World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Kenya: Crackdown on refugees following hotel bombing

கென்யா ஹோட்டலில் நடந்த குண்டு வீச்சுத் தொடர்ந்து அகதிகள் மீது நடவடிக்கை

By Dave Rowan
14 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

கென்யா நாட்டுத் தலைநகர் நைரோபியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அகதிகள் மீது கென்யா போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவதற்கு நியூயோர்க்கை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கண்டனம் (HRW) செய்திருக்கிறது. நவம்பர் 28ந் தேதி கென்யாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைப் பயன்படுத்தி அகதிகள் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக HRW குற்றம் சாட்டியுள்ளது.

எத்தியோபிப்யா, சோமாலியா, சூடான், கொங்கோ ஜனநாயகக் குடியரசு நாடுகளிலிருந்து வந்து குடியேறியுள்ள அகதிகளுக்கு எதிராக கென்யா போலீஸார் பெருமளவில் மூன்று திடீர்ச் சோதனைகளை மேற்கொண்டிருக்கின்றனர். நவம்பர் 29 முதல் டஜன் கணக்கில் அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. நைரோபியின் தென்மேற்கு புறநகர் குடிசைப் பகுதியான கவாங்கவேயில் (Kawangware) நவம்பர் 29 அன்று 54 சூடானிய, கொங்கோ அகதிகள் மிகப்பெரும் குழுவாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வீடு வீடாகச் சோதனை நடாத்தப்பட்டு இந்தக் கைதுகள் நடைபெற்றன.

சில அகதிகளைப் போலீஸார் அடித்து நொருக்கியுள்ளனர். போலீஸாருக்கு இலஞ்சம் கொடுத்து ஏராளமான பிற அகதிகள் தப்பியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பல குழந்தைகளும், இரண்டு கொங்கோ நாட்டுப் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணைக்குழு பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் நைரோபியில் தங்கி இருக்க அத்தாட்சிக்கடிதம் கொடுத்திருக்கிறது. கென்யாவில் அவர்கள் தங்கி இருப்பது ஆபத்து என்று கருதப்படுவதால் அந்த இரண்டு பெண்களும் மூன்றாவது நாடு ஒன்றிற்கு குடியேற்றப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர்.

நைரோபி முதங்காரி (Muthangari) போலீஸ் நிலையத்தில் 40/30 மீட்டர் அறையில் அகதிகள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். ஒரு கொங்கோ பெண்ணை அவளது குழந்தையுடன் கைது செய்தனர். அவர் காவலில் இருந்த அறையில், 8 தாய்மார்கள், குழந்தைகளுடன் காவலில் வைக்கப்பட்டிருப்பதைக் கணக்கிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. காவலில் வைக்கப்பட்ட பெண்கள், அந்த அறையைச் சுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். நவம்பர் 30ந்தேதி நண்பகலுக்கு முன்னர் அகதிகளுக்கான ஐ.நா. குழு தொடர்புகொள்ள அனுமதிக்கப்படவில்லை. அத்தாட்சி பத்திரங்களோடு இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சில சூடான் அகதிகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மம்புசாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் அடிப்படையிலேயே, நைரோபியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக முதங்காரி போலீஸார் அகதிகளுக்கான அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணைக்குழுவிடம் தெரிவித்தனர். ஆனால், கென்யா போலீஸார் பயங்கரவாதிகள் தாக்குதல்களையும், நைரோபியில் காவலில் வைக்கப்பட்டுள்ள அகதிகளையும் நேரடியாக அதிகாரபூர்வமாகத் தொடர்புபடுத்தவில்லை. கைது செய்யப்பட்டுள்ள அகதிகளுக்கும், மம்புசாவில் நடைபெற்ற கொடுமைகளுக்கும் தொடர்பு இருப்பதாக எந்தச் சான்றையும் போலீஸார் தரவில்லை. எந்த அகதிகள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளோ அல்லது பயங்கரவாத தொடர்பு நடவடிக்கைகள் குறித்தோ எந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பிற்குத் தகவல் கிடைக்கவில்லை.

''வன்முறைச் செயல்கள் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும், அகதிகளைக் கைது செய்வதை நியாயப்படுத்த முடியாது'' என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பைச் சார்ந்த அலிஸன் பார்க்கர் (Alison Parker) தெரிவித்தார். ''அகதிகள் போன்ற ஏழை மக்கள் குழுக்களை பலி கடாக்களாக கென்யா அரசு நடத்துவதாக'' அவர் குற்றம் சாட்டினார்.

போலீஸ் பேச்சாளரான கிங் ஓரி மவாங்கி (King'ori Mwangi) HRW- பிரதிநிதிகளை, "பரபரப்புப் பணியாளர்கள்'' என்று வர்ணித்தார். கைதுகள், தாக்குதல்களுக்கு உண்மையான காரணத்தை அவர் கோடிட்டுக்காட்டி, ''கென்யா-கென்யா மக்களுக்கே'' என்று அவர் நிரூபர்களிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி டானியல் அராப் முவா (Daniel arap Moi) அவரது கென்யா ஆபிரிக்க தேசிய யூனியன் (KANU) அரசும், அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை புஷ் நிர்வாகத்தோடு நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். வாஷிங்டனுடன் நெருங்கிய உறவுகளை நிலைநாட்டிக்கொள்வது, கென்யாவில் அரசியல் ஆதிக்கத்தைப் பலப்படுத்தும் கருவியாக ''கென்யா ஆப்பிரிக்க தேசிய யூனியன்'' கருதுவதுடன், எதிர்ப்புகளுக்கு எதிராக தனது அரசு அடக்குமுறை நடவடிக்கைகளை பயன்படுத்துகின்றது.

செப்டம்பர் 11 முதல் டானியல் அராப் முவா, புஷ் நிர்வாகத்திற்கிடையே நிலைநாட்டப்பட்டு வரும் பரஸ்பர உதவி ஏற்பாட்டை பலப்படுத்த விரும்புகின்றனர். டானியல் அராப் முவா, எத்தியோப்பிய பிரதமர் மலே-ஜினாவி (Meles Zenawi) இருவரும் டிசம்பர் 5ந்தேதி வாஷிங்டனில் ஜனாதிபதி புஷ்ஷைச் சந்தித்தனர். அந்த வெள்ளை மாளிகைக் கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் கொலின் பவல், முன்னாள் நிதியமைச்சர் போல் ஓ நியேல் (Paul O'Neil) தேசிய பாதுகாப்பு ஆலோசகர், கொண்டோலீசா ரைஸ் (Condoleezza Rice) ஆகியோரும் பங்கெடுத்துக்கொண்டனர்.

இரண்டு ஆப்பிரிக்கத் தலைவர்களையும் அமெரிக்காவின் ''பலமான நண்பர்கள்'' என்று புஷ் வர்ணித்தார். ''பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச அளவில் நடக்கும் போரில் அவர்கள் அமெரிக்காவுடன் இணைந்திருப்பதாக'' புஷ் குறிப்பிட்டார்.

திட்டவட்டமான அரசியல் முடிவு பற்றி விவாதிக்கவே டானியல் அராப் முவா வாஷிங்டன் வந்ததாக Stratfor.com தகவல் தந்திருக்கிறது. டிசம்பர் 27ந்தேதி கென்யாவில் ஜனாதிபதித் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆபிரிக்க முனைப்பிரதேசத்தில் (Horn of Africa ), புஷ் நிர்வாகமும், ''கென்யா ஆபிரிக்க தேசிய யூனியன்'' அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் பின்னணியை அந்தச் செய்தி வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

தான் தேர்ந்தெடுத்துள்ள வாரிசும், ''கென்யா ஆப்பிரிக்க தேசிய யூனியனின்'' வேட்பாளருமான உகுரு கென்யாட்டா (Uhuru Kenyatta) மூலம் தனது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சிக்கு புஷ் நிர்வாகத்தின் மறைமுக ஒப்புதலைப் பெறுவதே அந்தப் பயணத்தின் நோக்கம் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. டானியல் அராப் முவா டிசம்பர் தேர்தலோடு அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

புஷ் நிர்வாகம் டானியல் அராப் மாய் கோரிக்கையை, ''வேறு வழிகளை கையாள விரும்புகின்றது'' எனவும், தேர்தல் பிரசாரத்தின்போது, ''அச்சுறுத்தல்'', ''வன்முறை'' வாக்குப்பதிவு மோசடி தொடர்பான சம்பவங்கள் வரும்போது, `'கென்யாவில் அமெரிக்காவிற்கு சுதந்திரமாக இயங்க அனுமதி'' வழங்கப்படுவதாக அந்தச் செய்தி விளக்குகிறது.

டானியல் அராப் முவா, இன்னும் ஓரிரு வாரங்களில் பதவி விலகுகிறார். ''டிசம்பர் 27 தேர்தல்களுக்குப் பின்னர், அவர் திரைமறைவில் அரசியல் ஆதிக்கம் செலுத்துவார். அந்தப்போக்கு நீடிக்கும் என்று வாஷிங்டன் நம்புவதாக'' ''Stratfor'' செய்தி வெளியிட்டிருந்தது.

கென்யாவில் அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதையும், கென்யாவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியையொட்டி கடற்படைகளின் கூட்டுப் பயிற்சிகள் நடைபெற்றதையும் அந்தச் செய்தி சுட்டிக்காட்டுகிறது. சோமாலியாவைச் சுற்றி வளைக்கவும், இந்து மகா சமுத்திரத்தின் மேற்குப் பகுதி மற்றும், அரபுக் கடலின் தெற்கு பகுதிகளிலும் தனது கடலாதிக்கத்தை நிலைநாட்டவும் கென்யாவை பயன்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.

டானியல் அராப் முவா மற்றும் அவரது ''கென்யா ஆபிரிக்க தேசிய யூனியனின்'' நிர்வாகிகள், கென்யா தேர்தலில் தில்லுமுல்லு செய்வதற்கு அனுமதி தருவதற்கு பிரதி உபகாரமாக, வாஷிங்டன் ஆப்பிரிக்க முனைப்பிரதேசத்தில் (Horn of Africa) தனது பிடியை இறுக்குவதுடன், கென்யாவை தனது எதிர்கால இராணுவத் தாக்குதல் தளமாகப் பயன்படுத்தும்.

See Also :

கென்யா பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக விடையளிக்கப்படாத கேள்விகள்

Top of page