொற்கள் இப்போது கூகுள் ஆல் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் இருந்தபோதிலும், குறிப்பாக இந்த தணிக்கையை அம்பலப்படுத்தும் சாதனங்களை பிரபலமாக்கியதனாலும், WSWS இன் கட்டுரைகளை விநியோகிப்பதில் வாசகர்கள் செய்த முயற்சியினாலும் அதன் வாசகர்களின் எண்ணிக்கை இன்னமும் அதிகமாகவே உள்ளது.

ஆதரவளிக்கும் அவர்களது செய்திகளுடன், ஆயிரக்கணக்கானோர் மனுவில் கையெழுத்திட்டுள்ளதன் மூலம் பெருநிறுவன-அரசு தணிக்கைக்கு தங்களது ஆழ்ந்த விரோதப் போக்கை காட்டியதோடு, கூகுள் நடவடிக்கைகள் மூலம் முன்வைக்கப்படும் மிகுந்த ஆபத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் WSWS முக்கிய பங்காற்றியதைப் பாராட்டி அவர்களது கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தினர்.

ஆஸ்திரேலியாவில் இருந்து கேற் என்பவர், “WSWS குறித்த கூகுள் தணிக்கையை பலமாக நான் எதிர்க்கின்றேன். உலக சோசலிச வலைத் தளத்தின் மீது வழங்கப்பட்ட பகுப்பாய்வு அதிகாரபூர்வமானது என்பதோடு, தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையை எடுத்துக் கூறும் ஒரே வலைத் தளமும் இதுவேயாகும். தினசரி அடிப்படையில், அணுஆயுத போர் அச்சுறுத்தல் மூலமாக மனிதகுலத்தின் எதிர்காலம் அச்சுறுத்தப்படுகின்ற ஒரு உலகில் ஏதோ ஒன்று மிகவும் தேவைப்படுகின்றது. WSWS ஐ தடுப்பது என்பது பேச்சு சுதந்திரம் மற்றும் சுதந்திர சிந்தனை மீதான ஒரு திட்டமிட்ட தாக்குதல் ஆகும், மேலும் தணிக்கை செய்யப்படாத தகவல்களை பெறுவது போன்ற மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகள் மீதான இந்த தாக்குதலை கூகுள் நிறுத்தவேண்டுமென்று நான் கோருகிறேன்” என்று எழுதினார்.

Intercept வலைத் தளத்தின் கடந்த ஆண்டு அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டவாறு, கூகுள் வேறு எந்த நிறுவனத்தையும் விட வெள்ளை மாளிகை உறுப்பினர்களின் செல்வாக்கை நாடி அதிகளவு செலவிடுகின்றது, மேலும் இந்த இரண்டு அமைப்புகளுக்கும் இடையே ஒரு நிஜமான சுழலும் கதவும் இருக்கின்றது. ஒபாமா தலைமையின் போது வெள்ளை மாளிகையில் கூகுளின் செல்வாக்கானவர்ககள் தான் வாராந்திர கூட்டங்களை நடத்தினர்.

கையெழுத்திட்ட பலரும் குறிப்பாக இந்த முறையற்ற உறவைப் பற்றி கவலையை வெளிப்படுத்தினர். கியூபெக்கிலிருந்து ஜியோஃப்ரே என்பவர், “கூகுள் அமெரிக்க அதிகாரத்துவ உயரடுக்குடன் இணைந்திருக்கின்றது என்பதோடு, அரசின் ஆழ்ந்த கண்ணியமற்ற வேலைகளை செய்வதன் மூலம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அதன் ஏகபோக உரிமையை பாதுகாக்கின்றது, அதாவது பிரதான ஊடகங்களுக்கு எதிராக மாற்று ஊடகங்களையும், நேரடி பயனாளர்களையும் ஒடுக்குவதாகும்” என்று குறிப்பிட்டார்.

தனியார் நிறுவனம் குறித்த அபாயம், தகவல் தொடர்பு வழிவகை மீதான ஏகபோக கட்டுப்பாடு போன்றவற்றைச் சுட்டிக்காட்டும் மற்றொரு கருத்து நியூசிலாந்தில் டெனிஸிடமிருந்து பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: “கூகுள் ஒரு தனியார் நிறுவனமாக உள்ளது, இருப்பினும் ஒரு பொது பயன்பாட்டிற்கான குணாம்சங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டுள்ளது. அதன் சந்தை ஆதிக்கத்தின் விஸ்தீரணம் அதற்கு மகத்தான சக்தியை தருகின்றது. இப்போது மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை குறைப்பதற்கு அதன் சக்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உயர்மட்ட வகுப்பினரின் இலாபகர மற்றும் அரசியல் ஆதிக்க நோக்கங்களினால் கட்டுப்படுத்தப்படாத உலக சோசலிச வலைத் தளம், அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. சாதாரண மக்களின் நலன்களுக்கு கவனத்தை செலுத்தும் மற்றும் அது இட்டுச்செல்லும் ஆதாரங்களை பின்தொடரக்கூடிய ஒரு முன்னோக்கை காணக்கூடிய ஒரு இடமாக இது உள்ளது.”

சர்வதேச சட்டத்தை மீறி செயல்படுவதாக கூறி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோன் குறிப்பிடுகிறார். மேலும் அவர், “பேச்சு வெறுமையானது ஆனால், ஐ.நா. எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்று கூறுகிறது; இந்த உரிமை என்பது, எல்லைக்கு உட்பட்டோரை பொருட்படுத்தாமல், வாய்வழியாக, எழுத்து அல்லது அச்சு பிரதி வாயிலாக, கலை வடிவம் மூலமாக, அல்லது அவரவர் விருப்பத்தின் பேரிலான வேறு ஏதேனும் ஊடகத்தின் மூலமாக என்ற விதத்தில் அனைத்து வகையான தகவல்களையும், கருத்துக்களையும் தேட முனைவது, பெறுவது மற்றும் வழங்குவதற்கான சுதந்திரத்தை உள்ளடக்கியது (ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனத்தின் 19 வது பிரிவில் இருந்து). உலக சோசலிச வலைத் தளத்தை மட்டுமல்ல, தாக்குதலுக்கு உட்பட்ட அனைத்து போர் எதிர்ப்பு வலைத் தளங்களையும் பாதுகாப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

இன்னும் சிலர் தகவல்கள் மீதான கூகுளின் அடக்குமுறையின் அறிவொளிமயமாக்கல்-எதிர்ப்பு குணாம்சத்தை குறிப்பிடுகின்றனர். மிக்சிகனிலிருந்து வெசலின் என்பவர்,  “மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் முன்னோக்குகளையும், மக்கள் அவர்களோடு பகிர்ந்துகொள்ள அனுமதிக்கின்ற கருத்துக்களையும் கையாள்வதன் மூலமாக சமூகத்தை கையாளும் ஒரு முயற்சியாகவே இது உள்ளது. மக்கள் மந்தைகள் இல்லை. மக்களுக்கு கிடைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி அவர்கள் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வது மனித சமுதாயத்திற்குத் தேவைப்படுகின்றது. சிலரின் புத்திசாலித்தனமான வேலைகளைத் தணிக்கை செய்வது அறிவொளியமாக்கல் காலத்தின் போது பெற்ற கொள்கைகளின் மீறல் ஆகும்” என்று குறிப்பிடுகிறார்.

கையெழுத்திட்ட சிலர் தணிக்கை பற்றிய பிரச்சினை குறித்தும், WSWS இன் பாத்திரம் குறித்தும் ஒரு தெளிவான மார்க்சிச, வர்க்க அடிப்படையிலான பாராட்டுக்களை நிரூபித்தனர், மேலும் São Paulo இல் இருந்து பெட்ரோ என்பவர், “உலக சோசலிச வலைத் தளம் வர்க்க நனவு, உண்மையான முற்போக்கான கருத்து மற்றும் பகுப்பாய்வுக்கான சில இணைய ஆதாரங்களில் ஒன்றாகும். முதலாளித்துவ நெருக்கடியை கடப்பதற்கு, உலக விவகாரங்களில் இந்த வகையான தைரியமான அரசியல் மற்றும் தத்துவார்த்த நுண்ணறிவுக்கு தொழிலாள வர்க்கம் தடையற்ற அணுகலைக் கொண்டிருப்பது கட்டாயமாகும். தத்துவம் மற்றும் மார்க்சிச பகுப்பாய்வு என்பது சமூக மாற்றத்திற்கான தவிர்க்க முடியாத கருவி! WSWS மற்றும் பிற முற்போக்கு வலைத் தளங்கள் மீதான தணிக்கையை கூகுள் நிறுத்த வேண்டும்!” என்று குறிப்பிடுகிறார்.

மேலும் பெருவில் இருந்து சீசர் என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “சர்வதேச தொழிலாள வர்க்கம் தங்கள் அரசியல் அபிவிருத்திக்கான பங்களிப்பை வழங்கும் வலைத் தளங்களை அடையும் உரிமையைக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு ஒரு தெளிவான சர்வதேச, சோசலிச முன்னோக்கை வழங்குவதற்கான ஒரே வலைத் தளமாக உலக சோசலிச வலைத் தளம் இருப்பதனால், தகவலைக் கட்டுப்படுத்தும் ஒரு உலக முதலாளித்துவ நிறுவனம் WSWS மீது இலக்கு வைத்துள்ளது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. போராட்டம் தொடரட்டும்!”

ஆஸ்திரேலியாவில் இருந்து அட்ரியன் என்பவர், தணிக்கைக்கு எதிரான WSWS இன் பிரச்சாரத்தைப் பற்றிய விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை பின்வருமாறு சுட்டிக்காட்டினார். “WSWS எப்போதும் புறநிலை மற்றும் வரலாற்று உண்மையை பாதுகாப்பதில் முன்னணியில் நிற்கின்றது. ‘பொய்யான செய்தி’ என்ற ஒப்பனையின் கீழ் கூகுள் அதை தணிக்கை செய்வது பாசாங்குத்தனத்தின் உச்சம் ஆகும். பூமியில் உள்ள ஒவ்வொரு கூகுள் பயன்பாட்டாளரும் இதைக் கேட்க வேண்டும்.”

உண்மையில், அரசியல் பேச்சுக்களை மௌனமாக்குவதற்கும், சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிராக ஒரு வர்க்க நனவான இயக்கத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்குமான கூகுளின் முயற்சியைப் பற்றி ஒவ்வொரு தொழிலாளரும் கேட்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்கு WSWS போராடி வருகின்றது. இந்த போராட்டத்தில் இணையுமாறு எமது வாசகர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். இப்போதே இந்த மனுவில் கையெழுத்திடவும், மேலும் அதை உங்களது நண்பர்களிடமும், சக பணியாளர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும். மேலும், WSWS க்கு நன்கொடை அளித்திடுங்கள்! WSWS இன் கட்டுரைகளையும், காணொளிகளையும் முகநூல், ட்விட்டர் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களிலும் பகிர்ந்திடுங்கள். உலக சோசலிச வலைத் தளம் மற்றும் பிற தளங்களை தணிக்கை செய்வதையும் தவறாக பட்டியிலிடுவதையும் அம்பலப்படுத்த உதவுங்கள்!