World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

New powers proposed for French police

பிரெஞ்சு பொலிசாருக்கு வழங்க உத்தேசித்துள்ள புதிய அதிகாரங்கள்

By Marianne Arens and Francis Dubois
18 November 2002

Use this version to print | Send this link by email | Email the author

அக்டோபர் 23-அன்று, பிரெஞ்சு அரசு, பிரான்ஸ் நாட்டு கிறிமினல் சட்டத்தைத் திருத்த வகை செய்யும் ஆலோசனைகளைத் தாக்கல் செய்தது. பிச்சை எடுப்போர், விலை மாதர்கள், மற்றும் சமுதாயத்தில் பாதிக்கப்பட்டோர் போன்றோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்ககூடிய அதிகாரங்களை பொலிசுக்கு வழங்க உத்தேசத் திருத்தங்கள் வகை செய்கின்றன. பிரெஞ்சு உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்கோசி (Nicolas Sarkozy), உருவாக்கியுள்ள, இந்தச் சட்டத்திருத்தங்கள் தொகுப்பு தற்போது செனட் சபையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 15-க்குமேல் தேசிய நாடாளுமன்றம் இதனை விவாதித்து முடிவு செய்யவிருக்கிறது.

இதன்படி வட்டார நீதி நிர்வாகி அமைப்புகள் மற்றும் போலீஸாருக்கு (Regional prefectures and police), பொதுமக்களைக் கண்காணிக்கும் அதிகாரம் பரவலாக்கித் தரப்பட்டிருக்கிறது. வீடுகளில் சோதனைகள் நடத்துவது, தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது, மரபியல் அணு, கை அடையாளம், வாகனங்களை மறித்துச் சோதனை செய்வது, போன்ற அதிகாரங்கள் போலீஸாருக்கு வழங்கப்படுவதற்கு வகை செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, உள்துறை அமைச்சருக்கான பட்ஜெட்டை 4.1% ஆல் அதிகரிக்க பிரெஞ்சு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மேலும் 13,500 போலீஸாரை நியமிப்பதும் அடங்கும். போலீஸ் துறைக்கான மொத்த பட்ஜெட் ஏறத்தாழ 10 பில்லியன் யூரோக்களாகும்.

இவை தவிர, புதுவகையான குற்றங்களை ஏற்கனவே உள்ள பட்டியலில் சேர்க்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. விடாப்பிடியாக பிச்சை எடுப்பது, அடுக்கு மாடி வீடுகளுக்கான நுழைவு வாயில்களை ஆக்கிரமித்துக்கொள்வது, பொது இடங்களில் தங்கும்முகாம்களை அமைப்பது (ரோமானிய நாடோடிகள்) மற்றும் சாலைகளின் ஓரத்தில் நின்று வாடிக்கையாளர்களை அழைக்கும் விலை மாதர்கள், போன்ற குற்றங்களைச் செய்பவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை மற்றும் 7,500 யூரோக்கள் வரை அபராதம் விதிக்க கூட்டத்தில் வழிவகைகள் செய்யப்படவிருக்கின்றன.

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், புதிய பிரெஞ்சு அரசு, முதலாவது, குற்றவியல் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தது. அது இளம் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வயதை 13 ஆகக் குறைத்தது. மிக விரைவாக ஒன்றன்பின் ஒன்றாக, வழக்குகளை தீர்க்கும் நீதிமன்றங்களை நிறுவியது. "ஆள்காட்டிகளை" ப் பயன்படுத்தும் முறை ஊக்குவிக்கப்பட்டது. போலீஸ், இராணுவம், இதரபடைப் பிரிவுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. சென்ற ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் வலதுசாரி அரசு வெற்றி பெற்ற பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாவது அணி சீர்திருத்தங்கள் இவையாகும். சார்கோசி வலியுறுத்திய, குற்றவியல் சட்ட சீர்திருத்தங்கள், புதிய அரசு பொறுப்பேற்ற சில மாதங்களின் பின்னர் (ஜூலை மாதம்) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதி ஜாக் சிராக், புதிதாக உருவாக்கியுள்ள, உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான, அதிவிஷேட அமைச்சகத்திற்கு நிக்கோலா சார்கோசி தலைமை தாங்குகிறார். புது வகையான சீர்திருத்த ஆலோசனைகள், நீதித்துறையிலிருந்து வரவில்லை மாறாக உள்நாட்டு பாதுகாப்புத் துறையிலிருந்து வந்திருக்கிறது. நீதித்துறையிலிருந்த அதிகாரங்கள், போலீஸ் துறைக்கு மாற்றப்பட்டிருக்கும் மாற்றத்தை இந்தச் சீர்திருத்தங்கள் காட்டுகின்றன. நகல் சீர்திருத்தங்களில், மேலும், கடுமையான தண்டனைக்கு நீடிக்கவும், பள்ளிக்குச் செல்ல மறுக்கும், வகுப்புகளுக்கு செல்லாது ஏமாற்றும் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு பெருமளவில் அபராதம் விதிக்கவும் நகலில் வகை செய்யப்பட்டிருக்கிறது.

சார்கோசியின் சீர்திருத்தங்களுக்கு, மனித உரிமைகள், மற்றும் மக்கள் இயக்கங்களின் அமைப்புகள் கடுமையான கண்டனங்களைச் செய்திருக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளை ''தவறான கைதுகள், காவல்கள்'' என்று இதுபோன்ற அமைப்புகள் வர்ணனை செய்துள்ளன. வீடற்றோருக்கான அமைப்பு (Droit au logement, DAL), மனித உரிமைகள் லீக் (DLH), உலக மருத்துவர் அமைப்பு (Médecins du Mondeவிபீவி), ரோமானிய நாடோடிகள் மற்றும் விலை மாதர்களுக்கான அமைப்புகள் பல்வேறு வகையான ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றன. நவம்பர் 6-அன்று செனட் சபையில் இந்தச் சட்டங்கள் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 300 விலை மாதர்கள் செனட் சபை முன் ஆர்பாட்டம் நடத்தினர். ''நான் சிராக்கிற்கு வாக்களித்தேன் எனக்கு கிடைத்திருக்கும் பரிசு, லு-பென் சட்டம்தான்'' (சிறை தண்டனை) என்று ஆர்பாட்டம் செய்த விலைமாது ஒருவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் சங்கம் சார்கோசிக்கு பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பியது. அவரது சட்டங்கள், எந்த வகையில் பிச்சை எடுத்தாலும், விபச்சாரம் செய்தாலும், அதை ஒரு குற்றச் செயலாக ஆக்கிவிட்டது என்று பகிரங்கக் கடிதம் சுட்டிக்காட்டியது. பொதுமக்களது அன்றாட வாழ்வில் போலீஸார் தலையிடுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டித்திருக்கின்றனர். போலீஸார் பொதுமக்களை சாலைகளில் தடுத்து நிறுத்தி, எந்தவிதமான காரணங்களும் கூறாமல் சோதனைகளை நடத்துவதற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் அவர்கள் கண்டித்தனர். ''இந்த நாட்டு குடிமக்கள் அனைவரையும் சந்தேகத்திற்குரிய நபர்களாக மாற்றுவதுதான் உங்கள் நோக்கமா?'' என்ற கேள்வியுடன் அந்த திறந்த மடல் முடிக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரபூர்வமான அரசு அமைப்புகள் கூட கண்டனம் செய்திருக்கின்றன. தேசிய புள்ளி விவர அமைப்பு (Commission nationale de l'informatique et des libertés-- CNIL) வீட்டு வசதி கண்காணிப்பு அமைப்பு ஆகியவை தங்களது கண்டனங்களை எழுப்பி இருக்கின்றன. மனித உரிமைகள் மீறலை கண்காணிக்கும் அமைப்பு (Commission Nationale Consultative des Droits de l'Homme ணீ தீஷீபீஹ் tலீணீt னீஷீஸீவீtஷீக்ஷீs லீuனீணீஸீ க்ஷீவீரீலீts ஸ்வீஷீறீணீtவீஷீஸீs) ம் கண்டனங்களை தெரிவித்திருந்தது. இந்த புதிய அமைப்பை அக்டோபர் 3-ந்தேதி பிரதமர் ஜோன்-பியர்-ரஃப்ரன் நியமித்தார். இந்த அமைப்பின் தலைவராக, ஜொஎல் தொராவல் (Joël Thoraval) நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பிரான்ஸ் நாட்டில் குடியேறுவதற்கான சட்டங்களை கடுமையாக்கியவர் என கருதப்படும் பிரெஞ் முன்னாள் உள்துறை அமைச்சரான சார்ல்ஸ் பஸ்குவாவின் அமைச்சின் முன்னாள் முன்னணி தலைவரும், மந்திரி சபைத் தலைமை அதிகாரியுமாவார்.

தொராவல் கூட, சார்கோசி உத்தேசித்துள்ள நடவடிக்கைகளையும் சட்டத்திருத்தங்களையும் கண்டித்திருக்கிறார். குற்றங்களுக்கு எதிரான போரை, பயங்கரவாத செயல்களுக்கு எதிரான போருடன் சேர்த்து குழப்பிக் கொண்டிருப்பதாக அவர் கண்டனம் செய்திருக்கிறார். தன்னுடைய ஆட்சேபனை தார்மீக அடிப்படையில் அமைந்திருக்கிறது, நீதி நிர்வாக அடிப்படையில் அமைந்ததல்ல என்பதைத் அவர் தெளிவுப்படுத்தினார். குறிப்பாக, விலை மாதர்கள மிகவும் கடுமையாகத் தண்டிக்க முடியாது. வறுமையால் விரட்டப்பட்டு குடும்பங்களது ஆதரவு இல்லாமல் விடப்பட்டவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென தொராவல் குறிப்பிட்டார்.

''பெரும்பான்மை இடது'' (பன்மை இடதுகள்) அணியைச் சார்ந்த - சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி - பசுமை கட்சி ஆகிய அணிகளைச் சேர்ந்த எம்.பிக்கள், அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கண்டனம் செய்துள்ளன. இவர்களது கண்டனங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை. ஏனெனில் சென்ற ஜூன் மாதம் அந்தக் கூட்டணி அரசு பதவி இழக்க முன்னர் இவர்கள் ஜோஸ்பன் தலைமையில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதுதான் அரசாங்க நிர்வாக அமைப்புகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கு தாங்களே சில நடவடிக்கைகளை எடுத்தார்கள்.

2001-செப்டம்பர் 11ம் திகதி, அமெரிக்காவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் ''ஒவ்வொரு நாள் பாதுகாப்பையும் பேணும் சட்டம்,'' (LSQ) நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் மூலம் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. போலீஸாருக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டன. தொலைபேசியை ஒட்டுக்கேட்பது சட்டபூர்வ நடவடிக்கையாயிற்று. வீடுகளில் சோதனைகள் நடத்தவும் ''அனாமதேய'' சாட்சியங்களை நீதிமன்றங்களில் பதிவு செய்யவும் அனுமதிக்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், சமூக ஜனநாயகக் கட்சியினரே ஜனநாயக உரிமைகளைச் சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, இப்போது அதே நடவடிக்கைகளை எடுக்கும் பிற கட்சியினரை கண்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை ஜோஸ்பன் அரசில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஜோன்-பியர்-செவெனுமோ ஈரோப்-1- தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஊர்ஜிதம் செய்திருக்கிறார். அவர் கூறியதாவது:- ''வலுவான அமைச்சர் தேவை என்று நான் நம்புகிறேன். இயல்பாகவே நான் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஜோஸ்பனின் அரசாங்கத்தில், குற்றவியல் சட்டத்தைத் திருத்துமாறு எவரும் என்னைக் கேட்கவில்லை. இது முற்றிலும் புதுமையாக உள்ளது. சாதாரணமாக வழக்கப்படி- நீதித்துறை அமைச்சர்தான் இதைச் செய்ய வேண்டும். எனக்குப் பின்னர் பதவிக்கு வந்த சோசலிஸ்ட் கட்சி உள்துறை அமைச்சர் வாய்லண்ட் (Vaillant), இந்த வகையில் அமைந்த நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். இது எல்லாமே எனக்குத் தெரியும். ''காட்டுமிராண்டிகளான சிறார்கள்'' என்ற சொல் எந்த அளவிற்கு கொந்தளிப்பை உருவாக்கியது? என்பது எனக்குத் தெரியும்.'' கல்வி அறிவில்லாத, கட்டுப்படுத்தவியலாத இளம் குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்புவதை நியாயப்படுத்த அந்தச் சொல்லை அப்போது செவெனுமோ பயன்படுத்தினார்.

வலதுசாரி கோலிஸ்ட் அணியினருக்கும் பசுமை, PCF, P.S. கட்சிக்காரர்களுக்கும் இடையில் கண்ணோட்டத்தில் மிகச் சொற்ப அளவிற்குத்தான் வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவேதான் சார்க்கோசி, தனது நடவடிக்கைகளைக் கண்டிப்பவர்களை எளிதாக மடக்கிவிட்டார். "நாடாளுமன்றத்தில் எனது நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள், தங்களது சொந்தக் கட்சிக்காரர்கள், மேயர்களாக, அல்லது, உள்ளாட்சி அமைப்புக்களின் தலைவர்களாக பணியாற்றும் இடங்களில் இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது ஆதரிப்பது ஏன்?" என்று கேட்டார்.

இதேபோன்று நாடாளுமன்ற சோசலிஸ்ட் குழுத்தலைவரான ஜோன்-மார்க்- ஐறோல் (Jean-Marc Ayrault), பிச்சைக்காரர்கள், விலை மாதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டிக்கும்போது அவர் மேயராக இருக்கும் நான்ந் (Nantes) பகுதியில் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதைச் சார்க்கோசி சுட்டிக்காட்ட முடியும். அல்லது PCF- கட்சியின் இரண்டு பிரதிநிதிகளும், மேயராக, துணை மேயராகப் பணியாற்றும் Choisy-le-Roi பகுதிகளில் ரோமானிய நாடோடிகள் போட்டிருந்த முகாம்களை காலி செய்யும் நடவடிக்கைகளில் பங்கு கொண்டதையும் சார்கோசி சுட்டிக்காட்ட முடியும்.

கோலிஸ்டுகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகம் பெற்றிருப்பதற்குக் காரணம், இடதுசாரி கட்சிக்காரர்கள் சென்ற ஜனாதிபதித் தலைவர் தேர்தலில் சிராக்கிற்கு அளித்த ஆதரவுதான். அந்த ஆதரவின் விளைவாக, கோாலிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக வலுப்பெற்றனர். தீவிர வலதுசாரியான லு பென் குடியரசுத் தலைவர் தேர்தல் சுற்றில் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றதை இறுதிச் சுற்றில் தடுத்து நிறுத்துவதற்காகவே சிராக்கிற்கு ஆதரவு தந்ததாக இடதுசாரிகள் சமாதானம் கூறினர். சிராக்கை பிரெஞ்சு குடியரசின் பாதுகாவலன் என இடதுசாரிகள் வர்ணித்தனர். லு-பென் ஆதரிக்கும் பாணியில் அமைந்த சட்டங்களையே தற்போது சிராக்கும், அவரது கோலிஸ்ட் பெரும்பான்மை அணியினரும் முன்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல்களைப்போலவே, புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தினரும் (LCR) "பெரும்பான்மை இடதுகளின்'' இடதுசாரிப் பிரிவாகச் செயல்பட்டு வருகின்றனர். அக்டோபர் 22ல் LCR- PS, PCF, பசுமை அமைப்புகளுடன் இணைந்து கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கை உள்துறையின் உத்தேச சட்டங்கள் ''ஏழைகளுக்கு எதிரான போர்'' என்று கண்டனம் செய்துள்ளது. அந்தக் கூட்டறிக்கையில் பல மனித உரிமை அமைப்புகள், இனவெறிக்கு எதிரான இயக்கங்கள், CGT தொழிற்சங்கம் மற்றும் பூகோளமயமாக்கலுக்கு எதிரான இயக்கம் ஆகியவை கையெழுத்திட்டிருக்கின்றன.

கூட்டறிக்கையின் அரசியல் தொலைநோக்கு ஜனாதிபதி தேர்தலில் நடந்ததைப் போல் ஜனநாயக உரிமைகள் தாக்கப்படும்போது, அந்த தாக்குதலுக்கு எதிராக ஜனாதிபதி தத்துவத்தை முன்னிலைப்படுத்துவதில் தான் அடங்கியிருக்கிறது. ''இந்த திட்டத்தை தாக்கல் செய்யும்போது அரசாங்கம் குடியரசின் அடிப்படை அம்சத்தையே தொடுகிறது. அப்படியென்றால் நாம் இனி சட்டத்தின் முன் சரிசமம் அல்ல'' என்று கூட்டறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

இத்தகைய "குடியரசு பாதுகாப்பு" அடிப்படை அம்சம்தான் கோலிஸ்ட்டுகளுக்கு எதிராக LCR ä வலதுசாரி சமூக ஜனநாயகவாதிகளுடனும், ஸ்ராலினிஸ்ட்டுகளுடனும் இணைத்துவைக்கின்ற பொதுவான மிகக்குறைந்த அளவிற்கான அளவுகோல் ஆகும். அத்தோடு தேவை ஏற்பட்டால் லு பென்னுக்கு எதிராக கோலிஸ்ட்டுகளுடன் இணைந்து செயல்படுவதற்கும் இதுவே அளவுகோல். இந்த நிலைப்பாட்டிலிருந்து, தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான அரசியல் முன்னோக்குக்கான எந்த அடித்தளங்களையும் மறுப்பதுடன் இவர்கள் முதலாளித்துவ அரசையும் பாதுகாத்து நிற்கின்றனர்.

அப்படியிருந்தாலும், கூட்டு அறிக்கையை உருவாக்கும்போது ஓரளவிற்கு கொந்தளிப்புகள் உருவாயின, ஏனெனில், PS -கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற அங்கத்தவர்கள் இந்த கூட்டு அறிக்கையை, சமுதாயத்தில் வன்முறைகள் வளரும்போது தாம் பயமுற்று இருப்பதாக கூற வலதுசாரிகள் பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்று அஞ்சினர். இதுபோன்ற கருத்துக்களுக்கும் இடமளிக்கின்ற வகையில் கீழ்கண்ட வாசகம் கூட்டறிக்கையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது:- ''பாதுகாப்பற்ற தன்மையை எதிர்க்கவேண்டும் என்பதற்காக, தேவைப்பட்டால் அடக்குமுறையை கையாள வேண்டியது இயல்புதான்'' இன்னொரு வாசகம் போலீஸார் தங்களுக்கு இருந்த பொதுமக்களது நம்பிக்கையின் கடைசி பகுதியையும் வீணாக்கிவிட்டார்கள் என்ற கருத்துள்ள வாசகம் கூட்டறிக்கையில் இருந்து நீக்கப்பட்டது. அதற்குக்காரணம் அந்த விமர்சனம் தாங்க முடியாத அளவிற்கு மிகக் கடுமையானது என்று PS- பாராளுமன்ற அங்கத்தவர்கள் கருதினர்.

சார்கோசியின் நகல் சட்டம் உழைக்கும் மக்களுக்கு எதிராக அரசிற்கு அதிகாரத்தை உருவாக்குவதாக மட்டும் அமைந்திருக்கவில்லை. சமுதாயத்தில் விரக்தி அடைந்து வரும் பிரிவுகளைச் சார்ந்த மக்களை வலதுசாரி திட்டங்களுக்கு ஆதரவு தருபவர்களாக திரட்டுவதற்காக மக்களை கவரும் சொல் அலங்காரங்களை செய்வதும் நகல் சட்டத்தின் நோக்கமாகும்.

நாட்டின் பாதுகாப்புதான் ''பிரதான சிவில் உரிமை'' என்று சார்கோசி குறிப்பிட்டார். பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு பாதுகாப்பு தரும் என்று உறுதியளித்தார். தார்மீக நெறி தவறுவதை, ஒழுக்கச் சிதைவை அவர் கண்டித்தார். இதன் மூலம் சார்கோசி "அதிவிஷேட காவலராக" (super policeman) தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார். இடதுசாரிகளைவிட தான் செயல்படும் அமைச்சர் என அவர் குறிப்பிட்டார். இடதுசாரிகள் மெத்தனப்போக்கு உள்ளவர்கள் என்றும் அவர் கண்டித்தார். இந்த முறையில் பொருளாதார அடிப்படையில் பாதிப்பிற்கு உள்ளாகும் சிறு வர்த்தகர்கள், சுயமாக தொழில் செய்வோர் மற்றும் அதிருப்தி கொண்ட அரசு அதிகாரிகள் ஆகியோரது ஆதரவை பெறுவதற்கு முயன்று வருகின்றது. அத்துடன் பிரதமர் ரஃப்ரன் தனது அரசு சாதாராண மக்களை பாதுகாக்க விரும்புகிறது என்ற போர்வையில், வறிய நிலையில் வாடிக்கொண்டிருக்கும் மக்களது ஆதரவை குறைந்தபட்சம் தற்காலிகமாக பெறுவதற்கு முனைகின்றது.

தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக, ஆத்திரமூட்டும் வகையிலும் சொல் அலங்காரங்களாலும் பலி கடாக்களை உருவாக்கியுள்ளார்கள். இதற்கு ஓர் உதாரணம் ஸ்ட்ராஸ்பேர்க் பகுதியில் அண்மையில் நடந்த சம்பவம். ஒரு கிட்டங்கிக்குள் போலீஸார் திடீர் சோதனை நடத்தும்போது, இரவு நேரத்தில் அங்கு மூன்று இளைஞர்களை கண்டுபிடித்தனர். ஆயுதம் தாங்கிய அந்த போலீஸ் படை இரண்டு பேரை பிடித்துக்கொண்டது. மூன்றாவது இளைஞர் ரைய்ன் நதியின் கிளை நதிப் பகுதியில் மர்மமான முறையில் நீரில் மூழ்கி இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இளைஞனுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்று கூறப்படுகிறது.

அந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதும் நிலைமை முற்றியது. புறநகர்ப் பகுதிகளில் கார்களுக்கு தீ வைக்கப்பட்டன. தீயணைப்பு படை வீரர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. பின்னர் சீருடையணிந்த காவலரும், தீயணைப்பு படை வீரர்களும் நகரின் வலதுசாரி நிர்வாக தலைவர் தலைமையில் தனியாக, கண்டன அணி வகுப்பை புறநகர்ப் பகுதியில் நடத்தினர். உள்துறை அமைச்சர் ஸ்ட்ராஸ்பேர்க்கிற்கு நேரில் வந்து, சேதமடைந்த கார் உரிமையாளர்களை சந்தித்து ஒவ்வொருவருக்கும் தலா 1,000 யூரோக்களை வழங்கினார்.

See Also :

பிரான்ஸ்: கெடுபிடி கொள்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் அதிகரிப்பு

ரஃபரனினது சட்டம்- ஒழுங்கு வேலைத்திட்டம்: பிரான்சில் இருந்து ஒரு வாசகரின் பங்களிப்பு

Top of page