World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தோனேசியா

Indonesian court imposes nominal jail term on parliamentary speaker

பாராளுமன்ற சபாநாயகருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் குறைந்த கால சிறைத் தண்டனையை விதித்துள்ளது

By Peter Symonds
10 September 2002

Use this version to print | Send this link by email | Email the author

கடந்தவாரம் இந்தோனேசிய நீதிமன்றம் பாராளுமன்ற பேச்சாளரான அக்பர் டான்யங் (Akbar Tandjung) லஞ்சக் குற்றவாளி என கண்டுபிடித்ததுடன் அவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. பலராலும் அறியப்பட்ட தொடர் வழக்கு விசாரணைகளில் ஒன்றான இது முன்னைய சுகாட்டோ ஆட்சியின் கீழ் இருந்த ஊழல்களை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நாட்டின் சட்ட அமைப்பை தயாரிப்பதற்கான அறிகுறி என சர்வதேச நிதி மூலதன வட்டாரங்களால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளது.

4.5 மில்லியன் டொலர் அரச நிதியை 1999 தேர்தல் பிரச்சாரத்திற்கென அக்பர் சூறையாடியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். அவ்வேளையில் இவர் சுகாட்டோ இராணுவ ஆட்சியின் ஆளும் கட்சியான கோல்கார் (Golkar) இன் தலைவராக இருந்ததுடன், சுகாட்டோ அலுவலகத்திலிருந்து பலாத்காரமாக அகற்றப்பட்ட பின்னர் ஜனாதிபதி பி.ஜே. காபீபி (B.J.Habibie) பதவியேற்ற பின் அவரின் அரச செயலாளருமாவார். ஜனாதிபதி மேகாவதி சுக்கார்னோபுத்திரி (Megawati Sukarnoputri) யினுடைய இந்தோனேசிய ஜனநாயகக் கட்சியின் (PDI-P) பின்னர் இரண்டாவது இடத்தைப் பிடித்த கோல்கார் கட்சியானது லஞ்சம் வாங்கியதாகவும், தேர்தல் சாவடிகளில் வாக்குகளை வாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அக்பரால் பாவிக்கப்பட்ட முறைகள் ஒன்றும் புதிதானதல்ல. அவர் அரச திட்டமிடல் நிறுவனமான புலோக் (Bulog) இடமிருந்து பெற்ற பணத்தை ராதுலாதுல் ஜன்னா இஸ்லாமிய நிறுவனம், ஏழைகளுக்கான உணவு விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திசைதிருப்பினார். சுகார்ட்டோவின் கீழ் புலோக், அவரது இராணுவ ஆட்சிக்கானதும் மற்றும், சொந்த மற்றும் அரசியல் தேவைகளுக்காக நிதி திரட்டுவதற்கு பெயர்பெற்றதுடன், சுகார்ட்டோவின் குடும்பத்தினருக்கும் அவரது வியாபார நண்பர்களுக்கும் இலாபத்தை பெற்றுக்கொடுப்பதற்கான அரச ஒப்பந்தங்களை பெற்றுக்கொடுப்பதற்கான வலைப்பின்னலாக இருந்தது.

ராதுலாதுல் ஜன்னா இஸ்லாமிய நிறுவனத்தின் இயக்குனரான Dadang Sukandar ன் கருத்தின் படி, அவர் Winfried Simatupang என்பவரை உணவு நிர்வாகத்தை நிர்வகிக்கும் படி நியமித்திருந்தார். இத் திட்டம் ஒரு பொழுதுமே நடந்ததில்லை, எப்பபடியிருந்தபோதிலும் Winfried முதலில் எல்லா பணத்தையும் செலவழித்து விட்டதாக கூறினார், பின்னர் இப் பணம் "அவரது கட்டிலின் கீழ்" கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் தவணை முறையில் அதனை திருப்பி செலுத்தினார்.

தீர்ப்பு வழங்குபவர்கள், இவர்கள் எதிர்வாதங்களை கூடியவற்றை முகமதிப்பீட்டிலேயே ஏற்றுக் கொண்டனரே தவிர உண்மையாக என்ன நடந்தது என விசாரிக்கவில்லை. இவ் வழக்குகளை கட்டுப்படுத்துவதற்கு வெளிப்படையான அரசியல் காரணங்கள் உள்ளன. இப்பணம் தொடர்பான மேலதிக விபரங்களை ஆராய்வது அக்பரை மட்டுமல்லாது கோல்காரின் முக்கிய அதிகாரிகளையும் ஹபீபியினதும் நேரடித் தொடர்பை எடுத்துக்காட்டிவிடும்.

ஐந்து-நீதிபதிகள் கொண்ட குழு இவ் வழக்கை மத்திய ஜாவா மகாண நீதிமன்றத்தில் விசாரணை செய்ததுடன், செப்டம்பர் 5 அன்று இதன் தீர்ப்புகளை கூறுவதற்கு எட்டு மணித்தியாலம் எடுத்தது. தலைமை நீதிபதியான Amiruddin Zakaria, அக்பர் "நிருபிக்கப்பட்ட குற்றவாளி" எனவும் "இவர் அரசாங்கத்தினுடைய நம்பிக்கைக்கு தீங்கு விளைவித்து, இஸ்லாமிய நிறுவனத்தை துஸ்பிரயோகித்ததுடன் ஏழைகள் கஷ்டப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளார்" என அறிவித்தார்.

குற்றசாட்டுகள் கூடியது 20 வருட சிறைத் தண்டனையை கொண்டிருந்த போதிலும், தீர்ப்புவழங்கு பவர்கள் தனியே நான்கு வருட கால தீர்ப்பை வழங்கினர். நீதிமன்றம், இவ் எண்ணிக்கையை மூன்று வருடங்களாக குறைத்து, பணத்தை திருப்பி கொடுத்ததினால் சூழ்நிலையை சாந்தப்படுத்தலாம் என விவாதித்தது. இரண்டு சக-பிரதிவாதிகளான Dadang உம் Winfried உம் குற்றவாளி என இனம் காணப்பட்டுள்ளதுடன் 18 மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. அவருடைய மனுவை விசாரிக்கும் அக்பரை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தின் முடிவு போட்டி நலன்களை சமப்படுத்துவதற்கான முயற்சியாகும். இந்தோனேசியாவில் வெளிநாட்டு மூலதனமிடுதல் எங்கே வீழ்ச்சியடைந்த நிலையில், அதாவது சட்ட அமைப்பு சுத்தப்படுத்தியுள்ளது என்பதை சர்வதேச சந்தைகளுக்கு உறுதியளிப்பதற்கு ஓர் குற்றவாளி என்ற தீர்ப்பு தேவைப்படுத்துகிறது.

அதேவேளை, எது எப்படியிருப்பினும் அக்பர் ஓர் வலுமைமிக்க அரசியல் பிரமுகர். அவர் உயர் மட்ட இராணுவ, அரச அதிகாரத்துவத்துடனும் நீதிபதிகளுடனும் தொடர்பு வைத்துள்ளார் என்பதை இந்த சிறிய கால தீர்ப்பானது பிரதிபலிக்கின்றது. பாராளுமன்ற பிரதிநிதிகளின் சபாநாயகர் பதவியிலிருந்தோ, கோல்கர் கட்சியின் தலைமையிலிருந்து பதவிதுறக்கவோ அல்லது இறங்கவோ மறுத்துள்ளார். உண்மையில், அடுத்த வார முடிவில் கானோய் (Hanoi) ல் சர்வதேச பாராளுமன்ற சங்கத்தின் மாநாட்டிற்கு பாராளுமன்ற பிரதிநிதியாக தலைமை தாங்க அவர் தயாராகவுள்ளார்.

கிட்டத்தட்ட 300 மாணவர்கள் "அக்பர் டான்யனை துாக்கிலிடு" எனவும் "கோல்காரைத் தடை செய்" என குரல் கொடுத்த படியும் கோல்காருக்கு சார்பான ஆதரவானவர்களுடன் நீதிமன்றத்திற்கு வெளியே மோதலில் ஈடுபட்டனர்.

இதனது முடிவுகளை சட்ட சீர்திருத்த குழுக்கள் விமர்சனம் செய்திருந்தன. சட்ட உதவிகள் மற்றும் மனித உரிமைகள் சங்க தலைவரான Hendardi, வழக்கறிஞர் அதிகாரிகளுடைய அலுவலகம் ஊழல்களை இல்லாமல் செய்வதில் விளையாட்டுத் தனமாகவுள்ளது என்பது இந்த தீர்ப்பு காட்டுகிறது" என கூறினார். "ஆரம்பத்திலிருந்தே இவ் அரசாங்கம் இலஞ்ச ஊழலுக்கெதிராக போராடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை" என அவர் Jakarta Post பத்திரிகையிற்கு கூறியிருந்தார்.

இத்தோனேசிய இலஞ்ச ஊழல் அவதானிப்பு அமைப்பாளரான Teten Masduki கருத்து தெரிவிக்கையில்: "அக்பர் டான்யங்கிற்கு நீதிபதிகள் கடுமையான தண்டனையும் உடனடியாக காவலில் வைத்திருக்க வேண்டிய உத்தரவையும் வழங்கி இருக்க வேண்டும்." இக் கடுமையற்ற தண்டனை கோல்காருக்கும் இந்தோனேசிய ஜனநாயகக் கட்சிக்குமிடையில் உள்ள "ஓர் அரசியல் உடன்படிக்கையின் பகுதி" என அவர் கூறினார்.

சுகாட்டோவினுடைய அரசியல் அமைப்பின் ஓர் பகுதியுடன் ஜனாதிபதி மேகாவதியின் நெருக்கமான கூட்டுழைப்பு --தனியே கோல்காருடன் மட்டுமல்ல இராணுவ உயர் தலைமைகள் கூட--

டான்யங்கின் விசாரணையின் முடிவில் நிச்சயமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மேகாவதியின் மந்திரி சபையில் ஒரு தொகை அங்கத்தவர்களை உள்ளடக்கியதுடன், அதி முக்கியமான பாதுகாப்பு பதவிகளை நிரப்புவது ஐந்து உயர்தர இராணுவ அதிகாரிகளாகும். அவர் அக்பர் டான்யங்கினை விசாரிப்பதற்கான ஒரு பாராளுமன்ற குழு அமைக்கப்படுவதையும், அவருக்கு எதிராக பாராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதையும் எதிர்த்தார்.

இந்தோனேசிய ஜனநாயகக் கட்சியில் இருந்து பல சட்டசபை அங்கத்தவர்களும் தேசிய விழிப்புணர்வு கட்சியும் அக்பரை பாராளுமன்ற சபாநாயகர் என்ற பதவியிலிருந்து இல்லாமல் செய்வதற்கான திட்டங்களுக்கு அழைப்பு விடுத்தனர். எப்படிஇருந்தபோதிலும், கடந்த வெள்ளியன்று, இந்தோனேசிய ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற கட்சிப் பிரிவினர் எந்தவித உடன்பாடு காண்பதற்கும் தவறிவிட்டனர். இதன் தலைவரான யோய் பீ.பீ.ஜானிஸ் இப் பிரச்சனையை தனிப்பட்ட அங்கத்தவர்கள் தீர்மானிப்பதற்கு விட்டுவிட்டார்.

மொத்தமாக எடுத்துப் பார்க்கையில், வரையறுக்கப்பட்ட குற்றவழக்கின் குணாம்சமும், கடுமையற்ற தண்டனையும் டான்யங் தனது பதவியை வைத்திருக்க கூடிய திறமையும் போலியான விசாரணையின் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. ஜூலை மாதத்தில் மேல்நீதிமன்ற நீதிபதியின் கொலைக்கு சுகாட்டோவின் மகன் ரொமியிற்கு (Tommy) வழங்கிய தீர்ப்பு போல, இதன் முடிவுகள் சர்வதேச நானயநிதியத்திற்கும் சர்வதேச மூலதனத்திற்கும் அதாவது சலுகைகள் கொடுப்பதையும் இலஞ்ச ஊழல்களயும் முடிவிற்கு கொண்டு வந்து விட்டோம் என அறிவுறுத்தும் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திடமோ அல்லது நீதிமன்றத்திடமோ 32 வருட கால சுகாட்டோ ஆட்சியில் கொடூரமான பலகுற்றங்கள் நடத்தியதையோ அல்லது தீய செயல் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்குவற்கு நன்றாக ஆராய்ந்து பார்ப்பதற்கோ எதுவித திட்டங்களுமில்லை. இதை செய்வதற்கான எந்த முயற்சியும் ஜக்காட்டாவில் ஆட்சியில் உள்ளவர்களால் தொடர்ந்து அடக்கியாளப்படுவதற்கு தவிர்க்கமுடியாதபடி வழிவகுத்து விடுகிறது. 1998ல் சுகாட்டோவை பலாத்காரமாக வெளியேற்றிய பின்னரும், அவரின் ஆட்சியில் இருந்த அதே இராணுவ அதிகாரப்பிரிவுகள், அரச அதிகாரபீடம், நீதிமன்றங்களும் கோல்கார் கட்சியின் கூடிய பகுதியினர் இன்னமும் அதிகாரத்தில் இருப்பதுடன், மேகாவதியின் உதவியுடன் தொடர்ச்சியாக தனது பலத்தை காட்டுகிறது.

Top of page